கள்ளூறும் .. 4
ரிதன்யா இங்கே அடைப்பட்டு இரண்டு நாட்கள் ஆகிறது. பெரும்பாலும் தூக்க மாத்திரை உதவியோடு தான் அவளை அடைத்து வைத்திருந்தான் தாரக்.
அவ்வப்போது சென்று அவளை பார்த்து பரிசோதிக்க பெண் செவிலியர் வேறு..!
ரிதன்யாவிடம் சொன்னது போல அவளது தம்பியை தூக்கவில்லை தாரக்.
அதர்வாவை சுதந்திரமாக உலாவவிட்டு இருந்தான். அதே போல் அவர்கள் தந்தை பிரபாகரனை தன் கண்காணிப்பு வட்டத்தில் மட்டுமே வைத்திருந்தான். அவரையும் தூக்கவில்லை.
சுஜித்துக்கு ஒன்றும் புரியவில்லை அங்கே அவளிடம் அத்தனை மிரட்டி விட்டு இங்கே இவன் பாட்டில் கூலாக இருக்கிறானே என்று.
“ஏட்டா..” என்று மென் குரலில் அழைத்தான் சுஜித். தன் மணிக்கனிணியில் வேலை பார்த்து இருந்த தாரக், நிமிர்ந்து அவனைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை உயர்த்து என்னவென்று கேட்டான்.
கேட்க வந்ததெல்லாம் மறந்து போக “நான் பெண்ணா பிறந்திருக்கலாம் ஏட்டா..” என்றவனை ஒற்றை புருவம் நெரிய பார்த்தவன் “ஏன்டா இந்த கொலைவெறி உனக்கு?” என்று கேட்க…
“இவ்வளவு ஹேண்டசம்மா இருக்கீங்களே ஏட்டா..” என்று சிரித்தான் அவன்.
இடவலமாக தலையாட்டிக் கொண்ட தாரக்கோ “அழகுல தான் ஆபத்து அதிகம்.. போய் வேலையை பார்” என்றான்.
“இல்ல இல்ல நான் ஒரு விஷயம் கேட்க வந்தேன்”
கேளு என்பது போல கையை அசைத்தான் தாரக்.
“அந்த பொண்ணு.. ரிதன்யாவ அடைச்சு வைக்கும் போது ‘உன் தம்பிய தூக்கிட்டேன். உங்க அப்பாவ தூக்க போறேன்’ அப்படி இப்படின்னு நிறைய சொன்னீங்க.. ஆனா இது எதுவும் நடந்த மாதிரி தெரியலையே இல்லை எனக்கு தெரியாம ஏதாவது பண்ணிட்டீங்களா? நான் உங்களுக்கு விசுவாசமா இல்லையா?” என்று புலம்பியவனை தாரக் முறைக்க சப் என்று வாயை மூடிக் கொண்டான் சுஜித்.
தாரக் சிறுவயதில் அவர்கள் காஃபி எஸ்டேட்டை தந்தை சக்கரதேவோடு ஒரு முறை வாக்கிங் சென்றபோது ஒற்றையாய் வந்த யானையிடம் மாட்டிக்கொள்ள.. அப்பொழுது அங்கே வேலை செய்த சுஜித்தின் தந்தை தான் தாரக்கை காப்பாற்ற போய் அந்த யானையிடம் மாட்டி இறந்தார்.
அதிலிருந்து சுஜித் மேல் ஒரு தனி அன்பு கவனம் அனைத்துமே உண்டு தாரக்கிற்கு. வீட்டில் உள்ளவர்களை ஒரு எட்டு தள்ளி நின்றுதான் இவனிடம் பேச முடியும்.
இவனோடு கொஞ்சமே கொஞ்சம் உரிமையோடு பேசும் ஒரே ஆள் சுஜித் மட்டுமே..! அதுவும் அவனது மூடை பொறுத்து. எல்லா நேரமும் பேசிட அனுமதிக்கவும் மாட்டான் தாரக்.
“நீ என்னவாவது புலம்பிக்கொள்” என்றபடி மீண்டும் தாரக் தம் கணினியில் கவனத்தைப் பதிக்க..
“ஏட்டா.. ஏட்டா.. ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லுங்க இல்லன்னா எனக்கு இருக்கிற சின்ன மூளை இவ்வளவு கேள்வியும் தாங்க முடியாமல் வெடித்து சிதறி காது வழியா ஒழிக்கிடும்.. அப்புறம் என்ன மாதிரி ஒரு பிஏ உங்களுக்கு கிடைக்கவே மாட்டான் ஏட்டா..” என்று கெஞ்சியவனை கண்டதும் தாரக்
மீசைவோரம் லேசாக சிரிப்பில் துடித்தது.
கணினியை முன்னால் இருந்த டேபிளில் வைத்து இரு கைகளையும் மேலே உயர்த்தி நெட்டி முறித்தவன் சாவதானமாக இருக்கையில் சாய்ந்து “இப்ப என்ன தெரியனும் உனக்கு?” என்று கேட்டான்.
“அதான் சின்ன மேடம் எங்கேன்னு நீங்க இந்நேரத்துக்கு ஸ்மெல் பண்ணி இருப்பீங்க.. மேடம கூட்டிட்டு வரல.. அதே சமயம் அந்த பொண்ணு ரிதன்யா அவன் தம்பியை தூக்குறேன்னு பயமுறுத்தி அவனையும் இன்னும் தூக்கமா அலையவிட்டு இருக்கீங்க.. அவங்க அப்பாவையும் நம் கண்காணிப்பு வட்டத்தில் தான் வச்சிருக்கோம் இன்னும் ஒன்னு செய்யலையே.. ஏன் ஏட்டா?” என்று அவன் கேட்க..
“ஏன்னா… தூக்கிட்டோம்னா பயம் போயிடும்..! தூக்கம் வரைக்கும் தான் அந்த பயம்..!” என்றான் தாரக்.
“புரியல ஏட்டா…”
“புரிஞ்சிருந்தா நீ எனக்கு ஏட்டன இங்க இருந்து இருப்ப..” என்று தன் இடத்தை சுட்டிக்காட்டி சிரிந்தவன்,
“அந்த அதர்வா பெரிய ரோமியோ போல என் தங்கச்சிய கட்டி இருக்கான். அவனை தூக்கி வச்சு என் தங்கச்சி இங்க கொண்டு ஒரு ஒரு நிமிஷம் ஆகாது எனக்கு..!! ஆனா.. அப்படி செஞ்சா மத்தவங்களுக்கும் தாரக் மகாதேவ்வுக்கும் என்ன வித்தியாசம்?”
சுஜித் அப்பொழுதும் புரியாமல் பார்க்க, எழுந்தவன் தன் பேண்ட் பாக்ட்டில் கையை விட்டபடி சுஜித்தை நெருங்கி “அந்த அதர்வாவா என்னை தேடி வந்து அவன் தங்கச்சியை ஒப்படைப்பான். அவன் அக்காவுக்கா…” என்றதும் சுஜித்தின் விழிகள் மின்னின…
“சூப்பர் ஏட்டா..!! வாட் அ ப்ளான்..!”
“அதோட மட்டுமல்ல… கூட பொறந்த பிறப்பை காணும்னா எப்படி துடிப்போம்னு அவனுக்கும் காட்ட வேண்டாம்.. பட்டு தெருஞ்சு பொறுமையா வரட்டும்.. அதுவரை..” என்று அலட்சியமாக கூறியவன் “ஜிப்ப ரெடி பண்ண சொல்லு எஸ்டேட்டுக்கு போறேன்” என்ற வேகமாக நடந்தான் தாரக்.
தாரக் கணித்தது போலத்தான் அதர்வாவும் அங்கே இங்கே சுற்றி அலைந்து கொண்டிருந்தான் தன் அக்காவை தேடி முதல் நாள்..
ரிதன்யாவிடம் அதர்வா தாரக் பற்றி எச்சரித்திருக்க வக்கீல் தொழிலில் இருப்பவள் இம்மாதிரி நிறைய கேஸ்களை தெரிந்திருப்பவள், அதனால் சற்று எச்சரிக்கையோடு இருந்து கொண்டாள்.
அன்று அவள் வெளியில் செல்லும்போது தன்னை யாரோ தொடர்புவது போலவே அவளுக்கு ஒரு உள்ளுணர்வு கூறியது. பெண்களின் உள்ளுணர்வு பெரும்பாலும் பொய்த்ததில்லை..!!
அதுபோலவே சட்டென்று அவள் வண்டியை இடையில் நிறுத்த பின்னால் வந்த ஒரு ஒயிட் இண்டிகா இவளை கிராஸ் செய்து மெதுவாகவே சென்றது. அது அந்த வளைவில் திரும்ப மட்டும் அதையே பார்த்துக் கொண்டு இருந்தவள், பின் வேறு வழியில் இவள் தன் சீனியர் அலுவலகத்திற்கு வர.. அங்கே அவளுக்கும் முன்னே அந்த ஒயிட் இன்டிகா வந்து காத்திருக்க.. புரிந்து போனது அனைத்தும் அவளுக்கு.
அதன் பின் அங்கிருக்கும் ஜூனியர் இடமே போன் வாங்கி ரோஷினி இடம் பேசியவள் “ஒரு ரெண்டு மூணு நாளைக்கு நான் வந்து உன்னை பார்க்க மாட்டேன் ரோஷினி. நீனும் என் நம்பருக்கோ அதர்வாவுக்கோ கால் பண்ணாத.. உங்க அண்ணா நம்மள ஸ்மெல் பண்ணிட்டார் போலனு நினைக்கிறேன். அதனால அலார்டா இருந்துக்கோ.. வெளியில எங்கேயும் போகாதே, அப்படி உனக்கு முக்கியமா எதுவும் பேச வேண்டும்னா கர்னல் நம்பரிலிருந்தோ இல்ல அவங்க வைஃப் நம்பர்ல இருந்தோ அதர்வாக்கு பேசு. நல்லா கவனிச்சுக்கோ ஏதும் முக்கியமான இருந்ததா மட்டும் பேசு..!” என்று எச்சரிக்கை விடுத்தாள். ஏற்கனவே அண்ணன் பற்றிய பயத்திலிருந்து இப்பொழுது உண்மையிலேயே நடுங்கி விட்டாள் ரோஷினி.
ரிதன்யா அதர்வாவுக்கெல்லாம் அவள் அண்ணனை பற்றி வாய்மொழி அதுவும் இவள் வாய்மொழியாக மட்டுமே தெரியும். அவளுக்கு மட்டுமே அண்ணனை நேரடி பரிச்சயம் அல்லவா? அவன் எந்த எல்லைக்கும் போவான் என்று தெரியும் அல்லவா? அவள் நடுங்கிப்படியே தான் நடந்தது அடுத்த அடுத்த நிகழ்வுகள்.
அன்று அவளை பாலோ செய்த இண்டிகா அவளை தொடவும் இல்லை தொடர்வதை நிறுத்தவும் இல்லை.
ஆனால் ரிதன்யா தம்பியிடம் சொல்லி அவனுக்கு இன்னும் பயத்தை ஏற்படுத்த விரும்பாமல், தானே பார்த்துக் கொள்ளலாம் என்று
சற்று அலட்சியமாக இருந்துவிட்டாள்.
ஆனால் மறுநாள் காலையில் அந்த ஒயிட் இன்டிகா அவளை தொடரவில்லை. கருப்பு ஆடி ஒன்று இவளை பின்தொடர்ந்ததை அறியவில்லை. அது இவளது வண்டியை இடித்து இவளை கீழே விழ செய்து விபத்தில் காப்பாற்றுவது போல வந்த பிறகு தான் புரிந்தது. ஆனால் அதற்குள் காலம் கடந்து போனது.
காலையில் வேலைக்கு சென்றவள் மாலை ஆகி இரவு நேரம் வந்தும் வரவில்லையே என்று கிருத்திகாவுக்கு ஒரே கவலை.
எவ்வளவு வேலையாக இருந்தாலும் தான் எங்கே இருக்கிறேன் என்ன செய்கிறேன் என்று அவ்வப்போது சொல்லிவிடுவாள் ரிதன்யா. அதனால் பெண்ணை பற்றி பயம் இல்லை. ஆனால் மாலையில் இருந்து ஒரு தகவலும் இல்லையே என்று யோசித்தவர், அதர்வாவை அழைத்து அவனிடம் கூற
“வந்துருவா மா அக்கா.. அவள எல்லாம் யாரும் எதுவும் பண்ணிட முடியுமா என்ன? அதெல்லாம் பயப்படாதீங்க..!” என்று அன்னைக்கு தைரியம் ஊட்டினான்.
“உங்க அக்காவை யாரும் ஒன்னும் பண்ணிட மாட்டாங்க.. உங்க அக்காவால யாருக்கும் ஆபத்து விபத்து நடக்காம இருந்தா சரி” என்று கூறியதும், அவன் “ம்மாஆஆ..” பல்லை கடிக்க..
“டேய் இவ ஸ்கூட்டி ஒழுங்கா ஓட்ட மாட்டாடா.. அதுல எங்கேயாவது யார் மேலயாவது முட்டி மோதி ஆக்சிடென்ட் பண்ணிட்டாளா இல்ல இவளுக்கு எதுவும் அடிபட்டுருச்சுன்னு தான் எனக்கு பயமே.. கொஞ்சம் நல்லா தேடி பாருடா ஆது. எனக்கு என்னமோ மனசு படபடன்னு இருக்கு” என்றதும் அன்னையின் வார்த்தையை தவிர்க்க முடியாமல் அக்காவின் நண்பர்களுக்கு அழைத்தான்.
அதுபடியே ரங்கராஜனின் ஜூனியர்கள் ஒருவரான சுதர்சனை அழைக்க “ரித்து சாயந்திரம் சீக்கிரமே கிளம்பிவிட்டாளே ஆது.. ஏன் இன்னும் வீட்டுக்கு வரலையா? நான் வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணவா?” என்றதும் இந்த நிலைமையில் வேறு வழி இன்றி அவனது உதவியை நாடினான் அதர்வா.
இரவு முழுக்க அவனும் அவனது நண்பர்களும் சுதர்சன் மற்றும் சில ஜூனியர்களும் சுற்றியலைந்தனர் ரிதன்யாவை தேடி..
ஆனால் பலனோ பூஜ்யம் தான். எங்கு சுற்றியும் திரிந்து தேடியும் அவள் கிடைக்கவே இல்லை. அவள் தமிழ்நாட்டில் இருந்தால்தானே?
இவர்களோ சென்னை மாநகரத்தில் அவளை தேடிக் கொண்டிருக்க அவளை சுமந்து கொண்டு சென்ற ஆடியோ தமிழ்நாடு எல்லையை கடந்து வயநாட்டில் புகுந்திருந்தது அச்சமயம்..
அப்படி தேடும் சமயத்தில் தான் இவள் ஸ்கூட்டி ரோட்டோரம் கிடந்ததை கண்டுபிடித்து, அதன் பின் இவளுக்கு ஏதேனும் அடிபட்டு இருக்குமோ என்று மருத்துவமனை மருத்துவமனையாக அடுத்து சுற்றிக் கொண்டிருந்தனர் அதர்வாவும் அவனது நண்பர்களும்…
நாலா பக்கமும் ஆட்களை அனுப்பியும் அவர்களுக்கு கிடைத்த தகவலோ உறுதியா இல்லை.
எந்த மருத்துவமனையில் இது போல் அடிபடவில்லை என்றும் அன்றைய பொழுதில் இப்படி பெயர் தெரியாத இளம்பெண் ஒருத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் பதில்கள் வர.. ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும் மறுபக்கம் இங்கே தான் போனாள் இவள் என்று தலையை பிக்காத குறை தான் அதர்வாவுக்கு…
விடியற்காலை மூன்று மணிக்கு தான் இவன் வீட்டுக்குள் நுழைய அப்பொழுதும் மகளுக்காக காத்திருந்த கிருத்திகாவை நினைத்து இவனுக்கு தான் உதறலெடுத்தது.
‘என்னவென்று அம்மாவிடம் சொல்வது?’ என்று கவலையும் கொண்டான்.
அவ்வப்போது அவனிடம் விசாரித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால் மகனிடம் நேரடியாக கேட்டு அனைத்தையும் அவன் கூற.. “அப்படி எங்கு தாண்டா போயிருப்பா? அப்படி எல்லாம் அலட்சியமாக இருக்கிற பொண்ணு இல்லடா அவ.. வாய் துடுக்கா இருந்தாலும் வேலை எல்லாம் சரியா இருக்குமேடா என் பொண்ணு கிட்ட..” என்று கிருத்திகா உடைந்து அழுவதை தாங்காமல் தோளோடு அணைத்துக் கொண்டவன்
“ஒன்னும் ஆகி இருக்காது மா அவளுக்கு. சீக்கிரம் கிடைச்சிடுவா” என்று ஆறுதல் அளித்தான்.
அன்று நாள் முழுதும் ரிதன்யாவின் கவலையில் உழண்றவனுக்கு ரோஷினிடம் பேசும் நினைப்பே வரவில்லை. அதிலும் இதில் தாரக் சம்பந்தப்பட்டிருப்பான் என்று எண்ணம் கூட அவனுக்கு தோன்றவில்லை.
விஷயம் கேள்விப்பட்டால் தங்கையை இழுத்து சென்று இருப்பான் இல்லை அவன் தங்கையை யாரும் அறியாமல் கல்யாணம் பண்ணேன் என்று தன்னை தான் அவன் அடித்து உதைத்திருப்பான் என்று அவனது எண்ணங்கள் எல்லாம் இப்படி இருக்க..
அவனது எண்ணங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டிருந்தான்.. தாரக் மகாதேவ்!!
இரண்டாம் நாள் அதி காலையிலேயே அவனது ஏரியா இன்ஸ்பெக்டரிடம் இருந்து அவனுக்கு கால் வர.. அடித்து பிடித்து எழந்தவன் முகம் கூட கழுவாமல் எழுந்து ஓடினான் அவர் சொன்ன இடத்திற்கு..
அங்கே பாதாள சாக்கடையில் மூழ்கி இறந்து விட்டதாக ஒரு பெண்ணின் சடலத்தை வெண் துணியால் போர்த்தி வைத்திருந்தனர்.
கைகள் தடதடக்க..
நெஞ்சம் படபடக்க..
இன்ஸ்பெக்டரை நெருங்கியவன்,
சார் என்று ஈனஸ்வரத்தில் அழைக்க..
“ஜஸ்ட் ஃபார்மாலிட் தான் அதர்வா! இது ரிதன்யாவா தான் நீ இருக்கணும்னு அவசியம் கிடையாது. இப்படி ஒரு டெட் பாடி கிடைத்ததா இங்கே கிளீன் பண்ண வந்தவங்க சொன்னாங்க.. வயசு சில அடையாளங்கள் எல்லாம் ரிதன்யாவோட ஒத்துப்போனதுனால தான் உங்களை கூப்பிட்டேன். நீங்க பாருங்க பீ ப்ரேவ் எதற்கும்” என்று சொன்ன இன்ஸ்பெக்டரை கொஞ்சம் பயத்தோடு பார்த்தபடி அந்த சடலத்தின் அருகே சென்றான் அதர்வா.
அவனால் இந்த விஷயத்தை தாங்க முடியவில்லை. இரண்டு வயது பெரியவள் தான்.
ஆனால் சில சமயம் அன்னையாகவும் தாங்கி இருக்கிறாள்..
அக்காவாகவும் அரவணைத்திருக்கிறாள்… தோழியாகவும் உடன் இருந்திருக்கிறாள்..
எதிரியாகவும் அத்தனை சண்டை போட்டு இருக்கிறாள்… அவனுக்கு அத்தனை யாகவும் இருந்திருக்கிறாள் ரிதன்யா..!!
அதர்வாவுக்கும் அந்த சடலத்துக்கும் ஐந்து அடி தான் தூரம். ஆனால் அதை கடக்க முடியாமல் திணறினான் அதர்வா.
கால்கள் நடுங்கியது..
கண்களை கண்ணீர் திரை மறைத்தது.. நெஞ்சமோ அது ரிதுவாக இருக்காது என்று அடித்துக் கூறியது..!
ஆனாலும் அதை மீறியும் உள்ளுக்குள் ஒரு பயம் ஒரு பர்சன்டேஜ் அது அவளாக இருக்கமோ என்று..!
அத்தனை பிரார்த்தனையோடு நடந்தவன் தோளை பிடித்து ஒரு கை திரும்பி பார்க்க அங்கே சுதர்சன்.
“பயப்படாத ஆது..! ரித்துவா இருக்காது எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றதும் அந்நிலைமையிலும் இவனின் காதலை நினைத்து கடுப்பாக இருந்தாலும், இப்போதைக்கு ஆதரவுக்கு அவன் ஒருவனே என்று அவன் கைகளைப் பற்றிக் கொண்டு “சுதர்சன் தாங்க்ஸ்..!” என்றபடி மெல்ல அந்த வெண் துணியை விலக்க..
ரிதன்யா இல்லை அது..!
ஆறுதல் பெருமூச்சு அவனிடம்.
“ஆது ரித்து இல்லை தானே.. நான் சொன்னேன்ல ரித்துவாய் இருக்காதுன்னு எனக்கு தெரியும் என் மனசு ரித்து எங்கோ உயிரோடு இருக்கிறானு சொல்லு..” என்று காலம் காலமாக காதலித்தவன் போல கலாசேபம் நடத்தியவனை கண்டு கடுப்பானது அதர்வாவிற்கு.
“ப்ளீஸ் சுதர்ஷன் நானே ரொம்ப டென்ஷன்ல டயர்ட்ல இருக்கேன்” என்றதும்
“ஓகே ஓகே நான் பேசல..” என்று அவன் அருகில் நின்று கொண்டான்.
இன்ஸ்பெக்டர் இடம் சில விஷயங்கள் பேசிவிட்டு வண்டி எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவன் மனதில் பல எண்ணங்கள்..!!
என்ன நடந்திருக்கும்? எங்கே சென்றா அக்கா? என்று யோசித்துக் கொண்டே வந்தவன், கிருத்திகா இன்னும் விழக்காமல் இருக்க, மெல்ல சென்று தன்னறைக்குள் புகுந்து விட்டான். இதை கேட்டால் அவர் மிகவும் மனம் உளைச்சலுக்கு ஆளாவார் என்பதால் மறைத்து விட்டான்.
நண்பகல் போல விழித்தவன் “என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டோம்..” என்று நேரம் பார்க்க ஃபோனை எடுக்க, அவனுக்கு தெரியாது எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது.
யார் என்று இவன் திரும்ப அழைக்க “ஹலோ யாருங்க?” என்று கேட்ட குரல் எங்கேயோ எப்பையோ கேட்டது போல இருக்க..
“நான் அதர்வா..” என்று அவன் ஆரம்பிக்க..
“ரிதன்யா தம்பி இல்ல உன் பொண்டாட்டி தான் பேசணும்னா அவ போன்ல பேலன்ஸ் இல்லைன்னு சொல்லி கேட்டா..” என்று கர்னல் மனைவி கொடுக்க அப்பொழுது தான் ரோஷினியின் எண்ணம் வர தலையில் தட்டிக் கொண்டான் அதர்வா.
“ஆது..” என்று சோர்வாக அழைத்தாள் ரோஷினி.
ரிதன்யா பற்றி விஷயங்களை அவளிடம் பகிர்ந்து அவளை பயமுறுத்த வேண்டாம் என்று நினைத்தவன் “சொல்லுடா உடம்பு ரொம்ப முடியலையா? இன்னும் வாந்தி நிற்கலையா?” என்று மென்மையாக கேட்டதும்,
“ஆமா.. ரொம்ப முடியல தலை எல்லாம் சுத்துது.. காலையில் எழவே முடியல.. சாப்பிடவே முடியல.. எல்லாம் வாந்தியா வருது” என்று அடுக்கடுக்காக தன் உடல் வேதனைகளைக் கூற அதை அவளோடு சேர்ந்து நின்று தாங்க முடியாத தன் நிலைமையை அறவே வெறுத்தான் அதர்வா.
“ஓ மை அம்மு.. நான் மதியம் போல வரேன் வந்து உனக்கு சில டேப்லட்ஸ் கொடுக்கிறேன். ஆமா ஏன் ஆன்ட்டி நம்பரிலிருந்து கால் பண்ணி இருக்க?” என்று எதார்த்தமாக கேட்டான்.
“இல்ல முந்தாநாள் சேச்சி தான் ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா மட்டும் கால் பண்ணு. அதுவும் கர்னல் இல்லனா அவங்க வைஃப் நம்பர்ல இருந்து கால் பண்ணுனு சொன்னாங்க.. உங்க அண்ணனுக்கு உங்க விஷயம் தெரிஞ்சிருச்சுன்னு எனக்கு ஒரு இன்டென்ஷன் சொல்லுதுன்னு சொன்னாங்க..” என்று அவள் முடிக்கும் முன்..
“என்ன??” என்று அதிர்ந்து எழுந்து விட்டான் அதர்வா.
“ரிது உன்கிட்ட என்ன சொன்னா? எல்லாத்தையும் தெளிவா சொல்லு?” என்று அவன் பரபரப்பாக கேட்க..
“என்னாச்சு ஆது? ஏதும் பிரச்சனையா? என்று கலங்கியவளிடம்..
“நீ முதல்ல சொல்லு ரோஷினி..!” என்று கத்தினான்
மூன்று ஆண்டு காதலில் இவ்வாறு கத்தியதோ கோபப்பட்டதோ எல்லாம் அவன் கிடையாது. எதுவோ பிரச்சினை என்று புரிந்து கொண்டவள் ரிதன்யா அவளிடம் கூறியது அனைத்தையும் கூற..
“ஷிட்..!” என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் அதர்வா.
“இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லையே அம்மு..” என்று அவன் உள்ளே போன குரலில் கூற..
“என்ன நடந்துச்சு இது?” என்று தவிப்புடன் கேட்டாள் ரோஷினி.
“உங்க அண்ணா எங்க அக்காவை தூக்கிட்டான்..!” என்றதும் கேட்டுக் கொண்டிருந்த ரோஷினிக்கு உலகமே தட்ட மாலை சுத்த மயங்கி சரிந்தாள்.
மறுபக்கம் தந்தைக்கு அழைத்து அவர் பத்திரமாக இருக்கிறாரா என்று தெரிந்து கொண்டவன் அன்னையையும் அன்று வேலைக்கு செல்ல விடாமல் அழுத்தி பிடித்து இருக்க.. என்னவென்று கேட்டவருக்கு பதில் கூற முடியாமல் “இல்லமா ரிது விஷயமாக கொஞ்சம் விசாரணைக்கு யாரும் வந்தாங்கன்னா நீ வீட்ல இருக்கணும். அதுக்கு தான்” என்றதும் அவர் பயந்து போனார்.
“அப்படி எல்லாம் ஒன்னும் இருக்காது மா.. கண்டுபிடிச்சிலாம் ரிதுவ” என்றவன் அன்று முழுவதும் யோசித்து வேறு வழியின்றி மறுநாள் வயநாடை நோக்கி பயணித்தான்.
“வெல்கம்.. வெல்கம்.. வெல்கம் அதர்வா நோ நோ நோ நோ.. இப்போ நீங்க அதர்வா பிரபாகரன் இல்லையே தி கிரேட் பிசினஸ் மேனான தாரக் மகாதேவனின் அளியன்… உங்க ஊரு பாஷையில சொன்னா மச்சான். அம் ஐ ரைட்?? அப்புறம் உங்க அச்சன் அண்ட் அம்மா எல்லாம் நலமா?” என்று சிரித்தவனை கண்டு உள்ளுக்குள் பயப்பந்து உருண்டது அதர்வாவுக்கு.
கள்ளூறும்…
Nice epi mam
xmvVPnlTgYsuzfQ
Waiting for ur next epi
ItqKwWzpgkjy
Veryyy intresting epiiiii ❤️❤️❤️❤️❤️ lovlyyyyyyyyyy
VmvUculJCosSWTM