அத்தியாயம் 16
“வாவ்.. எவ்ளோ பெரிய ஆஃபிஸ்?”
“நீ இங்கேயே இறங்கிக்கோ..”
“ஏன்.. ரோட்டுல இறங்க சொல்ற? ஆஃபிஸ்குள்ள போய் நிற்பாட்ட மாட்டியா?”
“நீ இப்ப இன்ட்ரமா தான் சேர்ந்திருக்க.. அதாவது இடைகால ஊழியர்.. உன்னோட எக்ஸம்காக வேலைக்கு சேர்ந்திருக்க புரியுதா?”
“சோ? வாட்? டெம்ப்ரவரியா வேலைக்கு சேர்ந்தா.. டெம்ப்ரவரியா நட்டாத்துல விட்டுட்டு போவியா?”
“என்னது நட்டாத்துலயா? என்ன லாங்குவேஜ் இது? நேத்து என்னன்னா ரீல்ஸ் போடுறேன்னு ஒட்டு மொத்த மீடியாவுக்கும் ப்ரெக்னன்ட்டா இருக்கேன் சொல்லியிருக்க..அதை கேட்ட அத்தனை பேரும் அட்வைஸ் மேல அட்வைஸ்.. நல்லா வேளை என்னோட ப்ரெண்ட்ஸ் யாரும் பார்க்குறதுக்கு முன்னாடியே டெலிட் பண்ணிட்டேன்.. இல்லேன்னா என் மரியாதை என்னாகுறது? உன்னோட ஃபேமிலி.. என்னோட ஃபேமிலி எல்லோருக்கும் தெரிஞ்சா அவ்வளவுதான்..”
“உன்னைய தான் கட்டி வைச்சு உதைப்பாங்க..”
“என்னைய கட்டி வைச்சு? அவங்க உதைப்பாங்களா? லூசு.. லூசு.. ஆமா.. பிறந்ததுல இருந்தே லூசா? இல்ல இப்ப சமீப காலமா லூசாகிட்டியா? அய்யோ கடவுளே! அது ஏன் ஜெனிலியாவா பார்த்து ஹுரோயின்னா போடுறியே?”
“டேய் ஹர்ஷா.. இப்ப எதுக்கு புலம்புற? இந்த மாதிரி நீ புலம்புவதை பார்த்தா.. என்னைய லூசுன்னு சொல்லுவாங்களா? உன்னைய லூசுன்னு சொல்வாங்களா? நீ தான் லூசு.. லூசு.. லூசு..”
“ஆமாண்டி.. உன்னைய கல்யாணம் பண்ணி, இன்னமும் சமாளிக்குறேனே நான் லூசு தான்.. லூசே தான்.. இப்ப முதல்ல காரை விட்டு இறங்கு.. இங்க யாருக்கும் உன் அருமை பெருமை பத்தி தெரியாது.. தெரியுற மாதிரி வைச்சுக்காத.. என்னோட ரெக்கமெண்ட்டேசன்ல அப்பாயின்மென்ட் வாங்கியிருக்க.. இங்கேயாவது என் பேரை காப்பாத்து..”
“ரைட்.. சொல்லிட்டேல.. எப்படி உன் பேரை காத்துல பறக்கவுடுறேன்னு பாரு..”
“என்னது?”
“ப்ச்.. காப்பாத்துறேன்னு பாரு.. அதைத் தான் சொல்ல வந்தேன்.. ஜஸ்ட் டங் ஸ்லிப்பாகிடுச்சு..” என்றவாறே காரை விட்டு கீழே இறங்கிய விளானியோ, தன் கைப்பையில் இருந்த ஐடி கார்டை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டாள். வேக வேகமாக ஓடியவள், தனது ஐடி கார்டை காட்டி கம்பெனிக்குள் நுழைய, அவளை அங்கு பார்த்த நகுலன்,
“காசிக்கு போனாலும்.. நம்மை பிடிச்ச பீடை போகாதுன்னு சொல்லுவாங்க.. வீட்டுல தான் இவ இம்சை தாங்கலைன்னா இங்கேயும் வந்துட்டாளே?” என்று முணுமுணுத்தவாறே, வேக வேகமாக லிஃப்ட்டிற்குள் நுழைய,
“நகுல்.. ஸ்டாப்.. ஸ்டாப்..” என்றவாறே ஓடி வந்தாள் விளானி. சரியாக ஹர்ஷவர்தனும் அவளோடு இணைந்து வேகமாக வர, இருவரது கால்களும் இடறி, லிஃப்ட்டிற்குள் சேர்ந்தாற் போல் நுழைந்தனர். தான் கீழே விழுகாமல் இருக்க, ஹர்ஷவர்தனின் டையை பிடித்து இழுத்தவள், தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இயலாது, அவன் மீதே சாய்ந்தாள். எதை பிடித்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவென்று கைகளால் தேடி ஹர்ஷவர்தனிற்கு நகுலனின் இடுப்பில் அணிந்திருக்கும் பெல்ட் தட்டுப்பட, அதனை இறுக்கமாக பற்றிக் கொண்டவன், அவனது பெல்ட்டோடு கீழே விழ, விளானி அவன் மேல் விழ, நகுலனின் பேண்டும் கொன்று கீழே விழுந்தது. கீழே விழுந்த வேகத்தில் விளானியின் இதழ்கள் பசை போட்டு ஒட்டிக் கொண்டது போல், நச்சென ஹர்ஷவர்தனின் இதழ்களோடு பொருத்திக் கொள்ள, கீழே விழுந்த தனது பேண்டை எடுக்க முயன்ற நகுலனோ, தான் கண்ட காட்சியில் உறைந்து போய் நின்றிருந்தான். லிஃப்ட் அதற்குறிய தளத்தை அடைந்ததும், சட்டென சுய உணர்வு பெற்ற இருவரும் அங்கிருந்து வெளியேற, அவர்களை அடுத்து லிஃப்ட்டிற்குள் ஏறிய இளம்பெண்ணோ, ஆவென அலறியபடி அங்கிருந்து ஓடினாள். அவளது அலறல் சத்தத்தில் தனது நிலை உணர்ந்த நகுலனுக்கோ, வெட்கமும் அவமானமும் கோபத்தை கிளற,
“அடேய்.. நல்லவைங்களா.. உங்களை சும்மா விடமாட்டேன்டா..” என்று கத்தியபடியே, தன்னை சரி செய்து கொண்டு, ஹர்ஷவர்தனின் அறைக்குள் சென்றான். அங்கே எதுவும் அறியாதவன் தனது வேலையில் கவனமாய் இருந்தவனிடம், எதுவும் கேட்க முடியாது, அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான் நகுலன்.
“நல்லவேளை உள்ள ஷார்ட்ஸ் போட்டுருந்தேன்.. இல்லேன்னா என்னோட நிலைமை? ஏன்டா.. எப்பப்பார்த்தாலும்.. பசை போட்ட மாதிரியே ஒட்டிக்குறீங்க? கேட்டா.. அப்படியெல்லாம் எங்களுக்குள்ள எதுவுமில்லன்னு சீன் போடுறது..” என்று நகுலன் பேசிக்கொண்டிருக்க, ஹர்ஷவர்தனின் பிஏ ஹேமா உள்ளே நுழைந்தாள்.
“எக்ஸ்க்யூஸ் மீ சார்.. இன்ட்ரம் பேஜ் ஸ்டாஃப்ஸ் எல்லோரும் வந்துட்டாங்க..” என்றவள் கூறியதும், அதுவரை கணிணியில் ஏதோ வேலையில் இருந்தவன், தன் பார்வையை மட்டும் சற்று உயர்த்தி,
“ஓகே.. அவங்களை வரச்சொல்லுங்க..” என்று கூறி விட்டு மீண்டும் கணிணியை பார்க்க, அவனை பார்த்து புன்னகைத்து விட்டு சென்றாள் ஹேமா.
“மச்சக்காரன்டா நீ.. ப்ரியா ஒரு பக்கம் வெயிட் பண்ணிட்டுருக்கா.. இன்னொரு பக்கம் அருந்தவாலு.. இங்க ஆஃபிஸ்ல பிஏ கூட உன்மேல கண்ணா இருக்கா.. கொடுத்து வைச்சவன்டா நீ..”
“உனக்கு வேலையில்லையா.. அட்வர்டைஸ்மென்ட் கம்பெனிக்கிட்ட அப்பாயின்மென்ட் இருக்குன்னு சொன்னேன்ல போய் பார்த்தியா? ம்யூசிக் ஃபைனலிஸ்ட் பண்ணிட்டியா?”
“கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்க விட மாட்டியே.. சரி.. போறேன்..” என்ற நகுலன் எழுந்து கொள்ள, சரியாக அதே நேரத்தில் இடைக்கால பணியாளர்களாக விளானியுடன் இன்னும் சில இளைஞர்கள் வந்து நிற்க, அவர்களை பார்த்து எழுந்து வந்தவன்,
“வெல்கம் ட்டூ அவர் ட்ரீம் வேர்ல்.. இங்க நீங்க உங்க திறமையை வளர்த்துக்கலாம்.. உங்க க்ரியேட்டிவிட்டியை காண்பிக்கலாம்.. உங்களுக்கு தெரியாத விஷயங்களை கேட்டு தெரிஞ்சுக்கலாம்.. பட், உங்களால கம்பெனிக்கு கெட்ட பெயர் வந்துச்சுன்னா.. அதுக்கு நீங்க தான் முழுக்க முழுக்க பொறுப்பு.. கம்பெனியோட அசட்ஸ் உங்களோடது மாதிரி நினைச்சு.. ஹாண்டில் பண்ணணும்.. அண்ட் மத்த விஷயத்தை எல்லாம்.. மிஸ்டர். நகுலன் உங்களுக்கு சொல்லுவாரு.. ப்ளீஸ் கேரியான் மிஸ்டர். நகுலன்..” என்று சிறு புன்னகையுடன் கூற,
“அடப்பாவி.. உன் போதைக்கு நான் ஊறுகாயா? அப்படியே என் பொறுப்புல தள்ளி விட்டுட்ட இல்ல?” என்று முணுமுணுத்த நகுலன், அப்போது தான் அறைக்குள் நுழைந்த சஜனை கைக்காட்டி,
“சாரி கைய்ஸ்.. எனக்கு அட்வர்டைஸ்மென்ட் கம்பெனில கொஞ்சம் வேலையிருக்கு.. சோ, மிஸ்டர். சஜன்.. உங்களுக்கு எல்லாத்தையும் சொல்லுவாரு..” என்று சஜனிடம் நகுலன் கோர்த்து விட, அவ்வளவு தான் தன் வேலை முடிந்ததென ஹர்ஷவர்தன் தன் வேலையை பார்க்க, நகுலனோ விட்டால் போதுமென்று அங்கிருந்து ஓட, அங்கிருந்த புதியவர்களை பார்த்து அசடு வழிய புன்னகைத்தான் சஜன்.
“ஓகே.. என்கூட வாங்க..” என்று அழைத்துச் சென்றவன்,
“இங்க இருக்குறது ஸ்டோரி டிப்பார்ட்மெண்ட்.. கேம்கான ஸ்டோரி லைன் இவங்க தான் கிரியேட் பண்ணுவாங்க.. அப்புறம் இவங்க ப்ரோக்ராம் டெவலப்பர்ஸ்.. ஸ்டேஜ் வைஸ் டெவலப் பண்ணுவாங்க.. அப்புறம் ம்யூசிக்.. மல்டிமீடியா.. சோஷியல் நெட்வொர்க்.. கிரியேட்டிவ்.. பினான்ஸ்.. ஹச் ஆர்னு நிறைய டிபார்ட்மெண்ட் இருக்கு..” என்ற சஜன் கம்பெனி முழுவதையும் சுற்றி காட்டி, சில பல விளக்கங்களை கூற, அனைவருடன் சேர்ந்து, விளானியும் கவனமாக கேட்டுக் கொண்டாள். அனைத்து இடங்களையும் சுற்றி காட்டிய பின்,
“சோ, நீங்க உங்களுக்கு கொடுத்துருக்க டிபார்ட்மெண்ட்டுக்கு போய் ஜாயின் பண்ணிக்கோங்க.. அப்புறம் போறதுக்கு முன்னாடி, எதைப் பற்றியாவது உங்களுக்கு டவுட் இருக்கா?” என்றவன் கேட்க,
“எனக்கு ஒரு டவுட் சஜன் சார்..” என்று கை தூக்கினாள் விளானி. ஆர்வத்துடன் அவளை பார்த்த சஜன்,
“கேளுங்க.. உங்களுக்கு எந்த டவுட்னாலும் என்கிட்ட கேட்கலாம்..” என்றவளை ஊக்கப்படுத்த,
“இங்க கேண்டீன் எங்க இருக்கு? காலைல இருந்து சுத்திட்டே இருந்ததுல ரொம்ப பசிக்குது சார்..” என்று பரிதாபமாக கேட்க, தன் தலையில் தானே அடித்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது சஜனிற்கு.
“கேண்டீன் தானே.. அதோ அங்க இருந்து லெஃப்ட் எடுத்தா.. கீழே க்ரௌண்ட் ஃளோர்ல இருக்கு..” என்றவன் கூறியது தான் தாமதம்,
“தாங்க் யூ சஜன் சார்.. இதை மட்டும் நீங்க ப்ரோக்ராம் டெவலப் கமிட்டி இருக்குற ஃளோர்ல வைச்சுருங்க.. நான் ரெண்டே நிமிஷத்துல வந்துடுவேன்..” என்ற விளானி, தன் கையில் இருந்த கோப்புகளை அவனிடம் கொடுத்து விட்டு செல்ல, அங்கிருந்த அனைவரும் நடப்பதை சுவாரஸ்யமாக பார்த்தனர்.
“க்கும்..” என்று தன் தொண்டையை கணைத்தவன்,
“எல்லோரும் அவங்கவங்க டிபார்ட்மெண்ட் போறீங்களா?” என்றவன் கூர்மையாக பார்க்க, அவரவர் தங்களது துறைக்கு திரும்பினர். நடப்பது அனைத்தையும் தனது மானிட்டரில் சிசிடிவி கேமரா வழியாக பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷவர்தனின் இதழ்கள், “வாலு..” என்றவாறு
சிறு புன்னகையுடன் மலர்ந்தன. மன்னனின் ரகசிய புன்னகையின் பொருளென்னவோ?
Nice
Wowwwwwwwww interesting epiiii ❤️❤️❤️❤️❤️❤️❤️
wBiYVcryvQ
Super sis 💞