வானவில் 19
நேற்று கோவிலில் அவர்களின் நெருக்கத்தையும் வர்ணா கோபமாக பேச.. அவன் சிரிப்போடு தலையாட்டுவதையும் பார்த்த அசிதனுக்கு இவர்களின் இடையே உள்ள நெருக்கம் புரிந்தது. அதிலும் காரை இவனே தான் பஞ்சராகி அவளை அழைத்து சென்றான் என்றதும்.. பஞ்சர் பார்த்த மெக்கானிக் மூலம் தெள்ளத் தெளிவாக விளங்க..
மாமன் மகளை தேடி பிடித்து அவளின் வேலை பற்றி பேசுவது போல ஒன்றிரண்டு வார்த்தைகளை விட்டு மொத்தமும் அவளிடம் விஷயத்தை வாங்கிவிட்டான் அசிதன். கூடவே யாரிடமும் சொல்லக்கூடாது என்று அவள் அத்தனை உறுதி வாங்கிய பின்னே சொன்னாள்.
அசிதனுக்கு வர்ணா மீது மாமன் மகள் என்ற பாசம் தானே தவிர காதல் எல்லாம் துளியும் இல்லை. ஆனால் எப்படி இவன் என் வண்ணக்கிளியை கடத்தி செல்லலாம் என்று கோபம் தகிக்க.. அதைத்தான் அன்று இரவு அவன் முகத்தில் பல பரிசுகளை கொடுத்து தணித்துக் கொண்டான் அசிதன்.
அதுமட்டுமன்றி விநாயக் பற்றி அன்றிரவே அனைத்து தகவல்களையும் தன் நண்பர்கள் மூலமாகவும் கூகுள் ஆண்டவரிடம் கேட்டு தெரிந்து கொண்டவனுக்கு, உண்மையிலேயே இவன் காதலிக்கிறான் தான். ஆனால் அதற்கு சோதனை வைப்போமே என்று தான் அந்த கடத்தலை பற்றியே மாமன்களிடமும் மச்சான்களிடமும் போட்டுக் கொடுத்தது!!
கூடவே அவன் காதல் உண்மை என்றால் இவர்களை சமாளித்து கட்டிக் கொள்ளட்டும் என்று நினைப்பு!! பின்னாளில் இது தெரிய வந்தால் இன்று சாந்த சொரூபியாய் இருக்கும் இவர்கள் எல்லாம் அய்யனாராக மாற அநேக வாய்ப்புகள் உண்டு. அதன் பொருட்டே எதையும் மறைக்காமல் முன்னரே சொல்லி விட்டான் அசிதன்!!
குழப்பம் ஒன்று வந்தால் தான் தெளிவு என்று ஒன்று பிறக்கும்!! இவர்கள் இருவரும் இரு வேறு திசையில் மனதில் குழப்பிக் கொண்டே இருந்தால் இவர்கள் காதல் வெளியே வராது.
அதிலும் தன் உடைமை தானே என்று நினைத்திருக்க அதை கைப்பற்றி இனனொருவன் வரும்போதுதான் தன் உடைமை மீதான பற்றுதலும் போற்றுதலும் அதிகமாகும்!! அதைத்தான் விநாயக்கு செய்தான் அசிதன்!! வெறும் இரண்டு நாள் டைம் கொடுத்து!!
“அப்பாடி.. ஒரு வழியாக இரண்டுத்தையும் குழப்பி விட்டாச்சு.. முட்டிமோதி வரட்டும் இரண்டும்!! நாம நிம்மதியா தூங்கலாம்” என்று நேற்று தொலைத்த தூக்கத்தை இன்று கையில் எடுத்துக் கொண்டான்.
ஆனால் அங்கே சர்வாவோ.. கண்மண் தெரியாத கோபத்தில் தன் அறையிலேயே சுற்றிக் கொண்டிருந்தான். என்னதான் காதலிக்கிறேன் என்று தூக்கி இருந்தாலும் அவனால் இதை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தரணியின் பார்வையிலும் துஷ்யந்தன் வார்த்தையிலும் கட்டுப்பட்டு இருந்தாலும் அண்ணனாய் தங்கைக்கு நியாயம் செய்யவில்லை என்று அவனது மனம் உறுத்திக்கொண்டே இருக்க..
“அவனை ஏதாவது செய்ய வேண்டும்? என்ன செய்வது? என்ன செய்வது?” என்று யோசித்தவனுக்கு பெரிதாக இல்லை என்றாலும் சிறிதாக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று தோன்ற.. வெளியில் சென்ற விநாயக் வந்துவிட்டானா என்று வேலையாளிடம் விசாரிக்க..
“இல்லைங்க ஐயா.. நம்ம பைக் ஒன்னு தானுங்க எடுத்துட்டு போய் இருக்காப்ல அந்த தம்பி” என்று வேலையாள் சொல்ல.. வசதியாக போனது என்று நினைத்தவன் சிலபல போன்களை செய்ய, அடுத்த பத்தாவது நிமிடம் விநாயக்கின் பைக் பத்து நபர்களால் சுற்றி வளைக்கப்பட்டது.
காலையில் அந்த பேச்சுவார்த்தை முடிந்தபின் பைக்கை எடுத்து வெளியில் வந்தவன் தான் சுற்று சுற்று என்று சுற்றிக் கொண்டிருக்கிறான். எந்த வித இலக்கும் இல்லாமல் ரோடு போன போக்கில் இவன் பைக்கை விட.. எண்ணங்கள் முழுவதும் அவளிடம் தான்!!
‘இன்னும் அவளை நான் உயிராய் நேசிப்பது அவளுக்கு புரியவில்லையா? இல்லை புரிந்தும் புரியாத மாதிரி நடிக்கிறாளா? இன்னும் என் கடத்தலை கட்டிக்கொண்டு அலைகிறாளே!. அவளின் தவறு கடந்து அவளிடம் நான் காதல் கொண்டது போல.. என்னிடம் அவள் காதல் கொள்ள மாட்டாளா? தன் துணையின் குறை நிறைகளோடு சேர்த்து வருவதுதானே காதல்!! என்னவளே என் குறையை பிடித்து தொங்குகிறாள் என்றால்??? என் மீது அவளுக்கு காதல் இல்லையா? நான் அவளை எள்ளளவும் பாதிக்கவில்லையா? எனக்குள் தோன்றிய அந்த உணர்வு ஸ்பார்க் எதுவும் அவளிடம் தோன்ற வில்லையா?’ என்று தனக்குள்ளே ஆயிரம் கேள்விகள்.. விவாதங்கள்!! ஆனால் எதற்கும் பதில் தான் இல்லை. அனைத்துப் பதிலும் அவளே!! அவள் மட்டுமே!!
தன் சிந்தைக்குள்ளேயே சிக்கித்தவித்தவனை சுற்றிவளைத்தனர் சர்வா அனுப்பிய ஆட்கள்!!
அவன் என்ன ஏது என்று உணரும் முன் அடுத்தடுத்து அவன் மீது ஆட்கள் தாக்குதல் நடத்த.. முதலில் தட்டுத்தடுமாறியவன் அவன் கற்றுக்கொண்ட தற்காப்பு கலைகளும்.. நெஞ்சில் கொண்ட வீரமும்.. அவர்களிடமிருந்து தன்னை முதலில் தற்காத்துக் கொள்ள செய்தது.
அதன்பின் “டேய் என்னடா நீங்க பாட்டுக்கு வந்தீங்க? அடிக்கிறீங்க? ஒத்தனும் காரணம் சொல்லக்கூடாதா? நீங்க பாட்டுக்கு அடிச்சா என்னடா அர்த்தம்?” என்று நக்கலாக கேட்க..
“இங்க பார்ரா.. சாருக்கு காரணம் தெரியாமா அடி வாங்க மாட்டாராம்?” என்று ஒருத்தன் சொல்லி சிரிக்க..
“ஆமாண்டா பாவம்!! எதற்காக அடிவாங்குனானு தான் தெரிஞ்சுகிட்டு அடி வாங்கட்டுமே!!” என்று மட்டும் ஒருவன் வம்பு இழுக்க..
“டேய். பேச்ச குறைங்கடே.. வேலைய முடிச்சு புட்டு துட்டை வாங்கணுமா டாஸ்மார்க்கு போனமானு இருக்கணும்” என்று இன்னொருவன் பின்னாலிருந்து கத்த..
“இதோ முடிச்சிடுவோம் மாப்பி!!” என்று அனைவரும் மீண்டும் பாய்ந்து வர..
“நிறுத்த போறீங்களா இல்லையா டா? அப்புறம் உங்க தலையெழுத்து!!” என்று ஒருத்தனும் தன்னை நெருங்க முடியாதவாறு வளைந்து நெளிந்து குழைந்து இடையிடையே தன் கைகளாலும் கால்களாலும் அவர்களை ஏறி மிதித்தவன் மீண்டும் ஜம்பமாய் வந்து அமர்ந்து கொண்டான் அந்த ராயல் என்ஃபீல்டில்!!
“இங்க பாருடா ஹீரோவ.. அதுக்குள்ள நம்மள சமாளிக்க முடியாம வண்டியில் ஏறி தப்பித்து போக பாக்குறாரு” என்று எகத்தாளமாக கூறி ஒருவன் சிரிக்க மற்றவர்களும் கூடிநின்று நகைத்தனர்.
“வண்டியில் ஏறி உட்கார்ந்தா.. தப்பிச்சு போறேனு அர்த்தாமா? நல்லா கேட்டுக்கங்க இந்த வண்டியை விட்டு இறங்காமலே உங்க ஒவ்வொருத்தரையும் வைச்சு செய்ஞ்சுட்டு தான் இந்த இடத்தை விட்டு போவேன்!” என்றவன் அதைத்தான் செயலிலும் காட்ட ஆரம்பித்தான்.
பலநாள் பழகிய உற்ற தோழன் போலவே அந்த ராயல் என்ஃபீல்டு அவன் கைகளில் பறந்தது.. சீறிப்பாய்ந்தது.. எம்பிக் குதித்தது.. உருண்டு விளையாடியது.. அந்த அடியாட்கள் மீது!!
கூடவே இவனின் தற்காப்புக் கலையும் கைகொடுக்க அமர்ந்த வாக்கிலேயே வண்டியை ஓட்டிய படியே அனைவரையும் துவம்சம் செய்தான் விநாயக். கடைசியாக அனைவரையும் முடித்தபின் வண்டியிலே கெத்தாக சுற்றி வந்து அனைவரையும் ஒரு பார்வை பார்த்து “இப்போது எங்கே அடி வாங்கதவங்களா வரிசையா ஓடி வாங்க பார்ப்போம். அடுத்த ரவுண்டு ஆராம்பிக்கலாம். ஓகே வா?” என்று அவன் ஆரம்பிக்க.. “எடுறா ஓட்டம்” என்று அவ்விடம் விட்டு ஓடினர்.
அப்பொழுதுதான் அவன் சினம் சற்று தணிந்தது. ‘ஆனாலும் இது நம் மச்சான்கள் வேலையா? இல்லை அந்த நாரதரின் வேலையா? தெரியலையே!!’ என்று யோசித்தபடியே வர..
தப்பித்து ஓடியவர்களில் ஒருவன், விநாயக் எதிர்பார்க்காத நேரம் நீண்ட கழியை எடுத்து அவனது வண்டி வீலை பார்த்து எறிய.. அது சட்டென்று வீலுக்குள் மாட்ட.. நிலைதடுமாறி உருண்டு விழுந்தவன் நெஞ்சில் அருகியில் கிடந்த கூர்மையான கம்பு ஒன்று கிழித்தது. அவன் சண்டையிடும்போது கழட்டி வைத்த ஹெல்மெட் போட மறந்து இருக்க கருங்கற்கள் அவனது தலையை பதம் பார்த்திருந்தது. நெற்றியிலும் கை கால்களிலும் ஆங்காங்கே சீறாப்புகளும் கீறல்களும்.
தன்னை ஒருவழியாக சமாளித்து எழுந்து நின்றான். தலையிலிருந்து வந்த ரத்தமும்.. நெஞ்சிலும் கசிந்து கொண்டிருந்த குருதியும் சற்று அதிகமே!! அதிலும் நேற்று இரவிலிருந்து எதுவும் சாப்பிடாமல் இருக்க, கூடவே இந்த ரத்தக் காயங்களும் சற்று முன்னால் அந்த அடியாட்களை பந்தாடியது என்று சற்றே சக்தி இழந்து சோர்ந்து போக செய்ய நடக்க முடியாமல் தடுமாறிவன் மயங்கி சரிந்தான்.
சர்வாவுக்கு போன் செய்த ஆட்கள் “என்னங்க ஐயா.. அவ மனுசனா ராட்சசனா? பத்து பேரையும் பந்தாடிட்டான்!” என்றதும் சர்வாவுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் தான்.
“ஆனாலும் நாங்க விடலையே.. அவன் வண்டியில் ஏறி போகும் போது கழுத கழிய தூக்கி வண்டி வீலுக்குள்ள விட்டுடோயம்ல.. கீழை வுழுந்து அடிபட்டு மயங்கி கிடக்கிறான்” என்று கெத்தாக சொல்லி அவர்கள் போனை வைத்து விட இப்போது அதிர்ச்சியின் உச்சத்தில் சர்வா!!
“ஏதோ அவனே ரெண்டு தட்டு தட்டி வையுங்கள் என்று சொன்னால் இவனுங்க ஓரண்டையை இழுத்து வைத்திருக்கானுங்களே… இதை செஞ்சது நான் தான்னு தெரிய வந்தால்.. அவ்வளவுதான் மொத்த குடும்பமும் என்னை ரவுண்டு கட்டிடுமே!!” என்று பதைபதைத்தவன் அதற்கு மேல் நில்லாமல் அவனை தேடி அந்த இடத்திற்கு ஓடினான்.
பின்பக்க தலையில் அடிபட்டு இருக்க அவன் அணிந்து இருந்த இள நீல நிற சட்டையை தாண்டி ரத்தம் கசிந்திருந்தது நெஞ்சத்தில். பார்த்த சர்வாவுக்கு பதறிவிட்டது.
“தங்கையை காதலிக்கிறேன் என்று நாடு விட்டு நாடு வந்திருப்பவன், அத்தனை பணக்காரன், கூடவே தங்கையின் மனதில் இல்லாமலா அவனும் இவளை ஆதரித்து இருப்பாள்.. ஆனாலும் உனக்கு இவ்வளவு அவசரம் ஆகாது ராசா!!” என்று தனக்கு தானே திட்டிக்கொண்டு அவனை அள்ளி கொண்டு விரைவாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தான்.
வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன சொல்ல என்று புரியாமல் வண்டியில் வரும்போது விழுந்ததாகவே சொல்லுவோம் என்று மருத்துவமனையில் சொல்லியதையே வீட்டிலும் சொல்ல தரணிக்கு சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை.
“நீயே இருந்து பார்த்துக்கொள் நாங்க வந்துரோம்” என்றவர் மற்றவர்களுக்கு விஷயத்தை சொல்ல லஸியும் துஷ்யந்தனும் சிவா மற்றும் அருணோடு விரைந்து வந்தனர்.
தலையில் தான் சற்றே பலத்த அடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்லி சென்றிருக்க
“என்னடா இப்படி ஆகிட்டு.. பாப்பாக்கு இதை சொல்லவா வேண்டாமா?” என்று அவர்களுக்குள் தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்க..
அதற்குள் வீட்டுக்கு வந்த தரணி நரசிம்மர் வல்லபரிடம் கூறி கொண்டிருக்க.. அப்போது டங்கென்று பாத்திரம் விழுந்த சத்தத்தில் திரும்பிப்பார்த்தால் வர்ணா தான் அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள்.
“ஒன்னு இல்ல பிரியமா.. அவருக்கு ஒன்னும் இல்லை!!” என்று சொல்லும் முன் அவள் கண்கள் அருவியாய் பொழிய.. உதுடு பிதுக்கி குழந்தையாய் அழுதவளை கண்டு குடும்பமே சற்று நிம்மதி பெருமூச்சு விட்டது.
என்ன???? மகளின் அழுகையைக் கண்டு பெருமூச்சு விட்டனரா என்று டவுட் வரலாம்.. வரணும்!!
மகளின் அழுகையைக் கண்டு அல்ல.. மகளின் மனதில் விநாயக் இருக்கிறான் என்று அறிந்து அவர்கள் பெருமூச்சு விட்டனர்.
பின் தரணி ரிஷியோடு அவள் மருத்துவமனை செல்ல அவனை ஐசியூவில் வைத்திருந்தனர். வெளியில் நின்று அழுவதும் பின் அவனை எட்டிப் பார்ப்பதுமாக இருந்தாள் வர்ணா. அதுவே தங்கையின் மனதை அண்ணன்களுக்கு பறைசாற்றுவதாக இருந்தது. கூடவே அசிதன் அவனுக்கு ரத்தம் வேறு வழங்கி அப்போதுதான் வந்தான்.
அவன் ஐஸு விலிருந்த ஒருநாளும் மொத்த குடும்பமும் அங்கே தான் ஆஜர்!!
ஒருவழியாக மறுநாள் ஸ்கேன் எல்லாம் எடுத்து “ஒன்றும் இல்லை சாதாரண மேல் பக்க அடி தான்!!” என்று மருத்துவர் கூறி அவனை சாதாரண அறைக்கு மாற்றி இருந்தனர்.
அவன் கண் விழித்து பார்க்கும் வரை அனைவருக்கும் கொஞ்சம் திக் திக் மட்டும்தான்!! என்ன இருந்தாலும் அவர்கள் வீட்டு வருங்கால மாப்பிள்ளை அல்லவா??
மாறி மாறி அவனை ஷிப்ட் போட்டு வந்து பார்த்துவிட்டு சென்றனர்.. கூடவே அத்தனை விசாரணை அதற்குமேல் அத்தனை விருந்துபசாரம்!!
காலை மதியம் மாலை இரவு என்று அவ்வீட்டு பெண்களோடு கூட வரும் ஆண்களும் அடுத்து ஷிப்ட் ஆட்கள் வரும் வரை அங்கேயே இருக்க.. இப்படியாக அவனை மட்டுமல்ல அந்த மருத்துவமனையை கலகலப்பாக வைத்திருந்தது இவர்கள் குடும்பம்!!
முதலில் கண்டித்த செவிலியர்களையும் கொஞ்சம் அதிகாரமாக கூறிய மருத்துவர்களையும் தங்கள் புஜத்தை காட்டியே பயமுறுத்தி வைத்திருந்தனர் பாண்டி பிரதர்ஸ்.
“மாத்தி மாத்தி ஷிப்ட் போட்டு இவனுங்க மட்டும் வரானுங்களே.. என் மெனிக்காவை கண்ணுல காட்ட மாட்டேங்குறானுங்களே!! சோதிக்காதிங்க டா!!” என்று உள்ளுக்குள் புலம்பித் தவித்தான் விநாயக்..
‘உடம்பு ஸ்ட்ரன்துக்கு சூப்பு கொடுக்கிற மாதிரி என் மனதுக்கு என் மெனிக்காவை கொஞ்சமா காட்டுங்கடா?’ என்று கெஞ்சாத குறையாக ஒவ்வொருவரையும் இவன் பார்க்க..
“தம்பி சோர்ந்து தெரியுறாப்புல.. இன்னும் கொஞ்சம் நல்லா கவனிச்சிக்கோங்க” என்று சிவா சொன்னது தான் தாமதம் என்னும் விழுந்து விழுந்து கவனிக்க ஆரம்பித்தனர் அவனை.
அவனை அவர்களே உபசரித்தனரே தவிர மருந்துக்கும் வர்ணாவை அவன் கண்ணில் காட்டவே இல்லை.
ஒரு வழியாக காயம் ஆறி அவன் அடுத்த இரண்டு நாட்களில் வீட்டிற்கு வந்து விட்டான்.
வீட்டிற்கு வந்ததும் அன்றும் அவளை பார்க்கவே முடியவில்லை. “எங்கே போய் தான் தொலைந்தா.. இன்று நான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வருவேன் என்று தெரியாதா?” என்று கோபத்தில் இவன் கையில் வைத்திருந்த மாத்திரையை தூக்கி எறிய.. சென்று விழுந்ததோ வர்ணாவின் கால் அருகே..
அவனை கண்களில் நிரப்பியவாறே அருகில் வந்தவள், தன் அர்ச்சனை கூடையிலிருந்த பிரசாதத்தை அவன் பரந்த நெற்றியில் அவனுக்கு இட்டு விட்டாள். அன்று போல் இன்றும் மூக்கின் மீது கையை வைத்து நெற்றியில் ஊதிவிட.. அவளின் ஸ்பரிசம் தந்த இனிய உணர்வில் கண்களை மூடி அந்த கணத்தை ரசித்திருந்தான் விநாயக்!!
அவனிடமிருந்து அவள் விலக.. சட்டென்று அவள் கை பற்றியவன் ஏக்கதோடு அவளை பார்த்து, “ஏன் மெனிக்கா என்னை அவோய்ட் பண்ற.. இப்போ கூட என் மனம் உன்னை தான் தேடுது.. உன்னை மட்டும் தான் தேடுது. ப்ளீஸ்.. என்னை அலோ பண்னேன் உன் வாழ்விலும்.. உன் இதயத்திலும். ஐ வான்னா ஷவர் மை லவ் அட் மை லாஸ்ட் ப்ரீத் மெனிகா.. ஐ நீட் யூ..” என்று கையை அவள் புறம் நீட்டி உயிர் உருக கண்களால் வேண்டி நின்றவனை பார்த்தவளால் அந்த கையை புறக்கணிக்க முடியவில்லை. அதே நேரம் முழு மனதோடு பற்றவும் முடியாமல் தவித்துக் கொண்டு நின்றாள்.
“மெனிக்கா…” என்றான் மென்மையிலும் மென்மையாக…
“ப்ளீஸ்.. விநாயக் என்னை பலவீனப்படுத்தாதிங்க.. என்னால உங்களை.. அந்த மாதிரி.. நீங்க என்னை.. நினைக்கும் போது என்னால் எப்படி? இப்போ இருக்கிற காதல் பின்னாளில் உங்களுக்கு குறையலாம் இல்லை மறையலாம். அப்போ நான் செய்த அந்தத் தப்பை மட்டும் தான் உங்க கண் முன்னாடி நிக்கும். வேண்டாம் அப்படி ஒரு நிலைமை நமக்கு வர வேண்டாம்!! அதை விட நீங்கள் இங்கிருந்து பிரிந்து செல்வது தான் நல்லது” என்றாள் வேதனையை மறைத்து.
“அப்போ நீ என்னை லவ் செய்யல.. உன் மனசில நான் இல்ல.. நான் அடி பட்டபோது நீ எனக்காக துடிக்கல.. அப்படித்தானே? என் கண்ணை பார்த்து உண்மையை மட்டும் சொல்லு!! அதுக்கப்புறம் உன்னை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” என்று கைகளை கட்டிக்கொண்டு அவளை தான் தீர்க்கமாக பார்த்தான்.
எப்படி பொய் உரைப்பாள்.??
அவன் மனதில் இல்லை என்று?
அவனுக்காக துடிக்கவில்லை என்று?
அவனை காதலிக்கவே இல்லே என்று??
அடுத்த நொடி சட்டென அவனை இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டாள். அவன் முகம் எங்கும் இச் இச் சென முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள் வர்ணா.
“ஆமா.. நான் உங்களை லவ் பண்றேன் தான்.. லவ் யூ.. லவ் யூ!!” என்று.. அத்தனை லவ்யூக்கள்.. அத்தனை இச்சுக்கள்!!
அவளின் காதல் அதிரடியில்
திகைத்து நின்றான் விநாயக்!!
வர்ணங்களாக.. பல விதங்களில் அவள் காட்டிய அந்த காதலில்.. நேசத்தில்.. அன்பில் உருகி நின்றான் காதலன்!!
அவள் கொடுத்த முத்தத்தில் உறங்கிய அவன் ஆண்மை சிலிர்த்து கொண்டு எழுந்தே விட்டது. அவள் உதடுகள் அவன் முகம் முழுவதும் தயக்கமே இல்லாமல்.. தனது ஈரமான ரேகையைப் பதித்து பதித்து விலகியது..!!
”ஐ லவ் யூ மசினா…
ஐ லவ் யூ ஸோ மச்.. மச்சான்!!”
ஆனாலும்.. என்னால் உங்களை ஏற்க முடியாது!
!” என்றவள் சொல்லிட.. அவளை விட்டு பிரிந்து சென்றான் அன்றிரவே!!
“என்னங்கடா.. லவ் சொல்லி.. லவ் சொல்லி விளையாடுறிங்க.. போங்கடா நீங்களும் உங்க லவ்வும்”
என்று விரக்தியில் கத்தியது கியூபிட்!!
வானவில் வளரும்..
👌👌👌👌👌👌👌👌👌👌👌
tKjEBCQAZbNs
FVULkKntpAjE
WzAOImSRhfc
Super epiii 💕💕💕💕💕💕💕
Supero super sis