ATM Tamil Romantic Novels

என் மோகத் தீயே குளிராதே 17

அத்தியாயம் 17

 

காலையில் எழுந்தவள், வழக்கம் போல் வீட்டை சுத்தம் செய்ய, அவள் ஏதோ கவர் கிடைக்க, அதனை எடுத்து பார்த்தவளுக்கு கோர்ட்டில் இருந்து வந்திருப்பது புரிந்தது. 

 

‘என்னைய டிவொர்ஸ் பண்ண, கோர்ட் வரைக்கும் போயிட்டீங்களா? நீங்க இவ்வளவு தூரம் என்னைய வெறுப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்ல..’ என்று மனதுக்குள் புலம்பியவள், அதனை எடுத்துக் கொண்டு, ஹரிஷான்தின் அறைக்குள் சென்றாள். அங்கே தனது கார் சாவியை எடுத்துக் கொண்டு, கம்பெனிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவனின் முன்னால் அந்த கவரை நீட்டினாள். 

 

“என்னதிது?”

 

“எது?”

 

“ப்ச்.. இதைத் தான் கேட்குறேன்..” என்ற ஹாசினி, தன் கையில் இருந்த டிவொர்ஸ் நோட்டிஸை காண்பிக்க, 

 

“அது.. கொஞ்ச நாள் முன்னாடி..” என்றவன் ஏதோ சொல்ல தொடங்க,

 

“என்னைய டிவொர்ஸ் பண்ற அளவுக்கு போவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..” என்னவளின் கண்ணில் இருந்து நீர் வழிய, அதனை பார்த்தவன்,

 

“ப்ச்.. புரியாம பேசாத.. முதல்ல அந்த கவரை கொடு..” என்று அவளிடம் இருந்து பிடுங்க முயல,

 

“ஒன்னும் வேணாம்.. நான் நம்ம வீட்டாளுங்க யாருக்கும் இதைப் பத்தி சொல்ல மாட்டேன்.. நான் சொல்லிருவேனோன்னு நீங்க ஒன்னும் பயப்பட வேணாம்..” என்றவளை கூர்மையாக பார்த்தவன், அவள் முன்னே தன்‌ கையை நீட்டி,

 

“எனக்காக பொறுமை ரொம்ப கம்மி.. ஒழுங்கா நீயா கொடுத்துடு..” என்று கேட்க,

 

“முடியாது.. எப்ப என்னைய வீட்டை விட்டு வெளியே துரத்தப் போறீங்க? இந்த மாதிரி நோட்டீஸ் வந்தவங்க ஒரே வீட்டுல இருக்கக்கூடாதாமே? எப்ப என்னைய வெளியே துரத்தப் போறீங்க?” என்றவள் அழுகையுடன் கத்தத் தொடங்க, 

 

“எதுக்கு இப்ப கத்துற? இந்த மாதிரி எல்லாம் எந்த லூசு  உன்கிட்ட சொல்லுச்சு? அப்படி எல்லாம் எதுவும் இல்லை.. அதை என்கிட்ட கொடு..” என்றவன் அவளது‌ கையில் இருந்த கவரை பறிக்க முயன்றான். 

 

“ஹரி.. நான்.. உங்க மனசுல.. இவ்வளோ..” என்றவள் தன் இரு பெருவிரலோடு ஆள்காட்டி விரலை சேர்த்து, 

“இவ்வளவு கூட நான் உங்க மனசுல இல்லையா?” என்றவள் தன் நெஞ்சை சுட்டிக் காட்டி, 

 

“ஆனா, இங்க நீ மட்டும் தான் இருக்க.. என் மனசு பூரா நீ மட்டும் தான் இருக்க..” என்றவளின்  தலை ஒருபுறம் சுற்றுவது போலிருக்க, அங்கிருந்த டீ பாயின் மீது அமர்ந்தவள்,

 

“உன்னையே என்னோட பதினாறு வயசுல, என்னைக்கு பார்த்தேனோ? அப்போதிலிருந்து இங்க சுமக்குறேன்.. நாம விரும்புற ஒருத்தர், நம்ம கண்ணு முன்னாடியே இன்னொருத்தரை விரும்பி, அவங்கக்கூட நம்ம கண்ணு முன்னாடியே ஒன்னா வாழுறது எவ்வளவு வலிக்கும் தெரியுமா? ஆனா, அப்பவும் நீங்க நல்லாருக்கணும்னு தான் நினைச்சேன்.. அந்த காமினி, உங்களை ஏமாத்துறான்னு தெரிஞ்சதும் உங்கக்கிட்ட எவ்வளவு தூரம் சொன்னேன்.. நீங்க எதுவுமே கேட்கலையே? அதான், அன்னைக்கு அந்த மாதிரி நடந்துகிட்டேன்.. உங்க மேல இருக்குற லவ்.. அதான் அப்படி பண்ணிட்டேன்.. உங்களை அவக்கிட்ட காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல..” என்று அழுதவள், நிமிர்ந்து அவனை நேருக்கு நேர் பார்த்தவாறு,

 

“நிஜமாவே உங்க மனசுல நான் இல்லையா? என் மேல கொஞ்சம் கூட லவ் இல்லையா?” என்று ஏக்கமாக கேட்டவளை நோக்கி ஒரெட்டு எடுத்து வைத்தவன், அவளை நோக்கி கை நீட்டும் முன், தன் கண்களை துடைத்தவாறு அங்கிருந்து எழுந்தவள்,

 

“சாரி ஹரி.. வெரி சாரி.. கெஞ்சி வர்றதுக்கு பெயர் காதல் இல்ல.. அதுக்கு பெயர் இறக்கம்.. உங்களை அளவுக்கு அதிகமா தொந்தரவு பண்ணிட்டேன்.. சாரி..” என்றவாறு அங்கிருந்து செல்ல, அப்படியே தனது கட்டிலில் அமர்ந்தவன் கண் முன்னே, சிறு வயதில் இருந்து தன்னை சுற்றி சுற்றி வந்த, ஹாசினி தோன்றி மறைய, காமினி எனும் மாய உலகத்தில் மதிமயங்கிக் கிடந்த தன்னை எண்ணி நொந்தான். ஹாசினி மட்டுமே தன் மனதில் முழுதாக நிறைந்திருப்பதை உணர்ந்தவன், சட்டென எழுந்து வெளியே வர, அவன் முன்னே ஊதா வண்ண புடவையில் நின்றிருந்த ஹாசினி,

 

“ஒன்னு.. ரெண்டு.. மூணு.. ம்ம் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டேன்..” என்றவாறே அவன் முன்னே வந்தாள். 

 

“இந்தாங்க.. இந்த மாசம் கரெண்ட் பில் கட்டுன ரசீது.. அப்புறம் மளிகை சாமான் வாங்குனதுல மிச்சம் இருக்குற அமௌண்ட்.. பால்காரனுக்கு நான் கொடுத்துட்டேன்.. நான் எல்லாத்தையும் எடுத்துக்கல.. கொஞ்சம் இங்கேயே வைச்சுருக்கேன்.. சிந்துக்கிட்ட பேசிட்டேன்.. அவக்கூட அவ ரூம்ல தான் தங்கப்போறேன்.. அப்புறம் இது.. நான் உங்களுக்கு மனப்பூர்வமா டிவொர்ஸ் தர்றேன்னு எழுதி கையெழுத்துப் போட்டிருக்கேன்.. என்கிட்ட இருந்த நூறு ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர்ல தான் எழுதிருக்கேன்.. இதை நீங்க விடுதலை பத்திரமா யூஸ் பண்ணிக்கலாம்.. கோர்ட்ல ப்ரோட்யூஸ் பண்ணிக்கோங்க..” என்றவள் தனது உடைமைகளை தூக்கிக் கொண்டு, வீட்டு வாசலை விட்டு இறங்க,

 

“ஒன் செகண்ட் ஹாசி..” என்றவனின் வார்த்தைகள் அவனுக்கே கேட்கவில்லை எனும் போது, அவளுக்கு எவ்வாறு கேட்டிருக்கும்? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பிரயோஜனம்? அவள் தன்னை விட்டு செல்லும் போது தான், நாம் நேசித்த ஒருவர், நம்மை விட்டு நீங்கும் போது, எவ்வளவு வலிக்கும் என்பதை உணர்ந்தான். தன்னை தேடி வந்த சொர்க்கத்தை புரிந்து கொள்ளாது தள்ளி வைத்தவன், இப்போது அச்சொர்க்கத்தை திரும்பப் பெறும் வழி அறியாது, விழித்தான். வாழ்க்கையில் முதன் முறையாக அடுத்த என்ன செய்வது என்று அறியாமல் திணறினான். தன் காதலை நிரூபித்து, தன் காதலியுடன் இணைவானா ஹரிஷான்த்?

***************************************************

கேண்டீனில் சாப்பிட்டு முடித்தவள், திரும்பி வர, வரவேற்பறையில் அர்ச்சனாவை கண்டதும், 

 

“அச்சு..” என்றவாறு ஓடிச் சென்று அவள் முன்னே நிற்க, 

 

“விளா..” என்றவாறு சந்தோஷத்தில் குதித்தாள் அர்ச்சனா. இருவரும் வரவேற்பறையில் கட்டிப் பிடித்து தங்களது மகிழ்ச்சியை பறிமாறிக் கொள்ள, அதனை தனது மானிட்டரில் பார்த்த ஹர்ஷவர்தன், வரவேற்பில் இருக்கும் பெண்ணிற்கு அழைத்து,

 

“மிஸ்.சாந்தி, அங்க ரிசப்ஷன்ல ரெண்டு பொண்ணுங்க இருக்காங்களா?” என்று கேட்க, அவளோ நிமிர்ந்து பார்த்துவிட்டு,

 

“எஸ் சார்..” என்று கூற,

 

“அவங்க ரெண்டு பேரையும், அரவிந்த் சாரோட டீம்கு போக, கைட் பண்ணுங்க..” என்றவன் இணைப்பை துண்டிக்க, அப்பெண்ணோ, அவர்கள் இருவரையும் டீம் லீடர் அரவிந்த் இருக்கும் தளத்திற்கு அழைத்துச் செல்ல, அதனை கவனித்த சஜனோ, ஹர்ஷவர்தனை தேடி வந்தான். 

 

“நீ செய்யுறது உனக்கே நல்லாருக்கா?”

 

“எதை சொல்ற?”

 

“அதான்.. விளாவை அரவிந்தோட டீம்ல கோர்த்து விடுறியே.. உனக்கே நல்லா இருக்கா?”

 

“ஏன்? அவன் டீம்கு என்ன? இது வரைக்கும், அவன் மேல எந்த கம்ப்ளைண்ட்டும் வந்ததில்லையே?!” 

 

“கம்ப்ளைண்ட் எதுவும் வந்ததில்லை தான்.. பட், அவன் ஒரு காதல் மன்னனாச்சே?!”

 

“சோ, வாட்? எனக்கு வேலை தான் முக்கியம்..” என்றவன் தனது வேலையில் கவனாமாயிருக்க,

 

“ஏதோ சொல்லணும்னு தோணுச்சு.. சொன்னேன்.. நான் கிளம்புறேன்..” என்றவன் அங்கிருந்து செல்ல, சிசிடிவி கேமரா வழியாக அரவிந்த் டீம் இருக்கும் தளத்தில் ஒரு கண் வைத்தபடியே தன் வேலையையும் செய்யச் தொடங்கியிருந்தான். 

 

“அரவிந்த் சார்..” என்ற விளானியை திரும்பி பார்த்தவனின் விழிகளில் விரிந்து சுருங்கியது. 

 

“எஸ்..”

 

“நாங்க டெம்ரவரி எம்ப்ளாயா சேர்ந்திருக்கோம்.. உங்கக்கிட்ட ட்ரெயின் எடுத்துக்க சொல்லி, அனுப்பிருக்காங்க..” என்றவளை மேலும் கீழுமாக பார்த்தவன், அர்ச்சனாவிடம், ஒரு கோப்பினை கொடுத்து, அதனை படிக்கச் சொன்னவன், விளானியிடம் திரும்பி, 

 

“நம்ம டீம்ல டோட்டலா பதினாறு பேர் இருக்கோம்.. எல்லோருக்கும் கோல் காஃபி வாங்கிட்டு வா..” என்று கூறி விட்டு, தனது கணிணியில் கவனமாயிருக்க, புருவம்‌ சுருக்கி யோசித்தவள், லிஃப்ட் இருக்கும் இடத்தை நோக்கி செல்ல,

 

“இன்னும் பத்து நிமிஷத்துல, நீ எனக்கு ரிப்போர்ட் பண்ணிருக்கணும்..” என்று கூற, தன் கைக்கடிகாரத்தினை திருப்பிப் பார்த்தவள், படி வழியாக இறங்கத் தொடங்கினாள். அவன் கூறியது போல்‌ பத்தே நிமிடத்தில் வாங்கியவள், ஓடி வந்து அவனிடம் நீட்ட, அவனோ

 

“எல்லோரும் மீட்டிங் ரூம்ல இருக்காங்க.. அங்க வந்து கொடு..” என்று கூறிவிட்டு, முன்னே சென்றான். 

 

“அடேய்.. முள்ளம்பன்றி தலையா.. நீ ரொம்ப பண்ற.. உனக்கிருக்கு ஒரு நாள்..” என்று புலம்பியவாறே, கையில்‌ அட்டைப் பெட்டியை தூக்கிக் கொண்டு, மீட்டிங் நடக்கும் அறைக்குள் நுழைந்தாள் விளானி. அங்கே, நடுவில் ஹர்ஷவர்தன் அமர்ந்திருக்க, அவனுக்கு இருபுறமும் நகுலன் மற்றும் சஜன் அமர்ந்திருந்தனர். கையில் அட்டைப் பெட்டியை தூக்க முடியாது, தூக்கிக் கொண்டு வந்த விளானி, அங்கிருக்கும் மேஜையில் வைக்க, முகம் சுளித்தான் அரவிந்த். 

 

“ஒரு பேசிக் மேனர்ஸ் கூட உனக்கு தெரியாதா? இப்படித்தான் டேபிள்ல.. எல்லோருக்கும் நடுவுல வைப்பியா?” என்று பல்லைக் கடித்த அரவிந்த்தை தன் தோள்களை குலுக்கியவாறு பார்த்த விளானி,

 

“நானும் உன்னைய மாதிரி எம்ப்ளாய் தான்.. உனக்கு சர்வன்ட் கிடையாது.. நீ வாங்கிட்டு வரச் சொன்ன.. ஒரு ஹெல்ப்பா நானும் வாங்கிட்டு வந்துட்டேன்.. பட், அதுக்கு மேல தூக்கிட்டு வரச் சொல்லி சர்வ் பண்ண சொல்றதெல்லாம்.. டூ மச்..” என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு, சிரித்துக் கொண்டே பதிலளித்த விளானி,

 

“சாரி.. கைய்ஸ்.. ஐம் விளானி.. நான் இந்த கம்பெனில டெம்ரவரியா ஜாய்ன் பண்ணிருக்குற‌ ஸ்டாஃப்.. மிஸ்டர். அரவிந்த், இதையெல்லாம் வாங்கிட்டு வரச் சொன்னாரு.. சோ, ப்ளீஸ் ஹெல்ப் யுவர் செல்ஃப்..” என்று அனைவரையும் பார்த்து கூறிவிட்டு, அரவிந்திற்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் விளானி. அவள் அப்படி தான் நடந்து கொள்வாள், என்று அறிந்திருந்த ஹர்ஷவர்தன்,

 

“கைய்ஸ், நம்ம கேம் மார்க்கேட்டுல லான்ச்சாக போகுது.. சோ, அது சம்பந்தமா எஸ்கே கம்பெனியோட  இன்னைக்கு நடக்கக்கூடிய நைட் பார்ட்டிக்கு நம்ம கம்பெனி சார்பா, மிஸ்டர். அரவிந்த் அண்ட் மிஸ்.விளானி கலந்துக்கப் போறாங்க..” என்று கூற, அங்கிருந்த அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள,

 

“பட் வொய் மிஸ். விளானி? அவங்களுக்கு பதிலா நாம் போகலாமே?!” என்று சஜன் கேட்க,

 

“நாளைக்கு நடக்கக்கூடிய லான்ச்காக அரேன்ஜ்மெண்ட்ஸ் அண்ட் ஃபோட்டோ ஷுட்.. இது எல்லாத்தையும் யார் பார்த்துக்குவா? மிஸ்டர். சஜன்..” என்று ஹர்ஷவர்தன் திருப்பி கேள்வி கேட்க, தன் வாயை மூடிக் கொண்டான் சஜன். 

 

“வெல்.. ஆல் தே பெஸ்ட் கைய்ஸ்.. நம்ம கம்பெனியோட ரெபிடேஷன் இப்போ உங்க கைல.. டீலை சக்ஸஸா முடிச்சிட்டு வாங்க..” என்ற ஹர்ஷவர்தன், அங்கிருந்து கிளம்பிச் செல்ல, அரவிந்தை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் விளானி. 

 

‘மவனே.. நாளைக்கு நான் உன்னையே படுத்துற பாடுல.. ஜென்மத்துக்கும் நீ யாரையும் டீஸ் பண்ணமாட்ட’ என்று திட்டம் தீட்டியவளுக்கு தெரியவில்லை, விளையாட்டு வினையாகும் என்று..

4 thoughts on “என் மோகத் தீயே குளிராதே 17”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top