அத்தியாயம் 18
“ப்ச்.. இந்த ட்ரெஸ்.. ஜிப்.. ப்ச்.. போட முடியலையே!” என்றவாறே தனது நீள கௌனின் ஜிப்பை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள் விளானி. தனது தோழி அர்ச்சனாவிற்கு போனில் அழைத்தவள்,
“என்னடி ட்ரெஸ் வாங்கிருக்க? ஜிப்பைக் கூட இழுத்து விட முடியலை.. அவ்வளவு டைட்டாக இருக்கு..” என்று கூற,
“சாயங்காலம் வாங்கும் போது, சைரஸ் கரெக்ட்டா தானே இருந்துச்சு.. அதுக்குள்ள எப்படி பத்தாம போகும்? உண்மைய சொல்லு.. எனக்கு தெரியாம ஏதாவது வாங்கி சாப்பிட்டியா?” என்று கேட்க,
“அட குரங்கே! ட்ரெஸ் பத்தல.. ஏதாவது ஐடியா சொல்லுவன்னு உனக்கு போன் பண்ணா.. உனக்கு கொடுக்காம எதை சாப்பிட்டேன்னா கேட்குற? ஒழுங்கு மரியாதையா எனக்கு ஹெல்ப் பண்ணு.. இல்ல, நாளைக்கு பதின்மூன்றாவது மாடில இருந்து கீழே தள்ளி விட்டுடுவேன்..” என்று தனது ட்ரெஸின் ஜிப்பை போட முயன்றபடியே அவள் பதிலளிக்க,
“நான் என்ன பூதமா போனுக்குள்ள கைய விட்டு உனக்கு ஜிப் போட்டுவிட? பக்கத்துல யாராவது இருந்தா.. கூப்பிட்டு ஜிப் போட சொல்லு.. எனக்கு இப்ப தூங்குற வேலையிருக்கு.. ஆளை விடு..”என்ற அர்ச்சனா, தொடர்பை துண்டிக்க,
“ஆபத்துக்கு பாவமில்லை.. அவனையே கூப்பிட வேண்டியது தான்..” என்று முணுமுணுத்தவள், தன் அருகில் இருந்த பெரிய டர்க்கி டவலை போர்வை போல் முதுகை சுற்றி போர்த்திக் கொண்டு, வெளியே ஹர்ஷவர்தன் தெரிகின்றானா? என தன் தலையை மட்டும் நீட்டி பார்க்க, அங்கே யாரும் இல்லை. மெல்ல அப்படியே வெளியே வந்தவள், இடதுபுறமாக இருக்கும் ஹர்ஷவர்தனின் அறைக் கதவை தட்டினாள். உள்ளிருந்து எந்த பதிலும் வராததால், கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள் விளானி. அங்கே காதில் இயர் பட்ஸை மாட்டிக் கொண்டு, காஃபி மேக்கரில் இருந்து, காஃபியை கப்பில் ஊற்றிக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன். நேரே அவன் முன்னே போர்வை போல் டவாலால் தன்னை மூடியபடி வந்து நின்ற விளானியை கண்டவனின் புருவங்கள் சுருங்கின. அவனது பார்வையின் அர்த்தம் புரிந்தவள், தன் மீது போர்த்திருந்த டவலை நீக்கி,
“இந்த ஜிப்பை கொஞ்சம் போட்டு விடு..” என்று கூற, அவசர அவசரமாக அவள் கட்டிலில் போட்ட டவலை எடுத்து மீண்டும் அவளுக்கு போர்த்தியவன், கட்டிலில் சரியாக தனக்கு எதிரே வைத்திருந்த லேப்டாப்பை மூடினான்.
“சாரி.. சாரி.. கைய்ஸ்.. ஐ வில் பி இன் ட்டூ மினிட்ஸ்..” என்றவாறே தனது காதில் மாட்டிருந்த இயர் பட்ஸை கலட்டி வைக்க,
“இப்போ.. நீ என்ன பண்ணிட்டுருந்த? இங்க என்ன நடக்குது?” என்று அப்பாவியாய் விழித்தவளை திருப்பி, அவளது ஜிப்பை போட்டு விட்டவன்,
“நாளைக்கு நடக்கப் போற போட்டோ ஷுட்காக, மீட்டிங்ல இருந்தேன்.. போதுமா?” என்றவன், அவளது கழுத்தோரம் முகம் வைத்து நுகர்ந்தான். அவளது ஆளை அடிக்கும் நறுமணத்தில் தன்னை மறந்தவன், அவளது தோளோடு இதழ் பொறுத்தி முத்தம் வைக்க, சட்டென திரும்பி அவனை முறைத்தாள் விளானி. அவளது இதழில் போட்டிருந்த சிவப்பு வண்ண சாயத்தை, தன் பெருவிரலால் துடைத்தவன்,
“லைட் ஆரஞ்ச் பிளவர் போடு.. இப்படி டார்க் கலர் போடாத.. அப்புறம் இந்த பர்ஃப்யூம் இனிமே போடாத.. இது ஆண்களை கவர்ந்திழுக்குற மாதிரி இருக்கு.. மைல்டா போட்டுக்கோ.. நீ இப்போ போற பார்ட்டில ஹார்ட ட்ரிங்க்ஸ் இருக்கும்.. சோ, நோ லிக்கர்.. புரியுதா? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் வந்துடுவேன்.. எந்த பிரச்சனையிலும் மாட்டிக்காத.. என்ன நான் சொல்றது காதுல விழுந்துச்சா?” என்றவன் அவளை இடையோடு சேர்த்து அணைத்தவாறே கேட்க, மகுடிக்கு மயங்கும் பாம்பை போல் அவனை மட்டுமே பார்த்தவாறு, தலையாட்டினாள் விளானி. ஆயிரம் முறை அவளது பாதுகாப்பை அறிந்த பின்னரே, அவளை அரவிந்தனுடன், எஸ்கே கம்பெனியோடு சேர்ந்து நடக்கும் பார்ட்டிக்கு அனுப்பி வைத்தான். பார்ட்டியில் அவர்களது கம்பெனி சார்பாக பதிவிறக்கப்படும் கேம்மை எஸ்கே நிறுவனம் வாங்க முடிவு செய்யப்பட்டு கையொப்பமிட, அந்த சந்தோஷத்தில் குடித்துக் கொண்டிருந்தான் அரவிந்த். சிறிது நேரத்தில் கழிவறையை நோக்கி சென்றவனின் பின்னால் சென்றவள், அவனை கழிவறைக்குள் வைத்து பூட்டி விட்டு, எதுவும் தெரியாத பெண் போல் வந்து அமர்ந்து கொண்டாள். அரவிந்தனின் கோர்டோடு இருக்கும் கைபேசியை யாருக்கும் தெரியாது மறைத்து வைத்தாள். கைபேசியில்லாது கதவை தட்டித் தட்டி ஓய்ந்து போனான் அரவிந்த். இங்கே பார்ட்டியில் சிறப்பு விருந்தினராக ஆகாஷ் கலந்து கொள்ள, வீட்டிற்கு கிளம்ப முயன்றவளை தடுத்தான் ஆகாஷ்.
“என்ன என்னை பார்த்து பயமா? அதான் இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு போறியா?”
“யாருக்கு? எனக்கு உன்னை பார்த்தா பயமா? அப்படி எல்லாம் ஏதாவது நினைப்பிருந்தா? குழி தோண்டி புதைச்சுடு.. சரியா? அப்புறம் என்ன கேட்ட? இவ்வளவு சீக்கிரம்னா? மணி எவ்வளவு தெரியுமா? பதினொன்று.. இப்ப வீட்டுக்கு போகாம? வேற எப்ப போவாங்க?”
“சரி தனியாவா போற? வழக்கமா.. உன் புருஷன் தானே வந்து கூட்டிட்டு போவான்.. இன்னைக்கு இன்னமும் போகாம தனியா இருக்க? எங்க உன் புருஷனை காணோம்..”
“அவருக்கு என் மேல நம்பிக்கை இருக்கு.. வரும் போது வருவாரு.. உனக்கென்ன பிரச்சனை?” என்றவள் அங்கே வந்த பணியாளரிடம் இருந்து ஜுஸ் எடுத்து குடிக்க,
“உன் புருஷன் உன்னைய நம்புவதா இருந்தா.. நீ ஹார்ட் ட்ரிங்க்ஸ் தானே குடிக்கணும்.. இப்படி சின்னப்புள்ள மாதிரி ஜுஸ் குடிச்சுட்டு இருக்க?” என்றவன் பணியாளரிடம் மதுக்கிண்ணம் கொண்டு வரச் சொல்லி, அதில் இருக்கும் மதுவை அருந்த, அவளும் அவனுக்கு போட்டியாக அங்கிருக்கும் மதுவை அருந்தத் தொடங்கினாள். சிறிது நேரத்தில் பார்ட்டிக்கு வந்த ஹர்ஷவர்தனை வரும் வழியில் பார்த்த ப்ரியா, அவனுடன் இணைந்து பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வர, அவர்கள் இருவரையும் இணைந்தவாறு பார்த்த ஆகாஷ்,
“எங்க உன் புருஷன் உத்தமப்புத்திரன்.. ஸ்ரீராமன்.. மத்தவங்க கை படாத சுத்த வைரம்னு பீத்திக்கிட்ட.. அங்கப்பாரு உன்னைய விட சூப்பர் விகரோட வர்றான்..” என்று கூற, போதையில் மூடிய கண்களை தன் கை விரல்கள் கொண்டு, பிரித்து பார்த்த விளானி, ஹர்ஷவர்தனை நோக்கிச் சென்றாள்.
“டேய் புருஷா! எப்படிடா.. இவக்கூட நீ வரலாம்.. ஹேய்.. அவன் கைய விடுடி.. அவன் கையை நான் மட்டும் தான் பிடிப்பேன்..” என்றவள் ப்ரியாவின் கையைப் பிடித்து இழுக்க, சற்று தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த நகுலனோ, தன் அருகில் நின்று கொண்டிருந்த சஜனிடம்,
“அங்கப்பாறேன்.. சீதேவி.. பூதேவி சகிதமாய் நம்ம மச்சான் அட்டகாசமாய் வர்றான்..” என்று கூற,
“என்னது சீதேவி.. பூதேவி? யாருடா அது?” என்று சஜன் விழிக்க,
“ப்ச்.. நம்ம ப்ரியாவும் விளானியும் தான்டா அது.. ஒருபக்கம் இறந்தகாலம், ஒரு பக்கம் நிகழ்காலம்னு நம்ம சமஸ்தானம் சூப்பரா நிற்குறான்..” என்ற நகுலனை பார்த்த ஹர்ஷவர்தன், கையால் தன் அருகில் வருமாறு சைகை செய்ய,
“மச்சான்.. அவன் நம்பளை தான் கூப்பிடுறான்.. அப்படியே கண்டுக்காம திரும்பிடுவோம்..” என்ற நகுலன் திரும்பி நிற்க,
“என்ன மச்சான்? இதோ வந்துட்டோம்..” என்ற சஜன், நகுலனையும் தன் கையோடு இழுத்துச் செல்ல,
“முதல்ல உன் பிரண்ட்ஷிப்பை தலை முழுகணும்டா..” என்று முணுமுணுத்தவாறே, அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றான் நகுலன். தன்
அருகில் வந்த சஜனிடம்,
“சஜன், ப்ரியா நம்ம சார்பில வந்திருக்குற கெஸ்ட்.. அவங்களுக்கு எந்த குறையும் வராம பார்த்துக்கோ..” என்று கூறிவிட்டு, ப்ரியாவிடம் திரும்பி,
“ப்ளீஸ்..” என்றவாறே அவளது கையில் இருந்து தன் கையை எடுத்துக் கொண்டவன், விளானியின் கையோடு தன் கையை கோர்த்து கொண்டான். கண்கலங்கியவாறே அங்கிருந்து சென்ற ப்ரியாவையும் அவள் செல்வதை சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷவர்தனையும் மாறி மாறி பார்த்த விளானி,
“வாவ்.. வாவ்.. அண்ணலும் நோக்கினான்.. அவளும் நோக்கினாள்.. பெரிய தெய்வீக காதல்.. அவளை இப்படி குறுகுறுன்னு பார்க்குறதுக்கு அவளையே கல்யாணம் பண்ணிருக்கலாமே?! என்னை ஏன்டா கல்யாணம் பண்ண? ப்ராடு..” என்றவள் அவனது கையில் இருந்து தன் கையை உருவிக் கொண்டு போக, அவளது கையைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்றான் ஆகாஷ். அவர்களை பின் தொடர்ந்து செல்ல முயன்ற நேரம், தொழிலதிபர் ஒருவர் வந்து ஹர்ஷவர்தனிடம் பேசத் தொடங்க, அவனது கண்கள் முழுவதும் வெளியே பதிந்திருந்தது. ஒருவழியாக அத்தொழிலதியரை நகுலனின் தலையில் காட்டிவிட்டு, வெளியே வந்து பார்த்தவனுக்கு அழுவதா? சிரிப்பதா? என்றிருந்தது. வெளியே கார் பார்க்கிங்கில் இருந்து பெரிய மரத்தினை தனது ஒரு கையால் விளானி ஒருபுறம் தள்ளி கொண்டிருக்க, அவளுக்கு மறுபுறத்தில் இருந்து ஆகாஷ் தள்ளிக் கொண்டிருந்தான்.
“சீக்கிரம் ஆகாஷ்.. சீக்கிரம் இந்த மரத்தை இங்கிருந்து நகர்த்தி, அங்க வைக்கணும்.. இல்லேன்னா, மழைல இது நனைஞ்சு சளி பிடிச்சுடும்..” என்றவளின் மறு கையில் குருவிக்கூடு ஒன்று இருந்தது. அதனை பார்த்தவன் தனது தலையை இருபுறமும் ஆட்டிவிட்டு, விளானியின் அருகே சென்றான்.
“வினி.. என்னம்மா பண்ற?”
“அது இந்த குருவிக்கூடு கீழே விழுந்திருச்சு.. திரும்ப மேல வைக்கணும்.. ஆனா, மழை வந்தா.. இதுங்க நனைஞ்சுடும்ல.. அதான் இந்த மரத்தை கொஞ்சம் நிழல்ல வைச்சுட்டு.. இதுங்களை இதுக்கு மேல வைக்கப் போறேன்..” என்றவள் போதையில் நிற்க முடியாது தள்ளாட,
“சரி இதை என்கிட்ட கொடு நான் மேல வைக்குறேன்..” என்ற ஹர்ஷவர்தன் தன் கையை அவள் புறமாக நீட்ட,
“விளா.. நான் இதை மேல வைக்குறேன்.. என்கிட்ட கொடு..” என்றவாறே அவளின் மறுபுறம் வந்து நின்றான் ஆகாஷ். தன் ஒற்றைக் கண்ணை மூடி, நாடியில் ஒற்றை விரலை வைத்து, யோசித்தவள், குருவிக்கூட்டினை ஆகாஷை நோக்கி நீட்டினாள்.
“நீயே இதை மேல வைச்சுடு..” என்றவள் கூற, அவள் கையில் இருந்ததை வாங்கிக் கொண்டு, மரத்தின் மேலே ஏறிய ஆகாஷ் அதனை அங்கே வைத்து விட்டு, விளானியை நோக்கி கை நீட்டினான்.
“நீயும் வா.. விளானி..” என்றவன் கூறியதும், தான் நீளமாக அணிந்திருந்த கௌனை தூக்கிக் கொண்டு, காலில் அணிந்திருந்த ஹுல்ஸை உதறிவிட்டு, மரத்தில் ஏறத் தொடங்கியிருந்தாள் விளானி.
“வினி.. கீழே விழுகப்போற.. ஒழுங்கா கீழே இறங்கு..”
“முடியாது.. நான் உன்னைய பார்க்கமாட்டேன்.. நான் இப்படியே இங்கேயே தூங்க போறேன்..”
“விளானிஇஇஇ.. கீழே இறங்கப் போறியா? இல்லையா?”
“ஸ்ஸ்ஸஸுஸுஸு.. கத்தாத.. எனக்கு உன்னைய பார்க்க பிடிக்கலை..” என்றவள் தடுமாற,
“விளா.. பார்த்து, விழுந்துடாத..” என்ற ஆகாஷ், அவள் பிடித்துக் கொள்ள தன் கையை நீட்ட,
“விளானிஇஇஇ.. இப்போ நீ கீழே இறங்கப் போறியா? இல்லையா?” என்று கத்தியபடியே அவள் முன்னே கை நீட்டினான் ஹர்ஷவர்தன். ஹர்ஷவர்தனை பார்த்தவாறே,
“முடியாது.. நான் கீழே இறங்கமாட்டேன்.. நீ.. நீ.. அவப் பின்னாடி தான் போவ? உனக்கு என்னைய பிடிக்காது.. ஆஃபிஸ்ல என்னைய எத்தனை படி ஏறவிட்ட? பாரு.. காலெல்லாம் வலிக்குது..” என்றவள் மீண்டும் மேலே ஏற முயல,
“சரி.. சரி.. வீட்டுக்கு வா.. கால் பிடிச்சு விடுவேன்..” என்றவனை திரும்பி பார்த்தவள்,
“அப்போ.. என்னைய கொஞ்சி கூப்பிடு.. அப்போ தான் வருவேன்..” என்று கூற,
“அம்மு.. செல்லம்.. பட்டு பேபி.. தங்கக்குட்டி.. ஏஞ்சல் பேபி.. வாடாம்மா.. வீட்டுக்கு போகலாம்.. நேரமாச்சு..” என்று ஹர்ஷவர்தன் அவளை கொஞ்ச,
“விளா.. அவன் கூட போகாத.. அவன் உன்னைய ஏமாத்துறான்..” என்று மரத்தின் மேலே இருந்து குரல் கொடுத்தான் ஆகாஷ். அவனை அவள் திரும்பி பார்ப்பதற்குள் அவளை இழுத்து, தன் தோளில் மாலையாக போட்டுக் கொண்டான் ஹர்ஷவர்தன்.
“விடு.. என்னை விடு..” என்றவள், பின் அவனது தோளிலேயே தூங்கிப் போக, சிறுபிள்ளையென அவளை சுமந்து கொண்டு காரில் ஏறப் போகும் நேரம், அங்கு வந்து நின்றான் அரவிந்த். அவளை கீழே இறக்கி நிற்க வைத்தவன், தனது டிரைவருக்கு அழைத்து வரச் சொல்ல, அங்கு வந்த அரவிந்தோ,
“கிராதகி.. அரக்கி.. ராட்சசி.. பிசாசு.. எதுக்குடி என்னைய ரெஸ்ட் ரூம்ல வைச்சு பூட்டுன?” என்று கேட்க, ஹர்ஷவர்தனின் தோளில் சாய்ந்திருந்தவள், தன் கண்களை திறந்து, தள்ளாடியபடி அரவிந்தின் அருகில் சென்று, “உவ்வே..” என்றவாறு அவன் மீது மொத்தமாய் வாந்தி எடுத்துவிட்டு,
“ரெஸ்ட் எடுக்கத்தான்..” என்றவள் மீண்டும் ஹர்ஷவர்தனின் தோளில் வந்து சாய்ந்து கொண்டாள்.
“அய்யோ.. கருமம்.. கருமம்..” என்றவாறே தன் கோர்ட்டை கலட்டிய அரவிந்த்,
“நாளைக்கு காலைல ஆஃபிஸ்ல பார்த்துக்குறேன்..” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல, தன் தோளில் சாய்ந்திருந்தவளின் காதோரம் குனிந்தவன்,
“தெரிஞ்சே தானே அவன் மேல் வாந்தி எடுத்த?” என்று கேட்க, தூங்கிக் கொண்டிருந்தவளின் இதழ்கள் புன்னகையில் விரிந்தன. தாமரை இலை மேல் விழும் தேன் துளி போல் இருக்கும் அவர்களது உறவு, நெருக்கமான உறவாக மாறும் தருணம் எப்போது வருமோ?
Super and very interesting sis
Niceeeeeeeee epii ❤️❤️❤️❤️❤️❤️❤️
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
wizDePtCKLqSsjy
KpJSVhckDRu
hlbXmTLdrgUQMWuE
aViQugzmEH
Nice