ATM Tamil Romantic Novels

என் மோகத் தீயே குளிராதே 19

அத்தியாயம் 19

 

காரை விட்டு இறங்கிய ஹர்ஷவர்தன், குழந்தையென காரில் தூங்கிக் கொண்டிருந்தவளை தன் கைகளில் ஏந்தியபடி வீட்டிற்குள் நுழைய, அங்கே ஹாலில் இருந்த சோஃபாவில் அவளை அமர வைத்தான். நகுலனும் சஜனும் இன்னும் வீடு திரும்பவில்லை, என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவன், விளானியின் காதருகே குனிந்து,

 

“நான் போய் உனக்கு டேப்லெட் வாங்கிட்டு வந்துடுறேன்.. நீ சமத்தா வீட்டுலேயே இருக்கணும்.. எங்கேயும் போகக்கூடாது.. ஓகேவா?” என்று சிறு குழந்தைக்கு சொல்வது போல் கேட்க, சரியெனும் விதமாக தலையாட்டினாள் விளானி. 

 

“குட் கேர்ள்..” என்றவாறு வெளியே செல்ல திரும்பியவனின் சட்டையை அவள் பிடித்திழுக்க,

 

“சீக்கிரமே வந்துடுவேன்..” என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு, அங்கிருந்து செல்ல, கண்ணயர்ந்தாள். அவன் சென்ற பத்து நிமிடத்தில் மெல்ல கண்விழித்தவள், படியேறி தன் அறை என்று நினைத்து, ஹர்ஷவர்தனின் அறைக்குள் நுழைய, அங்கே அவனது குளியலறையில் இருந்து அவனைப் போன்ற  உருவம் ஒன்று,  சிறு துண்டோடு வெளியே வர, 

 

“பே.. பே.. பேய்இஇஇ..” என்று கத்தியவாறு, தட்டுத்தடுமாறி வெளியே ஓடி வந்தவள், அப்போது தான் மருந்து வாங்கிவிட்டு காரில் இருந்து இறங்கிய ஹர்ஷவர்தனின் முன்புறம் குரங்கு குட்டி போல்  தாவிக்கொண்டாள். தன் கைகளை அவனது கழுத்தினில் மாலையாக கோர்த்துக் கொண்டவள், தன் கால்களை அவனது முதுகோடு கோர்த்துக் கொண்டாள். 

 

“என்னாச்சு? எதுக்கு பயந்து ஓடி வர்ற?”

 

“அங்க.. பேய்.. பேய்..”

 

“எங்க?”

 

“அங்க தான் உன்னோட ரூம்ல..”

 

“அங்க? சரி.. கீழே இறங்கு..”

 

“ம்ஹும்.. மாட்டேன்.. எனக்கு பயமாயிருக்கு..”

 

“பேயெல்லாம்.. எதுவும் கிடையாது.. நீ  முதல்ல கீழே இறங்கு..”

 

“ம்ஹும்.. மாட்டேன்.. மாட்டேன்ன்ன்ன்..” என்று கத்தியவளை சுமந்தவாறே, உள்ளே நுழைந்த ஹர்ஷவர்தனின் முன்னே வந்து நின்றான் சிவசூர்யா. அவனை திரும்பி பார்த்தவள் மீண்டும்,

 

“பேய்.. “ என்று கத்திக் கொண்டே, ஹர்ஷவர்தனின் தோளில் முகம் புதைத்துக் கொள்ள,

 

“அவனை நல்லாப்பாரு.. அவன் என்னோட தம்பி சிவசூர்யா.. அவனை உனக்கு அடையாளம் தெரியலையா?” என்று ஹர்ஷவர்தன் பல்லை கடிக்க,

 

“வாவ்.. சூப்பர் போஸ்.. சூப்பர் மேனும் குரங்குக்குட்டியும்.. பெயர் நல்லாருக்குல?” என்றவாறு அப்போது தான் உள்ளே நுழைந்த நகுலன், அவர்களை தன் கைப்பேசியில் புகைப்படம் எடுக்க,

 

“டேய்.. அதை டெலிட் பண்ணு..” என்று நகுலனை மிரட்டிய ஹர்ஷவர்தன், அங்கே இருந்த சோஃபாவில் அவளை அமர வைக்க, அவனது கையைப் பிடித்து இழுத்தவள், அவனையும் அதே சோஃபாவில் அமரச் செய்ய, நடப்பதனைத்தையும் வீடியோ எடுக்க ஆரம்பித்திருந்தான் சிவ சூர்யா. 

 

“டேய்.. நீயும் இவன் பேச்சை கேட்டுட்டு வீடியோ எடுக்காத.. நாளைக்கு நான் தான் உன் கூட பேங்க்கு வரணும்.. இப்ப நீ வீடியோ எடுத்ததை டெலிட் பண்ணல.. நீ பிஸ்னஸ் பண்றதுக்கு பணம் கேட்டங்குறதை அப்பாக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுவேன்..” என்று சில சூர்யாவிடம் கூறியவன்,

 

“அப்புறம் நீ.. நாளைக்கு என்கூட ஆஃபிஸ் வந்தாகணும்.. ஒழுங்கு மரியாதையா டெலிட் பண்ணு..” என்று நகுலனை பார்த்து கூறியவன், அருகில் இருந்த பொம்மையை எடுத்து, அவன் மீது வீசி, அது சரியான அவனது போனில் மோதி, அது கீழே விழுக,

 

“அய்யோ.. அய்யோ.. ஒரு லட்ச ரூபாய் போன்டா.. இப்படி சல்லி சொல்லியா நொறுக்கிட்டியே.. இனிமே காய்லாங் கடைக்காரன் கூட இதை வாங்க மாட்டானே..” என்றவாறே நகுலன் சிதறிக்கிடந்த தனது கைபேசியை எடுக்க, ஹர்ஷவர்தனின் மடி மீது தலை சாய்த்து படுத்துக் கொண்டாள் விளானி. 

 

“மாமூ.. மாமூஊஊஊஊ.. இங்கப்பாரேன்..” என்றவள் அவனது மடி மீது காலை ஒருபுறபாக தொங்க விட்டு, அவனது மடியில் அமர்ந்து கொண்டவள், அவனது முகத்தை தன் புறமாக திருப்பியவள்,

 

“மாமூ.. மாமூ.. மாமூஊஊஊ..” என்றவாறே அவனது நெஞ்சில் சாய்ந்து கண் மூட, சிவ சூர்யாவை தவிர மற்ற அனைவரும் அவர்களை விநோதமாக பார்த்திருந்தனர். தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் வாயைத் திறந்து, மாத்திரையை போட்டு தண்ணீர் ஊற்றியவன், குழந்தை போல் அவளை சுமந்து கொண்டு போய், அவளது அறையில் உறங்க வைத்தான். அவளது அறையை விட்டு வெளியே வந்தவனை தடுத்து நிறுத்திய நகுலன்,

 

“இதுக்கெல்லாம் என்னடா அர்த்தம்?’ என்று கேட்க,

 

“நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே நல்ல ப்ரெண்ட்ஸ்.. இப்படி தான் அடிக்கடி நடந்துப்போம்.. இதை எல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க.. போய் படுங்க..” என்றவன் சிவசூர்யாவை தன்னோடு அழைத்துக் கொண்டு உறங்கச் செல்ல,

 

“சம்திங் ராங்.. இவன் எதையோ நம்மக்கிட்ட இருந்து மறைக்குறான்.. கண்டிப்பா ஒரு நாள் மாட்டுவான்.. அன்னைக்கு இருக்கு.. இவனுக்கு..” என்ற நகுலனைப் பார்த்து கொட்டாவி விட்டான் சஜன். 

 

“நாளைக்கு காலைல ஆட் சூட்டிங் இருக்கு.. சீக்கிரம் தூங்கணும்.. டேய்.. நகுலன்.. அந்த ஆர்ட்டிஸ்ட் அண்ட் டைரக்டர் டீம் நாளைக்கு வந்துடுவாங்கல்ல?”

 

“அதெல்லாம் வந்துடுவாங்க.. நீ கவலைப்படாம தூங்கு.. குட் நைட்..” என்றவாறே இருவரும் உறங்கச் செல்ல, அடுத்த நாள் பொழுது அழகாக விடிந்தது. அதிகாலையில் விடிந்ததும் தன் தலையைப் பிடித்தவாறே எழுந்து அமர்ந்தாள் விளானி. தன் தலையில் தானே அடித்தபடி கீழே இறங்கி வந்தவள், குளிர்சாதன பெட்டியில் இருந்த தண்ணீரை ஜில்லென்று வாயில் ஊற்ற, நேற்று நடந்தவை அனைத்தும் கண் முன்னே தோன்றி, அவளுக்கு புரையேறச் செய்தது. 

 

“போச்சு.. போச்சு.. ஏற்கனவே, என்னைய ஒரு ஏலியன் மாதிரி தான் பார்ப்பான்.. இப்போ சுத்தம்.. இதுக்கு என்னவெல்லாம் பண்ணப் போறானோ?” என்று முணுமுணுத்தவளின் முன்னே வெள்ளை நிற கை வைத்த பனியனும் கருப்பு நிற ட்ராக் பேண்ட்டும் அணிந்தவாறு வந்து நின்றான் ஹர்ஷவர்தன். 

 

“ஹி.. ஹி.. ஹி.. குட் மார்னிங் பாஸ்..”என்றவாறே அவனை தாண்டி செல்ல முயன்றவளின் கையைப் பிடித்து தடுத்தவன்,

 

“எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. வயசு பசங்க இருக்குற இடத்துல இப்படி பைஜாமா போட்டுட்டு வரக்கூடாதுன்னு.. போய் சீக்கிரம் மாற்றிட்டு வா.. உன் கூட பேசணும்..” என்று கூறிவிட்டு, அங்கே ஹாலில், மேஜையின் மீதிருந்த நியூஸ் பேப்பரை எடுத்து வாசிக்க, வேக வேகமாக மாடிக்கு வந்தவள், தன்னை கண்ணாடியில் பார்த்தாள். வெள்ளை நிற பைஜாமாவின் முன்னிரு பட்டன்கள் அவிழ்ந்திருக்க, உள்ளே போட்டிருந்த வெள்ளை நிற உள்ளாடை பளிச்சென்று காட்சியளித்தது. தொடை வரை மட்டுமே மறைக்கப்பட்டிருக்க, அதற்கு மேலான பாகங்கள் பளீரென கண்ணை பறித்தன. மொத்தத்தில் காலையிலேயே ஒரு நல்ல தரிசனம்.. தன்னை கவனிக்காது, அப்படியே எழுந்து சென்ற தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்தவள், வேகமாக டாப்பையும் முழங்கால் வரையிலான பேண்ட்டையும் அணிந்து கொண்டு கீழே இறங்கினாள். ஹாலில் அவனை அவள் தேடிக் கொண்டிருக்க,

 

“இங்க இருக்கேன்..” என்று குரல் வந்த திசையை நோக்கி சென்றவள், வெளியே இருக்கும் தோட்டத்தினை அடைந்தாள். அங்கே ஊஞ்சலில் அமர்ந்திருந்தவனின் அருகில் அமர்ந்தவள், தலை குனிந்தவாறே,

 

“சாரி.. அம்மாக்கிட்ட சொல்லிடாத..” என்று கூற,

 

“எதை?” என்று திருப்பிக் கேட்டான் ஹர்ஷவர்தன். 

 

“நான் பைஜாமா போட்டு.. செக்ஸியா கீழே இறங்கி வந்தேன்ல.. அதை அம்மாக்கிட்ட சொல்லிடாத.. அப்புறம் துடைப்பக்கட்டை பிஞ்சுடும்..” 

 

“அப்போ.. ட்ரிங் பண்ணதை சொல்லட்டுமா?”

 

“வேணாம்.. வேணாம்.. அப்புறம் நான் சன்னியாசம் வாங்கிட்டு போற அளவுக்கு வசவு விழும்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. அம்மாக்கிட்ட சொல்லிடாத..”

 

“அப்போ.. நீ என்கிட்ட உண்மைய சொல்லணும்..”

 

“என்ன உண்மை?”

 

“அந்த ஆகாஷுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? எதுக்காக அவன் உன்னையவே சுத்தி சுத்தி வர்றான்?”

 

“அதுவா?” என்று தொடங்கியவள், அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த அனைத்தையும் கூறி முடிக்க, அவளை கூர்ந்து பார்த்தவன்,

 

“இப்பவும் நீ அவனை லவ் பண்றியா?” என்க்ஷு என்று கேட்க,

 

“அப்படி லவ் பண்ணிருந்தா.. உன்னைய ஏன் மேரேஜ் பண்ண போறேன்? அப்படி உனக்கு சந்தேகமா இருந்தா.. நீ வேணா என்னைய டிவொர்ஸ் பண்ணி..” என்றவள் முடிக்கும் முன் அவளை இழுத்து அணைத்தவன், அவளது இதழ்களை கவ்வி சுவைக்க தொடங்கியிருந்தான். முத்தமிடும் போது மூக்கும் மூக்கும் முட்டிக்கொள்ளுமா? ஆமாம்.. அவனது வேர்வை வாசத்தை அவளது நாசியும், அவளது பெண்மை வாசத்தை அவனது நாசியும் நுகர்ந்தன. அவளது மேலிதழையும் கீழிதழையும் மாறி மாறி சுவைத்தவன், தூரத்தில் யாரோ வரும் சத்தம் கேட்டு, சட்டென அவளிடமிருந்து விலகினான். 

 

“இன்னொரு தடவை உன்னை அவன் கூட பார்த்தேன்.. தண்டனை இதை விட மோசமா இருக்கும்..” என்றவாறே அவளை விட்டு விலகி, வேகமாக உள்ளே சென்றான்.

 

“இப்போ எதுக்கு வாயை கடிச்சு வைச்சுட்டு போறான்? ஏன் இப்படி நடந்துக்குறான்?” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே எழுந்து உள்ளே சென்றவளுக்கு தெரியவில்லை, ஆகாஷினால் ஏற்பட்ட பொறாமையின் வெளிப்பாடு தான் இந்த முத்தம்‌ என்று.. இருவரும் தங்களது உள்ளத்தில் மறைந்திருக்கும் காதலை உணர்வது எப்போதோ?

4 thoughts on “என் மோகத் தீயே குளிராதே 19”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top