வானவில் 20
‘அவன் கண்களைப் பார்த்து எப்படி இல்லை என்று மறுக்க முடியும்? மனது முழுக்க அவன் மட்டுமே இருக்க..’ என்று எண்ணியவள், அடுத்த நொடி பாய்ந்து அவனை அணைத்து, அவள் இதயம் முட்டும் காதலை இதழ்களால் சொல்லி தீர்த்துக் கொண்டிருந்தாள் வர்ணா!!
வித விதமாய்!!
அதி காதலை..
நனி நேசத்தை..
ஆழ் அன்பை..
இதழ்கள் கொண்டு வர்ணம் சேர்ந்தாள் அவன் முகம்தனில்!!
வர்ணா!! அவனின் ப்ரியமான ப்ரியவர்ணா!!
கொஞ்சம் கூட அவளுக்கு தடைகள் இல்லை அவனிடம்… அல்லது அவனிடம் உண்டாக வேண்டிய தடைகளை அவளுக்கு அவன் மீது இருக்கும் காதல் வென்றிருந்தது!!
காதல்!!
ஆக பெரும் சக்தி!!
ஆகச் சிறந்த ஜோதி!!
ஆகுதியாய் அனைத்தையும் உள்ளிழுத்து..
எதையும் மாற்றும் காதலே!!
எனையும் மாற்றும் காதலே!!
ஆனால் விநாயக்கு ஆக பெரும் அதிர்ச்சி!! ஆனந்த அதிர்ச்சி!! அவன் காதல் கை சேர்ந்த மகிழ்வில்!! அவள் முத்தத்தால் அவனை குளிர்வித்த பிறகும்.. அவளைத் தொட்டு அணைக்க அவன் கைகளுக்கு தைரியம் பிறக்கவில்லை!! அத்துணை நடுக்கம் கொண்டது..
‘கிடைத்து விட்டதா? கிடைத்தே விட்டதா? என்னவளின் காதல் எனக்கு?’ என்று பெரும் சந்தோஷத்தில் இருந்தான்.
வார்த்தைகள் வரவில்லை.
மூச்சுக்காற்று மட்டுமே முகம் உரசி உரசி சென்றது!!
” எப்.. எப்படி மெனிக்கா…. எப்படி வந்திச்சு.. என் மேல எப்படி லவ் வந்துச்சு உனக்கு??” திக்கி திணறினான் அத்துணை பெரிய தொழிலதிபனுக்கு.
”திடுதிடுப்னு எல்லாம் ஒண்ணும் வரல.. லவ்வெல்லாம் வந்து ரொம்ப நாளாச்சு. அதை சொல்ல தைரியமும் நேரமும் சந்தர்ப்பமும் தான் வரல.. இப்ப ரெண்டும் வந்துச்சு சொல்லிட்டேன்!!” மெல்லிய புன்னகையுடன் அவன் முகம் பார்த்துச் சொல்லியப்படி அவன் நெஞ்சத்தை மஞ்சம் கொண்டாள் வஞ்சி!!
அவளின் மென்பந்துகள்.. மெத்தென்று அவன் நெஞ்சில் பதிய.. விநாயக்குள் மின்சாரம் பாய்ந்தது.!!
”மெனிக்கா.. ” தடுமாற்றமாக அழைத்தான். அவனின் உணர்ச்சிகளை சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் தவித்தான்.. முழித்தான்.. தயங்கினான்.
அவள் சொன்ன அவளது காதல்.. அவளது முதல் முத்தம்.. அவளது அணைப்பு.. என்று உணர்ச்சி குவியலாய் விநாயக்!!
‘நிஜமா?? நிஜமாவே வா?? இன்னும் விநாயக்கால் நம்பமுடியவில்லை வர்ணாவின் காதல் அதுவும் வெகு நாளாய் என்பதை!! தன் மார்புக் குவியல்களை அவன் நெஞ்சில் இணைத்து மென்மையாக அழுத்தம் கொடுத்தவள், அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தாள். அதில் இன்னும் என் காதல் மீது நம்பிக்கை இல்லையா என்று கேட்க..
திடீரென்று கேட்ட அவள் காதலில் சற்றே படபடப்பான அவனது தேகத்துக்கு அவளது பெண்மைச் சூட்டின் கதகதப்பு தேவைப்பட்டது. அவன் மனம் அவளை அவனுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாட தவியாய் தவித்துக் கொண்டிருந்தது.
அவன் கைகளுக்கு அவ்வளவு தைரியம் இல்லாமல் இல்லை..
அவன் மனம் இன்னும் அவளின் முழு காதலையும்.. நேசத்தையும்.. அன்பையும் தெரிந்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதனோடு அவனின் தவறை மன்னித்து விட்டாளா? அல்லது மறந்து விட்டாளா? என்றும் தெரிய வேண்டியிருந்தது.
அதனால் அணைத்துக் கொள்ள பரிதவித்துக் கொண்டிருந்த மனதையும்.. பரபரத்த கைகளையும் கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.
அது ஒரு உரசல் இல்லா உரசல்?? நெருக்கம் இல்லாத நெருக்கம்!!
நூலளவு இடைவெளியில் அவள் நின்றிருக்க.. கைகளை கட்டிக்கொண்டு அவன்!! அவன் கண்களையே பார்த்துக் கொண்டு அவள்!!
சற்றுமுன் இறுக்க அணைத்து இருந்தபோது அவன் உடம்புக்குள் ஒருவித தவிப்பு என்றால்.. இப்பொழுது கை எட்டும் நூலளவு இடைவெளியில் இருக்கும் அவனுக்குள் ஏற்படுத்தும் தகிப்பு அதற்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை என்று எண்ணினான்.
அவன் உடம்பில் சுருசுருவென உஷ்ணம் ஏறியது. அவளது பெண்மையின் வாசம் அவன் ஆண்மையைக் கிளறி விட்டது. அவனது தயக்கம்.. சுயக் கட்டுப்பாடு எல்லாம் மெல்ல மெல்ல தளர ஆரம்பித்தது.
”வர்ணா… ”
”ம்ம்ம்.. ??”
”நீ இப்படி இருந்தா.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு டி..”
”உங்களை ஒட்டிக்கிட்டா நிக்குறேன்.. ஒரு மாதிரி இருக்க?” என்று அவள் வம்பு இழுத்தாள்.
”அது ஒரு மாதிரினா.. இது வேற மாதிரி.. உடம்பெல்லாம் சூடாகி.. ஒரு மாதிரி…” திணறினான்.
”ம்ம்.. சூடாகி.. ” அவள் மாங்கனிகளை அவன் நெஞ்சில் அழுந்த நெருங்கினாள்.
”வேணாம் வர்ணா… தப்பா போயிரும்..!!”
”எது தப்பா போயிரும்??” சிறுமி போல இமைகளை சிமிட்டி அவள்!!
”புரிஞ்சுக்கோ டி மெனிக்கா..! புரியாத மாதிரி நடிக்காதே!!” என்று அவளை நெருங்க முடியா தவிப்போடு அவன்!!
”சீரியஸ்லி விநாயக்!! எனக்கு புரியல…சொல்லுங்க.. ?” என்றாள் கண்களை கொட்டி..
“எமகாதகி.. கிராதகி.. ராட்சசி.. என்னை உசுப்பேத்தி ரணகளப் படுத்தாமல் விட மாட்டாள் போலிருக்கு!!” என்று சத்தமாகவே முணுமுணுத்தான்.
“ம்ம்ம்.. கேட்கல சத்தமா சொல்லுங்க?” என்று இவள் காதை அவன் அருகே கொண்டு செல்ல..
அவளது செழுமையான சிவந்த கன்னங்கள் அவன் இதழருகே இருக்க.. “என்னை சுவைத்து பார்!!” என்று அழைக்க..
”உன் லிப்ஸை கடிச்சிருவேன் டி..!!” என்றான் ஹஸ்கி வாய்ஸில்.
”ஹா.. நான் கடிச்சிட்டேன் ஆல்ரெடி.. அன்னைக்கு!! என் புருஷன் கிட்ட கிஸ் வாங்க நான் ஒண்ணும் வெக்கப் பட வேண்டிய அவசியமும் இல்லை..!!” என்றாள் புருவம் உயர்த்தி..
” பு.. புருஷனா..?? இது எப்போ?” என்றான் பார்வையால் அவளை விழுங்கியபடி..
”அடப்பாவி..? ஒரு அப்பாவிப் பெண்ணை மனசை கலச்சி.. அவளை கடத்திக் கொண்டு போய் வைத்து.. நிறைய நிறைய கிஸ்ஸிங்.. அப்பப்போ டச்சிங்.. அப்புறம் டீப் ஸ்விம்மிங்னு எல்லாம் செய்துட்டு.. இப்போ வந்து.. அவ்வா.. அவ்வா..” என்று அவள் வாயை பிளந்தாள்.
”அ… அது.. ஆமா... ஆனா.. பட்..” என்று தடுமாறினான்.
”என் புருஷன் தான். அதில் மாற்றமில்லை !!” பட்டெனச் சொல்லி விட்டு இறுக்கமாகக் கட்டித் தழுவிக் கொண்டாள் வர்ணா!!
அவனோ நெருப்பை விழுங்கியவன் போலானான். தவிர்க்க முடியாமலும்.. தவிக்க முடியாமலும்!!
”எனக்கு தெரியனும் மெனிக்கா.. எல்லாத்தையும் மறந்துட்டியா இல்ல மன்னிச்சிட்டியா??” என்றான் உள்ளே போன குரலில்.
அதுவரை இருந்த இணக்கம் மறைய.. அவனை அணைத்த வாக்கிலே நின்றிருந்தவள் அந்த கேள்வியில் சற்று பின்னோக்கி நடந்து அவன் முகத்தை பார்த்தாள். அங்கே இருந்த இறுக்கம் ‘நீ பதில் சொல்லியே ஆகவேண்டும்!’ என்று கூற..
“எப்படி மறக்க முடியும்? இல்லை மறந்திடுற வேலையை தான் நீங்க செஞ்சீங்களா?” என்று அவள் அவனுக்கு திரும்பி நின்று, கண்ணில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள்.
“அப்போ எதுக்கு இப்ப மட்டும் உன் காதலை சொன்ன மெனிக்கா.. எனக்கு உண்மையிலேயே புரியல? உன் மனசுல என்ன நினைக்கிற இந்த காதல்.. இதுக்கு.. என்ன அர்த்தம்? நான் எதுக்கும் பிட் இல்லைனு நினைக்கிறியா.. ஐ மீன் குடும்பம்..” என்றான்.
”அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை விநாயக்! நீங்க ஒரு நல்ல ஆண்மகன்.. உங்க குணத்துக்கு என்ன குறை? கொஞ்சம் கோபம் தவிர.. குடும்பத்தையும் நல்லா பாத்துக்குவிங்க. அது நீங்க உங்க அம்மா மேல வச்ச அன்பே அதுக்கு சாட்சி.. ஆனா உங்க நேரமோ என் நேரமோ தெரியல.. நாம இருவரும் சந்தித்துக்கொண்ட எந்த தருணமும் நல்லதாகவே அமையல..
சண்டையில நாம சந்தித்திருந்தாலும் இன்று என் குடும்பமே உங்களை தலையில் வைத்துக் கொண்டாடுது அவ்வளவு நல்ல குணம்.. ஆளுமை.. அன்பு.. பண்பு எல்லாமே உங்ககிட்ட இருக்கு!! எங்க அண்ணன்கள் எல்லாம் உங்க காதலை கொஞ்சம் பொறாமையா தான் பார்க்கிறாங்க.. எங்கம்மாக்கள் கூட உங்கள மாதிரி பையன் கிடைக்கறது ரொம்ப அபூர்வம்னு சொல்றாங்க” என்றவள் அவனுடன் அணைந்து நின்றாள்.
“அம்மாக்களுக்கு பிடிச்சிருக்கு.. அப்பாக்களுக்கு பிடிச்சிருக்கு.. அண்ணன்களுக்கு பிடிச்சிருக்கு.. எல்லாம் ஓகே.. உனக்கு?” என்றான் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து..
“ஏன்.. ஏன்.. எனக்கும் தான் பிடிச்சிருக்கு!!” என்றாள் சற்றே திணறி..
“இந்த ஒரு நொடி திணறல் கூட இல்லாமல் எனக்கு வேணும் மெனிக்கா.. சொல்லேன்!!” என்றான் அவள் கண்களை ஏக்கமாக பார்த்தப்படி..
அவனிலிருந்து சற்றே விலகி நின்று கையை பிசைந்து கொண்டாள் பெண்!! எப்படி சொல்ல முடியும்? மனதில் அவனின் அந்த தாக்கம் இருக்கிறது தானே? அது இல்லாமல் முழு மனதாக அவளால் சொல்லமுடியவில்லை. “எனக்கு வரல!!” என்றாள்.
“ஏன் வரல?? உன் தவறுகளோடு நான் உன்னை காதலிக்கவில்லையா? நிறையும் குறையும் சேர்ந்ததுதானே வாழ்க்கை பெண்ணே!! நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல.. ஒவ்வொருத்தருக்கும் இரு பக்கங்கள் உண்டு!! அவை பெரும்பாலும் நிறைகளால் மட்டுமே நிரப்பப்படாது.. குறைகளும் சேர்ந்துதான் இருக்கும்!!” வேகமாகவே விநாயக் பேச..
“நிறுத்துறிங்களா???” என்று கையை உயர்த்தி கத்தியே விட்டாள்.
“சும்மா குறை குறைனு பேசுறீங்க..
யார்கிட்ட குறை? என்கிட்டயா? என்கிட்டயா??” என்று ஒற்றை விரலை தன் நெஞ்சில் வைத்து அவன் கண்ணை பார்த்து கேட்க.. அந்த கண்களில் தெரிந்து நேர்மை ‘நான் தப்பு செய்தவளா?’ என்று அவனை பார்த்து கேட்க சற்று ஆடித்தான் போனான் விநாயக்.
“வர்ணா…!!” என்று அழைத்த அவனின் வார்த்தைகள் வெளிவரவில்லை வெறும் காற்றுதான் வந்தது.
அவளின் இந்த காளி அவதாரத்தில் சற்று அதிர்ந்துதான் போனான் ஆணவன்.
“கோபம் ஏன் டா??” சற்று உள்ளடங்கிய குரலில் அவளின் கையை பற்றிக் கேட்க.. சரேலென்று அந்த கைகளை தட்டிவிட்டாள்.
“இது ஆத்திரம் இல்லை!!
தப்பே செய்யாதவளின் கோபம்!! தப்பே செய்யாமல் தப்பு செய்து விட்டாயேனு பேசுறிங்களேனு ஆதங்கம்!! தப்பே செய்யாமல் தண்டனை அனுபவித்தவளின் தர்க்கம்!!” சிலம்பில்லா கண்ணகியாக தன் முன்னே கண்களில் ரௌத்திரத்தோடு உடலில் ஒருவித நிமிர்வோடு நின்றவளே கண்டவனுக்கு தான் எங்கேயோ சறுக்கிய உணர்வு.
தப்பு செய்தவர்களிடம் இம்மாதிரியான ரௌத்திரத்தையும் நிமிர்வையும் எப்பொழுதும் நாம் காணமுடியாது!!
கண்களில் ஒரு வித அலைபுறுதலும்.. உடல் மொழியில் ஒரு வித நடுக்கமும் பயமும் இருந்து கொண்டே இருக்கும் தவறு செய்தவர்களிடம்!! இது எதுவும் இல்லாமல் நேர்மையும் நெஞ்சுரமும் ரவுத்திரம் மட்டுமே வர்ணாவில் காண.. நாம் எங்கே சறுக்கினோம் என்று தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டான்.
“அந்த பிளாக் பிரியானு உன் பேர்ல தான் இருந்தது. ஐடியும் உன்னுதான்.. எழுதினது நீதான சொன்ன.. அப்புறம்.. அப்புறம்..” என்று அவன் இழுக்க..
“அப்புறம்.. மண்ணாங்கட்டி!!” என்று கொதித்தவள், “அந்த லேப்டாப் கம்பெனி கொடுத்தது. போன் கூட என்னோட வைஃபை கனெக்ட் பண்ணி போட்டு வந்தேன் அவ்வளவுதான். நீங்க சொன்னது போல் அந்த கட்டுரையை ஆரம்பத்தில் எழுத ஆரம்பித்ததும் நான் தான். என்னுடைய முதல் ப்ராஜெக்ட் நீங்கதான். அதனால்
உங்களைப் பற்றி பெருமையாக தான் எழுதினேன். ஒவ்வொரு விஷயமும் உங்களைப்பற்றி தேடித்தேடி கண்டுபிடித்து பல செய்தித் தாள்களில் இருந்தும்.. என் நண்பர்கள் மூலமாகவும் எப்படி எல்லாம் சேகரித்து எழுதினேன் தெரியுமா? சேகரித்தவற்றில் கொஞ்சம் கூட தவறுதலாக வர கூடாது என அத்தனை தரம் செக் செய்வேன். வார்த்தைகளை கோர்வையாக்கி.. அந்த வார்த்தைகள் உங்கள் கழுத்துக்கு மாலையாய்.. தலையில் மணி மகுடமாக கொடுக்கவேண்டும் என்று நினைத்தவள் நான்!! ஆரம்பம் முதலே ஒரு சுவாரசியம்.. அதன் பின் செல்ல செல்ல சிறு சலனம்.. ஈர்ப்பு என்று மாறி மொத்தமாக நீங்கள் என்னுள் வந்த நாட்கள் அவை!!” என்றாள் கண்களில் நீரோடு!!
இதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. “என்னது?? என்னை பற்றி எழுதும்போதே என் மீது அவளுக்கு காதலா?” என்று அதிர்ச்சியோடு அவளை பார்த்திருந்தான்.
“நீங்க எப்படி இருப்பீங்கன்னு கூட எனக்கு தெரியாது. அந்த ப்ளாக்ல டைப் பண்ணி கொடுக்கிறது மட்டும்தான் நான். அதை அப்லோட் செய்றது எல்லாம் பிரியாமணி. பேரு என்ன தெரியுமா பிரியாமணி?” என்று அவள் அழுத்திக் கூற அனைத்தும் பிடிபட்டது அவனுக்கு.
“அவங்கதான் என் லேப்டாப்பில் இதை அப்லோட் பண்ணுவாங்க. அந்த ப்ளாக்குக்கான ஐடி பாஸ்வேர்ட் எல்லாம் அவங்களுக்கு தான் தெரியும். ஆனா இந்த மாதிரி ஓர் இழி வேலை பார்ப்பாங்கனு எனக்கு தெரியாது. அதுல என்னையும் சிக்க வைப்பாங்கனு அப்போ எனக்கு அனுபவ அறிவு போதல… ஆனால் எல்லாம் முடிந்து, எனக்கு விஜேவா புரமோட் பண்ணினாங்க.. என் முதல் ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனதால.. எனக்கு கொடுக்கிறார்களேனு நினைச்சேன்.. அதே மாதிரி அவங்களுக்கும் அது சக்சஸ் ஆகி பெங்களூர் ஆதி சேனலுக்கு போறாங்கன்னு சந்தோஷப்பட்டேன்!! ஆனா… எல்லாம்.. ஒரே நாள்ல போயிடுச்சு!! என்னுடைய பல வருஷ கனவு.. இந்த மாதிரி ஒரு சேனல்ல வேலை பாக்குறது.. எல்லாம்.. எல்லாத்தையும் ஊத்தி மூடிட்டிங்க!!” என்றாள் அழுகையோடு!!
“உங்களுக்கு தெரியுமா? இந்த மாதிரி ஒரு ஊடகத்துறையில் ஒரு பொண்ணு எல்லாம் முன்னுக்கு வரதுங்குறது.. எவ்வளவு பெரிய கஷ்டம் தெரியுமா? முட்டிமோதி வரணும்!! சில இடத்தில் அனுசரிச்சு போகணும்!! சில இடத்தில்…” என்று பல்லை கடித்தவள்.. “என்ன எல்லாம் பிரஷர் தருவாங்க தெரியுமா? என்ன எல்லாம் பேச்சு வரும் தெரியுமா? இது எல்லாவற்றையும் கடந்து தான் முன்னுக்கு வரணும்!! நீங்க கேட்கலாம் ஏன் நாங்க சாதிச்சு முன்னுக்கு வரலையானு?? ஆனா.. சமூகத்தின் கண்ணோட்டத்தில் உங்களுக்கு வரும் பிரச்சனைகளை விட எங்களுக்கு வரது இன்னும் அதிகம்… அதையெல்லாம் சொன்னாலும் உங்களுக்கு புரியாது!! இத்தனையும் முட்டி மோதி கடந்து தான் நான் வந்தேன்!! அந்த விஜேவா ஆன அந்த ஒரே ஒரு நாள் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா?? அதை கூட அனுபவிக்க முடியாம.. அன்னைக்கே.. நீங்க என்னை கடத்திட்டிங்க..” என்று அழுதவளின் கண்ணீர் அவனை அனலாய் சுட்டது!!
“ஆனா.. என்ன எதுன்னு தெரியாம மூணு நாளா முழிச்சிட்டு இருந்த எனக்கு கண்முன்னே உங்கள் உருவம்!! என் எண்ணத்தின் நாயகனுக்கு நான் உரு கொடுத்தது மாதிரி இருந்தது. ஆனால் இவன் என்னை கடத்தி வந்தவன்.. என் எண்ண நாயகன் இல்ல.. இந்த மாதிரி ஒரு வேலையை அவன் செய்ய மாட்டான்.. ‘அவன் என் ராமன்’ என்று நினைத்திருக்க.. ராமனே இராவணனாய் கவர்ந்து வந்திங்கனு தெரிந்த அந்த நொடி.. எப்படி இருந்தது தெரியுமா? என்று அவனை பார்த்தவள், “செத்துட்டேன் உயிரோடு!!” என்று மடங்கி அமர்ந்து அழுதவளை ஆற்றும் விதம் தெரியாமல் சிலையாய் சமைந்திருந்தான் விநாயக்.
அவளை எங்கணம் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் அவன் நின்றிருக்க.. வர்ணாவை தேடி வந்த அசிதன்
அழும் அவளையும்.. சிலையென நிற்கும் விநாயக்கையும் பார்த்து ஒன்றும் பேசாமல் வர்ணாவை எழுப்பி அழைத்துச் சென்றுவிட்டான்.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றானோ தெரியவில்லை.. வெகு நேரம் கழித்தே ரபினிடம் இருந்து அவனுக்கு கால் வந்தது.
அந்த அழைப்பில் தன் உணர்வு வந்தவன், அவன் என்ன சொல்கிறான் என்று சற்றும் காதில் வாங்காமல் “லிசன் ரபின்.. நான் சொல்ற பெண்ணை பெங்களூரின் எந்த மூலையில் இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு எனக்கு தேவையான டீடைல் சொல்ற” என்று அவன் வேக வேகமாக பிரியாமணியை பற்றி அனைத்தும் கூறி.. “ஜஸ்ட் ஒன் ஹவர்.. காட் இட்!!” என்றவன் அந்த அறைக்குள்ளேயே சீற்றம் கொண்ட சிங்கமென நடந்து கொண்டிருந்தான்.
வாழ்க்கையில் அவன் எடுத்த சில முடிவுகள் வேண்டுமானால் தப்பாக இருக்கலாமே ஒழிய கணிப்புகள் இதுவரை தவறியதில்லை. ஆனால் இன்று மொத்தமாய் தவறி நிற்கிறான் அதுவும் தன்னவளிடம்!!
மனம் முழுவதும் வர்ணா சொல்வதுதான் உண்மை என்று முழுதாக நம்பியது. ஆனால் தவறு செய்த மனமோ ஒரு வாய்ப்பை எதிர்பார்த்து ரபினின் காலுக்காக காத்திருந்தது.
ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே போன் செய்து விட்டான் ரபின். அதுவும் பிரியாமணியை ஆட்களை வைத்து தூக்கி, அவளின் வாக்குமூலத்தை காணொளி ஆகவே அவனுக்கு வாட்ஸ்அப் செய்திருந்தான்.
மொத்தமாய் நொறுங்கி போய் அமர்ந்தான் அந்த காணொளியை பார்த்து விட்டு விநாயக்!!
இதுவரை அவளை குறையோடு சேர்த்து காதலித்தேன் என்று தற்பெருமை அடித்துக் கொண்டிருந்தவன், குறையே இல்லாதவளை கடித்து குதறி இருக்கிறான் என்று அறிந்த கணம் முதல் தன் நிலையில் இல்லை அவன்!!
இனி என்ன??? என்ற கேள்வியே அவனை பெரிதாய் பயமுறுத்தியது. தவறு செய்துவிட்டாய்.. தவறு செய்துவிட்டாய்.. என எத்தனை விதமாய் தண்டித்திருந்தான். இதோ காதல் வந்து அவளை தேடி வந்ததால் சரி.. இல்லையென்றால்.. நினைக்கவே அவனுக்கு உடல் நடுக்கம் கொண்டது.
சாருமதி அவ்வளவு அறிவுரை எல்லாம் கூற மாட்டார். அவர் கூறும் முக்கிய அறிவுரை ‘பெண்களை எப்பொழுதும் போகப் பொருளாய் எண்ணாதே!! அவர்களிடம் கண்ணியும் காட்டி நடந்து கொள்!’ என்பதுதான். இன்றுவரை அதை கடைபிடித்து வந்தவன் சறுக்கியது வர்ணாவின் விஷயத்தில் மட்டுமே!! இப்போது அவளை எதிர்கொள்ள திராணியின்றி இரவு உணவுக்கு கூட செல்லாமல் தவிர்த்தவன் அன்று போல மொட்டைமாடியில் தஞ்சமடைந்தான்.
அம்மாவாசை இரவு.. ஊரில் மட்டுமல்ல அவனுள்ளும் இருளாய் இருக்க.. அவனின் இருளைக் கிழித்து ஒளியாய் நுழைந்தாள் வர்ணா வெண்மதியாய்!!
விநாயக் முகமே அவனது நிலையை தெள்ளத் தெளிவாக உணர்த்தியது. அவனுக்கு அனைத்தும் தெரிந்துவிட்டது என்று புரிய.. அப்போது ஒரு ஆசுவாசம் வர்ணாவிடம்!!
ஆனால் குற்ற உணர்வில் அவன் நிற்பதைக் கண்டு மெல்ல அவனருகில் நெருங்கி சென்று தோளில் கை வைக்க..
பெருமூச்சு விட்டவன், அவள் பக்கம் திரும்பி “எனக்கு ஒன்னே ஒன்னுக்கு மட்டும் பதில் சொல்லு.. மெனி.. வர்ணா??” என்றான் நலிந்த குரலில்.
‘என்ன?’ என்று அவள் பார்க்க..
“என் தவறை மறந்து முழுமனதோடு உன்னால் என்னை காதலிக்க முடியுமா?” என்று கேட்க சற்று தடுமாறி நின்றவளை பார்த்தவனுக்கு அவளின் அமைதியே பதிலாய் அமைய..
ஆழ் மூச்சு எடுத்தவன்… அவளது அதரங்களில் ஆழ்ந்த தன் அச்சாரத்தை பதித்தவன், “இனி.. உன்னை டிஸ்டர்ப் செய்ய மாட்டேன்.. லாஸ்ட் ஒன்டைம்!!” என்று மீண்டும் அவளது இதழ்களில் தன் இதழ்களால் கொய்து விட்டு,
அவளின் வார்த்தையை தனதாக்கி அன்றிரவே அவ்வூரையும் அவளையும் விட்டு சென்றான்.
“நாசாமா போச்சு போ.. நீங்களெல்லாம் லவ்வு செய்யலைனு யாருடா அழுதா.. நீ முன்னாலே போ.. இந்தா வரேன். இருடி!!” என்ற கியூபிட் வேகுவேகு என்று சென்றது.
அப்படி எங்க போகுது??? பார்ப்போம்!!
மறுநாள் காலை விநாயக் அறையில் அவன் இல்லை என்று தெரிந்து மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்க..
பாண்டி ப்ரதர்ஸூம் வீட்டில் இல்லை!!
“அடேய் விடுங்க டா.. நீங்களெல்லாம் நிஜமாகவே அண்ணன்களாடா?? இப்படி என்னை தூக்கிட்டு போறீங்களே?” என்று விநாயக் கத்த..
“ஆஃப் கோர்ஸ் மாப்பி!!” என்றவர்களில் ஒருவன் வண்டியை ஓட்ட.. மற்றொருவன் அவன் அருகில் இருக்க.. பின் இருக்கையில் விநாயக் அருகில் மற்ற இருவரும் அவன் அசைய முடியாதபடி கையை பிடித்தபடி அமர்ந்திருந்தனர்.
“அப்பாடி!! ஆளை தூக்கியாச்சு!!” என்று நிம்மதி பெருமூச்சு விட்டது கியூபிட்!!
வானவில் வளரும்…
🤭🤭🤭🤭❤️❤️❤️❤️❤️🤣🤣🤣🤣
👌👌👌👌👌👌👌👌👌👌👌
anChvdskPGulEg
nPAOYmkRHaLKuD
Sema super sis
Hi sis
Do you have separate story for vishnu prasath and sowmini
Very eager to read it