வானவில் 21
“மெனி.. ம்க்கும்.. வர்ணா என்னை.. என் தப்பை மறந்து.. மன்னிச்சு..முழு மனதாக உன்னால் நேசிக்க முடியுமா?” என்று விநாயக் கேட்க.. இவள் தயங்கி கெஞ்சலாக அவனைப் பார்க்க..
அவளின் அந்த கெஞ்சல் பார்வையே அவனது காதல் இதயத்தை குத்தி கிழிக்க.. அதில் இருந்து பெருகும் உதிரத்தை தன் கண்களில் கண்ணீராய் வடித்தவன், தலையை ஒரு சிலுப்பு சிலுப்பி சிகையை கோதிக் கொண்டான், கண்ணீர் கன்னம் தாண்டாமல்!!
தவறுதானே அவன் செய்ததும்!! ஆத்திரம் கண்ணை மறைத்து இருக்க.. தான் என்று கர்வம் தலை தூக்க.. கண்டிக்கிறேன் என்ற பெயரில் இவன் தடுக்கி விழுந்தான்.
சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள்!!
கண்களால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்..
தீர விசாரிப்பதே மெய் என்று!! மெய்யை உணர அவளின் மெய்யை தீண்டி தீண்டி தண்டிக்க எண்ணியவன்.. இன்று அவளின் முன்பு தான் செய்த செயலால் தன் உண்மையான காதலை கூட ஏற்க வைக்க முடியாமல் தோற்று நிற்கிறான்.
இவன் மேல் உள்ள காதலால் விநாயக் செய்த செயலை மன்னித்தாலும்.. என்றென்றும் அதை மறக்க முடியுமா? முடியாது என்று திண்ணமாக இந்த நிமிடம் உணர்ந்தவன், அவளை பிரிவது தன் உயிரையே பிரிவது போல் இருக்க.. வேறுவழியின்றி தங்களின் காதலுக்காக பிரிய நினைத்தான் இந்த முட்டாள் காதலன்!!
என்றுதான் இந்த ஆண்கள் பெண்களின் மனதை புரிந்து கொள்ளப் போகிறார்களோ??
அன்று காதல் இல்லாத பெண்ணை தன்னருகே இழுத்து தவறு செய்தான்!!
இன்று முழுக்க முழுக்க அவன் மீது கொள்ளை காதல் கொண்ட பெண்ணிடம் இருந்து இவன் விலகி மீண்டும் தவறு செய்கிறான்!!
“இனி உன்னை டிஸ்டர்ப் செய்யமாட்டேன்!!” என்றவன்,
அவளை இழுத்து அணைத்தான். வர்ணாவும் மறுப்பேதும் சொல்லாமல் அவன் அணைப்புக்குள் முழுமையாக வந்தாள்!! மெல்ல அவள் முகத்தை அவன் பக்கம் திருப்பினான். தேன் இருக்கும் இடம் தேடி தானாய் செல்லும் வண்டென
இருட்டிலும் அவளது உதடுகளை தேடிக் கவ்விக் கொண்டன விநாயக் உதடுகள்!!
நீண்ட நெடிய முத்தம்!!
உயிரை உறிஞ்சும் ஒற்றை முத்தம்!!
நெடிய முத்தத்துக்குப் பின்.. அவள் அவன் பக்கம் திரும்பினாள். அவனின் மார்பில் அவள் முகத்தை புதைத்து அழுத்தி நின்றாள்! அவள் முகம் அவன் முகத்தருகில் இருக்க.. மீண்டும் மீண்டும் அவள் உதடுகளைக் கவ்விச் சுவைத்தான் விநாயக்.. இனி கிடைக்கவே கிடைக்காது என்று தெரிந்து பொருளை பிரிய மனமின்றி தேடித்தேடி சுவைத்தான்.
அவள் தட்டு தடுமாறி.. திக்கித் திணறி.. மூச்சு வாங்கியபடி அவனையே கேள்வியாக பார்த்தாள் வர்ணா!!
“டிஸ்டர்ப்… டிஸ்டர்ப்.. செய்ய மாட்டேனா.. என்ன அர்த்தம்..?? என்று பேசவே முடியாமல் அவள் திக்கி திணற.. தன் கண்ணில் தோன்றிய வலியை அவளிடம் காட்டாமல், அவள் கன்னத்தை ஒற்றை விரலால் மெதுவாக வருடி.. தலையை இட வலமாக அசைத்தவன் “ஒன்னும் இல்ல வர்ணா.. இனிமே இது பத்தி பேச மாட்டேன்னு சொன்னேன்!!” என்று அவள் கண்களையே ஆழ்ந்து பார்த்தான்.
அந்த கண்கள் சொல்லவருவது என்ன? இருளிலும் கண்ணீரில் மினுமினுத்த அவனது விழிகளை விடாமல் அவள் பார்க்க.. பாவையின் பார்வை மொத்தத்தையும் தன் பார்வைக்குள் பத்திரப்படுத்தினான் ஆணவன்!!
“போய் தூங்கு மா.. லேட் ஆகுது!!” என்க.. அவளோ அவன் கை பிடியிலிருந்து விலக மனமின்றி ஏதோ யோசனையுடன் அவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே மெல்ல மொட்டை மாடியில் இருந்து கீழே சென்றாள்.
சிறிது நேரம் அவன் அங்கே உலாத்திக் கொண்டிருக்கும் போது “என்ன ப்ரோ ரொமான்ஸ் எல்லாம் முடிச்சாச்சா?” என்றபடி வந்தான் அசிதன்!!
உதடுகள் மட்டுமே சிரிப்பில் விரிந்தது விநாயக்கு. ஆனால் அந்த விரக்தியான சிரிப்பை இருளில் அசிதனால் கண்டுகொள்ள முடியவில்லை.
“சீக்கிரம் டும்டும் கட்டுங்க ப்ரோ.. உங்க கல்யாணம் நடந்தால் தான் என் கல்யாணம் சீக்கிரம் நடக்கும்!!” என்றவனை புரியாமல் விநாயக் பார்த்தான்.
“என்ன?? என் கல்யாணத்துக்கும் உங்க கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்??” என்று புரியாமல் விநாயக் கேட்க..
“அது ஒரு பெரிய கதை!!” என்று பெருமூச்சு விட்டவன், “இந்த குடும்பத்துக்குள்ள ஒரு வழக்கம்!! என்னன்னா.. தங்கச்சி இருக்கும் போது அவளுக்கு கல்யாணம் ஆனதுக்கு பிறகு தான் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணனும்னு.. ப்ரியாமா கல்யாணம் நடந்தால் தான் இந்த தடிமாடு நாலு பேரும் கல்யாணம் பண்ணி பாணுங்க” என்று அசிதன் கூற..
அந்த தடிமாட்டில் லேசாக சிரித்தவன் “அவங்க கல்யாணத்துக்கும் உங்க கல்யாணத்துக்கு என்ன சம்பந்தம்?” என்று புரியாமல் மீண்டும் கேட்க..
“உங்களுக்கு எல்லாத்தையும் விம் போட்டு தான் விளக்கனும் போலவே?? எனக்கும் ஒரு தங்கச்சி இருக்குறா ப்ரோ.. அவளை இந்த வீட்டில் இருக்கிற ஒருத்தனுக்கு தான் கட்டி கொடுக்கணும்! இப்ப புரியுதா? வர்ணாவ கட்டிகிட்டு அவனை நீங்க ரிலீஸ் பண்ணினா தான்.. என் தங்கச்சிய கட்டிட்டு அவன் என்னை ரிலீஸ் பண்ணுவான்.. நானும் எவ்வளவு நேரம் தான் என் லவ்வரை விட்டுட்டு இங்கே இருக்கிறது?” என்று கேட்க..
“என்னது உங்களுக்கு லவ்வர் இருக்காளா?” என்று அதிர்ச்சி அடைந்தான் விநாயக். அதில் ‘அடப்பாவி!! அன்னைக்கு நல்லவன் மாதிரி வர்ணாவை வேற கல்யாணம் பண்ணிக்கிறதா அப்படி பர்பார்மன்ஸ் கொடுத்தியே?’ என்று அத்தனை அதிர்ச்சி!!
சிரித்தவன் “எனக்குன்னு ஒருத்தி பிறந்திருப்பா இல்ல ப்ரோ.. அவளை நான் காக்க வைக்கக் கூடாது இல்லையா? அதை தான் சொன்னேன்! மத்தபடி உங்களையெல்லாம் தாக்கின அந்த காதல் வைரஸ் என்னை இன்னும் தாக்கல..!!” என்று இரு தோள்களை குலுக்கினான்.
“அதுவரை சந்தோஷப்பட்டுக்குங்க ப்ரோ!!” என்று அவன் முதுகில் தட்டியவன், “சீக்கிரமே சிறைப்பட வாழ்த்துக்கள்!!” என்று கூறி விடைபெற்று சென்றவனை பார்த்த அசிதனுக்கு ‘விநாயக்கின் முகத்தில் ஏதோ மிஸ்ஸிங்?ஆனா என்ன மிஸ்ஸிங்?’ என்று யோசனையோடு அவனும் தன் அறைக்கு சென்றான்.
மறுநாள் அதிகாலையிலேயே எழுந்தவன் மெல்ல கீழிருக்கும் வர்ணாவின் அறைக்கதவை திறந்து உறங்கும் அவளை பார்த்தான். இரவு உடையில் இருந்தவளின் அழகிய வளைவு நெளிவுகள் அவனை அழைக்கவில்லை.. ரசிக்கவும் முடியவில்லை. அமைதியாக உறங்கும் அவள் முகத்தையே பார்த்தவன்.. “இந்த அமைதி அவளுக்கு எப்பொழுதும் நிலைக்கட்டும்!!” என்று அவள் பிறை நுதலில் மெல்ல முத்தமிட்டவன் ஒரு நிமிடம் தயங்கி அதன் பின் விறுவிறுவென்று தன் அறைக்கு சென்றான். தன் பொருட்களை பேக் செய்து கொண்டு யாரிடமும் எதுவும் சொல்லாமல் தன் காரில் ஏறிப் பயணித்தான்.
வழக்கம்போல் காலையில் அவனுக்கு சத்துமாவு கஞ்சி எடுத்துக்கொண்டு வர்ணா செல்ல.. அறையில் அவன் இல்லை. ஒருவேளை குளியலறைக்குள் சென்றிருப்பானோ? இல்லை மொட்டை மாடிக்கு சென்றிருப்பானா? என்று யோசனையோடு அங்கே பார்த்தவளுக்கு அறையில் ஏதோ ஒரு வித்தியாசம்.. ஆம்!! விநாயக்கின் பொருட்கள் எதுவுமே அங்கு இல்லை. அதிர்ந்து கையிலிருந்த கஞ்சியை தவறவிட்ட சிலையென சமைந்தவள், அடுத்த நிமிடம் ஒவ்வொரு இடமாக தன்னவனை தேடி தேடி அலைந்தாள்.
கண்களில் பெருகும் கண்ணீரை துடைத்துக்கொண்டே மொட்டை மாடி பின்பக்கம் தோப்பு என்று அவன் காலை வேளையில் நடைபயிலும் இடம் எல்லாம் தேடி தேடி அலுத்து.. அவனில்லாமல் பெரும் வலியோடு வீட்டுக்குள் நுழைந்தவளை பார்த்த தரணி “என்ன ஆச்சு பாப்பா? காலையில் முகம் எப்படி இருக்கு?” என்று வாஞ்சையோடு தலையை தடவி கேட்க.. அவளோ “தரணி பா!!” என்று அவர் மார்பிலேயே முகம் புதைத்து அழுகலானாள்.
மகள் அழுதால் தான் அப்பாக்களுக்கு தாங்காதே “என்னாச்சு மா?
“ப்ரியாம்மா என்னாச்சுடா?”
“பாப்பா என்ன ஆச்சு?”
“தங்கம்.. ஏன் டா அழுகிற?” என்று மாறிமாறி அவரவர் அறையிலிருந்து அடுத்த நொடி சிவா ரிஷி அருண் அனைவருமே வந்துவிட.. அம்மாக்களும் “இவர்களுக்கு வேறு வேலையே இல்லை! அவ கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரக்கூடாது. உடனே நாலு பேரும் சேர்ந்து வந்துருவாங்க!!” என்று குறையாக பேசினாலும் மகள் ஏன் அழுகிறாள் என்று வருத்தத்தோடு அவர்களும் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவந்து எட்டிப்பார்க்க..
நாலு பேரும் சுற்றி நிற்க நடுவில் தரணியின் நெஞ்சில் சாய்ந்து இன்னும் விடாமல் அழுது கொண்டிருந்தாள் வர்ணா!!
“சொன்னாதானே பாப்பா தெரியும்?
“முதல்ல அழுகையை நிறுத்துடா!!
“சொல்லுமா என்ன ஆச்சு? யாராவது எதுவும் சொன்னாங்களா?” என்று மாறி மாறி நால்வரும் நான்கு பக்கத்தில் இருந்து கேள்வி கணைகளை தொடுக்க.. அனைத்திற்கும் இல்லை என்று தலையை ஆட்டிக்கொண்டே இருந்தாள்.
“வண்ணக்கிளி எதுக்கு இப்போ அழுமூஞ்சி கிளியா நீ மாறிட்ட? மாத்தி மாத்தி கேட்கிறார்கள் தானே.. பதில் சொல்லு!!” என்று தூங்கி எழுந்து வந்து அசிதனும் நெட்டி முறித்து படி நின்று கேட்க..
அடுத்து “அத்தான்ன்ன்…!!” என்று அவனருகில் வந்து அழுக “உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து விட்டார்கள்.. மாறி மாறி நின்னுட்டு தொத்தும் கிளியா சுத்திகிட்டே இருக்க” என்று கடிந்து கொண்டாலும் “சொல்லுடா வர்ணா?? என்ன ஆச்சு??” என்று சற்று அதட்டலுடன் கேட்க “அவுகள காணோம்!!” என்றாள்.
“என்ன யாரை காணோம்??” என்று அவன் புரியாமல் கேட்க..
“அவுக தான்.. அவுக தான்னு சொன்னா உனக்கு புரியாதா அத்தான்?” என்று இவள் சிடுசிடுப்போடு மொழிய..
“ஓஹ்ஹ்.. அவுகளா?? என்று நக்கலாக சிரித்த அசிதன்.. “அவுகளுக்கும் காலையில சில பல வேலைகள் இருக்கும் தானே மா.. அங்க போய் இருப்பாங்க” என்றவனிடம், தலையை அசைத்து “அவுக.. அவுக.. போற இடத்துக்கெல்லாம் நான் பாத்துட்டேன். ரூம்ல அவுக திங்க்ஸ் எதுவுமே இல்ல அத்தான்” என்று உதட்டைப் பிதுக்கி கூறியவளை யோசனையுடன் பார்த்தவன் அவளை தள்ளி நிறுத்தி விட்டு, இரண்டிரண்டு படிகளாக மேலே சென்று பார்க்க.. அங்கே விநாயக் அறை மொத்தமாக காலியாக இருந்தது.
“நேற்று இரவு கூட அவன் முகத்தில் ஏதோ ஒரு மிஸ்ஸிங் என்று நான் நினைத்தது சரிதான்!!” என்றவன் அதே வேகத்தில் கீழே வர மாமன்கள் அனைவரும் அவனை பார்க்க உதட்டைப் பிதுக்கினான் அசிதன்.
அப்போதுதான் நரசிம்மரும் வல்லபரும் எழுந்து வந்திருந்தனர். “காலையிலேயே வேலைக்கு செல்லாம என்னடா கூட்டமா நிக்கிறீங்க! என்ன விஷயம்?” என்றபடியே நரசிம்மர் அமர..
மேலே சென்று வந்த அசிதன் அமைதியாக இருப்பதை பார்த்து அம்மாக்களுமே தவிப்போடு நின்றிருந்தனர். அதற்குள் “சொல்லுங்க டா அண்ணா கேட்கிறார் தானே!!” என்று வல்லபரும் கேட்க..
“அப்பா மாப்பிள்ளைய காணும். யார்கிட்டயும் ஒன்னும் சொல்லாம எங்க போனாருனு தெரியலை.. அறையில் அவரோட பொருள் ஏதும் இல்லேன்னு பாப்பா சொல்கிறா?” என்று சிவா கலக்கத்தோடு மொழிந்தான்.
“இப்படி பாதியில் விட்டு போறதுக்கு தான் இந்த பய காதல் எல்லாம் பண்ணினானா? அன்னைக்கு அவ்வளவு பேசினான்.. இப்ப எதுக்கு விட்டுட்டு போய் இருக்கான்? பாப்பாவை இப்படி அழுகுற வைக்கிறான் இப்பவே.. இப்படின்னா நாளைக்கு இவளை எப்படி வச்சிக்குவான்?” என்று அருண் தைய்யா.. தைய்யா என்று குதிக்க..
அவனுக்கு குறையாத கோபத்தோடு ரிஷியும் விட்டால் இப்பவே பாய்ந்து அவன் சட்டையை பிடித்து இழுத்து வந்து விடுவான் போல ஆவேசமாக அய்யனாரை போல நின்றிருந்தான்.
வல்லபரும் தவிப்போடு அண்ணனை தான் பார்த்தார். ஆனால் நரசிம்மர் வெகு வெகு அமைதியாக நிதானமாக மருமகள்களை பார்த்து “என்னத்தா காலையில் நீராகாரம் கொண்டுவர ஞாபகம் இல்லையா? போய் கொண்டு வாங்கத்தா!!” என்று சத்தமாக உரைத்தவர், அருகில் இருந்த செய்தித்தாளை எடுத்து கண்களை ஓட்டினார்.
மீண்டும் கண்ணாடியை துடைத்து “ரிஷி இந்த கண்ணாடி மறுபடியும் சரி இல்லடா.. இன்னொரு தடவை போய் கண் ஆஸ்பத்திரியில் கண்ண காமிச்சுட்டு வரணும் போல.. மதுரைக்கு ஒரு நாள் போவோம் சரியா?” என்று அவர் பேச.. ‘இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது. அப்பாவா இப்படி பேசுகிறார்?’ என்று தரணி அவரை பார்க்க…
“என்னங்கடே.. எல்லாருமே என் மூஞ்சியவே மாத்தி மாத்தி பாக்குறீங்க.. உங்க வீட்டு மாப்பிள்ளை வீட்ல இல்லைனு பார்த்த நீங்க.. உங்க புள்ளைங்க எல்லாம் இருக்கானுங்களான்னு பார்த்தீகளா டே??” என்று கேட்க அப்போது தான் இவ்வளவு கலவரத்திலும்.. அதுவும் தங்கை இப்படி காலையிலேயே கண்ணீர்விட்டு கதறுவதை கண்டால் கட்டியணைக்க ஓடி வரும் காளைகளை காணோமே என்று உரைத்தது அனைவருக்கும்.
ரிஷிக்கு ஏதோ புரிய “பெரியப்பா…!!!” என்று அவன் ஏதோ கேட்க முன் “ஆமாம்!!” என்று தலையசைத்தார்.
“மாப்பிள்ளைய என் பேரனுங்க பார்த்துப்பானுங்க.. நீங்க போய் உங்க வேலைய பாருங்கடே!!” என்றவுடன் தான் அனைவருக்கும் முகத்தில் ஒருவித மகிழ்ச்சி.
“ஊர்ல உள்ளவன் காதலிச்சுட்டு விட்டாலே ஆள ஒரு வழி ஆக்குவானுங்க.. சொந்த தங்கச்சியை ஒருத்தன் விட்டுட்டு போனா சும்மாவா இருப்பானுங்க??” என்று சிரித்துக்கொண்டே அசிதன் செல்ல..
“அடேய் விடுங்க டா.. நீங்களெல்லாம் நிஜமாகவே அண்ணன்களாடா?? இப்படி என்னை தூக்கிட்டு போறீங்களே?” என்று விநாயக் அலறினான்.
“ஆஃப் கோர்ஸ் மாப்பி!!” என்றவர்களில் ஒருவன் வண்டியை ஓட்ட.. மற்றொருவன் அவன் அருகில் இருக்க.. பின் இருக்கையில் விநாயக் அருகில் மற்ற இருவரும் அவன் அசைய முடியாதபடி கையை பிடித்தபடி அமர்ந்திருந்தனர்.
“நீ பாட்டுக்கு வருவ.. என் தங்கச்சி காதலிக்கிறேன் காதலிக்கிறேன் தூக்கிட்டு போவ.. அங்க வச்சு லவ் பண்றேன்னு சொல்லுவ.. அவ இங்க வந்ததுக்கு அப்புறம் அவ பிரிவை தாங்க முடியாமல் தேடி வந்தேன் புலம்புவ.. இப்போ என்னடான்னா அவ ஏதோ ஒத்த வார்த்தை சொல்லிட்டா.. மனசு முறிச்சிட்டான்னு வீராப்பா போறேன்பே.. நாங்க எல்லாம் பாத்துட்டு இருக்கனுமா? அப்புறம் நாங்க எல்லாம் என்ன அண்ணன்கள்டா?” என்று வண்டி ஓட்டிய படியே சர்வா கூற..
“அதானே.. எப்படி தூக்கினோம் பார்த்தியா உன்னை?” என்று லஸி முன்னாலிருந்து சர்வாவுக்கு ஹைஃபை கொடுத்தான்.
தன் அருகில் இருந்த தனா மற்றும் துஷ்யந்தை பார்த்த விநாயக் “நீங்க மட்டும் எதுக்குடா வாய மூடிகிட்டு இருக்கீங்க? நீங்களும் ஏதாவது சொல்லுங்க கருத்து என்கிற பெயரில்!!” என்று இவன் கடுப்போடு சொல்ல..
நால்வரும் நகைத்தனர்!!
“புதுசா என்ன சொல்லிட போறோம் மாப்பி.. எப்போ நம்ம லைஃப்ல உள்ள ஒரு பொண்ணு வருதோ.. அப்பவே நம்மகிட்ட இருக்கிற தான் என்ற அகங்காரம் எல்லாத்தையும் தூக்கி போட்டுடனும்!!” என்று துஷ்யந்த் பெரிதாக ஆரம்பிக்க..
“நிறுத்து!!” என்பது போல் அவனை கைநீட்டி நிறுத்தியவன் “இது எல்லாத்தையும் விட்டுட்டு தான்டா உங்க அருமை தொங்கச்சிய நான் லவ் பண்ணவே ஆரம்பிச்சேன்” என்று சோகத்தோடு சொன்னான் விநாயக்..
“அதுல முக்கியமான ஒன்னு விட்டு போச்சு மாப்பி?” என்று அருகில் இருந்த தனா கூற.. என்ன என்று விநாயக் பார்க்க..
“அதான் அந்த சூடு! சொரணை!! அதெல்லாம் தான்!! பொண்ணுங்க நாம தப்பு பண்ணும் போதெல்லாம் கம்முனு வாயை மூடிட்டு இருப்பாங்க.. நாம கூட அவங்கள ரொம்ப நல்லவங்க அமைதியானவங்க.. நாம என்ன செஞ்சாலும் கேட்க மாட்டாங்கனு நினைச்சு கொஞ்சமே கொஞ்சம் சந்தோஷமா இருப்போம்!! ஆனா அப்புறம் வரும் பின்னாடி ஆப்பு.. எப்ப? எங்க? எந்த இடத்துல? எந்த நேரத்துல? நீ சொன்னா என்கிறது வரைக்கும் அவங்க மண்டையில எல்லாம் பத்திரமா ஞாபகத்தில் இருக்கும். தேவைப்படுற இடத்தில அதைப் போட்டுத் தாக்கிடுவாங்க நம்மள!!” என்று தனா கூறி சிரிக்க..
“எக்ஸாக்ட்லி!! சிஸ்டம் கூட கரெப்ட் ஆக நிறைய சான்ஸ் இருக்கு.. டேட்டாஸ் நிறைய போட்டா.. ஆனா எவ்வளவு டேட்டா போட்டலும் இந்த பொண்ணுங்களோட மூளை ஒரு மூலையில எல்லாத்தையும் பக்காவா ஒரு கமா புள்ளி கூட மறக்காம ஞாபகம் வைத்திருக்கும். அதனால மச்சான் அவ என்ன பேசினாலும் அதை தூக்கி போட்டுட்டு காதலை மட்டுமே பற்றென வைத்து வாழ்க்கைக்குள்ள போ..” என்றான் சர்வா..
“என்னங்கடா மாத்தி மாத்தி எல்லாரும் எனக்கே அட்வைஸ் பண்றீங்களா? அவனுங்களுக்கு வந்தா தான்டா தெரியும்!! நான் பண்ணது இன்னும் மனசுல வச்சுக்கிட்டு ஒவ்வொரு முறையும் அதை கண்களால் சுட்டிக்காட்டும்போது இங்கே வலிக்குது டா மச்சான்!! இங்கே வலிக்குது!!” என்று அவன் இடது பக்க இதயத்தை தட்டி காட்ட நால்வரும் சேர்ந்து “ச்ச்சோ.. ச்ச்சோ..!!” என்று சோகம் பாட..
“அடிச்சி வெளுத்துடுவேன் டா மச்சான்ஸ் கூட பார்க்காம உங்களை.. கிண்டலா பண்றீங்க? அவனுக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் ஜலதோஷமும்!!” என்றான் விநாயக்!!
காருக்குள் சற்று அமைதி இருக்க “இனிமேல் எவனாவது அட்வைஸ் எனும் வார்த்தைய…” என்று இவன் ஒரு விரல் பத்திரம் காட்டி அனைவரையும் பார்த்திருக்க..
“எக்ஸ்க்யூசூஸ் மச்சான்!! நான் என்ன என்னுடைய பாய்ண்டை சொல்லவே இல்ல.. அப்புறம் சமூகம் ஒன்றுமே சொல்லாமல் விட்டுடேனு என்னை குறை சொல்லும். அதனால என்னோட கருத்தையும் கொஞ்சம் பதிவு செய்துக்கிறேன்!!” என்று பாவமாய் கேட்டான் லஸி.. அவன் கோபமாக முறைத்தான்..
“இங்க பாரு மச்சான்.. மனைவிக்கிட்ட தோற்கிறவன் தான் வாழ்க்கையில் ஜெயிப்பான்!! தோத்துப்பாரு மாப்பி!! அதிலேயே முழு சுகம் உண்டு” என்று லஸியை தன் பின்னாடி அழகுக்காக இருந்த சிறு தலையணைய எடுத்து அவன் மூஞ்சிலேயே விட்டெறிந்தான் விநாயக்.
மீண்டும் அவன் கோபமாக அமர்ந்து இருக்க அவர்களது தோட்ட வீட்டை நோக்கி சென்ற நின்றது அவர்கள் வந்த வண்டி.
“இதுக்கு பேரு தான் மாப்பிள்ளை முறுக்கோ!!” என்று கோபமாக அமர்ந்திருந்தவனை மீண்டும் தூக்கிக் கொண்டு வந்து அந்த வீட்டிற்குள் விட்டு தாழ் போட்டுவிட்டனர் நால்வரும்.
“கதவ திறங்க டா!! கதவ திறங்க டா!!” என்பதை காது கேட்காமல் அங்கிருந்து தென்னை தோப்புக்குள் சென்றனர் நால்வரும்.
“ஒரு மணி நேரம் கழித்து வரோம் மாப்பி.. அடி உதை வாங்கி மிச்சம் மீதி இருக்கும் உன்னை அள்ளிட்டுக்கிட்டு போக!!” என்று போகும்போது நக்கலோடு சொல்லி சென்றான் சர்வா.
“அடியா யார் கிட்ட? இந்த விநாயக்கை அடிக்க இனி ஒருத்தன் தான் பிறந்து வரணும்!!” என்று ரௌத்திரமாக பேசியவன் திரும்ப..
அங்கு தாவணியை இடுப்பில் சொருகிக்கொண்டு இருக்கைகளையும் இடுப்பில் வைத்து அவனை முறைத்துக் கொண்டு நின்றவளை பார்த்து அவன் உடம்பில் இதுவரை தங்கியிருந்த கோபம்.. ஆத்திரம்.. ரௌத்திரம் எல்லாம் அவகாசமே வாங்காமல் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடியே சென்றது. இவனும் அசட்டு சிரிப்போடு என்ன சொல்லி சமாதானப் படுத்த என்று நின்றிருந்தான்.
“மாட்ன டா மகனே!! ஸ்டார்ட் தி மியூசிக்!;” என்று கூரை மேல் அமர்ந்து கால் மேல் கால் போட்டபடி வர்ணாவின் ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்தது கியூபிட்!!
அரை மணி நேரமும் அவள் திட்டுவதை அவன் சலிக்காமல் கேட்டுக் கொண்டிருந்தான்.
“இல்லடா..”
“மெனிக்கா..”
“வர்ணா.. அப்படி இல்ல.. அப்படியில்ல..”
“புரிஞ்சுக்கோ டா மா..”
என்ன சொல்லியும் கேட்காமல் அவள் நான்ஸ்டாப்பாக பேசிக்கொண்டே செல்ல.. அதிரடியாக அவளது வார்த்தைகளை விழுங்கி இருந்தான் தன் இதழ்கள் கொண்டு!!
உதடுகளும் உதடுகளும் ஒட்டி சீனி பாகாய் உருகி கரைய..
நாக்குகள் இரண்டும் பாம்புகளாய் பிண்ணி பிணைய..
மூக்கும் மூக்கும் ஒன்றோடு ஒன்று அழுந்தி மூச்சுக்காற்றுக்கு திணற..
அதி காதலாய்..
பெரும் தாபமாய்
..
வன் அதிரடியாய்..
அரங்கேறி கொண்டிருந்தது
ஒரு முத்த யுத்தம்!!
“அடப்பாவி.. அடப்பாவி!! ” என்று வாயை பிளந்த கியூபிட்.. பின் தன் கண்களை மூடிக் கொண்டது!!
வானவில் வளரும்…
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
👌👌👌👌👌👌👌👌👌👌
Superb sis 💞
zAxPraYgIOkRZjm
mGTQeYURNBg
bYBIeKDN