வானவில் 22
தன்முன்னே மினி பத்ரகாளியாய் நின்றிருந்த தன் மெனிக்காவை தான் இவன் பாவமாக பார்க்க.. அவளோ பயங்கர பாசத்தோடு பார்த்தாள்.
“என்னால மறக்க முடியலேனு சொன்னா.. என்னை விட்டுட்டு ஓடி வந்திடுவீங்களா?? எனக்கு புரிய வைக்க மாட்டீங்களா? மறக்க முடியலன்னா.. அதை என் காதலை மறைக்க வைக்கிறேன்னு சொல்ற விநாயக் எங்கே போனார்?” என்று ஆரம்பித்தவள்..
“அப்படி இல்லமா..
“புரிஞ்சுக்கம்மா..
“மெனிக்கா... அப்படியில்லை..” என்று அவன் ஒரு வார்த்தை பேச விடாமல் இவள் நான்ஸ்டாப்பாக பேசிக்கொண்டே சென்றாள்.
பொறுத்து.. பொறுத்து.. பொறுத்து.. பார்த்தான் அவளுக்கு புரிய வைக்க முடியாமல் தவித்தான். ‘உனக்காகத்தான்!! உன் மனம் வருத்தப்படக்கூடாது என்பதற்காகத்தான் என் மனதை கல்லாக்கிக் கொண்டு பிரிந்து செல்லத் துணிந்தேனடி!!’ என்று அவன் தொண்டை வரை வந்த வார்த்தைகளை வெளியே விடாமல்..
இவள் சொற்களை தனஞ்ஜயன் கணைகளாக தொடுத்துக் கொண்டே இருந்தாள்..
எதிரில் நின்ற பிதாமகராய் அவனின் தவறால் தலைகுனிந்து அனைத்தையும் வாங்கிக் கொண்டான் விநாயக்.
அவ்வப்போது மச்சான்கள் அறிவுரை வந்து காதில் மோதிக் கொண்டே சென்றது. “கடைசியாக ஒன்றுக்குமே அவள் மசியவில்லை என்றால் காலில் விழுந்து விடு மாப்பி!!” என்று லஸி சொல்லி சிரித்தது ஞாபகத்தில் வர..
‘காதலில் காலில் விழுவது எல்லாம் கேவலம் கிடையாது! ஆனால் அதை விட வேறு சிறந்த ஆயுதம் என்னிடம் இருக்கு டா மச்சான்ஸ்.. என்னவளை கட்டுப்படுத்த!!’ என்று கள்ளப் புன்னகை அவன் இதழ்களில்..
அடுத்த நிமிடம் அதிரடியாய் அவள் அருகே சென்று இரு கன்னங்களையும் கிண்ணங்களாக தாங்கி அவள் இதழ்களோடு உறவாட விட்டான் தன் இதழ்களை.. அதுமட்டுமன்றி அவர் வாயென்னும் கோட்டையை காவல் காத்த பற்களை நா கொண்டு தகர்த்து விரட்டி.. சுழட்டி அடித்த அந்த நாவினை தன் நாவால் பின்னிப் பிணைத்தான் பாம்புகளாய்…
அவள் கரங்களோ அவன் தோள்களை இறுக பற்ற..
அவன் கரங்களோ அவன் மெல்லிடையை அழுத்தி பற்ற..
மோகங்களும்..
தாபங்களும்..
அழகாய் பற்றின காதலோடு.. காதலர்களோடு!!
“போதும் விடுங்க… நான் உங்க மேல பொல்லா கடுப்புல இருக்கேன். தள்ளி நில்லுங்க!!” என்று அவனை பிடித்து தள்ளி நிறுத்தியவள் மீண்டும் காதல் பாடம் எடுக்க ஆரம்பித்தாள்.
அட.. நீங்க நினைக்கிறது போல இல்லங்க.. காரில் மச்சான்ஸ் அந்த செய்து அட்வைஸூக்கு குறையாது இவளும் எடுத்தாள். காதலியே காதல் வேண்டாம் என்று உதறினாலும் காதலன் எப்படி சும்மா விடலாம் என்று தான்!!
“என்னடா இவ? நம்மளால இவ மனசு கஷ்டப்பட கூடாதுனு நாம ஒதுங்கி போலாம்னு பார்த்தா.. நாம என்னமோ தப்பு பண்ண மாதிரி போற வழியிலேயே காரை மடக்கி உள்ள வந்தானுங்க மாத்தி மாத்தி அட்வைஸ் பண்ணி தங்கச்சி கிட்ட கொடுத்து விட்டு போய்ட்டானுங்க.. ஏற்கனவே நாலு பேரும் மாத்தி மாத்தி பேசினதுல இரண்டு காதும் டோட்டல் டேமேஜ்!! பத்தாததுக்கு இவ வேற ஆரம்பிக்கிறாளே.. அண்ணன்களுக்கு குறையாத தங்கச்சினு காட்டுறாளே!!
ஸ்ஸ்ஸ்.. கண்டி கந்தா.. காப்பாத்து டா!!” என்று மனதுக்குள் மட்டுமே புலம்பினான்.
சிறுது நேரம் மட்டுமே அவள் பேச்சை கேட்பது போலவே நடித்தான் இந்த மாயவன். ஒரு பத்து நிமிடங்களுக்கு பிறகு.. சின்னச் சின்னதாக சில்மிசங்கள் செய்யத் தொடங்கியிருந்தான்.
“சரி மெனிக்கா..”
“சரிடிமா..”
“இனி இப்படி செய்யவே மாட்டேன்மா உன் மசினா..
“நீ.. உன் மசினாவை மன்னிச்சிடுவியாம்..”
என்று வார்த்தைகள் என்னவோ அவ்வளவு வருத்தமும் யாசகமும் கெஞ்சலுமாக இருக்க.. ஆனால் இல்லை என்று காட்டினான் செய்லகளால்!!
அவன் கை விரல்களால் அவள் கன்னத்தில் கோலமிட்டான்..
காது மடலையும் அவள் போட்டிருந்த ஜிமிக்கியையும் வருடினான்..
காதோர உதிரி முடியை மெதுவாக இழுத்து சுருட்டி விளையாடினான்..
அவளது குட்டி மூக்கின் முனையை வருடி.. அசைந்து கொண்டிருந்த உதடுகளை தடவினான்..
அவள் தாடையை தடவி செல்லம் கொஞ்சினான்..
கன்றுக் குட்டிக்கு வருடுவது போல அவளது சங்கு கழுத்தை நீவி விட்டான் நெருங்கி நின்று..
அப்பறம் அவள் கழுத்தில் இருந்த செயினை வருடி.. தாவணியின் விளிம்பில் விரல் ஓட்டினான்.
அதில் அவள் சிலிர்த்து கொள்ள.. அவளது சிலிர்ப்பை ரசித்துக் கொண்டே.. அவள் மென்மைகளை மென்மையாக ரசித்தான்.
அவனுக்கும் இறுக்கமான அணைப்பு தேவைப்பட்டது இப்போது. அவளை பிரிந்து செல்வது அவ்வளவு வலியை தந்திருக்க அதையெல்லாம் இப்போது கனவு போல் கடந்து தன்னவளிடம் தன்னை ஒப்படைக்க மனம் துடித்தது. அவள் அணைப்பில் உடல் கதகதப்பை அனுபவிக்க தேடினான்.
பேச்சை நிறுத்தவில்லை வர்ணா இப்போது.. ஆனால் அவளது கணீரென்ற வார்த்தைகள்
மெதுவாக மாறிக் கொண்டே சென்றது இவனது சில்மிஷங்களில்..
மெல்ல அவளை நெருங்கி அவளது காதோரம் முத்தம் கொடுத்தான். நாக்கின் நுனியால் அவள் காது மடலை தீண்டினான்.
”ம்ம்ம்.. ஹா.. மச்சான்!!” சிரித்தவள் சட்டென தலையை சிலிப்பிக் கொண்டாள்.
மீண்டும் மீண்டும் அவன் அவள் காது மடலை தன் நாக்கால் தீண்டவதும்.. அவளும் சிணுங்குவதுமாக இருந்தது. அப்பறம் மெதுவாக அவளது காது மடலை தன் உதடுகளால் உரசி பற்கள் படாமல் மெதுவாக கடித்தான்.
”ஹ்ம்ஹ்ம்.. என்ன பண்றிங்க மச்சான்??” என்றாள் உள்ளே போன குரலில் வர்ணா!!
”உன்னை கூல் பண்றேன் மெனிக்கா!!” என்றான் மென் குரலில் விநாயக்!!
”இப்படி பண்ணினா கூல் ஆகாது மக்கு மச்சான்!!” கிறக்கத்தில் அவள்!!
”ம்ம்ம்… ஏனாம்??” குறும்பில் அவன்!!
“அது.. அது.. அப்படிதான்!!” வெட்கத்தில் அவள்!!
“சொல்லிக் கொடு பொண்டாட்டி.. ஏனென்று?” ரசிப்பில் அவன்!!
”ம்ம்ம்.. கூசுது.. சிலிர்க்குது.. இப்படி போனா கூல் ஆகுமா? என்ன?” கேள்வியாய் அவள்!!
“ஆகுமே!! வந்த போது ருத்தரமாகாளியா இருந்த.. இப்போ கூல் ஆகிட்ட தானே மெனிக்கா!!” பதிலாய் அவன்!!
மெல்லிதான அவள் காது மடலை உதட்டால் கவ்வி சப்பத் தொடங்கினான். சிலிர்த்து.. சிணுங்கி… சிரித்தபடி அவனுடன் ஒட்டிக் கொண்டிருந்தாள் வர்ணா. அவனது கைகளோ அவளது மெல்லிடையில் நுழைந்து குட்டித் தாடகத்தில் விளையாடத் தொடங்கியது!! சற்றே அந்தரங்கமாய் அரங்கேறியது காதல் லீலைகள்!!
இவன் வீராப்பாய் போனது என்ன? இவள் கோபமாய் அவனை தாக்கியது என்ன? கடைசியில் என்ன ரெண்டு இப்படி இலஞ்சி கிட்டு நிக்குது என்று கியூபிட் சிரித்தது.
கியூபிட்க்கு தெரியாதா காதல் கணக்கு எல்லாம்? என்ன தான் தன் இணையின் மீது கோபம் வருத்தம் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி அந்த பிடித்தம் தான் அவர்களை நிறுத்தி வைக்கிறது கடைசி வரை!!
வாழ்க வளமுடன் என்று கியூபிட் அவர்கள் அந்தரங்கத்தில் தலையிடாமல் பறந்து சென்றது.
ஒரு மணி நேரம் தாண்டியும் நேரங்கள் சென்றுவிட “ஏண்டா மாப்பிய போய் பார்ப்போமா?” என்றான் லஸி.
“நம்ம பாப்பா இருந்த கோபத்திற்கு இந்நேரம் அவன் ஒரு வழியாக இருப்பான்!! போகும்போது ஸ்ட்ரக்சர் எடுத்துட்டு போகணுமா இல்லே ஹாஸ்பிடலையே கூட்டிட்டு போகணுமா?” என்று தனா சிரிக்க..
“எனக்கெல்லாம் அப்படி தோணலை!!” என்று சர்வா எங்கோ பார்த்து சிரித்தான்.
“ஏன்டா?” என்று தனா கேட்க..
“நம்ம மாப்பிள்ளையோட பர்ஃபார்மன்ஸ் அப்படி!!” என்று துஷ்யந்த் தனா தோளில் தட்டி விட்டு “கிளம்புங்க.. இல்லைன்னா அவங்களுக்கு கல்யாணம் பண்ணி பிள்ளை பெத்துக்க மாட்டாங்க.. பிள்ளை பெத்துட்டு தான் கல்யாணத்துக்கே போவாங்க..” என்ற படியே அவன் முன்னே செல்ல சர்வா சிரித்துக்கொண்டு பின்னே செல்ல.. தனாவும் லஸியும் ஐயையோ என்ற பாவனையோடு பின்னே சென்றனர்.
வெளியே காரில் இருந்தபடியே இவர்கள் ஹாரனில் மாற்றி மாற்றி விளையாட்டு காட்ட..
“இதோ வந்துட்டானுங்க உன் அண்ணனுங்க.. சிக்னல் எப்படி எல்லாம் கொடுக்கிறானுங்க பாரு!!” என்று சிரித்துக் கொண்டே கதவை திறந்தவன் நேராக வந்து சர்வாவை அணைத்துக் கொண்டான்.
அது ஏன் சர்வா அவ்வளவு ஸ்பெஷல் என்று தான் மற்றவர்களுக்கு தெரியுமே!! அதனால் அவர்கள் வாஞ்சையோடு பார்க்க வர்ணாவுக்கு தான் சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. இவர்களின் இந்த அணைப்பும் பாசப் பிணைப்பும்!!
“என்ன மாப்பிள்ளைக்கும் மச்சானுக்கும் ஒரே கொஞ்சலாய் இருக்கு” என்று கண்கள் இடுங்க அவர்கள் இருவரையும் பார்த்து கேட்டாள் வரணா..
“இது என்னடா வம்பா போச்சு!! நியாயமா பொண்டாட்டி வீட்டு சைடில் புருஷன்காரன் பாசப்பிணைப்போடு இருந்தா எல்லாரும் சந்தோசம் தானே படணும்.. ஆனா உங்க தங்கச்சி ஏன் முறைக்குது? என்று மச்சானுங்களை பார்த்து சிரித்தவன் சர்வாவின் தோள்களில் ஒய்யாரமாக கையை போட்டுக்கொண்டு “என் மச்சான்ஸ் கூட நான் ப்ரண்ட்லியா இருக்குறது உனக்கு கொஞ்சம் ஜலஸாதான இருக்கு மெனிக்கா!!” என்று கண்ணடித்தான்.
“இல்லை இது சாதாரண ஒரு மாமா மச்சான் உள்ளே இருக்கிற பிணைப்பா எனக்கு தெரியல..”
“என்ன நீ இப்படி கேட்டுட்ட நம்ம விஷ்ணு மாமாவும் நம் அப்பாக்களும் கூட இன்னும் இவ்வளவு ஃப்ரெண்ட்லியா இருக்காங்க நீ பார்க்கிற தானே!!” என்று தனாவை ஒரு பார்வை பார்த்தவள் “விஷ்ணு மாமா எல்லாரையும் விட ரிஷி மாமா கிட்ட ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா? அவங்களுக்குள்ள ஒரு நெருக்கம் தெரியும்!! அதே மாதிரி தான் இப்போ சர்வாணா கிட்டையும் இவர் கிட்டயும் பார்க்கிறேன். அங்கே இருந்து வந்தவர் தன்னுடைய சந்தோஷத்தை காட்டணும்னா இங்க நிக்கிற எல்லாரிடமும் தானே அதை பகிர்ந்து கொள்ளனும். ஸ்பெஷலா இவரை நோக்கி ஓடி வருவானேன்?” என்று ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி கேட்டு தானும் அதிபுத்திசாலி தான் என்று நிரூபித்தாள் வர்ணா!!
“நான் தான் அப்பவே சொன்னேன்ல என் தங்கச்சி புத்திசாலி சீக்கிரமே கண்டுபிடிச்சுடுவானு!!” என்று வாயை விட்டான் லஸி.
“மாப்பி ரொம்ப கஷ்டம் உன்பாடு.. சீக்கிரம் என் தங்கச்சியோடு உடன்படு!!” என்று தனா டிஆர் ஸ்டைலில் பேச..
“முதலில் சர்வாணா மேலும் மட்டும்தான் எனக்கு சந்தேகம் இருந்துச்சு.. இப்போ உங்க எல்லார் மேலேயும் எனக்கு இருக்கு. நீங்க நாலு பேரும் கூட்டு களவாணிகள்!! ஏதோ பண்ணி இருக்கீங்க.. என்ன பண்ணி இருக்கீங்க நீங்க சொல்லலனா.. நான் நேரா ரிஷி அப்பாகிட்டேயும் அருண் அப்பாகிட்டேயும் சொல்லி விடுவேன்” என்று மிரட்டினாள்.
மற்றவர்களைவிட மகள் என்று வரும்பொழுது ரிஷியும் அருணும் கொஞ்சம் அய்யனார் கணக்கா தான் நடப்பார்கள். அதனால் மொத்தமாக நால்வர் படையும் சட்டென்று விநாயக் பின்னே பம்மியது!!
அவனும் பாண்டவர்களைக் காத்த கிருஷ்ணனாய் அவர்களுக்கு அபயம் அளித்தான்!!
“நானிருக்கிறேன் மச்சான்ஸ்” என்று!!
“இவரையே என்கிட்ட இருந்து காப்பாற்றவே இன்னொரு ஆள் வேணும். இவரு உங்களை காப்பாத்த போறாரா?” என்று முந்தானையை கையில் சுற்றிக்கொண்டே “இப்போ உண்மையை சொல்லப் போறீங்களா இல்லையா?” என்று கேட்டாள் வர்ணா!!
“ஓகே.. ஓகே.. கூல் மெனிக்கா..” என்று அவள் கன்னத்தை விநாயக் வருட..
“டேய் மாப்பி நாங்க இருக்கோமடா!!” என்றான் துஷ்யந்த்!!
“அதாவது ஒரு குட்டி பிளாஷ் பக் போயிட்டு வருவோமா மெனிக்கா? பிளாஷ்பேக் டூ இலங்கை!!”
வானவில் வளரும்…
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Lovlyyyyyyyyyy ❤️❤️❤️❤️❤️❤️
Super sis 💞
xPmaXBnsIcdzhef