அத்தியாயம் 20
“என்னடி இங்க வந்து நிற்குற?”
“தள்ளுடி.. உள்ள வந்துக்குறேன்.. வெளியவே நிற்க வைச்சு கேள்வி கேட்குற?”
“சரி.. உள்ள வா..” என்ற சிந்து, ஹாசினியின் உடைமைகளை தூக்கிக் வீட்டுக்குள் வைக்க, ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்த ஹாசினி,
“கொஞ்சம் அந்த ஃபேனை போட்டுட்டு வந்து உட்காரு.. ரொம்ப வேர்க்குது..” என்று கூற, அவள் சொன்னதை செய்துவிட்டு வேகமாக அவள் அருகில் வந்து அமர்ந்தாள் சிந்து. மேலே சுற்றும் மின்விசிறியை பார்த்துக் கொண்டிருந்த ஹாசினியின் கண்ணில் இருந்து நீர் வழிந்தது.
“ஏன் டி? ஏன் அழுகுற? என்கிட்ட சொல்லக் கூடாதுன்னா நீ எதுவும் சொல்ல வேணாம்.. அதுக்காக எல்லாம் நீ அழுகாத..” என்ற சிந்துவின் மடியில் தலை சாய்த்தவளுக்கு வாந்தி எடுப்பது போல் வயிற்றை பிரட்டிக் கொண்டு வர, வாயை மூடிக் கொண்டு குளியலறைக்குள் ஓடினாள் ஹாசினி.
“என்னடி? என்னாச்சு?” என்ற சிந்து, குளியலறைக்குள் நுழைந்து, ஹாசினியின் முன் நெற்றியை பிடித்துக் கொள்ள, வாந்தியெடுத்து முடித்தவள், தன்னை சுத்தம் செய்து கொண்டு வெளியே வர, அவளை கவலையுடன் பார்த்தாள் சிந்து.
“எனக்கு ஒன்னுமில்ல டி.. கொஞ்ச நாளா சரியா சாப்பிடுறதுயில்ல.. அதான் அல்சர் வந்திருக்கும்.. கொஞ்ச நாளைக்கு லிக்யூட்டா எடுத்துக்கிட்டா சரியாகிடும்..”
“ஒன்னும் வேணாம்.. இன்னைக்கு சன்டே தானே! வா.. டாக்டர்கிட்ட போய் காட்டிட்டு வந்துடுவோம்.. எதுவுமே சின்னதா இருக்கும் போதே பார்த்துட்டா ரொம்ப நல்லது..”
“நான்.. வரலை.. எனக்கு தூக்கம் வருது.. நான் தூங்கப் போறேன்.. எனக்கு என் அம்மா வைக்கும் ரசம் சாதம்.. உருளைக்கிழங்கு சாப்பிடணுமா போல இருக்கு.. செஞ்சு கொடுக்குறியா?”
“சரி.. நீ படுத்துக்கோ.. நான் வைச்சுட்டு உன்னை எழுப்பிடுறேன்..” என்ற சிந்து, ஹாசினியை பாடுக்க வைத்துவிட்டு, சமையலறைக்குள் நுழைந்தாள்.
‘ரசம் எப்படி வைக்குது?’ என்று தன் நாடியைத் தட்டி யோசித்தவள்,
‘ஐடியா..’ என்று குதித்தவள், தன் கைப்பேசியை எடுத்து, அதில் ரசம் சாதம் வைப்பது எப்படி? என்று போட, அதில் சொல்லியது போல் செய்தவள்,
“என்னதிது.. இன்னமும் நுரை நுரையா வரல? இந்த வீடியோல மட்டும் அப்படியே கொதிச்சு, நுரை நுரையா பொங்கி வருது.. நான் வைச்சு மட்டும் வர மாட்டேங்குது..” என்று அடுப்பை உற்று பார்த்துக் கொண்டிருந்தவளின் பின்னே வந்து நின்றாள் ஹாசினி.
“என்னடி பண்ணிட்டுருக்க?”
“ரசம் வைச்சுட்டுருக்கேன்..”
“எப்படி?”
“புளியை கரைச்சு ஊத்த சொன்னாங்க.. ஊத்தினேன்.. சீரகம், மிளகு, தக்காளி, பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போட சொன்னாங்க போட்டேன்.. எண்ணெய் ஊத்தி, கடுகு போட்டு, அதுல கரைச்சு வைச்சதை ஊத்தி மஞ்சள்தூள் போட்டு கொதிக்க வைக்க சொன்னாங்க.. அவங்க சொன்னதெல்லாம் போட்டேன்.. ஆனா, கொதிச்சு.. நுரை நுரையா வரமாட்டேங்குது.. அதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டுருக்கேன்?” என்றவளை பார்த்து தலையில் அடித்து கொண்டவள்,
“என் அறிவு உலகக்கொழுந்தே.. அடுப்பை பத்தி வைச்சத் தான் எண்ணெய் காயும்.. கரைசலும் கொதிக்கும்.. அடுப்பை பத்தி வைங்கன்னு தெளிவாத்தானே.. சொல்லியிருக்காங்க.. அதை மட்டும் செய்யாம, மத்த எல்லாத்தையும் செஞ்சுட்டு நிற்குற.. அடுப்பை பத்தி வைக்காமல் நின்னேன்னா.. காலம் பூரா நின்னுக்கிட்டே தான் இருக்கணும்.. நுரை நுரையா எல்லாம் வராது.. தள்ளிக்கோ.. நானே செஞ்சுடுறேன்..” என்ற நாசினி பத்தே நிமிடத்தில் சமையல் செய்து முடிக்க, அதனை,
“சூப்பரா சமைச்சுருக்கடி..” என்றவாறு சப்புக் கொட்டி சிந்து சாப்பிட, தன்னையும் அறியாது ஹரிஷான்தின் நினைவு வந்து போனது. அவனது நினைவு வந்ததும், வேக வேகமாக பத்திரத்தில் எடுத்து வைத்தவள்,
“சிந்து.. நான் இதை அவருக்கு போய் கொடுத்துட்டு வந்துடுறேன்..” என்றவாறு வெளியே செல்ல,
“இவளா வந்தா.. இப்போ இவளா போறா.. இவ மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கான்னு சொல்லவும் மாட்டேங்குறா.. என்னடா நடக்குதுங்க?” என்று முணுமுணுத்த சிந்து, மாலையில் மருத்துவரை சந்திக்க முன்பதிவு செய்து வைத்து, ஹாசினிக்காக காத்திருந்தாள். சாப்பாட்டு பையை எடுத்து கொண்டு வாசலில் வைக்கப் போனவளின் காதில்,
“வெளியே போ.. காமினி.. இப்போ நீயா போறியா? இல்ல செக்யூரிட்டிய கூப்பிட்டு கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளவா?” என்ற ஹரிஷான்த்தின் குரல் விழ, வீட்டிற்குள் வேகமாக நுழைந்தவள், சாப்பாட்டு பையை மேஜை மீது வைத்துவிட்டு, சுவற்றில் ஒட்டியிருந்த ஹரிஷான்த்தின் மீது சாய போன காமினியின் கையைப் பிடித்து வேகமாக இழுத்தவள், அவர்கள் இருவருக்கும் இடையே வந்து நின்று கொண்டாள் ஹாசினி.
“சிந்துக்கு காய்ச்சல்னு கொஞ்ச நேரம் தான் போயிட்டு வந்தேன்.. அவளுக்காக சமைச்சேன்.. அப்படியே உங்களுக்கும் சேர்த்து தான் சமைச்சு எடுத்துட்டு வந்துருக்கேன்.. நீங்க போய் கை கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்..” என்று ஹரிஷான்த்தை பார்த்து பேசியவள், அவனை அங்கிருந்து உள்ளே அனுப்பிவிட்டு, காமினியின் புறம் திரும்பி,
“கொஞ்ச நேரம் வீட்டுக் கதவை திறந்து வைக்கக்கூடாதே.. தெருவுல போற கண்ட கண்டதெல்லாம் வீட்டுக்குள்ள வந்துடுது..” என்று கூற,
“நான் நாயா? கண்டதா? ஹரி என்னைய தான் இன்னமும் லவ் பண்றாரு தெரியுமா?” என்று கர்வத்துடன் கூறியவளை பார்த்து உள்ளுக்குள் நொந்தாலும், வெளியே ஏளனமாக அவளை பார்த்து,
“அவர் உன் மூஞ்சை கூட பார்க்க பிடிக்காம, உன்னைய அவாய்ட் பண்றாரு.. அவர் உன்னைய இன்னமும் லவ் பண்றாரா? எதுக்கும் நீ கீழ்ப்பாக்கம் போறது ரொம்ப நல்லது..” என்ற ஹாசினி, அங்கிருந்து அகன்று உணவு மேஜையின் புறம் நகர்ந்தாள். தான் சமைத்து கொண்டு வந்ததை மேஜையின் மீது எடுத்து வைத்துக் கொண்டிருப்பவளைப் பார்த்த காமினிக்கு கோபம் தலைக்கேறியது. வேகமாக அவளருகில் சென்றவள்,
“அவர் விரும்பலைன்னா, உன்னைய விரும்புறாருன்னு அர்த்தமா?” என்று நக்கலாக கேட்க,
“அதுல என்ன டவுட்.. அவர் என்னைய மட்டும் தான் லவ் பண்றாரு..” என்ற ஹாசினியின் மனதில் சொல்ல முடியாத சோகம் தோன்றியது. அதனை காமினிக்கு தெரியாது மறைத்து, தான் அவனுடைய காதல் மனைவியாக காட்ட, அரும்பாடு பட்டாள்.
“ஓஹோ? அப்படி உன்னைய மட்டும் தான் அவர் லவ் பண்றாருன்னா.. அப்புறம் எதுக்கு ஆஃபிஸ்ல, உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமான விஷயத்தை இன்னமும் மறைச்சு வைச்சுருக்கீங்க? அதை எல்லோருக்கும் சொல்லியிருக்கலாமே?!”
“அது எங்க தனிப்பட்ட விஷயம்.. யாருக்கும் சொல்லாம, திருட்டுத்தனமா லவ் பண்றதுல இருக்குற கிக்கை கொஞ்ச நாள் அனுபவிச்சுக்கலாமேன்னு தான் நாங்க யார்க் கிட்டேயும் சொல்லல.. ஆனா, அதை எல்லாம் உனக்கு விளக்கணும்னு அவருக்கு எந்த அவசியமும் இல்ல..” என்றவள் தன்னை அமைதியாக இருப்பவள் போல் காட்டிக் கொண்டாலும், அவளது உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது. காலையில் வந்தது போல் இப்போதும் தலை சுற்றுவது போல் இருந்தவள், மேஜையை இறுக்கப்பிடித்துக் கொண்டாள். அவள் நின்றிருந்த கோலத்தை பார்த்த காமினி, அவள் தன் பேச்சைக் கேட்டு பயந்து விட்டதாக எண்ணி,
“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல.. எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்து விலகிடு.. உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ, நான் தர்றேன்..” என்ற காமினி, ஹரிஷான்த்தின் அறையை நோக்கி செல்ல முயல, அவளது கையைப் பிடித்து தடுத்த ஹாசினி,
“ப்ளீஸ்.. நல்லதனமா சொல்லும் போதே.. வெளியே போயிடு..” என்று கூற, அவளது கையை காமினி, ஆங்காரமாக உதற, நிலை தடுமாறி கீழே விழுகப் போனவளை சட்டென ஓடி வந்து தாங்கிப் பிடித்துக் கொண்டான் ஹரிஷான்த். தலை சுற்றுவது போல் இருக்க, அவனது நெஞ்சில் கொடி போல் சாய்ந்து கொண்டவளை தன்னோடு சேர்த்து இறுக அணைத்து கொண்டவன், காமினியை நேருக்கு நேராக பார்க்க, காமினிக்குள் கிலி பிடித்தது. இருப்பினும் அதனை வெளிகாட்டாது, தன் தோல்வியை ஒத்துக்க மனமில்லாத காமினி,
“டார்லிங்..” என்றவாறு அவன் அருகில் வர முயற்சிக்க, தன் மார்பில் தலை சாய்த்து இருந்தவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன், பளீர் ரோஜாவென இருக்கும் அவளது இதழ்களை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான். அவளது இதழில் புதைந்தவனுக்கு இதற்கு இதே போன்ற மென்மையை சில வாரங்களுக்கு முன் உணர்ந்தது போல் இருக்க, எப்போதென யோசித்துக் கொண்டிருந்தவனின் கைகள், அவனையும் அறியாது அவளது உடலில் பயணம் செய்ய தொடங்கியது. அவளது பெண்மையின் மென்மை அவனை மேலும் முன்னேறத் தூண்ட, காமினி இருப்பதையே மறந்தவன், ஹாசினியின் முகம் எங்கும் தனது இதழின் தடத்தை பதித்தான். அவளது இடையை பிடித்து தூக்கியவன் உணவு மேஜையில் அமர வைத்து, அவளது அங்கங்களின் நீள அகலங்களை ஆராய, அதனை காண முடியாத காமினி கண்ணில் நீரோடு, அங்கிருந்து வெளியேறி சென்றிருந்தாள். ஆனால் அதை கூட கவனிக்க முடியாத ஹரிஷான்த், ஹாசினியின் அழகில் மூழ்கியிருக்க, அவனை தன்னிடம் இருந்து வலுக்கட்டாயமாக விலக்கினாள் ஹாசினி.
“காமினி போயாச்சு.. நீங்க இதுக்கு மேல நடிக்கணும்னு எந்த அவசியமும் இல்ல..” என்றவள் மேஜையை விட்டு தடுமாறி, மயங்கி கீழே விழுகப் போக, அவளை தன் கையில் ஏந்திக் கொண்டான் ஹரிஷான்த். வேகமாக தனது காரில் அவளை அள்ளிப் போட்டு ஓடியவனுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருப்பது தெரியாமல் போனது. அந்த அதிர்ச்சி என்னவாக இருக்குமோ?
Hasini pregnant 😊
Vera ena shock hasini pregnant…… Lovlyyyyyyyyyy epiiiiii ❤️❤️❤️❤️❤️❤️❤️
Nice
EwGWNqzrJsK
Ava pregnanta iruppa adhana
xFQRcUShJBXzA
qrJxAgnzfHaI
ltiSQGqBZdhajCbT