அத்தியாயம் 21
“ஏன் என்னாச்சு? எதுக்கு எல்லோரும் ஒருமாதிரி நிற்குறீங்க?”
“அது ஒன்னுமில்ல மச்சான்.. நம்ம ஆட் சூட்டிங் அரேஜ் பண்ணிருந்தோம்ல..”
“ஆமா.. அந்த வேலையை விட்டுட்டு இங்க என்னடா பண்றீங்க?”
“மாடல்ஸ் வர்ற வழில சின்ன ஆக்ஸிடென்ட்..”
“சோ?”
“இப்ப நீ தான் மச்சான்.. நம்ம கம்பெனியை காப்பாத்தணும்..”
“இடியட் மாதிரி பேசாதீங்கடா.. வேற மாடல்ஸ் ராமையா அரேஞ்ச் பண்ணுவோம்..”
“நாங்களும் காலைல இருந்து ட்ரை பண்ணிட்டு தான் இருக்கோம்.. பட், யாரும் கிடைக்கல மச்சி..”
“ப்ச்..”
“மச்சி யோசிக்காதடா.. நீ ம்ம்னு மட்டும் சொல்லுடா.. மீதியை நாங்க பார்த்துக்குறோம்..”
“சரி.. ஏதாவது பண்ணுங்க.. நான் வர்றேன்.. ஆமா.. அந்த லேடி கெட்டப் யார் போடப் போறா?”
“கைல வெண்ணெயை வைச்சுக்கிட்டு யாராவது நெய்கு அலைவாங்களா?”
“புரியல..”
“நம்ம விளானி தான்..”
“வாட்?”
“எஸ்.. இந்த கேம்ல நம்ம தமிழ்நாட்டு கற்கால முறைப்படி, புதையல் தேடி எடுக்கணும்.. சோ, அதுக்கு நீ ராஜா வேஷம் போடப் போற.. விளானி ராணி வேஷம் போடப் போறா.. நான், சஜன் அப்புறம் சிவ சூர்யா எல்லோரும் அரசவைல இருக்குற கேரக்டர்ஸ் போடப் போறோம்.. பட், நீங்க ரெண்டு பேரும் தான் மெயின் கேரக்டர்ஸ்..”
“இது விளானிக்கு தெரியுமா?”
“காலைல இன்ஃபார்ம் பண்ணிட்டேன்.. இந்நேரம் வந்துருப்பா.. நீ சீக்கிரம் மேக்கப் போட்டு ரெடியாகு.”
“ம்ம்.. ஓகே..” என்ற ஹர்ஷவர்தன் ராஜராஜ சோழனைப் போல் வேடமானிந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்க, மகாராணியைப் போல் ஒயிலாக நடந்து வந்தாள் விளானி. அதனைப் பார்த்த ஹர்ஷவர்தனின் கண்கள் பூவை மொய்க்கும் அவளது அழகை ரசிக்க, இருவரையும் பலவாறு நிற்க வைத்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
“நகுலா..”
“சஜூ..”
“எனக்கென்னவோ இது ஆட் சூட் மாதிரி தெரியல.. ப்ரீ வெட்டிக் சூட் மாதிரி தெரியுது.. உனக்கு?”
“எனக்கும் அதே ஃபீல் தான்.. ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ சம்திங் சம்திங்.. இருக்குதோன்னு தோணுது..” என்று நகுலனும் சஜனும் பேசிக் கொண்டிருக்க, உலகையே மறந்த நிலையில், ஒருவர் கண்களை மற்றொருவர் பார்த்தவாறு நின்று கொண்டிருப்பது அழகாக புகைப்படமாக்கப்பட்டது. புகைப்படங்கள் எடுத்து முடித்ததும் விளானியை தேடி வந்த நகுலன், அவளை உடை மாற்றி வரச் சொல்ல, விளானியும் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து உடை மாற்றத் தொடங்கினாள்.
“நாம எல்லோரும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்து எவ்வளவு நாளாச்சு?” என்று சஜன் கேட்க,
“அதுக்கு இப்ப என்ன பண்ணணும்குற?” என்று எரிந்து விழுந்தான் ஹர்ஷவர்தன்.
“இல்ல.. விளானியும் நம்ம கூட சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கிட்டு நல்லாருக்கும்ல?” என்ற சஜனை முறைத்துப் பார்த்தான் நகுலன்.
“நம்ம கேங்ல பொண்ணா? நோ.. நெவர்.. இதை நான் ஒத்துக்கமாட்டேன்..”
“ஏன்? கடைசி வரைக்கும் முரட்டு சிங்குளா இருந்து சாகப் போறியா?”
“ஆமா.. நான் மட்டுமில்ல.. நீங்களும் கடைசி வரைக்கும் முரட்டு சிங்குளா.. இருந்து என் கூடவே கடைசி வரைக்கும் இருக்கணும்..”
“யூ டூ டா.. யூ டூ.. வொய் மீ? நீ முரட்டு சிங்குளா இருக்குறதா இருந்தா இருடா.. அதுக்கு எதுக்கு எங்களை கூட்டுக்கு சேர்த்துக்குற?”
“ப்ச்.. அடடடா.. சண்டை போடாதீங்க டா.. இப்ப என்ன விளானிய கூட்டிட்டு வரணும்.. அவ்வளவு தான? நம்ம ஹர்ஷு போய் கூட்டிட்டு வருவான்..” என்ற சிவ சூர்யாவை மற்ற மூவரும் திரும்பிப் பார்க்க,
“துரோகி..” என்ற நகுலனின் தோளில் கைப்போட்டுக் கொண்ட சிவசூர்யா,
“பாட்டி.. நாளைக்கு இங்க வீட்டுக்கு வர்றாங்களாம்.. அதுனால நீங்க எல்லோரும் இன்னைக்கு நைட்டே கடையை காலி பண்ணியாகணுமாம்.. அப்பாவோட ஆர்டர்..” என்று கூற,
“அப்பாவே சொல்லிட்டாரா? அப்புறமென்ன நாங்க உன்னோட சென்னை வீட்டுக்கு சிஃப்ட்டாகிடுறோம்.. பாட்டி எப்ப போறாங்களோ?” என்ற நகுலனை,
“என்னது?” என்று பார்த்த ஹர்ஷவர்தனின் பார்வையில்,
“அதாவது, பாட்டி எப்ப ஊரை விட்டு போறாங்களோ.. அப்ப ஊட்டிக்கு வந்து ஜாயின்டாகிக்கிறேன்..” என்று மாற்ற,
“ஜாயின்டாகிக்குறேன் இல்ல.. ஜாயின்டாகிக்குறோம்.. என்னையும் உங்கக்கூட கூட்டிட்டு போங்கடா.. பாட்டிம்மா வந்தா.. வேலை சொல்லியே சாவடிச்சுடுவாங்க..” என்று சஜன் அலற, அங்கு வந்த டைரக்டரோ, இன்னும் சில புகைப்படங்கள் வழக்கமான உடையில் எடுக்க வேண்டுமென கூற, விளானியை அழைக்க அவளது அறைக்கு சென்றான் ஹர்ஷவர்தன். கதவை தட்டாது,
“விளா..” என்று திறந்தவனின் கண் முன்னே வெள்ளை பளிங்கு போன்ற அவளது பின்புறம் தெரிய, சட்டென அங்கிருந்த போர்வையால் தன்னை சுற்றிக் கொண்டாள் விளானி. சட்டென கதவை அடைத்து விட்டு வெளியே வந்து நின்று கொண்டவனின் கண் முன்னே மீண்டும் மீண்டும் அவன் கண்ட காட்சியே வந்து நிற்க, தெப்பமென அவனது உடல் வேர்த்து சிலிர்த்தது. அவன் சென்று சில மணி நேரத்தில் திரும்பி வராததால், அவர்களை அழைக்கவென வந்த நகுலன், வெளிறிப் போன முகத்துடன் நின்றிருந்த ஹர்ஷவர்தனை கண்டான்.
“டேய்.. இன்னுமா விளானி ரெடியாகல?” என்றவாறு அவளது அறைக்கதவை தட்டப் போனவனை தடுத்த ஹர்ஷவர்தன்,
“அவ ரெடியாக நேரமாகும்.. நீ வா நாம் போகலாம்..” என்று கூறி நகுலனை அங்கிருந்து இழுத்துச் செல்ல முயல,
“ஏன்.. முகத்துல அடிச்ச கோட்டிங் பத்தலையா?” என்று கேட்டவாறு அவனுடன் வந்தான் நகுலன். மெல்ல பூனை போல் வெளியே வந்த விளானி, ஹர்ஷவர்தனுடன் சேர்ந்து சில புகைப்படங்கள் எடுத்து முடித்ததும், அனைவருடன் ஒன்றாக சேர்ந்து சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டாள்.
“ஓகே விளானி.. இன்னைக்கு நீ ரொம்ப டையர்டா இருப்ப.. சோ, வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துக்கோ.. நைட் உங்க பாட்டி வேற வர்றாங்களாம்..” என்ற சஜன், கார் சாவியை கையில் எடுத்த ஹர்ஷவர்தனை பார்த்து,
“ஹர்ஷு.. நீ வீட்டுக்கு தானே போற.. அப்படியே விளானியையும் உன்கூட வீட்டுக்கு கூட்டிட்டு போயிடு..” என்று கூறி விட்டு, பதிலேதும் எதிர்பார்க்காது, மற்ற வேலைகளை கவனிக்க சென்று விட்டான். இருவரும் காரில் செல்ல, அங்கே மௌனமே ஆட்சி செய்தது. வீட்டிற்கு வந்தவர்கள் அவரவர் அறைக்குள் செல்ல,
“அவன் பார்த்துருப்பானா? இல்ல.. இல்ல.. பார்த்துருக்கமாட்டான்.. நான் அவனை திரும்பி பார்க்கும் போது, அவன் திரும்பி நின்னுட்டு இருந்தானே? கண்டிப்பா பார்த்திருக்க வாய்ப்பில்லை..” என்றவாறே கட்டிலில் அமர்ந்த விளானி, அங்கிருந்த கரடி பொம்மையை எடுத்து தன் மடியில் வைத்தவாறே,
“இல்ல.. பார்த்துருப்பான்.. இல்லேனா.. எதுக்கு திரும்பி நின்றுருப்பான்? இல்ல.. இல்ல.. கண்டிப்பா பார்த்துருப்பான்..” என்றவள் தன் தலையை பிடித்து கொள்ள, அவளது அறைக்கதவு தட்டப்பட்டது. கதவை திறந்தவளின் கண் முன்னே நின்றிருந்தான் ஹர்ஷவர்தன்.
“என்ன?”
“இன்னைக்கு நைட் பாட்டி வர்றாங்க..”
“தெரியும்..”
“நீ உன்னோட திங்க்ஸ் எல்லாத்தையும் என்னோட ரூம்க்கு மாத்தி வைச்சுடு.. பாட்டி பார்த்தா.. நாடே பார்த்த மாதிரி.. எல்லோருக்கும் நாம ரெண்டு பேரும் எலியும் பூனையுமா இருக்கோம்னு தம்பட்டம் அடிக்காத குறையா சொல்லிடுவாங்க.. அப்புறம் நம்ம மொத்த ஃபேமிலியும் இங்க வந்து நின்னுடு வாங்க..”
“ஓகே.. சிஃப்ட் பண்ணிடுறேன்..” என்றவள் கூற, அதனை கேட்டவன் அங்கிருந்து செல்வதற்காக திரும்பும் நிலையில்,
“க்கும்.. ஒன் நிமிட்..” என்றவள் அவனை அழைக்க, அப்படியே நின்றவனிடம்,
“காலைல நீ.. நீ.. எதுவும் பார்க்கல தானே?” என்று கேட்க,
“நான் ஒன்னும் கண்ணு தெரியாதவன் இல்லையே?!” என்று பதிலளித்து விட்டு அங்கிருந்து வேகமாக சென்றவனை பார்த்து உறைந்து போய் நின்றிருந்தாள் விளானி. சிறிது நேரத்தில் அவளது உடைமைகளை தூக்கிக் கொண்டு, அவனது அறைக்கதவை தட்ட, கதவை திறந்தவன், அவள் உள்ளே நுழைவதற்கான வழி விட்டு நின்று கொண்டான். உள்ளே நுழைந்தவள், அவனை ஏறெடுத்துப் பார்க்காது, தன் உடைமைகளை அடுக்கி வைக்கத் தொடங்கினாள். ஒரு புறமாக திரும்பி நின்று எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு, இன்று காலையில் பார்த்த காட்சி கண் முன்னே வந்து நிற்க, தனது ஜெர்க்கினை எடுத்து அணிந்து கொண்டவன், அங்கிருந்து வெளியேற, தன் உடைகளை அடுக்கி முடிந்தவள், தூக்கம் வராது அறையை விட்டு வெளியே வரும் நேரம் அவளைத் தேடி வந்தனர் நகுலன், சஜன் மற்றும் சிவசூர்யா.
“ஒரு குட் நியூஸ்..” என்ற நகுலன், விளானியை பார்த்து,
“உங்க பாட்டி இன்னைக்கு வரலையாம்.. திருப்பதி போயிட்டு, அடுத்த வாரம் தான் வர்றாங்களாம்..” என்று கூற,
“ஓ..” என்றவள், அங்கிருந்த சோஃபாவில் அமர,
“ஹர்ஷா எங்க?” என்றவாறே அங்கு வந்தான் சிவ சூர்யா.
“ப்ச்.. எனக்கு எப்படி தெரியும்? வெளில எங்கேயாவது போயிருப்பான்.. அவன் என்ன சின்னக்குழந்தையா எங்கேயாவது தொலைஞ்சு போக?”
“அப்போ.. நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுருக்கீங்க?”
“ம்ம்.. ஆமா.. ஆமா.. உனக்கு எல்லாம் தெரியும் பாரு?”
“எனக்கு எல்லாம் தெரியும்.. நீ தான்.. நீ தான் அவனை துரத்தி விட்டுருக்க.. வெளிய மழை வேற வர்ற மாதிரி இருக்கு.. பாவம்.. எங்க போய் மாட்டிருப்பானோ?”
“ப்ச்.. இப்ப எதுக்கு புலம்புற? அவ்வளவு அக்கறை இருந்தா.. குடை எடுத்துட்டு நீயே போயேன்..”
“நான்.. நானா.. டேய் சஜன் நீ போடா.. இந்த ஊட்டில குளிர்ல அவனுக்கு ஜன்னி ஏதாவது வந்தேடப் போகுது.. இந்த லோகத்துல என்னைத் தவிர யாருக்கும் பொறுப்பில்ல.. யாருக்கும் கருணையில்ல..”
“ஆமா.. இவர் ஒருத்தருக்கு தான் எல்லாம் இருக்கு.. எங்களுக்கெல்லாம் இல்லப்பாரு?”
“நீ ஒன்னும் போக தேவையில்லை.. உன்கிட்ட போய் சொன்னேன் பாரு.. என்னை சொல்லணும்.. இதுவே, ப்ரியாவா இருந்திருந்தா.. உடனே ஹர்ஷுவை தேடி யோயிருப்பா.. நான் அவக்கிட்டேயே சொல்லிக்குறேன்..” என்ற நகுலன் தனது கைபேசியை எடுத்து, ப்ரியாவிற்கு அழைக்கப் போக, அதனை தடுத்த விளானி,
“மூணு ஜென்ஸ் இருந்தும் லேடீஸை இந்த நைட் மழைல அனுப்புறீங்க.. இது உங்களுக்கே நியாயமா படுதா?”
“இன்னும் கொஞ்ச நேரத்துல எங்களுக்கு க்ளைண்ட் மீட்டிங் இருக்கு.. அவன் இல்லாம நாங்க சமாளிக்குறோம்.. நீ சீக்கிரம் அவனை கூட்டிட்டு வந்துடு..” என்று சஜன் கூற, குடையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் விளானி. கும்மிருட்டும் விட்டு விட்டு தூவும் தூவானமும் பயமுறுத்த, ஹர்ஷவர்தனை தேடிச் சென்றாள் விளானி. ஆள் அரவமற்ற ரோட்டில் சிவப்பு நிற குடையை பிடித்தவாறு நடந்து வந்தவளை பின் தொடர்ந்தன இரு கண்கள். யாரவன்? விளானிக்கு என்னவாகும்?
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Intresting sis
👌👌👌👌👌👌👌👌👌
WbjaEUxiKR
UEoqVcCxIiPGMj