அத்தியாயம் 22
ரோட்டின் இருபுறம் இருக்கும் மரத்தினையும் மண்வாசனையையும் முகர்ந்தபடி சென்று கொண்டிருந்தவளின் முன்னே கத்தியோடு ஒருவன் வந்து குதிக்க, துடிக்கும் இதயம் தொண்டை குழி வரை வந்து போனது.
“ரவுடி சார்.. ரவுடி சார்.. இப்ப எதுக்கு கத்தியோட வழி மறிக்குறீங்க? நீங்க எதிர்பார்க்குற அளவுக்கு நானெல்லாம் ஒர்த்தில்ல சார்.. என்னைய விட்டுடுங்களேன்..”
“பார்க்க பளபளன்னு பெரிய இடத்து பொண்ணு மாதிரி இருக்க.. காசில்லேங்குற.. ஒழுங்கா பர்சை எடுக்குறியா? இல்ல.. உன் உயிரை எடுக்கவா?”
“பர்சா? எந்த காலத்து திருடன் சார் நீங்க? இப்ப எல்லாம் கலர் கலரா க்ரிட் கார்ட்.. டெபிட் கார்டுனு வைச்சுக்குறாங்க.. யார் சார் பர்சில எல்லாம் பணம் எடுத்துட்டு வர்றா? இந்த கத்தியை கொஞ்சம் உள்ள வைச்சுட்டு நார்மலா பேசலாமே?!”
“கத்தியை எடுத்தேனா.. நீ கத்துவ..”
“இல்ல.. மதர் பிராமிஸ்.. கத்தமாட்டேன்.. ப்ளீஸ் அண்ணா..”
“அப்போ கத்தக் கூடாது..”
“ம்ஹும்.. திருடன் அண்ணா.. நீங்க இவ்வளவு நல்லவரா இருக்கீங்களே.. எதுக்காக திருடுறீங்க?”
“அதெல்லாம் உனக்கெதுக்கு? இல்ல.. அர்த்த ராத்திரியில வழிபறிக்குறீங்களே.. போலீஸ்ல மாட்டுனா.. டின்னு கட்டிடுவாங்களே.. அப்போ உங்க குடும்பத்தை யார் பார்ப்பாங்க?” என்று விளானி கேட்டதும், திருட வந்த திருடனின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“திருடன் அண்ணா.. சாப்பிட்டீங்களா? பசிக்குதா? எதுக்கு அழுகுறீங்க?”
“இதுவரைக்கும் என்கிட்ட யாருமே இப்படி கேட்டதில்ல.. நீ மட்டும் தான் தங்கச்சி.. என்கிட்ட இவ்வளவு பாசமா பேசுற..”
“ஓ! உங்களுக்கு சிஸ்டர் இருக்காங்களா?”
“இருந்தாம்மா.. ஒரு தருதலையை இழுத்துட்டு ஓடிட்டா.. அவளை நான் எவ்வளவு நல்லா பார்த்துக்கிட்டேன் தெரியுமா?”
“தங்கக்கூண்டிலேயே வைச்சு தடவி கொடுத்தாலும் கிளிக்கு றெக்கை முறைச்சா பறந்து போயிடும்.. இதுக்கு ஏன் கவலைப்படுறீங்க?”
“ஆமா.. ஆமா.. கிளிக்கு றெக்கை முளைச்சுடுச்சு ஆத்தை விட்டு பறந்து போயிடுச்சு..”
“திருடன் அண்ணா.. நீ எவ்வளவு குடிச்சீங்க?”
“என்ன?”
“இவ்வளவு ஓப்பனா பேசுறீங்க.. அதான் எத்தனை பாட்டில் உள்ள போட்டீங்கன்னு கேட்டேன்..”
“ஒரு பாட்டில்ல பாதி தான் போட்டேன்.. அதுவும் ப்ரெண்ட் வாங்கிக் கொடுத்தான்.. அது எனக்கு பத்தலை.. என்ன செய்ய கைல காசில்ல.. அதான் வழிப்பயில இறங்கிட்டேன்..”
“அப்போ.. நீங்க குடிக்குற அளவுக்கு காசு கிடைச்சா போதும் இல்ல?”
“உன்கிட்ட இருக்கா?”
“என்கிட்ட இல்ல.. ஒரு நல்லவனை தேடிட்டு இருக்கேன்.. அவன் மட்டும் கிடைச்சுட்டான்.. உங்களுக்கு ஒரு பாட்டில் இல்ல.. ரெண்டு பாட்டிலுக்கு காசு, அவன்கிட்ட இருந்து வாங்கித் தர்றேன்..”
“நிஜமா?”
“கொடுத்த வாக்கையும் கொடுத்த பொருளையும் திரும்பி வாங்குற பழக்கம் எனக்கில்ல..”
“அப்படியே தலைவர் மாதிரியே பேசுறியோமா?! தலைவர் வசனத்தை பேசுன நீ கண்டிப்பா ஏமாத்த மாட்ட.. வா தங்கச்சி.. அண்ணே நான் இருக்கேன்.. அந்த நல்லவனை எப்படியும் தேடி கண்டுபிடிச்சுடலாம்..” என்றவன் அவளோடு சேர்ந்து தேடத் தொடங்க, சிறிது துரத்தில் இருக்கும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து மாணவர்கள் கூச்சலிட்டு, விளையாடும் சத்தம் கேட்க, அவ்விடத்தை நோக்கி நடந்தாள் விளானி.
“இந்த ஸ்கூல்லயா அந்த நல்லவன் இருப்பான்?”
“தெரியல.. பார்க்கலாம்.. வா..” என்றவள் சுவற்றில் தாவ, அதன் உயரம் போதாததால், சுற்றும் முற்றும் பார்த்தவள், அங்கு நின்று கொண்டிருந்த வழிப்பறி திருடனை அழைத்து, கீழே மண்டியிட சொல்ல, அவனும் மண்டியிட, சுவற்றில் தாவி ஏறி, அப்புறம் குதித்தவள்,
“திருடன் அண்ணா.. அந்த குடையை தூக்கிப் போடுங்க..” என்று கத்த,
“உன் கூட சேர்ந்ததுக்கு இந்த குடை தான் மிச்சம்.. இதை அடகு வைச்சு நான் கட்டிங் அடிச்சுக்குறேன்..” என்றவன் பதிலுக்கு கத்த,
“யோவ் அண்ணா.. குடையை கொடுத்துட்டு போடா.. அடேய்.. திருடன் அண்ணா.. ஹலோ.. காது கேட்கலையா?” என்றவள் கத்த, அப்புறமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
“துரோகி.. திருடன் அண்ணா..” என்று முணுமுணுத்தவாறே, சிறிது தூரம் நடக்க, அங்கிருந்த பள்ளி மைதானத்தில் சிறுவர்களுடன் சேர்ந்து, மழையில் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்த பார்த்தவள்,
“இவனை?” என்று பல்லைக் கடித்தவாறே, அவன் முன்னே சென்று நின்றாள்.
“ஏன்டா தடிமாடு.. ஹல்க்.. பஃபல்லோ.. போனது தான் போன.. அந்த மூணு அரை வேக்காடுகளையும் உன் கூடவே கூட்டிட்டு வந்துருக்கலாம்ல? இப்படி என்னைய இருட்டுல தனியா அலைய விட்டுட்டீல.. மவனே.. இருடா.. உன்னைய என்ன பண்ணுறேன்னு பாரு..” என்றவள் சுற்றும் முற்றும் எதையோ தேட,
“என்ன தேடுற?” என்றவன் அவளிடம் இருந்து தப்பிக்க வழி தேட,
“கிடைச்சுருச்சு..” என்றவள் அங்கிருந்த ஹாக்கி ஸ்டிக்கை எடுத்துக் கொண்டு அவனை விரட்ட,
“இங்கப்பாரு.. நானா உன்னைய தேடச் சொல்லவே இல்ல.. நீயா அலைஞ்சேனா அதுக்கு நான் பொறுப்பில்லை..” என்றவன் அவள் கைக்கு அகப்படாது அங்கும் இங்கும் ஓட, சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பத்து.. பதிமூன்று வயதுள்ள சிறுவர்கள் கைதட்டி ஆர்பறித்தனர்.
“டேய் தடியா.. சொன்னா கேளு.. ஓடாத.. இன்னைக்கு என் கைல தான்டா உனக்கு பாலு.. அடேய்.. ஓடுனா மட்டும் உன்னைய விட்டுடு வேணா?” என்று அவன் பின்னை ஓடியவள், அங்கே கை தட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்களிடம்,
“இப்படி ஓரமா நின்று வேடிக்கை பார்க்காம.. அவனை பிடிக்க ஹெல்ப் பண்ணா.. ஆளுக்கு ஒரு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித் தருவேன்.. “ என்றவள் கூற, உற்சாகமானவர்கள் அவனை பிடிக்க, அவளுடன் சேர்ந்து ஓடினர்.
“வேணாம்.. மழை பெய்யுது.. வழுக்கி கிழுக்கி எங்கேயாவது விழுந்து வைச்சேனா.. மாவு கட்டு தான்.. நான் விழுந்தால் கூட அவ்வளவா வலிக்காது, ஆனா உன்னைய பத்தி யோசிச்சுக்கோ..”
“புத்தூர் போய் மாவு கட்டு போட்டாலும் பரவாயில்ல.. உன் மண்டைய உடைக்காம போக மாட்டேன்.. உன்னால அந்த திருடன் அண்ணே.. ஒரு கட்டிங்குக்காக கழுத்துல கத்தி வைச்சு கடத்தப் பார்த்தான் தெரியுமா? ஊர் பேர் தெரியாதவன் கிட்ட எல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருந்துச்சு.. நில்லுடா.. தடியா..”
“அஞ்சு ரூபாய்க்கு பால்கோவா கொடுத்திருந்தா நீயே அவன் கூட போயிருப்ப.. உன்னைய போய் அம்பது ரூபாய் கத்தியை வைச்சு மிரட்டிருக்கானே.. பாவம் அவனுக்கு தெரியல.. உன்னைய கடத்திட்டு போனா.. அவனுக்கு தான் சேதாரம்னு..” என்று கத்திக் கொண்டே இங்கும் அங்கும் ஓடியவன்,
“உனக்கு ஒன்னும் ஆகலைல.. அவன் இப்பவும் உன் பின்னாடி வந்துருக்கானா?” என்றவன் மூச்சு வாங்கியபடியே கேட்டு, அவளது உடல் முழுவதும் ஆராய,
“எனக்கு ஒன்னுமில்ல.. என்னோட ரெட் கலர் குடையை தான் கொண்டு போயிட்டான்..” என்றவளும் மூச்சு வாங்கியபடியே பதிலளிக்க, அவளுடன் ஓடி வந்த சிறுவர்களோ, ஓடி வந்த வேகத்தில் அவள் மீது விழுந்து, அவளை அவன் மீது தள்ளி விட, இருவரும் ஒரு சேர சேற்றில் விழுந்தனர். பஞ்சு பொதி போல் தன் மெல் விழுந்தவளை, தரையில் விழாமல் தாங்கிப் பிடித்தான் ஹர்ஷவர்தன்.
“அய்யா அக்கா.. அண்ணாவை பிடிச்சிட்டாங்க.. அக்கா அண்ணாவை பிடிச்சிட்டாங்க..” என்று குழந்தைகள் கத்த,
“உங்க அக்கா.. எப்பவோ என்னைய பிடிச்சுட்டா.. அது இன்னும் அவளுக்கு தான் புரிய மாட்டேங்குது..” என்றவன் முணுமுணுக்க,
“ஹஹ.. என்ன?” என்று கேட்டவளுக்கு ஒன்றுமில்லையென தலையாட்டினான் ஹர்ஷவர்தன். மழை மேலும் வழுக்க, இடி மின்னலுக்கு பயந்து, அங்கு போடப்பட்டிருந்த செட்டிற்குள் போய் நின்று கொண்டனர். சிறிது நேரத்தில் கரண்ட் நின்று போகவே, அறுவயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் வந்து, அச்சிறுவர்களை அழைத்துச் செல்ல, இடி மின்னலுக்கு பயந்து விளானியோ ஹர்ஷவர்தனின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள். மழை மேலும் வழுக்க, தன் மீது படுத்திருந்தவளை பார்த்தவன்,
“வினி.. வினி.. எந்திரி.. ஒரு மூட்டை பருத்தியும் புண்ணாக்கும் மேல சாஞ்சு இருக்குற மாதிரி.. அவ்வளவு கணமா இருக்க.. நீ எந்திரிச்சாத் தான் நான் எந்திரிக்க முடியும்..” என்றவன் அவளை தன் மீதிருந்து விலக்கி எழுந்து கொள்ள, அவனது சட்டையை பிடித்து இழுத்தவள்,
“ஹர்ஷு.. பயமாயிருக்குடா.. இருட்டா வேற இருக்கு.. என்னைய விட்டுட்டுப் போயிடாத..” என்று அழுகுரலில் பேச, அவளை இழுத்து தன் கைகளுக்குள் கொண்டு வந்தவன், தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த லைட்டரை எடுத்தான். அங்கு ஓரமாக இருக்கும் பெட்டிக்குள் வந்தவன், தான் ஏற்கனவே அங்கே கலட்டி வைத்திருந்த ஜெர்க்கினை எடுத்து, அவள் மீது போர்த்தி விட்டான். தன் உள்ளங்கைகளை ஒன்றாக குவித்து தேய்த்துக் கொண்டே,
“மழை எப்ப விடும் ஹர்ஷு?” என்று கேட்டவை நோக்கி, தன் நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை நீட்டினான்.
“இதுல ஏதாவது ஒரு விரலை தொடேன்..”
“எதுக்கு?”
“தொடு சொல்லு..” என்றவன் மீண்டும் தன் விரல்களை அவள் முன் நீட்ட, அதில் ஆள்காட்டி விரலை அவள் தொட்டுவிட,
“ஹுகும்.. இப்போதைக்கு மழை விடாது..” என்றவன் கூற,
“என்ன கிண்டலா?” என்று முறைத்தாள் விளானி.
“பின்ன நான் என்ன வானிலை ஆய்வாளரா? கணிச்சு சொல்ல.. அவராலேயே சரியா சொல்ல முடியாது.. நீ என்னைய போய் கேட்குற?”
“அதானே.. மூளையிருந்தா பதில் சொல்லுவேல்ல? மூளையில்லாவதவன் கிட்ட கேட்டது என் தப்பு தான்..”
“ஏய்.. இப்படியே பேசுன.. அப்புறம் உன்னைய மட்டும் தனியா விட்டுட்டு நான் போயிடுவேன்..” என்றவன் அங்கிருந்து நகர,
“வேணாம் போகாத..” என்றவள் அவனைப் பிடித்து இழுத்த வேகத்தில், அவனது இதழ்கள் அவளது கன்னத்தில் பதிந்தன. குளிர்ந்த காற்றுக்கு இதமாக அவனது தேகம், அவளுக்கு மிதமான சூட்டை கொடுக்க, அவனுக்கு வாகாக தன் கன்னத்தை கட்டியபடி அமர்ந்திருந்தாள் விளானி. கன்னத்தில் பதிந்த அவனது இதழ்கள் மெல்ல அவளது நெற்றியில் அழுத்தமாக பதிய, பெண்ணவளின் இருதயமோ, வேகமாக அடிக்கத் தொடங்கியது. அவனது கைகள் அவளது இடையை சுற்றி வளைக்க, அவனோடு மேலும் ஒன்றினாள். அவளது நெற்றியில் இருந்து கூரான மூக்கிற்கு இறங்கியவனின் இதழ்கள், அவ்விடத்தில் முட்டி நிற்க, அவனது நாசியில் இருந்து வரும் சுவாசம் அவளது கன்னத்தில் மோதியது.
“ஹர்ஷு..” என்றழைத்தவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை. மீண்டும் தன் சக்தியை எல்லாம் திரட்டியவள்,
“ஹர்ஷு..” என்றவனை அழைக்க, இம்முறை, “ ம்ம்..” என்று இதழ் பிரியாது பதிலளிப்பது அவன் முறையாயிற்று.
“அந்த குழந்தைங்க? அவங்க வீட்டுக்கு போயிருப்பாங்களா?” என்றவள் மெல்ல கிசுகிசுக்க,
“அவங்க என்னோட ட்ரெஸ்ட்ல படிக்குற பசங்க.. நான் தான் அவங்களை படிக்க வைக்குறேன்.. அவங்களை பார்த்துக்குறேன்.. மாசத்துக்கு ஒரு தடவை அவங்கக்கூட இப்படி விளையாட வருவேன்..” என்றவன் அவளது இதழின் மேல் தன் இதழால் கோலமிட்டமிட்ட, கூச்சத்தில் நெளிந்தவளை தூக்கி தன் மடி மீது அமர வைத்தவன்,
“வினி.. ஐ லவ் யூ.. டு யூ லவ் மீ?” என்று கேட்க, அவளோ பதலளிக்காது, அவனை நெட்டித் தள்ளிவிட்டு குதித்திறங்கினாள். அவளது வெண்டைப்பிஞ்சு விரல்களை பிடித்த தடுத்து நிறுத்தி தன் நெஞ்சோடு அணைத்தவன்,
“பதில் சொல்ல மாட்டியா?” என்று கேட்க, அதே நேரத்தில் சரியாக கரெண்ட்டும் வந்து விடவே, வெட்கத்தில் முகம் முழுவதும் செந்தாமரையென சிவந்திருந்தவள்,
“அது நீ நடந்துக்குறதை பொறுத்து இருக்கு..” என்று கூறிவிட்டு, அங்கிருந்த சுவற்றை நோக்கி அவள் ஓட, அவளை இழுத்துப் பிடித்து தன் கைகளில் ஏந்திக் கொண்டவன்,
“எப்பப் பார்த்தாலும் குறுக்கு வழி தான்.. நேர் வழில போறதை பத்தி யோசிக்கு
றதே இல்ல?!” என்றவன் அவளை தன் கைகளில் ஏந்தியபடியே வீட்டை நோக்கி நடக்கலானான். தன் வெட்கத்தை உடைத்து, தன் மணவாளனை சேர்வாளா விளானி?
Nice
👌👌👌👌👌👌👌👌👌
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤣🤣🤣🤣 super epiiii waiting for nxt epiii quickly…….
btVlgvyqMZaPLG
Super and intresting sis 💞
AFZumYrEz
fCyoxlerGmYAL
LWqMVzSUmCJZwu
EXsWYeibaMKqLFS
wqfDZmSgHuWFkPAX
zTOIBSfqGEH
BPtusYbEGOXvCmQ
etiWjVZUQmJ