அத்தியாயம் 23
“கங்க்ராஷுலேஷன்.. நீங்க அப்பாவாகப் போறீங்க..”
“வாட்?”
“எஸ்.. மிஸ்டர் ஹரிஷான்த்.. உங்க வொய்ஃப் ஹாசினி ப்ரெக்னன்ட்டா இருக்காங்க.. ட்டூ வீக்ஸ்..” என்றவர் கூறியதும் ஹரிஷான்த்திற்கு ஒன்றும் புரியவில்லை. அப்படியென்றால் அன்று நடந்த அத்தனையும் கனவல்ல.. ஏதோ பிரமையில் இருந்தவனின் முன் கையை ஆட்டிய மருத்துவர்,
“ஹலோ.. என்னாச்சு? மிஸ்டர். ஹரிஷான்த்..”
“ஹஹ.. டாக்டர்?”
“என்னாச்சு? ஏன் இவ்வளோ ஷாக்கிங்?”
“நோ.. டாக்டர்.. சடனா.. நாங்க இதை எக்ஸ்பெட் பண்ணல.. அதான்.. ஒரு சின்ன ஷாக்.. ஹவ் இஸ் ஷி டாக்டர்?”
“ஷி இஸ் ஃபைன்.. ரொம்ப வீக்கா இருக்காங்க.. ஹிமோக்ளோபின் லெவல் ரொம்ப கம்மியா இருக்கு.. ஸ்கேன் பண்ணி பார்த்தப்போ.. பேபி இஸ் ஃபைன்.. பட், அவங்க இப்படி அனிமிக்கா இருந்தாங்கன்னா.. டெலிவரி டைம்ல ரொம்ப கஷ்டமா போயிடும்..”
“அவளுக்கு எந்த மாதிரி சாப்பாடு கொடுக்கணும்?”
“ப்ரஷான ப்ரூட்.. வெஜிடபிள் சூப்.. அப்புறம் நிறைய தண்ணீர் குடிக்க சொல்லுங்க.. வாமிட் சென்ஸ் அதிகமா இருக்கு.. அவங்க வேணாம்னு சொன்னாலும் சாப்பிட வைங்க.. வாந்தி எடுத்தாலும் பரவாயில்ல.. இன்னும் ரெண்டு மாசத்துக்கு கவனமா பார்த்துக்கணும்.. டேட்ஸ் நிறைய கொடுங்க.. ஒன்னும் வொர்ரி பண்ணிக்காதீங்க.. எவ்ரிதிங் நார்மல்.. இப்போ அவங்களுக்கு ட்ரிப்ஸ் போட்டுருக்கோம்.. கொஞ்சம் மயக்கமா இருக்காங்க.. மயக்கம் தெளிஞ்சதும் கூட்டிட்டு போங்க..” என்றவர் கூற, ரிப்போர்ட் வாங்கிக் கொண்டு வெளியே வந்தவனின் மனம் படபடத்தது. தான் நேசிக்கும் ஒருத்தியின் வயிற்றில் தன் உயிர்.. என்னது ஹரிஷான்திற்கு ஹாசினி மேல் காதலா? ஆம்.. என்று அவன் அவளை பள்ளியில் முதல்முறையாக பார்த்தானோ, அப்போதிலிருந்து அவள் மேல் உண்டான ஈர்ப்பு, அவள் தன்னையே சுற்றி சுற்றி வரும் போது காதலாக மலர்ந்தது. எதிர்பாராத விதமாக காமினியின் சூழ்ச்சியில் சிக்கிக் கொண்டவனுக்கு அதில் இருந்து வெளியே வர முடியவில்லை. எதிர்பாராத விதமாக ஒரு பார்ட்டியில் ஹரிஷான்த்தை பார்த்தவள், அவன் குடி போதையில் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக ஏமாற்ற, அதை அவனும் நம்பி அவளை திருமணம் செய்து கொள்ள தயாராக, கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் அவள் பற்றிய தகவல்களை சேகரித்தவன், அவளை சந்தித்து அவள் செய்த செயலை போலீஸில் ஆதாரத்துடன் நிரூபிக்க இருப்பதாக மிரட்ட, பயந்து போன காமினி அங்கிருந்து ஓட, திருமணத்திற்கு முதல் நாள் தான் தனக்கு காமினியை பற்றிய உண்மை தெரிந்ததாக காட்டி விட்டு, அதை காரணமாக வைத்து ஹாசினியை திருமணம் செய்ய திட்டமிட்டவனுக்கு, எதிர்பாராத விதமான அதிர்ச்சியை கொடுத்தாள் ஹாசினி. ஹர்ஷவர்தனின் உதவியோடு காஃபியில் மயக்க மருந்து கொடுத்தவள், அவனுடன் ஒரே படுக்கையில் படுத்துக் கொண்டு, அவன் தன்னிடம் தவறாக கொண்டதாக அனைவர் முன்னிலையிலும் கூற, அவள் மீது தாங்காத கோபம் வந்தது. அந்த கோபத்தில் தான் அவளை பயமுறுத்தவென போலியாக டிவொர்ஸ் நோட்டீஸ் ஒன்றை தயார் செய்து வைத்தான். ஆனால், திருமணத்திற்கு பின் தன்னையே சுற்றி சுற்றி வரும் மனைவியை பார்க்கும் போது, அவனது கோபம் காணாமல் போனது. குடி போதையில் அவளுடன் இணைந்தது கனவு போல் இருக்க, அடுத்த நாள் காலையில் அவளை எழுந்து தேட, அங்கு அவளில்லை. தனது தந்தையின் மூலமாக அவளிருக்கும் இடத்தை அறிந்து கொண்டவனுக்கு அவள் மீது மீண்டும் கோபம் தலை தூக்கியது. அவளாக வருவது போல் தெரியவில்லை என்று நினைத்தவன், தன் தந்தையை காரணமாக வைத்து ஹாசினியை அழைத்து வந்தான். தன்னிடம் சொல்லாமல் வந்த கோபத்தில் டிவொர்ஸ் கொடுப்பதாக கூறினானே தவிர, அவளை டிவொர்ஸ் செய்யவென்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. டிவொர்ஸ் கொடுப்பதாக கூறினால், எதிர்த்து பேசாது, சரியென்று கூறுபவளை பார்க்கும் போது இன்னும் அதிகமாக கோபம் வந்தது. தான் மிகவும் மதிக்கும் அர்ஜுனிடம் கூட, எதிர்த்து பேசினான். அவள் மீதிருக்கும் கோபத்தை தணிக்கவும் முடியாது, காதலை வெளிப்படுத்தவும் முடியாது அல்லாடியவன், பர்சனல் செகரட்டரியாக வைத்துக் கொண்டான். அப்போதும் அவள் தன்னுடன் இருப்பதை விட, அவளது நண்பர்களுடன் இருக்கும் நேரம் அதிகமாக இருக்கவே, காமினியின் பெயரைச் சொல்லி தன்னுடனே இருக்குமாறு பார்த்துக் கொண்டான். என்றோ ஓர்நாள் விளையாட்டாக தயாரித்த டிவொர்ஸ் பத்திரம் தற்செயலாக அவளது கண்ணில் பட்டதும், வீட்டை விட்டு செல்வாள் என்று எதிர்பாராதவன், அவளை எப்படி மீண்டும் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வருவது என்று யோசித்து கொண்டிருக்கும் நேரத்தில் காமினி வீட்டிற்குள் வந்ததை அவனே சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் தற்செயலாக அவனறியாது வீட்டிற்கு வந்து, லன்ச் பேக்கை வைத்து விட்டு செல்லும் ஹாசினியை பார்த்ததும், சத்தமாக பேசி காமினி வீட்டிற்குள் வந்ததை தெரியப்படுத்தினான். அவன் நினைத்தது போலவே, வீட்டு வாசலோடு போக நினைத்தவள், உள்ளே நுழைந்து, காமினியோடு சண்டையிட்டு அவளை துரத்த, அவளை தூக்கி வைத்து கொஞ்ச தோன்றிய உணர்வு, அவள் மீண்டும் கிளம்ப ஏமாற்றமாக மாறியது. திடீரென தனக்கு சுபச் செய்தி கிடைக்குமென அவன் கனவிலும் நினைக்கவில்லை. தான் அப்பாவாகிவிட்ட சந்தோஷத்தில் ஹாசினியைத் தேடி சென்றவன், அங்கே மயக்கமாய் இருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டு நிமிர, மெல்ல கண் திறந்தாள் ஹாசினி.
“கங்கிராட்ஸ்.. நீ அம்மாவாக போற.. நான் அப்பாவாக போறேன்..” என்றவன் கூறியதும், ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்தவள், சிறு புன்னகை ஒன்றை உதிர்த்தவள்,
“தாங்க்ஸ்.. பட், இது என்னோட பேபி.. உங்களுக்கும் இந்த பேபிக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..” என்றவளை புருவம் சுருக்கி பார்த்தான் ஹரிஷான்த்.
“சார்.. நீங்க என்னோட பாஸ்.. உங்களுக்கும் எனக்கும் என்ன சார் சம்பந்தம்? காமினியோட டார்ச்சர்ல இருந்து நீங்க தப்பிக்குறதுக்கு நான் ஹெல்ப் பண்ணேன்.. அவ்வளவு தான்.. மத்தபடி நீங்க யாரோ.. நான் யாரோ.. நீங்க கொடுத்த டிவொர்ஸ் நோட்டீஸ்ல நான் சைன் பண்ணி அனுப்பிடுறேன்..”
“நான் கொடுத்த டிவொர்ஸ் நோட்டீஸ்? ம்ம்.. அப்போ.. நீ இன்னும் சைன் பண்ணல?”
“கொஞ்சம் பிசியா இருந்துட்டேன்.. அதான் சைன் பண்ண நேரமில்ல.. நான் பண்ணி.. கோர்ட்ல ப்ரோட்யூஸ் பண்ணிடுறேன்..”
“ஓ!” என்று புருவங்கள் உயர்த்தி அவன் கூற, அவனை குழப்பமாக பார்த்தாள் ஹாசினி. அதன் பின்னர் இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும், அவளுடனேயே அமர்ந்திருந்தான். சிறிது நேரத்தில் மருத்துவர் உள்ளே நுழைய அவரைப் பார்த்த ஹாசினி,
“டாக்டர் பேபிக்கு ஒன்னுமில்லையே?!” என்று கேட்க,
“ஏன்? நாள் தள்ளி போனது உங்களுக்கு தெரியாதா?” என்று திருப்பி அவளை கேள்வி கேட்க,
“ஒரு தடவைல எப்படி?” என்றவள் சட்டென நிறுத்தினாள். அதனை கவனித்த ஹரிஷான்தோ,
“இல்ல.. டாக்டர்.. நான்.. என் மேல தப்பு.. அவளை நான் ஒழுங்கா கவனிச்சுக்காம விட்டுட்டேன்..” என்று கூற,
“இப்ப இருக்குற யங்ஸ்டர்ஸ்கு வேலை தான் முக்கியமா இருக்கு.. உடம்பை கவனிச்சுக்குறதே இல்ல.. நீங்க ஒன்னும் சின்ன குழந்தையில்ல.. இன்னமும் யாராவது ஒருத்தர், உங்களை கவனிச்சுக்க.. நீங்க ஒரு குழந்தைக்கு அம்மா அப்பாவாகப் போறீங்க.. கவனமா இருக்கணும்..” என்றவர் மருந்து மாத்திரைகளை அளித்து, அவளை டிஸ்சார்ஜ் செய்ய, அனைத்தையும் வாங்கிக் கொண்டு அவளருகே வந்தவனின் கைபேசி சிணுங்க, அதனை எடுத்து பார்த்தவனுக்கு கோபம் தலைக்கேறியது. அவள் முன்னே கைபேசியை காட்டி,
“என்ன இது?” என்றவன் கேட்க,
“அமௌண்ட்.. எனக்காக நீங்க எதுவும் ஃப்ரீயா பண்ண வேணாம்..” என்றவளின் போனை பறித்து தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டவன், அவளை அள்ளி தன் தோளில் மாலையாக போட்டுக் கொண்டு, கார் பார்க்கிங் பகுதிக்கு வந்தான்.
“விடுங்க.. விடுங்க.. என்னை இறக்கி விடுங்க அஅஅ..” என்று கத்தியவளை தனது காருக்குள் தள்ளியவன், தானும் அதில் ஏறி அமர்ந்து கொண்டான். தன் கைபேசியை எடுத்து, சிந்துவிற்கு அழைத்தவன், அவளது உடைமைகளை எடுத்து வருமாறு கூற, அவனை முறைத்துப் பார்த்தாள் ஹாசினி.
“இப்போ.. வண்டியை நிறுத்தப் போறீங்களா? இல்லையா?”
“முடியாது.. ஒழுங்கா கத்தாம வா..”
“ஏது நான் கத்தாம வரணுமா? எதுக்கு? எதுக்குங்குறேன்? நேத்து வரைக்கும் நான் புடிக்காத பொண்டாட்டி.. இப்ழ பிள்ளை வந்ததும் அக்கரை அப்படியே வலியுதோ? வண்டியை நிறுத்துங்க.. நிறுத்துங்கன்னு சொல்றேன்ல?!” என்றவள் கத்த அவள் முன்னே தண்ணீர் பாட்டிலை நீட்டினான் ஹரிஷான்த்.
“ரொம்ப டென்ஷனா இருக்க.. தண்ணீ குடி.. சரியாப் போயிடும்..” என்றவன் காரை சாலையோரமாக நிறுத்த, கதவை திறக்க முயன்றாள் ஹாசினி. ஆனால் அவளது முயற்சி தோல்வியை தழுவ, அவனை கோபமாக பார்த்தவள்,
“கதவை திறந்து விடுங்க..” என்று கூற, அவளை கூர்ந்து பார்த்தவாறே,
“இனிமே நீ என் கூட தான் இருக்கப் போற.. உன்னையே டிவொர்ஸ் பண்ற எண்ணமெல்லாம் எனக்கு எப்பவுமே இருந்ததில்ல..” என்றுரைக்க,
“இதை நம்பமுடிஞ்ச நல்லாருக்கும்..” என்றவள் தன் முகத்தை திருப்பி,
“நீ நம்புனா நம்பு.. இல்லேனா, என்னைய என்ன வேணா நினைச்சுக்கோ..” என்று முணுமுணுத்தவன், தனது காரை நேரே வீட்டை நோக்கி செலுத்தினான். கணவனின் அன்பு தனக்கானது அல்ல என்று நினைத்து ஒதுங்கும் மனைவிக்கு தன் அன்பை நிரூபிப்பானா ஹரிஷான்த்?
Super epiiii ❤️❤️❤️❤️ lovlyyyyyyyyyy
👌👌👌👌👌👌
Nice
super pls upload ud for regular
VxcNzQyguIlUYr