பிள்ளையாரப்பா இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்க கூடாது பா என்று தலையில் கொட்டிக்கொண்டு அவசர அவசரமாக நான்கு தோப்புக்கரணங்களை போட்டு விட்டு மாலையுடன் கோயிலுக்குள் நுழைந்தான் சரவணன் அவன் நேராக அம்மன் சன்னதி சென்று அங்கு உள்ள ஐயரிடம் அவன் வாங்கி வந்த மாலையையும் தாலியையும் அவரிடம் கொடுத்துவிட்டு சன்னிதி முன் ஜோடியாக நின்றவர்களை பார்த்து டேய் மாப்ள ஒரு தடவை நல்லா யோசிச்சுகடா அந்த பொண்ணு பாவம்டா அது சின்ன பொண்ணூடா இப்ப தான் அது பிளஸ் டூ முடிச்சிருக்குடா உனக்கு வயசு 36 ஆச்சுடா அது படிக்கணுமுனு
ஆசைப்படுதுடா உனக்கும் அதுக்கும் வயசு ரொம்ப லாங் கேப் டா அதைப் போய் கல்யாணம் அவன் முடிப்பதற்குள் ஐயர் தாலியை கொண்டு வர அதை வாங்கி மலர்மொழி கழுத்தில் கட்டியிருந்ததான் திருவிக்கிரம வர்மன். மதுரையிலுள்ள மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவன் மூன்று தங்கைகளின் அண்ணன் வயது 36 அம்மா அப்பா இல்லா தங்கைகளின் தாயுமானவனாக இருந்து தன்னுடைய கடமையை முடிக்க அவனுடைய வயது 32 ஆகி இருந்தது . அதற்கு பிறகு தங்கைகளின் பிள்ளை பிறப்பு சீர் என அதில் நான்கு வருடங்கள் ஓடிப் போயிருந்தது. சரவணன் அவனது உயிர் தோழன் மற்றும் அவனது இரண்டாவது தங்கையின் கணவன் தன் நண்பனுக்கு திருமணம் ஆவதில் அவனுக்கு சந்தோஷமே ஆயினும் இப்படி ஒரு சூழ்நிலையில் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் அவனுக்கு விருப்பமின்றி போனது. ஏனென்றால் அது தன் நண்பனின் உயிர் பற்றிய விஷயம் ஆதலால் தான்.
மலர் மொழியின் அப்பா செங்கன்பட்டி கிராமத்தின் தலைவர் செங்கன்பட்டி நன்கு செழிப்பான கிராமம் அங்கு காய்கறிகள் பழங்கள் இயற்கையான உரங்கள் மூலம் விளைவிக்கப்படும் திருவிக்கிரமன் தந்தை காய்கறிகள் பழங்கள் மொத்த வியாபாரம்
செய்து வந்ததால் வியாபாரத்திற்காக செங்கன்குடிக்கு சென்று வரும் பொழுது மலர்மொழியின் தந்தையின் பழக்கம் ஏற்பட்டது. திருவிக்கிரமனும் சின்ன வயதில் தன் தந்தை வியாபாரத்திற்கு அங்கு செல்லும் போது அவரூடன் சென்று வருவான். தந்தை இறப்பிற்கு பிறகு அவருடைய தொழிலை கையிலெடுத்தது மட்டுமின்றி மதுரையில் பிரபலமான இடத்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றை நிறுவி அதை நல்லபடியாக நடத்தி வருகிறான். அந்த பழக்கவழக்கத்தினால் மலர்மொழியின் கல்யாணத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார் கல்யாணத்திற்கு நேற்று இரவு வந்தவன்தான் அதிகாலையில் மலர்மொழியை அங்கிருந்து கூட்டிக்ககொண்டு வந்து இந்த கோயிலில் கல்யாணத்தை முடித்திருந்தான்.
செங்கன்பட்டி கிராமம் கட்டுபாடுகள் நிறைந்தது தன் கிராமத்தவர் அல்லாத மற்ற அந்நிய ஆடவர்களுக்கு கிராமத்து பெண்களை மணமுடித்து தரமாட்டார்கள். அப்படி கிராமத்து கட்டுபாட்டை மீறுபவர்களை உயிருடன் எரித்து கொன்று விடுவார்கள். சரவணன் அதனால் தான் தன் நண்பனை தடுக்க நினைத்தது. எங்கே அது இறைவன் போட்ட முடிச்சாயிற்றே
மலர்மொழி கண்கள் கலங்க பயத்துடன் விக்கிரமனை பார்க்க அவன் அவளுடைய தோழில் கை போட்டு அணைத்து இப்போதிலிருந்து நீ மலர்மொழி திருவிக்கிரம வர்மன்
பயப்படாமல் நம்பிக்கையுடன் என்னுடன் வா என கோயிலில் இருந்து வெளியேறி தன்னுடைய பைக்கில் ஏறி யவன் டேய் சரவணா என்னோட கல்யாண சேதியை என் தங்கச்சிகளுக்கு போன் போட்டு சொல்லி வீட்டுக்கு வரச்சொல்லி ஆரத்தி கரைச்சு வைக்க சொல்லுடா என்று கூறி விட்டு மலர்மொழியுடன் தனது ஊர் நோக்கி பயணமானான்
சரவணன்’க்கும்’ உன் தங்கச்சிகதானே ஆரத்தி தானே எடுப்பாங்க போ போ எனறு போனை எடுத்து அவர்களுக்கு
சேதியை சொல்லி வைத்தவன். டேய் சரவணா இன்னும் ஒரு மாசத்துக்கு மாப்ள ஊர் பக்கமே போகக்கூடாது அந்த மலர் மொழியின் அப்பன் வேற
இந்நேரத்தக்கு தன் ஆடகளோட இவங்களைத் தேடி கிளம்பியிருப்பான்
என் பொண்டாட்டியும் இவனோட மற்ற இரண்டு தஙகச்சிகளும் பொம்பளைகளே இல்ல மூன்றும் மூன்று பருத்தி வீரிகள் இவங்களுக்கிடையிலே நீ மாட்டினே அவ்வளவுதான் அதனால சத்தமில்லாம எஸ்கேப் ஆகிறது தான் நல்ல்து எஸ்கேப் ஆகிடுடா கைப்புள்ள என்று எண்ணி முடிக்கவும் போன் அடிக்கவும் அதை எடுத்தவன் இவன் எதுக்கு இப்ப கூப்பிடறான் என்றபடி சொல்லூடா மாப்பிள்ளை என்க விக்கிரமனோ டேய் மச்சான் எங்கயாவது எஸ்கேப் ஆகனும்முனு நினைச்ச மலர்மொழியின் அப்பா வந்து கேட்டார்னா நீ தான் அவளை அங்கிருந்து கூட்டி வந்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சன்னு சொல்லிருவேன் அப்பறம் உன்னை தேடி வந்து உதைப்பாங்க நீ தனியா அங்க உதை வாங்கறதுக்கு பதிலா மரியாதையா இங்க வந்து சேரு என்று கூறி அழைப்பை துண்டித்தான்
சரவணன் அடேய் நீ அடி வாங்கறது மடுமில்லாம என்னையும் அதில் கோர்த்து விடறியேடா நீ தான் நண்பேண்டா என்று புலம்பியபடி
என் பிரண்டப் போல யாரு மச்சான் என் று பாடிக் கொண்டே ஊரை நோக்கி தனது பைக்கை செலுத்தினான்.
👌👌👌👌👌👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏sister
UfbZtlCYIc
ULNdVGTuHD
gHJoWOEsbItrGSKF
uWCakXSe