ATM Tamil Romantic Novels

கள்ளழகனின் அழகி

விக்ரமன் வண்டியை செலுத்திக்கொண்டே மலர் மொழியை சந்தித்த நாளுக்கு சென்றான் அன்று வழக்கம்போல் செங்கன்பட்டி சென்று சரக்குகள் வாங்கி வண்டியில் ஏற்றிவிட்டு அவனும் தன்னுடைய பைக்கில் கிளம்பினான் எப்பொழுதும் போல் செங்கன்பட்டியின் பசுமையான வயல்வெளிகளை பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டி வந்தவன் அங்குள்ள வயல்வெளிகளிக்கிடையே உள்ள கிணற்றில்   மேல் ஒரு பெண் ஏறி குதிப்பதற்காக நிற்பதை கண்டவன்அவசரமாக வண்டியை  பிரேக் போட்டு நிறுத்திவிட்டு கிணற்றை நோக்கி வேகமாக ஓடினான். அதற்குள் அந்தப் பெண் குதித்து இருந்தால் அவளைக் காப்பாற்ற வேண்டிய அவனும் கிணற்றில் குதித்து உள்ளே நுழைந்து தேட ஆரம்பித்தான் எவ்வளவு தேடியும் அந்த பெண் கிடைக்காததால் எங்காவது பாறையில் தலையில் மோதி காயம் ஏற்பட்டு தண்ணிக்குள்ளே மூழ்கி விட்டாலோ என எண்ணி மறுபடியும் தேடிப் பார்ப்போம் என மூழ்கப் போன நேரத்தில் அவன் காதில் யாரோ விசும்பும் சத்தம் கேட்க தலையை நிமிர்த்துப் பார்க்க அங்கே அந்தப் பெண் கிணற்றில் கைப்பிடி சுவருக்கு கீழே கிணற்றுக்குள் இருந்த பாறையின் மேல் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். கோபம் தலைக்கேற மேலே வந்தவன் அவளைப் பார்த்து இந்தா புள்ள கிணத்துல குதிக்கிற மாதிரி குதிச்சு மனுசன டென்ஷன் ஏத்தி விட்டு இப்ப வந்து இங்க உக்காந்து அழுதுட்டு இருக்குற  உனக்கு விளையாடுவதற்கு வேற இடம்  கிடைக்கலையா கிணத்துல தான் குதிச்சு குதிச்சு விளையாடுவியா என்று அவன் கோபத்தில் கத்த அவள் பயத்தில் மேலும் அழுக விக்ரமன் பதறி ஏ புள்ள என்ன பக்கத்துல வச்சுட்டு அழுகுற பார்க்கிறவங்க என்னை தப்பா நினைக்கிறதுக்கா  ஒழுங்கா எழுந்து வீட்டுக்கு போ என்று கூறிவிட்டு திரும்பியவனை நான் நிஜமாகவே தற்கொலை பண்ணிக்க தான் குதிக்க வந்தேன் ஆனால் பயமா இருந்ததுன்னு அப்படியே உட்கார்ந்து விட்டேன் என்ற அவளின் குரலைக் கேட்டு திரும்பினான் அவளை நன்றாக  பார்த்து நீ தலைவர் வீட்டு பொண்ணு தானே என்று கேட்டான். அவள் மேலும் கீழும் அதான் தலையை அசைத்து ஆமாம் என்றால்  . இப்ப எதுக்கு  தலையாட்டி பொம்மை மாதிரி  மேலே கீழையும் ஆட்டிட்டு இருக்கே வாயைத் திறந்து பேசினா தானே புரியும். எதுக்கு இப்படி பண்ணின என்று கத்தினான் அவனுக்கு அவன் வேலை கெட்டு விட்டது என்று கோபம் அதை அவள் மேல் காட்டினான். சரக்கு வண்டி செல்லும் முன் சென்றால்தான் அவன் சரக்குகளை சரியாக பார்த்து இறக்கி அடுக்கி வைக்க முடியும்  இல்லையென்றால் எவ்வளவு நேரம் ஆனாலும் அவன் தான் அதை சரி செய்ய வேண்டும் அவனுக்கு அவன் வேலை பெரிது இது அறியாமல் இப்படி அலைக்கழிக்கிறாளே என்ற கோபத்தில் கத்தியிருந்தான். அவனின் கோபத்தை கண்டவள் பயத்துடனே  பேச ஆரம்பித்தாள் என் பெயர் மலர் மொழி என்று கூறினாள். அவன் மலர் மொழியை அவர்கள் வீட்டில் ஒன்று இரண்டு முறை மட்டுமே பார்த்திருக்கிறான் இருப்பினும் அவள் தானா என்ற சந்தேகம் தோன்றவே அவளைக் கேட்டு  அதை உறுதி செய்து கொண்டான்.  பிளஸ் 2 ல நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணுனேன் அதற்குப் பின்னாடி படிக்கிறதுக்கு காலேஜ் போக எங்க அப்பா கிட்ட கேட்டேன் எங்க அப்பா அதற்கு ஒத்துக்கல என்று கூறி மறுபடியும் அழ ஆரம்பித்தால் விக்கிரமனுக்கு எங்காவது போய் முட்டிக் கொள்ளலாம் என்று வந்தது இதற்கெல்லாமா தற்கொலை பண்ணிக்குவாங்க வா உங்க அப்பா கிட்ட நான் பேசுறேன் என்று கூற அது மட்டும் இல்ல அப்பா எனக்கு அடுத்த வாரம் கல்யாணம் பேசியிருக்கிறார் என்றவளிடம் விக்கிரமன் ஏற்கனவே உன் கிராமத்தைப் பற்றி உனக்கு தெரியும் தானே அப்புறம் என்ன புதுசா என்று அவளிடம் எரிந்து விழுந்தான். அதற்கு அவள் ஏன் இப்படி கோபமாகவே பேசுறீங்க நீ எப்பவுமே இப்படித்தான் பேசுவீங்களா எனக் கேட்க விக்ரமன் டேய் உனக்கு இது தேவையா என்று நினைத்துக் கொண்டே   அவளை முறைத்தான். அவன் முறைப்பதை பார்த்தும் பார்க்காத மாதிரி தலையை திருப்பிக் கொண்டே பேசினாள் எங்க அப்பா கல்யாணம் பேசி இருக்கிறவர் இந்த ஊரிலேயே இருக்கிற பெரிய பணக்காரர் அவள் முடிக்கும் முன் விக்கிரமன்  அப்புறம் என்ன கல்யாணம் பண்ணிட்டு படிக்க வேண்டியது தானே  எனக்கேட்க அவள் மீண்டும் அழத் தொடங்கினாள் விக்ரமனுக்கோ ஐயோ என்று இருந்தது மீண்டும் கோபத்துடன் இப்ப நீ அழுவது நிறுத்திட்டு சொல்லலனா  நானே உன்னை கிணத்துல தள்ளி விட்டுடுவேன் ஒழுங்கா சொல்றியா என்ன என கேட்கவும் அவள் அவசர அவசரமாக இல்லை இல்லை நான் அழுகாமல்  சொல்றேன் எனக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை 65 வயசு கிழவன் என்றவுடன் அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை மீண்டும் அவளை நோக்கி ஏன் உங்க அப்பாக்கு வேற மாப்பிள்ளை கிடைக்கலையா  என்று கேட்டுக் கொண்டே அவளை கிணற்றின் மேற்புறத்திற்கு கூட்டி வந்தான். அவனுக்கும் அவளை பார்த்து பாவமாகிப்போனது  சரி வா உங்க அப்பா கிட்ட எல்லாத்துக்கும் சேர்த்து நானே பேசுறேன் எனவும் அவள் அது முடியாது இப்ப எல்லாம் கை மீறி போய்விட்டது ஏன்னா எங்க அப்பா அந்த பணக்கார ஆளுகிட்ட சூதாட்டத்தில் எல்லா சொத்தையும் வெச்சு தோத்துட்டாரு இப்ப அந்த ஆளு சொத்தை திருப்பி குடுக்க என்னை கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்றாரு  அப்பாவுக்கும் வேற வழி இல்ல அதனால தான். அதற்கு விக்கிரமன் சரி உங்க உங்கப்பா அந்த ஆளு கிட்ட பேசி கொஞ்சம் டைம் கேட்கலாம் இல்ல சொத்தை மீட்கறதுக்கு என சொல்ல ஆமா பெரிய ஐடியா இது சொல்ல வந்துட்டாரு எங்களுக்கு தெரியாதாக்கும் என மனதிற்குள் நினைத்த மலர்மொழி அதெல்லாம் எங்க அப்பா கேட்டார் அதற்கு அந்த ஆளு சரி நீ பணம் கொடுக்கிற வரைக்கும் எல்லா சொத்தும் என்கிட்ட தான் இருக்குமுன்னு சொல்லிட்டாரு  எங்க அப்பா பரவால்லன்னு ஒத்துக்கிட் டாலும் எங்க அண்ணனும் அக்காவும் இதுக்கு ஒத்துக்கல  எங்க அப்பா கூட சண்ட போட்டு இந்த கல்யாணத்தை நடத்த சொல்லிட்டாங்க எங்க அப்பாவும் வேற வழி இல்லாம சம்மதம் சொல்லிட்டாரு. நானும் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திடனும் கடைசி முயற்சியா அந்த பணக்காரர் பார்த்து கொஞ்சம் டைம் கேட்க அவரிடம் பேசப் போனேன்  அதுவும் சரி வரல  என்க விக்கிரமனும் எலிக்குட்டி மாதிரி இருந்துட்டு என்ன வேலை எல்லாம் பார்த்து இருக்கா என்று வாயடைத்து நின்றான் . மீண்டும் அவளே அந்த பணக்கார மாப்பிள்ளையிடம் சென்று பேசிய கதையை கூறினாள்  தமக்கையும் சகோதரனும்  தன்னை கைவிட்டு விட எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தி விட வேண்டும் என்று எண்ணி அந்த பணக்கார வீட்டிற்கு சென்றாள் அங்கிருக்கும் வாட்ச்மேனிடம தான் வந்த விஷயத்தை சொல்லி காத்திருக்கத் தொடங்கினாள். வாட்ச்மேன் அதை  அவன் முதலாளிக்கு தெரிவிக்க அந்தப் பணக்காரன் வாட்ச் மேன் இடம் சொல்லி அவளை உள்ளே விடச் சொன்னான் . அவள் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே  நுழைந்தவள் பார்த்தது வாயெல்லாம் பல்லாக கீழே வந்த அந்த 65 வயது கிழவனை தான் அவன் அவளைப் பார்த்து வா மலர் மொழி என்ன நீ தனியா வந்திருக்கிற இன்னும் ஒரு வாரத்துல கல்யாணத்தை வெச்சுட்டு இப்படி தனியா எல்லாம் வரக்கூடாது இருந்தாலும் என்ன பார்க்கிற ஆசையில வந்துட்ட அதனால பரவால்ல வா இப்படி வந்து உட்காரு என்று தான் உட்கார்ந்திருந்த சோபாவை தட்டி காட்டினான்  மலர்விழி மனதுக்குள் இந்த பழைய டெலிபோன் பூத்துக்கு நினைப்பாரு இவனை பார்க்கிறதுக்கு ஆசையில  வந்திருக்கிறனாம் எனக்கு இருக்கிற கோபத்துக்கு பெரிய பாராங்கல்லை தூக்கி இவன் மேல போட்டு சாகடிக்கற அளவுக்கு கோபம் இருக்கு என்ன பண்றது நமக்கு காரியம் முக்கியம் மொழி  அதனால கொஞ்சம் வெளியே சிரிச்சு வை என்று எண்ணிய படியே மெலிதாக சிரித்தபடியே எனக்கு ஒர் உதவி வேண்டும் என்றாள்  உடனே அவன் என்ன மலர் மொழி ஏதாவது பணம் தேவையா உனக்கு இல்லாததா அடுத்த வாரத்தில் இருந்து இந்த சொத்து நகை பங்களா எல்லாம் உனக்கே சொந்தம் அதனால என்ன வேணுமோ கேளு என்றான். மலர்விழி மெல்ல தயங்கிப்படியே எனக்கு படிக்கணும்னு ஆசை என்று கூறியவுடன்  அதற்கென்ன மலர் மொழி கல்யாணம் முடித்த உடனே வீட்டிலேயே ஒரு டீச்சரை வரவழைத்து உன்ன படிக்க வைக்கிறேன் என்று கூறிக்கொண்டே அவளை பார்வையாலயே  மேலிருந்து கீழே வரை மேய்ந்நதான். மலர்மொழிக்கு  அய்யோ இந்த காண்டாமிருகத்திடமிருந்து  தப்பிக்கிறதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலையே கடவுளே என மனதில் அவனை அர்ச்சித்துக்ககொண்டேசரி சமாளிப்போம் என எண்ணி இல்ல நான் கல்யாணத்துக்கு முன்னாடி படிக்கணும் படிச்சு முடிச்ச பிறகு இந்த கல்யாணத்தை  வைத்துக் கொள்ளலாம் என கேட்க வந்தேன் எனக்கு இப்ப இந்த கல்யாணம் வேண்டாம்  என்று சொன்னவுடன் அவன் சிறிது நேரம் மௌனமாக யோசித்தான் மலர்மொழியின் குழந்தைதனமான முகமும்  இளமையின் வனப்பும் அவளின் சிக்கென்றிருந்த இடையும் பதின் வயதுக்குரிய அவளின் உடல் பளபளப்பும் அவனை மயக்கியிருந்ததுஅதனால் அவளை விட்டு விட அவன் தயாராக இல்லை அதனால் மலர்மொழியை எப்படியாவது கல்யாணம் செய்ய  வேண்டும் என எண்ணி சிறிது நேரம் யோசித்து விட்டு சரி மலர் மொழி நீ படித்து முடிக்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது ஏற்கனவே எனக்கு வயது ஆகிவிட்டது நீ ஒன்னு பண்ணு உங்க அப்பா அண்ணன் அக்கா எல்லாத்தையும் கூட்டிட்டு வந்து இந்த சொத்தை எல்லாம் எனக்கு ரிஜிஸ்டர் பண்ணி வச்சுட்டு நீ படிக்கப் போ எனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூற மலரமொழிக்கு கண்கள் கலங்க ஆரம்பித்ததுஅவளுக்கும் இதைத்தவிர வேறு வழி ஏதும் இல்லாததால் முதலில் இவரிடம் பேசி கல்யாணத்தை தள்ளி வைத்து பிறகு சகோதரன் மற்றும் தமக்கையிடம் பேசி ஏதாவது செய்து கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என்று எண்ணியிருந்தால். ஆனால் அவனோ  இவ்வாறு கூற அவளுக்கு வேற வழி தெரியாமல் மௌனமாக அங்கிருந்து வெளியேறினால்  வந்தவள் வேற வழி எதுவும் தெரியாததால் அவனை கல்யாணம் செய்து கொள்வதற்கு பதிலாக தற்கொலை பரவாயில்லை என்று இந்த முடிவை எடுத்திருந்தால்.

4 thoughts on “கள்ளழகனின் அழகி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top