மலர்மொழி கூறி முடித்ததும் விக்ரமன் யோசித்து விட்டு ஒன்னு பண்ணலாம் நான் எங்க சொந்தக்காரர் வீட்டில உன்னை அனுப்பி விடுறேன் அங்கு போய் தங்கி கொஞ்ச நாளைக்கு படிக்கிறியா அதுக்குள்ள உங்க அப்பா கிட்டையும் அந்த பணக்கார கிட்டயும் நான் பேசி எப்படியாவது பிரச்சனையே முடிக்க பார்க்கிறேன் என்று கூற மலர் மொழி அது முடியாது என்றவுடன் அவனுக்கு சலித்து போனது நீ எப்படியோ போ என விட்டு விட்டு போகலாம் என்று பார்த்தால்.
பெண் பிள்ளை வேறு மனது கேட்கவில்லை அவனும் மூன்று தங்கைகளுக்கு அண்ணன் தானே
மறுபடியும் அவன் வெளியூர்ல படிக்க போறதுல உனக்கு என்ன பிரச்சனை என கேட்க அவள் பெருமூச்சு ஒன்று விட்டுவிட்டு இந்த கிராமத்துல பிறக்கிற எல்லா பெண் குழந்தைகளிடம் அவங்க பத்து வயசுலதாலி கழுத்தில் ஏறாமல் இந்த கிராமத்தை விட்டு வெளியேற மாட்டோம்னு கிராமத்து கோயில்ல சத்தியம் வாங்குவாங்க நானும் அப்படித்தான் சத்தியம் பண்ணி இருக்கேன் அதை என்னால மீற முடியாது உடனே விக்கிரமன் அது 10 வயசுல உனக்கு விவரம் தெரியாத வயசுல பண்ணிய சத்தியம் அதை மீற மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சின்னா அந்த கிழவனை கல்யாணம் பண்ணிக்கிற தவிர உனக்கு வேற வழி இல்ல அதுதான் உன் விதி என்று கூறி விட்டு அவனும் சோர்ந்து போய் தன் பைக்கை நோக்கி நடக்க தொடங்கினான்.
அப்பொழுது மலர்விழி நீங்க என்ன கல்யாணம் பண்ணி இந்த பிரச்சனையில் இருந்து காப்பாத்துவீங்களா எனக் கேட்க நடந்து கொண்டிருந்தவன் திகைத்து திரும்பி அவளைப் பார்த்து என்னமோ ஐஸ்கிரீம் சாப்பிட போலாம்ங்குற மாதிரி கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேக்குற விளையாட்டுக்கு கூட அப்படி எல்லாம் நினைக்காத என்று கடுகடுத்த முகத்துடன் அவளிடம் கூறினான்.
எனக்கு வேற வழி தெரியல நீங்க மறுத்தீங்கன்னா கண்டிப்பா நான் தற்கொலை பண்ணிக்குவேன் என்று அவள் முகத்தை மூடிக்கொண்டு அழுதால். உடனே விக்ரமன் கோபத்துடன் அவள் முகத்தை மூடி இருந்தே கையை பற்றி இழுத்து அவள் கண்களை நேராகப் பார்த்து உனக்கு என்ன பத்தி என்ன தெரியும் எனக்கு வயசு 36 உனக்கு 18 எவ்வளவு வயசு வித்தியாசம் தெரியுமா என்றான் உடனே அவள் தன் கண்களை துடைத்துக் கொண்டே 65 க்கு 36 பரவாயில்லை என்றால்
விக்கிரமன் தலையிலடித்துக் கொண்டான் மீண்டும் அவள் சிறு பெண் படிக்க வேண்டும் என்ற ஆசையில் இப்படி எல்லாம் பேசுகிறாள் என்று எண்ணி அவளுக்கு எப்படியாவது நடைமுறையை புரிய வைக்க வேண்டும் என்று பொறுமையாக அவளிடம் நீ சொல்றேன்னு உன்னை எல்லாம் நான் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியால இருக்க முடியாது என்னால இந்த டிவில வர்ற சீரியல் ஹஸ்பண்ட் மாதிரி கல்யாணம் பண்ணிட்டு நீ படிக்கிற வரைக்கும் நீ கீழ படுத்துக்கோ நான் மேல படுத்துகிறேங்கற தியாகம் எல்லாம் என்னால பண்ண முடியாது.
ஏற்கனவே என் தங்கைகளுக்காக என்னோட வாழ்க்கை பாதி போயிருச்சு மீதி இருக்கிற வாழ்க்கையை நான் எனக்காகவும் எனக்கு வரப்போறவளுக்காகவும் கொஞ்சம் சந்தோஷமா வாழனும்னு நினைக்கிறேன். எனக்கும் சராசரி மனுஷனுக்குரிய ஆசை உணர்ச்சி எல்லா இருக்கு மூணு தங்கச்சிகளோட பிறந்தேன் என்பதற்காக எனக்கு அது இல்லாம போகாது
அதுமட்டுமில்லாம எனக்கு வயசு என்ன சீக்கிரம் குழந்தை பெத்துக்கணும்னு நினைக்கிறேன் உனக்கு இப்ப தான் 18 பாக்குறதுக்கு சின்ன பொண்ணாட்டம் இருக்கிற. நீ படிச்சு முடிச்சு வர வரைக்கும் என்னால குழந்தை பிறப்ப தள்ளி போட முடியாது. இப்பவே மூணு தங்கச்சிக்கு இருக்குது வயசு 36 ஆச்சுன்னு எவனும் பொண்ணு தர மாட்டேங்குறான் இதுல நீ படிக்கிறதற்காக உன்னை கல்யாணம் பண்ணி அப்புறம் படிச்சு முடிச்ச பிறகு என்ன விட்டுட்டு போயிட்டினா ஊர்ல இருக்கிறவங்க எனக்கு ஏதோ குறை இருக்கு அதனால தான் நீ என்ன விட்டு போயிட்டேன்னு பேசுவாங்க அதுக்கப்புறம் நான் சாமியாரத்தான் போகணும் என்ன விட்டுடுமா என்று தலைக்கு மேலே கைகளில் தூக்கி பெரிய கும்பிடு போட்டான்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌
xitEhXfdNFaTbSl
eHDBGfEP