விக்ரமன் உறுதியாக அவளை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டு இவளும் இவ ஐடியாவும் என்று புலமபியபடியே நடக்க ஆரம்பித்தான் மலர் மொழிக்கும் அவன் சொல்வதில் இருந்த நியாயம் அவளுக்கும் புரிந்து இருந்தது அவள் அவனுடனான கல்யாணத்தை தன் படிப்புக்காக மட்டுமல்ல தன் வாழ்க்கை முழுமையும் இனி அவனுடன் தான் என்று முழு மனதுடன் தான் அவனை கல்யாணம் செய்ய முடிவெடுத்து இருந்தால் அதை அவனிடம் சொல்லி அவனை சமாதானப்படுத்த எண்ணியவள் அவன் நடக்கத் தொடங்கியதும் அவனை நோக்கி அவசர அவசரமாக ஓடினாள் அவனை நோக்கி ஓடியவள் கீழே கிடந்த கட்டையை கவனியாமல் அது தடுக்கி அவன் மேலே விழுந்து அவனையும் கீழே தள்ளி அவன் நெஞ்சத்தில் தன் இதழால் முத்தமிட்டிருந்தாள். இருவருக்குமே இது எதிர்பாராமல் நடந்த சம்பவம் இதில் விக்கிரமனுக்கோ ஏற்கெனவே அவள் அவனுடனான கல்யாண பேச்சை எடுத்த நிமிடத்திலிருந்தே அவள் மீது சிறு சலனம் ஏற்பட்டிருந்தது. அவளுடைய அழகும் துடிப்பான பேச்சும் அவனையும் அசைத்துப் பார்த்தது இருப்பினும் அவளின் வயது காரணமாக கல்யாணத்தை உறுதியாக மறுத்திருந்தான்
இப்பொழுது அவன் சட்டையை இறுக ப்பற்றிக் கொண்டு அவனது நெஞ்சின் மேல் விழுந்து அவனுடைய மொத்த ஆண்மைக்கும் சோதனையை கொடுத்துக் கொண்டிருந்தால் விக்ரமனுக்கு முதல் பெண்ணின் ஸ்பரிசம் தலை முதல் கால் வரை சிலிர்ப்பை ஏற்படுத்தி அவனின் உறுதியை சில்லு சில்லாக்கி இருந்தது. மலர் மொழியோ மெல்ல கண்விழித்து அவன் கண்களை பார்த்துவிட்டு வெட்கத்தில் மறுபடியும் அவன் நெஞ்சிலையே சாய்ந்தால்.
அவனுக்கும் புரிந்து விட்டது இனி இவள் தன்னை இன்றி வேறொருவனையும் ஏற்க மாட்டாள் என்று முடிவு செய்து அவளை இறுக்கமாக கட்டி அணைத்தான்.
மலர் மொழிக்கும் அவனின் இறுக்கமான கட்டியணைப்பு அவனது முடிவை சொல்ல அவனிடம் தன் மனதில் உள்ளதை சொல்ல ஆரம்பித்தால் நான் என் முழு மனசுடன் உங்க மனைவியா வாழ்நாள் முழுவதும் வாழனும்னு முடிவு எடுத்து தான் உங்கள கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே டாக்டருக்கு படிக்கணும்னு ஆசை எனக்கு மட்டும் இல்ல எங்க கிராமத்துல இருக்குற பல பெண்களுக்கு நல்லா படிக்கணும் என்கிற ஆசை இருக்குது. ஆனா அதுக்கு எங்க கிராமத்தோட பழக்கவழக்கங்கள் சட்டதிட்டங்கள் தடையாய் இருக்குது.என்னதான் உலகம் வளர்ந்து முன்னேறி பெண்கள் பல இடத்துல படிச்சு முன்னேறினாலும் எங்க கிராமத்தைப் போல சில கிராமங்கள் இன்னும் இருக்கத்தான் செய்யுது. படிக்கணும்னு மட்டும் யோசிச்சிருந்தா அந்த கிழவனையே கல்யாணம் பண்ணி இருப்பேன் என்ன அப்படி அவனை கல்யாணம் பண்ணி இருந்தா இந்த கிராமத்திலேயே என் வாழ்க்கை முடிஞ்சு போயிருக்கும் இந்த கிராமத்துல இருக்கிற எல்லா பெண்களுக்கு நான் ஒரு முன்னுதாரணமா இருக்கணும்னு நினைக்கிறேன் இதே வேற யார் கிட்டயாவது நான் இப்படி கேட்டு இருந்தா எங்க கிராமத்து ஆளுகளுக்கு பயந்து யாரும் உதவி செய்ய மாட்டாங்க.
நான் சின்ன வயசுல இருந்து எங்க வீட்டுக்கு வரும்போது உங்கள பாத்து இருக்கேன் நீங்க உங்க தங்கச்சிகளுக்காக கஷ்டப்படுறதையும் பார்த்து இருக்கேன் தாய் தகப்பன் இல்லாத அவங்களுக்கு அவங்க அப்பா அம்மா இருந்திருந்தா கூட இப்படி ஒரு வாழ்க்கை அமைஞ்சி இருக்குமாங்கிறது சந்தேகம். அப்படி அவங்கள சந்தோஷமா வாழ வச்ச உங்க மேல எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. அதனாலதான் உங்கள கல்யாணம் பண்ணிக்க கேட்டேன். அது மட்டும் இல்ல எங்க கிராமத்து ஆளுங்கள சமாளிக்க உங்களால் மட்டும் தான் முடியும. இதையெல்லாம் யோசிச்சு தான் உங்களிடம் நான் கேட்டேன். என்னால எப்பொழுதும் உங்க சந்தோஷத்துக்கு குறைவு வராது. ஒரு மனைவியா என்னோட கடமையிலிருந்து எப்பொழுது நான் தவற மாட்டேன்.
உங்களை யாரு கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரிய இருக்க சொன்னது அந்த காலத்துல 16 வயசுல கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கலையா நான் சின்ன பொண்ணா இருந்தாலும் உங்களையும் தாங்குவேன் உங்க குழந்தையும் தாங்குவேன் அதுக்கு எஙகிட்ட கிராமத்து ஆளுகளுக்குரிய வலிமை இருக்குது நீங்க அத நினைச்சு பயப்பட வேண்டாம் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் வேணும் அதை மட்டும் சொல்லுங்க என்று கேட்க
அவளின் உரிமையான பேச்சை கேட்ட அவன் அவளிடம் சிறிதாக சலித்தபடி ம்கூம் எனக்கேத்த சதி நீதான்னு விதி முடிவு பண்ணியிருந்தா அதை மாத்த யாரால முடியும் என்று அவளை கிண்டலடித்தபடியே தன்னுடைய சம்மதத்தையும் தெரிவித்திருந்தான். மேலும் அவளை வம்பு இழுக்க எங்க ஊர்ல விசாலாட்சி என்று ஒரு பாட்டி இருக்காங்க அவங்க பெத்த குழந்தைகளை விட ஒரு குழந்தை நீ ஜாஸ்தியா பெத்துக் குடுத்தா போதும் என்று கூறினான். அவளும் இவன் ஏதோ வில்லங்கமாக பேசுகிறான் என்று எண்ணி அவர்களுக்கு எத்தனை குழந்தை என்று கேட்டாள் என்ன ஒரு 24 குழந்தை தான் எனக்கு 25 போதும் என்று சிரிப்பை மீசைக்கடியில் ஒளித்து வைத்து கொண்டே கூறினான்.
அவளோ தன் சிப்பி வாயை அகலமாக திறந்து 25ஆ என்று அதிர்ச்சியுடன் கேட்டால். அதற்கு அவன் ஆமாம் ஒன்னு கூட குறையக்கூடாது என்று மிகவும் சீரியஸாக முகத்தை வைத்து கூறிவிட்டு அவள் அறியாமல் சிரித்தான். அடியே மலரு அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டியேடி வருஷத்துக்கு ஒன்னு கணக்கு போட்டாலும் 43 வயசு வரைக்கும் இதுக்கே எனக்கு நேரம் சரியா போயிடுமே என்று மனதில் புலம்பியபடி அவனை பார்க்க அவன் சிரிப்பதை கண்டு கொண்டவள் அவன் விளையாட்டுக்காக தான் சொல்கிறான் என்று தெரிய மனதில் நிம்மதியுடன் அவனை நோக்கி என்னால் அதெல்லாம் முடியும் உங்களுக்கு தான் வயசு ஆயிடுச்சு உங்களால முடியுமான்னு நீங்க பாத்துக்கோங்க என்று அவனை கேலி செய்தால். அவள் இப்படி திருப்பி தன்னிடம் கேட்பாள் என்று நினைக்காதவன் தன்னுடைய சிரிப்பை சற்றே நிறுத்தி அவளை நோக்கி புருவத்தை உயர்த்தி இதற்கு பதில் சொல்வதை விட செயல்ல செஞ்சு காட்டுனா தானே உனக்கு புரியும் என்னால முடியுமா முடியாது ன்னு என்று அவளுடைய வெற்றிடையில் இருந்த கையை சற்றே மேலே நோக்கி நகரத்த அவளோ அலறி அடித்துக்கொண்டு அவனை விட்டு விலகி இருந்தால் உடனே அவன் அந்த பயம் இருக்கட்டும் என்ன சீண்டினால் சேதாரம் உனக்கு தான் ஞாபகம் வச்சுக்கோ எல்லோருக்கும் நல்லவனா இருக்கிறவன் உன்கிட்டயும் அப்படியே இருப்பேன்னு நினைச்சுக்காத என்று கூறிவிட்டு எழுந்தவன் அவள் எழுவதற்காக தன் கையை நீட்டினான் அவளோ அவன் கை பிடிக்க யோசிக்க ஏன் இத்தனை நேரம் என் நெஞ்சில் சொகுசா சாஞ்சுருந்தா தானே இப்ப கைய புடிக்கிறதுக்கு யோசிக்கிற என்றதும் ஐயோ இவர் வேற மானத்தை வாங்குறாரே என்று அவசரமாக அவனை கையைப் பிடித்து எழுந்தாள். அதைப் பார்த்து அவன் சிரிக்க வெட்கத்தில் தலை குனிந்தால் .
விக்ரமன் அவளிடம் அடுத்த வாரம் தானே உனக்கு கல்யாணம் அதுக்குள்ள நான் போய் நம்ம கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடு பண்ணிட்டு கல்யாணத்துக்கு முதல் நாள் வந்து உன்னை கூட்டிட்டு போறேன் என்றான். அவளுக்கு இதுவரை இருந்த சந்தோஷம் போய் அவளுக்கு பய உணர்வு ஏற்பட்டது அதை அவளின் கண்கள் பிரதிபலித்தது கண்கள் கலங்க அவனை நோக்கி கண்டிப்பா என்ன கல்யாணம் பண்ணிக்குவீங்க தானே ஏன்னா முதல்ல உங்க மேல நம்பிக்கை மட்டும் தான் இருந்தது ஆனா இப்போ காதலும் வந்திருக்கு அதனால கண்டிப்பா உங்கள தவிர வேற யாரையும் என்னால ஏத்துக்க முடியாது நீங்க வரலைன்னா எனக்கு மறுபடியும் சாகுறத தவிர வேற வழியில்லை என்று மறுபடியும் அவன் நெஞ்சில் தஞ்சம் அடைந்து இருந்தாள். அவனுக்கு அன்று ஒரு நாள் பொழுதும் வளுடனே அங்கேயே கழிந்து இருந்ததால் இவள் இப்படியே இருந்தால் தான் ஊர் சொல்ல இன்னும் நேரம் ஆகும் என்று நினைத்து அவளின் இந்த மனநிலையைமாற்ற எண்ணி மலரு மாமன் நெஞ்சிலே சாஞ்சிக்கணும்னா ஆசை வந்தா எப்ப வேணாலும் நீ வந்து சாஞ்சிக்கலாம் அதுக்காக இப்படி அழுகாச்சி சீன் போட்டு மாமனை அடிக்கடி உசுப்பேத்தினைனா அபபுறம் நடக்கற எதுக்கு கம்பெனி பொறுப்பு கிடையாது என்றதும் அவள் அழுகையை மறந்து சிரித்தால். ம் என் மலர் பொண்ணு இப்படி சிரிச்சா தான் அழகா இருக்கு இப்படியே சிரிச்சுகிட்டு அடுத்த வாரம் வரைக்கும் இரு என்று அவளின் நெற்றியில் முத்தம் ஒன்று பதித்துவிட்டு சென்றவன் அவன் சொன்னபடியே கல்யாணத்திற்கு முதல் நாள் அவளை அழைத்துச் சென்று அவர்களது கிராமத்துக் கோயிலிலேயே அவர்களுடைய கல்யாணத்தை முடித்திருந்தான்.
விக்ரமன் உறுதியாக அவளை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டு இவளும் இவ ஐடியாவும் என்று புலமபியபடியே நடக்க ஆரம்பித்தான் மலர் மொழிக்கும் அவன் சொல்வதில் இருந்த நியாயம் அவளுக்கும் புரிந்து இருந்தது அவள் அவனுடனான கல்யாணத்தை தன் படிப்புக்காக மட்டுமல்ல தன் வாழ்க்கை முழுமையும் இனி அவனுடன் தான் என்று முழு மனதுடன் தான் அவனை கல்யாணம் செய்ய முடிவெடுத்து இருந்தால் அதை அவனிடம் சொல்லி அவனை சமாதானப்படுத்த எண்ணியவள் அவன் நடக்கத் தொடங்கியதும் அவனை நோக்கி அவசர அவசரமாக ஓடினாள் அவனை நோக்கி ஓடியவள் கீழே கிடந்த கட்டையை கவனியாமல் அது தடுக்கி அவன் மேலே விழுந்து அவனையும் கீழே தள்ளி அவன் நெஞ்சத்தில் தன் இதழால் முத்தமிட்டிருந்தாள். இருவருக்குமே இது எதிர்பாராமல் நடந்த சம்பவம் இதில் விக்கிரமனுக்கோ ஏற்கெனவே அவள் அவனுடனான கல்யாண பேச்சை எடுத்த நிமிடத்திலிருந்தே அவள் மீது சிறு சலனம் ஏற்பட்டிருந்தது. அவளுடைய அழகும் துடிப்பான பேச்சும் அவனையும் அசைத்துப் பார்த்தது இருப்பினும் அவளின் வயது காரணமாக கல்யாணத்தை உறுதியாக மறுத்திருந்தான்
இப்பொழுது அவன் சட்டையை இறுக ப்பற்றிக் கொண்டு அவனது நெஞ்சின் மேல் விழுந்து அவனுடைய மொத்த ஆண்மைக்கும் சோதனையை கொடுத்துக் கொண்டிருந்தால் விக்ரமனுக்கு முதல் பெண்ணின் ஸ்பரிசம் தலை முதல் கால் வரை சிலிர்ப்பை ஏற்படுத்தி அவனின் உறுதியை சில்லு சில்லாக்கி இருந்தது. மலர் மொழியோ மெல்ல கண்விழித்து அவன் கண்களை பார்த்துவிட்டு வெட்கத்தில் மறுபடியும் அவன் நெஞ்சிலையே சாய்ந்தால்.
அவனுக்கும் புரிந்து விட்டது இனி இவள் தன்னை இன்றி வேறொருவனையும் ஏற்க மாட்டாள் என்று முடிவு செய்து அவளை இறுக்கமாக கட்டி அணைத்தான்.
மலர் மொழிக்கும் அவனின் இறுக்கமான கட்டியணைப்பு அவனது முடிவை சொல்ல அவனிடம் தன் மனதில் உள்ளதை அவனிடம் சொல்ல ஆரம்பித்தால் நான் என் முழு மனசுடன் உங்க மனைவியா வாழ்நாள் முழுவதும் வாழனும்னு முடிவு எடுத்து தான் உங்கள கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே டாக்டருக்கு படிக்கணும்னு ஆசை எனக்கு மட்டும் இல்ல எங்க கிராமத்துல இருக்குற பல பெண்களுக்கு நல்லா படிக்கணும் என்கிற ஆசை இருக்குது. ஆனா அதுக்கு எங்க கிராமத்தோட பழக்கவழக்கங்கள் சட்டதிட்டங்கள் தடையாய் இருக்குது.என்னதான் உலகம் வளர்ந்து முன்னேறி பெண்கள் பல இடத்துல படிச்சு முன்னேறினாலும் எங்க கிராமத்தைப் போல சில கிராமங்கள் இன்னும் இருக்கத்தான் செய்யுது. படிக்கணும்னு மட்டும் யோசிச்சிருந்தா அந்த கிழவனையே கல்யாணம் பண்ணி இருப்பேன் என்ன அப்படி அவனை கல்யாணம் பண்ணி இருந்தா இந்த கிராமத்திலேயே என் வாழ்க்கை முடிஞ்சு போயிருக்கும் இந்த கிராமத்துல இருக்கிற எல்லா பெண்களுக்கு நான் ஒரு முன்னுதாரணமா இருக்கணும்னு நினைக்கிறேன் இதே வேற யார் கிட்டயாவது நான் இப்படி கேட்டு இருந்தா எங்க கிராமத்து ஆளுகளுக்கு பயந்து யாரும் உதவி செய்ய மாட்டாங்க.
நான் சின்ன வயசுல இருந்து நீங்க எங்க வீட்டுக்கு வரும்போது உங்கள பாத்து இருக்கேன் நீங்க உங்க தங்கச்சிகளுக்காக கஷ்டப்படுறதையும் பார்த்து இருக்கேன் தாய் தகப்பன் இல்லாத அவங்களுக்கு அவங்க அப்பா அம்மா இருந்திருந்தா கூட இப்படி ஒரு வாழ்க்கை அமைஞ்சி இருக்குமாங்கிறது சந்தேகம். அப்படி அவங்கள சந்தோஷமா வாழ வச்ச உங்க மேல எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. அதனாலதான் உங்கள கல்யாணம் பண்ணிக்க கேட்டேன். அது மட்டும் இல்ல எங்க கிராமத்து ஆளுங்கள சமாளிக்க உங்களால் மட்டும் தான் முடியும. இதையெல்லாம் யோசிச்சு தான் உங்களிடம் நான் கேட்டேன். என்னால எப்பொழுதும் உங்க சந்தோஷத்துக்கு குறைவு வராது. ஒரு மனைவியா என்னோட கடமையிலிருந்து எப்பொழுது நான் தவற மாட்டேன்.
உங்களை யாரு கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரிய இருக்க சொன்னது அந்த காலத்துல 16 வயசுல கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கலையா நான் சின்ன பொண்ணா இருந்தாலும் உங்களையும் தாங்குவேன் உங்க குழந்தையும் தாங்குவேன் அதுக்கு எஙகிட்ட கிராமத்து ஆளுகளுக்குரிய வலிமை இருக்குது நீங்க அத நினைச்சு பயப்பட வேண்டாம் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் வேணும் அதை மட்டும் சொல்லுங்க என்று கேட்க
அவளின் உரிமையான பேச்சை கேட்ட அவன் அவளிடம் சிறிதாக சலித்தபடி ம்கூம் எனக்கேத்த சதி நீதான்னு விதி முடிவு பண்ணியிருந்தா அதை மாத்த யாரால முடியும் என்று அவளை கிண்டலடித்தபடியே தன்னுடைய சம்மதத்தையும் தெரிவித்திருந்தான். மேலும் அவளை வம்பு இழுக்க எங்க ஊர்ல விசாலாட்சி என்று ஒரு பாட்டி இருக்காங்க அவங்க பெத்த குழந்தைகளை விட ஒரு குழந்தை நீ ஜாஸ்தியா பெத்துக் குடுத்தா போதும் என்று கூறினான். அவளும் இவன் ஏதோ வில்லங்கமாக பேசுகிறான் என்று எண்ணி அவர்களுக்கு எத்தனை குழந்தை என்று கேட்டாள் என்ன ஒரு 24 குழந்தை தான் எனக்கு 25 போதும் என்று சிரிப்பை மீசைக்கடியில் ஒளித்து வைத்து கொண்டே கூறினான்.
அவளோ தன் சிப்பி வாயை அகலமாக திறந்து 25ஆ என்று அதிர்ச்சியுடன் கேட்டால். அதற்கு அவன் ஆமாம் ஒன்னு கூட குறையக்கூடாது என்று மிகவும் சீரியஸாக முகத்தை வைத்து கூறிவிட்டு அவள் அறியாமல் சிரித்தான். அடியே மலரு அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டியேடி வருஷத்துக்கு ஒன்னு கணக்கு போட்டாலும் 43 வயசு வரைக்கும் இதுக்கே எனக்கு நேரம் சரியா போயிடுமே என்று மனதில் புலம்பியபடி அவனை பார்க்க அவன் சிரிப்பதை கண்டு கொண்டவள் அவன் விளையாட்டுக்காக தான் சொல்கிறான் என்று தெரிய மனதில் நிம்மதியுடன் அவனை நோக்கி என்னால் அதெல்லாம் முடியும் உங்களுக்கு தான் வயசு ஆயிடுச்சு உங்களால முடியுமான்னு நீங்க பாத்துக்கோங்க என்று அவனை கேலி செய்தால். அவள் இப்படி திருப்பி தன்னிடம் கேட்பாள் என்று நினைக்காதவன் தன்னுடைய சிரிப்பை சற்றே நிறுத்தி அவளை நோக்கி புருவத்தை உயர்த்தி இதற்கு பதில் சொல்வதை விட செயல்ல செஞ்சு காட்டுனா தானே உனக்கு புரியும் என்னால முடியுமா முடியாது ன்னு என்று அவளுடைய வெற்றிடையில் இருந்த கையை சற்றே மேலே நோக்கி நகரத்த அவளோ அலறி அடித்துக்கொண்டு அவனை விட்டு விலகி இருந்தால் உடனே அவன் அந்த பயம் இருக்கட்டும் என்ன சீண்டினால் சேதாரம் உனக்கு தான் ஞாபகம் வச்சுக்கோ எல்லோருக்கும் நல்லவனா இருக்கிறவன் உன்கிட்டயும் அப்படியே இருப்பேன்னு நினைச்சுக்காத என்று கூறிவிட்டு எழுந்தவன் அவள் எழுவதற்காக தன் கையை நீட்டினான் அவளோ அவன் கை பிடிக்க யோசிக்க ஏன் இத்தனை நேரம் என் நெஞ்சில் சொகுசா சாஞ்சுருந்தா தானே இப்ப கைய புடிக்கிறதுக்கு யோசிக்கிற என்றதும் ஐயோ இவர் வேற மானத்தை வாங்குறாரே என்று அவசரமாக அவனை கையைப் பிடித்து எழுந்தாள். அதைப் பார்த்து அவன் சிரிக்க வெட்கத்தில் தலை குனிந்தால் .
விக்ரமன் அவளிடம் அடுத்த வாரம் தானே உனக்கு கல்யாணம் அதுக்குள்ள நான் போய் நம்ம கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடு பண்ணிட்டு கல்யாணத்துக்கு முதல் நாள் வந்து உன்னை கூட்டிட்டு போறேன் என்றான். அவளுக்கு இதுவரை இருந்த சந்தோஷம் போய் அவளுக்கு பய உணர்வு ஏற்பட்டது அதை அவளின் கண்கள் பிரதிபலித்தது கண்கள் கலங்க அவனை நோக்கி கண்டிப்பா என்ன கல்யாணம் பண்ணிக்குவீங்க தானே ஏன்னா முதல்ல உங்க மேல நம்பிக்கை மட்டும் தான் இருந்தது ஆனா இப்போ காதலும் வந்திருக்கு அதனால கண்டிப்பா உங்கள தவிர வேற யாரையும் என்னால ஏத்துக்க முடியாது நீங்க வரலைன்னா எனக்கு மறுபடியும் சாகுறத தவிர வேற வழியில்லை என்று மறுபடியும் அவன் நெஞ்சில் தஞ்சம் அடைந்து இருந்தாள். அவனுக்கு அன்று ஒரு நாள் பொழுதும் வளுடனே அங்கேயே கழிந்து இருந்ததால் இவள் இப்படியே இருந்தால் தான் ஊர் சொல்ல இன்னும் நேரம் ஆகும் என்று நினைத்து அவளின் இந்த மனநிலையைமாற்ற எண்ணி மலரு மாமன் நெஞ்சிலே சாஞ்சிக்கணும்னா ஆசை வந்தா எப்ப வேணாலும் நீ வந்து சாஞ்சிக்கலாம் அதுக்காக இப்படி அழுகாச்சி சீன் போட்டு மாமனை அடிக்கடி உசுப்பேத்தினைனா அபபுறம் நடக்கற எதுக்கு கம்பெனி பொறுப்பு கிடையாது என்றதும் அவள் அழுகையை மறந்து சிரித்தால். ம் என் மலர் பொண்ணு இப்படி சிரிச்சா தான் அழகா இருக்கு இப்படியே சிரிச்சுகிட்டு அடுத்த வாரம் வரைக்கும் இரு என்று அவளின் நெற்றியில் முத்தம் ஒன்று பதித்துவிட்டு சென்றவன் அவன் சொன்னபடியே கல்யாணத்திற்கு முதல் நாள் அவளை அழைத்துச் சென்று அவர்களது கிராமத்துக் கோயிலிலேயே அவர்களுடைய கல்யாணத்தை முடித்திருந்தான்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌
CehkvfRxSrjiI
oZbdfQVzYBelDFs
PksMNCJOpve
LFoWhlMrOB