ATM Tamil Romantic Novels

கள்ளழகனின் அழகி

விக்கிரமனும் என்ன செய்வான் அவனுக்கும் இது புதிது தன் வாலிப காலத்து ஆசைகளையெல்லாம் அடக்கி எந்த ஓரு பெண்னையும் பார்க்காமல் இத்தனை நாள் வரை ஆசைகளை அடக்கி வைத்தவன் 

 

 சிறுவயதிலிருந்தே கடினமான வேலைகளை செய்தவன் தன்னுடைய வலிகளை கஷ்டங்களை சொல்வதற்கு ஆள் இல்லாமல் இருந்தவன் தன்னுள்ளே இறுகியிருந்தான் அதனால் அவனுக்கு மென்மையின் அர்த்தம் தெரியாமல் போயிருந்தது அதிலும் இன்று உணர்ச்சிகள் தூண்டப்பட தனக்கென உரிமை உள்ளவள் என்ற நினைப்பில்

மடை திறந்த வெள்ளம் போல் தன்னுடைய உணர்வுகளை அவளிடம் காட்டியிருந்தான். 

 

கொஞ்சம் நிதானமான பின்பு திரும்பி அவளிடம் இதற்க்குத்தான் சொன்னேன் நீ சிறு பெண் உன்னால முடியாது அப்ப எல்லாம் தாங்குவேன் சொல்லிட்டு இப்ப ஒரு முத்தத்துக்கே இப்படி இனி மத்ததுக்கெல்லாம் ஊரை கூட்டி ஒப்பாரி வைப்ப போல என அவளிடம் எரிந்து விழ அவள் மேலும் அழ தயாரானாள் 

 

அதற்குள் அவனுடைய வாயின் மேல் விரல் வைத்து உஷ் என கண்ணில் கோபத்தோட மிரட்ட அவள் வந்த அழுகையை அடக்கி அவனிடம் 

நீஙக பெண்களை மதிக்கறவர் தானேஅப்புறம் ஏன் இப்படி வன்மையா நடந்துக்கிறீங்க என்க அவள் அழுகையை அடக்கி அவனிடம் கேவிக் கொண்டே பேசிய விதம் அவளை இன்னும் சிறு பெண்ணாக காட்ட அவனின் கோபம் மட்டுபட்டது 

 

அவளும் சிறு பெண்தானே என்றாலும் இப்பொழுது அவள் அவனின் மனைவி இதை மட்டுமல்ல இனி அவனின் கரடு முரடான வாழ்க்கை பாதையை அவள் ஏற்று சமாளித்தாக வேண்டும் அதற்கு அவளிடம் கொஞ்சம் கண்டிப்புடன் இருந்தாக வேண்டும் என எண்ணி குரலில் சிறு கண்டிப்புடன் மலர் நீ ஒன்றை தெரிஞ்சுக்கோ உன்னிடம் நான் இப்படித்தான் இதை இப்ப இருந்தே பழகிக்கோ என்னோட சந்தோஷம் கோபம் துக்கம் எல்லாமே உன்னைத்தான் பாதிக்கும் அதனால் தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க யோசிதேன். 

 

இனி அதை பற்றி பேசி பிரயோஜனம் இல்லை. வலிகளை தாங்கிக்க பழகிக்க அது ஒரு நாள் கண்டிப்பா சந்தோஷ மா மாறும். என்று கூற அவள் சரி என தலை அசைக்க 

 

 

அவன் மெலிதாக சிரித்துக் கொண்டே இராத்திரி நம்ம ருமுல இருக்கும் போது எதுவும் கத்திட மாட்டியே என மறுபடி உறுதி படுத்திக் கொள்ள அவள் மாட்டேன் என சிறிது பயத்துடனையே தலை ஆட்டினாள்.

 

பைக்கில் ஏறியவள் அவனுடன் பட்டும் படாமல் உட்கார்ந்தால் அவனும் மறுபடியும் தன் உணர்ச்சிகளுக்கு சோதனை தரக்கூடாது என்று எண்ணி அவள் விலகி அமர அனுமதித்தான்.

 

 அவன் பைக்கை ஒட்டி கொண்டு அவளுடன் தன்னுடைய வீட்டை நெருங்கும் வேளையிலே

தன் வீட்டின் முன்பு தங்கைகளின் கணவர் வழி சொந்தங்கள் கூடி பெருங் கூட்டமாக நின்றிருந்தனர்.

 

சின்ன சலிப்புடன் இவர்களை எப்படி சமாளிக்க ஆவுன்னா பஞ்சாயத்து வைக்க வந்திருவான்களே என்று மனதில் நினைத்தபடி வண்டியை தன் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தான்.

 

3 thoughts on “கள்ளழகனின் அழகி”

  1. Super semaya irukku 👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ஆனா சின்ன எபி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top