ATM Tamil Romantic Novels

கள்ளழகனின் அழகி

விக்ரமன்  வீட்டின் முன்பு பந்தல் போடப்பட்டிருந்தது. சரவணன் ஏற்பாடாகத்தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டே அங்கு கூடி அமர்ந்திருந்த சொந்த பந்தங்களை பார்த்தான். 

 

அவனைப் பார்த்ததும் மூத்தவள் ராகினியின் மாமனார் என்னப்பா சொந்த பந்தங்கள் இத்தனை பேர் இருக்கும் போது நீ எங்கள மதிக்காம இப்படி ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு வந்திருக்கிற எனக் கேட்க அதைத்தொடர்ந்து மற்றவர்களும் சலசலக்க ஆரம்பித்தனர். இப்படியே போனால் இது இப்பொழுது முடியாது என எண்ணிய விக்ரமன் அனைவரையும் பார்த்து 

 

 

எல்லோரும் என்ன மன்னிச்சிடுங்க எனக்கு வேற வழி தெரியல சூழ்நிலை காரணமா இந்த பொண்ண கல்யாணம் செய்ய வேண்டிய வந்துருச்சு  என்று கூறி அவன் மலர்மொழியை கல்யாணம் செய்த சூழ்நிலையை கூறி விட்டு எந்த சூழ்நிலையில் கல்யாணம் பண்ணினேன் உங்களுக்கு சொல்லிட்டேன் கண்டிப்பா நல்ல மனசு இருக்கறவங்க இந்த கல்யாணத்தை ஏத்துப்பாங்க அப்படி ஏத்துக்கிறவங்க அந்த நல்ல மனசோட எங்கள ஆசீர்வதித்தா அது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். இப்பவும் நான் சொல்றேன் என்னோட இந்த ஜென்மத்துக்கு இவள்  மட்டும் தான் என் மனைவி யார் என்ன சொன்னாலும் அதுல மாற்றம் கிடையாது. அதனால இங்க இருக்குறவங்க எல்லாரும் நல்ல உள்ளங்களா தான் இருப்பீங்கன்னு நினைக்கிறேன். மதிய விருந்து ஏற்பாடு பண்ணி இருக்கேன். அதுல எல்லாரும் கலந்துக்கிட்டு எங்கள ஆசீர்வாதம் பண்ணனும்னு கேட்டுக்குறேன் என்று கைகூப்பியப்படியே சொல்ல  

 

 

இனி அங்கு யார் என்ன பேச  உடனே சரவணனின்  அப்பா தம்பி சொல்றதும் கரெக்ட் தான் நம்ம எல்லோரும் இந்த விருந்துல கலந்துகிட்டு தம்பியை ஆசீர்வதித்து நம்ம நல்ல மனச இவருக்கு காட்டுவோம் என நல்ல மனசு என்பதை அழுத்தமாக கூறினார் அவர்களும் சரி என்று தலையாட்டி விட்டு விருந்து நடக்கும் இடத்திற்கு சென்றனர்.

 

 சரவணன் அனைவரும் கூடியிருக்க எப்படி சமாளிக்க போறானோ என்று பதறி ஓடி வந்தவன் இவன் அவர்களை சமாளித்த விதத்தை கண்டு சிரிப்பை அடக்கியபடி நண்பனின் திறமையை மனதில்  பாராட்டியப்படியே வந்தவன் அனைவரையும் விருந்து நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

 

அதன்படி மதிய விருந்தை ஒழுங்கு செய்தவன் உள்ளே வந்து சந்தியாவிடம் ஆரத்தி கரைக்க கூறினான்.  உடனே சந்தியா எங்கிருந்தோ வந்தவளுக்கு எல்லாம் என்னால்  ஆரத்தி கரைக்க முடியாது என்று கூறி முடிக்கும் முன் நீ உன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் எடுக்க வேண்டாம் என் நண்பனுக்கும் அவனோட மனைவிக்கும் சரவணனின் மனைவியா நீ ஆரத்தி எடுக்கிற இல்ல நடக்கிறது வேற என்று கூறிவிட்டு ராகினியை பார்த்து உங்களுக்காக இத்தனை நாள் தன்னுடைய சந்தோசத்தை  உங்க ஒவ்வொருத்தர்கிட்டயும் அடகு வைத்துவிட்டு அதை மீட்க முடியாம இருக்கிறான். இனிமேலாவது அவளோட சந்தோஷத்தை அவனுக்கு கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா தயவு செய்து சந்தியாவோட சேர்ந்து போய் ஆரத்தி எடுங்க  என்று கூறி முளறத்து விட்டு சென்றான்.

 

அவன் சென்றவுடன் ராகினி  இனி எதையும் மாற்ற முடியாது என்று சந்தியாவுடன் ஆரத்தி எடுக்க சென்றாள்.

 

ஆரத்தி எடுத்து விளக்கேற்றி பாலும் பழமும் கொடுக்கும் சம்பிரதாயத்தை முடித்தனர். ராகினியும் சந்தியாவும் மலர் மொழியிடம் சுமுகமாக பேசவில்லை என்றாலும் அவளின் மீது கோபத்தை காட்டாமல் இருந்தார்கள்  அதுவே போதும் என்று நினைத்தான்

 

 விக்ரமன் மேலும் மலர்மொழிக்கும் அவனுக்கும் ஆன தனிமையை எதிர்பார்த்திருந்தான். ஏனெனில் மலர் மொழியின் முகம் இவன் வெளியில் கோபத்தை காட்டியதால் வருத்தத்துடனும் பயத்துடனும் இருந்தது. அதனால் அவளை சமாதானப்படுத்த தனிமையை எதிர்பார்த்தான.

 

 வீட்டில் சொந்த பந்தங்கள் நிறைய இருந்ததால் அவனுக்கு அந்த தனிமை கிடைக்கவில்லை ஒரு வழியாக மதிய விருந்து முடிந்து அனைவரையும் வழி அனுப்பி வைத்துவிட்டு 

 

 

விக்ரமன் சந்தியாவை அழைத்து மலர் மொழிக்கு வீட்டை சுட்டிக்காட்டி விட்டு அவள் கொஞ்சம் ஓய்வெடுக்க அவனது ரூமில் கொண்டு போய் விடச் சொன்னான். ராகினியும் சரி என்று கிளம்ப அப்பொழுது வந்த ராகினியின் மாமியார் அதெல்லாம் இப்பவே அங்க அனுப்ப முடியாது ராத்திரி சடங்குக்கு தான் ரூமுக்கு வரணும் தம்பி என்று கூற அவனுக்கு எங்கிருந்துதான் எனக்குன்னு வராங்களோ தெரியல என்று  மனதில் நினைத்து வெளியே  சிரித்து தலையாட்டினான். அதைத்தொடர்ந்து ராகினியின் மாமியார்    கீழே உள்ள உன்னோட ரூம்க்கு கூட்டிட்டு போ  ராகினி என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். ராகினியும் வீட்டை சுற்றி காட்ட அவளை அழைத்துச் சென்றாள். 

 

அந்த வீடு விக்ரமனின் பரம்பரை வீடாக இருந்தாலும்  தங்கைகள் வந்து செல்வதற்கு வசதியாக கீழே மூன்று அறைகளும் மேலே மாடியில் இரண்டு அறைகளுமாக  புதுப்பித்துக் கட்டி இருந்தான் மேலும் வீட்டிற்கு பின்புறமான தோட்டம் பால்கனி ஆகியவற்றை இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி புதுப்பித்துக் கட்டியிருந்தான்.

 

ராகினி அவளை அழைத்துச் செல்ல மலர் மொழி தயங்கியபடியே அவனைப் பார்க்க அவன் மெல்ல தலையசைத்து அவளுடன் செல்லுமாறு கூறினான். இதை பார்த்துக் கொண்டே வந்த சரவணன் என்னடா மாப்பிள ஒரே ரொமான்ஸா இருக்குது  என கேட்க விக்கிரமனோ எது   இது ரொமான்ஸ் நீ பார்த்த  என்று சினிமா பாணியில் கேட்க இருவரும் ஒரே நேரத்தில் சிரித்தனர். 

 

அதன் பிறகு இரவு நேர சடங்கிற்காக விக்ரமனின் தங்கைகளின் மாமியார் மலர் மொழியை அலங்கரித்து அவனது அறைக்கு அனுப்பி வைத்தனர். அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த மலர் மொழி அவள் மைண்ட் வாய்ஸில் 

 

 அடியே மலரே அன்னைக்கு எங்க அவரு உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிருவாருன்னு பயந்து எல்லாம் தாங்குவேன்னு பெரிய இவளாட்டம் வீர வசனம் எல்லாம் பேசி கல்யாணம் முடிச்சாச்சு. இப்ப என்ன பண்ண போற மாமா இன்னைக்கு இருக்குற வேகத்துல நீ மாட்டினே அவ்வளவுதான் அதனால இன்னைக்கு எப்படியாவது தப்பிக்கணும் அதுக்கு நாம முன்னமே ஏற்பாடு பண்ண ஐடியா தான் கரெக்ட் என்று எண்ணிக்கொண்டே அவள் முந்தானையில் முடிந்து வைத்திருந்த தூக்க மாத்திரையை எடுத்தாள் ராகினியின் மாமியாருக்காக சரவணன் மதியம் வாங்கி வந்த மாத்திரையில் நான்கு மாத்திரையை எடுத்து வைத்திருந்தால் அதை பாலில் கலக்கினாள்.

 

  என்னை மன்னிச்சிடு மாமா எனக்கு வேற வழி தெரியல இன்னிக்கு ஒரு நாள் உன்னை சமாளிச்சுட்டேன்னா நாளைக்கு எப்படியாவது சரவணன் அண்ணன் மூலமா உன்கிட்ட பேசி 

 எனக்கு கொஞ்ச நாள் அவகாசம் கேட்டுக்குவேன். உன் வேகத்தை பார்த்தாலே எனக்கு பயமா இருக்குது கொஞ்ச நாள் உன் கூட பேசி பழகிட்டேனா அந்த பயம் என்கிட்ட இருந்து மறைஞ்சிடும் ஆனா அதற்கான நேரத்தை நீ கொடுக்க மாட்டேங்குற வேற வழி எனக்கு தெரியல என்று மனதில் மன்னிப்பு கேட்டபடி அறைக்குள் நுழைந்தால்.

 

 டேபிளில் பால் சொம்பை வைத்துவிட்டு த திரும்பியவள் பார்த்தது கதவை தாழிட்டு கொண்டிருக்கும் விக்ரமனை தான். மலருக்கு கை கால்கள் நடக்க ஆரம்பித்தது. நடுக்கத்தை மறைக்க கட்டிலை இறுகப்பற்றிக் கொண்டாள். விக்ரமின் மெதுவாக நடந்து வந்து கட்டிலை அடைந்தான். 

 

மலரைப் பார்த்து உட்காரு மலரு ஏன் நிற்கிறாய் என்று கேட்டுக்கொண்டே அவளை கைபிடித்து கட்டிலில் அமரச் செய்து அவனும் அமர்ந்தான். அவன் கை பிடித்ததும் அவசரமாக அவனிடமிருந்து கையை எடுக்கவும் அவன் நிமிர்ந்து பார்த்தான் 

 முதல்ல உங்களுக்கு பால் கொடுக்க சொன்னாங்க அதுதான் என்று மெதுவாக பால் சொம்பை நோக்கி நகர்ந்தாள். நகர்ந்தவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

 மலர் மொழிக்கு அவன் பிடியில் மூச்சு திணறுவது போல் இருந்தது. அவன் அவள் கைகளைப் பிடித்து அவள் கைகளில் இருந்த வளையல்களை கழற்றினான்.

 

 உடனே மறுபடியும் மாமா பால் மட்டும் கொஞ்சம் குடிச்சுடுங்க என்றால் அவன் நான் எப்பொழுதும் பால் குடிக்க மாட்டேன் மலர் மொழி என்றான் 

 

 மாமா சம்பிரதாயத்துக்காக கொஞ்சம் மட்டும் என்றால் இல்ல மலரு எனக்கு சின்ன வயசுல இருந்தே பால் குடிச்சா சீக்கிரம் தூக்கம் வந்துரும் அதனால நான் எப்பவும் வேலை இருந்ததுன்னா பால் குடிக்க மாட்டேன் என்க அடச்சே இது தெரியாம நாலு தூக்கு மாத்திரையை வேற நான் வேஸ்ட் பண்ணிட்டேன் எப்படியாவது அவரை பால் குடிக்க வைக்கணும் என்ற முடிவுடன் அவனை விட்டு எழ முயற்சிக்க அது வெறும் முயற்சியாக மட்டுமே ஆனது விக்ரமன் பிடியிலிருந்து கொஞ்சமும் அவளால் நகர முடியவில்லை. மலர் மொழிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை மீண்டும் பால் குடிக்க கேட்டால் அவன் ஏதாவது தப்பாக நினைத்து விடக்கூடும் என சிறிது நேரம் அமைதியாக இருந்தால்.

 

மடியில் இருந்தவளை அணைத்தபடியே அவளின் கழுத்தில் தன் இதழ்களால் கோலம் போட ஆரம்பித்தான் மலர் மொழிக்கு இதயம் படபடவென அடிக்க ஆரம்பித்தது கழுத்தில் அழுத்தமான முத்தத்தை பதித்தவன் அப்படியே கீழே இறங்க ஆரம்பித்தான். மலர் மொழி கூச்சத்துடன் அவனை தடுக்க ஆரம்பிக்க மேலும் மூர்க்கத்துடன் அவளை இறுக்கி அணைத்தவன் அவளின் இதழை முத்தமிட ஆரம்பித்தான் சிறிது நேரத்தில் அவளிடம் ஏதோ வித்தியாசம் தோன்றவே அவளை தன்னிடமிருந்து பிரிக்க அவள் மூர்ச்சையாகி அவனது மடியிலேயே விழுந்தால். பதறிய விக்ரமன் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து தெளிக்க அவள் மயக்கம் தெளியவில்லை அவனுக்கு பயமாகி போனது. இவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணியதால் வீட்டில் யாரும் இல்லை.உடனே சரவணனுக்கு அழைத்து அவனுடைய காரை எடுத்து வீட்டின் பின்பக்கம் வரச் சொன்னான் சரவணன் ஏதோ அவசரம் என எண்ணி காரை கொண்டு வந்து நிறுத்தவும் சரவணன் மலர் மொழியை கைகளில் ஏந்தி கொண்டு காரை நோக்கி வரவும் சரியாக இருந்தது. அவசரமாக காரை விட்டு இறங்கியவன் மாப்பிள்ளை தங்கச்சிக்கு என்ன ஆச்சு என கேட்க தெரியல டா மயங்கி விழுந்துட்டா சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு போகலாம் என்று பின் சீட்டில் அவளை கிடத்துவிட்டு அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டான். சரவணன் காரை ஓட்ட ஆரம்பித்தவன் விக்ரமன் பதட்டத்துடன் இருந்ததால்

 அவனை இயல்பு நிலைக்கு கொண்டுவர என்னடா மாப்பிள்ளை தங்கச்சி எப்படி மயங்கி விழுந்துச்சு நீ ஏதாவது மூர்க்கத்தனமா நடந்துக்கிட்டயா அட நீ வேற ஏண்டா அவ என்ன பார்த்தே பயந்து மயங்கி விழுந்துட்டா இதுல நீ சொன்ன மாதிரி ஏதாவது நடந்திருந்தது இவள ஐசியூ ல தான் கொண்டு சேர்க்கணும் என்றான் சலித்த படி உடனே சரவணன் ஓ இதுதான் அழகுல மயங்கி விழுகிறதா மாப்பிள இப்பதான் முதல் முறை பார்க்கிறேன் என்று கூற விக்ரமன் பதட்டத்தை மறந்து சிரித்தான்.

 

2 thoughts on “கள்ளழகனின் அழகி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top