ATM Tamil Romantic Novels

கள்ளழகனின் அழகி

காலையில் விடிந்ததும் எழுந்த விக்ரமன் தன்னருகில் தூங்கிக் கொண்டிருக்கும் மலர் மொழியை தொட்டுப் பார்த்தான் காய்ச்சல் விட்டிருந்தது. மனதில் சிறு நிம்மதியுடன் எழுந்து குளித்து கடைக்கு செல்ல தயாராகினான். கல்யாணத்துக்கு முன்னமும் இப்பொழுதும் ஒரு வாரமாக கடைக்கு செல்லாததனால்.அவனுக்கு வேலை அதிகமாக இருந்தது.

அவன் கிளம்பி வெளியே வந்த போது கனிமொழி எதிரில் வந்தால் அண்ணா எங்களுக்கு சொல்லாமல் கல்யாணம் முடிச்சு கிட்ட பரவால்ல  எங்க மாமியார் விட்டு சொந்தங்களுக்கு பதில் சொல்ல முடியல அதனால சிம்பிளா ஒரு ரிசப்ஷன் வைக்கலாமா  எனக்கேட்க சரிமா யோசிச்சிட்டு சொல்றேன் என்று கடைக்கு கிளம்பினான்.

 

கடையில் வேலை செய்யும் தர்மன் கடையை பார்த்துக் கொண்டிருந்தான்.

கடையை அவன் சரியாக பார்த்தாலும் விக்ரமனுக்கு தான் பார்த்தது போல் இருக்காது என எண்ணி வந்திருந்தான் அதன்படி சில வேலை சரி செய்ய சொல்லிவிட்டு கல்லாவில் அமர்ந்தான் 

 

அப்பொழுது சரவணன் போனில் அழைக்க எடுத்து சொல்லுடா என்றான் ஏண்டா உனக்காக நான் என் பொழப்ப கெடுத்துட்டு இங்கிருக்கேன் நீ கடையை பார்க்க போயிட்டியா என்று கத்த 

 

டேய் கத்தாதே கடைக்கு வந்து ஒரு வாரம் ஆச்சு சும்மா பாத்துட்டு போலாம்னு வந்தேன் ஒரு மணி நேரத்துல வந்துருவேன்டா என்று கூறி போனை துண்டித்தான்.

 

சரியாக ஒரு மணி நேரம் கழித்து வீடு கிளம்பினான். மலர் மொழி அன்றைக்கு சமைத்திருந்தால் அசைவம் சைவம் அனைத்தையும் செய்திருந்தாள்.

 

அவன் கனிமொழியிடம் அவளுக்கு உடம்பு சரியில்ல அவளை எதற்கு சமைக்க வச்சீங்க என்று கேட்டான். நாங்க சொன்னோம் மலரு கேக்கல என்றவள் அவன் முறைப்பதைக் கண்டு அண்ணி கேக்கல என்று மாற்றி  கூறினாள்.

 

அதற்குள் மகேஷ் சரவணன் கனிமொழியின் கணவன் சர்வா மற்றும் குழந்தைகளும் சாப்பிட அமர அமைதியானான். மலர் மொழி அவன் குரலை கேட்டு வெளியே வந்தாள். வந்தவள் அனைவரும் அமைந்திருக்க பரிமாற ஆரம்பித்தாள் மலர் மொழியின்  கிராமத்து சமையல் அனைவருக்கும் பிடித்திருந்தது.

 

 

அனைவரும் நன்றாக இருப்பதாக சொல்ல விக்கிரமனோ அமைதியாக சாப்பிட்டான். அவளுக்கு அவனுக்கு தன் சமையல்  பிடித்திருக்கிறதா என தெரியாமல் அவன் ஏதாவது சொல்லுவான் என்று அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் ஏதும் சொல்லாமல் சாப்பிட்டுவிட்டு கை கழுவ போனவன் மலர் மொழியை. அழைத்தான்.

 

கை கழுவி விட்டு திரும்பியவனிடம் மாமா என் சமையல்  எப்படி இருந்தது ஒண்ணுமே சொல்லலையே என்றவளிடம் சாப்பிட்டுவிட்டு மேல வா எப்படி இருந்ததுன்னு சொல்றேன் என்று விட்டு அவனது அறைக்குச் சென்றான்.

 

அவளும் சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்றவள் அவனை தன் கண்களால் துழவ அவன் பின்னிருந்த அவளை அணைத்து இருந்தான்.

 

அணைத்தவன் அவள் காதருகே சென்று ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்க அம்மா கையால சாப்பிட்ட மாதிரி இருந்தது ரொம்ப நிறைவாய் இருக்குது எங்க அம்மா கூட உன்னை மாதிரி தான் அம்மியில் அரைச்சு தான் குழம்பு வைப்பாங்க எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது என்றவனின் முகத்தில் இருந்த நிறைவு கண்டு அவளுக்கும் மனது நிறைந்தது.

 

அவன் உடை மாற்ற அவளை அணைப்பிலிருந்து விலக்கினான் மலர்மொழிக்குஅந்த அணைப்பு வேண்டுமாயிருந்தது இருப்பினும் தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு நின்றாள்

 

நீ எப்படி இவ்ளோ நல்லா சமைக்கிற என்று கேட்டுக்கொண்டே தன் சட்டையை கழற்றி வேறு சட்டைக்கு மாறினான் அவள் முன்னரே அவன் உடை மாற்றியது அவளுககு வெட்கத்தை தர அவள் தலை குனிந்தபடியே இருந்தாள். இருப்பினு ம் அவளின் கன்னச்சிவப்பு அவளை காட்டிக் கொடுக்க அவன் சிரிப்புடன் மெல்ல அவளை நெருங்கினான் 

 

 

அந்த சிரிப்புடனே அவளை நெருங்க நெருங்க அவளும் நகர்ந்தவள் கட்டில் இடிக்க நகர முடியாமல் அங்கேயே நின்றாள் . அவள் அவனை விலக்க விரும்பவில்லை நடப்பதை ஏற்றுக் கொள்ள தயாராகியிருந்தால்

 

அவள் ப க்கத்தில் வந்தவன் அவளை அணைத்தபடியே கட்டிலில் சாய்ந்தவன் அவளின் கழுத்தில் இளைப்பாறி முத்த மழை பொழிந்தான் மலர்மொழி முதலில் கண்களை மூடியவாறே பயத்துடன் இருந்தவள் அவன் முத்தத்தால் சுகமான உணர்ச்சிகளின் பிடியில் சிக்கியிருந்தால் அவளின் ஒத்துழைப்பு அவனுக்கு உற்சாகத்தை தர அதிரடியாக அவளின் இதழை முற்றுகையிட்டான். அவள் இதழில் முத்தமிட்டுக் கொண்டே அவளின் சேலையை கலைய முற்பட திடிரென்று கேட்ட சத்தத்தில் அதிர்ந்து இருவரும் விலகி எழுந்தனர்.

 

சுவற்றில் மாட்டப்பட்டிருந்த விக்கிரமனின் தாய் தந்தை போட்டோ கீழே விழுந்து உடைந்திருந்தது. அதை பார்த்ததும் விக்கிரமனுக்கு மனம் கலங்கிட உடைந்த போட்டோவை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

மலர்மொழியும் சிறிது நேரத்தில் தன்னை சரி செசய்து கொண்டு விக்கிரமனை தேடி வெளியில் வந்தால் 

வந்தவள் அவன் தோட்டத்தில் அமர்ந்திருப்பதை கண்டு அங்கு சென்றாள். அவன் பெற்றவர்களின் உடைந்த போட்டோவை வைத்துக் கொண்டு கண் கலங்கி அமர்ந்திருந்தான். 

 

மாமா என அழைக்க அவளை பார்த்தவன் அவளும் கண்கலங்க நிற்பதை பார்த்தவன் தன்னை நிமிடத்தில் தேற்றியவன் நான் போய் இதை கடையிலே கொடுத்து மாற்றி விட்டு வருகிறேன் என்று சொல்லி அவளை பார்க்காமலேயே வெளியே வந்து பைக்கை எடுத்து கிளம்பினான்

 மலர் மொழிக்கு மனது சரியில்லாததால் அவள் சரவணனுக்கு போன் செய்து நடந்ததை கூறி விக்கிரமனை பார்த்துக் கொள்ளுமாறு கேட்டாள்.

 

 சரிமா நீ கவலைப்படாத நான் போய் பார்க்கிறேன் என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அவனும் விக்ரமனை பார்க்க கிளம்பினான்

 

 கடைக்கு சென்று அதை மாற்றி விட்டு திரும்பும் வழியில் விக்ரமனை பார்த்தான் சரவணன். டேய் மாப்பிள்ளை என்று அழைத்துக் கொண்டே அவளிடம் சென்றவன் தங்கச்சி எல்லாம் சொல்லுச்சுடா கவலைப்படாத காத்து பலமா அடிச்சிருக்கும் அதனால போட்டோ விழுந்திருக்கும் இதுக்கெல்லாம் கவலைப்படலாமாடா? என்று கூற அப்படி இல்லடா மச்சான் எனக்கு என்னமோ மனசு சரியில்லடா என்றவுடன் டேய் மாப்ள நான் அன்னைக்கு சொன்னேன்ல அந்த வைத்திச்சு வீட்டுக்கு போலாமா என்று கேட்டான் அதற்கு விக்கிரமம்ன் டேய் நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்ன பேசிக்கிட்டு இருக்க என்று கோபத்துடன் மேலும் அவனைப் பேச வாய் எடுக்க 

 

 இல்லடா மாப்பிள்ளை அந்த வைத்தியச்சியோட வீட்டுக்காரர் 

 பழைய காலத்து ஆளு அவர் ஓலைச்சுவடி ஜோசியம் பார்த்து கொடுப்பார் உனக்கு வேற மனசு கஷ்டமா இருக்குன்னு சொன்னியே அதுதான் அங்க போகலாம் என்று கேட்டேன் 

 

 நீ இன்னும் எந்த காலத்துல டா இருக்க இப்ப வந்து ஓலை சுவடி அது இதுன்னு பேசுற என்று சலிப்புடன் கூற அதற்கு சரவணன் எந்த காலமா இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் மனசுக்கு சங்கடத்தை உண்டு பண்ணும் உனக்கு இப்ப இந்த விஷயம் சங்கடமா இருக்கிறப்போ அது என்னன்னு போய் பார்க்கலாம் டா என்று அவனை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு வைத்தியட்சி வீட்டுக்கு சென்றான் 

 

 அந்த ஊர் எல்லையில் இருந்த ஒரு குடிசையில் அந்த தாத்தாவும் பாட்டியும் இருந்தனர். அந்த குடிசையை அடைந்து இருவரும் அந்த தாத்தாவிடம் சென்று ஓலைச்சுவடி பார்க்க விரும்புவதாக கூற உள்ளே சென்று சில ஓலைச்சுவடுகளை எடுத்து வந்தார் எடுத்து வந்தவர் விக்ரமனிடம் பிறந்த தேதி ராசிபலவற்றை கேட்டுவிட்டு கண் மூடி சிவனை தியானித்து விட்டு ஒரு ஓலைச்சுவடியை எடுத்து படிக்க ஆரம்பித்தார் படிக்க ஆரம்பித்த உடன் சிறிது நேரத்திலேயே ஓலைச்சுவடியை வைத்துவிட்டு சிறிது நேரம் அமைதியாய் இருந்தார் 

 

 பின்பு விக்கிரமனை பார்த்து இப்பொழுது நீ இந்த ஓலைச்சுவடிகளை தனியா பார்க்க முடியாது உன் மனைவியை அழைத்து வந்து இருவரும் சேர்ந்துதான் பார்க்கணும் என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

 

 விக்கிரமனும் வேறு வழி இன்றி வெளியே வந்து சரவணனிடம் கூற சரி மாப்ள நாளைக்கு தங்கச்சி அழைச்சிட்டு வரலாம் என்று இருவரும் கிளம்பினர் 

 

 மறுநாள் மலர் மொழியை அழைத்து வந்ததும் அந்த தாத்தா ஓலைச்சுவடியை படித்து அதை சொல்ல ஆரம்பித்தார்.

 

 அதைக் கேட்ட விக்ரமனும் மலர் மொழியும் அதிர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் அந்த தாத்தா விடமே வழியை கேட்டனர். அதற்கு அவர் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில் வருமாறு கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

 

 மன பாரத்துடன் வெளியே வந்தவர்கள் சரவணனை தேடினர் அவன் எங்கும் கண்ணுக்குத் தெரியாததால் போனை எடுத்து அவனுக்கு அழைப்பை விடுத்தான்.

 

 போன் வெகு நேரமாக அடிக்க சரவணன் அழைப்பை எடுக்கவில்லை மறுபடியும் போன் செய்ய அதை எடுத்த சரவணன் தற்பொழுது நீங்கள் டயல் செய்யும் வாடிக்கையாளர் இப்பொழுது அவர் வீட்டை நோக்கி தலைதெரிக்க ஓடிக்கொண்டிருக்கிறார் அதனால் அவர் ஓடி சென்று அவர் பிள்ளைகளையும் குட்டிகளையும் அழைத்துக் கொண்டு கண்கானாத இடத்திற்கு செல்ல இருப்பதால் தயவு செய்து பிறகு அழைக்கவும் என்று கூறி போனை அணைத்து பாக்கெட்டில் வைத்து விட்டு அந்த தாத்தா சொன்னதை நினைத்தவன்

 

 அப்பனே விநாயகா அன்னைக்கே அந்த கல்யாணத்தை நிறுத்திடுன்னு சொன்னேன் கேட்டியா நீ இப்ப நான்

 

கஷ்டப்பட்டு கொரோனாவில் இருந்தெல்லாம் தப்பிச்சு வந்ததெல்லாம் வீணா போகப்போகுது இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சேங்கறதுக்காக என் உயிர் போக போகுது  

 உயிர் போக போகுது 

உயிர் போக போகுது 

 என்று புலம்பியபடியே ஓடிக் கொண்டிருந்தான்.

 

 

 

 

1 thought on “கள்ளழகனின் அழகி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top