ATM Tamil Romantic Novels

மையல் கொண்டேன் மாதீரா 1

மாதீரா 1

 

வீரத்திற்கும் தியாகத்திற்கும் பேர் போன.. பல மறவர்களை தன்னுள் பொதித்து புதைத்து நிற்கும் வீரம் விளைந்த திருநெல்வேலி!!

 

திருநெல்வேலிக்கு ‘வேணுவனம்’ என்பது பண்டைய பெயர். ‘வேணு’ என்னும் சொல் மூங்கிலைக் குறிக்கும். பண்டைக் காலத்தில் மூங்கில் காடாக விளங்கிய இந்த ஊர், மூங்கில்-நெல்லால் பசியைப் போக்கிய காரணத்தால், இந்த ஊரை ‘நெல்வேலி’ என்றனர்.

 

திருநெல்வேலியும் அதனை அடுத்த பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆறானது இவ்விரு நகரங்களுக்கிடையே ஓடுகின்றது. திருநெல்வேலி ஆற்றின் மேற்குப் புறமும், பாளையங்கோட்டை கிழக்குப் புறமும் அமைந்துள்ளது.

 

வெறும் அழகு மட்டுமா? அவர்களின் பேச்சு வழக்கே அலாதி தான்!!

 

ஏலேய் என்று கண்டிப்போடு கூறுவதாகட்டும்.. அண்ணாச்சி என்று பாசமாக அழைப்பதாகட்டும் நெல்லை தமிழுக்கு நிகர் நெல்லை தமிழே!!

 

“ஐயோ காப்பாத்துங்க!! காப்பாத்துங்க!!” என்று முகம் கை கால்களில் ஆங்காங்கே ரத்தம் வர.. போட்டிருந்த சட்டை எல்லாம் தோரணங்களாக தொங்க.. இடுப்பில் வேஷ்டியோ எப்பவோ காணாமல் போயிருக்க.. கட்டாம்பட்டி அண்டர்வேரோடு நேராக ஓட முடியாமல் விழுந்து புரண்டு மண்ணில் பாதியைத் தன் மீது அப்பிக்கொண்டு கதறிக் கொண்டிருந்தான் அந்த மனிதன்!!

 

சுற்றி சுற்றி அந்த திடலில் ஓடிக்கொண்டிருக்க மட்டுமே முடிந்தது அடி வாங்கியவனால்.. அதைத் தாண்டி வெளியில் ஒரு எட்டு வைத்து கூட தப்பித்துப் போக வழியில்லை. 

 

“ஏலேய் இது ஒரு வழி பாதலே.. உள்ள வர மட்டுந்தேன் முடியும். நாங்களா… இல்லையில்லை அண்ணனா பாவப்பட்டு உன்னை வெளியே விட்டா தான் தப்ப முடியும்லே!” என்றான் அருகிலிருந்து அங்கே நடக்கும் ஒன் மேன் மேட்சை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவன்!!

 

“அப்படி என்னல நான் தப்பு செஞ்சேன்? தெரியாத்தனமா இந்த பக்கம் வந்துட்டேன் மக்கா… பெரிய மனசு பண்ணி மாப்பு தாங்கலே.. புள்ளக்குட்டிக்காரன்யா நானு!!” என்று ஊழு ஊழு என்று அழுதான் அதே அடி வாங்கிய அப்பாவி!!

 

அப்பாவியோ இல்லை அடப்பாவியோ இவர்களின் எல்லைக்குள் வந்தால் ஆவியாகி போவது நிதர்சனம்!!

 

“ஏலே..!!” என்று ஆளுமையான குரலில் அந்த அப்பாவி பயந்து நடுங்க அருகில் இருந்தவன், அவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்து அவன் முன்னால் நிறுத்தினான்.

 

“உடம்புல ஒரு இடம் இல்லாமல் எல்லா இடமும் பஞ்சராகி இருக்குல.. இதுல எங்கன இன்னும் அடிக்க?” என்ற திருமலை நாயக்கர் மஹால் தூணை போல இருந்த தன் உடம்பை ஒருமுறை சுற்றிப் பார்த்துக் கொண்டு எதிரில் நின்றவனை பார்த்து பயதில் எச்சில் கூட விழுங்க முடியாமல் அடக்கமாய் நின்றிருந்தான். பின்னே அடக்கமாய் நிற்காவிடில் அடக்கம் செய்து விடுவார்களே அந்த பயம்தான்!!

 

ஏனெனில் எதிரில் இருப்பவன் மனிதனாக அவன் கண்களுக்கு தெரிந்தால் தானே?? அசுரனாக அல்லவா தெரிந்தான்!!

அதுவும் கோபம் வந்தால் அவன் அசுராதி அசுரன்!!

 

எதிரில் நின்ற அந்த அசுரனோ… ஒற்றை கையினால் அவனின் சட்டை காலரோடு அப்படியே தூக்கி, இருக்கைகளாலும் சுழற்று சுழற்றி தலைகீழாக அங்கிருந்த மணலில் உரலில் நெல் குத்துவதை போல ஓங்கி ஒரு குத்து குத்த.. அவனோ நரகம் சூன் என்று அவ்விடத்தை பார்த்து விட்டு வந்து “ஆஆஆஆஆ!!!” என்று பயங்கர அலறலோடு கீழே விழுந்தான்.

 

அந்த அடி வாங்கிய அடிநம்பியோ ‘இன்னைக்கு நம்ம யாரு முகத்தில முழிச்சோம்? பொண்டாட்டி முகமா? இல்லையே.. நேத்தைக்கு ராவு சின்ன வீட்டுல தானே தங்குனோம். ஒரு வேள நம்ம முகத்துலேயே முழிச்சிட்டோமோ?” என்று யோசித்தவாறு கீழே கிடந்தான். சட்டென்று ஒரு உதை பின்பக்கம் விழுந்தது சரசரவென்று 

 

“ஏலேய்… இதோட இந்த ஏரியாவுல நான் உன்னைய பார்க்க கூடாது! மீறி பார்த்தேன் மட்டும் வச்சுக்கோ.. பாக்குற இடத்திலேயே உன்னை புதைச்சிட்டு போயிட்டே இருப்பேன்” என்று ஒற்றை விரல் பத்திரம் காட்டிவிட்டு மீண்டும் தனது உடற்பயிற்சியை தொடர்ந்தான் அந்த நெடு நெடுனு வளர்ந்தவன்.

 

“ஆஆன்… அப்புறம் எனக்கு எப்ப எல்லாம் போரடிக்குதோ அப்ப எல்லாம் உனக்கு சொல்லி அனுப்புவேன்ல… சரியா?? வந்து ஒழுங்கா உதைய வாங்கிட்டு போகணும். கவலைப்படாதலே… உன் பேர்ல இன்சுரன்ஸ் போட்டாச்சு!! நீ எப்போலாம் என் கிட்ட அடி வாங்குதியோ… அப்பெல்லாம் உயிரோடு இருந்தா வைத்திய செலவுக்கு பணம் உனக்கு!! இல்ல பொணமா போனா பணம் எனக்கு!! என்னலே புரிஞ்சுதா?” என்று ராட்சஸ சிரிப்போடு கூறியவனை பார்த்து நடுநடுங்கிப் போனான் அந்த அடி வாங்கியவன்.

 

“என்னதூஊஊ இன்சூரன்ஸா??? என் பேருலையா??? ஆண்டவா!!!!” என்று மயக்கமே போட்டு விட்டான் அவன்!!

 

“அப்படி என்னத்தடா செஞ்சான் இவேன்?? அண்ணே… இன்சூரன்ஸ் போடுற அளவு போயிட்டாரு. சட்டுனு யாருக்கும் இன்சூரன்ஸ் எல்லாம் போட மாட்டாரே நம்ம அண்ணே!!” என்று அருகில் இருந்தவனிடம் கேட்டான் அப்போது அந்த திடலுக்கு வந்த மற்றொருவன்.

 

“அது ஒன்னும் இல்லடா.. இவேன் சேக்காளி பய நம்ம கிட்ட தான் குஸ்தி கத்துகுதியான். இந்த ரெ‌ண்டு எடுபட்ட பயலுவோலுக்கும் நேத்து சண்டை போல.. அதுல இந்த காவாலி பய வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம பெருசா பிரதீரா கிட்ட குஸ்தி கத்துகிட்டு என்கிட்ட இப்படி அடிவாங்கி கிடைக்கியேலேனு கிண்டல் பண்ணிப்புட்டான். அப்புறம் சும்மா விடுவாரா அண்ணே? அதான்லே அவனுக்கு இன்சுரன்ஸ் போட்டாச்சு!!” என்று சிரித்தான் அவன்.

 

சுருங்க சொன்னால் சும்மா இல்லாமல் ஓரண்டை இழுப்பவர்களுக்கு ஈசாவின் இன்ஸூரன்ஸ் எமலோகத்துக்கு பாஸ்போர்ட்!!

 

கேட்டுக்கொண்டிருந்த மற்றவனோ “அப்போ அவன் கதி அதோகதிதான்? இன்சுரன்ஸ் போட்டாச்சுல” என்று சத்தத்தோடு சிரித்தவர்கள் இவர்களை கடந்து சென்றவனை பார்த்து கப்சிப் ஆனார்கள்.

 

சட்டையில்லா வெற்றுடம்பு.. அவனது பரந்து விரிந்த மார்பிலிருந்து துள்ளி விளையாடிப்படி வியர்வை துளிகள் வழிந்தோட.. உருண்டு திரண்ட புஜங்களின் திண்மையும்‌ வலிமையும் அவனின் முறையான உடற்பயிற்சியை கட்டியம் கூறியது. பரந்த நெற்றி.. எதிராளியை கூறுபோடும் கண்கள்.. கூர் நாசி அதன் கீழ் கருத்த கற்றை மீசை.. கீழுதட்டை அழுத்தமாக உதட்டுக்குள் கடித்தபடி கதிரவனை தான் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பிரகதீரனேஸ்வரன். அம்மாவுக்கு ஈசன்.. அப்பாவுக்கும் ஏனையோருக்கு பிரகதீரா. அவனின் தாத்தாவுக்கு மட்டும் ஈசா!!! 

 

நமக்குமே ஈசா தான் டியர்ஸ்!!

 

வழக்கம்போல உடற் பயிற்சியை முடித்து வெயிலோனை பார்த்து நலம் விசாரித்து கொண்டிருந்தவனிடம் அருகே வந்து நின்றவன் பவ்யமாக குனிந்து விஷயத்தை பகிர.. வியர்வை துளிகள் நதியென ஓட அதனை சட்டை செய்யாமல் சட்டையை மாட்டி பின்புறம் வீச்சருவாளை சொருகிக் கொண்டவன் முகத்தில் அத்துணை இறுக்கம்!! அதுவரை ஏதோ விளையாட்டுக்காக எதிரில் இருந்தவனை அடித்து கொண்டிருந்தவன் இப்போது நிஜமாகவே ஒருத்தனை பந்தாட வீறுகொண்டு வீச்சருவாலோடு கிளம்பிவிட்டான்.

 

தன்னுடைய கரிய நிற ராயல் என்ஃபீல்டில் தனது நீண்ட கால்களை எடுத்து போட்டு அவன் அமர்ந்த விதமும்.. அடுத்த நொடி வண்டியை சர்ரென்று எடுத்துக்கொண்டு அவன் பறந்து சென்ற விதமே சொன்னது அவனது கோபத்தையும் ஆக்ரோஷத்தையும்!! அதற்குள் அவனின் விழுதுகள் எல்லாம் அடித்து பிடித்துக்கொண்டு ஜாகுவார்குள் ஏறிக்கொண்டும் கொத்திக் கொண்டும் அவன் பின்னே பறந்தனர். அவனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் டிராபிக்கில் நுழைந்து நுழைந்து அண்ணனை பிடித்துவிடும் வேகத்தோடு சென்றார்கள். அந்தோ பரிதாபம் அவர்கள் கண்ணில் மாட்டவே இல்லை ஈசா!!

 

“இப்படி விட்டுட்டோமே டே அண்ணே… எங்கன போனாருனு தெரியலையே” என்று ஆரோன் கேட்க…

 

“அதாம்ல… நானும் எவ்வளவு வேகமா வந்தும் அண்ணனை பிடிக்கவே முடியல டே.. இரு இரு காலைல அண்ணன் கிட்ட விஷயத்தை சொன்னது நம்ம ராவுத்தர் ஓட பையன் ரஃபிக்கு தான் அவேன் கிட்ட போனை போட்டு கேளுல” என்று சங்கர் யோசனை சொல்ல…

 

“நல்ல யோசனைவே… இதோ போன் போடுற அவேனுக்கு” என்று ஆரோன் ரஃபிக்கு போனை போட்டு என்ன விஷயம் என்று கேட்டான். கேட்டவன் முகத்திலும் அத்தனை ரௌத்திரம்.

 

“கோட்டி பய… கொடி புடிக்குறானா கொடி!! எத்தன அதுப்பு இருந்தா நம்ம ஐயாவையே பேசி இருப்பான். இன்னைக்கு அவன் தல மண்ணுல உருள்வது நிச்சயம்ல.. நீ போன வைல… அந்த காவாலி பய எங்க இருப்பான்னு கேட்டு விசாரிச்சிட்டு அண்ண போறதுக்கு முன்னால நாங்க போய் அவன புடிச்சு வைக்கிறோம்” என்று போனில் கத்தியவன் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த சங்கரிடம் “டேய் அந்த ஜார்ஜ் நாதாரி எங்கன இருப்பான்? எங்கனு தெரிஞ்சா வண்டியை விடுலே… நானும் போன்ல அவன் எங்கு இருக்கிறானு விசாரிச்சு கேட்டுகிட்டே வரேன்” என்று மாற்றி மாற்றி இவனும், இவன் பின்னே அமர்ந்திருந்த விழுதுகளும் ஜார்ஜ் என்பவன் தற்போது எங்கே இருப்பான் என்று விசாரித்துக் கொண்டே வந்தனர்.

 

இவர்கள் அளவு எல்லாம் ஈசா மெனக்கெடவில்லை!! விசாரிக்கவில்லை!! தேடவில்லை!! அவன் எங்கே இருப்பான் என்று அனுமானித்த ஈசா அவனை நோக்கி தான் வண்டியை வேகமாக செலுத்திக் கொண்டிருந்தான் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை போல… ஆம்!! அம்பு தான்!! தனஞ்ஜெயனின் அம்பை போல தப்பாது அத்தனை துல்லியமாக சென்று தாக்குபவன். பின்னே அந்த ஜார்ஜ் பேசியது அவனது தந்தையை பற்றி அல்லவா?

 

அவன் செல்லும் வழியில் இருந்த ட்ராஃபிக்கை பற்றி எல்லாம் அவனுக்கு கவலையே இல்லை. சிவப்பு எரிந்தால் என்ன? மஞ்சள் எரிந்தால் என்ன? அனைத்தும் அவனுக்கு பச்சையே!! 

 

ச்ச்ச… பச்சை பச்சையா நினைக்ககூடாதுலே!! நான் சொன்னது கிரீன் சிக்னல மக்கா!!

 

அவன் நினைத்தது போல தாமிரபரணி ஆற்றின் பாலத்தில் தான் அமர்ந்திருந்தான் ஜார்ஜ் தன் கூட்டாளிகளோடு… அமர்ந்திருந்தவனும் சும்மா இருக்க வில்லை. “ஏலே… எப்படி எப்படி எல்லாம் கேள்வி கேட்டேனு தெரியுமாலே அந்த ஆள? எப்படி 

எப்படி வசவுனேனு தெரியுமாலே?”

என்று கேட்டவனை அருகில் இருந்தவர்கள் யார் என்ன என்று கேட்க “அதாம்லே அந்த அண்ணாச்சிய… நெல்லையாரோ மருமவன” என்றான் ஜார்ஜ் சட்டை காலரை பின்னால் தள்ளிக் கொண்டு அசால்டாக…

 

என்னது? என்று அவன் கூட்டாளிகளே அதிர்ச்சி அடைய…

 

“ஆமாம்லே…!!” என்றவன் எவ்வாறெல்லாம் திட்டினான் என்று விரிவாக சொல்லிக்கொண்டு சந்தோஷ கடலில் மூழ்கி இருந்தவன் அறியவில்லை அவனைத்தேடி ஒரு சூறாவளி வருகிறது என்று!

 

ஒரு சதவீதம் அனுமானம் இருந்தாலும் தன்னை அடிக்கயிருக்க மாட்டான். ஏற்கனவே தன் உயிருக்கு ஆபத்து இருக்கு அதுவும் ஈசா குடும்பத்தால் தான் என்று போலீஸ் நிலையத்தில் புகார் வேறு கொடுத்திருக்கும் மிதப்பில் “எவன் என் மேல் கை வைப்பது?!” என்று தெனாவட்டோடு தான் அமர்ந்திருந்தான். இல்லையில்லை ஆர்பரித்துக் கொண்டிருந்தான்!!

 

அந்த காவல் நிலையம் எல்லாம் ஈசனின் பாக்கெட்டில் என்று பாவம் இந்த ஜார்ஜ் பயலுக்கு யாரு சொல்ல? 

 

“இரு… இரு‌… ஏதோ சத்தம் கேட்குதுலே… ” என்று ஜார்ஜ் கூட்டாளிகளில் ஒருவன் காதை கூர்ந்து கேட்க… மெலிதாக கேட்ட ராயல் என்ஃபீல்ட் சவுண்டை கேட்டு அதிர்ந்தவன் “ஏலே ஜார்ஜூ… இதோ இப்போ வந்துரேன்ல நானு” என்றவன் அடுத்த நிமிடம் மாயமாகி போனான்.

 

‘எங்க இப்படி மாயமாகி விட்டான்?’ என்று மற்றவர்கள் யோசனையாக பார்க்க… இன்னும் சத்தமாக கேட்ட ராயல் என்ஃபீல்டில் மற்றவர்கள் அதிர்ந்து நோக்கும் முன்… பறந்த வந்த வீச்சருவாள் ஜார்ஜ் கையை பதம் பார்த்தது. 

 

ஆஆஆஆஆ என்று அவன் அலறி கீழே விழுமுன் அவன் அருகே வந்து நின்றான் ஈசா!!

 

ஈசன்…. காப்பனும் அவனே!! அழிப்பவனும் அவனே!!

 

அவன் கையில் லேண்டாகி இருந்த அருவாளை வெடுக்கென்று பிடுங்க… இரத்தம் தாமிரபரணி ஆறாக பொங்கி வழிந்ததை எல்லாம் கண்டுக் கொள்ளாமல்…

 

“ஏலே.. சல்லிப்பயலே!! என்னா ஏத்தம் இருந்தா என் ஐயாவையே எகனைக்கு மோகனையா பேசி இருப்ப… பேசுன இந்த வாய…” என்று அருவாளை திருப்பி வைத்து வேகமாக ஒரு குத்து குத்த… அவனுக்கு இருந்த இருபத்தியெட்டு பல்லும் ஒரு ஆட்டம் ஆடியது!!

 

“வ்வ்வேணாம் ஈசா… இத்துதுல நீ.. த்தலையிடாதல..” என்று மூச்சு வாங்கினான்.

 

“ஏலே… மூணு வார்த்தை பேசுவதற்கே மூச்சு இறைக்குது உனக்கு… நீ என் ஐயாவ பத்திப் பேசுவியா? நான் ஈசன்லே… நம்புனவங்க காக்கவும் தெரியும்… எதிர்க்குறவங்கள சல்லி சல்லியா அழிக்கவும் தெரியும்லே!!” என்று மீண்டும் அவன் முதுகில் ஒரு மிதி மிதிக்க… தொப்பென்று விழுந்தவன் எழ முடியாமல் நகர்ந்து… நகர்ந்து.. இல்லையில்லை ஊர்ந்து ஊர்ந்து இரண்டு கைகளாலும் மெதுவாக செல்ல.. 

 

“இனி உனக்கு நடக்க காலே இருக்கக்கூடாது டே… எடுத்துபுடுதேன்!” என்றவன், அவன் முதுகில் ஒரு காலை வைத்து மிதித்து கொண்டு அருவாளை பாலத்தின் ஒரத்தில் வைத்து தீட்டினான் அதிலிருந்து நெருப்பு பொறி பறக்க பறக்க… அதை ஓரக்கண்ணால் பார்த்தான் ஜார்ஜ்.

 

நெருப்பு ஜூவாலைக்குள் மத்தியில் ஈசாவின் முகம் அந்த ருத்ரமூரத்தியான ஈசனை ஞாபகப்படுத்த… அரண்டு போய் தன் மொத்த பலத்தையும் காலுக்கு கொண்டுவந்து எழுந்து ஓடினான் ஜார்ஜ்!!

 

ஈசா துரத்த…. அவன் ஓட… நின்ற இடத்திலிருந்து அருவாளை வீசினான் ஈசா, சட்டென்று ஜார்ஜ் கால் தடுக்கி விழுந்துவிட, அது வெகு சரியாக அவனுக்கு முன்னால் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்த பெண்ணின் புஜத்தில் பட்டது.

 

அவள் தஷா அலைஸ் தாட்ஷாயணி!!

 

உலகாளும் அந்த ஈசனுக்கு மட்டுமல்ல நெல்லையை ஆள போகும் இந்த ஈசனுக்கும் மறுபாதி!!

 

தொடரும்…

2 thoughts on “மையல் கொண்டேன் மாதீரா 1”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top