ATM Tamil Romantic Novels

மையல் கொண்டேன் மாதீரா 3

மாதீரா 3

 

மயங்கி கிடந்தவளை மாலையென தன் தோளில் தூக்கி போட்டுக் கொண்டு நடந்து சென்ற ஈசா தான் அன்றைய ட்ரெண்ட் திருநெல்வேலி முழுவதும்!! அதிலும் அவளது முகம் சரியாக தெரியாமல் இருந்தது தஷா செய்த புண்ணியமா இல்லை சந்திரமதி செய்த புண்ணியமா தெரியவில்லை!!

 

ஏதோ பஞ்சுப்பொதியை தூக்கி செல்வது போல அலேக்காக அவளை தூக்கி சென்றவன், அங்கு வந்து நின்ற அவனது ஜாக்குவாரின் பின்னால் அசால்ட்டாக படுக்க வைக்க.. மொத்த விழுதுகளும் தங்கள் ருஷ்யசிங்கர் அண்ணனையும்… மேனகையென அழகில் ஜொலிக்கும் அந்தப் பெண்ணையும் தான் மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர் அதிர்ச்சியோடு பிளந்த வாயை மூடாமல்….

 

“என்னங்கடே.. வாய பொளந்து கிட்டு நிக்குதிக. பாத்துலே… வர கடுப்புக்கு பால்டாயில் எடுத்து வாயில ஊத்தி புட போறேன்!! அப்புறம் மொத்தப் பயலுவோளுக்கும் இன்சுரன்ஸ் இப்பவே போட்டு விடுவேன்… என்னலே போட்டுடவா??” என்றவுடன் தான் சுய நினைவுக்கு வந்தவர்கள் தலையை உதறிக்கொண்டு அண்ணன் முன் அட்டென்ஷனில் வந்து நின்றனர். 

 

அது!! என்றவன், “எடுல வண்டிய.. விடுல திடலுக்கு! ஏலேய் ஆரோனு.. வண்டிய அந்த நாதாரி அடிக்க போன வேகத்தில் அங்கேயே போட்டுட்டு வந்துட்டேன். அதை எடுத்து பக்குவமா பாலிஷ் பண்ணி சரி பண்ணி திடலுக்கு கூட்டிட்டு வா!! சரியா?? வண்டி பத்திரம்ல!!” என்று சொல்லி முன்பக்கம் இவன் ஏறிக்கொள்ள சங்கர் ஓடிவந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துகொண்டான்.

 

“அண்ணே….” என்று இடது கையால் தலையை சொரிந்து கொண்டே ஈசாவை ஆரோன் பார்க்க…

 

“என்னல நேத்துதான் சமஞ்ச புள்ள கணக்கா வெட்கப்பட்டு நிக்குற… வந்ததை மட்டும் சொல்லிவிட்டு சோலியை பார்க்க போக… அங்க வண்டி வெயிட்டிங்!!” என்றவனிடம் தான் “அந்த ஜார்ஜ் பய…” என்று மீண்டும் இழுக்க…

 

“அந்தக் கோட்டிப் பய.. அப்படியே கிடக்கட்டும்ல. போறவன் வரவன் எல்லாம் பார்த்து என்ன ஏதுன்னு விசாரிக்கட்டும், அப்பத்தான் இனி ஒரு பயலுக்கு நாக்கு மேல பல்ல போட்டு எங்க ஐயாவ பத்தி பேச மாட்டானுவ” என்று சட்டை காலரை பின்னால் தூக்கி கொண்டு இடது கையை மடித்து கழுத்துக்கு பின்புறமாக வைத்தவன் “சங்கரா விடுல வண்டிய” என்று உத்தரவிட, அடுத்த நிமிடம் அந்த ஜாகுவார் பறந்து சென்றது அவனது குஸ்தி கற்றுக்கொடுக்கும் இடத்திற்கு!!

 

அவர்கள் திடலுக்கு வண்டி சென்றதும் மற்றவர்கள் வந்து தஷாவை தூக்க வர, அவர்களை பார்வையாலேயே எட்ட நிறுத்தியவன், ஒருமுறைப்போடு ஒரு அடி முன்னே எடுத்து வைக்க அனைவரும் வயது பின்னால் பத்தடி எடுத்து வைத்தனர்.

 

முதன் முதலாக இந்த குஸ்தி கற்றுக் கொடுக்கும் இடத்திற்கு ஒரு பெண் வருகிறாள், அதுவும் அண்ணன் தோளில் சுமந்தவாறு… மீண்டும் ஒரு ஆச்சரிய வாய் பிளத்தல் இங்கேயும் நடந்தது!!

 

குஸ்தி கற்றுக் கொடுக்கும் திடலுக்கு அருகில் குடில் போன்ற அமைப்போடு அவனுக்கான தனி வீடு இருக்கும். வெளியில் பார்க்க தான் குடில் போன்று இருக்கும். ஆனால் உள்ளே சகல வசதிகளும் கொண்ட லக்ஷரி அப்பார்ட்மெண்ட் போல.. அதில் இருந்த திவானில் அவளைப் படுக்க வைத்தவன் “ஏலே ராசு…!!” என்று உரக்க கத்த வேகமாக ஓடி வந்து நின்றான் ஒருவன்.

 

“போயி எவனாவது டாக்டர கூட்டிட்டு வா” என்றதும் அவன் வேகமாக தலையாட்டி செல்ல… 

 

“ஏலே நில்லுடே.. ஆம்பள டாக்டரா கூட்டிட்டு வந்துட போற… ஆம்பள எல்லாம் வேணாம். லேடி டாக்டரா பார்த்து கூட்டிட்டு வா… வெரசா வாலே” என்று அவனை விரட்டி விட்டு அவளைத்தான் பார்த்திருந்தான். யாரையும் காவலுக்கு அமர்த்தவில்லை. எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தான் அவளைப் பார்த்தவாறு..

 

சற்றுநேரத்தில் அந்த ராசு வாகப்பட்டவன் டாக்டரை அழைத்து வர, அந்த டாக்டர் பெண்ணும் இவர்களையும் இவர்கள் கூட்டத்தையும் பார்த்து பயந்து கொண்டே தான் உள்ளே வந்தது.

 

“என்னடே.. ரொம்ப சின்ன பொண்ணா இருக்கு?” என்று அவனை பார்த்து கேட்டவன், “ஏம்மா உனக்கு ஒழுங்கா வைத்தியம் பார்க்க தெரியுமா? நேரா காலேஜுக்கு போய் படிச்சியா இல்ல கொரோனா பேட்ச்சா நீயி?” என்று அப்பெண்ணைப் பார்த்து கேட்க அவளோ வேக வேகமாக தலையாட்டி “இல்ல சார்.. காலேஜுக்கு தான் போய் படித்தேன். இரண்டு வருஷமா பிராக்டிஸ் பண்றேன்” என்றாள் பயத்தோடு!!

 

“சரி பாரு!!” என்று கூறிவிட்டு இவன் அப்படியே தான் அமர்ந்திருந்தான். அவன் அமர்ந்திருந்த கோலமும் அதுவும் சட்டையில்லாமல் வெற்றுடம்போடு.‌. அங்காங்கே தலையெல்லாம் களைந்து சில இடங்களில் கீறல் கூட இருக்க.. இங்கே இவளோ வாடி வதங்கிய அல்லிக்கொடியாய் திவானில் கிடக்க.. பார்த்த டாக்டர் பெண்ணுக்கோ மனம் இஸ்கு இஸக்காய் யோசித்து தப்பு தப்பாய் கணக்கு போட்டது.

 

“ஐயையோ… இப்போ நான் பண்ண? மலைமலையா இருக்கானுவோ? இந்த பொண்ண என்ன பண்ணுனாங்க தெரியலையே. நாம தப்பாக சொன்னா நம்மையும் ஏதாவுது பண்ணுடுவாங்களோ? இப்போ என்ன பண்ணுறது?” என்று அந்தப் பெண் யோசித்துக் கொண்டே இருக்க.. 

 

“அது டாக்டரே.. அந்த பொண்ணுக்கு மொத தடவம்ல. அதான் பயந்து போச்சு!” என்று தனது பிடரியை தடவிக்கொண்டே கூறினான் ஈசா.

 

இஸ்க் இஸ்காக கேட்கிறது தானே டியர்ஸ்? அதே தாம்ல அந்த டாக்டர் பெண்ணுக்கும் கேட்டுச்சு!!

 

“என்னது?” என்று அந்த லேடி டாக்டர் அலறினாள்.

 

“ம்ப்ச்.. என்ன செய்ய? புதுசு போல. அதான் மொத அட்டம்டுக்கே ஆளு மயங்கிருச்சு!” என்றான் இன்னும் இஸ்கு இஸ்காய்…

 

விழி விரித்து பார்த்தவளின் முட்டை முழிகள் வெளியே வந்து விழுந்திடும் அளவு இருந்தது.

 

“ச்சார்….” என்று அவள் தயங்க… எங்கே வாடா போடா என்று சொன்னால் நம்மையும் எது செய்து விடுவானோ என்ற பயம். ஆனால் இப்படி செய்திருக்கிறானே அந்த பெண்ணை… இவனையெல்லாம் என்று வண்ண வண்ணமாக திட்ட வந்தது.

 

“என்னம்ல? வேற‌ ஏதாச்சும் வாங்கி வரனுமா?” என்று தோரணையாக கேட்டவனை கண்டு இன்னும் கதி கலங்கிப் போனாள் அந்த பெண் மருத்துவர்.

 

“அதில்ல… இந்த பொண்ணு..??” என்று அவள் இழுக்க…

 

“ஏன் உன்னால வைத்தியம் பாக்க முடியாதா? அப்படி மட்டும் ஏதாவது சொன்னேன்னு வச்சுக்கோ???” என்று கால் மேல் கால் போட்டுக்கொண்டு கூர்ந்து அவளை நோக்க அவளுக்கு முதுகு தண்டு சில்லிடத் தொடங்கியது. “அப்புறம் உன்ன பாக்க இன்னொரு லேடி டாக்டர் தான் வரணும்” என்றதும் பயந்து விட்டாள் அவள்!!

 

“சரி சரி சீக்கிரம் முடி எனக்கு சோலி கழுத கிடக்கு. வெளியே பார்த்தல்ல எவ்வளவு பேர்னு. அத்தனை பேருக்கும் நான் தான் சொல்லிக் கொடுக்கனும். ஒரு பயலுவோளுக்கும் ஒரு மண்ணும் தெரியாது. ம்ம்ம்… வெரசா…” என்று 

வார்த்தையில் அழுத்தமும் கண்களில் மிரட்டலும் விடுக்க.. அவ்வளோ தான் அந்த லேடி டாக்டர் மயங்கியே விட்டாள்.

 

“ஏலே ராசு… ராசு… எங்கிருந்துல இந்த டாக்டர் புள்ளய‌ கூட்டடியாந்த… பாரு… இதுவும் ரத்தத்தைப் பாத்துட்டு மயங்கிடுச்சு! இதெல்லாம் எப்படி தான் டாக்டருக்கு படிச்சுச்சோ” என்று அலுத்துக் கொண்டு அருகில் இருந்த தண்ணீர் குவளையில் இருந்து தண்ணீரை எடுத்து அந்த டாக்டர் பெண் மீது பொளிச்சென்று வேகமாக தெளித்தான்.

 

அரண்டு புரண்டு எழுந்தவள் தன்னை சுற்றி நின்றிருந்த ஈசா.. ராசு.. இன்னும் இரு ஆண்களை பார்த்து, பயந்து மிரண்டு கன்னா பின்னாவென்று அலற தொடங்கினாள் அழுதுகொண்டே!!

 

“ஏய்… ச்சு… ச்சத்தம்.. ஊஷ்… ஏலே.. நிப்பாட்டுல..!” என்று ஈஷா சொல்வதெல்லாம் காதிலேயே வாங்காமல் அவள் அலற..

 

“ஏய்!!” என்று ஈசா அந்த குடிலே அதிர அதிரடியாய் கர்ஜிக்க அதில்தான் பயந்து வாயை பொத்தினாள் அந்த பெண்.

 

“நீ ஏதோ தப்பா நினைச்சிட்டு அலறுறல.. முதல்ல அந்த பொண்ணு புஜத்துல பாரு.. அருவா வெட்டிட்டு அதுக்குதாம்ல உன்னைய கூட்டிட்டு வந்தது” என்று அப்பெண்ணின் உடல் மொழியை வைத்து தங்களை தவறாக கணித்து கத்துகிறாள் என்று அனுமானித்த ஈசா எதற்காக அவளை கூட்டிட்டு வந்தோம் என்று உரைத்தான். அதற்குப் பின்தான் அவள் மூச்சே விட்டாள்.

 

மெல்ல எழுந்து அவள் முகத்தை துடைத்துவிட்டு தஷாவின் காயத்தை ஆராய்ந்தாள். பின்பு தேவையான மருந்துகளை லெட்டர்பேடில் எழுதி தயங்கிக்கொண்டே ஈசாவை பார்க்க… அவனோ ராசுவின் பக்கம் கண்ண காட்டினான். வாங்கிய ராசு அடுத்த பத்தாவது நிமிடம் அத்தனை மருந்துகளின் வாங்கி வந்து கொடுத்தான். அந்த பத்து நிமிடமும் தனல் மேல் நிற்பது போல தகித்தது அந்த பெண்ணுக்கு.

 

காயத்தை சுத்தம் செய்து மருந்து வைத்து கட்டியவள் தஷாவுக்கு டெட்டானஸ் ஊசியும் வலி தெரியாமல் இருக்க மற்றொரு ஊசியும் போட்டுவிட்டு, சில ஆண்டிபயாடிக் எழுதியவள் ஈசனை பார்த்தாள்.

 

“காயம் ரொம்ப ஆழம் இல்ல. ஆனா ஆழம் தான். கண்டிப்பா தையல் போடணும். இங்கே அதை போட முடியாது. இப்போதைக்கு மருந்து வைத்து கட்டி இருக்கு. ஊசி மருந்து எல்லாம் போட்டு இருக்கேன் வலி தெரியாம இருக்க.. தயவு செய்து ஏதாவது ஹாஸ்பிடலில் கொண்டு போய் அவங்கள காட்டுங்க ப்ளீஸ்… அப்புறம் அவங்களுக்கு கொஞ்சம் சத்துள்ள ஆகாரம் கொடுங்க நிறைய பிளட் போயிருக்கு” என்றவள் போகட்டுமா என்பது போல அவனை பார்க்க.. அவன் தலையாட்டியவுடன் வேகமாக சென்றவளை “டாக்டரே.. உன் பெயரென்ன?” என்றான்.

 

“பாகீரதி!!” என்றாள்.

 

“ப்பாகீரதியா… எதோ ஒன்னு!! இங்க நடந்தத வெளியில மூச்சு விடக்கூடாது. புரியுதால… மீறி மூச்ச விட்ட…. அதுதானே நீ கடைசியா விடுற மூச்சு!! சரியா?” என்றவனின் அழுத்தமான வார்த்தைகளில் அவள் சம்மதமே இல்லாமலேயே தலை ஆட, “ஏலே ராசு!!” என்றவுடன் மீண்டும் அந்த ராசுவாகப்பட்டவன் பத்திரமாக அந்த பெண்ணை கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தான்.

 

தஷா நன்றாக தூங்குவதை பார்த்தான். இது தூக்கமா அல்லது மயக்கமா என்று யோசித்தவாறே அவளருகில் நின்றிருந்தான். சரி தூங்கட்டும் முதலில் நாம் குளிப்போம் என்று தன் அறையை நோக்கி சென்றவன், என்ன நினைத்தானோ மீண்டும் வந்து அந்த குடிலின் வாசல் கதவை உள்ளே தாள் போட்டு விட்டு சென்றான்.

 

அவனிடம் குஸ்தி கத்துக்கொள்ளும் மாணவர்கள் மீது அவனுக்கு நம்பிக்கை இருக்கிறது தான். ஆனால் குளிக்க உள்ளே நுழைந்து சமயம் இந்தப் பெண்ணு மயக்கம் தெளிந்து சென்றாலோ இல்லை வேறு யாரும் தேடி வந்து இந்நிலையில் இவளை பார்த்தாலோ கண்டிப்பாக வம்புதான்!!

 

ராசு சிறுவயதிலிருந்தே ஈசனுடைய இருப்பவன். அவன் வீட்டைவிட்டு இங்கே தனியாக வந்தது முதல் அவனும் தன் ஜாகையை மாற்றிக் கொண்டு இங்கேயே தான் இருக்கிறான். இப்பொழுது அந்த பெண்ணை விட்டுவிட்டு வந்தவன் கதவு தாழ் போட்டு இருக்க.. சற்று அதிர்ந்துதான் போனான். ஈசன் இருக்கிறானோ இல்லையோ எப்போதும் வீடு திறந்தேதான் இருக்கும். ஈசன் இடத்திலேயே கை வைக்க யாரால் முடியும் என்ற திமிரு இருந்தாலும் அதுதான் உண்மை!! ஆனால் இன்று வீடு பூட்டப்பட்டிருக்க ஆச்சரியத்தோடு அந்த குடிலில் வெளியில் இருந்த திண்ணையில் அமர்ந்து கொண்டான் ராசு.

 

குளித்துமுடித்து வெள்ளை வேட்டி சட்டையில் வெளியே வந்தவன் தஷாவின் அருகே வந்தான்.

 

தூக்கத்தில் அவள் ஒரு காலை நீட்டியும் ஒரு காலை மடக்கி வைத்திருந்தாள். அவள் வலது கை.. அவளது தலைக்கு மேலேயும்.. இடக் கை அவளது வயிற்றின் மீதும் இருந்தது. வலது கையில் தான் வெட்டு விழுந்திருந்தது. அவள் தலைக்கு இரண்டு பக்கமும் அவளது கருங்கூந்தல் விரிந்து படர்ந்து கிடக்க.. வலப் பக்கத்தில் மல்லிகைப் பூ கொஞ்சம் வாடிய நிலையில் கசங்கிக் கிடந்தது. பார்ப்பதற்கு கலைந்த ரவிவர்மன் ஓவியம் போல் இருந்தாள்.

 

முதல் முறையாக ஒரு பெண்ணை கூர்ந்து ஆழ்ந்து கவனிக்கிறான் ஈசா.

நல்ல நிறமாக.. மிகவும் அழகாக.. கண்ணுக்கு லட்சணமாக.. அம்சமாக இருந்தாள் பெண். 

நீள் வட்ட முகமும்.. வில்லென்ற புருவத்தின் கீழ்.. கவர்ச்சியான.. ஈர்க்கும் விழிகளைக் கொண்ட கண்கள். மொழு மொழுவென்ற மூக்கு. மெல்லிய சின்ன மேலுதடும் கொஞ்சம் தடித்த சிவந்த கீழுதடும் அவளுக்கு கவர்ச்சியை கொடுக்க.. கூர்மையான முகவாய்… வெண்ணிற நீண்ட கழுத்து.. அப்பறம்.. நெஞ்சுப் பரப்பில்… சட்டென்று திருப்பிக்கொண்டான்.

 

ஆனால் மனது பார்க்கத்தானே செய்கிறாய் என்று அவனிடம் நச்சரிக்க.. அறிவு கூறிய அறிவுரையை புறந்தள்ளி மீண்டும் அவளைப் பார்த்தான்.

 

சேலை சற்றே விலகி அவளது ஆலிலை வயிற்றை காட்டியது காற்றின் உதவியால்… இல்லையென்ற இடையில் சின்ன சுழிவான அவள் நாபி அவன் கண்களுக்கு விருந்தாகின. தந்த நிற கணுக்காலும் முயல்க்குட்டியாய் எட்டி பார்க்கும் அவள் பாதங்கள்.. மிகவும் அழகா இருக்க.. அதில் மெல்லிய குட்டி முத்தமிட்டால் தான் என்ன எண்ணம் தோன்ற… சட்டென்று தன் பிடரியில் தேய்த்துக் கொண்டான் என்ன எண்ணம் டா உனக்கு என்று!!

அவள் வயிற்றின் மேல் கிடந்த இடது கையை மீறி.. விலகின புடவை அவளது மெல்லிடையையும் அதில் சுழிந்த நாபிக்குழியையும் காட்டிக் கொண்டிருந்தது..!!

 

மார்பு ஒரே சீராக ஏறத்தாழ.. ஆழமாக மூச்சை இழுத்து விட்டபடி அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தவளை பார்த்துமே.. அவனுக்குள் ஒரு எரிமலை குமுறத் தொடங்கியது. அது காதலா? ஈர்ப்பா? சலனாமா? என்று தெரியவில்லை!!

 

அவள் வயிற்றின் மேல் கிடந்த இடது கையை மீறி விலகின புடவை அவளது மெல்லிடையையும் நடுவில் சுழித்தப்படி இருக்கும் அழகான நாபியையும் காட்டிக் கொண்டிருக்க.. அது அவனுக்கு அவஸ்தையாய் இருக்க..

 

மெல்ல நெருங்கியவன் அவளது முந்தானையை சரியாக இழுத்து இடுப்பை முழுதாக மறைத்து விட்டான். அதில் அவனது முரட்டு விரல்கள் அவளது மென்‌ இடையில் உரசி சென்றது. அந்த ஸ்பரிசம் அவனுக்கு குறுகுறுக்க.. சட்டென்று விரல் விலகி அவளை திரும்பி பார்த்தான். அவளது ஆழ்ந்த தூக்கம் எந்த வகையிலும் கெடவில்லை. அவன் ஸ்பரிசத்தை உணராதவள் அமைதியாக தன் ஆழ்ந்த தூக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தாள்.

 

இரண்டு நிமிடங்களுக்கு அவள் அருகாமையில் லயித்து இருந்தவன் சற்று விலகி நின்றான். ஒரே சீராக மார்பு ஏறி இறங்க.. மெல்லிய உதடுகள் மெல்ல விரிய.. குழந்தையென ஆழ்ந்து தூங்கும் தஷாவை அமைதியாக ரசித்தான்.

 

அந்த இரண்டு நிமிட அமைதியான ரசிப்பில் அவனின் மனம் சிலிர்க்க.. அதன் சீறலை அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை. முதன் முறையாக ஒரு பெண்ணிடம் ஏற்படும் இந்த உணர்வு அவனுக்கு சொல்ல முடிய உணர்வலைகளை உடம்பு முழுவதும் பரப்பியது.

 

அவனின் ஒவ்வொரு அணுவும் சிலிர்க்க.. அவனின் இதயத் துடிப்பின் வேகத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றபடி.. அவள் இடதுப் பக்கத்தில் திவானின் ஓரத்தில் உட்கார்ந்தன். அவள் தூக்கம் கலையாமல்.. 

 

மீண்டும் காற்று அதன் வேலையை செய்ய.. அவ்விடத்தை பார்க்காமலேயே அவள் முகத்தை பார்த்துக் கொண்டே மீண்டும் முந்தானையை அவன் சரிசெய்ய.. முதலில் சிலிர்க்காத அவள் உடம்பு.. அவன் நுனி விரலின் தீண்டலில் சட்டென சிலிர்த்தது. அவள் வயிற்றின் மேல் பக்கத்தில் கிடந்த இடது கை விரல்கள் மெல்ல அசைந்தது. நிமிர்த்தியிருந்த கால் சடாரென கீழே சரிந்தது.

 

அதில் பயந்துவிட்டான்!! என்னது ஈசா பயந்து விட்டானா? ஆம் பயந்து எழுந்து நின்றே விட்டான்!!

 

சில நொடிகள்தான் இவை, மீண்டும் அவள் சீராக மூச்சு விட்டு தூங்கினாள். பதறும் தன் இதயத்தை தன் ஆழமான சுவாசத்தால் சீராக்க முயன்ற படி.. திரும்பி அவளைப் பார்த்தவாறு சற்று தள்ளி இருந்த இருக்கையில் உட்கார்ந்தான்.

அவனை ஈரத்த அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே….!!

 

மெல்ல விழித்து பார்த்த தசாவை தன் முன்னே இருந்த உணவு பதார்த்தங்களை பார்த்து அரண்டு போய் விட்டாள். 

 

முட்டைக்கே மூக்கை பொத்தும் பொண்ணுக்கும் முன்னே பறப்பன ஊர்வன நடப்பன என எல்லாவற்றையும் கடை பரப்பி வைத்து இருந்தால்.. அவளும் என்ன செய்வாள்?

 

அதிலும் அதற்கு முன் கடோத்கஜன் மாதிரி

அமர்ந்து அவளை பார்த்து சிரிப்புடன் “சாப்பிடு புள்ள.. தெம்பு வேணா?” என்றவனை பார்த்து மீண்டும் மயங்கி விழுந்தாள் தஷா!!

1 thought on “மையல் கொண்டேன் மாதீரா 3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top