சரவணன் பேசியதை கேட்டவன் சிரித்துக் கொண்டே போனை வைத்த படியே முதல் நாள் நடந்ததை நினைத்துப் பார்த்தான். ஜோசியர் வீட்டில் இருந்து கிளம்பியவன் செல்லும் வழியில் சிறிது பூவும் இனிப்பு பழங்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தான்
வந்தவன் இனிப்பு பழங்களை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு பூவை மலர் மொழியிடம் கொடுத்து தங்கச்சிகளுக்கு கொடுத்துட்டு நீயும் வச்சுக்கோ என்று கூறி அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டு மேலே ஏறி சென்றான்.
அவனது தங்கைகளுக்கு பூவை கொடுத்தவள் அவள் தலையில் வைக்கும் முன் யோசித்தவள் பூவை கையில் எடுத்துக்கொண்டு மேலே ஏறி சென்றாள்.
அங்கே கட்டிலில் அமர்ந்தபடி கடை கணக்குகளை பார்த்தவனை பார்த்தவள் அப்படியே ரசிக்க ஆரம்பித்தாள் கையில்லாத பனியனில் கீழே வேஷ்ட்டி கட்டி முன் நெற்றியில் விழுந்த முடி காற்றில் ஆட சிறு வயதிலிருந்தே உழைப்பை கண்ட கைகள் முறுக்கேறி ஆண்மையின் இலக்கணமாய் இருந்தவனை பார்க்க திகட்டவில்லை இவருக்கு 36 வயசாச்சு ன்னு நம்பமுடியலை இவரு கம்பீரத்துக்கு நான் சுமாராத்தான் இருப்பேனோ என்று யோசித்தபடியே நின்றிருந்தாள். விக்கிரமன் நிமிர்ந்து நமுட்டு சிரிப்புடன் உள்ள வாடி நீ சைட்டடிக்கறதை பார்த்தா எனக்கே கொஞ்சமா வெட்கம் வருது என்றவுடன் என் மாமா நான் சைட் அடிக்கிறேன். நீங்க வெக்கப்படுறது கூட அழகா இருக்கு மாமா அப்படித்தான் சைட் அடிப்பேன்
பார்ரா கைபுள்ளைக்கு கூட வீரம் வந்திருச்சு என்ன பாத்து பயந்து மயக்கம் போட்ட மலர் புள்ள ஒன்னு இருந்தது நீ பார்த்த என்று உடன்
மாமா என்று சினுங்கியவள் அதெல்லாம் அப்போ இப்ப இல்ல என்றவளிடம் கட்டிலில் இருந்து எழுந்து அவள் அருகில் வந்தவன்
அப்போ பயம் இல்லை என்க இல்லை என்று தலையை நாலா பக்கம் அசைத்தாள் விக்ரமன் சிரித்துக் கொண்டே அவள் கையில் இருந்த பூவை வாங்கி அவள் தலையில் வைத்தான். இதற்குத்தானே கையில கொண்டு வந்தே என்றவுடன் அவள் வெட்கத்துடன் ஆமாம் என்று தலை அசைத்தாள்.
ஓபனிங்க எல்லாம் நல்லா தான்மா இருக்கு ஆனா பினிஷிங் தான் சரி வர மாட்டேங்குது என்று சிரித்துக் கொண்டே கூறியவன் சரி கிளம்பு நம்ம கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாம் என்றான்.
எங்கே என அவள் கேட்கும் முன் போற வழியில் பேசிக்கலாம் வா என்று வெளியில் சென்றான். அவளை அழைத்துக்கொண்டு சென்றவன் ஒரு பயிற்சி நிறுவனத்தில் அவளை நீட் தேர்வு பயிற்சிக்காக சேர்த்து விட்டுஅப்படியே ஹோட்டலுக்கு அழைத்து வந்திருந்தான்.
மலர் மொழியின் மனம் சந்தோஷத்தில் இருந்தது அவள் கனவானடாக்டர் படிப்பை படிக்க பயிற்சி நிறுவனத்தில் சேர்த்துவிட்ட விக்ரமன் அவளுக்கு கடவுளாக தெரிந்தான். அதில் அவனுக்கு நன்றி சொல்ல இங்க பாரு மலரு இப்ப நீ என் பொண்டாட்டி உன்னோட சந்தோசம் எனக்கும் சந்தோஷம்தான் அதனால எனக்கு நன்றி சொல்லி என்ன தள்ளி வைக்காத ஏற்கனவே நாம ரொம்ப தள்ளி தான் இருக்கோம் ரொம்ப என்றதை அழுத்தி சொன்னவன் பேரரை அழைத்து அவளுக்கு பிடித்ததை ஆர்டர் செய்தான்.
உடனே மலர் மொழி அவனே சமாதானப்படுத்தும் எண்ணத்துடன் எதிரில் அமர்ந்திருந்தவள் அவன் பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து மாமா நம்ம இப்ப தள்ளி இல்ல ரொம்ப நெருக்கமாக இருக்கிறோம் இந்த நெருக்கம் போதுமா என்க இப்போதைக்கு இது போதும் என்று இருவரும் சிரித்தபடியே சாப்பிட ஆரம்பித்தார்கள்.
வீட்டிற்கு அழைத்து வந்தவன் அவளிடம் எனக்கு கொஞ்சம் கடையில வேலை இருக்கு நான் போயிட்டு வந்துடறேன் என்று அவளை வாசலில் விட்டு சென்றான்.
வீட்டிற்கு வந்தவள் கனிமொழியிடம் அவன் பயிற்சி நிலையத்தில் சேர்த்து விட்டதை கூற அதற்கு அவள் அண்ணி படிச்சிட்டே இருந்துடாதீங்க அடுத்த வருஷம் என் பையனுக்கு கண்டிப்பா பொண்ணு பெற்று தரணும் அதற்கு சந்தியா அதெப்படி முதல்ல என் பையனுக்குத்தான் என இருவரும் சண்டையிட ஆரம்பிக்க இருவரையும் தடுக்க மலரால் முடியவில்லை
பொறுத்துப் பார்த்தவள் இறுதியில் ரெண்டு பேருக்கு ஆளுக்கு ஒன்னு பெற்றுத்தரேன் இப்ப சண்டையை நிறுத்துங்க என்று கூறவும் விக்ரமன் உள்ளே நுழையும் சரியாக இருந்தது.
உள்ளே நுழைந்தவன் எதுவும் பேசாமல் மேலேறி சென்றான். மலர் மொழிக்கு நிம்மதியாக இருந்தது அப்பாடி நம்ம பேசுனது கேக்கல இல்லனா என்ன நினைச்சிருப்பாரு என்றவள் அவனைத் தொடர்ந்து மேல் ஏறிச் சென்றாள்.
விக்கிரமன் புதிதாக வாங்கவிருக்கும் தோப்பு ஒன்றின் பத்திரங்கள் வீட்டில் இருக்க அதை எடுக்க வந்திருந்தான்.
அந்த பத்திரங்கள் சிலவற்றில் மலர் மொழியிடம் கையெழுத்து வாங்கினான்.
மலர் மொழி இப்ப எதுக்கு மாமா இது ஏற்கனவே இருக்கிறத பார்த்தா பத்தாதா என்க அதற்கு அவனோ இதுவரைக்கும் தங்கச்சிகளை காப்பாத்துறதுக்கு நான் சம்பாரிச்சேன் இனிமேல் நமக்காக சம்பாதிக்கணும் நீ வேற ரெட்டப் புள்ளைன்னு சொல்லிட்டியா நான் அதுக்கும் சொத்து சேர்த்து வைக்கனும் இல்ல என்றதும் மலர் மொழிக்கு வெட்கத்தில் நெளிந்தவள் இல்ல அவங்க சண்டையை நிறுத்துவதற்காக தான்
என்றவுடன் பரவாயில்லை அதுவும் நல்லாதான் இருக்கு வேணும்னா இப்பவே முயற்ச்சி பண்ணி பாரக்கலாம் எனறவன் அவளை நெருங்கி வர அவனை தள்ளி விட்டு ஒடிச் சென்றாள்.
அவனும் சிரித்தபடியே வெளியே கிளமபினான். இரவு வீட்டிற்கு வந்தவன் குளித்துவிட்டு அனைவருடனும் சேர்ந்து சாப்பிட்டான். சந்தியாவும் ராகினியும் அவர்கள் வீட்டிற்கு கிளம்ப கனிமொழியும் அண்ணா நாளைக்கு நான் ஊருக்கு போலாம்னு இருக்கேன் என்க அதற்கு ராகினி என்னடி அதுக்குள்ள கிளம்புற வர்ற வெள்ளிக்கிழமை அண்ணனுக்கு தாலி பிரிச்சு கோக்குறது இருக்குது அதை முடிச்சுட்டு வேணா கிளம்புவ அதுக்குள்ள அவசரப்படாதே என்றாள் விக்ரமனும் ஆமா கனி நீ ரிசப்ஷன் பத்தி கேட்ட இல்ல அத பத்தியும் பேசலாம் நாளைக்கு அதனால ஞாயிற்றுக்கிழமை போனா போதும் என்றான். சரி என்றவள் சந்தியா ராகினியுடன் அவர்கள் வீட்டிற்கு கிளம்பினாள்.
அவர்கள் கிளம்பியதும் சிறுது தயக்கத்துடன் அவர்களது அறைக்கு வந்தவள் விக்ரமனை தேட அவன் பால்கனியில் நின்று போன் பேசி கொண்டிருந்தான். வெளியே மழை தூவிக்கொண்டிருந்தது ஜன்னலருகே வந்தவள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் ஜன்னல் அருகில் இருப்பதை பார்த்தவன் அவனும் அவள் பின்னே சென்று அணைத்தபடி நின்றான்.அவளின் காதருகே சென்று மழை நேரத்திலே உன்னை இப்படி கட்டி பிடிச்சிருக்கிறது எப்படியிருக்கு தெரியுமா என்றவன் அவள் கழுத்தில் இருந்து முதுகு வரை அவன் உதட்டால் அளந்தவன் அவளை அப்படியே திருப்பி தன் கைகளில் ஏந்தி கட்டிலில் கிடத்தினான். மலர் மொழி உள்ளே வரும் போது தைரியத்துடன் வந்திருந்தாலும் இப்பொழுது சிறு பயத்தினால் கண்களை இறுக முடியிருந்தால் அதை பார்த்தவன் அடியே மூணு நாளா மனுஷனை உசுப்பேத்தி கடைசியிலே ஒண்ணும் நடக்காம பண்ணின மாதிரி இனனிக்கு ஏதாவது பண்ணுன கண்டிப்பா ரேப் தான்டி பாவம் பார்க்க மாட்டேன் என கூற மலர்மொழியும் உங்களை யார் பாவம் பார்க்க சொன்னா நான எல்லாத்துக்கும் ரெடியாத்தான் வந்திருக்கேன் உங்களுக்கு வயசானதனால முடியலை போலிருக்கு என்று வேண்டும் என்றே அவனை சீண்ட அடியேய் யாருக்கு வயசாயிடுச்சு இதப் பாருடி இனிமே நடக்கப் போற சம்பவத்துக்கும் சேதாரத்திற்கும் நீ மட்டுமே பொறுப்பு என்றவன் அதிரடியாக அவள் மீது பாய்ந்து இதழை முற்றுகையிட்டான். அப்படியே அவளை நெருங்கிய சமயம் போன் அடிக்க அதை அலட்சியம் செய்தவன் விட்ட வேலையை தொடர மறுபடியும் போன் அடிக்க எடுத்து போனை பார்த்தவன் கனி மொழி அழைத்திருக்க அவசரமாக அழைப்பை ஏற்றான்.
கனிமொழி எதிர்முனையில் அண்ணா அவர் மழையில் வழுக்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருக்கோம் சீக்கிரம வாண்ணா என்றவள் அவன்மறுமொழி பேசும் முன்னே அண்ணா நீ எங்களுக்கு அப்பா மாதிரி நீ இருந்தா தைரியமாயிருக்கும இந்த நேரத்தில் கூப்பிடறேன் சங்கடமாத்தான் இருக்கு பளீஸ்ண்ணா என்றவுடன் வேறு ஏதும் பேச முடியாமல் வருகிறேன் என்று போனை வைத்தான். போன் லவுட்ஸ்பீக்கரில் இருந்ததால் அதை கேட்டு அவள் சிரிக்க என் பொழப்பு உனக்கு சிரிப்பா போச்சு என்றவன்
எனக்கொரு உதவி செய்யறியா என்றவுடன் அவளும் சரி என்க முதல்ல உங்கப்பனுக்கு போன் பண்ணி நம்ம மேல உள்ள கோபத்துல உன்ன தொடக் கூடாதுன்னு பில்லி சூனியம் ஏதாவது வச்சுருக்கிறானான்னு கேட்டு சொல்லு உன்ன தொட்டாலே எவனுக்கும் பொறுக்கிறதில்லை எனக்குன்னு எங்கிருந்து வரானுங்களோ என்று புலம்பியபடியே கிளம்பினான்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Thank you sister
Sema superrrrrrrrrra irundhathu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ next epi fasta podungaaa 👍👍👍👍👍
Thank you sister for your comment
egoOYmHnBhG