அத்தியாயம் 25
“ஹேய் ஹரி சார்.. எதுக்கு நம்ம எல்லோரையும் கூப்பிட்டுருக்காரு?”
“தெரியலையே?! ஏதாவது புது ப்ராஜெக்ட் கிடைச்சுருச்சா?”
“ப்ச்.. தேவையில்லாம நம்ம எல்லோரையும் எதுக்கு கூப்பிடப்போறாரு?”
“சரி.. சரி.. சீக்கிரம் வா.. போகலாம்.. இல்லேன்னா அதுக்கும் திட்டு விழும்..” என்றவாறே அலுவலகத்தில் இருந்த அனைவரும் ஹரிஷான்த் முன்னே வந்து நிற்க,
“இந்த ஹாசினி எதுக்கு ஹரி சார் கூட நிற்குறா?” என்றவாறே அசோக்கும் அங்கு வந்து நிற்க, என்னவென்று கண்களால் சிந்துவும் பரிதியும்
வினவினர். ஒன்றுமில்லை என்று கண்களால் பதிலளித்த ஹாசினி, அங்கிருந்து நகர்ந்து செல்ல முயற்சிக்க, அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்திய ஹரிஷான்த், அங்கிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“இன்னைக்கு ஈவினிங் எல்லோருக்கும் என்னோட ட்ரீட்.. லோகேஷன் ஷேர் பண்றேன்.. எல்லோரும் கண்டிப்பா குடும்பத்தோட வந்துடணும்..” என்று கூற,
“ஏன் சார்? உங்களுக்கு மேரேஜ் பிக்ஸாகிடுச்சா?” என்று ஒருவர் கேட்க,
“என்னோட வொய்ஃப் ப்ரெக்னன்ட்டா இருக்கா.. சோ, இன்னைக்கு உங்களுக்கெல்லாம் பார்ட்டி அரேஞ்ச் பண்ணிருக்கேன்.. எல்லோரும் வந்துடுங்க..” என்ற ஹரிஷான்த்தை முறைத்து பார்த்த ஹாசினி, மெல்ல அங்கிருந்து நகர்ந்து செல்ல முயல, அவளது கைவிரல்களோடு தன் கைவிரல்களை கோர்த்து கொண்டவன், அவள் அங்கிருந்து நகர முடியாதவாறு தன்னுடன் நிறுத்திக் கொண்டான்.
“சார்.. உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா?” என்று அங்கிருந்த பலரும் கேட்க, அதற்கு சிறு வெட்கப்புன்னகையை பரிசளித்தவன்,
“எஸ்.. சோ, எல்லோரும் கண்டிப்பா பார்ட்டிக்கு வந்துடுங்க..” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல முயல, ஹாசினியுடன் அவனது கைகள் இணைந்திருப்பதை பார்த்த சிலர்,
“சார்.. உங்க வொய்ஃப் நேம் சார்?” என்று கேட்க,
“ம்ம்.. பார்ட்டிக்கு வரும்போது நீங்களே தெரிஞ்சுக்குவீங்க.. இப்போ எல்லோரும் உங்க வேலையை கண்டினியூ பண்ணுங்க..” என்று ஆளுமையான குரலில் கூற, அதற்கு மேல் அவனிடம் கேள்வி கேட்க பயந்த அனைவரும், அங்கிருந்து அகன்று, தங்களது வேலையை செய்ய தொடங்கலாயினர். ஹாசினியின் கையைப் பிடித்து நடந்தவனிடம் இருந்து தன் கையை உறுவிக் கொள்ள முயன்ற ஹாசினி, அது முடியாது போகவே,
“கை.. கையை விடுங்க.. எல்லோரும் பார்க்குறாங்க..” என்று பல்லைக் கடித்தவாறே கூற, அதனை சிறிதும் காதில் ஏற்றானில்லை. மெல்ல பொறுமை இழந்தவள், அவனிடம் இருந்து தன் கையை உதறிவிட்டு,
“விடுங்கன்னு சொல்றேன்ல.. நான் என்னோட கேபினுக்கு போறேன்..” என்று கூறிவிட்டு திரும்ப,
“உன்னோடு கேபின் இனிமே இங்க தான்..” என்றவன் தனது அறையை காட்ட, விழிகளை விரித்து அவனை பார்த்தவள்,
“அதெப்படி நான் உங்க ரூம்ல?” என்று கூறி திக்கி நிற்க,
“நீ தான் என்னோட பர்சனல் செகரட்டரி..” என்னவனை அதிர்ந்து பார்த்தாள் ஹாசினி. அதனை பார்த்தவனுக்கு சிரிக்க வேண்டும் போல் இருக்க, அதனை தனக்குள் மறைத்துக் கொண்டவன்,
“சோ, ஒவ்வொரு தடவையும் என்னோட பர்சனல் செகரட்டரியை கூப்பிடுவதற்காக ஒவ்வொரு முறையும் நான் வெளியே எழுந்திரிச்சு வர முடியாது.. நீயும் மேலே இருந்து கீழே இறங்க முடியாது.. அதுனால உன்னோட கேபினை என்னோட ரூம்க்கு சிஃப்ட் பண்ண சொல்லிட்டேன்.. இனிமே இதுதான் உன்னோட ரூம்..” என்றவன் அறைக்குள் சென்று அவளுக்காக கதவை திறந்து வைத்துக் கொண்டு நிற்க, மெல்ல அடியெடுத்து வைத்து அவனது அறைக்குள் நுழைந்தாள் ஹாசினி. உள்ளே அவனது டேபிளுக்கு இடது புறமாக அவளது டேபிள் போட பட்டிருக்க, அதனை பார்த்தவள்,
“இது என்ன?” என்று கேட்க, சிரித்துக் கொண்டே,
“உனக்கு தெரியாதா?” என்றவன் தன்னுடைய இருக்கையில் அமர,
“தெரியாமத் தான் கேட்குறேன்..” என்றவள் கோபமாக அவனை பார்க்க,
“உன்னோட கேபின்..” என்றவன் அங்கிருந்த இண்டர்காமை அழுத்தி,
“ ஒன் ப்ரெஸ் ஆப்பிள் ஜுஸ்..” என்று கூறிவிட்டு அதனை கீழே வைக்க,
“என்னோட கேபின் எதுக்கு இங்க உங்க ரூம்ல இருக்கு? எனக்கு இங்க உங்க ரூம்ல எல்லாம் இருக்கமுடியாது.. பழையபடி என்னோட கேபினை மேலே மாடிலயே சிஃப்ட் பண்ணிடுங்க..” என்றவள் அங்கிருந்து செல்ல முயல,
“ஹலோ மேடம்.. இங்க நான் தான் உங்களுக்கு ஹையர் அத்தாரிட்டி.. நான் சொல்றதைத் தான் நீங்க கேட்டாகணும்.. புரியுங்களா?” என்றவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவன் ஆர்டர் செய்த ஜுஸ் வந்துவிட, அதனை ஹாசினியின் முன்னே நீட்டினான் ஹரிஷான்த்.
“இந்தா.. இதை குடி.. காலைல சாப்பிட்டது.. இப்போ பசிக்கும்..” என்றவன் கூற, முகத்தை திருப்பிக் கொண்டவள்,
“எனக்கு ஒன்னும் பசிக்கல.. நீங்க ஒன்னும் ரொம்ப அக்கறை காட்ட தேவையில்லை..” என்று கூறும் போதே, தலை சுற்றுவது போல் இருக்க, அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். அதனை பார்த்தவன், அவளது வாயருகே ஜுஸை வைத்து, வலுக்கட்டாயமாக அவளுக்கு புகட்ட, ஒரு கட்டத்தில் தானே வாங்கி முழுவதையும் குடித்து முடித்தாள்.
“உனக்கு ரெஸ்ட் எடுக்கணும்னா.. உள்ளே பர்சனல் ரூம்ல போய் ரெஸ்ட் எடுத்துக்கோ.. இல்லேன்னா.. இங்கேயே கொஞ்ச நேரம் படுத்துக்கோ.. உனக்கு எப்ப முடியுமோ அப்போ எழுந்திரிச்சு வேலையை பார்.. ஓகே வா?”
“இல்ல.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்..” என்றவள் அவனை மறுத்து எழுந்து கொள்ள முயன்றும், முடியாது போக, சட்டென மீண்டும் சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.
“நான் சொல்ற எல்லாத்தையும் மறுக்கணும்னு அவசியமில்லை.. ஒரு சில விஷயங்களையாவது கேட்கலாம்.. தப்பில்ல..” என்றவன் அவளது கால்களை எடுத்து சோஃபாவில் நீட்டி இருக்குமாறு செய்தவன், அவளது தலைக்கு தலையணை வைத்தான். தனது அறையில் இருந்த சிறு கம்பளி போர்வையை எடுத்து வந்து அவளுக்கு போர்த்தியவன், அவளது உச்சி முடியை ஒதுக்கி கோதியவாறே,
“எதையும் யோசிக்காம தூங்கு.. உன்னைய ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக்கிக்காத..” என்று கூறி, அவளது நெற்றியில் சிறு முத்தம் ஒன்றை வைத்து விட்டு, அங்கிருந்து அகன்றான். தனது இருக்கையில் அமர்ந்தவன், வேலைகளை தொடர, சிறிது நேரத்தில் அறைக்கதவை திறந்து கொண்டு, உள்ளே நுழைந்தாள் காமினி. அவளை பார்த்தவனுக்கு எரிச்சல் தலை தூக்க, உள்ளடக்கிய கோபத்துடன்,
“யாரை கேட்டுட்டு என்னோட ரூம்க்கு வந்த?” என்று கேட்க,
“என்னோட லவ்வரோட ரூம்கு வர நான் யாரை கேட்கணும்?” என்ற காமினி பதில் கேள்வி கேட்க,
“யாருக்கு யார் லவ்வர்?” என்றவன் கர்ஜிக்க, சோஃபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஹாசினியோ, சிறிது அசைந்து கொடுத்தாள். அதனை பார்த்தவன், அவள் மீதிருந்து விலகிய போர்வையை சரி செய்து கொண்டே, உள்ளடங்கிய குரலில்,
“கொஞ்சம் வெளியே போய் பேசலாம்..” என்றவன் முன்னே செல்ல, அவனை பின் தொடர்ந்து சென்றாள் காமினி. இவர்கள் இருவரும் சென்ற நொடியில் கண் விழித்த ஹாசினியோ, மெல்ல பூனை போல் எழுந்தவள், அவர்களை பின் தொடர்ந்து செல்லலானாள். மேல் தளத்திற்கு வந்த ஹரிஷான்த், தனக்கு வந்த கோபத்தை கட்டுபடுத்தியவாறே, தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் இரு கைகளையும் நுழைத்தவாறு நின்றிருக்க, அவன் நின்றிருக்கும் நிலையை பார்த்த காமினிக்கு, எஃகில் வார்த்த சிலையோ? என்று எண்ணத் தோன்றியது. அவனருகில் வந்தவரின் முன்னே கையை நீட்டி அவளது கழுத்தை நெறிக்க கொண்டு சென்றவன், “ச்சே..” என்றவாறு தன் கையை கீழே விட,
“என்ன ஹரி? இப்ப என்னைய தொடவே அருவெறுப்பா இருக்கா?” என்றவள் அவனருகில் நெருங்க, அவளிடம் இருந்து விலகியவன்,
“இங்கே பாரு.. உன்னோட விஷயத்துல நான் ரொம்ப பொறுமையா இருந்துட்டேன்.. இனிமேலும் அப்படியே இருப்பேன்னு நினைக்காத.. நீ என்கிட்ட சொன்ன பொய்யை நம்பி.. என் மனசை கல்லாக்கி தான் உன்னைய கல்யாணம் பண்ண நினைச்சேன்.. எப்போ நீ ஒரு ப்ராடுன்னு தெரிஞ்சதோ? அப்போவே உனக்கும் எனக்கும் இடையில எதுவுமில்லைன்னு உன்கிட்ட தெளிவா சொல்லிட்டேன்.. அப்புறமும் என் பின்னாடியே வர்றியே.. உனக்கு வெட்கமாயில்ல? எனக்குன்னு பொண்டாட்டி குடும்பம் எல்லாம் இருக்கு.. என்னைய நம்பி வந்துருக்குறவளுக்கு நான் துரோகம் பண்ண மாட்டேன்.. முதலும் கடைசியுமா சொல்றேன்.. இனி நீ என் பின்னாடி வர்றதை பார்த்தேன்.. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..” என்றவன் அவ்வளவு தான் பேச்சு முடிந்தது என்பது போல் அங்கிருந்து நகர முயல, அவனது வழியை மறித்த காமினி, கண்ணில் தேங்கிய குரோதத்துடன்,
“அப்போ அவ உன்னோட குழந்தைக்கு அம்மாவாக போறான்னு தான்.. அவக்கூட வாழ முடிவு பண்ணிட்டியா? இங்கப்பாரு.. நானும் அம்மாக முடியும்.. அவளை விட அழகான குழந்தையை உனக்கு பெத்து கொடுக்க முடியும்.. “ என்றவாறே அவனை இறுக்கி அணைக்க முயல, இதனை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஹாசினிக்கு குமட்டி கொண்டு வந்தது. வேகமாக அங்கிருந்து படியிறங்கத் தொடங்கியவளை கண்ட ஹரிஷான்த், அவள் பின்னோடு செல்ல, அவர்களை பொறாமையுடன் பார்த்துக் கொண்டீர் இருந்த காமினியின் மனதிலோ திட்டம் ஒன்று தோன்றியது. தனக்கு கிடைக்காத எதுவும் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று நினைத்தவள், தன் கைபேசியை எடுத்து யாரோக்கோ அழைக்க, அவர்கள் அளித்த பதிலில் குரூரமான புன்னகை ஒன்று அவளது இதழ்களில் உதித்தன. கீழே அவனது அறைக்குள் நுழைந்த ஹாசினியோ, வேகமாக கழிவறைக்குள் செல்ல, அவளைத் தொடர்ந்து உள்ளே வந்த ஹரிஷான்தோ, குடலே வெளியே வந்துவிடும் அளவிற்கு வாந்தி எடுத்தவளின் நெற்றியை பிடித்துக் கொண்டான். அவளது முதுகை மெல்ல வருடியவாறே, அவளை கைத் தாங்களாக பிடித்துக் கொண்டான். வேறின்றி சாயும் மரத்தினை போல், நிற்க தெம்பில்லாது, மயங்கி அவனது கையில் விழுந்தவளின் முகத்தை நீரினால் சுத்தம் செய்தவன், அவளை பூமாலையென தன் கைகளில் ஏந்திக் கொண்டான். அவளை ஏந்தியவாறே தன் அறைக்கு திரும்பியவனின் கைபேசி சிணுங்க, அவளை சோஃபாவில் படுக்க வைத்த நிலையிலேயே அதனை எடுத்து காதில் வைத்தவன், அதிர்ந்து போய் நின்றிருந்தான். அவனது அதிர்ந்த முகத்தை தடுமாறியவாறே பார்த்தவள்,
“என்.. என்ன.. என்னாச்சு?” என்று கேட்க,
“ஒன்றுமில்லை..” என்று தன் முகபாவனையை மாற்றியவன், அவளது நெற்றியில் முத்தமிட்டு,
“நீ ரெஸ்ட் எடு.. நான் இப்ப வந்துடுறேன்..” என்றவன் அங்கிருந்து நகர, அவனது கையை பிடித்துக் கொண்டவள்,
“சீக்கிரம் வந்துடுங்க..” என்று கலக்கத்துடன் கூறியவளை இறுக அணைத்து விடுவித்தவன், அங்கிருந்து புயலென கிளம்பியிருந்தான். போகும் வழியிலேயே பார்ட்டி சிறிது நாட்களுக்கு பிறகு வைக்கப்படும் என்று அனைவருக்கும் தகவல் அனுப்பியவன், சிந்துவையும் பரிதியையும் அழைத்து ஹாசினிக்கு துணையாக இருக்கும்படி கூறிவிட்டு சென்றவனை குழ
ப்பத்துடன் பார்த்தான் அசோக். இவ்வளவு அவசரமாக செல்லும் அளவிற்கு அப்படி என்ன நடந்ததோ?
already entha epi upload pannitigga please next epi upload pannu waiting
Already uploaded epiii…..
tijzEonpUAIOfeTr