ATM Tamil Romantic Novels

கள்ளழகனின் அழகி

வீட்டிலிருந்து கிளம்பி ஹாஸ்பிடலுக்கு சென்றவன் அங்கே கனிமொழியின் கணவன் சர்வாவிற்கு கால் ப்ராக்சர் ஆனதினால் இரவு முழுக்க அங்கே இருந்து அவனுக்கு தேவையான உதவிகளை செய்து  ஒரு வாரம் ஹாஸ்பிடல் செய்ய சொல்லி இருந்ததால் அட்மிட் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தான்.

 

 

வீட்டிற்கு வந்தவன் மலரை தேடி மாடியறைக்கு சென்றான் அவள் குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்க அவனும் பால்கனிக்கு சென்று காலை விடியலை ரசிக்கலானான். குளித்து முடித்தவள் விக்கிரமன் இல்லாத தைரியத்தில் வெறும் ஜாக்கெட் பாவாடையுடன் வெளியில் வந்தவள் விக்கிரமன் இருந்ததை கவனிக்காமல் சேலையை கட்ட ஆரம்பித்தாள். இவள் வெளியே வந்ததிலிருந்து கவனித்த விக்கிரமனுக்கோ அவளை அப்படி பார்த்ததும் உடம்பில் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தினாலும் அவள் தன்னுடைய மனைவி என்ற உரிமை அவனுக்கு தைரியத்தை கொடுக்க மெல்வ முன்னேறி அவளின் முதுகில் தன் இதழை பதித்தான் மலர்மொழி திடுக்கிட்டு திரும்ப எத்தனிக்க அவனின் நெருக்கத்தில் விக்கிரமன் என்று அறிந்தவள் அவன் அணைப்பிலிருந்து விலக ஆரம்பிக்க உடனே அவனோ ப்ளீஸ்டி திரும்பாதே என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை என்றவன் அவள் முதுகில் முத்தமிட்டபடியே கழுத்தில் ஊர்ந்தான் மலர்மொழியோ அவன் இதழ் பட்டதும் ஏற்பட்ட சிலிர்ப்பில் கையிலிருந்த சேலையை தவறவிட்டிருந்ததால் கிடைத்த சேலை மூடாத அவளது முன்னழுகு தரிசனம் முழுதாய் கிடைக்க அதில் தறிகெட்டவனான். இதுவரை பெண் சுகத்தை பற்றி நினைக்காதவன் அதை உணர ஆரம்பித்து மேலும் முன்னேறஆரம்பித்தவன் அவளது கழுத்தில் அழுத்தமாக தன் தடத்தை பதித்து அவளில் முழ்க ஆரம்பித்தவன் தீடிரென்று ஏதோ தோன்ற தன்னை கட்டுபடுத்தி விலகினான். இதுவரை அவனால் தூண்டப்பட்ட உணர்ச்சியினால் கிடைத்த சுகத்தை கண்மூடி இரசித்தவள் திடிரென்று ஏற்பட்ட அவனது விலகலில் கண்திறந்து அவனை பார்க்க அவனோ அவளை பார்வையால் அவளை விழுங்கி கொண்டிருப்பதை பார்த்தவள் தன் கையால் முகத்தை மூடிக் கொண்டாள். அவன் அப்படியே அவளை அள்ளி எடுத்து தன் மடியில் அமர்த்தியவன் மலரு என்னைப்பாரு என்க அவள் வெட்கத்துடன் கையை விலக்கி அவனை பார்க்க அவன் அவள் தலையில் முட்டி மலரு எனக்கு இப்பவே உன்னை எடுத்துக்கணும் போலிருக்கு என்றவனை அவள் தலை நிமிர்த்தி பார்க்க ஆனா இப்ப ஆரம்பிச்சா என்னால கண்டிப்பா நிறுத்த முடியாது எனக்கு நீ முழுசா வேணும் அதனால நைட்டு வரைக்கும் உன்னை விட்டு வைக்கிறேன் நைட்டு என்ன தடை வந்தாலும் உன்ன விடறாதில்லை அதனால இப்ப இரண்டு பேரும் ஜோசியர் வீட்டுக்கு போறோம் போயிட்டு வந்து எனக்கு கடைல வேலை இருக்கு போயிட்டு சாயிந்திரம் வருவேன் அதுக்குள்ள நல்லா தூங்கிக்க நைட் கண்டிப்பா தூங்க விடமாட்டேன் சரியா இப்ப போய் ரெடியாகு என்றவன் அவளை இறக்கி விட்டு குளிக்க சென்றான்.

 

சரவணனுக்கு  போன் செய்து சர்வாவுக்கும் கனிமொழிவுக்கும் தேவையானதை எடுத்து வரச்சொன்னான். அங்கே அவர்களுக்கு கொடுத்துவிட்டு நேரடியாக ஜோசியர் வீட்டுக்கு வருமாறு சொல்லிவிட்டு இவர்கள் இருவரும் வீட்டிலிருந்து கிளம்பி ஜோசியரிடம் சென்றார்கள்.

 

இவர்கள் ஜோசியர் வீட்டில் இறங்கவும் சரவணன் வரவும் சரியாக இருந்தது மூவரும் உள்ளே நுழைந்ததும் ஜோசியர் அவர்களை எதிரில் அமரச் சொன்னார். கண்களை மூடி சிவனை தியானித்து விட்டு சில ஓலைச்சுவடிகளை கொடுத்து அதிலிருந்து இருவரும் சேர்ந்து இரண்டு ஓலைச்சுவடுகளை எடுக்கச் சொன்னார். எடுத்தவர்கள் அதை அவரிடம் கொடுக்க அதைப் படிக்க ஆரம்பித்தார். படித்து முடித்ததும் அதை கீழே வைத்துவிட்டு இருவரையும் பார்த்து உங்களுடைய கல்யாணம் பந்தம் பூர்வ ஜென்ம பந்தம் விக்கிரமனை பார்த்து உனக்கு எத்தனை வயசு கழிஞ்சு கல்யாணம் நடந்தாலும் நடந்திருந்தாலும் இவதான் உனக்கு பொண்டாட்டி அதே போல உனக்குந்தாம்மா இவன் தான் உனக்கு புருஷன் அதனால வயசு கம்மி ஜாஸ்திங்ற உஙகளுக்கள்ள ஏற்பட்டிருக்கிற மனசஞ்சலங்களை விட்டிடுங்க. உங்க இரண்டு பேரோட வாழ்க்கை  சந்தோஷமா இருக்கும்.

 

ஆனா நீங்க கல்யாணம் பண்ணின முறை தப்பு. அதற்கு விக்கிரமனோ நாங்க கோயில்ல தெய்வத்தின் முன்னாடி நல்ல நேரத்தில் கல்யாணம் செய்துகிட்டோம் முறைப்படி எங்க அம்மாவோட தாலியைதான் நான் அவளுக்கு கட்டி இருக்கிறேன் இதை விட முறையா  எப்படி கல்யாணம் செய்யறது என கேட்க அதற்கு பெரியவரோ சிரித்துக் கொண்டே அநதப் பொண்ணோட கிராம வழக்கம் தெரியுமா என கேட்க  விக்கிரமனோ   தெரிஞ்சுதான் சாமி அவங்க கிராமத்து கோயில்ல  தாலி கட்டி கூட்டி வந்தேன் என்றான்.

 

ஜோசியரோ அந்த தாலியினால தான் இன்னும் அவங்க கிராமத்து தெய்வத்தின் கோபம் உன்னை பாதிக்காது உன்னை சேர்ந்தவஙகளை அது பாதிக்குது.

 

விக்கிரமனோ ஒன்றும்  புரியாமல் அவரைப் பார்க்க  அவர் மேலும் தொடர்ந்து அந்தப் பொண்ணோட கிராமத்துல சத்தியம் செஞ்சவங்க அந்த ஊரிலேயே அவங்க அப்பா கன்னிகா தானம் செஞ்சு கொடுத்து கல்யாணம் செஞ்சுக்கறது தான் முறை அதுதான் அந்த காலத்து முதல் இந்த காலம் வரை தொடர்ந்து வர்ற பழக்கம் தெரிஞ்சோ தெரியாமலோ இதுவரைக்கும் அந்த கிராமத்திலிருந்து பொண்ணுங்க வேற ஊர் ஆண்களை கல்யாணம் பண்ணிக்க கொடுக்காததின்லே எல்லாரும் அவங்க பொண்ணுங்கள கன்னிகா தானா செஞ்சு கொடுத்துத்தான் அவங்க கழுத்துல தாலி ஏறும் 

ஆனா உன் விஷயத்துல அது நடக்கல அந்தக் கிராமத்து பொண்ணுக அந்த அம்மன் மேல சத்தியம் செய்யறதுனால அவங்க  அப்பாவோ அப்பா இல்லைனா அவங்க ஸ்தானத்துல அவங்க வீட்டில் உள்ள பெரியவங்க யாரோ ஒருத்தர்  கன்னிகாதானம் செஞ்சு கொடுத்தாதான்  அந்தப் பொண்ணோட கன்னித்தன்மை அவன் புருஷனுக்கு சொந்தம் ஆகும்.

 

விக்கிரமனுக்கு இப்பொழுது புரிந்தது ஏன் மலர்விழியை சேர  முடியவில்லை என்று உணர்ந்தான். உடனே அவன் ஜோசியரிடம் அப்படின்னா அவங்க அப்பா எனக்கு கன்னிகா தானம்செஞ்சு கொடுத்தாதான் அவ எனக்கு சொந்தமாக முடியும் அப்படித்தானே என்று கேட்டான.

 

கிட்டத்தட்ட அப்படித்தான் என்றார் ஜோசியர்  இது அந்த கிராமத்து தெய்வத்தின் கடமை ஏன்னா அந்த தெய்வத்தை நம்பி தானே சத்தியம் செய்யறாங்க அதனால முறைப்படி மலரு அப்பா கன்னிகா தானம் பண்ணிக் கொடுத்தாதான் உங்க வம்சம் செழிக்கும்.

 

உடனே சரவணன் எதே அந்த ஆள் ஆசீர்வாதித்து நீ குடும்ப வாழ்க்கைக்கு போறதுக்கு பதிலா பேசாம சாமியாரா போயிடுடா உயிரோடவாது இருப்ப

ரொம்ப நாளைக்கு அப்புறம் கல்யாணம் பண்ணியிருக்கிற என்று சந்தோஷப்படறதா இப்படி ஏழரையை கூட்டியிருக்கிறேன்னு வருத்தப்படறதா என்று கூறவும் விக்கிரமன் முறைக்க அமைதியானான்.

 

பெரியவரே தொடர்ந்து நீங்க இப்ப உங்க பொண்டாட்டியை தள்ளி விலகி இருக்கறது நல்லது இல்லைன்னா உங்க வீட்டு ஆளுகளுக்கு உங்க மனைவிக்கும் தான் பிரச்சனை அதனால அவங்க அப்பாவை சம்மதிக்க வைக்க பாருங்க என்று கூறிவிட்டு வேறு ஏதாவது கேக்கனும்னா கேளுங்க என்க மலர்மொழி தயங்கி கொண்டே விக்கிரமன் வருத்தப்பட்டதை மனதில் கொண்டு எங்களுக்கு குழந்தை என்று கேட்க ஜோசியர் அதில் பிரச்சனை ஒன்னும் இல்ல ஆனா என்று நிறுத்த

 

சரவணணோ ஏம்மா உன்னோட கல்யாண பஞ்சாயத்தே இன்னும் முடியல அதுக்குள்ள அடுத்ததா இப்பதான் நல்ல வார்த்தையா காதுல விழுகுதுன்னு பார்த்தேன் அதுலயும் ஏதோ வில்லங்கம் இருக்குன்னு அதுக்கொரு பரிகாரம் பண்ண சொன்னாருன்னா அதையெல்லாம் செய்து முடிக்கிறதுக்குள்ள அவனுக்கு வயசாயிடும் அப்புறம் எங்கே குழந்தை பிம்பிலிக்கி பியாபி தான் என்று கூற அனைவரும் முறைத்த பிறகுதான் அவன் மைண்ட் வாய்ஸ் பேசுவது போல உளறிவிட்டதை அறிந்தவன் ஹிஹி என அசடு வழிந்து எல்லோரும் டென்ஷனா இருந்தீங்களா அதான் குறைக்கலாம்ன்னு சும்மா ஒரு காமெடிக்கு என்க விக்கிரமன் முறைத்தபடியே வாயை மூடுமாறு சைகை செய்தான். 

 

மலர்மொழியின் வாடிய முகத்தை கண்ட ஜோசியர கவலைப்டாதம்மா அந்த லூசுப்பய சொலறமாதிரி ஒண்ணுமிலலை உங்களுக்கு வாரிசு நல்லபடியா கிடைக்கும் ஆனா நீ எபப கரு உண்டானாலும் அது இரட்டை கருவா மட்டும் இருககும் மலர்மொழி புரியாமல் முழிக்க அந்த வைத்தியச்சி பாட்டி புரியலையாம்மா உனக்கு எத்தனை தடவை குழந்தை பிறந்தாலும் அது இரட்டை குழந்தையாதான் இருக்கும் அதனால பார்த்து அளவா பெத்துக்குங்க என்க மலர்மொழி வெட்கத்தில் எழுந்து வெளியே ஒடினாள். விக்கிரமனும் சிரித்துக் கொண்டே வெளியே போக எழுந்தான் அப்போது ஜோசியர் தம்பி மறுபடியும் சொலறேன் நீங்க அந்த பொண்ணுகிட்ட நெருங்கினால் கண்டிப்பா உங்க வீட்டு ஆளுகளுக்கு பிரச்சினை வரும் குறிப்பா 

உங்க வீட்டு ஆம்பளைகளுக்குதான் பிரச்சினை ஜாஸ்தி இருக்கும் அதனால பார்த்து இருங்க என்றார்.சரி என்றவன் வெளியே வந்தான்.

 

அவன் வெளியேறியதும் ஜோசியரிடம் சென்று அவங்க வீட்டு ஆம்பிளைகளுக்கு பிரச்சனை வரும்ன்னு சொன்னீங்களே எப்படி வரும் என்று கேட்க அதற்கு அவர் இத்தனை நேரம் அனைவரையும் கடுப்பேத்தியதை மனதில் வைத்து வேண்டுமென்றே விக்கிரமன் அவன் பொண்டாட்டியை நெருங்கினாலே அந்த வீட்டு ஆம்பளைகளுக்கு விபத்து ஏற்படும். கால் கை இழக்க ஏன் சில நேரத்திலே உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று கொஞ்சம மிகைபடுத்தி கூற அதை கேட்டவனோ

 

ஜோசியரிடம் நாங்க இதிலிருந்து தப்பிக்க வழி இருக்கா என கேட்க அவன் அவ பொண்டாட்டியை நெருங்காம பார்த்துக்குங்க அவங்க அப்பா சம்மதிக்கும் வரை என்றவர் உள்ளே போய்விட வெளியில் வந்தவன் வாசலில் நின்ற விக்கிரமனை பார்த்து நட்புக்காக பட பிரண்டைபோல உயிரை கொடுப்பேன்னு நினைச்சேன்டா ஆனா  நாடோடிகள் பிரண்டை போல கை கால்ல வாங்குவேன்னு நினனைச்சு கூட பார்க்கலைடா ஆள விடுடா சாமி உன் சங்காத்தமே வேணாண்டா என்று தலைக்கு மேல் கையை தூக்கி கும்பிடு போட்டு விட்டு பின்வாசல் வழியாக விக்கிரமன்   கண்ணில் படாமல் புலம்பிக் கொண்டே ஒட்டம் பிடிக்கலானான்.

 

 

 

 

2 thoughts on “கள்ளழகனின் அழகி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top