வீட்டிற்கு வந்தவன் மலர் மொழி இடம் நாளை அவர்கள் கிராமத்திற்கு செல்லலாம் என்று கூறினன்.. அதற்கு அவளோ மாமா நாம கல்யாணத்திற்கு பிறகு அங்க என்ன நடந்துச்சோ தெரியலை இப்ப நாம போனா நம்மள ஏதாவது பண்ணிடுவாங்க என்க
விக்கிரமனோ பயப்படாத மலரு நான் நம்ம கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணி இருக்கேன் அது மட்டும் இல்ல கிராமத்து போலீஸ் ஸ்டேஷன்லயும் நமக்கு பாதுகாப்பு கொடுக்க கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கேன் அதனால அப்பவும் இப்பவும் நம்ம பயப்பட வேண்டாம். நம்ம போறதுக்கு வேண்டிய துணிமணி பொருள் எல்லாம் எடுத்து வை என்றவன் இந்த சரவண பையன் லூசு மாதிரி உளறிக்கிட்டே போனான் அவ என்ன ஆனான்னு நான் பார்க்கிறேன் என்றபடி போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
வந்தவன் எதிரில் நின்றவனை கண்டு சிரித்தான். பாத்து சிரிடா வாய் சுளிக்கிக்க போகுது என்ற படியே வந்தான் சரவணன். விக்ரம் என்னடா ஊரை விட்டு ஓடி போறேன்னு சொன்ன இப்ப எனக்கு முன்னாடி வந்து நிக்கிற.
சரவணன், என்ன பண்றது அந்த ஜோசியர் எங்க போனாலும் என் விதி மாறாதுன்னு சொல்லிட்டாரு அந்த சாமி கூட உனக்குத்தான் சப்போர்ட் பண்ணுது. நீ உன் பொண்டாட்டி ஜல்சா பண்ணினா நாங்க பலியா இது என்னடா நியாயம் சாமின்னா லாஜிக் வேண்டாமா வெல்லம் திங்கறது நீ எறும்பு கடி வாங்கறது நாங்களா அதனால உங்களால எங்களுக்கு எந்த விபத்து ஏற்படக்கூடாது. அதுக்கு நாங்கல்லோரும் உன் கூடவே இந்த வீட்டிலேயே இருக்கறதா முடிவு பண்ணி வந்திருக்கிறோம் என வாசலை காட்ட வாசலில் மூன்று தங்கைகள் அவர்களின் குடும்ப சகிதம் வந்திறங்கினர்.
விக்ரமனோ அவனை முறைத்து விட்டு கல்யாணமான எல்லாரும் குடும்பத்தை விட்டு தனி குடித்தனம் போவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா நான் தான்டா கல்யாணமாவதற்கு முன்னாடி தனியா இருந்தேன் கல்யாணமானதுக்கு அப்புறம் குடும்பமே வந்து சேர்ந்து இருக்கீங்க எல்லாம் என் தலையெழுத்து என்ற படியே வெளியே சென்றான்.
வெளியே சென்றவன் இரவு உணவிற்கு வீட்டிற்கு வந்தவன். கண்களாலேயே மனைவியை துலாவினான் அவள் எங்கும் கண்ணில் படாமல் போகவே அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். அப்பொழுது அங்கு வந்த சரவணனோ மாப்ள உன் தங்கச்சிக்கு எல்லாம் அவங்க தாலி காப்பத்திக்க உன் பொண்டாட்டிக்கு காவல் இருக்கிறாங்க அதனால பேசாம சாப்பிட்டுட்டு போயி உன் ரூம்ல படு என்றவனைப் பார்த்து எல்லாம் என் நேரம் என்க உனக்கு என்னப்பா உன் நேரம் நல்லா தான் இருக்கு எங்களுக்குத்தான் நேரம் சரியில்லை அதனால தான் உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் காவல் காத்துக்கிட்டு இருக்கோம் என்று கூறிவிட்டு மேலே சென்றான்.
விக்ரமன் சாப்பிட்டவுடன் மேலே அவனது ரூமுக்கு சென்றான் அவனது ரூமில் சர்வா மகேஷ் சரவணன் மூவரும் அவனது கட்டிலில் படுத்து இருக்க அவர்களை பார்த்தவன் வெறுப்புடன் தலகாணி ஒன்றை எடுத்து கீழே போட்டு படுத்தவன் எந்த நேரத்துல மலர் கிட்ட சொன்னேனோ கல்யாணமான கீழ தனியா படுக்க மாட்டேன்னு கல்யாணமானதுல இருந்து அதான் நடந்துட்டு இருக்குது கல்யாண ராசி வந்தும் கட்டில் ராசி வரலையே கடவுளே என்னை நல்லா வச்சு செய்றீங்க என்ற படியே உறங்கிப் போனான்.
மறுநாள் மலர்வழி கிராமத்திற்குச் செல்ல ஏற்பாடு செய்த வேனில் அனைவரும் ஏறினர். வேனில் ஏறிய விக்ரமன் மூன்று தங்கைகளுக்கு நடுவில் அமர்ந்திருந்த மலர் மொழியை பார்த்து பெருமூச்சொன்றை விட்டபடியே வேனின் முன்பக்கமாக அமர்ந்தான்.
மலர் மொழியின் கிராமத்தை அடைந்தனர் கிராமத்து மக்கள் இவர்களை உள்ளே செல்ல முடியாதபடி அவர்களை வழிமறித்தனர். கிராமத்து பெரியவர் ஒருவர் மலர் மொழி கிராமத்தின் சட்ட திட்டங்களை மீறியதால் மலர் மொழிக்கும் இந்த கிராமத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் யாரும் உள்ளே செல்லக்கூடாது எனவும் கூறி மீறி யாரும் உள்ளே சென்றால் அவர்களை தாக்கவும் தயாராக இருப்பதாக கூறினார்.
விக்ரமன் நிதானித்து வேனில் குழந்தைகளும் பெண்களும் இருப்பதால் வேனைகிராமத்திலிரூந்து சற்று தள்ளியிருக்கும் ஊருக்குள்ளே திருப்பினான். அங்கு உள்ள ஹோட்டலில் அனைவரையும் தங்க வைத்தவன் மகேஷ்யும் சரவணனையும் மட்டும் கூட்டிக் கொண்டு மறுபடியும் கிராமத்திற்கு வந்தான்.
கூட்டமாக நின்ற கிராம மக்களிடையே வந்தவன் காவல் துறையினரின் ஒத்துழைப்போடு சமாதனம் பேச கிராமத்து தலைவரை அழைத்தான் மலர்மொழியின் தந்தையை எதிர்பார்க்க வேறொருவர் தலைவர் என வர குழம்பினான் சரி இப்போது இதை பார்ப்போம் பிறகு அதை விசாரித்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன் அந்த கிராமத்து தலைவரிடம் பேசலானான்.
ஐயா நான் மலர்மொழியை விரும்பி உங்க ஊர் வழக்கப்படி உங்க கிராமத்து கோயில்ல தாலி கட்டி அப்புறம் தான் இங்கிருந்து கூட்டிப்போனேன் அப்புறம் என்ன என கேட்க அதற்கு அவர் எங்க ஊர் பொண்ணுங்களை எங்க ஆளுங்க இல்லாதவங்களுக்கு கல்யாணம் கட்டி கொடுக்குறது இல்ல அப்படி போறவங்க இந்த ஊர் மண்ண மறுபடியும் மிதிக்கக்கூடாது இது எங்க ஊர் பழக்கம் இது உங்களுக்காக நாங்க மாத்தணும்னா அது முடியாது தயவுசெய்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியே போங்க என்று அமைதியாக கூறினார்
விக்ரமனும் நாங்க எந்த பிரச்சனையும் பண்ண வரல மலர் மொழியின் அப்பா அவர் முழு சம்மத்தோட எனக்கு மலர் மொழிய கன்னிகா தானம் செஞ்சு கொடுக்கணும் அதற்குத்தான் வந்திருக்கிறோம் நாங்க உங்க கிராமத்தியோட சட்ட திட்டங்களை மீறவோ இல்ல அத வந்து மாற்றி அமைக்கவும் வரல.
மலர் மொழியின் அப்பாவையம் அம்மாவையும் வர சொல்லுங்க அவரு எங்களுக்கு முறைப்படி கல்யாணம் பண்ணி வச்சுட்டார்னா நாங்க கிளம்பி விடுவோம் எனக்கூற கிராமத்துமக்கள் அனைவரும் அமைதி காத்தனர்.
சரவணன் அனைவரும் அமைதியாக இருப்பதை பார்த்து விக்ரமனிடம் டேய் என்னடா எல்லாரும் அமைதியா இருக்காங்க ஒருவேளை உங்க மேல இருக்கிற கோவத்துல உங்க மாமனாருக்கு மாமியாருக்கு பாயாசம் காச்சிட்டாங்களோ .
மறுபடியும் அவனே எனக்கொரு சந்தேகம் டா மேலே இந்த நாரதர் இருப்பார்ல அவரு என்ன பண்றார் தெரியலேடா முன்ன எல்லாம் சாமிக்கும் சாமிக்கும் சண்டை மூட்டி விட்டு கொஞ்ச காலம் மக்களை அவங்க பாடுபடுத்தாம அவுங்ககிட்ட இருந்து காப்பாத்தினார் இப்ப அதை நிறுத்திட்டாரோ அதனால தான் கடவுள் வேறு வேலையில்லாம உன் வாழ்க்கையிலே ரொம்ப ஒவர்டைம் பார்க்கறார்ன்னு நினைக்கிறேன்
ஸ்ஸப்பா இப்பவே கண்ணை கட்டுதே கன்னித்தீவு கதை மாறி ஆயிடுச்சு இனி உங்க மாமனாரை கண்டு பிடிக்க எந்த தீவுக்கு போய் எந்த மாவீரனைடா பாக்கறது என்றவன் விக்கிரமன் பார்க்க அவனோ இவனை அடிக்க கட்டையை தேடிக் கொண்டிருந்தான்.
super
👌👌👌👌👌👌👌👌👌👌👌