1
பல்லுயிர் ஓம்புதல் என்னும் வாய் மொழிக்கு ஏற்ப பண் முகம் கொண்ட பல்வேறு மொழி பேசும் மனிதர்களையும் அரவணைத்தது இங்கே தான்… 40 மாடி கட்டிடமும் இருப்பதும் இங்கே தான் 4 அங்குல ஓலை குடிசை இருப்பதும் இங்கேதான்…கோடியில் புரளுபவனும் தெரு கோடியில் புரளுபவனும் இங்கே ஒன்னு தாங்க… எங்கையே வேற எங்க வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாட்டின் தலை நகரம் சென்னை தாங்க…
சென்னை என்றதும் உங்களுக்கு நியாபகம் வருவது என்ன மக்களே…
மெரினா பீச், புனித ஜார்ஜ் கோட்டை, எம் ஜி ஆர் சமாதி வள்ளுவர் கோட்டம் என்று லிஸ்ட் போயிட்டே இருக்கும் ஸ்டாப் ஸ்டாப் நம்ம கதைகளம் இங்க இல்லையே அப்புறம் எங்க தானா கேக்குறீங்க இது எல்லாத்துக்குமே மேலே மேலே மேலே அட புரியல நம்ம நார்த் மெட்ராஸ் தான்ங்க…
பல அடுக்கு மாடி வீடுகள் இருக்கும் பழைய வண்ணாரப்பேட்டையில் ஒரு பெரிய வீட்டின் முன் வரிசையாக வந்து நின்றது வாகனங்கள் அதில் கவனம் ஈர்த்தது என்னவோ போலீஸ் என சிகப்பு எழுத்தினால் பொறிக்க அந்த இரு சக்கர வாகனம் தான்…
குறிப்புக்கு ஏற்றார் போல் ஐந்தே முக்கால் அடி உயரம்… ஒட்ட வெட்டிய சிகை… கஞ்சி வார்த்து இஸ்திரி போட்ட சட்டை… சட்டையில் கச்சிதமாக பொருந்திய ஆடவனின் தேகம்… மழுங்க மழித்த இறுகிய தாடை வரிகள்… அழகாக செதுக்கிய அதரத்தின் மேல் மிடுக்காக தூக்கி நிற்கும் முறுக்கு மீசையும் வந்து நின்றவனை பார்த்ததும் சொல்லாமல் சொன்னது இவன் போலீஸ் தான் என்று… பெயர் அருண் வட சென்னை உதவி ஆணையர்… அவன் கூடவே ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி கையும் பையுமாக…பழம் பூ இத்தியதிகளுடன்…
ஏன்பா நீ சொன்ன இடம் இதுவா…?? என சந்தேகத்துடன் கேட்டு வைத்தார் சாந்தி…
ஏனெனில் அவர்கள் வந்து நிற்கும் வீட்டின் செல்வக்கோழிப்பு அவரை விசாரிக்க வைத்தது…
என்னபா பார்த்தா பெரிய இடமா தெரியுது…நமக்கு ஒத்துவருமா…?? என இழுவையாக கேட்டு வைத்தார் மகன் குணம் அறிந்தவர் அன்றோ…
“ம்ம் ஆமாம் பெரிஇஇய இடம் தான்… பெரிய ( உள் ) நோக்கத்தோட தான இந்த சம்பந்தத்தை கொண்டு வந்து இருக்காங்க… என நக்கலாக சொல்ல…
என்னப்பா சொல்ற…குழப்பமாக கேட்க…
“ஒன்னும் இல்லம்மா நீங்க எதை பத்தியும் கவலைப்படாதிங்க நான் பார்த்துக்கிறேன்…!!”என தெம்புட்டினான் மைந்தன்…
வாசலில் இட்ட வண்ண மாக்கோலம் அவனை மெல்ல கவர ரசனையோடு அதை பார்த்து நின்றவனை ஆரவாரமாக வரவேற்றபடி உள்ளே இருந்து வந்தார் கோவிந்தன்…
அடடே வாங்க வாங்க தம்பி என்ன வாசல்யே நின்னுட்டிங்க உள்ள வாங்க என கை கூப்பி வாயெல்லாம் பல்லாக அழைக்க அவரை நிமிர்ந்து பார்த்தவன் கண்கள் கூசியது காரணம் என்னவோ அவர் போட்டு இருந்த பொன் நகைகள் தான்… பத்து விரல் பட்டை மோதிரமும், கழுத்தை தாண்டி தொங்கும் தொடர் சங்கிலிகளும்,
அதை தூக்கி கட்ட அவர் போட்டு இருக்கும் வெள்ளை சட்டையின் திறந்து விட பொத்தான்கள் சொன்னது இவை யாவும் விளம்பரம் என்று… தன் செல்வ நிலையை அடுத்தவர்க்கு சொல்லாமல் புரியவைக்கும் யுக்தி… குற்றவாளிகள் எண்ணோட்டத்தை அவர்களின் கண்களிலே படிப்பவனுக்கு எதிரே இருப்பவரின் எண்ணம் புரியாமல் போகுமா என்ன…??
அதை புரிந்து கொண்டவனுக்கு சிரிப்பு மட்டும் தான் வந்தது… காரணம் வாழ்க்கையில் படிப்படியாக கற்றுக் கொண்ட பாடம்… ஒவ்வொரு படியிலும் அவன் வருந்தி கற்று கொண்டது இதுவே காசு இருந்தால் கடவுளாகவே வாழலாம் அவை இல்லாவிட்டால் கடவுளும் நம்மை நினைவில் வைக்க மாட்டான்…
கோவிந்தனை தொடர்ந்து அருணை வரவேறக்க வாசல் பக்கம் ஓடி வந்தான் அவரது அருமை மகன் தினேஷ்…கோவிந்தனின் மறு அச்சு வடிவம்… உருவத்தில் மட்டுமல்லாது தந்தையின் கொள்கைகளையும் தீவிரமாக பின்பற்றும் மைந்தன் என்பது அவன் அணிந்து இருந்த உடைகளும் அணிகலன்களும் அடித்து சொல்லின…
இவர்கள் இருவரின் அறிமுக படலமே அருண் மனதில் பெண்ணை பற்றிய ஒரு அனுமானத்தை ஏற்படுத்தி விட்டது… நிச்சயம் அது அத்தனை உயர்வானதாக இல்லை என்பதே மெய்…
அவர்களின் அழைப்பை ஏற்று கொள்ளும் விதமாக தலை அசைத்து உள்ளே சென்றவனை வரவேற்றது ஒரு பெரிய கூட்டம்… வாங்க தம்பி தம்பி வாங்க ம்மா நீங்க தான் சார்க்கு அம்மாவா… உக்காருங்க என தெரிந்த பக்கம் எல்லாம் வரவேற்பு உபச்சாரம் தான்… அதுவும் அவனுக்கு தனி பெரும் மரியாதை கொடுத்து உபசரிக்க அவனுக்கு அது அசூசையை கொடுத்தது இருப்பினும் அவற்றை முகத்தில் காட்டாது இருக்க பெரும்பாடு பட்டு போனான் அந்த எளிமை விரும்பி…
அடியே ஜெயந்தி இன்னும் உள்ள என்னடி பண்ணிட்டு இருக்கு மாப்பிளை வீட்ல வந்துட்டாங்க நீ என்னமோ புது பொண்ணாட்டும் அலங்கரிச்சுட்டு இருக்க… சீக்கிரம் வா என அதட்டல் பறந்தது அல்லிராணியிடம் இருந்து கோவிந்தனின் ஆரூயிர் தமக்கை… நாத்தனார் பதிவிக்கான அடிப்படை அதிகாரமே அண்ணிமார்களை அதட்டுவதில் இருக்கிறது போல காலம் காலம் தொட்டு வரும் பணப்பாடு எது மாறினாலும் இது மாறவேஏ மாறாது… விடமாட்டாங்க…
“எதுக்கு சத்தம் போடுற உள்ள எதுவும் கை வேலையா இருக்கும் இப்ப வந்துரும்…!!” என காதல் மனைவிக்கு வக்காலத்துக்கு வந்தார் கோவிந்தன்…
“அடேயேப்பா உன் பொண்டாட்டிய ஒன்னு சொல்லிட கூடாதே உடனே ஓடி வந்துடுவியே…கண்ணலாம் ஆகி இருபது வருஷம் ஆச்சு இன்னும் மயங்கி நிக்குற அப்படி என்னத்தான் சொக்கு போடி போட்டாளோ… என அல்லிராணி நொடித்து கொண்டு இருக்கும் போதே அவ்விடம் விஜயம் செய்தார் ஜெயந்தி…
“நான் எதுலயும் சுக்கு பொடி போடவேல்லையே அண்ணி நான் காபி தான் போட்டேன்…!!” என அவர் கூறியதில் கடைசி வரியை மட்டும் காதில் வாங்கி கொண்டு அப்பாவியாக கேட்டு வைத்தார் ஜெயந்தி…
அடியேம்மா ஒண்ணுமே தெரியாதவள் தான் என் அண்ணனை என சண்டையாக தொடங்கிய அல்லிராணி அந்த வாக்கியத்தை முடிக்கவிடவில்லை அதற்குள்ளாகவே இடை மறித்த கோவிந்தன்…
அல்லி நீ உள்ள போ… ஜெயந்தி வாய் பார்த்துட்டு நிக்காம வந்தவிங்களுக்கு காபிய கொடு என அவர் அழுத்தி கூறியதிலே அங்கு எஞ்சி இருந்த மொத்த சலசலப்பும் அடங்கி போனது…
அந்த அமைதியை தாலாட்டும் விதமாக மென் குரலில் இன்முகமாக காபி எடுத்துகோங்க தம்பி என்றார் ஜெயந்தி… அவர் எத்தனை மென்மையானவர் என்பது அவரது குரலிலே தெரிந்தது… அவர்க்கு சற்றும் பொருந்தாத இந்த கும்பலில் சிக்கி கொண்டது தான் விதியோ…? நமக்கும் அது தான் கதியோ என யோசிக்காமல் இருக்க முடியவில்லை…
அருண் காபி வாங்கியது தான் தாமதம்… அதற்குள் கூட்டத்தில் இருந்து ஒரு குண்டு ஆண்ட்டி இன்னும் என்ன ஜெயா தம்பி கூட்டுனுக்கிற…மாப்பிளைனு உரிமையா கூப்பிடு தம்பி தான் இப்போ நம்ம கூட ஒண்ணுக்குள்ள ஒண்ணு ஆகிட்டாப்ல இல்லை…என போட்டு தாக்க
அவரை தொடர்ந்து கூட இருந்த சில பெருசுகளோ…
ஏன்பா கோவிந்தா இப்படி சும்மாவே நின்னுக்கிட்டு இருந்தா எப்படி மாப்பிளைக்கு என்ன செய்ய போற… மாப்பிளை ஒன்னும் சாதாரண ஆள் இல்லையா கோவெர்மென்ட் உத்யோகம்…காக்கி சட்டைனா சும்மா இல்லை… அவர் தகுதிக்கு குறையாம செஞ்சுபுடனும் ஆமாம் சொல்லிபுட்டேன் இல்லனா வம்பா பூடும் பார்த்துக்க…
இதுல என்ன இருக்கு ராசையா… எனக்கு இருக்குறது என் இரண்டு பசங்களுக்கு தான் தொழில் வருமானம் போக இருக்குற சொத்து எல்லாம் இரண்டா பிரிச்சி என் பொண்ணுக்கு கொடுத்துட்டா போச்சு…
“இப்படி பொதுவா சொன்னா எப்புடி என்ன இருக்குனு தெளிவா சொன்னாதானா அவங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்…கூட குறைய இருந்தா கூட நமக்குள்ளே பேசி முடிச்சிடலாம்… அப்போதான நாளை பின்ன பிரச்னைனா நாம என்ன கேக்க முடியும்…என்னபா நான் சொல்றது சரி தானே… என மறைமுகமாக எச்சரிக்கை கொடுக்க…
அங்கிருந்தவர்கள் பேசும் தோரணையே பொண்ணை கட்டாமல் முடியாது என்பது போல் இருந்தது…அதை அருண் அறியாமல் ஒன்றும் இல்லை…
அதுக்கு என்ன அண்ணே இந்த வீடு என் பொண்ணுக்கு தான் இது போக இன்னும் இரண்டு வீடு பிளாட் எல்லாம் இருக்கு அது போக அவ பேர்ல ஷேரு பத்திரம் எல்லாம் இருக்கு அது போக பொண்ணுக்கு நகை ரொக்கம் காரு எல்லாம் கொடுத்துட போறோம் கல்யாண செலவையும் நாங்களே பார்த்துக்குவோம்… இதுக்கு மேல எதுவும் வேணும் சம்மந்தி அம்மாவும் மாப்பிளையும் ஆசைப்பட்டா அதையும் செஞ்சு கொடுக்க தயாரா இருக்கோம் என்னடா நான் சொல்றது சரி தான என ஒப்புகைக்கு தான் மகனை கேட்க…
“சரிதான் நைனா…நம்ம பூரணி கண்ணாலத்துக்கு மண்டபத்துல போடுற தண்ணி கேன் முத மாப்பிளை போடுற தண்ணி ( சரக்கு ) வரை அல்லாத்தையும் நானே கூட இருந்து கண்ணும் கருத்துமா பார்த்துக்கிறேன்… நம்ம வூட்டு கல்யாணம் சும்மா தட புடலா நடத்த வேண்டிய பொறுப்பு நம்மளது என்ன நைனா என்ன சின்னம்மா நான் சொல்றது சரி தான…!!” என தினேஷ் கூறியதை கேட்ட ஜெயந்தி…
மாப்பிளைக்கு குடிக்கிற பழக்கம் எல்லாம் இருக்கா… பூரணிக்கு இதெல்லாம் புடிக்காதே என நெஞ்சில் கை வைக்க… நடப்பதை எல்லாம் நாடகம் போல் பார்த்து இருந்தனர் தாய் மகன் இருவரும்… அவர்கள் செய்வதை பார்த்து பார்வையாளர்களா அமர்ந்து இரு ஜீவனுகளுக்கும் சிரிப்பு பீறிட்டு வந்தது… பெண் பார்க்கும் படலத்திற்கு என்று அவர்கள் தரப்பில் இருந்து வந்து இருப்பது அருணையும் சேர்த்தே இரண்டு நபர் தான்… ஆனால் இவர்கள் வீட்டில் கூடி இருக்கும் ஜன தொகையோ கல்யாணக் கூட்டத்திற்கு நிகரான ஆட்கள்…
அதுவும் இவன் இப்பொழுது தான் முதல் முறையாக பெண் பார்க்கவே வருகிறான்…இன்னும் பெண்ணையே பார்த்தாகவில்லை இருவருக்கும் பிடித்தம் இன்னும் தெரியவில்லை அதற்குள் மாப்பிளை, சீர் என பேசியதே அபத்தம் அதற்கு மேல் திருமணமே முடிந்து விட்ட ரேஞ்சுக்கு அந்த அம்மா நெஞ்சை பிடிப்பது எல்லாம் பார்த்தால் சிரிக்காமல் என்ன செய்ய…
அருண் வாய் மொழியாக எதையோ கூற வரும் முன் வாசல் பக்கம் சலசலப்பு…”பொண்ணு வந்தாச்சு…!” என்ற குரல் அவன் கவனத்தை ஈர்க்க…
வாசல் பக்கம் திரும்பி பார்த்தான்…
இருவது வயது மதிக்க தக்க யுவதி…ஒல்லியான நிலைக்கும் சற்றே சதை உள்ள பெண்… வெளிர் நிறமும் சற்றே சோர்ந்த நடையும் கலைந்த கேசமும் கல்லூரி பையையுமாக அவ்வீட்டினுல் நுழைந்தாள் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் பூரணி கோவிந்தன் ஜெயந்தியின் ஒரே புதல்வி…
பொண்ணு வந்தாச்சு ம்ம்ம் சீக்கிரம் ஆகட்டும் நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ணை அலங்கரிச்சு கூட்டி வாங்க…என குரல் கொடுக்க…
என்ன ஏது என்று அவள் சுதாரிக்கும் முன் அவளை உள்ளே இழுத்து சென்று விட்டு இருந்தனர் உறவின பெண்கள்…
“ஏப்பா கோவிந்தா என்ன மசமசன்னு நின்னுட்டு இருக்க… நீயும் உன் பொண்டாட்டியும் சேர்ந்து தம்புல தட்டு எடுத்து சமந்தி அம்மா கையில கொடுத்து நிச்சயத்தை முடி புள்ள மெல்ல வரட்டும்…என பெரியவர்கள் கூற
அவர்கள் போகிற போக்கை பார்த்தால் விட்டால் கையில் தாலியை கொடுத்து இப்போதே கட்ட வைத்து விடுவார்களோ என சாந்தி அஞ்ச…அதுவரை அங்கு நடப்பவை எல்லாம் வேடிக்கையாக பார்த்து இருந்த அருண் இதற்கு மேல் விட்டால் சரி வராது என எழுந்து நின்று சபையில் எதையோ கூற வரும் முன்…
“யாரை கேட்டு இந்த ஏற்பாடு எல்லாம் பண்ணீங்க…உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது…எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்…!!” என அருண் பேச நினைத்த அத்தனையும் ஒரு ஆவேசமான குரலில் ஒலித்தது … அத்தனை பேரும் அதிர்ந்து நிற்க… அக்குறல் நம் நாயகி பூரணியுடையது என்பது சொல்லி தான் தெரிய வேண்டுமோ…
ரௌடி பேபி அதிரடி ஆரம்பம்…
Super sis semma starting 😍😍😍😍😍
Rowdy baby is amazing 🤩
👌👌👌🫰🫰🫰👍👍👍
BdwfmhziWMGSRq
அருமையான பதிவு