ATM Tamil Romantic Novels

Rowdy பேபி -2

2

 

 பகலில் சுட்டெரித்த சூர்யன் பொன் வானம் மீதில் வீதி உலா செல்லும் மாலை வேளைதனில்…

 

கல்லூரி முடித்து விட்டு வீடு திரும்பியவளை வாயிலில் குவிந்து கிடந்த காலணிகள் எடுத்து சொல்லியது அவவீட்டில் விருந்தினர் வருகையை…

 

என்ன விஷேசம்… அம்சா (பாட்டி ) மண்டைய போட்ருச்சா… அப்படியா இருந்தா இந்நேரம் கோவிந்தன் ஏரியாவையே அலற விட்டு இருக்குமே… ஒருவேளை இந்த அல்லிராணி குத்தவச்ச நாளை குதூகலமா கொண்டுடுறாங்களோ என குதர்க்கமாக எண்ணியபடி உள்ளே வந்தவளை… எதுவுமே பேச விடாமல் அறைக்குள் அழைத்து சென்று புடவை கட்டு இன்னைக்கு உனக்கு நிச்சயத்தார்த்தம் அடுத்து கல்யாணம் என்றால் அவளும் என்னதான் செய்வாள்…

 

 இந்த புடவையை கட்டுடி என கன்னத்தில் இடித்த அத்தையை அலட்சியப்படுத்தி விட்டு “அம்ம்மா…!!”

 

அம்ம்மா என ஜெயந்தியை உறக்க அழைத்தவள்… அவர் உள்ளே வந்ததும் தான் தாமதம்…

 

“யாரை கேட்டு இந்த ஏற்பாடு எல்லாம் பண்ணீங்க…உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது…எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்…!!” என தாம் தூம் என்று அவள் உள்ளே கத்தியது வெளியே உள்ள அனைவருக்குமே கேட்க தான் செய்தது…

 

 “அடியே சீத்த சிறுக்கி இப்ப என்ன ஆகிப்போச்சுனு இப்படி தாம் தூம்ன்னு குதிக்கிறவ… ஊர்ல நடக்காதது என்ன இப்ப நடந்து போச்சு… பெத்தவங்களுக்கு தெரியும் பிள்ளைகளுக்கு எது சரின்னு… எல்லாம் உன் நல்லதுக்கு தான் செய்றாங்க… ம்ம்ம் பிடி சீக்கிரம் துணிய மாத்திகிட்டு வந்து பொண்ணா லட்சணமா நடந்துக்கோ… நீ எல்லாம் போற இடத்துல எப்படித் தான் வாழப் போறியோ போ என அல்லிராணி பிடிவாதமாக பூர்ணாவை குளியலறைக்குள் தள்ள…

 

“இங்க பாருங்க அப்படி எல்லாம் உங்க இஷ்டத்துக்கு என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது… நான் படிச்சிருக்கேன் என்னால சொந்தமா முடிவெடுக்க முடியும் அதுக்குண்டான வயசும் பக்கவமும் எனக்கு வந்துருச்சு… எது தப்பு சரி என்று எனக்கு தெரியும் நீங்க ஒண்ணும் சொல்லித்தர தேவையில்லை… உங்க வேலைய பார்த்துட்டு போங்க… எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல அவ்வளவுதான் … என்றவள் வீம்பாக புடவையை வாங்காமல் கட்டிலில் சென்று அமர்ந்து கொள்ள…

 

 யார்கிட்ட என்ன பேசுற… எட்டி மிதிச்சேன் ஏழு ஊர் தாண்டி போய் விழுவ பார்த்துக்கோ…மெத்த படிச்சா மேதாவி ஆகிடுவியா… என்ன தான் ஊர் குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாகாது தெரிஞ்சிக்கோ… உன் திமிர் எல்லாம் என்கிட்ட காட்டாத ஒழுங்கா புடவையை கட்டிக்கிட்டு கூடத்துக்கு வந்து சேரு… என்ன அண்ணி பொண்ண பேச விட்டு பார்த்து நிக்கிறீங்க… இதுதான் நீ பொண்ணு வளர்த்த லட்சணமா…??? இவளால எங்க அண்ணன் மானம் தான் சந்தி சிரிக்குது… இதுக்கு தான் இவ வயசுக்கு வந்ததுமே கட்டிக் கொடுத்துட சொன்னேன் எங்க அண்ணன் என் பேச்சை கேட்டுச்சு…இப்போ இப்படி சண்டிராணித்தனம் பண்ணிக்கிட்டு திரியுது… அடியே உன் திமிர அடக்க தான் எங்க அண்ணன் போலீஸ்காரன் மாப்பிள்ளையா பார்த்து இருக்கு…நேரமாக்காம சீக்கிரம் வந்து சேரு… என்று விட்டு வெளியே சென்று விட்டார்…

 

 

 அவர் கூறிவிட்டு சென்றதில் போலீஸ்காரனா என யோசித்தப்படி தன் அன்னையை ஒரு பார்வை பார்க்க அவர் எச்சில் கூட்டி முழுங்கினார்…

 

 பார்த்தீங்களா அண்ணா உங்க பொண்ணு என்ன பேச்சு பேசுதுனு பெரியவங்கன்னு மரியாதை இல்லாம எப்படி பேசுது என்று… எல்லாம் உன் பொண்டாட்டி சொல்லி கொடுத்தது தான் என கிடைத்த இடத்தில் எல்லாம் தன் அண்ணியை பற்றி மூட்டி கொடுத்துக் கொண்டே நாத்தனார் கடமையை கச்சிதமாக செய்தார்…

 

 

 கோவிந்தனோ அதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை அனைவரது முன்பும் மகள் இப்படி பேசி விட்டாலே மாப்பிள்ளை வீட்டில் என்ன நினைப்பார்களோ என்று தவித்தப்படி கையை பிசைந்து கொண்டு கதியற்ற ஒரு தந்தையாகவே நின்றார் …

 

 “தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை பிள்ளைக்கு ஏதோ உடம்புக்கு முடியல போல அதான் அப்படி பேசுது… என என்ன பேசுவது என்று புரியாது எதையோ பேசி சமாதானப்படுத்த முயல…

 

 அதற்கு விட்டால்தானே…

 

 “என்ன அண்ணா சொல்ற அவள் தான் அவ்ளோ அழுத்தம் திருத்தமா கல்யாணமே வேணாம்னு சொல்றாளே… என்ற அல்லிராணிக்கு… பூர்ணாவை எப்படியாவது அவள் மகனுக்கு கட்டி வைத்து அண்ணன் சொத்தை அடைய ஆசை… அண்ணனுக்கு எவ்வளவு சொத்து இருக்கு என்பது முன்னே தெரியாது இப்பொழுது தான் சபையில் வைத்து சொன்னதை கேட்டு உள்ளுக்குள் கணக்குப் போட்டு இந்த சம்பந்தத்தை கெடுக்க துடித்தார்… அதற்கு அண்ணன் மகளே அச்சாரம்யிட இவர் தூபம் போட்டு கலைக்க தொடங்கினார்…

 

 “ இதெல்லாம் பார்த்தா ஊர்ல பாதி பொண்ணுங்களுக்கு கல்யாணமே நடக்காது உன்னை எல்லாம் பிடித்து போயா உன் புருஷன் கட்டுனான்… இப்ப நீ ரெண்டு குட்டி போட்டுட்டு சந்தோசமா இல்ல… அதுக்கு என்ன தெரியும் அது சின்ன பொண்ணு எல்லாம் கழுத்துல தாலி ஏறும் வரை தான் கல்யாணம் ஆன பின்னாடி எல்லாம் தானா பிடிச்சி இதுக்கு போய் என்னத்துக்கு போய் கோவிந்தா விசனப்பட்டுக்கிட்டு கிடக்க… உன் பொண்ணுக்கு பிடிக்காட்டி என்ன மாப்பிள்ளைக்கும் உனக்கும் புடிச்சிருக்கு இல்ல அப்புறம் என்ன தட்டை மாத்தி நிச்சயத்த முடி…!!” என பெருசு ஒன்று இன்னைக்கு இந்த விஷயத்தை முடிச்சே தீர்வேண்டா என கங்கணம் கட்டிக் கொண்டார் போலும்…

 

 என்னடா நடக்குது இங்க என்பது போல் அருண் அயர்ந்து நிற்க…

 

சடார் என்ற சத்தத்துடன் கதவை பிளந்து கொண்டு வந்தாள் பூர்ணா…

 

 “யார்யா அது? யாரது…?? தாலி கட்டின எல்லாம் சரியா போகும் சொன்னது யாரது…நீயா…? நீயா…?? பொண்ணுங்க மனசு என்ன உனக்கு கிள்ளு கீரையா… இன்னிக்கு நீ வாய்க்கு வந்து பேசிட்டு நீ போயிடுவ நாளைக்கு வாழ போறேன் நான் தானே… என்னோட விருப்பம் முக்கியம் இல்லையா…?? உனக்கு அந்த மாப்பிள்ளை அவ்வளவு புடிச்சா எனக்கு பதில் நீயே போய் கட்டிக்கோ… என் வாழ்க்கையை பத்தி முடிவெடுக்க இங்க எவனுக்கும் அதிகாரம் இல்லை… இதுக்கு மேலயும் எவனாவது சின்ன பொண்ணு என்ன தெரியும் கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தீங்க… உள்ள வச்சிருக்க வீச்சருவா எடுத்த அம்புட்டு பேரையும் போட்டுறுவேன்… பொண்ணு தானே என்ன செஞ்சிருவான்னு பார்க்காத்திங்க செஞ்சு விட்ருவேன்…!!”என ஆவேசமாக கத்த…

 

“பூர்ணா என்ன இது பெரியவங்கன்னு மட்டும் மரியாதை இல்லாம பேசிக்கிட்டு… என் பொண்ணு கல்யாணத்த முடிவு பண்ண எனக்கு உரிமை இல்லையா… ஒரு அப்பனா நான் அப்படி என்னது பெருசா ஆசைப்பட்டுட்டேன் உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பார்க்க நினைச்சேன்…அது தப்பா…!!”என கோவிந்தனும் இறங்கி கத்த…

 

 “ஒரு அப்பனா உன் பொண்ணுக்கு நீ கல்யாணம் பண்ணி பார்க்க ஆசைப்பட்டது தப்பு ஒன்னும் இல்ல… எங்க மனசாட்சி தொட்டு சொல்லு உன் சுயநலத்துக்காக இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ணலன்னு… சொல்லு சொல்லு உன் நெஞ்சில கை வச்சு சொல்லு… நீ பண்ண பாவத்துக்கு எல்லாம் என்னை பலிகடாவா ஆக்குறதை எல்லாம் என்னால பொறுத்துக்க முடியாது… தப்பு செஞ்சது நீ அந்த பாவத்த நான் ஏன் சுமக்கணும்…சொல்லுயா என பூர்ணா ஆவேசமாக கேட்க கோவிந்தனிடம் பதில் இல்லை…

 

 “பூர்ணா அப்பாவை பார்த்து என்ன பேச்சு பேசுற நீ… அவர் நம்ம அப்பா நமக்கு எது நல்லது ஆயிரம் தடவ யோசிச்சு தான் செய்வார்… அவர அப்படி தப்பா பேசாத… இங்க பாரு அவர் எல்லாமே உன் நல்லதுக்கு தான் செய்றார். அண்ணன் சொல்றத கேளு எல்லாமே உன் நல்லதுக்கு தான் இந்த கல்யாணம்… என தினேஷ் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே…

 

“ யாருக்கு யாருடா அண்ணா…நீ என்ன எங்க அம்மா வயித்துல பொறந்தியா… உங்க அம்மா யாருன்னு உனக்கு தெரியுமா… என் விஷயத்தை தலையிட உனக்கு எந்த உரிமையும் இல்லை…!!” என்றதுமே கோவிந்தன் பொங்கிவிட்டார் ஓங்கி அறைந்து இருந்தார் பூர்ணாவை…

 

 அவ்விடமே அசாத்திய சூழ்நிலையால் அமைதியுற்று நின்றது…

 

 அடித்த பின் பேர் சுரீர் என்று வலித் தெரிய தன் செல்வ மகளை அடித்ததை உணர்ந்தார் கோவிந்தன்…ஐயோ என்றானது அவருக்கு…

 

 

 அவர் அடித்த அடியில் பூர்ணாவின் உதடு கிழிந்து ரத்தம் வந்தது… இருப்பினும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல்… துடைத்து விட்டு படி நிமிர்ந்தவள் அருண் புறம் திரும்பியவள்…

 

“ என்னை மன்னிச்சிடுங்க உங்கள வீட்டுக்கு கூப்பிட்டு வைத்து அவமானம் படுத்தனும்ங்கறது என்னுடைய நோக்கம் இல்ல… உங்களுக்கு என்னை கட்டி வச்சு எங்க அப்பா செஞ்ச தப்புல இருந்து தப்பிச்சிடலாம்னு பார்க்குறாரு… எனக்கு அதுல உடன்பாடு இல்லை… உங்கள பிடிக்கலைன்னு சொல்லல… எனக்கு இந்த கல்யாண வியாபாரம் தான் பிடிக்கல சொல்றேன்… தயவுசெஞ்சு இங்க இருந்து கிளம்பிடுங்க இதுக்கு மேல இந்த மாதிரி நடக்காம நான் பார்த்துக்குறேன்…!!” என இரு கரம் கூப்பி மன்னிப்பு வேண்டியவள்…  

 

“ இதுக்கு மேல இந்த மாதிரி ஏற்பாடு ஏதாவது இந்த வீட்ல நடந்தா அதுதான் இந்த வீட்ல என்னோட கடைசி நாளா இருக்கும்…!!” என தன் தந்தையை நோக்கி எச்சரித்தவள் யாரையும் பாரத நேராக சென்று தன் அறைக்குள் அடைந்து கொண்டாள்…

 

 

 அதற்கு மேல் அங்கு நிற்க விருப்பமில்லாமல் ஆளாளுக்கு சலசலத்தப்படி கலைந்து சென்றனர்…

 

 ஆர்ப்பாட்டமாய் தொடங்கிய நிகழ்வு அமலில் முடிந்து போனது…

 

 அதுவரை மகள் பேசி சென்றதையே ஜீரணிக்க முடியாமல் சமைந்து நின்ற கோவிந்தன்… தன்னை மீட்டுக் கொண்டு அருணிடம் வந்தார்…

 

 “என்ன மன்னிச்சிடுங்க மாப்… தம்பி… நான் உன்னை நினைச்சு செஞ்சது உங்களுக்கு அவமானமா போய் முடிஞ்சிடுச்சு… எங்களுக்கு கொடுப்பினை இல்லை அவ்வளவுதான் மன்னிச்சுக்கோங்கம்மா…!!” என கை எடுத்து கும்பிட்டவர் அதற்கு மேல் முடியாமல் உடைந்து உட்கார்ந்து விட்டார்…

 

 சூழ்நிலை கருதி அவர்களிடம் எதுவும் கேட்காது தன் அன்னையை அழைத்துக் கொண்டு வெளியே வந்த அருண் பூர்ணாவின் பூட்டிய அறையை ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு சென்றான்…

 

 “ப்பா பொண்ணா அது சரியான பஜாரி போல… இந்த கத்து கத்துறா அடி வாங்கியும் வாய் அடங்கவே இல்ல பாரேன்… ரொம்ப துணிச்சல்தான் அந்த பொண்ணுக்கு… நல்ல வேளைப்பா நமக்கு இந்த சம்பந்தம் அமையல அந்த மட்டும் தப்பிச்சோம்…!!” என சாந்தி தப்பி விட்ட நிம்மதியில் பேச…

 

 அதுவரை மென் நகையாக இருந்த அருணின் சிரிப்பு இப்பொழுது நன்கு விரிந்த புன்னகையாக மாறியது…

 

 

புன்னகையின் பின் ஒளிந்திருக்கும் மர்மம் என்னவோ…??

 

 

 

1 thought on “Rowdy பேபி -2”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top