ATM Tamil Romantic Novels

Rowdy பேபி -3

3

 

 

தகிக்கும் தன்னொளியை பொருட் படுத்தாமல்… வியர்வையூற்றால் நனைந்தப்படி கூடை பந்து விளையாடி கொண்டு இருந்தனர் அந்த காவலர்கள்…

 

அன்று மட்டும் விடுமுறை என்பதால் கிடைத்த நேரத்தில் தன் சகாக்களோடு கூடை பந்து விளையாடிக் கொண்டிருந்தான் அருண்…

 

டேய் மச்சா போன வாரம் ஒரு பொண்ணை பார்க்க போனியே என்ன ஆச்சு என விளையாடிய படியே சிவா கேக்க…

 

யாரு இவனக்கா… டேய் மச்சான் அருணே என்னடா பொண்ணு பாக்க போன விஷயத்தை என்கிட்ட சொல்லவே இல்ல என விவேக் வியந்து கேட்க…

 

“ உனக்கு அந்த விஷயமே தெரியாதா…?? சார் யார் பொண்ண பாக்க போனார்ணு சொன்னா அசந்து போயிடுவா…??” என பந்தை தூக்கி விவேகிடம் போட்ட படியே சிவா கூற 

 

“ என்னடா பில்டப் எல்லாம் பலமா கொடுக்கிறான்… அப்படி யார் பொண்ண பாக்க போன…?? பொண்ணு வீடு ரொம்ப பெரிய இடமோ “என அருணிடம் பந்தை தூக்கி போட…

 

 

 அதற்கு அவன் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்த முகமாகவே நேற்று இருவரிடமும் பந்தை தூக்கி வலைக்கம்பத்தில் போட்டு விளையாட…

 

 

 என்னடா என்பது போல் விவேக் அருணை பார்க்க…

 

 “எல்லாம் ரொம்ப பெரிய இடம் தான் மச்சி… உன்ன வேற யாரும் இல்ல நம்ம ஹார்பர் கோவிந்தன் பொண்ணு தான்…!!” என்றதுமே பந்தை பிடித்த விவேக்கின் கரங்கள் அதை நழுவி விட செய்தது…

 

“ என்னடா மச்சான் சொல்ற நிஜமாவா…?? டேய் மச்சான் அருண் எல்லாம் தெரிஞ்சுமா அவன் பொண்ண போய் பார்க்க போன… என விவேக் அதிர்ச்சியின் உச்சியில் இருந்து கத்த… அதற்கும் புன்னகை ஒன்றையே அருண் பதிலாக தர…

 

 

“டேய் மச்சான் வாய தொறந்து பதில் சொல்றா சும்மா சும்மா சிரிச்சி கடுப்ப கிளப்பிக்கிட்டு… என கத்தவே தொடங்கி விட்டான் விவேக்…

 

 

 அவர்கள் இப்படி அதிர்ச்சியாக மாறும் கோவிந்தன் என்னதான் செய்தார் என்று அறிவோமா…

 

 கோவிந்தன் சிறுவயதிலே தந்தையை இழந்ததால் தப்பு சரி வழிகாட்டுதல் எதுவும் இன்றி தரிக்கிட்டு வளர்ந்தவர் கூடா நட்பு கேள்விகளையும் என்ற அன்னை எவ்வளவு எடுத்துக் கூறியும் உனக்கு என்ன தெரியும் போ என்று அவரை அசால்டாக ஓரம் கட்டி விட்டு கேடு விளைவிக்கும் நண்பர்களோடு சேர்ந்து சிறு சிறு தப்புகளில் தொடங்கி கட்டப்பஞ்சாயத்து அடாவடி வசூல் ஆள் கடத்தல் கொலை என அனைத்தையும் ரத்தத்தில் சூடு இருந்தவரை செய்து பெரும்புள்ளி ஆனார்… அவரது அனைத்து விதமான சட்ட விரோதங்களையும் ஹார்பரில் வைத்து செய்ததனாலே அவருக்கு ஹார்பர் கோவிந்தன் என்கிற பட்ட பெயரும் உண்டு…

 

 மூப்பு ஏற ஏற ரத்தம் சுண்ட தொடங்கியது செய்த பாவங்கள் யாவும் அவரை விரட்ட தொடங்கியது… ஆய்ந்த ஓய்ந்து உட்கார வேண்டிய வயசில் போலீசுக்கும் தன் எதிரிகளுக்கும் பயந்து ஓட தொடங்கியவர்… ஒரு நிலைக்கு மேல் ஓட முடியாது தோல்வியை ஒப்புக்கொண்டு சமாதானம் பேசினார்… இவர் சமாதானம் பேசிய அத்தனை இடத்திலும் பணம் பாய்ந்தது… பணத்தினால் விலைக்கு வாங்க முடியாத சிலதில் ஒன்று அருணின் நேர்மை…

 

 பணத்தை வைத்து முயற்சி செய்து முடியாமல் போக… தன் பெண்ணை வைத்து காய் நகர்த்த நினைத்தார் கோவிந்தன்…

 

 அருண் நினைத்திருந்தால் ஒரு அயோக்கியன் மகளை நான் கட்ட வேண்டுமா என்று கேட்டிருக்க முடியும் ஆனால் அவன் பண்பு அவ்வாறு கேட்க விடாமல் எனக்கு வரப்போற மனைவி காசு பணம் இல்லாட்டியும் சுய ஒழுக்கத்தோடு சேர்த்து கௌரவமான இடத்தில் வரணும்னு நான் எதிர்பார்க்கிறேன்… எனத் தட்டிக் கழித்து விட

 

 விட்டார் இல்லை கோவிந்தன்… அதன் பலன் கமிஷனரே அருணை நேரடியாக அழைத்து… யோவ் என்னதான் வேணும் அந்த கோவிந்தனுக்கு… போன் மேல போன் போட்டு கொல்றாங்கயா… பெரிய மனுஷங்க சிபாரிசு வேற… ஒரு முறை போய் அவன் பொண்ண பார்த்துட்டு தான் வந்துடேன்… எல்லாம் நமக்கு நேரம் வர வரைக்கும் தான் அதுவரை பொறுத்துப்போ சமையம் பார்த்து தட்டி தூக்கிடலாம்… என மேல் அதிகாரியே சொன்ன பிறகு தட்டிக் கழிக்க முடியாமல்…. விருப்பம் இன்றி தான் பெண் பார்க்க சென்றது…

 

 

 அருண் பிடிக்க வேண்டிய முக்கியமான குற்றவாளிகளில் கோவிந்தன் முதலிடத்தில் இருக்க அவன் பின்னையே அருண் சென்று பெண் பார்க்க நேர்ந்ததால் விவேக் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றது ஆச்சரியமில்லை…

 

 அதெல்லாம் விடு மச்சான் அப்பன் எப்படி இருந்தா நமக்கு என்ன பொண்ணு நல்லா இருக்கா உனக்கு பிடிச்சிருக்கா ன்னு கேட்டதுக்கு சொன்னா பாரு மச்சான் ஒரு பதிலு…என சிவா தன் நெஞ்சில் கை வைக்க 

 

 அப்படி என்னடா சொன்ன… என விவேக் அருணை ஆர்வமாக பார்க்க…

 

 பிடிச்சிருக்கு…ஆனா பிடிக்கல… என அருண் சொல்ல…

 

 என்னடா சொல்ல வர பிடிச்சிருக்கா…?? பிடிக்கலையா…?? தெளிவா சொல்லுடா…

 

பிடிச்சிருக்கு…ஆனா பிடிக்கல… என அருண் மீண்டும் அதையே சொல்ல…

 

 

 டேய் என்னடா இவன் எஸ்கே சூர்யா மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கான்…

 

 அதையேதான் மச்சான் வந்ததுல இருந்து சொல்லிட்டு இருக்கான்… கேட்டு கேட்டு எனக்கே மண்டை காஞ்சி போச்சு…

 

 இவனை இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது வாடா மச்சான் நீ அவன் ஒழுங்கான பதில் சொல்லல இன்னைக்கு இவனை ஒரு வழியாக்காம விட மாட்டேன்… சிவாவை அழைத்தபடி அருணிடம் பாய்ந்து விட்டிருந்தனர் இருவரும்…

 

 மூவரும் அவ்விளையாட்டு மைதானத்தில் கட்டி உருண்டு பிரண்டு வைக்க… ஒரு கட்டத்தில் அருண் அவர்களிடம் சிக்கி மூச்சு விட முடியாமல் தவிக்க…

 

 சொல்றேன் விடுங்கடா விடுங்க என இறைஞ்ச அப்போதும் விட்டார்கள் இல்லை இருவரும்… இதற்கு மேல் விட்டால் சரி வராது என்று தன் மொத்த பலத்தையும் ஒன்று திரட்டி இருவரையும் விளக்கித் தள்ளி விடுபட்டு வெளியே வந்தான் பலவான் அருண்… 

 

 

  அருண் தள்ளிவிட்டதில் இருவரும் ஆளுக்கு ஒரு திசையாக விழ மூவரும் மூச்சு வாங்கி கிடந்தனர்…

 

அவர்களுக்கு கை கொடுத்து எழுப்பிய அருணை நெஞ்சில் தட்டி சொல்லு என பிடிவாதமாக கேட்க…

 

பொண்ணை பிடிச்சி இருக்கு ஆனா பொண்ணுக்கு தான் இந்த கல்யாணம் பிடிக்கலை… வியாபார கல்யாணத்துல உடன்பாடு இல்லையாம்…என ராகம் போட்டு கூறிவிட்டு அருகில் இருந்த பாட்டிலில் தண்ணீரை எடுத்து பருகினான்…

 

எதே என் மச்சானை பிடிக்கல ஒருத்தி சொல்லிட்டாளா என விவேக் ஆவேசத்தில் கத்த அவன் தலை அடி போட்ட சிவாவோ…

 

எருமை அவன பிடிக்கல எங்க சொன்னாங்க… கல்யாணத்த தானே பிடிக்கவில்லை என்று சொன்னாங்க…?? “

 

 எதுக்குடா இப்ப அடிச்ச…?? ரெண்டு ம் ஒன்னு தானடா…விவேக் 

 

எருமை அது எப்படி ரெண்டும் ஒண்ணாகும்…. இவன பிடிக்காம கல்யாணம் வேணாம் சொல்லல… அவங்க அப்பா இவன பிடிச்சுட கூடாதுன்னு இந்த கல்யாணம் வேண்டாம் சொல்லிட்டாங்க…

 

ரைட் இப்படி தெளிவாக குழப்பி விடுங்டா அப்போ தான்… காதல் பரத் மாதிரி பைத்தியமா சுத்த முடியும்…போங்கடா **** தெளிவா சொல்லுங்கடா என சிவா கூறுவது புரியாத கடுப்பில் விவேக் கத்த…

 

 

இவனை…என பல்லை கடித்த சிவா விவேக்கை உட்கார வைத்து பூரணி அருணை ஏன் வேண்டாம் என்றால் என்பதை விலாவாரியாக விளக்கி பாடம் எடுக்க…

 

ஓஓஹோ இப்போ புரிஞ்சிது விடு என்றவன் எழுந்து அருணிடம் சென்றவன்…

 

 

“ நடந்த எல்லாத்தையும் தட்டி விடு உனக்கு அந்த பொண்ணு பிடிச்சிருக்கு இல்ல…??என விவேக் கேட்க 

 

ஏன்டா…?? என அருண் புரியாது கேட்க…

 

 நீ சொல்லு மச்சான்… என நின்று பிடியிலிருந்து கேட்க…

 

 பிடிச்சிருக்கு இருக்கு ஆனா… என அருணை முடிக்க விடாமல் பாதியிலே கத்தரித்த விவேக்…

 

 ஆனா ஆவன்னா எல்லாம் விடு… உனக்கு அந்த பொண்ணு புடிச்சிருக்கு இல்ல அது போதும்… மச்சான் அந்த பொண்ணை தட்றோம் தூக்குறோம் அருணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்… என அவன் திட்டத்தில் சிவாவையும் கோர்க்க…

 

 டேய் நாமெல்லாம் போலீஸ் டா…ஏதோ பொறுக்கி மாதிரி பொண்ணு தூக்குறோம் தாலிகட்டும் அசால்ட்டா சொல்ற…மாட்டுன வேலை காலி தெரியும்ல…என சிவா தன் எதிர்ப்பை தெரிவிக்க…

 

“எனக்கு ஃப்ரெண்ட்ஷிப் ஃப்ர்ஸ்ட் கடமை நெஃஸ்ட்… தொட நடுங்கி எல்லாம் ஒதுங்கிக்கோங்க இந்த விவேக் களத்தில் இறங்கிட்டா வாடிவாசல் காளை போல குறுக்க எது வந்தாலும் குத்தி தூக்கி போட்டு போயிட்டே இருப்பேன்…மச்சான் நாளைக்கு உனக்கு கல்யாணம் புது மாப்பிளை ரெடி ஆகிக்கோ…என அருண் தோளில் தட்ட…

 

அதற்கு அவன் மந்தகாச புன்னகையை சிந்தினான்…

 

போலீஸ் ரவுடி பேபிய கடுத்துமா…???

 

டேய் டார்லிங்ஸ் மீ ஆல்ரெடி பாவம் இதுல நீங்க வேற லைக்ஸ் கமன்ட் போட மாற்றிங்களே டா உங்களுக்கே இது நியாயமா… 🤕🤕🤕

 

 

 

 

4 thoughts on “Rowdy பேபி -3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top