அஜய் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயர். பாத்துட்டே இருக்கலாம் போன்ற முகம் , குணத்தில் அவன் அம்மாவை போல தங்கம் , மிகவும் திறமைசாலி, ஆனால் கோவக்காரன்.அழகான குடும்பம் – அப்பா ராஜ், அம்மா – மீனா , தங்கை – சரண்யா மற்றும் இவன். அவன் அம்மா தான் அவனுக்கு எல்லாம். அவன் அம்மா மீனுக்கு சின்ன ஹோட்டல் வெக்கணும்னு சின்ன வயசில் இருந்தே ஆசை ஆனால் மிடில் கிளாஸ் பேமிலி சோ ஆசையாவே இருக்கு இன்னும். அஜய் நண்பர்கள் – அர்ஜுன், நந்தா, கதிர்.
டேய் கதிர், என்னடா இவன் எப்ப பார்த்தாலும் மொபைல், கால், லேப்டாப் னு ஏதாது செஞ்சுட்டு பேசிட்டே இருக்கான். நாமெல்லாம் இவன் கண்ணனுக்கு தெரிறோமா இல்லையா? சார் நம்மகூட வெளில வந்தே ஒரு வாரம் ஆகுது. டேய் உனக்கு தெரியாததா , அவங்க அம்மாக்கு நெஸ்ட் வீக் பர்த்டே , அம்மாவோட கனவை பரிசா குடுக்க தான் நம்ம ஹீரோ (அஜய்) மாடா உழைக்கிறான். அவனோட சொந்த ஊரான மதுரைல ஒரு இடமும் பாத்துட்டான் , ஹோட்டல் இன்டெரியர் டிசைன் முழுதும் இவன் ஐடியா தான். அம்மா பிறந்த நாள் அன்று surprise பண்ணனும்னு இருக்கான்.
டேய் அஜய், உனக்கு தான் கால் வருது ஊர்ல இருந்து அம்மா தான் குப்படறாங்க. ஓகே நந்தா , தேங்க்ஸ் டா , நா பேசிக்கறேன்.
ஹாய் மீனுமா, என்ன பன்னிட்டிருக்கிங்க, மேடம் இப்போவும் எதாவது புதுசா ட்ரை பண்றேன்னு பன்னிட்டிருக்கிங்களா.
ஆமா டா அஜய் கண்ணா, நம்ம குக் வித் கோமாளி ஷோ ல புதுசா நுங்கு வெச்சு அந்த பிரியங்கா பொண்ணு ஒரு பாயா பன்னிருந்தா அதான் அப்பாவை காலையிலேயே எழுப்பி நல்ல எலசா இருக்க நுங்கா பாத்து வாங்கிட்டு வர சொன்னேன். இப்போ அத தான் செஞ்சிட்டிருக்கேடன் அதான் உனக்கு சொல்லலாம்னு கூப்பிட்டேன். சூப்பர் மா, நீ சமையல்ல புலி நாம ஹ்ம்ம் எங்க .. ஓகே விடுங்க … ஹா ஹா சரி டா கண்ணா நீ எப்போ வர ஊருக்கு, அடுத்த வாரம் வர தான? நோ மீனுமா எனக்கு ப்ராஜெக்ட் ல செம வேல இப்போ நகரவே முடியாது அடுத்த மாசம் வரேன். ஓகே ஓகே ஆனாலும் கொஞ்சம் அம்மாக்காக ட்ரை பண்ணு. சரி நா வெக்கறேன், ஒடம்ப பத்திரமா பாத்துக்கோ நல்லா சாப்பிடு நா வெக்கட்டா. ஒகே மா நீயும் ஹெலத்த நல்லா பாத்துக்கோ நா சரண்யாகிட்ட உன்ன வாட்ச் பண்ண சொல்லிருக்கேன். அட போடா பை பை.
நிஷா ஹே நிஷா , என்னடி பண்ணி தொலச்ச, அந்த வீனா போனவன் வந்து அந்த கத்து கத்தறான். அது ஒன்னும் இல்லடி மது, அவன் ரெஸ்டாரண்ட் போயிருந்தேனா .. ,, போதும் போதும் நிறுத்து அப்பறம் என்ன ஆகிருக்கும்னு நானே சொல்றேன். மேடம்க்கு அங்க இருந்த எதாவது புடிச்சுருக்காது சோ நீங்க வாலண்டீர்ஆஹ் போய் ரெவிஎவ் குடுத்திருப்பிங்க அதான் அவன் அந்த சத்தம் போடறான் கரெக்டா..
ஹி ஹி எப்படி மது கரெக்ட் ஆஹ் சொல்ற… இதைத்தான் நா நீ யூடுப் சேனல் ஆரம்பிச்சதில் இருந்து பாக்கறேனே. உண்மையான ரெவியூதான் போடுவேன்னு போல்லோவெர்ஸ் மட்டுமில்லாமல் இப்படி சண்டையும் இல்ல வாங்கிட்டு இருக்க.. விடுடி விடுடி அரசியலில் இந்த சேதாரம் எல்லாம் சாதாரணம் போ போ அடுத்த ரெவியூ எத பத்தி போடலாம்னு யோசி வரட்டா.. வராத அப்படியே போய்ட்டு டி நிஷா ..
நிஷா – 5 1 /2 அடி உயரம் , மாநிறமும் அல்லாமல் வெள்ளையும் இல்லாமல் எப்பவும் செம்மை பூசிய முகம். இக்காலத்து பெண்கள் போல ஸ்லிம் இல்லாமல் சற்றே பூசினாற்போல தேகம் ஆனால் செதுக்கி வைத்த சிலை போல இருப்பாள் , பார்க்க பார்க்க அவளை பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும், அவள் கண்கள் பேசும் மொழி அப்போ அப்போ அதற்காகவே அவளது யூடுப் சேனல்கு அவளோ போலோவெர்ஸ்.
இதோ நாளை மீனுக்கு பிறந்தநாள் , அஜய் ஆஃபிஸில் லீவு வாங்கிட்டு ஊருக்கு போக ரெடி ஆகிட்டிருக்க, அவனது மொபைல் அழைத்தது.
நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே
ஏப்பிரல் மே வெய்யிலும் நீயே
ஜூன் ஜூலை தென்றலும் நீயே
ஐ லைக் யு
செப்டம்பர் வான் மழை நீயே
அக்டோபர் வாடையும் நீயே
ஐ தங் யு
உன்னை போல் ஓர் தாய் தான் இருக்க
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க ..
அஜய் : சொல்லு மீனுமா, நான் தான் கண்டிப்பா வர முடியாது லீவு இல்லனு சொன்னேன்ல , இந்த வருஷம் நீ உன் புருஷன்கூட டூயட் பாடி பர்த்டே செலிப்ரட் பண்ணுவியாம், ஒகே என் செல்ல மீனு என வம்பளக்க , அந்த பக்கம் அவன் தங்கையோ அழுதுகொண்டிருந்தாள்…..
👌👌👌👌👌👌👌👌👌👌👌
thank you 🙂
lrbUVmfOZXWhELNe