ATM Tamil Romantic Novels

Rowdy பேபி -6

6

 

 வழக்கத்தை விட அன்று கல்லூரியில் இருந்து தாமதமாக மகள் வர பதட்டம் அடைந்தார் ஜெயந்தி…

 

“என்னடி இவ்ளோ லேட்டா வர…?? இங்க இருக்குற பஸ் ஸ்டாப்ல இருந்து நடந்து வர இவ்வளவு நேரமா…?? உன்னை தானடி கேட்டு இருக்கேன் உன் பாட்டுக்கு போயிட்டே இருந்தா என்ன அர்த்தம்…அப்புறம் பெரிய மனுஷினு நான் ஒருத்தி இங்க எதுக்கு இருக்கேன்…!!” என ஆதங்கம் கொண்டார்…

 

 

என்னமா உன் பிரச்சனை… ஃப்ரெண்ட் வீட்டுக்கு போய்ட்டு வந்தேன் அதான் நேரமாச்சு போதுமா என நெஞ்சரிய பொய் உறைத்தால் பூர்ணா…

 

உண்மையை சொன்னால் கல்லூரிக்கு சென்று வரும் இந்த சுதந்திரம் கூட விட்டு போகுமே என்கிற பயம் தான்…சொல்லி விட்டு அதற்கு மேல் எதுவும் இல்லை என்பது போல் செல்ல போனவளை விடாது தொடர்ந்து…

 

அது யாரு வீடு வரைக்கும் போற அளவுக்கு பழக்கம் உள்ள ஃப்ரெண்ட்… எதுவா இருந்தாலும் காலேஜ்லே பேசிக்க வேண்டியது தானே…??அப்படி வீடு வரைக்கும் போக வேண்டிய அவசியம் என்ன…?? அந்த ஃப்ரெண்ட் பேர் என்ன…?? வீடு எங்க இருக்கு…?? என அடுக்கடுக்காக கேள்விகள் கனைகள் பொழிந்தன…

 

“என்னமா வேணும் இப்போ உனக்கு விட்டா குலம் கோத்திரம்னு ஜாதகம் வரை கேப்ப போல இருக்கு… அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன் இப்படி நிக்க வச்சி கேள்வி கேக்குற… ஒரு பொண்ணு படிப்பு சம்மந்தமா அவள் ஃப்ரெண்ட் கிட்ட டவுட் கேக்குறது கூட குத்தமா இந்த வீட்ல… முடியல உங்களோட… என்னை கொஞ்சமாவது நிம்மதியா இருக்க விடேன்மா…

 

“அப்படி என்னடி கேட்டுட்டேன் வயசு பொண்ணு வீட்டுக்கு தாமதமா வந்தா எந்த பெத்தவளுக்கும் வயிறு பக்குனு இருக்க தான் செய்யும்… அதுக்கு நாலு கேள்வி கேட்டா உன் நிம்மதி போச்சுன்னு சொல்ற… உன்னை பெத்ததுக்கு தான் நாலு பேரு கிட்ட பேச்சு கேக்க வேண்டி இருக்கு… பத்ததுக்கு உன் அத்தை வேற…உன்னால நாங்கள் நிதம் நிம்மதி இல்லாம அலையுறது உனக்கு கொஞ்சமாவது புரியுதா…??

 

 

“ப்ச் இங்க பாருங்கமா அது நீங்களே இழுத்துகிட்ட வினை அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது… ஏற்பாடு பண்ணும் முன்னாடியாவது என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டிங்களா…உங்க இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணிட்டு என்னை குறை சொல்லி பிரயோஜனம் இல்லைமா… அவங்க அவங்க செய்ற வேலைக்கான பலன் அவங்க தான் அனுபவிக்கணும்…??” என பூர்ணா விட்டேரியாக பதில் சொல்ல…

 

“ஏய் நிறுத்துடி என்னடி விட்டா உன் பாட்டுக்கு பேசிட்டே போற…அந்த மனுஷன் தப்பு செஞ்சவர் தான் நான் இல்லனு சொல்லல… அதுக்கான பலனை கடுவுள் பார்த்துப்பார் நீ ஒன்னும் அவரை பற்றி பேசவானம் புரியுதா… அந்த மனுஷன் வெளில எப்படியோ ஆனா உங்களை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துகிட்டவர்டி… இப்போ கூட பழசை எல்லாம் விட்டுட்டு உங்களுக்காக மாற போய் தான் ஏறக்கூடாது படி எல்லாம் ஏறிட்டு இருக்காரு… கேட்ககூடாத வார்த்தை எல்லாம் கேட்டுட்டு இருக்காரு… அப்படி என்னடி அவர் தப்பு பண்ணிட்டாரு உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தார்… இரு நான் இன்னும் பேசி முடிக்கல… அவர் சுயநலத்துக்காக உன்னை கல்யாணம் பண்ணி வைக்கிறார் சொல்ல போற அதான… பைத்தியம்டி நீ அவர் உசுரே உன் கிட்ட இருக்குடி… அப்படி இருக்கும் போது எதையும் யோசிக்காம அவர் செஞ்சு இருக்க மாட்டார் என்று நான் நம்புறேன்… என்ன அப்படி பார்க்கிற உன் மேல வச்சி இருக்கிற பாசத்தால தான்டி அவர் கூட பிறந்த பிறப்ப ஒத்த ரத்த சொந்ததையும் தூக்கி போட்டு இப்போ மனுஷன் ஒத்தையில நிக்கிறாரு இதுக்கு மேல வேற என்னடி வேணும் அந்த மனுஷனுக்கு உன் மேல உள்ள பாசத்தை நிரூபிக்க…என முதல் முறையாக ஆதங்கமும் ஆத்திரமும் பொங்க ஜெயந்தி பேச வாய் அடைத்து நின்றாள் பூர்ணா அதுவும் முதல் முறையாக…

 

“ காட்டுகிற சம்பந்தம் எல்லாம் வேணாம்னு சொல்றனா…நீ எதுவும் காதலிச்சு தொலைஞ்சிட்டியாடி சொல்லி தொலை உன்னை பெத்ததுக்கு அது யாரா இருந்தாலும் உனக்கே கல்யாணம் பண்ணி வச்சு தொலையுறோம்…!!” என குரல் உடைந்தது…

 

“அம்மா.. ஆஆ…!!”என பூர்ணா அதிர்ந்து கத்த…

 

“என்னடி அம்மா… நீ செய்யறது எல்லாம் பார்த்து வச்சு இப்படித்தான் கேக்க தோணுது…!!”

 

“அம்மா நீயும் என்னை புரிஞ்சிக்கலையாமா… அப்பா வெளிய போனா… அவர் வீடு திரும்புற அவருக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ உயிரை கையில பிடிச்சிட்டு உட்கார்ந்து இருக்கிற உன்னை பார்த்து வளர்ந்தவ மா நானும்… பொழுது விடிஞ்சா என்னை பிரச்சனை வருமோ வயிற்றில நெருப்பு கட்டிட்டு வாழ்ந்த நீயா என்னை போய் ஒரு போலீஸ்காரனையோ ஒரு குடிகாரனையோ கட்டிக்க சொல்ற…?? போதும்மா அதெல்லாம் உன்னோட போகட்டும் எனக்கு அந்த தின நரகத்தை கொடுக்கிற வாழ்க்கை வேணாம்…!!”பூர்ணா தெளிவாக 

 

“அப்போ எப்படிப்பட்ட மாப்பிள தான் வேணும் அதையாவது சொல்லேன்… உன் விருப்பத்துக்கு ஏத்த மாதிரியே பார்க்கிறோம்…!! ” மகள் வாய் வழியாகவே ஒரு முடிவை எதிர் பார்த்தார் ஜெயந்தி…

 

 

   “கோர்ட்டு போலீஸ் அடிதடின்னு இது எதுவும் தெரியாத ஒரு மாப்பிளை பாருங்க… தான் உண்டு தன் வவேலை உண்டுனு இருக்கணும்…சொத்து சுகம் இல்லாட்டியும் பரவால்ல எனக்கு தேவை எந்த பயமும் இல்லாத ஒரு சாதாரண வாழ்க்கை…அதுக்கு தகுந்த மாதிரி மாப்பிளை பார்த்தா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்…ஆனால் அதுவும் என் எக்ஸாம் முடிஞ்ச பிறகு தான் முடிவா சொல்லிட்டேன் இதுக்கு மேல உங்க பாடு என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க…என்று விட்டு விடுவிடுவென படி ஏறி மறைந்து போன மகளை தான் கோவிந்தன் பார்த்து இருந்தார் அவர் மனதில் சிறு ஏமாற்றம் இருந்தாலும் அதை விழுங்கி கொண்டு பெண் கேட்ட நிபந்தனைகளுக்கு ஏற்ப மாப்பிளை தேட தொடங்கி விட்டார்…

 

 

ஆடி காற்றில் அடித்து செல்லும் உதிர்ந்த இலைகள் போல் அந்த வார நாட்கள் பறந்து சென்றது…

 

வச்சிக்கோ என தாராளமாக கொடுத்தாலும் கஞ்சத்தனமாய் கரைந்து போகும் வார இறுதி நாளில்…

 

என்னடா பகுத்தறிவு பேசுற காக்கி சட்டைக்கு கோவில்ல என்ன வேலை… நீ இங்க எல்லாம் வந்து நான் பார்த்ததே இல்லையே என விவேக்… அருண் வெளியே செல்வதை கண்டு வம்படியாக உடன் வந்து ஓடிக்கிட்ட தொல்லை…

 

“ப்ச் அம்மா தான்டா கோவிலுக்கு போய்ட்டு வர சொன்னாங்க எதோ என் கல்யாணதுக்கு வேண்டுதலாம்… ரொம்ப வருந்தி கேட்டாங்க சரி அதான் கோவிலுக்கு வந்தேன்…என அருண் 

 

அதான பார்த்தேன் அம்மா சொல்லாம நீயா எதை செஞ்சி இருக்க… அது சரி கோவிலுக்கு தான் போறேன் முதல்லே சொல்லி இருந்தா நான் எஸ்கேப் ஆகி இருப்பேன்ல… இப்போ பாரு உன் கூட வந்து நானும் மாட்டிக்கிட்டேன்… என விவேக் அலுத்து கொள்ள… 

 

“அவ்ளோ சலிப்பா இருந்தா கிளம்பி போயிட்டே இருடா மச்சான்… உன்னை யாரும் இங்க தேடலை… உன் கூட கிளம்பி வந்தா தான் ஆச்சு பிடிவாதமா வந்தது நீ தான்…நான் கூப்பிடல !!” என அருண் கூற

 

“அசிங்க படுத்தாத மச்சான்… வீட்ல இருந்தா சும்மா நைநைங்குறாங்கடா தங்கச்சி கல்யாண கடன்,அப்பா ஆபரேஷன் வீட்டு அடமானம் எல்லாத்தையும் நான் ஒருத்தனே தான் பார்க்குறேன்… வருமானம் பத்தலை வருமானம் பத்தலை பிடுங்கி எடுத்தா ஒரு மனுஷன் என்ன தான்டா பண்ணுவான்… அதான் கிளம்பி வந்துட்டேன்…

 

சரி விடு மச்சான் அதான் கோவிலுக்கு வந்துட்ட இல்லை இனிமே உனக்கு நல்ல காலம் தான்… வா நமக்கு இந்த 

 சாமி என்ன வரம் கொடுக்குதுன்னு பார்ப்போம்… என்றபடி வந்த அருண் மீது பூச்செண்டாக வந்து விழுந்தாள் பூர்ணா…

 

 வரம் தந்த சாமிக்குப்

பதமான லாலி…

 

 

ஹாய் செல்லம்ஸ் பாப்பாக்கு தடுப்பூசி போட்டது பிவேர் ஆகி கஷடம் ஆகி போச்சு அதான் late 

 

 

 

2 thoughts on “Rowdy பேபி -6”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top