ATM Tamil Romantic Novels

என் மோகத் தீயே குளிராதே 27

அத்தியாயம் 27

 

“எங்க போறோம்? எதுக்கு எல்லாத்தையும் எடுத்து வைச்சுட்டுருக்கீங்க?”

 

“எங்க போறோம் இல்ல.. எங்க போறேன்னு கேட்கணும்.. ஏன்னா நீ மட்டும் தான் கிளம்புற..” என்ற ஹரிஷான்த்தை புரியாது பார்த்தாள் ஹாசினி. 

 

“ப்ச்.. உடனே அப்செட்டாகக் கூடாது.. பாட்டியும் ஆண்டியும் குலதெய்வம் கோயிலுக்கு போகணும்னு ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்காங்க.. இந்த தீ விபத்து கூட தெய்வ குத்தத்துனால தான் வந்துச்சாம்.. இப்ப உனக்கு ரெண்டு மாசம்.. அதுனால தேங்காய் பழம் உடைக்காம கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடலாம்னு சொன்னாங்க.. நீயும் உன்னோட அம்மா பாட்டியை பார்த்த மாதிரி இருக்கும்.. இந்த மாதிரி நேரத்துல அவங்க எல்லாம் உன்கூட இருந்தா, கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவேன்னு தான் சரின்னு சொன்னேன்.. உன்னைய கூட்டிட்டு போக அகில் வருவான்.. அவன் கூட நீ முதல்ல கிளம்பி போ.. இன்னும் ட்டூ டேஸ்ல இங்க இருக்குற எல்லாத்தையும் சரி பண்ணிட்டு நானும் வந்துடுவேன்.. ஓகே வா? ம்ம்..” என்றவன் அவளது நெற்றியோடு தன் நெற்றியை ஒற்றி   நிற்க, அவனது இடையோடு கையிட்டு வளைத்த ஹாசினி,

 

“நான் மட்டும் போகணுமா? எனக்கு போர் அடிக்குமே?” என்று சிணுங்க, அவளது கூர்மையான மூக்கியின் நுனியை பிடித்து ஆட்டியவன்,

 

“இன்னும் ட்டூ டேஸ் தான்.. அதுக்குள்ள நான் வந்துடுவேன்.. உனக்கு போரடிக்காம இருக்குறதுக்காக, விளாவை கூட்டிட்டு வந்து விடச் சொல்லி, ஹர்ஷுக்கிட்ட கேட்டுருக்கேன்.. நான் வர்ற வரைக்கும் அவ உனக்கு கம்பெனி கொடுப்பா.. அப்புறம் ஆண்டி, அங்கிள் எல்லொரும் கூடவே இருப்பாங்க.. ஓகே? இங்கப்பாரு, இப்பவே அவங்கக்கூட இருந்துக்கோ.. நான் வந்ததுக்கு அப்புறம், நீ என்கூட மட்டும் தான் இருக்கணும்.. ஓகே..” என்ற ஹரிஷான்த், ஹாசினியை அகிலுடன் பெங்களூருக்கு அனுப்பினான். ஹாசினி அங்கிருந்து கிளம்பியதும், தனது செகரட்ரியை அழைத்தவன், காமினி மற்றும் அவளது கம்பெனியுடன் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு கூறியவன், மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்றான். மீட்டிங் ஹாலிற்குள் நுழைந்தவனை ஏளன புன்னகையுடன் பார்த்தாள் காமினி. 

 

“என்ன ஹரி சார்.. உங்க குடௌன்.. மெட்டீரியல்ஸ் எல்லாம்.. அப்படியே எரிஞ்சு சாம்பலாகிடுச்சாம்.. உங்களுக்கு ஹெவி லாஸாமே? ச்ச்சு.. ச்ச்சு.. உங்களை பார்த்தா.. ரொம்ப பரிதாபமா இருக்கு.. ஆமா, ஸேர் கோல்டர்ஸ்கு என்ன பதில் சொல்வீங்க? எப்படி இதுல இருந்து வெளியே வரப்போறீங்க சார்?” என்றவள் அவனை கூர்மையாக பார்த்து, தன் இதழ்களை பற்களால் கடித்தவாறே, கண்ணில் மையலுடன்,

 

“நான் வேணா உங்களுக்கு ஒரு ஐடியா சொல்லட்டுமா? உங்களோடது எல்லாத்தையும் எனக்கு கொடுத்துருங்க.. நான் வாங்கிக்குறேன்.. பத்திரமா பார்த்துப்பேன்..” என்று கூற, இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்த ஹரிஷான்த்,

 

“புரியல?” என்று தன் புருவத்தை உயர்த்தி கூறியவாறே காமினியின் கணவனை பார்த்து,

 

“ உங்க வொய்ஃப்வை  கொஞ்சம் தெளிவா சொல்ல சொல்றீங்களா? அப்புறம் நீங்க தான் வருத்தப்படுவீங்க..” என்று கூறி நக்கலாக புன்னகைக்க, காமினியை முறைத்து பார்த்தான் அவளது கணவன். 

 

“சாரி மிஸ்ஸஸ் காமினி.. என்னோட ஸேர்ஸை பத்தி நீங்க ரொம்ப கவலைப்படுறீங்க போல? ச்சு.. ச்சு.. ம்ம்.. கொஞ்ச நேரம் நல்ல படம் பார்ப்போமா? ஆக்ஷன் படம் தான்.. செம த்ரிலிங்கா இருக்கும்..” என்றவன் அங்கிருக்கும் ப்ரொஜெக்டரை ஓட விட, அதில் குடோனிற்குள் காமினி நுழைவதில் இருந்து, அங்கிருக்கும் பொருட்களில் தீயை பற்ற வைப்பது வரை அனைத்தும் படமாக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தவள்,

 

“இது.. இது.. இது.. பொய்.. உண்மையில்ல.. என்னைய மாதிரியோ கிராபிக்ஸ் பண்ணிருக்காங்க..” என்று தன் கணவனை பார்த்து கத்த,

 

“ஸ்ஸுஸுஸு.. கத்தாதீங்க.. மிஸ்ஸஸ் காமினி.. இது ஒன்னும் உங்க வீடு கிடையாது.. நீங்க உங்க இஷ்டத்துக்கு கத்துறதுக்கு.. இது என்னோட கம்பெனி.. எல்லாத்தையும் ப்ளான் போட்டு பண்ண நீங்க, ஆத்திரத்துல சிசிடிவி கேமிராவை மறந்துட்டீங்களே? என்ன ஏட்டையா நீங்க? மண்டையில் இருக்கிற கொண்டையை மறக்கலாமா? பட், இதுவும் நல்லதுக்கு தான்.. இல்லையென்றால் எனக்கு ப்ரூப் கிடைச்சிருக்காதே.. ஃபைன் இப்போ டீல் பேசுவோமா?” என்றவாறே தனது இருக்கையில் அமர்ந்தவன், தனது அழைப்பேசியில் இருந்து யாருக்கோ அழைக்க, அடுத்த நொடி கதவை திறந்து கொண்டு காவல் துறை அதிகாரி நுழைய, பயந்து போனாள் காமினி. அவள் கண்களில் தெரிந்த பயத்தை பார்த்தவாறே அவளது கணவனின் அருகில் வந்தவன், 

 

“உங்க வொய்ஃப்கு என் மேல் காதல் எல்லாம் ஒன்னுமேயில்ல.. அவளோட ஆசைகளை சொல்லவும் அவ பேசுவதை கேட்கவும் ஒருத்தர் தேவை.. பொண்டாட்டி பேச்சை கேட்டா.. நாம அவங்களுக்கு அடிமை அப்படின்னு அர்த்தமில்ல.. எங்கேயோ பிறந்து, எங்கேயோ.. யார்க்கிட்டயோ வளர்ந்து, நம்மளை நம்பி வந்துருக்காங்க.. அவங்கக்கிட்ட தினமும் ஒரு பத்து நிமிஷம் சிரித்து பேசுனா போதும்.. அவங்க சொல்றதை கேட்ட போதும்.. அவங்க நம்மளை விட்டு எங்கேயும் போக மாட்டாங்க.. அளவுக்கு அதிகமா சுதந்திரம் கொடுக்கறதும் தப்பு.. சந்தேகப்பட்டு அவங்களை துன்புறுத்துறதும் தப்பு.. அவங்களுக்கு என்ன வேணும்.. அவங்க உங்கக்கிட்ட என்ன எதிர்ப்பார்க்குறாங்கன்னு பார்த்து அதை செய்யுங்க மிஸ்டர்.. அவங்க மனசுல இடம் பிடிங்க.. உங்களை செத்தாக்கூட மறக்கமாட்டாங்க.. இதெல்லாம் முன்னாடி எனக்கும் தெரியாது.. பட், லவ் பண்ணறதை விட.. நம்மளை ஒருத்தர் அளவுக்கு அதிகமா லவ் பண்றாங்க.. அப்படிங்குற ஒரு ஃபீலிங்ஸ்.. அது எல்லாத்தையும் சொல்லி கொடுக்குது.. அனுபவத்துல சொல்றேன்.. லவ் பண்ணுங்க பாஸ் வாழ்க்கை அழகாயிருக்கும்.. தினமும் உங்க பிஸ்னஸ்காக யார் கூட எல்லாம் சிரிச்சு பேசுறோம்.. அதுல ஒரு பெர்சென்ட் நம்ப லைஃப் பார்ட்னர்கிட்ட சிரிச்சு பேசுனா போதும்.. இதுக்கு மேல சொல்றதுக்கும் எதுவும் இல்ல..” என்றவன் காமினியை பார்த்து,

 

“பொண்ணுங்களுக்கு கல்யாணங்குறது குதிரைக்கு போடுற கடிவாளம் மாதிரி.. ஒரு தடவை போட்டா.. அந்த பாதையை மாத்துறது ரொம்ப கஷ்டப்.. போடுறதுக்கு முன்னாடியே ஆயிரம் தடவை யோசிக்கணும்.. போட்டதுக்கு அப்புறம் பெட்டர் சாய்ஸ் தேடக்கூடாது.. என் மனசுல நீ எப்பவும் இருந்ததில்ல.. இருக்கப் போறதுமில்ல.. என்னோட மனசுல என் பொண்டாட்டியை தவிர வேற யாருக்கும் இடமில்ல.. அது அவ எவ்வளவு பெரிய ரதியா இருந்தாலும் சரி.. நீயும் உனக்கு கிடைச்ச வாழ்க்கையை நேசிக்க பழகிக்கோ.. வாழுற காலம் கொஞ்சம் தான்.. அதை உண்மையான காதுலுக்காக வாழு.. சொரக்கத்தை பக்கத்துலேயே வைச்சுக்கிட்டு..கானல் நீரை தேடாத.. அதுக்காக நீ செஞ்ச தப்பை மன்னிச்சு.. விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காத.. அவ்வளவு பெரிய மகான் நானில்லம்மா.. உப்பு திண்ணவன் தண்ணீர் குடிச்சு தானாகணும்.. நீ செஞ்ச தப்புக்கு நீ தண்டனை அனுபவவிச்சு தானாகணும்.. ஆனா, இனி நான் உன்னை என் வாழ்க்கைல பார்க்கக்கூடாது.. என் பேபி கண்ணுல மரணவலியை பார்க்க வைச்ச உன்னை மன்னிக்கவே மாட்டேன்.. என் கண்ணுல பட்டுடாத, அது தான் உனக்கு நல்லது..” என்று அறிவுரையில் ஆரம்பித்து மிரட்டலில் முடித்தவன், மின்னலென அங்கிருந்து கிளம்பினான். காதல் என்பது இன்பச் சிறை.. அதில் தனது விருப்பத்துடன் சென்று அடைப்பட்டுக் கொள்வருக்கு, வாழ்க்கை அழகானது. தன்னை பிடிக்காத ஒருவனை தேடிச் சென்றது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து கொண்ட காமினி யின் கண்களில் கண்ணீர் அருவியென வழிய, அதனை துடைத்து விட்ட தன் கணவனை கண்டதும், மேலும் முகத்தை மூடிக் கொண்டு அழுகத் தொடங்கினாள். தவறு செய்து விட்டு தவிக்கும் குழந்தையென அழுதவளை, தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவனுக்கு, ஹரிஷான்த் பேசிய வார்த்தைகள் அனைத்தும் நினைவில் வந்து சென்றன. நாம் வாழும் வாழ்க்கை ஒரு முறை தான். அதில் வரும் குரோதம் விரோதம் சோகம் அனைத்தையும் நீக்கி, உண்மையான அன்போடு வாழ்ந்தால் வாழ்க்கை அழகாக இருக்கும். காதலில் வரும் இன்பமும் துன்பமும் சுகமானதே..

********************************************

“ஏன்டி ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்ட அர்ச்சனாவிடம் நடந்த அனைத்தையும் கூறினாள் விளானி. 

 

“ஏன்டி இது சின்னப்புள்ளத்தனமா தெரியல? அவ தான் விளையாடினாள்னா.. நீ எப்படிடி அங்கிருந்து ஓடி வரலாம்? அங்கேயே இருந்து அவளுக்கு டஃப் கொடுத்துருக்கணும்..” என்றபடியே விளானி வாங்கிக் கொடுத்த ஐஸ்கிரீமை அள்ளி வாயில் வைத்தாள் அர்ச்சனா. 

 

“அவ பண்ணது கூட எனக்கு பெரிசா தெரியில்லடி.. அந்த நெட்ட கொக்கு அவன் அவளை தூக்கி வைச்சு பேசுறதைத் தான் தாங்க முடியல.. அதுவும் இந்த ஹர்ஷூ பையே, அவக்கிட்ட எப்படி எல்லாம் வழியுறான் தெரியுமா? அப்படியே அவனோட மண்டைய உடைக்கணும் போல கோபம் கோபமா வருது..”

 

“அதுக்கு தான் இந்த ஐஸ்கிரீமை சாப்பிடனும்னு சொல்றேன்.. கேட்க மாட்டேங்குற..” என்றவாறே விளானி கையில் வைத்திருந்த ஐஸ்கிரீமை எட்டி பார்த்த அர்ச்சனா, 

 

“ப்ச்.. அதுவும் ஆறி போயி கூலாகிடுச்சு.. உனக்கு இந்த ஐஸ்கிரீம் கண்டிப்பா வேணுமா? நான் வேணா.. இதை சாப்பிட்டுட்டு உனக்கு புதுசா வாங்கித் தரவா?” என்று கேட்டவாறே, விளானியிடம் இருந்த ஐஸ்கிரீமை தன்புறம் நகர்த்தி கொண்ட அர்ச்சனா, 

 

“ஏதோ சரியில்லையே.. “ என்றவாறே விளானியை மேலும் கீழுமாக பார்க்க, அவளை புரியாத பார்வை பார்த்தாள் விளானி. 

 

“எதுக்குடி இப்படி பார்க்குற?”

 

“இல்ல.. உன்னைய அந்த ப்ரியாவோட கேக்கப் கூட வைச்சு கம்ப்பேர் பண்ணி பார்த்தேன்..” என்றவள் விளானியின் கன்னங்கள் இரண்டையும் பிடித்து, அவளது முகத்தருகே தன் முகத்தை கொண்டு செல்ல,

 

“ச்சீ.. விடு டி.. அவளா நீ?” என்றவாறே விளானி பின்னே செல்ல,

 

“அய்யோ.. அதில்லடி.. அந்த ப்ரியா சவுரி முடி வைச்சுருப்பா.. ஆளை அடிக்குற அளவுக்கு லிப்ட் ஸ்டிக் போட்டுருப்பா.. அப்புறம் நாலஞ்சு கோட்டிங் கொடுத்து முகத்துக்கு பெயிண்ட் அடிச்சுருப்பா.. முக்கியமான ஒன்னு.. அவ ஹைக்கீல்ஸ் போட்டுட்டு நடக்கும் போது..” என்ற அர்ச்சனாவின் வாயை கையால் மூடிய விளானி,

 

“அம்மாத்தாயே! போதும்.. உன்னோட வருணனையை உன்கூடவே வைச்சுக்கோ.. இதுக்கு மேல ஏதாவது சொல்ல வாயை திறந்த.. அவ்வளவு தான் சொல்லிட்டேன்..” என்றவள் எச்சரிக்க, அவளது கையை விலக்கிய அர்ச்சனா,

 

“ப்ச்.. என்ன சொல்ல வர்றேன்னு முழுசா கேளுடி.. அவளை மாதிரியே நீயும் மேக்கப் எல்லாம் போட்டுட்டு வந்தா.. உன் ஆளு ஏன்டி அவளை பார்க்க போறாரு.. உன்னையே சுத்தி சுத்தி வருவாரு.. நீ வேணா பாரேன்..”

 

“அப்படிங்குற?”

 

“முதல்ல இந்த குழாயை மாட்டுறதெல்லாம் தூக்கிப்‌ போட்டுட்டு புடவையை லோ கிப்ல கட்டி, தலை நிறைய மல்லிகைப்பூ வைச்சு, கை நிறைய வளையல் போட்டுட்டு வா.. அப்புறம் பாரு.. என்ன நடக்குதுன்னு?” என்று அர்ச்சனாவின் அறிவுரையை கேட்ட விளானியோ, அவள் கூறியது போலவே தன்னை அலங்கரித்துக் கொண்டு வர, காதலுடன் பார்க்க வேண்டியவன் கண்ணில் கோபக்கனலோடு நின்றிருந்தான். அர்ச்சனாவின் அறிவுரையினால் விளானிக்கு என்ன  நேர்ந்தது?

 

14 thoughts on “என் மோகத் தீயே குளிராதே 27”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top