ATM Tamil Romantic Novels

Rowdy பேபி -9

9

 

 

ஆழி பேரலையை போல் சுழன்று அடித்து கொண்டு இருந்தது அந்த கடற்கரை காற்றும்…

 

பொங்கி வரும் அலை என அவள் உள்ளம் அமைதி இன்றி அலை கழித்துக் கொண்டிருந்தது பூர்ணாவிற்க…

 

இது இப்படி முடியும் என்று அவள் கனவிலும் எண்ணி இருக்க மாட்டாள்…

 

அருண் அழைத்ததும் ஆவலாக கிளம்பி தயாராகி வந்தவளை ஏற இறங்க பார்த்தார் கோவிந்தன்…

 

ஜெயந்தி இப்போ மேடம் எங்க கிளம்பி போறாங்கன்னு கேளு…என்றவர் பூர்ணாவை 

 

ஃப்ரெண்ட பார்க்கமா என இவளும் கோவிந்தனை பார்த்தே பதிலை சொல்ல…

 

அதெல்லாம் எங்கையும் போக தேவை இல்லை வெளியே எங்கையும் அலையாம உள்ளயே அடக்கமா இருக்க சொல்லு… என்றார் சிறு கண்டிப்புடன்…

 

“அம்மா என்னமா இது நான் அப்படி என்ன கொல குத்தம் பண்ணிட்டேன்னு இப்படி வீட்டோட அடைச்சு வைக்கறீங்க… ஜெயில் கைதிக்கு கூட சுதந்திரம் இருக்கும் போல ஆனால் எனக்கு இந்த வீட்டுக்குள்ள கூட சுதந்திரம் இல்லை… எல்லாமே உங்க விருப்பம் படி தானமா நடக்குறேன் அப்புறமும் ஏன்மா இப்படி… உங்களக்கு வந்து பிறந்தது தவிர அப்படி வேற என்னமா பெரிய தப்பு செஞ்சேன்… ஹேமா எனக்கு மட்டும் இப்படி நடக்குது…!!”என பூர்ணா சுயகழிவிறக்கத்தில் பேச…

 

தவித்து விட்டது பெற்றவள் வயிறு… என்னங்க அவள் அப்படி என்ன கேக்குறா தோழியை பார்க்க போறேன்னு கேட்கிற போய்ட்டு வரட்டுமே அந்த காலத்து பிள்ளைங்க எவ்வளவோ பெத்தவங்களுக்கு தெரியாம என்ன என்னமோ பண்ணறாங்க… அவன் நம்ம பொண்ணுங்க அனுப்பி வைங்க என்ன ஜெயந்தி முதல் முறையாக வாயைத் திறந்த தன் மகளுக்காக பேச…

 

 பூர்ணாவை ஒரு கனம் பார்த்துவிட்டு ஜெயந்தி இடம் திரும்பியவர்…

 

  எல்லாத்துக்குமே நாம குடுக்குற இடம் தான் ஜெயந்தி இப்போ இங்க வந்து நிக்குது… போயிட்டு சீக்கிரம் வர சொல்லு… என அனுமதி கொடுக்க… சிட்டாக பறந்து வந்தாள்…

 

சற்று தாமதமாக வந்த அருண் வழக்கமான இடத்தில் பூர்ணா இல்லாததை கண்டு அவளை தேட…

 

போலீஸ்கார்…இங்க போலீஸ்கார் இங்க… என பூர்ணா அவனை கத்தி அழைத்து அனைவரது கவனத்தையும் ஈர்க்க…

 

“ஏய் நான் இப்ப யூனிஃபாம்ல கூட இல்ல எதுக்கு இப்போ போலீசன்னு கூப்பிடுற…!!” என சிரித்தவண்ணம் கேட்டப்படி அவள் அருகில் வந்து அமர்ந்தான் அருண்… பார்ப்பவர்கள் கண்ணை உருத்தாத வகையில் தான்… 

 

 அது என்னமோ தெரியல உங்களை அப்படித்தான் கூப்பிடு எனக்கு பிடிச்சிருக்கு நீங்க என் மனசுல போலீஸ்காரன் ஆழமா பதிஞ்சிடிங்கன்னு நினைக்கிறேன் …என பூர்ணாவும் புன்னகைத்தப்படி கூற…

 

 அப்போ நான் உன் மனசுல ஆழமா பதிஞ்சிட்டேனா என ஹஸ்கி வாய்ஸில் கேட்டது நம்ம போலீஸ்தானா…??? ஆம் அவனே தான்…அடிக்கடி இது மாதிரி பல இடக்கான கேள்விகளை கேட்டு பூர்ணாவை தினற வைப்பதே அவனது பொழுது போக்காக மாறி விட்டது…

 

 

அருண் அப்படி கேட்டதுமே முதலில் திகைத்து போனாள் பூர்ணா… பின் அது நான் நா என அவள் திணறுவதை பார்த்து ரசித்தவன்…

 

 அப்புறம் இன்னைக்கு என்ன விஷேசம் ரொம்ப ஹாப்பியா இருக்குற மாதிரி தெரியுது… வேற எதுவும் ப்ரோக்ராம் இல்லனா வேற ஒரு முக்கியமான இடத்தை உங்களுக்கு காட்ட அழைச்சிட்டு போகலாம் இருக்கேன்…என அருண்…

 

 விசேஷம் எல்லாம் ஒன்றும் இல்லை…இன்னைக்கு உங்களை பார்க்க வரேன் ஹாப்பியா இருக்கலாம்… ஆனால் என்னால உங்களோட வேற எங்கையும் வர முடியாது… சீக்கிரம் வீட்டுக்கு வரணும் மேல் இடத்து உத்தரவு…கூண்டு கிளி… என நகைச்சுவையாக சொன்னாலும் அவள் கண்ணில் துளியும் சிரிப்பு இல்லை என்பதை காட்டி கொடுக்க…

 

 சூரபுலிக்கு கூண்டை விட்டு வர தயக்கமா இல்லை பயமா…. இல்லை கூண்டை உடைக்கும் அளவு தைரியம் இல்லையா… அருண்…

 

“எதுவுமே இல்லை… கூண்டை உடைத்து விட்டு வர நொடி பொழுது ஆகாது… ஆனால் அன்புக்கும் மரியாதைக்கும் கட்டுப்பட்டு இருக்கோம் இல்லனா… கூண்டை உடைத்து விட்டு என்ன…?? கூண்டையும் சேர்த்தே தூக்கிக்கிட்டே பறக்கற பலம் எங்ககிட்ட இருக்கு…!!” என அருணின் கேலிக்கு பூர்ணா பதிலடி கொடுக்க…

 

அம்பேல் தாயே யார் நீங்க சூரபுலிகிட்ட பேசி ஜெயிக்க என்னால முடியுமா…என்ன சாப்பிடுறிங்க என பூர்ணாவிடம் கேட்டு ஆர்டர் கொடுத்தவன்…

 

 பூர்ணாவுக்காக வாங்கி வந்திருந்த பரிசு ஒன்றை எடுத்து அவளிடம் கொடுக்க…

 

“என்னங்க இது…?? “ என ஆச்சர்யத்துடன் கேட்க…

 

எடுத்து பிரிச்சி பாரு என்றவன் உள்ளத்தை பலிங்கு போல் பிரதிபலிக்கும் அவள் கண்களை தான் ஆவலுடன் பார்த்து இருந்தான்…

 

அதை ஆசையுடன் பிரித்து பார்த்தவள் கையில் அருண் முதல் முதல் அவளை சந்தித்தில் இருந்து அப்போது வரை அவர்கள் இருவருக்கும் இடையில் பொதுவான பொருட்களை கொண்டு கஸ்டமைஸ்ட் ரைசின் ஆர்ட் ஒன்றை பரிசளித்து இருந்தான்… அதில் உள்ள ஒரு வாக்கியம் தான் பூர்ணாவை திகைப்படைய செய்து இருந்தது…

 

என் சிரிப்புக்கு நீ வேண்டும்…

என் அழுகைக்கு நீ வேண்டும்…

என் இறப்புக்கு நீ வேண்டும்…

என் பிறப்புக்கும் நீ வேண்டும்…

 என் வாலிபத்திற்கும் நீ வேண்டும்…

என் வயோதிகத்திற்கும் நீ வேண்டும்… என் வாழ்க்கை முழுமைக்கும் உன் காதல் வேண்டும்…வருவாயா…??இப்படிக்கு அருண் லவ்ஸ் ரவுடி பேபி (பூர்ணா) என்று இருக்க…

 

 பேச்சு மூச்சென்று செயல் இழந்து போனாள் பெண்ணவள்…

 

 நீண்ட நேரம் திகைப்பினுள் இருந்த பூர்ணாவைக் கண்டு அட்டகாசமாக சிரித்தபடி அவளை உசுப்பி விட அசைந்தால் இல்லை…

 

ஹே…பூர்ணா பூர்ணா என்ன அச்சு என அவன் தன் குரலை உயர்த்திய பின்பே நடப்புக்கு வந்தவள்… மறந்தும் அருணை ஏறெடுத்து பார்க்கவில்லை…அவனை நேராக பார்க்கும் திறன் அவளுக்கு இல்லை என்பதே மெய்…

 

“என்னாச்சு ஏன் திடீர்னு இப்படி அமைதி ஆகிட்ட… நான் ஜஸ்ட் என்னோட விருப்பத்தை சொல்லி இருக்கேன் அவ்வளவுதான்…லுக் விருப்பம் இல்லாத பொண்ணை கூட்டி வந்து கட்டாய படுத்துற ஆள் நான் இல்லை புரியுதா…?” என அருண் சற்றே விரைப்பாக பேச…

 

அ நான் அப்படி சொல்லல என இவள் தழைந்த குரலில் தலை நிமிறாமல் பேசி அருணை மேலும் சீண்டி விட்டு இருக்க…

 

அப்புறம் என்ன *** என அவன் வெடிக்கும் வேளை அவர்கள் ஆர்டர் கொடுத்த உணவு வரவும் சரியாக இருக்க… அப்படியே தன் கோவத்தை உள்ளுக்குள் அடக்கி கொண்டவன் எரிமலையாக சீறினான்…கவனமாக மற்றவர் அகன்ற பின் தான்…

 

“உன் மனசுல அப்படி என்னதான் வச்சி இருக்க வாய் விட்டு சொல்லி தொலையேன்…!!”அருண்…

 

அவள் அப்போதும் பேசாமல் இருக்க… அருண் மேஜை மீது தன் கோவத்தை காட்டி தட்டி விட்டு எழுந்து கொள்ள அதில் திடுகிட்டவள்…அருணை பார்த்த பார்வையில் கெஞ்சல் குடி இருந்தது…

 

அதில் சற்று தணிந்து அமர்ந்தவன் பூர்ணாவை பார்வை விலகாது பார்க்க… அதுவும் அவளுக்கு ஒருவகையில் கலவரத்தை உண்டு பண்ண… 

 

 

நீங்க இப்படி தீடிர்னு ப்ரொபோஸ் பண்ணுவீங்க எதிர் பார்க்கல… என்று விட்டு அருணை பார்க்க…

 

 “வேற என்ன எதிர்பார்த்த…சொல்லு இத்தனை நாள் உன்கூட பழகுனத்தை வச்சு வேற என்ன என்கிட்ட இருந்து எதிர்பார்த்த…அண்ணன் தங்கச்சி உறவையா…!!”என அருண் ஆவேசமாக கேட்க…

 

ப்ளீஸ் கோவப்படாம நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க… என பூர்ணா தழைந்து போக காரணம் இருக்கவே சமாதானமாக பேசினாள்…

 

உர் என்று அமர்ந்து இருந்தவனை கண்டு உள்ளுக்குள் குற்றயுணர்வு எழுந்தாலும்… மூச்சை பிடித்து கொண்டு “எனக்கு ஏற்கனவே வீட்ல கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டாங்க வர கிழமை எனக்கு நிச்சயதார்த்தம் அப்படியே கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க என மொத்தமாக கொட்டி விட்டு அருண் முகத்தை பார்க்க முன்னிலும் பூர்ணா பயந்தாள் அதற்கு காரணம்…

 

அருண் அவள் கூறியதைக் கேட்டு உணர்ச்சி துடைத்த முகத்துடன் அமைதியாக உட்கார்ந்திருந்தது தான்… அவன் கோபப்பட்டால் கூட சமாளித்து விடுவாளோ ஆனால் இந்த பேரமைதி அவளுக்குள் இருந்த குற்ற உணர்வை தூண்டிவிட்டு இருந்தது…

 

ப்ளீஸ் எதாவது சொல்லுங்க என அருணை கேட்க…

 

உனக்கு வீட்ல மாப்பிளை பார்த்தது பேசி முடிச்சது எல்லாம் ஏற்கனவே தெரியுமா…?? என அமைதியாகவே கேட்க…அவளுக்கு வயற்றில் எதோ பிசைவதை போல் இருந்தது…

 

உன்னை தான் கேட்டேன் உனக்கு எல்லாம் முன்னாடியே தெரியுமா… என அழுத்தமாக கேட்க…

 

அவள் பேச முடியாமல் ஆம் என்று தலையை ஆட்ட அவ்வளவு தான்… வெடுக்கென்று எழுந்து கொண்டவன்… “சாரி இதுக்கு மேல நான் இங்க இருந்தா சரி வராது… என்னோட கண்ட்ரோலை நான் இழக்கக்கூடும்… போறதுக்கு முன்னாடி ஒன்னு மட்டும் கடைசி சொல்லிக்கிறேன்… நமக்கு பிடிச்சவங்களோட நிராகரிப்பை விட அவங்க கொடுக்கிற ஏமாற்றம்தான் அதிக வலியை கொடுக்கும்… இனி இப்படி பண்ணாதீங்க என்று முகத்தில் அறைந்தது போல் கூறிவிட்டு சென்று விட…

 

தலையில் கை வைத்து அமர்ந்து விட்டால் பூர்ணா…

 

என்னமா நீங்கள்(ரௌடி பேபி ) இப்படி பண்றிங்களே மா…பாவம் போலீஸ்

 

34 thoughts on “Rowdy பேபி -9”

  1. When should I call my healthcare provider about my breathlessness?
    Some how much valtrex can i take and save the money for other purchases.
    One large study found a thiazide diuretic superior to a calcium channel blocker and an ACE inhibitor in reducing cardiovascular mortality in people with hypertension and one additional cardiovascular risk factor.

  2. Pharmacological: Medications can alleviate symptoms of anxiety, which may make behavioral therapy more effective for some children.
    Big discounts available on over the counter flagyl on their site.
    The urge returns every few minutes, too — sometimes accompanied by lower abdominal pain, a low-grade fever, chills or blood in the urine.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top