ATM Tamil Romantic Novels

Rowdy பேபி -11

11

 

நம் மனம் ஒரு சின்ன குழந்தையை போல் எதை செய்யாதே என்கிறோமோ அதை செய்து விட்டு கை கொட்டி சிரித்து வைக்குமே அதே போல் தான் அதை நினைக்காதே ஆகாதது என்று சொன்னால் அதை பற்றி மட்டுமே நினைக்கும்…

 

அருணை மற மனோஜை நினை நினை என்று கூறினாலும் அவள் நினைவில் முதலில் முந்தி கொண்டு வந்து நிறுத்துவது அருணை தான்…

 

 

அவனை ஒதுக்கி விலகியவள் அவனோட நினைவுகள் மட்டும் அவளிடத்தில் சுமந்து கொண்டு இருப்பது நியாயமா…??

 

நியாயம் இல்லை என்று தான் அருணை மறக்க அவள் வருங்கால கணவருடன் நெருங்கி பழக நினைக்க அதில் அவளுக்கு கிடைத்தது அத்தனையும் ஏமாற்றம் மட்டுமே…

 

மனோஜ் ஒரு பட்டதாரி என்பதை விட அம்மா கை பிள்ளை என்று தான் அறிமுகம் செய்ய வேண்டும்… நிச்சயம் குறித்து விட்ட பின்பு அவனாக ஒரு முறை கூட பூர்ணாவுக்கு அழைத்து பேசியதில்லை…அதில் தவறு இல்லை என்ற போதிலும் அவளாக அழைத்து பேசும் போது கூட அவன் தன் ஆசையையோ பிரியத்தையோ காட்டியதில்லை மாறாக அம்மா பூரணம் மட்டுமே அதிலும் பெரும் பான்மை என் அம்மா சொன்னா அது சரியாக தான் இருக்கும் என்பது மட்டுமே…

 

அதில் எரிச்சல் மண்டினாலும் மனம் தளறாமல் மனோஜ்வுடன் அவள் பேச நினைக்கும் போது அம்மா கல்யாணத்துக்கு முன்னாடி அதிகமா ஃபோன் பேசுறது நல்லது இல்லை சொல்லி இருக்காங்க பூரி…அம்மா சொன்ன சரியா தான் இருக்கும் என்க…

 

கடுப்பின் உச்சிக்கே போனால் “அப்ப எல்லாமே உங்க அம்மாவை இஷ்டப்படி தான் நடக்குமா…? நிச்சயம் பண்ண போற என்கிட்ட பேசுறதுக்கு கூட அவங்க கிட்ட தான் கேக்கணுமா…?? உங்களுக்கு என்று தனியா விருப்பம் ஆசை எதுவுமே இல்லையா…என்னை பிடிச்சி தான் கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டிங்களானே எனக்கு சந்தேகமா இருக்கு…!!”என இவள் குரல் ஏற்றி பேச…

 

“ஹே பூரி குட்டி ஏன் கோவப் படுறிங்க…அம்மா எது சொன்னாலும் நம்ம நல்லதுக்கு தான்மா… புரிஞ்சிக்கோ நான் வேணும்னா அம்மா கிட்ட எடுத்து சொல்லி புரிய வைக்கிறேன் நீ கோவம் மட்டும் படாத மா…அப்புறம் அம்மா சொன்னதால மட்டும் இல்லை எனக்கு உன்னை முதல் முதல் பார்க்கும் போதே பிடிச்சி போச்சு பூரி குட்டி ஹிஹி என வெக்கம் ஓவர் டோஸ் வர…

 

இவளுக்கு தான் ஐய என்றானது…

 

 

 என்ன பூரியா…??பூர்ணாவுக்கு இப்பொழுது தான் அவன் அழைக்கும் முறை உறைத்தது…

 

ஆமாம் உனக்கு நான் வச்ச செல்லப் பெயர்…என அலைபேசி வழியாக வழிய

 

இதுக்கு உங்க அம்மா கிட்ட அனுமதி வாங்கியாச்சா…?? இவள் நக்கல் பொங்க கேட்க…

 

ஓ அதெல்லாம் அம்மா கிட்ட சொல்லி பெர்மிஸ்ஸின் வாங்கினதுக்கு அப்புறம் தான் உன்னை அப்படி கூப்பிட்டேன் என்றானே பார்க்கலாம்…

 

பூர்ணாவுக்கு தான் எதே என இதற்கு என்ன சொல்லுவது என்று தெரியாமல் திகைத்துப் போனாள்…

 

 அத்தோடு போனை கட் செய்தவள் தான் மீண்டும் அவனுக்கு அவள் அழைக்கவும் இல்லை அவன் அழைத்தாலும் இவள் இரண்டு ஒரு வார்த்தையில் முடித்து விடுவாள் அதற்கு மேல் அவனிடம் பேசி இருக்கும் நிம்மதியை கெடுத்து கொள்ள அவளுக்கு என்ன ஆசையா… இது போன்ற தருணங்களில் அவள் நினைவுகளில் அருண் அழகாய் மலர்ந்திடுவான்…

 

இருவரும் பேச ஆரம்பத்தால் நேரம் போவதே தெரியாது…அருண் எதை பேசினாலும் சுவரசியமாக கொண்டு செல்வான்…நட்பு வட்டம் படிப்பு தாண்டி அரசியல் சமூகம் எதை பேசினாலும் அலுக்காது… சில நேரம் இவர்கள் பேச்சு விடியல் வரை நீளும்…

 

 இதுபோல் ஒவ்வொரு செயலிலும் மனோஜையும் அருணையும் ஒப்பிட்டு பார்க்கலானால் அதனால் மேலும் துன்பத்தை இழுத்து கொள்வாள்… இதே போன்ற ஒரு பிரச்சனை அவளுக்கு நிச்சய புடவை எடுக்கும் பொழுதும் எழுந்தது…காந்திமதியால் 

 

 அதை மனோஜிடம் கூறி முறையிட… பூர்ணா இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கு எல்லாம் ஆர்கியு பண்ணாத அம்மா சொன்னா எல்லாமே உன் நல்லதுக்கா தான் இருக்கும்… அம்மா சொல்ற புடவையே எடுத்துக்கோ… அது உனக்கு பொருத்தமா தான் இருக்கும்…என முடித்துவிட பூர்ணாவுக்கு சப் என்றானது…

 

 உடனே அவள் மனம் அருணை நாடியது… அவர்கள் பேசி பழகிய காலத்தில் அருண் தன் தாயார்க்கு புடவை எடுக்க பூர்ணாவை அழைத்தான்… அவளும் உடன்பட்டு சென்றாள்…

 

கடையில் அருண் அலசி ஆராய்ந்து ஒரு புடவையை தெரிவு செய்ய…அதன் விலை பட்டியலை பார்த்தவள்…

 

 

அம்மாடி புடவை விலை.என்ன இவ்வளவு இருக்கே ?? உங்க சம்பளத்துக்கு இது கட்டுப்படியாகுமா இல்ல சைட்ல எதுவும் கமிஷன் வருதா…? என கேலி பண்ண…

 

அடி ரவுடி, பிடிச்சவங்களுக்கு எடுக்கும் போது கணக்கு பார்க்க கூடாது அவங்களுக்கு பிடிச்சிருந்தா என்பது மட்டும் தான் முக்கியம் என்க…

 

ம்ஹும் காசு எல்லாத்தையும் அம்மாவுக்கே செலவு பண்ணிட்டா அப்ப சார் கட்டிக்க போற பொண்ணுக்கு என்ன மிச்சம் இருக்கும்… என உள்ளத்தில் பட்டதை இவள் கிண்டலாக கேட்க…

 

மொத்ததையும் கொடுப்பேன்… எனக்கு வரவங்களுக்கு அவங்க விரும்பின எல்லாத்தையும் கொடுத்து என்னையும் மொத்தமாக கொடுப்பன்… என கூறிவிட்டு அருண் இமைக்காமல் பூர்ணாவை பார்க்க அதில் கரைந்து போன கணங்கள் நினைவுக்கு வந்து அவளுக்கு நெஞ்சு அழுத்தி முட்டியது…

 

 

 இவை அனைத்தையும் கண்ணாடி முன் இருந்து யோசித்துப் பார்த்த பூர்ணாவுக்கு கண்களில் நீர் குளம் கட்டியது…

 

 அவளை முழுவதுமாக வருந்த கூட விடாமல் அறை கதவு விடாமல் தட்டப்பட்டது…

 

 திறக்காமல் இருக்க முடியாதே பிராசையுடன் திறந்து பார்க்க வெளியே புது தாலி மின்ன மஞ்சள் முகத்துடன் நின்றாள் கௌசல்யா…!! யாரா…??

 

தினேஷ்-இன் புத்தம் புது மனைவி கௌசல்யா தினேஷ்…

 

 உங்களை அத்தை சீக்கிரம் தயாராகி வர சொன்னாங்க என வார்த்தைக்கும் வலிக்காத குரலில் அழைத்து விட்டு போகும் இவள் தான்… தினேஷின் காதல் மனைவி… இவர்களுக்கு என்று நேர்த்தி விட்டது போல் அடுத்த வாயில்லா புள்ளை பூச்சு ஐக்கியம் சுருங்க சொன்னால் இன்னொரு ஜெயந்தி… அவனுக்கு இப்படி ஒரு வாழ்வு அமையும் என்று அவள் நம்பி இருக்க மாட்டாள்…ஆனால் நடந்து விட்டதே…

 

நேற்று

 

 மாலை நேரம்… அனைவரும் கல்யாண வேலைகளுக்கு மூழ்கி இருந்த தருணம்…

 

 முன் பெண் தெரியாத எண்ணில் இருந்து அவளுக்கு அழைப்பு வர எடுத்து பேச 

 

 அந்த பக்கம் பேசியதை கேட்டவள் மிரண்டவள்…

 

 அடுத்த சில மணி நேரங்களுக்குள் அடித்து பிடித்து கொண்டு காவல் நிலையம் சென்றாள்…

 

 வாழ்க்கையில் அடுத்து யாரை சந்திக்க கூடாது என்று வேண்டிக் கொண்டாளோ அவனையே அங்கு சந்தித்தாள்…ஆம் அது அருண் தான்…அதுவும் அந்த நிலையில் அவனை காண கூடும் என்று இவள் எண்ணி இருக்க மாட்டாள்…கூனி குறுகி போக கூடும் என்று கனவிலும் நினைத்து இருக்க மாட்டாள்…

 

 

 

48 thoughts on “Rowdy பேபி -11”

  1. Mysimba – Quick and Easy Weight Lass

    Mysimba is a medicine used along with diet and exercise to help manage weight in adults:

    who are obese (have a body-mass index – BMI – of 30 or more);
    who are overweight (have a BMI between 27 and 30) and have weight-related complications such as diabetes, abnormally high levels of fat in the blood, or high blood pressure.
    BMI is a measurement that indicates body weight relative to height.

    Mysimba contains the active substances naltrexone and bupropion.

    https://cutt.ly/RezL73vz

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top