ATM Tamil Romantic Novels

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 8

8

 

 

கண்களில் கணிக்க முடியா பாவம்..

உடற்மொழியில் நெருங்கி வரும் வேங்கையின் வேகம்..

வார்த்தைகளில் துள்ளிவரும் அலட்சியம்..

 

இவை எதுக்கும் சம்பந்தமே இல்லாமல் கைகளில் கிப்ட் பார்சல் ஒன்று..

 

ஏற்கனவே இரவு கனவுகளில் மட்டும் அல்லாமல் பகல்நேர நினைவுகளிலும் வந்து அவளுக்கு இம்சை கொடுக்கும் இந்த இம்சை அரசனை பார்த்தவளுக்கு சர்வமும் நடுங்கியது என்னவோ உண்மை?

 

அதிலும் அவளருகே நெருங்கி அவளின் அந்த மச்சத்தை வருடியவனை கண்டவளுக்கு உள்ளுக்குள் தீப்பொறி பறந்தது. பொதுவாக அந்த மச்சத்தை யாரும் சட்டென்று அறிந்திட முடியாத வண்ணம் இதழ்களுக்கு அடியில் மறைந்திருக்கும். இவளும் சற்றே அங்கே ஃபவுண்டேஷனை அதிகப்படுத்தி வைத்திருப்பாள் யாரின் கவனத்தை சட்டென்று ஈர்க்காமல்.. பின் எப்படி கண்டு பிடித்தான்? என்ற யோசனையில் அவள் வெறிக்க..

 

அவளின் வெறித்தப் பார்வையை பார்த்தவன் “சில்!! மயூ பேபி!!” என்று சற்று தள்ளி நின்றான்.

 

 

‘ஒரு வார்த்தை.. ஒரே ஒரு வார்த்தை இவன் தன்னை இப்படி தொடர்கிறான் என்று தன் அண்ணனிடம் கூறினால் என்ன?’ என்று அறிவு அவ்வப்போது வந்து அவளுக்கு அறிவுறுத்த..

 

‘சொல்லலாம் தான்! ஆனால் அப்படி சொல்லும்போது இவனை முதலில் சந்தித்த அந்த தருணத்தை சொல்லவேண்டுமே? அதுவும் நிரஞ்சனோடு பார்ட்டிக்கு சென்றதை விட.. அன்று முழு மப்பில் வீடு வந்து சேர்ந்தாள்‌‌.. என்று தெரிந்தால் அவ்வளவு தான்! நான் காலி!’

 

 

 நிமிலன் அந்த விஷயத்தை அத்தோடு விடமாட்டான். தன் செல்ல அத்தையிடம் கண்டிப்பாக பகிர்ந்து கொள்வான். இந்த விஷயம் வேதவள்ளிக்கு தெரிந்தால் அது.. மோகனாவின் திட்டம் என்று அறிந்து கண்டிப்பாக வீட்டுக்குள் புகைச்சல் வரும். மோகனாவோ ரஞ்சனியோ ஆராதனாவை பேசுவதைக் கூட கண்டும் காணாமல் போகும் வேதவள்ளி.. மயூரி என்று வந்து விட்டால், நிச்சயம் பொறுத்துப் போக மாட்டார்!

 

அதனால்தான் இதை வீட்டில் சொல்ல முடியாமல்.. மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள் மயூரி இந்திராக்ஷி!!

 

இதோ கையில் கிஃப்டோடு “உன்கிட்ட பேசணும் மயூ..” என்று ஆரன் சொன்னவுடன், அவள் கை நழுவி தானாக வண்டி கீழே விழ கண்ணாடி உடைந்து சிதறியது. இது எதுவுமே அவள் நினைவில் பதியவில்லை.

 

 

“ஏன் இவ்வளவு பதட்டம்? சில் மயூ! ஓஹ்ஹோ.. கையில் கிப்டோட வந்து உன்கிட்ட ப்ரொபோஸ் பண்றேன் நினைத்தாயோ?” என்று அவள் முன்னால் குனிந்து அவன் கேட்க.. அவளுக்கு அவனது இந்த நெருக்கத்தில் தொண்டை வரள தானாக எச்சில் விழுங்கிக் கொண்டாள்.

 

அவளது இந்த அதிர்ச்சிய முக பாவனைகளை பார்த்துக்கொண்டிருந்தவனின் கண்கள் ஏறி இறங்கிய தொண்டைக்குழியில் சற்று நேரம் அழுத்தமாக பதிந்து மீண்டும் அவள் முகத்துக்கு வந்தது.

 

 

“ஈஸி! ஈஸி! மயூ பேபி.. அஃப் கோஸ் இஸ்ட் அ லைக் புரோபோசல்.. பட் டெஃபைனட்லி நாட் லைக் தட்.” என்று எஸ்ஜே சூர்யா போல “இருக்கு! ஆனா இல்லை!” என்று கூறபவனை இன்னும் அரண்டு போய் தான் பார்த்தாள்.

 

“நம்மளுடைய முதல் சந்திப்பை நினைத்து நீ இன்னும் பயந்து நடுங்குறனு நினைக்கிறேன்..

அன்னைக்கு நடந்த இன்ஸிடெண்டல என் மேல எந்த தப்பும் இல்லை.. வந்து மோதியது நீயாதான்.. மோதி என் மேல விழுந்தப்ப கூட, நான் ரொம்ப ஜெனியூனா.. உடம்பை கொஞ்சம் தள்ளி பார்க் பண்ணிக்கோனு தான் சொன்னேன். நீ தான் கேட்கவே இல்லை..” என்று உதட்டை மடித்து சிரித்தவனை பார்த்தவளுக்கு, ‘இன்னும் என்னென்ன பண்ணி வைத்தோம் தெரியலையே?!’ என்று அவனின் கண்களை நேராக சந்திக்க முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

 

ஒற்றை விரல் கொண்டு அவள் தாடையை தன் பக்கம் திருப்பியவன் அவள் கண்களை உற்று நோக்கி, “அன்னைக்கு வெறும் டச்சிங்! டச்சிங்! மட்டுமல்ல.. அதையும் தாண்டி கொஞ்சம் லிப்ங் கூட நடந்தது. அதுவும் டீபிங்ங்காஆஆஆ” என்றான் கிசு கிசு குரலில்..

 

 

இவை அனைத்தும் தான் அவளைப் பின்தொடர்ந்து துரத்துகின்றனவே கனவுகளாகவும்.. நினைவுகளாகவும்..

 

இதை இவன் வேறு இப்படி சொல்லித் தொலைய வேண்டுமா? அதுவும் அவன் டச்சிங்! கிஸ்ஸிங்! டீபிங்! என்று கூறும் போது அவன் குரலில் வந்த பாவத்தை கேட்டவளுக்கு உடலே சிலிர்த்தது.

 

சட்டென்று கைகள் கொண்டு காதுகளை அவள் பொத்திக்கொள்ள.. தலையை பின்பக்கம் சாய்த்து வெடித்து சிரித்தான்‌ ஆரன்.

 

“என்ன நான் வெறும் வாய் வார்த்தை சொன்னதுக்கே இப்படி காதை மூடிக்கிட்ட.. அன்னைக்கு என்னை என்னென்ன செய்த தெரியுமா?” என்றான் இன்னும் அவள் உயரத்துக்கு குனிந்து, அதில் அவள் தலையை குனிந்துகொள்ள..

 

சட்டென்று அவளது தலையைப் பிடித்து.. முகத்தை நிமிர்த்தி.. அவள் கண்களைப் பார்த்தான். அவளோ கீழ் உதட்டை மடித்து கடித்து அவஸ்தையுடன் அவனை பார்க்க.. அவள் இடுப்பை வளைத்து இறுக்கிக் கொண்டு அவளது மெல்லிய உதட்டை கவ்வ வந்தவன் நூலிடை தூரத்தில் இதழ்களை மட்டும் உரசி நிற்க..

 

தொம் தொம் என்று அவளது இதயத்தின் ஓசை இரு காதுகளையும் நிறைத்தது.

 

நடுரோட்டில் என்ன செய்கிறான் இவன்?? சற்று வீடுகள் உள்ள பகுதி என்பதால் போக்குவரத்து அத்தனை இல்லை.. இருந்தாலும் யாராவது பார்த்தால் என்ன நினைத்திருப்பார்கள்?? என்று நடுக்கமே வந்தது அவளுக்கு.

 

அவளது பயத்தையும் நடுக்கத்தையும் அணு அணுவாக ரசித்தது ஆரனின் கண்கள்.

 

கூடவே “மயூ..!!” என்ற அவனின் ஹஸ்கி வாய்ஸ் அழைப்பும், அவனின் நெருக்கமும் அவளை மீண்டும் அந்தச் சுழலுக்குள் இழுத்து செல்ல.. சட்டென்று அவனிடம் இருந்து தள்ளிச் சென்று, அவன் மார்பில் கை வைத்து தள்ளி விட்டாள்.

 

 

அவள் கையையும் தன் மார்பையும் பார்த்து சிரித்தவன் “ஜஸ்ட் உன் பக்கத்துல வந்து நின்னு லிப்ஸ் கூட தொடல அதுக்கே நீ இப்படி விதிர்விதிர்த்து போய்ட்ட.. அன்னைக்கு என்னுடைய நிலைமையை யோசிச்சு பாரு மயூ.. அதுவும் கல்யாணம் ஆகாத கன்னி பையன் நான். ஒன்னு ரெண்டு லவ்ஸ் பாக்கல.. அஞ்சாறு லிப் கிஸ் கூட ருசிக்கல… அதுக்கு மேல மேட்டர் கூட முடிக்காத பையனை இப்படி கிஸ் அடிச்சு குழப்பி விட்டுட்ட.. ஆனா என்னைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ நான் உன்னை ரேப் பண்ண வந்த மாதிரி ரியாக்ஷன் கொடுக்கிற.. இது என்ன நியாயம் சொல்லு?” என்றவன் கீழே கிடந்த அவள் வண்டியை நிறுத்தி அதில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு அவளிடம் நியாயம் கேட்டான்.

 

 

‘நல்லா கேக்குறான் நியாயம்?? அன்னைக்கு போதை மயக்கத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியல.. ஆனா இன்ன வரைக்கும் அதோட தாக்கம் எனக்கு இருக்கு. போதாத குறைக்கு இவனும் என் கண்ணில் பட்டு பட்டு எங்க நான் மறந்து போய்டுவேனோன்னு ஞாபகம் படுத்திக்கிட்டே இருக்கான்.. இதுல உனக்கு விரகதாபமா.. போடா!’ என்று கோபத்தோடு முகத்தை திருப்பிக்கொண்டாள்.

 

அவள் கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டாலும்.. அவளின் அகத்தை படித்தவன் “அதேத்தான் உனக்கு இருக்குற ஃபீலிங் மாதிரி.. எனக்கும் ஒரு ஃபீலிங்.. நாம் அதை முடித்துக் கொள்வோம்! அதுக்குதான் இந்த கிப்ட்.. இனி என்னை பார்க்கும் போது உனக்கு பார்க்கிங் ஞாபகம் வராது. கடைசிய இப்ப நாம சந்தித்த இந்த ஞாபகம் மட்டுமே வரும். அதே போல எனக்குமே..” என்று உதட்டில் நெளிந்த கள்ள புன்னகையுடன் அவளிடம் அந்த கிஃப்டை நீட்டினான்.

 

 

அவள் அதை வாங்க முடியாமல் வாங்க விருப்பம் இல்லாமல் கைகளை இறுக்க மூடிக்கொண்டு நிற்க..

 

“இங்க பாரு மயூ பேபி.. நான் இந்த ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம்னு நினைக்கிறேன்.. இல்ல.. நீ இப்படியே கண்டினு பண்ணனும்னு நினைச்சா.. எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல. அஸ் யுவர் விஷ்!! அதேநேரம் என்னாலே ரொம்ப நேரம் இங்க உன்னை நிக்க வச்சு பேசிட்டு இருக்கவும் முடியாது. சீக்கிரம் முடிவு பண்ணு மயூ!” என்று கிஃப்டை அவள் புறம் நீட்டிக் கொண்டு நிற்க.. என்ன செய்வது என்று அவளுக்கு சட்டென்று புரியவில்லை. ஆனாலும் அவன் செல்வதை போல இதை வாங்கி இதோடு இவனது சாப்டருக்கு ஃபுல் ஸ்டாப் வைத்துவிடலாம் என்று அவள் யோசித்துக் கொண்டே வாங்க முன் வர.. ஆனால் அவனோ அந்த ஃபுல் ஸ்டாப் அருகே மீண்டும் சில புள்ளிகள் இட்டு தொடர்கதையாக போகிறான் என்பதை அப்போது அவள் அறியவில்லை.

 

 

“குடுங்க…” என்று அவள் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு கையை நீட்ட.. அவன் சட்டென்று கையை பின்னால் இழுத்து “ஒரே கோபமா மூஞ்ச வச்சிக்கிட்டு கேட்டா எப்படி கொடுக்க முடியும். அப்புறம் திரும்பவும் இந்த கிப்ட் கொடுத்த நாள் நியாபகம் வரும் போது எனக்கு உன் கடுப்பான மூஞ்சியை பார்த்து வேற ஏதாவது ஃபீல் வந்து திரும்பவும் சந்திக்க வேண்டும்னு தோணுச்சுனா…” அவன் கூற.. 

 

“ஐயோ!!! வேணாம்.. வேணாம்.. திரும்பிப் பார்த்துக்கவே வேண்டாம்! என்ன மூஞ்சிய சிரிச்ச மாதிரி வச்சுக்கணும் அவ்வளவு தானே.. இப்ப பாருங்க..” என்றவள் காதுவரை உதட்டை இழுத்து வைத்து சிரிப்பில்லாத சிரிப்பை உதிர்க்க..

 

“இதை பார்க்கும்போது கொஞ்சம் பயமாக தான் இருக்கு. இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்..” என்றவன் அவள் கையை இழுத்து ஒரு கையால் பிடித்துக்கொண்டு அதன் மேல் அந்த கிஃப்ட் வைத்தவன் சிறிது நேரம் விடாமல் அவள் முகத்தை பார்த்து “விஷ் யூ ஆல் சக்ஸஸ் அண்ட் ஆல் த பெஸ்ட்!” என்று வாழ்த்தினான். பின் அவளது கன்னத்தை தட்டி விட்டு இரண்டு விரல்களை நெற்றியில் வைத்து விட்டு எடுத்தவன் “பை?!” என்றான்.

 

 

தன் கார் அருகே சென்றவன் கதவைத் திறந்து காரில் ஏறும் முன், அவள் வண்டி சாவியை அவளிடம் தூக்கி போட்டு, “அந்த கிஃப்டை போகும்போது அப்படியே குப்பத்தொட்டியிலையோ வேற எங்கேயோ போட்டுட்டு போகணும்னு நினைக்காத மயூ.. ஐ அம் வாட்சிங் யூ!” என்று இரு விரல்களால் கண்களை சுட்டிக்காட்டி, அதே இரு விரல்களை அவனின் உதட்டின் மீது வைத்து “பை..!!” என்றவன் அடுத்த நிமிடம் தன் காரில் பறந்து விட்டான்.

 

 

‘எதுக்கு வந்தான்? எதுக்கு கிப்ட் கொடுத்தான்? எதுவும் புரியவில்லை. எல்லாம் சரி ஏன் கடைசியில வாழ்த்துக் கூறினான் என்று எதுவும் புரியவில்லை.  

 

இதமாய் கதகதப்பாய் தன்கையில் நிலைத்திருந்த அவனின் வெம்மையை இரு கைகளாலும் தேய்த்து மறைக்க முயன்றாள் மயூரி.

 

இனி அவன் நம் கண் முன் வர மாட்டான். நினைவுகளில் இருந்தாவது தப்புவோமே கனவுகள் தான் கட்டுப்பாடில்லாமல் வருகிறது என்று நினைத்தவள், தன் ஹாண்ட் பேக்கினுள் அந்த கிஃப்டை வைத்து விட்டு வண்டியை எடுத்துச் சென்றாள்.

 

 

இவை அனைத்தும் கனகச்சிதமாக இவர்களை பார்த்துக் கொண்டிருந்த ஒருவனின் போனில் பதிவானது. அனைத்து நிகழ்வுகளும் சிந்தாமல் சிதறாமல்…

 

 

அவளை முதன்முதலில் பார்த்த பொழுது ஏற்பட்ட அந்த ஈர்ப்பில் மனம் முழுவதும் காதல் பரவி படர.. அதிலும் படபடவென அவனைப் பார்த்த நேரத்தில் அடித்துக்கொள்ளும் அந்த இமைகளை கண்டவன்.. அதற்கு பரிசாக தான் இந்த பட்டாம்பூச்சி பெண்டன்ட் அவளுக்கு கொடுத்து தன் காதலை சொல்லிட விழைந்தான்.

 

 

ஆனால் இன்று காதலோடு கொடுக்க வேண்டிய கிஃப்டை.. இனி சந்திக்க மாட்டோம் என செண்ட் ஆப் கிஃப்ட் போல் கொடுத்து விட்டு வந்தான். இனி அவனாக சென்று அவளைப் பார்க்கப் போவதில்லை.. அவளையே தினம்தினம் பார்க்க வைக்க போகிறான்.. 

 

“ஐ அம் வெயிட்டிங்… இந்த்ராக்ஷி!!” என்றான்.

 

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருக்க.. அவர்களின் அடுத்த டீலிங்கான கப்பல் இந்திய எல்லைக்குள் நுழைந்து கொண்டிருந்தது. இந்த முறை எப்படியும் இந்த டீலிங் தங்கள் வசம் படுத்திவிட வேண்டும் என்று செந்தூராரின் குரூப்ஸ் ஒருபுறமும்.. இனி ஒவ்வொரு முறையும் உங்களுக்கு தோல்வி மட்டுமே பரிசாகக் கொடுப்பான் இந்த ஆரன் என்று ஏவி குரூப்ஸ் சார்பாக ஆரன் ஒருபுறமும் முயன்று கொண்டிருந்தனர்.

 

 

வெறும் முயற்சியால் மட்டுமே வெற்றி கனியை எட்டிப் பறிக்க முடியாது.

 

முயற்சியோடு கூடிய சாணக்கியதனமான அறிவும் வேண்டும்.

 

இந்த சாணக்கியத்தனம் வெற்றிக்கனியை எட்டிப் பறிக்க முடியவில்லை என்றாலும் தட்டி பறித்து வந்து விடும்!!

 

இப்பொழுது ஆரன் முயற்சியோடு கூடிய சாணக்கியத்தனத்தை கையிலெடுத்து சில வியூகங்களை வகுத்திருந்தான்.

 

 

அதன்படி அந்தக் கப்பல் இந்திய எல்லைக்குள் நுழையும் போதே ஏற்கனவே பேசி இருந்த அதே கம்பெனிக்கு தனது கொட்டேஷன் சென்று சேருமாறு பார்த்துக்கொண்டான். அந்த கம்பெனியில் அவனுடைய கையால் ஒருவன் இருக்க.. அவன் மூலம் அந்த கப்பலை பற்றிய அனைத்து தகவல்களும் படங்களோடு வெகு துல்லியமாக இவன் கைக்கு வந்து சேர்ந்தது ஏற்கனவே..

 

 

அதன்படி அவன் கோட் செய்து அனுப்ப.. இளம் இந்தியனின் 

இந்த துடிப்பும்.. வேகமும்.. துல்லியமும்.. விவேகமும் அந்த கம்பெனிக்கு பிடித்துப்போக அவர்களும் ஒப்புதல் அளித்து விட்டனர். 

 

அந்த பெரிய கப்பல் இந்திய எல்லைக்குள் நுழைந்த அரை மணி நேரத்தில் ஆரனுக்கு சொந்தமாகி இருந்தது.

 

 

இந்த கப்பல் வரும் தகவலை கேட்டதிலிருந்து நிமிலனுக்கு வீடு சாப்பாடு அனைத்தும் மறந்து போனது. இவனும் அது இந்திய எல்லைக்குள் கால்வைக்கும் நொடிக்காகவே காத்திருந்தான்.

 

 ஏனென்றால் அதன் தரம் எத்தனை வருட பழையது என்பனவற்றை எல்லாம் நேரில் ஆராய்ந்த பின்னரே அதற்கான கொட்டேஷன் அவன் தயாரிக்க முடியும். இம்முறை கண்டிப்பாக ஆரனுக்கு விட்டுத் தருவதாக இல்லை நிமலன். எனவே தன் மாமா மெய்யறிவனோடு கலந்து பேசி கப்பல் துறைமுகத்தை எட்டு முன்னே இவர்கள் கப்பலில் சென்று அந்த கப்பலை ஆராய்ந்து விட்டு கொட்டேஷனையும் கையோடு கொடுத்து விட்டு வந்தால் என்ன என்று கேட்டான். முடிந்தால் அந்த கப்பலிலேயே டீலிங்கை முடித்துவிடலாம் என்றான்.

 

மெய்யறிவனுக்கும் இந்த ஐடியா பிடித்திருந்தது. பல ஆண்டுகளாக திருச்செந்தூர் தூத்துக்குடியில் கோலாகலித்த செந்தூராரின் குரூப்ஸ் ஒரு‌ டீலிங்கில் தோற்றுப் போய் விட.. மற்றதை கையகப்படுத்தி இழுந்த பெயரை மீட்க வேண்டும் என்ற வெறியே இருந்தது அவருக்குள்ளும்.

 

 

அதனால் மருமகன் ஐடியாவுக்கு ஒப்புதல் அளித்து இருவரும் குருபரனிடம் பேச.. குருபரனூக்கு ஏனோ இந்த திட்டம் பிடிக்கவில்லை.

 

 

அவசரகதியில் முடிவெடுத்து பின் அவஸ்தைப்படுவானேன் என்று அவர் யோசிக்க.. ஆனால் நிமிலனின் முகத்தில் இருந்த தீவிரமும் மெய்யறிவின் முகத்தில் இருந்த அழுத்தமும் அவரை சம்மதிக்க சொல்லியது.

 

 

“சரி ரெண்டு பேருமே போயிட்டு வாங்க!” என்று எம்டி என்ற பெயரில் ஒப்புதல் அளித்தவர் அதற்கான ஆவணங்களையும் தயார் செய்து கொடுத்து அனுப்பினார்.

 

 

நிமிலனுக்கு அப்படி ஒரு சந்தோஷம்! இதுவரை யாருமே இப்படி கப்பல் துறைமுகத்தை எட்டு முன் அதை சென்று பார்த்து, அதன் உண்மையான தரத்தை ஆராய்ந்து, அதை வாங்கியதே கிடையாது அவ்வூரில். இன்று முதல் முறை தான் அதை சாதிக்க போகிறோம் என்ற நினைப்புடன் அவர்களுடைய தனி சொகுசு கப்பலில் அந்த கப்பலை நோக்கி சென்றனர் நிமிலனும் மெய்யறிவனும்.

 

 

இவர்கள் சென்று அந்த கப்பலை நெருங்கி அங்குள்ளவர்களிடம் இங்கே இருந்து அனுமதி பெற்று மெல்ல நூலேணியில் ஏறி, அவர்கள் தளத்தை அடைந்ததும் தான் நிமிலனுக்கு அப்படி ஒரு நிம்மதி. அதுவரைக்கும் இடையில் எங்கே ஆரன் புகுந்துவிடுவானோ என்று திக்.. திக் மொமண்ட் தான்! இப்பொழுது அவன் நிற்கிறதே அவனுடைய கப்பலில் தான் என்பது அவனுக்கு தெரியாதே!!

 

 

அந்தக் கப்பலின் கேப்டன் இவர்கள் பற்றிய விவரங்களை அறிந்து கப்பலை பார்க்கத் தானே என்று உடனே அவர்களை அனுமதிக்கவில்லை. இந்தக் கப்பல் வாங்கப்பட்டதை கம்பெனி மூலம் அறிந்தவர் இவ்வாறு இருவர் அனுமதி கேட்கிறார்கள் என்று ஆரனிடம் தெரிவித்து, அவன் ஓகே சொன்னதின் பேரில் தான் இவரக்ளை அனுமதித்தார். நிமிலனின் இந்த வேகத்தில் ஆரனுக்குள் மெல்லிய சிரிப்பு..

 

அரை மணி நேரம் அந்த கப்பலை பார்த்து அதன் தரத்தை உறுதி செய்து மனதினுள் சில கணக்குகளை போட்ட நிமிலன் மெய்யறிவனிடம் கலந்து பேசி ஒரு தொகையை பூர்த்தி செய்தான். பின் அந்த கம்பெனி சார்பாக அந்த கப்பலில் வந்திருந்த அதிகாரியின் அறையை அனுமதிக்காக தட்டி உள்ளே நுழைந்தவன் அதிர்ச்சியில்…

 

அங்கே அந்த அறையின் இருக்கையில் அமர்த்தலாக அமர்ந்திருந்தான் ஆரன் வித்யூத்!! 

26 thoughts on “ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 8”

  1. Using a Zeo will help you objectively determine if your current sleeping strategy is providing you with the amount of deep and REM sleep that you need to heal and repair properly.
    No matter where you live, sites deliver a good price of keflex vs cipro dosage isn’t working, should I quit taking the drug?
    Finally, certain medical conditions or medications can cause depression or symptoms that look like depression.

  2. There is no clear explanation for appendicitis and doctors are not recommending preventive measures at this time.
    prices can be had by means of online opportunities to snorting neurontin from an online pharmacy?
    Antibiotics and other anti-infective agents in pregnancy and lactation.

  3. Топ-услуги по детейлингу авто в Москве, чтобы он сиял как новый.
    Детейлинг студия Москва – [url=http://car-deteyling-msk.ru/]http://car-deteyling-msk.ru/[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top