ATM Tamil Romantic Novels

Rowdy பேபி -12

12

 

 தினேஷை கைது செய்து வைத்திருப்பதாக காவல் நிலையத்திலிருந்து செய்தி வர செய்வதரியாது திகைத்து போனால் பூர்ணா…

 

 அன்னையும் தந்தையும் விடுபட்ட நெருங்கிய உறவினர் வீட்டுக்கு திருமண பத்திரிகையை கொடுக்க வெளியூர் சென்று இருக்க… வீட்டில் உள்ள முக்கிய பெரியவர்களும் கல்யாண வேலையாக வெளியே சென்று போய் விட்டனர்…அடுத்து என்ன செய்ய என தெரியாமல் திகைத்து போனாள்…

 

 பிறகு அவசரத்திற்கு அறிந்தோர் உதவியோடு தெரிந்த ஒரு வக்கீலை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்றாள்…மணப்பெண் வர தேவையில்லை என்று எவ்வளவு எடுத்து கூறியும் நிற்காமல் கிளம்பி வந்து விட்டாள்…அத்தனை தைரியம் அவளுக்கு எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை…ஆனால் தினேஷை நல்லபடியாக கண்ணால் பார்த்தே ஆக வேண்டும் என்கிற வெறி மட்டுமே அவளுள் ஊந்தி தள்ளியது…

 

 

அங்கோ தினேஷை காவல் நிலையத்தில் வைத்து கவுன்சிலர் ஆட்கள் அடித்து துவைக்க…

 

 என்ன சார் நடக்குது இங்க போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு ரவுடிசம் பண்ணிட்டு இருக்காங்க பார்த்துட்டு சும்மாவே நிக்கிறீங்க… என போலீசை பார்த்து பூர்ணா கேள்வி கேட்க…

 

“பின்ன கவுன்சிலர் தங்கச்சியை கடத்துனா சும்மா இருப்பாங்களா… பொறுக்கி ராஸ்கல் இவனை எல்லாம் உள்ளவச்சி சிதைச்சு விடணும்…!!”என கையில் வைத்திருந்த எல்லாத்தையும் எடுத்து தினேஷ் என் மீது போட்டபடி கூற…

 

ஐயோ அம்மா…என வலியில் துடித்தான் தினேஷ்…

 

“ஏய்ய்ய் என்ன ஒன்னும் தெரியாத பாப்பா பாரு உன் தங்கச்சி… ?? அவள் பின்னாடி சுத்தும் போது தெரியாதா இவன் பொறுக்கின்னு… அப்போ எல்லாம் பல்ல இளிச்சுகிட்டு போன உன் தங்கச்சி யோக்கியம் என் அண்ணன் அயோக்கியனா…இத்தனை நாள் அவன் கூட சேர்ந்து சுத்திட்டு… இப்போ ஒண்ணுமே தெரியாதவ மாதிரி ஒளிஞ்சிகிட்டாளா உன் தங்கச்சி… எங்க அவளை சொல்ல சொல்லு பார்க்கலாம்… என் அண்ணன் தான் அவளை கட்டாயப்படுத்தினான்னு அவள் வாயால சொல்லட்டும்… அப்போ ஒத்துக்கிறேன் இவன் பண்ணது தப்புன்னு…கூப்பிடு உன் தங்கச்சியை என பூர்ணா பாயிண்ட் பிடித்து பேச…

 

 “அடிங்க விட்டா என்ன ரொம்ப ஓவரா வாய் பேசுற… அவன் தங்கச்சி தானே நீ எப்படி இருப்ப…*** என்றதும் பூர்ணா கூசி குறுக…

 

வெகுண்டான் தினேஷ் என்னடா சொன்ன என கவுன்சிலர் மீது பாய… பலவீனமானவனை எளிதாக தடுத்து அவனை மீண்டும் அடிக்க 

 

போதும் விடுங்க… அவன போட்டு இப்படி அடிக்கிறீங்க அவன் மேல கை வைக்கிற அதிகாரம் யார் உனக்கு கொடுத்தா… என கவுன்சிலரின் சட்டையை பிடித்து பூர்ணா கேட்க…

 

அடிங்க **** யார் மேல கைய வைக்குற எடுறீ கையை என தட்டி விட்டவன் பூர்ணாவை அடிக்க கை ஓங்க விட்டாள் ஒரு அறை பொறி கலங்கி போனது அவனுக்கு… ஒரு நிமிடம் திகைத்து நிற்க…

 

 

ஏய்ய் என்ன தைரியம் இருந்தா போலீஸ்காரங்க முன்னாடி அவன போட்டு அடிப்ப…என இன்ஸ்பெக்டர் சீற 

 

 இவ்வளவு நேரம் அவன் இவனை அடிச்சிட்டு இருக்கும் போது வேடிக்கை பார்த்துட்டு தானே இருந்தீங்க அப்போ தெரியலையா நீங்க போலீஸ் என்று… எனப் பூர்ணா ஆற்றாமையில் கேட்க 

 

என்கிட்டேயே என்ன சட்டம் பேசுறியா அவனுக்கு வக்காலத்து வாங்க வந்தியே… அவன் பண்ணுது கிரைம்… மைனர் பொண்ண கடத்தி கல்யாணம் பண்ணி இருக்கான் அது சட்டப்படி குற்றம்… அதுக்கு என்ன தண்டனை தெரியுமா… உடந்தையா இருந்தா உன்னைய தூக்கி உள்ள போட்டு உன்னை **** ஆக்குறேன் பாரு… என கவுன்சிலர்க்கு ஆதரவாக அந்த இன்ஸ்பெக்டர் மிரட்ட…

 

ஐயோ பூர்ணா இன்னும் இரண்டு நாள்ல கண்ணாலத்தை வச்சி கிட்டு உன்னை யார் இங்க வர சொன்னா…நீ இங்க நிக்காத வுட்டுக்கு போ…எல்லாம் நான் பார்த்துக்குறேன்…என தினேஷ் ஒரு அண்ணனாக பொறுப்புணர்ந்து கூற…

 

 “நீ பார்த்து கிழிச்ச லட்சணம் தான் தெரியுது வாய் கிழிஞ்சு ரத்தம் வருது ஊர்ல இல்லாத அழகினு இவனும் போய் லவ் பண்ணி இருக்கான்…ஐயோ இப்படி மாடு மாதிரி அடிச்சி இருக்காங்களே…!!”என்றவள் கண்ணீர் உக தன் துப்பட்டாவாள் அதை துடைக்க…பூர்வ ஜென்ம பலன் மொத்தத்தையும் அடைந்து திருப்தியை முகத்தில் பிரதிபலித்தான் தினேஷ்…

 

 நினைவு தெரிந்த நாள் முதல் தினேஷை அண்ணன் என்று பூர்ணா ஏற்றுக் கொண்டதே இல்லை… இன்று அவனுக்காக அவள் வருந்துவது அந்த நிலையிலும் அவனுக்கு மகிழ்ச்சியை தருவித்தது…

 

 என்ன சார் பார்த்துட்டு நிக்கிறீங்க எதாவது பண்ணுங்க… இவங்க எல்லாம் சேர்ந்து இவனை அடிச்சு கொன்னுடுவாங்க போல…எதாவது பண்ணுங்க சார்…என உதவிக்கு 

அழைக்க…

 

 அவர் எவ்வளவோ எடுத்துப் பேசியும் இன்ஸ்பெக்டர் கவுன்சிலரும் மசியவே இல்லை…

 

 என்ன மன்னிச்சிடுங்க இது மைனர் பொண்ணு பேசு சட்டம் அவங்க பக்கம் இருக்கு… என்னால ஒன்னும் பண்ண முடியாது என கையை விரித்து விட…விக்கித்து போனால் பூர்ணா…

 

 அதுதான் சாக்கென்று இன்ஸ்பெக்டர் கவுன்சிலரன் சேர்ந்து தினேஷை மீண்டும் அடிக்க அவனை அவனை பாதுகாக்க முயன்ற பூர்ணாவும் சேர்த்து அடி வாங்கினாள்…

 

 அதை கவனித்த இன்ஸ்பெக்டர் தினேஷ் இடம் இருந்து பூர்ணாவை பிரித்து அவளை வெளியே தள்ள… அவளை தாங்கி பிடித்தன வலுவான இரு கரங்கள்… அது நம் நாயகன் அருண் அன்றி வேறு யாராக இருக்க கூடும்…

 

அந்த நிலையில் பூர்ணா அருணை அங்கு எதிர் பார்க்கவில்லை என்பது அவள் அதிர்ந்த முகத்திலிருந்து தெரிய வந்தது… அதுவும் அவள் அவமானப்படுத்தப்பட்டு வெளியே தூக்கி எறியப்பட்ட நிலையில் அருண் முகம் காண முடியாது கூனி குறுகி போனாள் பெண்…

 

  அவளை அறிந்தவனுக்கு அவள் உள்ளம் தெரியாதா என்ன…?? அவள் வேதனையை உணர்ந்தவன் அவளை நிலையாக நிற்க விட்டு பின் விலகி கொண்டவன் நேராக சென்று இன்ஸ்பெக்டர் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைத்தவன்… அங்கிருந்து அனைவரையும் கவுன்சிலர் உட்பட வெளுத்து வாங்கியவன்…அடியாள் மொத்த பேரையும் அடித்து விரட்டினான் மொத்த காவல் நிலையமும் பேயரைந்து நின்றது…

 

“ ஒரு பொண்ணு மேல கை வைக்க உனக்கு யார்யா பெர்மிஷன் கொடுத்தா…??**** மன்னிப்பு கேளு… என பற்களுக்கு இடையில் வார்த்தையை கடித்து துப்ப…

 

“அம்மா தாயே என்னை மன்னிச்சிடுங்க மா…!!”என பூர்ணாவிடம் சாஷ்டாங்கமாக மன்னிப்புக்கு வேண்டினான்…

 

 

 “என்னையா இது இங்க என்ன போலீஸ் ஸ்டேஷன் நடக்குதா இல்ல கட்ட பஞ்சாயத்து நடக்குதா… இவனை(தினேஷ் )இப்படி அடிச்சு போட்டு இருக்கீங்க… 

 

சா…சார்… அது மைனர் பொண்ணு கிட்நாப்பிங் கேஸ் சார் அதான்…என அடிவாங்கிய இன்ஸ்பெக்டர் முழிக்க 

 

 “அதுக்குனு கண்டவனை விட்டு இப்படித்தான் அடிப்பீங்களா… என்ன கைநீட்டி வாங்குன காசுக்கு 

 விசுவாசமா… எஃப் ஐ ஆர் எங்க…?? என கேட்க…

 

அது சார் என தயங்க

 

என்னையா…எஃப் ஐ ஆர் எங்க…என அருண் அதட்டல் போட…

 

 சார் மைனர் பொண்ணுக்கு கேஸ் போட வேண்டாம் நான் தான் சார் கேட்டுக்கிட்டார் அதான்…என பயந்து பம்ம…

 

 எஃப் ஐ ஆர் போடல… அந்தப் பொண்ணு கிட்ட விசாரிச்சுங்களா… இல்லை அந்த பொண்ணு மைனரான்னு செக் பண்ணிங்களா இல்லையா… என கர்ஜனை தோரணை

யில் விசாரிக்க… வெளவெளத்து போயினர் பூர்ணாவுக்கே இது அவள் அறிந்து அருண் தான என்ற சந்தேகம் தோன்றியது அவனின் இந்த காவல் அதிகாரி அவதாரத்தில்…

 

  சம்பந்தப்பட்ட பொண்ணும் டாக்குமெண்ட்ஸ் இன்னும் பதினைந்து நிமிஷத்துல இங்க வந்தாகனும்… என கட்டளை இட்டவன்… தினேஷை எழுப்பி அவனுக்கு தகுந்த முதலுதவி செய்ய உதவினான்…

 

 அவன் சொன்னது போலவே அடுத்த பன்னிரண்டாவது நிமிடத்திலே அத்தனையும் அருண் முன் தயாராக இருந்தது…

 

 முதலில் கௌசல்யாவின் ஐடி ப்ரோப் பரிசோதித்தவன் திரும்பி இன்ஸ்பெக்டரை முறைத்த முறையில் அவருக்கு கதிகலங்கி போயிற்று… பின் கௌசல்யாவிடம்… இங்க நிக்கிற இவனை உனக்கு யாருன்னு தெரியுமா…?? இவன் உன்னை வலுக்கட்டாயப்படுத்தி தூக்கிட்டு போய் தான் கல்யாணம் பண்ணானா…?? என கௌசல்யாவிடம் கேள்வி கேட்க…

 

 சார் சார் அதுக்கு என்ன சார் தெரியும் அது சின்ன பொண்ணு சார்… எனக்கு கவுன்சிலர் அண்ணன் குரலில் கலவரம் தெரிய…

 

அவனை பார்த்த முறைத்த முறைப்பில் அடங்கிப் போனான்…

 

“சொல்லு…?? உன்ன தானே கேட்கிறேன்… உன்ன அவன் விருப்பத்துக்கு மாறாக தான் கல்யாணம் பண்ணானா…?? “ என அவன் போட்ட அதட்டலில் …

 

தள்ளி இருந்த பூர்ணாவுக்கே திடுக்கிட்டு போனது…

 

“இ…இல்லை அவரை விரும்பி தான் அவர் கூட போனேன் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்…!!” என பயத்தில் திக்கி திக்கி சொல்லி முடித்தால் பெண்ணவள்…

 

“ அப்புறம் ஏன் நீ மைனர்ன்னு அவன் மேல பொய் கேஸ் கொடுத்த…?? அதட்டல் தோனி குறையாமல்…

 

“ எங்க அண்ணனுக்கு எங்க கல்யாணத்துல இஷ்டம் இல்ல அதனால என்னை மிரட்டி பொய் கேஸ் குடுக்க வச்சுட்டாங்க… நீங்கதான் அவர்

 எப்படியாவது காப்பாத்தணும் அவர்(தினேஷ் ) மேல எந்த தப்பும் இல்லை… எங்க வீட்ல எங்க காதல் விஷயம் தெரிஞ்சி எங்க அண்ண எனக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டார் அதனால நான்தான் அவர் கிட்ட கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேன் அவர் அப்ப கூட வேணாம்னு தங்கச்சி கல்யாணம் முடியட்டும் அவங்க அப்பாவை கூட்டிட்டு வந்து பேசுறேன்னு தான் சொன்னாரு… ஆனா விஷயம் தெரிஞ்சு எங்கன்னு என்னை கட்டாயப்படுத்த முயற்சி பண்ணாரு… அவர்கிட்ட இருந்து தப்பிக்க தான் இவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்… ப்ளீஸ் எங்களை சேர்த்து வையுங்க…!!” என அழுகையுடன் நடந்ததை கூறி முடிக்க…

 

 பிரச்சினையை கேட்டு சீர் செய்து வைத்து பொய் கேஸ் போட்ட கவுன்சிலர் மற்றும் இன்ஸ்பெக்டரை மிரட்டி எச்சரித்து விட்டு தினேஷையும் கௌசல்யாவையும் சேர்த்து வைதான் அருண்…

 

 மற்றவர்களை முன்னே அனுப்பி வைத்துவிட்டு அவர்கள் பின்னே நடந்து வந்தனர் அருணும் பூர்ணாவும்…

 

  எதிர்பாராமல் அவன் செய்த உதவிக்கு அவள் நன்றி தெரிவிக்க…

 

அவளை ஆழ்ந்த பார்வை பார்த்து விட்டு பதில் சொல்லாமல் சென்றவனை…பார்த்து நெஞ்சுனுள் குமுறி கொண்டு வந்தது… அவள் மனபாரம் குறைய வேண்டும் என்றாள் அவனிடம் சொல்லாது அது தீராது எனவே தயக்கம் விட்டு அவனை நாடி சென்றவள்…

 

 “போலீஸ்கர் நில்லுங்க… உங்க மனசுல படிச்சதுக்கு ஒரு சாரி… இன்னைக்கு எதையும் மனசுல வச்சுக்காம தினேஷுக்கு உதவி செஞ்சதுக்கு நன்றி…!!” என்று கூறிவிட்டு அவன் முகம் பார்த்தவள்…

 

“ப்ளீஸ் இப்படி நீங்க முகத்தை திருப்பிட்டு போறது எனக்கு மனசுக்குள்ள வலிக்குது… ஏதாவது பேசுங்க என்னை திட்டுங்க அடிங்க என்ன தயவு செஞ்சு யாரோ மாதிரி போகாதீங்க ப்ளீஸ்…ரொம்ப வலிக்குது உங்களை பிடிக்காம வேண்டாம் சொல்லல… ஆனால் அது நான் எப்படி சொல்ல ப்ளீஸ்… என்னை விட்டு விலகி போகாதீங்க எதோ என் உடம்புல இருந்து பாதி உசுரு போன மாதிரி இருக்கு…இதுக்கு மேல எப்படி சொல்ல தெரியல…என்னனு மன்னிப்பு கேட்க…!!” என பெண்ணவள் இறைஞ்ச… ஒரு கணம் நின்று அவள் முகத்தை பார்த்தவன்…பின் சுற்றுப்புறம் ஒரு முறை பார்த்துவிட்டு அவளை இழுத்து இறுக அணைத்து கொள்ள… திணறி போனாள் பெண்ணவள்… என்ன…?? ஏது…?? என்பது உணரும் முன் அவளை விடுவித்தவன் அங்கிருந்து சென்று மறைந்தான்…

 

 

 மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே.. ஏஏ ஏஏஏஏஏஏ…

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top