10
ஏவி குரூப்ஸ் எம்டியாக அங்கே வித்யூத்தை எதிர்பார்க்கவில்லை மயூரி. அண்ணனுக்கு குறையாத அதே அதிர்ச்சியான முகபாவனைவுடன் பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்து “உங்க குடும்பமே இப்படித்தானோ?” என்றான் எள்ளலாக ஆரன்.
“ஹான்.. ஹான்.. இல்ல.. அது..” என்று திக்கி திணறியவளை பார்த்து அவளிடம் சென்றவன், சற்றே இலகுவாக “என்ன மயூ பேபி.. அன்னைக்கு தானே சொன்னேன். நமக்குள்ள எல்லாம் கிளியர் கட் என்று.. இப்போ நீயே தேடி வந்திருக்க..?” என்று கண்களில் ஆச்சரியத்தை தேக்கி அவன் கேட்க இப்போது மயூரிக்கு ‘எங்கே சென்று முட்டிக் கொள்வது?’ போலிருந்தது.
‘இனி என்ன என்ன சொல்ல போறானோ? இல்லை செய்ய போறானோ?’ என்று மான் விழியாள் மருட்சியுடன் பார்க்க..
ஆனால் அவள் முன்னே கால்களை விரித்தபடி கைகளைக் கட்டியபடி ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவனை பார்க்கையில் பதில் சொல்லாமல் விடமாட்டேன் என்பதை போலிருந்தது.
வறண்ட தொண்டையை மிடறு விழுங்கிய நித்திலம் அவளின் மிரண்ட பார்வையில் தத்தி தாவிய மனதை இழுத்து பிடித்து இறுக்கினான் ஆரன்.
“அது.. நா..நான் வரதராஜன் சார் ஜூனியர்.. இங்கே ஒர்க்..” என்று இழுத்தாள்.
கட்டம் கட்டி தூக்கி வந்தவனுக்கு தெரியாதா? அவள் எதற்காக இங்கே வந்திருக்கிறாள் என்று! ஆனாலும் ஒன்றும் அறியாதது போலவே நெற்றியை சுருக்கிய பார்த்தான் அவளை தீர்க்கமாக..
“நீயா.. வரதராஜன் சார் ஜூனியர்?” என்று நம்பாததைபோல திரும்ப கேட்டவனை பார்த்து தலையசைத்து ஆமாம் என்றாள்.
“நான் ஃபுல் ஸ்டாப் போட்டு முடித்து வைத்ததை.. இன்னும் சில புள்ளிகள் வைத்து தொடர்கதையாகி வைக்க நினைக்கிறாய் மயூ பேபி.. இதில் இனி என் ஃபால்ட் ஒன்னுமில்ல.. பார்த்தவுடன் ஓடுறது.. கடித்து திங்க வரவனை பார்த்து மிரளுவது போல பதுங்குவது.. இது எல்லாம் இனி என் ரூமில் இருக்கக்கூடாது!! சம்ஜே?!” என்றவனின் அழுத்தமான குரலில் “ஓகே.. ஓகே.. சார்” என்றாள் வேக வேகமாக..
அவளது சாரில் அவனது இதழ்களில் மெல்லிய கள்ள புனன்கை மிளிர..
“இந்த சார் நமக்குள்ள வேணுமா மயூ பேபி?? அவ்வளோ அந்நியயோனியத்துக்குப் பிறகும்.. ஏதோ அந்நியர்கள் போல அபிஷியலா சாருனு கூப்பிடுறது எல்லாம்.. ம்ப்ச்.. ஐ டோண்ட் லைக் இட்.. கால் மீ வித்யூத் மயூ பேபி!” என்றவனின் பேச்சில் பேச்சை மறந்து தலையை மட்டும் தான் ஆட்ட முடிந்தது அவளுக்கு.
அவனது அறையிலேயே அவளுக்காக ஒரு கேபின் புதுசாக முளைத்திருந்தது. ஆனால் அது அவள் அறியாதது. அந்த கேபினை காட்டியவன் “சில பைல்ஸ் அந்த சிஸ்டமுக்கு அனுப்பி வைக்கிறேன். ஆபீஷியல் மெயில் ஐடி பாஸ்வேர்ட் இப்போ உனக்கு வந்துரும்.. அதுல லாகின் பண்ணி அந்த பைல்ஸ் எல்லாம் கோ த்ரு பண்ணு!” என்றான்.
இவன் அருகில் இருக்கும் போது படபடத்து வர… அதை மறைத்து முதலில் கேபினில் உட்காரலாம் என்று அவன் சொன்னதை கேட்டதும் ஓடி சென்று இருக்கையில் அமர்ந்ததும் தான் வெலவெலத்த கால்களுக்கு ஓய்வு வந்தது.
அவன் கொடுத்த ஐடியில் லாகின் செய்தவள், அவன் அனுப்பிய பைல்களை எல்லாம் பார்த்தாள்.
வேலை என்று வந்தவுடன் சுற்றுப்புறம் மறந்து அதிலேயே அவள் நினைத்திருக்க கண்களும் அவளது விரல்கள் மட்டுமே அங்கே நடனம் ஆடிக்கொண்டிருந்தன.
கணிப்பொறியில் கட்டுண்டு கிடந்த கன்னி அவளை தான் தன் இருக்கையில் அரை வட்டம் அடித்தவாறு பார்த்திருந்தான் ஆரன்.
மடித்து கடித்த உதடிகள் அவள் பெரும் யோசனையில் இருக்கிறாள் என்று காட்டியது. அவளின் செவ்விதழ்களிடையே
கடிப்பட்டிருந்த பேனாவின் மீது பொல்லா கோபம் முகிழ்த்து மன்னவனுக்கு.
அவளின் நர்த்தனமாடும் நேத்திரங்கள்..
மடித்து கடித்த கீழ் இதழ்கள்..
அதனிடையே இருக்கும் பேனா..
“ஷ்ஷ்ஷ்ஷ்.. மயூ பேபி.. கொல்றடி என்னை!” என்று இடது கையால் கண்களை தேய்த்து கொண்டவன், அதன் இடுக்கு வழியே அவளை பார்த்தான்.
உன்னை என் வலையில் விழ வைக்க என்று இங்கே வரவழைத்தால், வலை விரித்தவனையே உன் விழி வலையில் விழ வைத்து இம்சைக்கிறாயடி!!
ஆட்கொள்ள வந்தவனை வந்த நொடி முதல் ஆட்கொண்டு கொல்கிறாயடி பெண்ணே!!
அவளை பார்க்க.. பார்க்க அவன் ஆழ் மனதில் உறங்கிக் கொண்டிருந்த காதலன் மேலெழுந்து அசுரனின் மீது சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டான் தன்னவளை ரசிப்பதற்கு!!
சிறிது நேரம் காதலனின் ரசிப்பை அனுமதித்த அசுரன் அதன்பின் அவனை மதித்து உள்ளே தள்ளி, தன் வேலையை துவக்கினான்.
“மயூ பேபி…!!” என்று கணினியில் கண் வைத்து கொண்டே அழைக்க..
‘என்னவோ இவன் லவ்வரை கூப்பிடுற மாதிரி கூப்பிடுறான்.. எல்லாம் என் நேரம். சீனியர் பேச்சைக் கேட்டு வந்த என்னை சொல்லணும்..’ என்று புலம்பியப்படி அவன் இருக்கைக்கு சென்றாள்.
“ச்சே.. நீ என் லவ்வரா இருந்தேனா.. உன்னை நான் ட்ரீட் பண்ற விதமே வேற மாதிரி! வேற மாதிரி!” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கூறியனை கண்டவளுக்கு திக் என்று ஆனது.
‘அச்சோ.. ஒரு நாளை ஓட்ட முடியலையே இவன் கூட.. சொச்ச நாளைக்கு என்ன பண்ணப் போறேன்னு தெரியலையே முருகா!!’ என்று அவள் கண்களை மட்டும் மேலே உயர்த்தி அவசர வேண்டுதலை வைக்க..
“வேண்டுதல் முடிச்சாசுன்னா.. இங்க கொஞ்சம் வேலையை கவனி” என்றான். அவன் முன் இருந்த சில பைல்ஸை காட்டி, “இந்த டெண்டருக்கு கொட்டேஷன் பண்ண போறேன். ஆனா இந்த ஷிப் மேக் பண்ண சில பார்ட்ஸ் புதுசா கேட்டு இருக்காங்க.. அது பத்தின டீடெய்ல்ஸ் எனக்கு கொஞ்சம் தேவை.. அதை என் பிஏ வந்து தந்திடுவான். அதை எல்லாம் செக் செய்து, அதுக்கப்புறமா நீ ஒரு ரஃப் கொட்டேஷன் போட முடியுமா?” என்று அவளிடம் அந்த அசைமெண்ட்டை கொடுத்தான்.
“என்னடா வந்து ஒரு நாள்தான் ஆகுது.. அதுக்குள்ள நம்மகிட்ட தூக்கி கொட்டேஷன் கொடுக்கிறானே பார்க்குறியா?” அவள் மனதில் ஓடியது அப்படியே அவன் கேட்க.. தலையை மட்டும் அசைத்தாள் பதில் கூறாமல்..
“ஒருத்தரை அரைகுறை நம்பிக்கையோட எப்பவுமே என் கூட சேர்க்க மாட்டேன்.. என்னிடம் வந்துட்டாங்கன்னாலே அவங்க மேல நான் முழுநம்பிக்கை வைத்து விடுவேன்” என்று அவள் கண்களை கூர்ந்து நோக்கி அவன் கூற.. அந்த நீல நிறக் கண்கள் தெரிந்த அலைகளை சமாளிக்க முடியாமல் திணறி தடுமாறி நின்றாள்.
பின் அந்த கொட்டேஷனை பிரிண்ட் அவுட் எடுத்து அவள் கையில் திணித்து “ரஃப்பா ஒரு தரம் செஞ்சுட்டு நீ கிளம்பி விடலாம்.. சம்ஜே!!” என்றான்.
“ஓகே சார்..” என்றவள் அவனின் தீர்க்க பார்வையில் “வித்.. வித்யூத்!” என்றபடி தனது கேபினில் அமர்ந்துவிட்டாள்.
இம்முறை தாடையில் கையை வைத்தவாறு அவளை பார்த்தப்படியே இருந்தான், அசுரனின் மூளைக்குள் பல திட்டங்கள் அசுர கதியில் போடப்பட்டன.
அவன் கூறியதைப் போலவே செய்து முடித்து அவனிடம் நீட்ட “நாட் பேட்.. மயூ!” என்றான்.
“அப்ப நான் கிளம்பவா?” என்று அவள் கேட்க.. மெல்ல எழுந்து அவளை நோக்கி வந்தவன், “எப்படி போவ?” என்ற கேட்டான்.
“என் வண்டியில தான்”
“இனிமே வண்டி எடுத்துட்டு வரா..த உன்னை பிக்கப் அண்ட் ட்ராப் பண்ண நானே கேப் அனுப்புறேன்” என்றதும் அவள் திடுக்கிட்டு பார்க்க “பயப்படாதே!! செந்தூரார் ஆபீஸ்க்கு இல்ல வரதராஜன் சார் ஆபீசுக்கு தான்!” என்றான்.
சரி என்று தலையாட்டிமவள், தனது ஹாண்ட் பேக் எடுத்துக்கொண்டு கிளம்ப, “மயூ பேபி!!” அழைத்தான் மெலிதாக, சென்றவள் நின்று திரும்பு முன் அவள் அருகினில் வந்திருந்தான்.
“ஜஸ்ட் ஒன் டைம்..!!” என்று அவள் என்ன ஏது என்று உணரும் முன் அவள் கீழுதட்டை அருகினில் மெலிதாக தெரிந்த அந்த மச்சத்தை விரல் கொண்டு நீவினான். பின் அவள் கீழ் உதட்டை பிடித்து தன் அருகே இழுத்து, “இட்ஸ் டிஸ்டபிங் மீ அ லாட் மயூ!” என்றான் கிறக்கமான குரலில்.
மூச்சை கூட விடாமல் அவனை பார்த்தவாறு நின்றிருந்தாள் மயூரி.
அவனது கிறக்கமான ஆழ் நீலநிற கண்களில் மீண்டும் விழும் வாய்ப்பு அதிகம் என்பதை உணர்ந்தவள், அவசரமாக அவனிடமிருந்து பிரிந்து வேகமாக வெளியே வந்தவள் அதைவிட வேகமாக வண்டியை எடுத்துக்கொண்டு வரதராஜன் ஆபிசுக்கு சென்றுவிட்டாள்.
இன்று முதல் நாள் என்பதால் அங்கு நடந்தவற்றை வந்த கூறும்படி ஏற்கனவே கூறியிருந்தார் வரதராஜன்.
அதுபோல இவள் சென்று ரிப்போர்ட் செய்ய “பரவாயில்லை முதல்நாளே உன்னை நம்பி கொட்டேஷன் ஃபில் பண்ண கொடுத்திருக்கிறார். ஏவி கிரேட்!! அவர் உன்னை சஜ்ஜஸ் பண்ணும்போது வேண்டாம்னு சொன்னார். இது வரைக்கும் எந்த விஐபி கிளையண்ட்ஸூம் அந்த மாதிரி சொன்னது இல்லை. காரணம் கேட்டதற்கு நீ செந்தூரார் குரூப்ஸை சேர்ந்த பொண்ணு அதனாலதான் வேண்டாம் என்றார். ஆனால் அவர் உன்னை நம்பி கொட்டேஷன் கொடுத்திருக்கும் போது.. நீ 100% அவருக்கு ஜெனியூனா இருக்கணும் புரியுதா?” என்று அவரும் அறிவுரை கூற “புரிந்தது!” என்றவள், மதியம் வழக்கம் போல அவர்கள் ஆஃபிஸூக்கு வந்துவிட்டாள்.
எங்கே ஆஃபிஸ் அறையில் நுழையும் போதே நிமிலன் மயூரியை பார்த்து “மயூரி முக்காயமான ஒரு டிஸ்கஷன் போயிட்டு இருக்கு.. அப்புறம் லன்ச் சாப்பிடலாம்!” என்று ஆரன் சொன்ன அதே கப்பல் பற்றிய கொட்டேஷன் பற்றி தான் பேசிக்கொண்டிருந்தனர் அங்கிருந்தவர்கள்.
முதலில் சுவாரசியமின்றி இருந்தவள் அவர்களும் அதே கப்பல் கட்டுவதற்கான கொட்டேஷனை தான் தயாரிக்கிறார்கள் என்று நினைக்க.. ஒரு மாதிரி நடுக்கம் கொண்டது மனது. எங்கே வாய் தவறி எதுவும் சொல்லி விடுவோமோ என்று அமைதியாக வாயை இறுக்க மூடி அமர்ந்திருந்தாள்.
எப்போதும் இதுபோல் அவர்கள் பேசினால் இவளுடைய கருத்தையும் மயூரி கூறுவாள். அந்த குடும்பத்தில் வேதவள்ளி தொடங்கி அனைவரும் தொழிலில் அவ்வப்போது வெற்றிகரமாக நடத்த ஆலோசனை கூறுவதால் ஆண் பெண் என்ற பேதமெல்லாம் இல்லை. என்ன இதில் விதிவிலக்கு ரஞ்சனி மட்டுமே..
ஆனால் இன்றும் மயூரி எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதை பார்த்த நிமிலம் “என்னாச்சு மயுரி மா? டயர்டா இருக்கா? இல்ல பசிக்குதா? நீ வேணா போய் சாப்பிடு டா!” என்றான் பரிவோடு.
“இல்ல இல்ல பசிக்கல.. நீங்க எல்லாம் வாங்க.. சேர்ந்து சாப்பிடலாம்!” என்றாள்.
“அப்புறம் ஏன் ஒரு மாதிரியா இருக்க மயூ மா?” என்றார் குருபரன்.
“ஒன்னுமில்ல பா.. வெயிலில் வந்தது.. நீங்க கேரி ஆன் பா!” என்றாள்.
“இந்த மாதிரி டிஸ்கஷனல எப்போதும் உன்னுடைய ஒப்பினியன் சொல்லுவ.. இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்கியே டா!” என்றார் மெய்யறிவு. நல்லவேளை ராகவன் அங்கே இல்லை. அவர் மட்டும் இருந்திருந்தால் அவள் மறுக்க மறுக்க.. பசியின் கொடுமையில் தான்.. வறுமையின் பிடியில் தான் பெண் இப்படி துவண்டுபோய் இருக்கிறாள் என்று பக்கம் பக்கமாக டயலாக் அடித்து அனைவரையும் அந்த டிஸ்கஸனை செய்ய விடாமல் சாப்பிட அழைத்து சென்று இருப்பார்.
“ஒன்றுமில்லையே மாமா.. நான் நல்லாத்தான் இருக்கேன். நீங்க பாருங்க” என்றவள் அங்கே அமர்ந்திருந்தால், மாறி மாறி ஒவ்வொருத்தரும் கேள்வி கேட்பார்கள் என்று உணர்ந்து மெல்ல எழுந்து ஓரமாகப் போய் அமர்ந்தாள்.
ஒரே நாளில் அவளே அறியாமல் அவளது வீட்டினரிடம் இருந்து அவளாகவே தனியே அமர வைத்து, முதல் படியில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்தான் இந்த அசுரன் ஆரன்!!
அவள் சென்ற சிறிது நேரத்தில் அட்டகாசமான சிரிப்பை சிரித்தவன் “மயூரி இந்த்ராக்ஷி.. அவுட்!! மூவ் டூ நெக்ஸ்ட் டார்கேட்!” என்றவன் தன் கையில் இருந்த சிறிய அம்பை தன் எதிரில் இருந்த போர்டு நோக்கி எறிய.. அது சென்று குத்தியது ஆராதனா போட்டோவில்!!
ஆராதனாவின் போக்குவரத்துகள் எப்பொழுது ஆபீஸ் செல்கிறாள் வருகிறாள்.. அவளது பொழுதுபோக்கு.. அவளது பிடித்தம் என்று அனைத்தும் அடுத்த இரண்டாவது நாளில் அவன் கைகளில் இருந்தது.
கன்னக்குழி விழ அழகிய சிரிப்புடன் இருந்த ஆராதனாவின் ஃபோட்டோவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆரன்.
“ஆரா.. ஆரா.. நீ இனி!!” என்றவன் முகத்தில் வன்மம் மித மிஞ்சியே நெளிந்தது!
இரண்டு நாட்கள் எப்பொழுதும் போல ஆரன் அலுவலகத்திற்கு செல்வதும், அவன் கொடுக்கும் ஃபைல்களை பார்ப்பதும் ஆக்கவுண்ட்ஸ் பற்றின தகவல்களை பெறுவதுமாக அவளது வேலை சென்று கொண்டிருந்தது மயூரிக்கு.
அன்று நடந்தது போல அடுத்த எல்லாம் அவன் நடந்து கொள்ளவில்லை. இரண்டு நாட்களாக ஏதோ தீவிரமான டிஸ்கஷனில் இருந்தான் ஹிமேஷூடனும் பென்னியுடனும். அவ்வப்போது சபரியும் வந்து செல்ல.. இவற்றையெல்லாம் கவனித்தாலும் அவள் தன் வேலையிலேயே மூழ்கியிருந்தாள். அதேபோல் அவங்க கம்பெனிக்கு செல்லும்போதும் இங்கே நடப்பது எதையும் வாய் வார்த்தையாக வெளியிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்.
அன்று அந்த கொட்டேஷன் ஒரு பிரபல கம்பெனிக்கு கப்பல் கட்ட சொல்லி கேட்டது.. முதல்முறையாக தென்தமிழகத்தில் அதற்கான டெண்டரை விட்டிருந்தது அந்த கம்பெனி. பெரிய அளவில் எல்லாம் இல்லை கொஞ்சம் நடுத்தரமான ஷிப் தான்.
அன்று அவள் அவனது அறைக்குள் நுழையும் போதே ஹிமேஷையும் பென்னியையும் போட்டு வறுத்து தாளித்துக் கொண்டிருந்தான் ஆரன்.
“ஹௌ திஸ் ஹேப்பண்ட்.. எப்படி? எப்படி… அவங்க கம்பெனிக்கு அந்த டெண்டர் கிடைச்சது? அதுவும் நம்ம கோட் பண்ண அமௌன்டிலிருந்து வெறும் 100 ரூபாய் கம்மி பண்ணி.. ஐ வாண்ட் டு க்நோ நவ் இட் செல்ஃப்..”
“சார்.. அது எப்படின்னு தெரியலை சார்?” என்று பென்னி மென்று விழுங்கி கூற..
“அது எப்படின்னு தெரிஞ்சுக்க தான் உங்க ரெண்டு பேரையும் என்கூட வேலையில் வைத்து இருக்கேன்.. உங்கள மீறி அது எப்படிப் போகும்?” என்று மீண்டும் கர்ஜித்தவனின் குரலில் நடுங்கித் தான் போனாள் மயூரி.
“அதுவும் அந்த செந்தூரார் குரூப்ஸூக்கு எப்படி போனது?” என்ற ஹிமேஷை பார்த்து ஹிந்தியில் கேட்டான்.
“பாஸ்.. ஐ டோண்ட் க்நோ பாஸ்” என்று பயத்தில் வெளிறி போய் அவன் கூறினான்.
“இது நடுத்தரமான போட்டு தான்.. ஆனால் இதை வைத்து தான் அடுத்தடுத்து அவர்களுடைய டெண்டரை நாம் எடுக்க முடியும்னு பல கனவு கோட்டைகளை கட்டி வைத்திருந்தேன். எல்லாத்துக்கும் ஒரு நூறு ரூபாயல ஆப்பு வச்சிட்டீங்களே டா!” என்று தன் ஆதங்கத்தை ஆத்திரமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் ஆரன்.
அப்போது பென்னி “சார் ஹிமேஷ் உங்கள்ட்ட ரொம்ப வருஷமா இருக்காரு.. நானும் இந்த எட்டு மாசமா உங்க கூடவே தான் இருக்கேன். நாங்க ரெண்டு பேருமே உங்களுக்கு ரொம்ப உண்மையாதான் இருக்கோம். ஆனால்.. ” என்று அவன் இழுக்க..
“என்ன ஆனா..” என்று புருவ நெறிவுடன் அவனைக் கூர்ந்து பார்த்து கேட்டான் ஆரன்.
“அந்த குரூப்ஸை சேர்ந்த பொண்ணு இங்க தானே சார் வேலை பார்க்குறாங்க.. அவங்க மூலமா..” என்று பென்னி கூறி முடிப்பதற்குள் “ஆஆஆஆ..” என்று அலறி இருந்தான். ஆரனின் வலிமையான கரங்கள் அவன் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.
“யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்ற? இனி ஒரு தரம்.. ஒரே ஒரு தரம் மயூரி பத்தி ஏதாவது சொன்ன.. கெட் அவுட் யூ இடியட்ஸ்!!” என்று இவன் அந்த அறையே அதிர கத்த.. கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைய எத்தனித்த மயூரி இவர்கள் சம்பாஷனைகளை கேட்டு அப்படியே நின்றிருந்தாள். ஆனால் கடைசியாக ஆரன் கத்திய கத்தலில் அதிர்ந்து அறைக்கு வெளியே சுவற்றோடு சுவராக பல்லி போல் ஒட்டிக் கொண்டு நின்றிருந்தாள்.
ஹிமேஸூம் பென்னியும் இதுவரை எதிரெதிர் துருவமாக இருந்தவர்கள் இந்த ஒரு பிரச்சினையில் ஒன்றாக புலம்பியபடியே வெளியே வந்தார்கள்.
மயூரிக்கே தன் காதுகளை நம்பவே முடியவில்லை. காலையில் சாப்பிடும் போது அண்ணன் மகிழ்ச்சியாக “அனைவருக்கும் ஸ்வீட் குடுங்க அத்தை!” என்றதும், அனைவருக்கும் வேதவள்ளி ரசமலாய் கொண்டு வந்து கொடுத்ததும்.. ஏன் என்று தெரியாமல் அவசரமாக சாப்பிட்டு விட்டு ஓடி வந்ததும் இப்பொழுது புரிய.. நெஞ்சு சற்று கனத்து போனது மயூரிக்கு.
கம்பெனிகளுக்கு இடையே அடிக்கடி போட்டிகள் நடக்கும் தான். ஆனால் அதில் தன் மீது இவ்வளவு நம்பிக்கை எப்படி வந்தது ஆரனுக்கு? எப்படி சந்தேகப்பட முடியாமல் போனது? என்று ஆரன் மீது அப்படி ஒரு மதிப்பு வந்தது மயூரிக்கு.
தன்னை சமன்படுத்தி விட்டு அறைக்குள் நுழைய.. அவனோ கடும் கோபத்துடன் அறையை அளந்து கொண்டிருந்தான். அவள் நடுங்கியபடியே “குட் மார்னிங் ச்ச.. வித்யுத்!” என்று முடிக்க..
சிறிது நேரம் நின்று அவளையே கூர்ந்து பார்த்தவன், “அந்த டெண்டர் நம்ம கைவிட்டு போயிடுச்சி மயூ!” என்று வருத்தமாக கூறினான்.
“சார்..” என்று தொண்டையிலிருந்து வார்த்தை வராமல் அவள் கைகளை பிசைந்து கொண்டு நின்ற கோலத்தை கண்டவன், அவளை நெருங்கி அவளது கைகளை தன் கைகளால் பொதித்து “தொழில இதெல்லாம் சகஜம் தான் மயூ!” என்றான் ஆறுதலாக..
இவள் ஆறுதலாக பேசணும் என்று நினைக்க.. ஆனால் இவளுக்கு முன் தனக்கு ஆறுதல் கூறும் அவனை விசித்திரமாக அவள் பார்த்தாள்.
“உங்க குரூப்ஸூக்கு தான் போய் இருக்குனு கேள்விப்பட்டேன் மயூ! கங்கிராட்ஸ்!!” என்றவனை பார்த்து, “எனக்கும்.. இ..இது.. இதுக்கும்..” என்று உதடுகள் துடிக்க கண்கள் கலங்க அவனைப் பார்த்தாள் மயூரி!
“ஏய் மயூ பேபி.. ரிலாக்ஸ்!! ரிலாக்ஸ்!!” என்றவன் அவள் கைகளை பிடித்து தட்டிக் கொடுத்து, “ஐ க்நோ யூ பேபி! ஃபீல் ஃப்ரீ!!” என்றவன் சோஃபாவில் அவளை அமர வைத்து, தன் டேபிளில் இருந்த தண்ணீர் தம்ளரை அவளிடம் நீட்டினான். அவள் மெல்ல மெல்ல தண்ணீரை பருக.. இவன் கண்கள் அவளைத் தான் பருகிக் கொண்டிருந்தது.
ஆரன் இன்னும் அவளுக்கு நெருக்கமாக உட்கார்ந்து, அவள் பக்கம் நகர்ந்து அவளை தன் தோளில் சாய்த்து கொண்டான். பின்னர் மெதுவாக அவளின் கரத்தை பற்ற.. அவள் தவிப்புடன் அவனை பார்க்க.. அவளின் அழகான உள்ளங்கையை மலர்த்தி விரித்து, “இந்த கையால் எப்போதுமே எனக்கு துரோகம் செய்ய முடியாது மயூ பேபி!” என்றவன் மெல்ல குனிந்து அவளின் விரிந்த ரோஜாப் பூ உள்ளங்கையில் மென்மையாக முத்தமிட்டான். அவனின் தன் மீதான நம்பிக்கையில் இவள் புன்னகைத்து தலையை குனிந்து கொள்ள..
அதேசமயம் நிமிலனிடருந்து போன் வந்தது ஆரனுக்கு.
“என்ன ஏவி.. முதல்முறையா மண்ணை கவ்விட்டியாமே! பரம சந்தோஷம்!! இதுதான் ஆரம்பம்..” என்று அட்டகாசமாக சிரித்து தனது வெற்றியை பறை சாற்றினான் நிமிலன்.
அவனும் தன் கை வளையில் இருந்த மயூரியை பார்த்துக் கொண்டே..
“அச்சா!!” என்றான் விளங்க முடியாத குரலில்.
👌👌👌👌👌👌👌👌👌
Sama intresting 👌👌
ZXFuqcivVUxt