11
வித்யூத் தமிழில் நன்றாக பேசினாலும் அவ்வப்போது சில வார்த்தைகள் ஹிந்தியில் வந்து விழும். அதுவும் சிலசமயம் விளங்க முடியா அவன் குரலில் அந்த வார்த்தைகள் நெஞ்சுக்குள் குளிரடிக்கும்!
இன்றும் அவனது “அச்சா-வில்” நிமிலன் சற்று நிதானித்தான்.
அந்த நிதானம் ஆரனை வெற்றி கொண்டு விட்டோம் என்ற மகிழ்ச்சி பறந்து போய் இருந்தது. அதுவும் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே ஒவ்வொரு கப்பலை அவன் தட்டிப் பறிக்க.. அவற்றுக்கு எல்லாம் சேர்த்து கப்பல் கட்டும் துறையில் நிமிலனின் முதல் வெற்றி இது!!
காலையிலேயே இந்த அறிவிப்பு வந்தவுடன் வீட்டில் அனைவரிடமும் சந்தோசமாக கூறி இனிப்பு கொடுத்து என்று ரகளை செய்து விட்டான்.
வெகுநாளாக முகத்தில் இறுக்கத்துடன் இருந்தவன் இன்று இலகுவாக சந்தோசமாக இருப்பதிலேயே அவனது அத்தை வேதவல்லி முதல் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் நிம்மதி.
ஆனால் அத்தனை சந்தோசத்தையும் ஒற்றை அச்சா-வில் பறித்து விட்டானே என்று கோபம் பெருகியது நிமிலனுக்கு.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு அல்லவா??
“என்ன ஏவி பயந்துட்டியா? இனி தான் இருக்கு உனக்கு” என்று தம் கட்டி பஞ்ச் வசனங்களை பேசினான்
நிமிலன்.
இங்கே ஆரனோ அருகில் இருக்கும் வஞ்சி அவளைத்தான் வஞ்சம் கொண்ட புன்னகையோடு பார்த்து இருந்தான்.
“என்கிட்ட இருந்து கொட்டேஷன் அமௌண்டை காப்பி அடிச்சுட்டு.. இப்போ ஜெயித்தேன் வேறு பெருமை உனக்கு வெட்கமா இல்ல?” என்று நக்கலாக கேட்டான் ஆரன்.
“யாரு.. யாரு டா உன் கிட்ட இருந்து கொட்டேஷன் அமௌண்டை காப்பி அடிச்சா?”
“வேறு யார் நீதான்? இதுல சந்தேகம் வேறையா? என்னவோ நேர்மையை ஜெயிச்ச மாதிரி இவ்வளவு பெருமை எருமை எல்லாம் கூடாது உனக்கு?” என்று நக்கல் அடித்தான் ஆரன்.
அதில் நிமிலனுக்கு வெகுவாக கோபம் பெருகியது.
இன்னும் அவன் தோளில் தான் இருந்தாள் மயூரி. சிறு நடுக்கம் உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. மெல்ல அவனிடம் இருந்து விலக எத்தனிக்க.. அப்போது அவன் கையில் இருந்த போன் கை நழுவி கீழே விழுந்தது. அதே சமயத்தில் ஆரனின் விரல் பட்டு லவுட் ஸ்பீக்கர் ஆன் ஆனது.
“ஆமான் டா.. நான் தான் உன் கொட்டேஷனை திருடி எடுத்து அந்த டெண்டரை எடுத்தேன். என்ன பண்ண முடியும் உன்னால்? இந்த இடம் செந்தூராரின் கோட்டை.. இந்த கோட்டையை தகர்க்க இல்ல.. உள்ள நுழையுனும்னு நினைச்சாலே.. அவனை உருத்தெரியாம ஆக்கிடுவேன். ஜாக்கிரதை.. சீக்கிரம் மூட்டை முடிச்சிய கட்டிக்கிட்டு மும்பையை பார்க்க கிளம்ப” என்று எள்ளல் தெறித்தது நிமிலனின் குரலில்.. அதை கேட்டு அதிர்ந்து ஆரனை திரும்பிப் பார்த்தாள் மயூரி.
அவள் அதிர்ந்து முகத்தில் உள்ளுக்குள் ரசித்து பார்த்தாலும் வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல், நிதானமாக போனை எடுத்து அதை விட நிதானமாக லவுட் ஸ்பீக்கரை ஆஃப் செய்து காதில் வைத்தவன், மயூரியை கூர்ந்து பார்த்து கொண்டே.. மீண்டும் அதே “அச்சா?!” என்று கேள்வியும் பதிலுமாய் உரைத்து போனை ஆஃப் செய்தான்.
திரும்பி பார்க்க அங்கு மயூரி அதிர்ச்சி குழப்பம் வருத்தம் கோபம் என அனைத்தும் கலந்த கலவையாக அமர்ந்திருந்தாள். அவளை தன் தோளோடு அணைத்து “ரிலாக்ஸ்.. மயூ பேபி.. தொழில இந்த மாதிரி போட்டி இருக்கும் தான். இன்னும் சில பேர் இவனை மாதிரி கீழ இறங்கி வேலையும் செய்வார்கள் தான்.. இதெல்லாம் நீ மைண்ட் பண்ண வேணாம். என்னைக்கு வொர்க் வேணாம்.. நீ வீட்டுக்கு போ பேபி!” என்று அவளை அனுப்பி வைத்தான்.
வழக்கமான டிரைவரை அனுப்பி மயூரியை டிராப் செய்ய சொன்னான். தனக்கு இருக்கும் மனநிலையில் கண்டிப்பாக வரதராஜன் ஆபீசுக்கோ இல்லை தங்கள் ஆபீசுக்கோ செல்ல முடியாது என்பதை உணர்ந்த மயூரி நேராக வீட்டிற்கு போக சொன்னாள்.
டிரைவர் மயூரியை டிராப் செய்தவுடன் வழக்கம்போல ஆரனுக்கு போன் செய்து, “மேமை வீட்டில் விட்டு விட்டேன் சார்!” என்றதும் மீண்டும் அந்த அசுர சிரிப்பு வந்து ஒட்டிக்கொண்டது அவனது இதழ்களில்..
மதிய உணவின் போது ஹிமேஷின் குறுகுறு பார்வை தன்னை தொடர்வதை உணர்ந்த ஆரன், “வாய் வரை வந்துட்டு தானே கேளு மேன்!” என்று சாப்பாட்டில் கவனம் வைத்துக் கொண்டே கேட்டான்.
“சார் செந்தூரன் குரூப்ஸ் கொட்டேஷன் எடுத்துட்டு வர சொன்னிங்க ஓகே.. அதற்கும் ஆள் ஏற்பாடு பண்ணி எடுத்துட்டு வந்தோம். அவரை விட 100 ரூபாய் கம்மியா போட்டாலும் பரவாயில்லை ஏன் சார் நூறு ரூபா அதிகம் போட்டு அந்த டெண்டரை அவங்களுக்கே கொடுத்திங்க?” என்று ஹிமேஷின் கேள்விக்கு பதிலாக சிரிப்பையே கொடுத்தவன், “அது தெரிஞ்சா.. புரிஞ்சா நீ ஆரன் ஆகிடுவ மேன்.. சம்ஜே?!” என்றவனை புரியாமல் பார்த்து தலையை சொறிந்தான் ஹிமேஷ்.
அதைப் பார்த்து இன்னும் அட்டகாசமாக சிரித்தான் ஆரன் அசுரனாய்!!
வீட்டுக்குள் சென்ற மயூரி வெகு நேரம் தனிமையில் தன்னை அமிழ்த்துக் கொண்டு யோசனையில் இருந்தவள், ரெஃப்ரெஷ் செய்யலாம் என்று கப்போர்ட் திறந்தவளின் கைகளில் விழுந்தது அன்று ஆரன் கொடுத்த கிஃப்ட்!!
அதற்கு பின்னான நாட்கள் எப்படி ஓடியது என்று கேட்டால்.. மயூரிக்கு தெரியவே இல்லை ஏதோ கனவில் மிதப்பது போலவே மிதந்தாள்.
இருவர்கிடையேயான உறவு தான் என்ன?
அன்பா?
நட்பா?
ஈர்ப்பா?
மையலா?
சலனமா?
சபலமா?
மோகமா?
தாபமா?
இல்லை.. காதலா?
ம்ஹீம்.. அதற்கு பேர் வைக்க முயலவில்லை தத்தை அவள், தான் அவன் மீது கொண்ட உணர்விற்கு!!
அதை ஆராய முற்படவில்லை! அனுபவிக்கவே தயாராக இருந்தாள்!!
ஆனால் நாளுக்கு நாள் அவன் மீதான அந்த மையல் தையல் அவளை.. அவனை மனது அளவில் மிக நெருக்கமாக உணர்ந்தது.
இந்த உணர்வு பிடியிலேயே இருந்தவள், அவளது கம்பெனியின் செயல்பாடுகளை அவ்வளவாக கவனிக்கவில்லை. எப்பொழுதும் மதிய உணவு அதைத் தாண்டி சிறிது நேரம் அக்கவுண்ட் சரிபார்ப்பது என்று மட்டுமே இருந்தாளே ஒழிய.. வழக்கமான அவளது கருத்துக்களை அபிப்பிராயங்களை சொல்லவே இல்லை.
நிமிலனும் கிடைத்த ப்ராஜக்டை சரியாக செய்து முடிக்கும் வேகத்தில் தங்கையை கவனிக்கத் தவறினான்.
எப்பொழுதும் அவர்கள் வீட்டில் காலை உணவு ஒன்றாக உண்பது தான் வழக்கம். அதுபோல அன்று உணவருந்தும் போது கூட வேதவல்லி வருத்தப்பட்டார் மருமகளை நினைத்து..
“மயூமா.. வரவர உன்னை சரியாகவே பார்க்க முடியறதில்ல.. காலையிலேயும் சீக்கிரம் கிளம்பி போயிடுற.. நைட்டு இந்த தடியன்களோடு சேர்ந்து லேட்டாதான் வர..” என்று மருமகனையும் தங்கை மகனையும் காட்டினார்.
நிமிலனும் நிரஞ்சனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “நாங்க எங்க வேலையில பிஸியா இருக்கோம் பெரியம்மா.. அவ உட்கார்ந்து சீட்டை தான் தேச்சிக்கிட்டு இருக்கா பெரியம்மா!” என்று அவளை போட்டு கொடுக்க..
“சீட்டை தேய்க்கிறதுக்குனே இந்த வீட்டில் சில ஆளுங்க இருக்காங்க.. என்ன அந்த லிஸ்டில் சேர்க்காத நிரஞ்சா!” என்று கையில் வைத்திருந்த ஸ்போர்க் ஸ்பூனை காட்டி கொன்று விடுவேன் என மிரட்டினாள் மயூரி.
“சச்சே.. நாம என்ன அப்படியா பழகியிருக்கும் மயூரி? எதா இருந்தாலும் பேச்சு பேச்சா இருக்கணும்.. இல்ல இல்ல சாப்பாடு சாப்பாடாதான் இருக்கணும். நீ சாப்பிடு மா!” என்றவன் சமாதானத்தில் இறங்க.. ரஞ்சனிக்கு அவ்வளவு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது.
‘அவள் தன்னை தான் சொல்கிறாள் என்று தெரியும்.. இருந்தும் இந்த அண்ணன் தனக்கு சப்போர்ட் செய்யாமல், அவளிடம் அடங்கி போகிறானே? நாளைக்கு இவளை கல்யாணம் செய்து வைத்தால்.. சுத்தமாக பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவான் போலவே?’ என்று வருந்தியவளின் காதருகே குனிந்த மோகனா “நீ ஏன் பாப்பா கவலை படுற.. உங்க அண்ணன் அவ கிட்ட அடங்கிப்போனா.. அவ அண்ணனை உன்கிட்ட அடங்கி போகவை.. சரியா போயிடும்!” என்று நாசுக்காக நாச வேலையை முடித்துவிட்டு உணவில் கவனம் ஆனார்.
இப்படி இரண்டு பிறவிகள் இருப்பதை உணராததை போல மற்றவர்கள் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். “ஒன்றுமில்ல த்தை.. புதுசா ஒரு கிளையன்ட் ஓட ஆக்கவுண்ட்ஸ் எல்லாம் என்னை பார்க்க சொல்லி இருக்கிறார் வரதராஜன் சார். அவருக்கு டெய்லி ரிப்போர்ட் பண்ணனும். அதுதான் வேலை ரொம்ப இழுக்குது அத்தை.. ஆபீஸ்ல நம்ம வேலைய முடிச்சிட்டு மீத நேரத்துல அந்த வேலைய தான் பாத்துட்டு இருக்கேன் அத்தை..” என்றாள் நம்பும்படியாக..
ஏனென்றால் இதில் பாதி நேரம் இவள் கனவில் தானே மிதக்கிறாள். அதை சொல்லவா முடியும்!
அன்றும் ஆரனின் எதிரே அமர்ந்து கணினியை பார்ப்பதும் அவ்வப்போது அவனை பார்ப்பதுமாகவே இருந்தாள் மயூரி.
அதைக் கண்டு கொண்டவனோ காணாத மாதிரி அமர்ந்திருந்தான். அடுத்த முறை அவள் கணினி பக்கம் திரும்பி.. மெல்ல கண்களை ஆரனின் பக்கம் திருப்ப முனையும் சமயம்.. சட்டென்று பின்வாங்கினாள். ஏனென்றால் அவள் டேபிளில் கைகளில் முகத்தைத் தாங்கி நின்றிருந்தான் ஆரன்.
“என்ன.. என்ன ச..சா.. வித்யூத்? என்று அவள் அதிர்ந்து கேட்டாள்.
“சைட் அடிக்கலாமா?” என்று ஒற்றைப் உருவத்தை அவன் தூக்கி கேட்க.. தன்னை கண்டு கொண்டான் என்று இன்னும் வியர்த்து வழிந்தது அவளுக்கு.
“ஹே.. ரிலாக்ஸ்.. நான் இப்போ சைட் வியூ போறேன். நீயும் வா..” என்றவன் அவளை வம்படியாக அழைத்துக் கொண்டே சென்றான்.
அவனுடன் முதல்முறையாக அவனது போட்டில் பயணம்! அதுவும் அவளுக்கு பிடித்த நீல நிற கடலில்..
கண்களில் பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவளை தான் ரசித்து கொண்டிருந்தான்.
மாலை நேரச் சூரிய ஒளியில் அவள் முகம் பொன்னிறமாக மின்னின.. அவளது நீள மூக்கும்..
செவ்விதழ்களும் அந்த பொன் கதிர்கள் பட்டு இன்னும் நிறம் கூடின.. அவளின் காதோர முடி கற்றைகள் கடல் காற்றில் அலைகளோடு ஆர்பரித்தன…
காதில் நர்த்தனமாடும் சின்ன ஜிமிக்கியும்.. அவள் வெண்ணிற கழுத்தில் புரளும் செயினும்.. என ஒவ்வொரு அசைவிலும் அழகை அள்ளித் தெளிக்கும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான் இல்லை இல்லை பருகிக் கொண்டிருந்தான் தாபம் ஏறும் கண்களால் ஆரன்..
“மயூ பேபி..” என்று அவன் திடீர் என்று அழைக்க.. கடலை ரசித்துக் கொண்டிருந்தவள் அவனது அழைப்பில் தடுமாற விழ போக..
அவன் அருகே ஓடி வர, அவனது தோளில் அழுந்திச் சரிந்தாள் கோதையவள்.
அவளின் மூச்சுக் காற்று அவனது முகத்தில் சூடாக மோத “சாரி.. பயத்துல..” என்று முனகினாள்.
“ரிலாக்ஸ்.. மயூ பேபி!! என்றான் அவளை தாங்கியவாறு..
“ம்ம்ம்..” என்று நகர எத்தனிக்க.. “ம்ப்ச் இப்போ என்ன.. இப்படியே இரு” தன் இறுக்கத்தில் இறுக்கிக் கொண்டான் மாயவன்.
கடல் காற்றில் அவனது முடிகள் அலைந்து பரந்து அவனின் வசீகரத்தை ஏற்றியது.
அதுகாறும் அவள் நெஞ்சில் அரித்துக் கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டாள்.
“நீங்க ஏன் என்மேல சந்தேகப்படல… அந்த டெண்டர் விஷயத்துல..” என்று அவன் முகம் காண முடியாமல் கண்களை கடலில் பதித்திருந்தாள்.
“நான் ஏன் உன் மேல சந்தேகப்படனும் மயூ? நீ வந்த அன்னைக்கே சொன்னேன் தானே?? நம்பிக்கை இல்லாதவங்களை அருகில் கூட சேர்க்க மாட்டேனு.. அப்புறம் ஏன்?” என்றான் அவள் காதில் ஜிமிக்கி சுண்டி விட்டப்படி..
“இல்ல.. எனக்கு கொஞ்சம் கில்ட்டி ஃபீலிங்கா இருக்கு..”
“இங்கே.. என் முகத்தை பார்த்து பேசு மயூ!” என்றான் அவள் முகம் அருகே நெருங்கி..
நீல நிற கடலில் இருந்து பார்வையை திருப்பி அந்த ஆழ் நீலநிற பாவையில் பார்வையைப் பதித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அதில் தொலைய தொடங்கினாள்.
“நான் அப்படியெல்லாம் யோசிக்கல… உன்னை அப்படி யோசிக்கவும் என்னால முடியாது.
ஜஸ்ட்.. நீ புரிஞ்சுக்கணும் மயூ என்னை.. என்னால உன்னை ஹேர்ட் பண்ண முடியாது” என்றான் அவள் கன்னத்தை மெதுவாக வருடியவாறு..
அதில் உருகி குழைந்தவள் “எப்போதுமே வா?” என்றாள் ஆவலோடு..
“நாம எதைச் செய்தாலும் அதுல இருக்கற நல்லது கெட்டது… ரெண்டையுமே யோசிச்சுதான் செய்யணும் என் அப்பா சொல்லுவார். சோ.. அப்படி வர ரெண்டுக்குமே நாம தான் பொறுப்பு! இப்ப உன்மேல நான் வச்ச நம்பிக்கை.. அதனால வர்ற எல்லாத்துக்கும் நான்தான் காரணம்!” என்றான் பூடகமாக..
அவன் சொன்னதை கேட்டு சுத்தமாகக் குழம்பிப் போயிருந்தாள் மயூரி.
“என்ன புரியுதா?” என்றவனிடம் குழப்பம் நீங்காமலே வேகமாக தலையை ஆட்டினாள்.
இது போலக் குழப்பமாகவே அவன் மேலும் மேலும் பேசினான். பேசியவாறே மெதுவாக அவள் தோளில் கைபோட்டு வளைத்து தன் அணைப்பினிலே வைத்திருந்தான். கைகளை பிடித்து விரல்களை நீவியவன், அந்த வெண்டை பிஞ்சு விரல்களை தன் விரல்களோடு கோர்த்தான்.
இடையிடையே அவள் முகம் பார்த்து பேசினான். ஆனால் அது காதல் வார்த்தைகள் இல்லை. மெல்ல மெல்ல அவள் மனதை கரைத்து இதயம் சேர்ந்தன அவ்வினிய சொற்கள்!!
அவனது செயல்கள் எதுவும் அவளுக்கு பயத்தைத் தரவில்லை.. மாறாக அது மனப் பரவசத்தையும், உள்ள நெகிழ்ச்சியையுயம் கொடுத்தது.
அவனின் மென்மையான வருடல்.. மெல்லிய அணைப்பு.. வசீகர பேச்சு.. ஆணவனின் பிரத்யேக வாசனை.. அதை எல்லாவற்றையும் விட அந்த நீல நிற கண்கள்.. அவை காட்டும் பாவங்கள் என் அனைத்தும் அவளின் பருவ வயதை உசுப்பி, அவனிடம் மொத்தமாக சாய்த்தது.
மயூரி அவன் சொன்ன எதையும் கூர்ந்து கவனிக்கவில்லை. அவளது கவனமெல்லாம் அவனின் அருகாமையில் கவனச் சிதறலாய் போனது!
பேசிக் கொண்டே எதார்த்தமாக அவளது கையை பிடித்து, விரலை எடுத்து தன் வாய் அருகே கொண்ட சென்று தன் இதழ்களின் மேல் வருடினான். மெல்ல அவளின் விரலைக் கடித்தான்.
அவள் சிலிர்த்து.. ”ஷ்ஷ்ஷ்ஆஆ.. விது” எனச் சிணுங்க… “சாரி பேபி வலிச்சிடுச்சா?” என்றவன் உடனே அந்த விரலுக்கு மெல்லிய முத்தம் ஒன்றை கொடுத்தான்.
”சாரி பேபி!!” என்று மீண்டும் ஒரு முத்தம்.
“இ.. இல்ல.. பரவாயில்ல.. வி..விடுங்க” என்று அவள் கையை இழுக்க
“ரொம்ப ரொம்ப அழகான பிங்கர்ஸ். இதை அப்படியே கடிச்சு..” என்று அவன் சொல்லும் முன் சட்டென அவள் பிடுங்க.. அவனோ விடாமல் அவளின் அவ்விரலை வாயில் வைத்துச் சூப்பினான்.
அவனை எதிர்க்கும் திராணியில்லாமல் அந்த அலையில்லா நடுகடலில் தத்தளிக்கும் படகை போலவே அவளும் தத்தளித்தாள்.
காதல் பித்து ஏறிப் போய் இத்தனை நேரமும் மோக இம்சையைக் கொடுத்த அவளின் இளமை நரம்புகள் தீண்டப்பட்டதும்.. மொத்தமாய் ஆரனின் வசம் இந்த மயூரி!!