ATM Tamil Romantic Novels

என் மோகத் தீயே குளிராதே 28

அத்தியாயம் 28

 

“சஜன்.. டிசைனிங் பார்ட்ல பேக்ரவுண்ட் செக் பண்ணு.. அந்த கலரை மாத்த சொல்லு..” என்று சஜனைப் பார்த்து கூறிய ஹர்ஷவர்தன், ப்ரியாவின் புறம் திரும்பி, சில பேப்பர்களை நீட்டி, “இந்த டீடெயில்ஸையும் சேர்த்து அப்டேட் பண்ணச் சொல்லு..” என்றவாறே நகுலைப் பார்த்து, “அப்புறம் நீ அந்த என்குயரிஸ் எல்லாத்தையும் அப்டேட் பண்ணிட்டியா.. இன்னும் அப்டேட் காட்டமாட்டேங்குது? இன்னைக்குள்ள ப்ரோக்ராம் டீம் வொர்க் முடிச்சுருக்கணும்..” என்றவன் தனது லேப்டாப்பிற்குள் மூழ்கி போக,

 

“வாவ்..” என்ற சஜனின் குரலில் மற்ற அனைவரும் நிமிர்ந்து பார்க்க, தானும் லேப்டாப்பில் இருந்து தலையை நிமிர்த்தி பார்த்தான் ஹர்ஷவர்தன். மீட்டிங் ஹாலின் கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியில், இளம்ரோஜா நிறத்தில் உடலோடு ஒட்டியபடி, நேர்த்தியாக கட்டிருந்த புடவை, மிதமாக செய்யப்பட்ட ஒப்பனை, காற்றோடு கதை பேசும் அலை அலையான கூந்தலென நடந்து வந்தவளை பார்த்தவனது இதயத்துடிப்பு அதிகமானது. அவளை மெய் மறந்து  பார்த்துக் கொண்டிருந்தவனின் கவனம் சட்டென அங்கிருப்போரிடம் திரும்ப, மொத்த அலுவலகமே அவளைத் தான் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். 

 

“அங்கென்ன பார்வை? வேலை நிறையாயிருக்கு.. இன்னும் ட்டூ டேஸ்ல ப்ராஜெக்ட் முடிச்சாகணும்.. கவனம் இங்கிருக்கட்டும்..” என்றவன் அதட்டலில் அனைவரும் தன் கவனத்திற்கு திரும்பியிருந்தனர். பெண்ணிற்கு பெண்ணே அழகில் மயங்க முடியுமா? விளானியின் அழகில் ஒரு நிமிடம் மயங்கித் தான் போயிருந்தாள் ப்ரியா. அனைவரும் தங்களது வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, வேகமாக தன் இடத்தில் இருந்து எழுந்தவன், வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக, விளானியை நோக்கிச் சென்றான். தனது தோழி அர்ச்சனாவிடம் தனது புடவையை காட்டிக் கொண்டிருந்தவளின் கையை தரதரவென இழுத்துக் கொண்டு சென்றவன், அங்கிருக்கும் அறைக்குள் சென்றான். அவளது இடையை சுற்றி வளைத்தவன், தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தபடியே, அவளது தோளில் முகம் புதைத்து, அவளின் வாசனையை நுகர்ந்தான். 

 

“இது என்ன ட்ரெஸ்? இப்படித்தான் ஆஃபிஸ்கு வரும்போது போட்டுட்டு வருவியா?” என்றவாறே அவளது கழுத்து வளைவில் இதழ் பதித்தவன், சேலையின் மறைவில் தெரிந்த இடையில் விரல் பதித்து, சிறு அழுத்தம் கொடுக்க, மங்கையின் உதடுகள் வெட்கத்தில்  நடுங்கத் தொடங்கின. 

 

“இதென்ன லிப்ஸ்டிக்?” என்றவாறே அவளது இதழோடு இதழ் பதித்து, பூவிற்கு வலிக்காது தேன் உறிஞ்சும் வண்டை போல, இதழணைத்து மதுவருந்தத் தொடங்கினான். மூச்சுவிட முடியாது திணறியவள், அவனிடம் இருந்து விலக நினைக்க, அவளை இறுக்கி அணைத்தேன், மேலும் மேலும் அவளது இதழில் புதைந்து போனான். இறுதியில் யாரோ கதவை தட்டும் ஒலி போல் கேட்க, இவ்வுலகிற்கு வந்தவன், அவளது மூக்கோடு மூக்கை உரசியவாறே, அவளது கண்களைப் பார்த்து,

 

“இந்த கண்ணுல இவ்வளவு மை தேவையா?” என்று கேட்க, அவனை தள்ளிவிட்டவள்,

 

“ஏன்? அவப் போடும் போது மட்டும் நல்லாருந்துச்சா? அவளை மட்டும் எதுவுமே சொல்லமாட்டேங்குற? நான் போட்டுட்டு வந்தா மட்டும் இவ்வளவு குறை சொல்ற? நீ.. நீ.. பொய் பொய்யா பேசுற.. அவக்கிட்ட மட்டும் சிரிச்சு சிரிச்சு பேசுற.. நான் இப்படி மேக்கப் பண்ணிட்டு வந்தா.. இப்படி திட்டுற.. போ.. இனிமே நீ எனக்கு வேணாம் போ..” என்றவள் சற்று அவனது முகத்தையும் கண்களையும் பார்த்திருந்தால் புரிந்து போயிருக்கும், அவள் மீது அவன் மோகமும் காதலும் அளவற்றதென்பதை.. ஆனால், பேதையவளின் மனதிலோ, பொறாமை எனும் அரக்கன் இருந்ததினால், அவளால் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. செல்லும் அவளை பின்தொடர முடியாது, தடையாக வந்து நின்றான் நகுலன். “டேய்.. க்ளைண்ட் வெயிட்டிங் டா.. எவ்வளவு நேரம் நானும் சமாளிக்குறது?” என்றவன் ஹர்ஷவர்தனை தன்னோடு இழுத்துக் கொண்டு செல்ல, அழுதுகொண்டே வெளியே வந்தவளை பார்த்த ப்ரியா, அவள் பின்னோடு சென்றாள்.  கழிவறைக்குள் நுழைந்த விளானி, அங்கிருந்த டிஸ்யூ பேப்பரினால் முகத்தில் இருந்த மேக்கப்பை எடுத்துக் கொண்டிருக்க,

 

“உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாக முடியாது.. என்ன தான் என்னைய மாதிரி மேக்கப் போட்டாலும் நீ.. நானாக முடியாது.. ப்ச்.. பாவம் தான் நீ..” என்றவாறே வந்த ப்ரியாவை அழுத விழிகளோடு பார்த்தாள் விளானி. தன் கண்களை துடைத்துக் கொண்டவள், 

 

“நான் அவனால தான் அழுகுறேன்னு உனக்கு யார் சொன்னா? நான் ஒன்னும் அவனால அழுகல.. கண்ணுல தூசி விழுந்திடுச்சு.. அதைத் தான் துடைச்சேன்..” என்றவள் அங்கிருந்து நகர முயல, அவளது கையைப் பிடித்து தடுத்து நிறுத்திய ப்ரியா,

 

“எனக்கும் உன்னைய பார்த்தா பாவமா தான் இருக்கு.. உன்னைய தங்கச்சியா நினைச்சு சொல்றேன்.. நீ அவனோட டைப் இல்ல.. அவனுக்கும் உனக்கும் செட்டாகாது.. கூடவே இருந்து கஷ்டப்படுறதை விட, அவனை விட்டு விலகி போகலாமே.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.. நாளைக்கு அவன் எனக்கு ப்ரொபோஸ் பண்ணும் போது, இன்னமும் வலிக்கும்.. புரிஞ்சுக்கோ.. ப்ளீஸ்..” என்ற ப்ரியாவின் குரலில் பரிதவிப்பும் உண்மையான அக்கறையும் அப்பட்டமாய் தெரிய, ப்ரியாவின் தோளில் சாய்ந்து அழுகத் தொடங்கினாள் விளானி. விளானி இப்படி குலுங்கி அழுவாளென எதிர்பாராத ப்ரியாவின் கையோ எதிர்பாராத விதமாக அவளது முதுகில் தடவி ஆறுதல் படுத்தத் தொடங்கியது. ப்ரியா ஒன்றும் அவளது வாழ்க்கைக்கு வில்லியல்லவே.. தனக்கான உறவை தக்க வைத்துக் கொள்ள முயன்றாள் அவ்வளவே.. அவள் மீதிருந்த கோபம் குறைந்து, அவளிடமே ஆறுதலை நாடினாள் விளானி. தீர்க்கமாக ஒரு முடிவெடுத்த விளானி, நேராக தங்களது வீட்டிற்கு சென்றாள். வேக வேகமாக ஆடைகளை பெட்டிக்குள் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தவள், அழுதபடியே படியில் இறங்கி வர, அவளின் முன்னே பதறியாவாறு  வந்து நின்றான் ஹர்ஷவர்தன். 

 

“ஹனி.. சொன்னா கேளு.. வீட்டை விட்டு போகாதே.. நான் உன்னைய அந்த அர்த்தத்துல எதுவும் சொல்லல.. அங்க இருக்குற அத்தனை பேரும் பொறுக்கி பசங்க.. உன்னைய அப்படியே சாப்பிடுற மாதிரி பார்த்தாணுங்க.. அந்த பொறாமையில தான் உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டேன்.. சாரி டி செல்லம்.. சொல்லிக்கிட்டே இருக்கேன்.. நின்று ஒரு வார்த்தை கேட்க மாட்டியா? வீட்டை விட்டு போகாதேன்னு சொல்றேன்ல.. காதுல வாங்காம போற?” என்றவன் வாயிலுக்கு அருகில் சென்றவளின் பெட்டியை தன் கையில் பிடிங்கிக் கொள்ள, அழுது கொண்டே கண்ணை துடைத்தவள்,

 

“வெளியே போறது ஒன்னும் நானில்ல.. நீ தான்.. என்னைய பேசுன பேச்சு.. நீ தான் ஒரு வாரம் வீட்டை விட்டு போகணும்.. அது தான் உனக்கு பனிஷ்மெண்ட்..” என்றவள், அவனை வெளியே செல்லுமாறு வாயிலை நோக்கி கை நீட்ட, அதிர்ச்சியில் நின்றிருந்தான் ஹர்ஷவர்தன். 

 

“என்னது நான் வீட்டை விட்டு போகணுமா?” என்றவன் விழி விரித்து கேட்க,

 

“ஆமா.. இன்னும் ஒரு வாரத்துல என்னோட எக்ஸம்ஸ் முடிஞ்சுடும்.. அப்புறம் நான் ஊருக்கு போயிடுவேன்.. அப்போ நீ இங்க வந்தா போதும்.‌‌. அது வரைக்கும் உன் மூஞ்சியை எனக்கு காட்டாத.. போ..” என்றவள் அங்கிருந்து உள்ளே செல்ல முயல, அவளை தடுத்து நிறுத்தியவன், அவளது முகத்தை தன் கையில் ஏந்தியவாறே,

 

“என்னடியாச்சு? எதுக்கு அழுகுற? எதுக்கு இந்த மாதிரி நடந்துக்குற? உனக்கு என்னாச்சு?” என்று கேட்க,

 

“ம்ம்.. இப்படியே பேசி என்னைய கஷ்டப்படுத்துற.. உனக்கு அந்த ப்ரியா தான் வேணும்னா.. சொல்லிடு.. நான்.. நான்.. உனக்கு டிவொர்ஸ் கொடுத்துடுறேன்.‌ நீ உனக்கு பிடிச்ச பொண்ணுக்கூட சந்தோஷமா இருக்கலாம்..” என்றவள், தன் முகத்தை திருப்பிக் கொள்ள, அவளை சிரித்துக் கொண்டே பார்த்தவன், அவளது இடையில் கையிட்டு தன்னோடு இணைத்துக் கொண்டான். 

 

“மேடம்கு போசஸிவ் வந்துடுச்சு.. பொறாமை வந்துடுச்சு.. அதை எல்லாத்தையும் விட, உனக்கு என் மேல காதல் வந்துடுச்சு.. அதான் அதனை சொல்லத் தெரியாம, அழுது.. இந்த மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு வந்து நிற்குற..” என்று கூற, 

 

“என்னைய விடு.. எனக்கு உன் லவ் வந்துச்சோ. வரலையோ.. உனக்கு என் மேல லவ் வரலைல? என்னைய விடு.. போ.. போய் அந்த ப்ரியாவை கட்டிப் பிடிச்சுக்கோ.. உனக்கெல்லாம் நான் செட்டாக மாட்டேன்.. உனக்கு அவ தான் மேட்ச்..  எல்லாத்துலயும்..” என்றவள் அவனிடம் இருந்து விலக முயற்சிக்க, அவளை மேலும் இறுக்கி அணைத்தவன், அவளை தன் உயரத்திற்கு தூக்கினான். அவளது இதழில் இதழ் பதித்து, அழுத்தமாக முத்தமிட்டவன், 

 

“ஹனி.. பேபி.. இந்த மாதிரி அவக்கிட்ட எனக்கு தோணலைடி.. தோணவும் தோணாது.. உன்னைய பார்த்தா மட்டும் தான் இப்படி எல்லாம் நடந்துக்க தோணுது.. தோணும்.. ஏன்னா.. நான் லவ் பண்றது அவளை இல்ல.. உன்னைத் தான்.. உன்னை மட்டும் தான்..” என்றவன் அவளை தன் தோளில் அள்ளிக் கொண்டு தன்றையை நோக்கி நடக்க, செழித்த மரத்தின் மேல் படரும் கொடியை போல் அவளது தோளில் மாலையாக தொங்கியவாறு அவனோடு சென்றாள் விளானி. காதலில் வரும் மோதலும், அதன் பின் வரும் கூடலும் சுகமானதே.. ஹர்ஷவர்தனின் காதலை புரிந்து கொண்டாளா விளானி? 

 

3 thoughts on “என் மோகத் தீயே குளிராதே 28”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top