14
“இதுக்கு தான் அப்பவே படிச்சி படிச்சி சொன்னேன் கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ண வெளிய அனுப்பாதீங்கன்னு…அந்த தம்பி மட்டும் இல்லைனா இந்நேரம் என்ன ஆகி இருக்கும்…நினைச்சாலே ஈர கொலை நடங்குது… தன் பிள்ளைக்கு ஒன்று என்றால் பிள்ளை பூச்சிக்கூட கொடுக்கு முளைக்கும் அப்படி இருக்க இந்த வாயில்ல பூச்சுக்கு முலைக்காதா…??
புலம்பிக்கொண்டே இருந்தவர் பூஜை அறைக்குள் சென்று பூர்ணாவிற்கு திருநீறு எடுத்து வந்து அவளுக்கு பூசிவிட்டு அவளைத் தன் மடியோடு வைத்து பொத்தி கொண்டவர் கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது… துடிப்புடன் இருந்த பெண் இன்று இப்படி பயத்தில் வெடவெடக்கும் கோழி குஞ்சாகி போனாளே…!!
கோவிந்தனுக்கும் நடந்ததை கேட்டு திகில் எடுத்தது என்பது உண்மை… எல்லோரும் தங்களது பலவீனத்தைக் காட்டிவிட்டால் யார் தைரியம் சொல்வது என்று தனக்குள்ளே தன் பயத்தை பொதிந்து கொண்டவர்… மற்றவர்களை தேற்றினார்…
சுருண்டு படுத்திருக்கும் மகளின் தலையை வாஞ்சாயாக கோத எழுந்த கையை தானே கட்டி போட்டவர்… “இப்ப என்ன நடந்துச்சு போச்சு இப்படி ஒப்பாரி வைக்கிறிங்க அதான் எதுவும் நடக்கல இல்ல… விடுங்க இத்தோட எதோ கடவுள் புண்ணியம் கட்டிக்கிட்டார்… போங்க போய் தூங்குங்க எல்லாம் சரி ஆகிடும்… விடிஞ்சா நிச்சயதார்த்தம் வச்சிக்கிட்டு இப்படி உட்கார்ந்து இருந்தா யார் அந்த வேலையெல்லாம் பார்க்கிறது… என விரட்டி விட்டவர் தனியாக உட்கார்ந்து கண்ணீர் வடித்தார்…
எந்த சாமி புண்ணியமோ அவர் மகள் இன்று பிழைத்தாள்…நாளை என்ற கேள்வி தொக்கி நின்றது… வயது கோணறல் செய்த பாவங்கள் யாவும் வரிசை கட்டி நின்றது அவர் கண்முன்னே…இதுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என தீர்மானம் எடுத்து கொண்டவர் அதற்கான வேலையில் ஈடுபட்டார்…
நடந்த சம்பவம் அவர்களுக்குள்ளேயே ரகசியம் காப்புத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது…
கோவிந்தன் கேட்டுக்கொண்டபடியே பூர்ணாவின் நிச்சயதார்த்தம் ஒரு கோவிலில் நிகழ்த்தப்பட்டது…
நேற்றைய இரவின் அதிர்ச்சியில் இருந்து விலகாதவள்… அத்தனை நிகழ்ச்சியிலும் ஒரு பதுமையாகவே இயங்கினாள்…நில் என்ற இடத்தில் நின்றாள் உட்கார் என்ற இடத்தில் உட்கார்ந்தாள்…
உம் என்று இருந்தவளை பற்றி காரணம் கேட்க வெட்கம் என சொல்லி வைக்க…
நிச்சயம் என்றதும் பூர்ணாவுக்கு வெட்கம் எல்லாம் படுது டோய்.. ஹாஹா என உறவினர் கூட்டம் கலாய்த்து விட்டு நகர்ந்து கொண்டது…
பொண்ணையும் மாப்பிளையும் ஒரு முறை கோவிலை சுற்றி வர சொல்லுங்கோ என்க…
மனோஜூம் பூர்ணாவும் கிளம்ப அவர்களுடன் செல்ல இருந்த ஜெயந்தியை பிடித்து கொண்டார் காந்திமதி… நீங்க இருங்க தம்பி பார்த்துப்பான்…என தடுக்க…
உன் பையன் பார்த்த இலட்சணம் தான் தெரியுமே என மனதில் நினைத்து கொண்டார்… மனதில் நினைக்க தைரியம் வந்தாலும் வெளியே சொல்ல தான் தைரியம் பற்றாக் குறை…
கூட்டத்தை விட்டு தனியே வந்ததும் பூர்ணாவிடம் மன்னிப்பு கேட்டான் மனோஜ்… “சாரி பூர்ணா நேத்து உன்னை விட்டுட்டு போனது தப்பு தான்… ஆனா நீயே சொல்லு அத்தனை பேர் கூட நான் மட்டும் எப்படி தனியா சண்டை போட முடியும் அதான் ஹெல்ப்க்கு ஆள கூப்பிட போனேன் என்றதும் பூர்ணா அவனை பார்த்த பார்வையில் வாயை மூடி கொண்டான்… “கிடைச்சாங்களா…?? “ என தன் கூட்டை உடைத்து கொண்டு கேட்க…
பின்பு சமாளித்து கொண்டு “ஹிஹிஹி அது நைட் நேரம் பாரு அதான் யாரும் கிடைக்கல… அதை நீயே அவங்க கிட்ட இருந்து தப்பிச்சிட்டியே…வெரி ப்ரேவ் கேர்ள் நீ… அது மட்டும் இல்ல ஸ்மார்ட் கேர்ளும் கூட ஈஸியா தப்பிச்சிடுவே என்று எனக்கும் தெரியும்… அதான் நான் திரும்பி வரல… என்றவன் அதற்குள் முதல் சன்னதி வந்துவிட இருவரும் கைகூப்பி வணங்கினர்…
வணங்கி முடித்ததும் சுற்றைத் தொடர மீண்டும் மனோஜ் ஆரம்பித்தான்…
அப்புறம் நேத்து நடந்ததை நீ ஒன்னும் பெருசா எல்லாம் எடுத்துக்கமாட்டன்னு எனக்கு தெரியும் பூரி குட்டி… ஆனா இந்த அம்மா தான் எங்க நீ நடந்தது வீட்ல சொல்லி கல்யாணத்தை நிறுத்திடுவியோன்னு பயந்துட்டாங்க அதுனால தான் நம்மள தனியா விட்டாங்க என்னை உன்கிட்ட சாரி கேக்க சொன்னாங்க அப்போதான் உன்ன சமாதானப்படுத்த முடியுமாம்… அப்போதான யாருக்கும் தெரியாமல் இருக்கும் எப்படி எங்க அம்மா உன்னை விட செம ஸ்மார்ட்ல…!!”என கூறிவிட்டு இவன் இளிக்க…
கட்டுக்ள் அவிழ்ந்து கோவத்தின் உச்சிக்கே சென்றாள் பூர்ணா…அவன் முன்னே கூறியதை கேட்டு எதோ சூழ்நிலை என்று கூட விட்டு இருப்பாள் ஆனால் அவன் இறுதியாக சேர்த்து அந்த வார்த்தைகள் தான் அவளை ஒரு முட்டாள் கனவில் இருந்து விழிக்கச் செய்தது…
வருங்கால பொண்டாட்டியை விட்டுட்டு ஓடியது பெரும் சாதனை போல் கூறும் இவன் எல்லாம் என்ன மனுஷன் என பூர்ணா அருவெறுக்க பார்க்க…
அதைப் பற்றி எல்லாம் சிறு பிரகஞ்ஞை கூட இல்லாமல்…”பாரு உனக்கு ஒண்ணுமே ஆகல…எனக்கு தான் அவங்க அடிச்சதுல காயமா ஆயிடுச்சு… வலி தாங்காம ஓடி வந்துட்டேன் அம்மா கிட்ட சொன்னா அவங்க வேற கெடுத்துட்டியேடா பாவின்னு இன்னும் ரெண்டு சேர்த்து அடிச்சாங்க தெரியுமா… நல்ல வேளை நேத்து விட்டுட்டு போன கார் அப்படியே தான் இருந்தது நான் பயந்துட்டேன் தெரியுமா… காரை எதனா பண்ணிடுவாங்களோனு… காலைல அத முழசா பார்த்ததுக்கு அப்பறம் தான் எனக்கு உயிரே வந்துச்சு… இனிமே நைட் பார்ட்டிக்கு போக கூடாது ம்ஹும் போனாலும் சீக்கிரம் வந்துடுனும் இல்லனா அம்மா திட்டுவாங்க…!!”என அவன் மனதில் இருந்ததை குமுற… பூர்ணாவுக்கு தான் இவனை இங்கையே எங்கையாவது முட்டு சந்தில் வைத்து குமுறினால் என்ன என்று தோன்றியது …
அதற்குள் அடுத்த சன்னதி வந்துவிட… இருவரும் கண்களை மூடி மனமுருக வேண்டிக் கொண்டனர்…
முதலில் கண்விழித்த மனோஜ் அருகில் பிரசாதம் கொடுப்பது கண்டு… பூர்ணா பிரசாதம் கொடுக்குறாங்க வா போலாம்…என அவளை அழைத்து இவன் ஓடிவிட்டான்…
“ கடவுளே அப்படி என்ன நான் உன்கிட்ட பெருசா கேட்டுட்டேன்… எல்லா பொண்ணுங்களும் வேண்டுக்கிற மாதிரி எனக்கு மனசுக்கு பிடிச்ச ஒரு வாழ்க்கை துணையை தான கேட்டேன்…அதில் என்ன தப்பு ஆனால் ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒருத்தன அனுப்பி இருக்க… என் மேல கொஞ்சம் கருணை காட்ட கூடாதா கடவுளே என மனமுருகி வேண்டி கொண்டவள் மெல்ல மலர் விழி மலர்த்த… அது எதிரில் நின்றவனை கண்டு அலராக விரிந்தது…
காரணம் கடுவுள் சன்னதியில் வைத்து பூர்ணா பார்த்தது பட்டு வேட்டி சட்டையில் புது மாப்பிளையாக நின்ற அருணை தான்… கூடவே பின்னால் ஒலித்த மணி சத்ததும் கடவுள் அவளுக்கு என்று அனுப்பி வைத்து விட்டேன் என்று கூறியது போல் இருந்தது…
நமக்கென்று விதிக்க பட்ட ஒன்றை நாம் வேண்டாம் என மறுத்து ஒதுக்கினாலும், விலகி நின்றாலும்…உனக்கானது இதுதான் என எல்லா வழியிலும் நம்மிடம் உணர்த்தி கொண்டே தான் இருக்கும் அது தான் பிரபஞ்சத்தின் சக்தி… அதை சரியாக பற்றி புரிந்து கொள்பவர் மகிழ்ச்சியை அடைகிறார் மற்றவர் துன்பத்தை தேர்ந்தெடுக்கிறார்…