15
பூர்ணாவின் வாழ்விலும் அதுவே நடக்கிறது அவளுக்கான சரியான துணை அருண் தான் என இந்த பிரபஞ்சம் எல்லா வகையிலும் அவளுக்கு உணர்த்தி கொண்டே தான் வருகிறது…புரிந்து கொள்ளுமோ இந்த பேதை நெஞ்சம்…( டவுட் தான் )
விழி அகலாது அருணை பார்த்து நின்று இருக்க… அவள் முன்பு கையை சொடக்கிட்டு சுயஉணர்விற்கு அழைத்து வந்தான் அருண்…
“ஹே பூர்ணா என்னங்க சர்ப்ரைஸ் இது… தீடீர் என்று உங்களை இங்க எதிர்பார்க்கல…அதுவும் சாரீல என்ன ஸ்பெஷல்…???”என எதுவுமே தெரியாதவன் போல் கேட்க…
(அவளுமே உன்னை எதிர்பார்க்கலையே…அப்புறம் எப்படி பதில் சொல்லுவாள்)
அப்பொழுது தான் அவளுக்கு ஒன்று உரைத்தது அவ்வளவு நெருங்கி பழகிய பின்னும் அருணை அவள் கல்யாணத்துக்கு அழைக்கவில்லை என்பது…ஏன் இப்படி செஞ்சேன் ஏன் அருணை கூப்பிட மறந்தேன்… மறந்தாளா…??அவனையா இல்லை தினமும் கூறும் மந்திரம் போல் அருணை அவள் மனது ஜெபிக்க அவள் மறந்தாள் என்றால் சுத்த பொய்… மாறாக அவனை தவிர்க்க நினைத்தாள் என்பதே மெய்…பின் அவன் வந்தால் அவனோடு செல்ல துடிக்கும் மனதை எங்கன கட்டி போட…
எப்பொழுதும் எல்லாரிடமும் நிமிர்வாக இருக்கும் பூர்ணா தான் அருணிடம் மாட்டித் தலை குனிய வேண்டியுள்ளதை நினைத்து அவளுக்கே அவள் மீது கடுப்பாக தான் வந்தது…இருப்பினும் சமாளித்தாள்…(என்ன பங்கு… மாட்டிகிட்ட பங்கு )
அ.. அது இங்க தான் எனக்கு எங்கேஜ்மெண்ட் நடக்குத…நாளைக்கு மேரேஜ்…சிம்பிளா பண்றதால அதிகமா யாரையும் கூப்பிடல…அதான் உங்க கிட்ட சொல்ல முடியல என இதுக்கு மேல கேவலமா சமாளிக்க முடியாது என அவள் மனதே காரித்துப்பினாலும் முந்தானையில் துடைத்து கொண்டே சிரித்து வைத்தாள்…வேற வழி…
வாவ் அப்படியா காங்கிரட்ஸ் பூர்ணா…என ஆர்ப்பாட்டமாக வாழ்த்து தெரிவிக்க… இவளுக்கு தான் ஏமாற்றம்
“ எங்க உங்க வருங்கால கணவர்… வெரே ஐஸ் த லக்கி மேன்…உங்களை தனியா விட்டு எங்க போனாரு…?? “ எதார்த்தமாக கேட்டனா அல்லது அவளை வெறுப்பேற்றி பார்த்தானோ…ஆனால் பூர்ணா காண்டாகி போனாள் என்பது மட்டும் மெய்…
என்ன இவரு அவர் விரும்பின பொண்ணுக்கு வேற ஒருத்தன் கூட நிச்சயதார்த்தம் நடக்குது கூலா வாழ்த்து சொல்றார்…என உள்ளே சிறு தீ பொறி பற்ற கடுப்புடன் நிற்க… அதே நேரம்…
நான் தான் அந்த லக்கி மேன் என இரண்டு கையிலும் பிரசாதத்துடன் அவர்கள் அருகில் வந்தான் மனோஜ்…
“ஹாய் ஐ அம் மனோஜ்…ஆமாம் நீங்க…?? என கேள்வியாக பூர்ணாவை பார்க்க…
அவளோ அதற்கு மேல் இருந்த கடுப்பில்…”என் ஃப்ரெண்ட் பேர் அருண்…நேத்து நீங்க விட்டுட்டு ஓடினதுக்கு அப்புறம் இவர் தான் என்னை காப்பாற்றினார்…!!” மேலே என்ன சொல்லி இருப்பாளோ… அதற்கு இடையிட்ட மனோஜ்…
“ஹோ ஹீரோ நீங்கதானா அது உங்களை பற்றி மாமா சொன்னார்… நல்லவேளை நேற்று நீங்க வந்து பூர்ணாவை காப்பாற்றிட்டிங்க… எங்க எங்கேஜ்மென்ட் தானே வந்தீங்க வாங்க அப்படியே பேசிட்டே போலாம்…கூப்பிடு பூர்ணா என அருணுக்கு மறுக்கும் வாய்ப்பு அளிக்காமல் அவனையும் அழைத்து கொண்டு மூவரும் கோவிலை வளம் வர இறுதியாக இருந்த சன்னதியில் இருந்து வெளியே வந்த அர்ச்சகர்…
வாங்கோ வாங்கோ பொண்ணு மாப்பிளையும் இந்த மாலையை மாற்றிக்கிட்டு அம்பாளை நன்னா சேவிச்சுக்கோங்க…அடுத்து ஒரு வருஷத்தில குழந்தையோட இந்த கோவிலுக்கு வருவேல் பாருங்க என்று விட்டு மாலையை அருண் மற்றும் பூர்ணாவின் கையில் கொடுத்து விட்டு போனார்…
பின்னே மனோஜ் அடிக்கிற வெயிலில் கோர்ட் சூட் போட்டு கொண்டு இரண்டு கையிலும் வைத்து பிரசாதத்தை யார்க்கும் தர மாட்டேன் என பிடித்து இருக்க… அம்சமான தோரணையில் பட்டு சட்டை பளப்பளக்க கல்யாண மாப்பிளையாக அருண் நின்றாள் அதுவும் பூர்ணாவுக்கே அருகில் வடிவான ஜோடியாக இருவரும் நிற்கையில் அவரும் என்ன தான் செய்வார் பாவம்…
அதை கண்டு மந்தியாக முகம் கோணியது மனோஜிற்கு…யோவ் ஐயரே மாப்பிளை நான் இருக்கும் போது கண்டவன் கையில மாலைய கொடுத்துட்டு போற என்றவன்… அந்த அவசரத்திலும் சூடான பொங்கலை தொண்டைக்குள் போட்டு முழுங்கியவன் அருண் கையில் இருந்த மாலையை வெடுக்கென்று பிடிங்கி கொண்டான்…
மனோஜ் மாலையைப் போல் பூர்ணாவின் கழுத்தில் போட போன நேரம்…அவர்களை வீட்டு பெரியவர்கள் வந்து விட நல்ல நேரம் முடிய போகுது சீக்கிரம் வாங்க என அழைத்து செல்ல… அவர்களோடு இருந்த அருணையும் கோவிந்தன் முறையாக வரவேற்று அழைத்து சென்றார்…
இவர்கள் செல்லும் வழியில் சாமி பல்லாக்கு தூக்கி வர சிலர் நின்று வழிப்பட்டனர் சிலர் அதை கடந்து சென்றனர்…அதில் மனோஜ் மற்றும் பெரியவர்கள் கடந்து விட பூர்ணா நின்று தரிசித்து விட்டு திரும்பும் வேளை பல்லாக்கு தூக்கி வந்தவர் வாழைபழ தோளில் கால் வைத்து பூர்ணா மேல் விழ போக…
இவள் பயத்தில் மிரண்டு நிற்கும் நேரம் அவள் இடையில் கையை கொடுத்து இழுத்த அருண் தன்னோடு தூக்கிக் கொள்ள…அதில் பூர்ணா கையில் இருந்த மாலை அவர்கள் இருவரின் கழுத்திலும் சேர்ந்தார் போல் விழுந்தது…
அதை கவனித்த பூர்ணா அருணை விலக நினைக்க அதற்குள் சாமியை காண எங்கிருந்தோ வந்து குமிந்த கூட்டத்தில் இருவரும் சிக்கிக்கொள்ள… சிலர் சாமி மீது பூக்கள் எறிகிறேன் பேர்விழியில் இவர்கள் தலையில் போட்டு அடிக்க அவர்களிடம் இருந்து பாதுக்காக்க பூர்ணாவை தன் நெஞ்சோடு அணைத்து பதுக்கி கொண்டான் அருண்…
அவன் அணைப்பின் தாக்கம் பூர்ணாவின் உடலில் முந்தைய நாள் புரியாத உணர்விலும் நேற்றைய பயத்திலும் அவர்களின் அணைப்பு இருக்க இன்றோ அவன் தின்னென்ற மார்பில் அவள் தனக்கென ஓர் இடத்தை பிடித்தாள்… சுற்றி இருந்த உலகம் காணாமல் போனது… அவளது செவிகளுக்குள் அவனது இதயத்துடிப்பு மட்டுமே கேட்டது… மொழிகள் அற்ற பாசையை ஓசைகள் பேசியது…
இதழ்கள் செல்லாத காதலை அவன் இதயம் சொன்னதா…?? அவளுக்கே வெளிச்சம்…
ஏற்கனவே பெரும் குழப்பத்தில் இருந்தவளை அருணின் வருகை மேலும் கலங்கிய குட்டையாக மாற்றி இருந்தது…
அதன் பின்னான அத்தனை சடங்குகளையும் குழப்பமான மனதோடே எதிர்கொண்டாள் ஏற்கனவே சொல்லி வைத்த வெட்கம் என்கிற பொய் நன்றாகவே கை கொடுத்தது… மாலையும் கழுத்தமாக வரவேற்பில் மனோஜுடன் நின்றாள்… அருணும் அவர்களோடு சிரித்த ப்படி புகைப்படம் எடுக்க… காதில் புகை வராத குறைதான் யாருக்கா…??? பூர்ணாவுக்கு தான் அருண் இப்படி அவள் நிச்சயத்தில் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது போல் சுற்றியது அவளுக்கு உள்ளே கொளுந்து விட்டு எரிய போதுமானதாக இருந்தாது… இரவு வரை எல்லாம் நன்றாக தான் சென்றது…
இரவு அவள் கொண்ட அவதாரத்தை கலைக்கவென அவளை அனுப்பி வைத்தப்போது தனியே சென்றவள் பலதையும் யோசித்து படியே அமர்ந்திருந்த பூர்ணாவுக்கு எஞ்சியிருந்த குழப்பங்கள் யாவும் தீர… தீர்க்கமாக ஒரு முடிவை எடுத்தாள்…
விடிந்தால் திருமணம் இப்பொழுது வந்து இந்த திருமணம் வேண்டாம் என நிற்கும் மகளை விட்டார் ஓர் அறை ஜெயந்தி…
“என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல… முதல்ல வந்தவனை வேணாம் சொன்ன அப்புறம் நீங்களே ஒருத்தனை பாருங்க சொன்ன உன் பேச்சை கேட்டு எல்லாம் ஏற்பாடும் பண்ணி நாளைக்கு கல்யாணம் வந்து நிக்குது இப்போ வந்து கல்யாணம் வேண்டாம் சொல்ற…என்னடி பேசுற எங்க இருந்து வந்தது உனக்கு இந்த துணிச்சல்…உங்க அப்பாவை அசங்கிபடுத்தி உட்கார வைக்காமல் விட மாட்டியா…?? இனி உன் இஷ்டத்துக்கு எல்லாம் ஆட முடியாது…என்றவர் பூர்ணாவை மணமகள் அறையில் வைத்து பூட்டி விட்டு சென்று விட்டார்…
தற்போது வரை பூர்ணாவிற்கு இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பது மட்டுமே குறியாக இருந்தது…அதற்கு அவளிடம் வலுவான காரணமும் இருந்தது…அதை புரிந்து கொள்ளாமல் அடைத்து விட்டு செல்லும் தாயை நினைத்து நொந்து கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்…
காலையில் மணமகளுக்கு கூரப்புடவை கொடுக்க அறையை திறந்தவர் அதிர்ந்தே போனார்… வேற என்ன ரௌடி பேபி ஜுட் விட்டு இருந்தாள் அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் கம்பி நீட்டி விட்டாள்…