17
மனோஜ் மீதிருந்த அதிருப்தியானது அருணின் வாருகையினால் மேலும் பூர்ணாவிற்கு அதிகரித்தது என்பது உண்மையே…
அருணையும் மனோஜையும் ஒப்பிட்டு பார்த்து அவள் மனம் வேதனையில் வெந்ததும் உண்மையே
அருணின் மீதுல்ல நேசம் அவளை கலங்கிய குட்டையாக்கியது என்பது மெய்யே…ஆனால் இவற்றால் அவள் திருமணத்தை நிறுத்தி விட எண்ணினால் என்றால் இல்லை… பூர்ணா பொதுவாகவே துணிச்சல் குணம் உள்ளப் பெண்…எதையும் எதிர்கொள்ளும் திறன் உள்ளவள் தான்…மனோஜ் மற்றும் அவன் தாயுடானான எதிர்காலத்தை பற்றி அவளுக்கு கவலையில்லை ஆனால் ஏமாற்றம் உண்டு… அதற்காக யார் என்ன செய்தாலும் பொருத்து போகும் ராகமும் அவள் அல்ல… பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் என்னும் ரகம்…அந்த விதத்தில் பின்னால் பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து இருக்க…
விடுமோ விதி…?? அதனை நோக்கி அவளை விரட்டியது… மன சஞ்சலத்தை போக்க வென்றே தனியாக போனவள் காதுகளில் அந்த குரல்கள் தானே வந்து விழுந்தது…
என்ன சமந்தியம்மா இப்போ வந்து இப்படி சொல்றிங்க…என ஜெயந்தி அதிர்ந்த குரலில் கேட்க…
பின்ன எப்போ சொல்ல சொல்றிங்க…இங்க என்ன எல்லாம் எங்க கிட்ட சொல்லிட்டா நடக்குது… நேத்து வரைக்கும் ஊதாரிய திரிஞ்சிட்டு கிடந்தவன் இன்னைக்கு ஒரு பொண்ணோட சுத்தினா எங்க சொந்தக் காரங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லி மாளல… உங்க பொண்ணு கல்யாணம் நல்லப்படியா நடக்கணும்னா அவனையும் அவன் இழுத்துட்டு வந்ததையும் வெளியே போக சொல்லுங்க…
அப்புறம் நம்ம தம்பி அதான் உங்க மாப்பிளை கூடிய சீக்கிரம் வெளிநாடு போக போறான்ல அதுல ஏதோ உசாவோ விசாவோ அது இருந்தா தான் அமெரிக்கா போக முடியுமாமே… அதுக்கு ஏதோ காசு 20 லட்சம் தேவைப்படுதான் அன்பில் லோன் வாங்குகிறேன் என்று தான் சொல்லுச்சு நான்தான் நம்ம சம்பந்தி இருக்கும்போது வெளியில கடன் வாங்கணும் கௌரவதை இல்லை சொல்லிட்டேன்… என்ன தம்பி விசா வாங்க காசு ஏற்பாடு பண்ணிடுவீங்க இல்ல…நான் ஒன்னு எனக்காக கேக்கலப்பா நாளைக்கு தம்பி வேலைக்கு நாட்டுக்கு போனா கூடவே சேர்ந்து உங்க பொண்ணு போக போறாள் அவளுக்காக தான் நான் கேட்கிறேன்…
ஆ சொல்ல மறந்துட்டேன் தம்பிக்கு அப்படியே கார் வாங்கி கொடுத்துடுங்க… என்ன அப்படி அதிசயமா பாக்குறீங்க ஊர்ல இல்லாத அதான் கேட்டுட்டேன்…
இல்லாம ஏற்கனவே மாப்பிளை கிட்ட ஒரு கார் இருக்கே யோசிச்சேன் வேற ஒன்னும் இல்லை…
அதை ஏன் கேக்குறீங்க…எல்லாம் உங்க பொண்ண கூட்டிட்டு போன ராசி என் மகன் உயிர் பொழச்சி வந்ததே பெருசு…இதுல எங்க இருந்து காரை பார்க்க…பாவம் பிள்ளை எப்படி பயந்துட்டான் தெரியுமா…உங்க குடும்பத்துக்கு வேணுனா அடித்தடி வெட்டு குத்து எல்லாம் பழக்கமா இருக்காலாம் நாங்க அப்படி இல்ல… ரொம்ப மரியாதையான குடும்பம்… எங்களுக்கு ஒரு கௌரவம் இருக்கு அது தெரிஞ்ச மாதிரி தானே உங்க பொண்ணு எங்க பையனுக்கு பேசி முடிச்சீங்க…ஹும் எத்தனையோ பெரிய இடத்து பொண்ணுங்க வந்துச்சு அதெல்லாம் விட்டுட்டு உங்க பொண்ண நாங்க எடுக்குறதுக்கே நீங்க எங்களுக்கு ஆயுசு முழுக்க கடமைப்பட்டிருக்கணும்…ம்ம் இப்போ எதுக்கு அது நமக்கு… தம்பிக்கு மட்டுமா காரு கேக்குறேன் அதுல உங்க பொண்ணு தானே போக போறாள்… அதனால கணக்கு பார்க்காமாட்டிங்க தெரியும் இருந்தாலும் சொல்றேன்… என கணக்காக பேசிய கறக்கும் வித்தகி தான் என நிரூபித்தார் காந்திமதி…
கேட்டதெல்லாம் எப்போ தருவீங்க … கடன் கொடுத்த பேர் வழியாக கரராக கேட்க…
ஏற்கனவே நிச்சயதார்த்தம் வரவேற்பு திருமணம் என்ற பேர் வழியில் சம்பந்தி விட்டார் ஏகப்பட்ட ஆடம்பர செலவை இழுத்து விட்டு இருக்க இது போதாது என்று மகளுக்கு என்று சீர் வரிசை வேறு பெரியதாக கொடுத்து இருக்க… மேலும் மேலும் கொடுக்கும் அக்ஷய பாத்திரம் அவர்…?? இருப்பினும் இந்த திருமணத்தை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்று முடிவெடுத்தவர்…
இப்போ உடனே என்னால முடியாது சம்பந்தி இந்த கல்யாணம் முடியட்டும் பொண்ணு மாறி வீட்டுக்கு வரும்போது கண்டிப்பா காரோட அனுப்புறேன்… வெளிநாடு போக மாப்பிள்ளைக்கு தேவையான எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன்… அதுக்கு எனக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்க… என முதல் முறையாக யவருக்கும் அடிபணியாத தன் கணவன் பணிந்து நிற்பதை கண்டு மனம் கலங்கினார் ஜெயந்தி…
அதுக்கு என்ன சம்பந்தம்… உங்க மேல இல்லாத நம்பிக்கையா நீங்க செஞ்சிடுவீங்கன்னு எனக்கு தெரியும்…இருந்தாலும் சொல்லி வச்சேன் அவ்ளோ தான்… சரி சரி இதுக்கு மேல நின்னு வெட்டியா பேசி எனக்கு நேரமில்லை நாளைக்கு பையனுக்கு கல்யாணம் தலைக்கு மேல வேலை இருக்கு நான் கிளம்புற சம்பந்தி… அப்புறம் மறக்காம நான் சொன்ன மாதிரி உங்க பையன் இந்த கல்யாணத்துல கலந்துக்காம பாத்துக்கோங்க…சரி சம்மந்தி வரேன் என பல்லை இளித்து கொண்டு சென்ற காந்தி மதியை கண்ட ஜெயந்திக்கு உள்ளூர கருகியது…
தினேஷ்,அவர் பெற்ற பிள்ளை இல்லை தான்… அவருக்கு ஆரம்பத்தில் இருந்து அவனை பிடிக்காது தான்… ஆனால் எவ்வளவு ஒதுக்கினாலும் சின்னம்மா சின்னம்மா என்று காலையில் சுற்றி வரும் பிள்ளையை… வெளியாள் வந்து வெளியே போக சொன்னால் அவரால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்… இத்தோடு பூர்ணாவை வேறு ராசி இல்லாதவர் என்று சொல்லிவிட்டார்… இவரின் மகனின் கோழைத்தனத்தால் அல்லவா நேற்று அவரது மகளுடைய வாழ்வே கேள்வி குறியாகி இருக்கும்… தலைமை பேராசை கொண்ட மனிதருடன் தன் மகளின் வாழ்வு எப்படி இருக்கும்… என்று அஞ்சியவர் அதை கணவனிடம் மறையாமல் கூறி விட…
நீ கண்டதையும் போட்டு மனச குழப்பி புள்ள மனசையும் கெடுத்து வைக்காத… என்ன நான் இருக்கேன் பார்த்துப்பேன்… அப்புறம் தினேஷ் நாளைக்கு கப்பல்ல லோடு வருதுன்னு அனுப்பி வைக்கிறேன்… நீ தான் அவன்கிட்ட சொல்லிக்காதே மவன் மனசு கஷ்டப்படும்… அப்புறம் அந்த புதுப்பிள்ளையை நீ உன் கூடவே வச்சுக்கோ வெளியில தல கட்டுனா அதுக்கும் சங்கடம் தான்…அவசரத்தில் நடந்த கல்யாணம் ஆயிரம் கேள்வி வரும் அதுக்கும் ஆசா பாசம் இருந்து ஏங்கும் இல்ல… பின்னாடி ஒருநாள் வரவேற்பு மாதிரி வச்சு எல்லாருக்கும் சொல்லிக்குவோம்… அதுவரை யாருக்கும் தெரிய வேணாம்…அதுக்கு தான் சொல்றேன் என்ன புரியுதா…??? என கோவிந்தன் ஜெயந்தியை தேற்றி அனுப்பி வைக்க….
இவை அனைத்தையும் இவருக்கு அந்த பக்கம் இருந்து கேட்டுக் கொண்டிருந்த பூர்ணா எடுத்த திடமான முடிவு பற்றி தான் நமக்கே தெரியுமே…
நடந்தவை அனைத்தையும் கூறி முடித்து விட்டு அருணின் முகத்தை பார்க்க…
அவன் முகத்தில் எந்தவித பிரதிபருக்கும் இல்லை…
ப்பா பக்கா கேடிடா சாமி…விட்டா உங்க அப்பன் கோமணத்தையும் உருவி உற்றுக்கும் போலையே அந்த பொம்பளை…என விவேக் நடந்தவை கேட்டு வாயை பிளக்க…
நீ கவலைப்படாதம்மா உன்ன அந்த கொடுமைக்காரி மூக்கை அறுக்கவே நாளைக்கு உனக்கும் அருணுக்கும் என் தலைவன் என்னை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்…என விவேக் விரமாக பேசி அருணின் வாங்கி கட்டி கொண்டான்…
ஏன் இப்போ அவரை திட்டுற… நீதானே நான் விரும்புறேன்னு சொன்ன… இப்போ ஏன் என்னை கட்டிக்க தயங்குற… ஒருவேளை உன் கோரிக்கையை நிராகரிச்சிட்டேன் நீ இப்போ என்னை பழிவாங்க நினைக்கிறாயா…???”
“ப்ச் என்ன பூர்ணா நீ புரியாம பேசுற… இவ்வளவு தூரம் வந்துட்டு நாளைக்கு கல்யாணம் நடக்கவில்லை என்றால் என்ன ஆகும் உங்க அப்பாவை பற்றி யோசிச்சு பார்த்தியா…என்றவனுக்கு தெளிவாக புரிந்தது ஒன்று தான் அது பூர்ணா அந்த பேராசைக்கார பெண்மணியின் பேச்சை கேட்டு பயந்து
ஓடி வந்து இருக்கிறாள்… அவன் மீதான காதல் பீறிட்டு ஒன்றும் இல்லை என்பது மட்டும் உறுதி…
நீ ஏதோ கேட்டு தப்பா புரிஞ்சிக்கிட்ட… வா நாம போய் பேசி தீர்த்துக்கலாம் உன் சந்தேகம் உறுதியானாள்… அப்போ அந்த கல்யாணத்தை நிறுத்த வேற ஏற்பாடு பண்ணலாம்… ஆனால் நீ இப்போ எடுத்து முடிவு அவசரத்துல எடுத்தது… அது நடைமுறைக்கு ஒத்து வராது…வா போகலாம்…என அவளை அழைக்க…
இவனை நம்பி இந்த அர்த்த ராத்திரியில் அவள் அவ்வளவு பெரிய முடிவு எடுத்து வந்திருக்க இவன் என்னவென்றால் இவள் தலையில் இடியை போட செய்கை அறியாத தவித்து போனாள் பேதை…
“டேய் என்னடா இப்படி பண்ற… சன்னியாசியாடா நீ நடுராத்திரில ஒரு பொண்ணு உன்னை தான் கல்யாணம் பண்ணிக்குவேன் சொல்லுது அந்த பொண்ண கொண்டு போய் அவங்க அப்பா அம்மா கிட்ட விடுறேன்னு சொல்ற… உனக்கு தலையில அடிபட்டுருச்சாடா இல்லை இந்த கே டிவி ல எதுவும் பழைய காதல் படம் பார்த்து தொலைச்சிட்டியா…மச்சான் சொல்ற இவனுக்கு !!” என விவேக் அருணை திட்டி சிவாவை துணைக்கு அழைக்க அவனோ போன ரவுண்டிலே மட்டையாகி மல்லாக்க படுத்து விட்டான்…
இவன் ஒரு ****… என திட்டி விட்டு…
மச்சான் சொன்னா கேளுடா என மீண்டும் அருணிடமே ஆரம்பிக்க…
போதும் நீ மூடு விஷயம் புரியாம பேசாத… நான் முடிவு பண்ணிட்டேன் பூர்ணமா கொண்டு போய் மண்டபத்துல விட்டுட்டு வரேன் நீ சிவா கொண்டு போய் அவங்க வீட்ல விட்டுரு அம்மாவை கதவை பூட்டிக்க சொல்லு என்று விட்டு திரும்ப அங்கு பூர்ணா இல்லை…
அருணின் முடிவை கேட்டு விரக்தியில் ஓடி சென்று விட்டாள்… ஐயையோ மீண்டும் மீண்டுமா…??
Very interesting information!Perfect just what I was looking for! “Some people don’t get it when I’m being sarcastic.” by Leonardo DiCaprio.
rlzDPhtXuBCLTN
You made some nice points there. I did a search on the topic and found most persons will agree with your website.