ATM Tamil Romantic Novels

ரௌடி பேபி -18

18

 

இந்த இரவு இன்னும் நீண்டு இருந்தால் இன்னும் என்ன ஆகி இருக்குமோ… இதற்கு மேல் தாங்காது என பூமி பந்தும் சுழன்று சூர்யனை வருந்தி அழைத்ததோ….

 

 இருளை விரட்டி விட்டு வெளிர் நில நிறத்தில் இருந்த வானில் வெண் சித்திர மேகங்கள் நடுவே உதித்தான் ஆதவன்…

 

 பாரபட்சம் இன்றி அனைத்து உயிர்களுக்காகவும் அவன் உதித்தான் என்றாலும்… விடியல் அனைவருக்கும் உண்டா என்றால் இல்லை…

 

இதோ மங்களமாக அலங்கரிக்க பட்ட மண்டபத்தில் ஆனந்தமாக அரங்கேறி இருக்க வேண்டிய சுப நிகழ்ச்சி தடை பட்டு அங்கிருந்தோர் வாழ்க்கையில் இருளை பரிசளித்து சென்று விட்டாளே அவள்… அலங்கோலமாக கலைந்து கிடந்த தோரணங்கள் நடுவே தலை கவிழ்ந்தபடி அமர்ந்து விட்டார் கோவிந்தன்…

 

அவரை தலையே நிமிர விட கூடாது என்று தான் கங்கனம் காந்திமதி சூடு சொற்களால் சாடி கொண்டு இருந்தாரே…

 

 

என்னையா தலை குனிஞ்சு உட்கார்ந்துட்ட உன் ஓடுகாலி பொண்ணால என் பையன் வாழ்க்கையே அழிச்சிட்டியே… யோவ் பெரிய மனுஷா சொல்லுயா எங்கையா உன் பொண்ணு…இத்தனை பேர் மத்தியில என் பையனை அசிங்க படுத்திட்டு ஓடி போனவள் நல்லாவே இருக்க மாட்டாள் நாசமத்து போய்டுவா… என்னங்கயா எல்லாம் வேடிக்கை பார்த்துகிட்டு நிக்குறிங்க…நாக்க புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேளுங்கயா… இந்தா உட்கார்ந்து இருக்காரே மவள பெத்த மகராசன் தாலி கட்டுற நேரத்துல ஓடி போயிட்டாளாம் அவள் …அவளா ஓடி போனாளா இவரே அனுப்பிவிட்டாரா…எனக்கு இன்னைக்கு ஒன்னு ரெண்டு தெரிஞ்சே ஆகணும்… நேத்து மேடை வரை வந்து மினிக்கி கிட்டு நின்னு இருந்தவள் இன்னைக்கு திடீர்னு ஓடி போய்ட்டானா என்னைய கதை விடுறிங்க… உங்களை எல்லாம் நான் சும்மா விட மாட்டேன் எங்கள அசிங்க படுத்தின மாதிரி உங்க குடும்பது மேல கேஸ் போட்டு நடு தெருவுல நிறுத்தாம விடமாட்டேன்…என ஆங்காரம் கொண்டு ஆடியவரை அடக்க அங்கு எவரும் இல்லை…

 

பூர்ணா காணவில்லை என்று ஜெயந்தி கதறிய படி வந்து கூறியதும் முதலில் திகைத்து போனவர்…பின் யாருக்கும் தெரியாமல் காதும் காதும் வைத்த மாதிரி அவளை தேட ஆட்களை அனுப்பி வைத்தார்…துணைக்கு தினேஷையும் அனுப்பி வைத்தார் யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்ள நினைத்தார்…

 

ஆனால் விடிந்து முஹூர்த்த நேரம் தாண்டியும் மணமகள் வரவில்லை என்றால் தெரியாமல் போகுமா…தெரிந்து விட்டது என்பதை விட வானம் அதிரும் வண்ணம் தாம் தூம் என காந்திமதி குதித்து அன்றைய தலைநகர் முழுக்க தலைப்பு செய்தியாக பரப்பி விட்டு இருந்தார்…

 

அத்தோடாவது அவருக்கு ஆதங்கம் அடங்கியதா இல்லை…பூர்ணா குடும்பத்தில் உள்ள கடைசி தளிர் பிஞ்சு வரை சபித்து தள்ளினார்… கோவிந்தன் தான் திட்டமிட்டு பெண்ணை அனுப்பி வைத்ததாக அபண்டாமாக பேசினார்…அவர் பேசியதற்கு எல்லாம் அவர் மகன் மனோஜ் ஜால்ரா வாசித்தான்…ஜிங் ஜக் 

 

காந்திமதி அவரை பேசியது எல்லாம் அவர் மனதில் பதியவே இல்லை…நேற்று அவர்கள் சம்பாஷனைகளை எல்லாம் மகள் கேட்டு இருப்பாளோ…அதனால் இந்த திருமணம் வேண்டாம் என்று எங்கையாவது சென்று இருப்பாளோ… போனா மகளின் நிலையை குறித்தே அவர் மனம் உழன்று கொண்டு இருந்தது… மகள் எங்கேயாவது பத்திரமாக இருக்க வேண்டுமே என்கிற செய்தி கேட்டாலே போதும் என்கிற பயமே அவர் தலை குனிந்து அமர்ந்து இருக்க காரணம்…

 

குட்ட குட்ட குனிவதால் அவர் கோழை என்று எண்ணி விட்டார்கள் போலும்…பார்வையாளே பத்து பேரை பந்தாடும் பலம் கொண்டவர்க்கு காந்திமதி குடும்பம் கொசு அளவிற்கு கூட இணை இல்லை…அவர் ம்ம்ம் என்று சொன்னால் அவர்களை கூட்டத்தோடு தூக்கி வீசி விட விசுவாசகிள் துடித்த படி நிற்க… பெற்றவருக்கோ பெண்ணின் நிலை தெரியாமல் முற்றிலும் உடைந்து விட்டார்…காலம் பெண்களுக்கு எதிராக அல்லவா இருக்கிறது…பெண்கள் எத்தனை படித்து உயரங்களை அடைந்தாலும்… அவர்களுக்கான பாதுகாப்பு என்பது இன்னும் கேள்வி குறியாக தான் இருக்கிறது… அப்படி இருக்க அர்த்தராத்திரியில் சென்ற பெண்ணின் பாதுகாப்பை பற்றி தந்தையாக அவர் கவலை கொள்வது நியாயம்தான்…

 

 

நைனா நைனா பூர்ணா… என தினேஷ் பதட்டத்துடன் கத்தி கொண்டு கோவிந்தன் அருகே… ஒரு நிமிடம் சகலமும் கலங்கி போனது என் பொண்ணுக்கு ஒன்னும் ஆகி இருக்க கூடாது இருக்கவே கூடாது கடவுளே கடவுளே…. என அவரது நெஞ்சம் துடித்த துடிப்பு பெற்றவர்களால் மட்டுமே உணர கூடிய நரக வேதனை அது …

 

காச் மூச் என கத்தி கொண்டு இருந்த காந்திமதியை கண்டு கொள்ளாமல்…”நைனா அங்க வெளிய பூர்ணா வந்து இருக்கு சீக்கிரம் வெளிய வா நைனா… வந்து பார்…!!” என தினேஷ் அவசரமாக அழைக்க…

 

வந்து இருக்காள் என்று சொல்றான் அப்போ என் பொண்ணுக்கு ஒன்னும் ஆகலை பாதுகாப்பா இருக்க நன்றி கடவுளே என அதுவரை இருந்த பாரம் எல்லாம் இறங்கி உடல் முழுவதும் ரத்த ஓட்டம் போல் நிம்மதி பரவியது…என அவர் நிதானத்துக்கு வருவதற்குள்…

 

தினேஷ் கூறியதை கேட்டு மற்றவர்கள் அனைவரும் வெளியே சென்று பார்க்க… பின் தங்கி வந்த கோவிந்தன் கூட்டமாக நின்று முனுமுனுத்தவர்களை தாண்டி முன்னே சென்று பார்க்க அங்கு மாலையும் கழுத்துமாக தம்பதி சமேதமாக அருண் மற்றும் பூர்ணா நின்று கொண்டு இருந்தனர்…

 

அவர்களை கண்டதும் கோவிந்தனுக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை…

 

பின்னே இதை தான் அவரும் முதலில் ஆவலாக எதிர் பார்த்தார்…முதலில் அவன் மறுத்து பிறகு இவள் மறுத்து பிறகு வேறு ஒருவனை பார்த்து திருமண என்றான பின்பு மீண்டும் முதலாம் அவனையே கட்டி கொண்டு வந்து நிற்கும் மகளை என்ன தான் சொல்வது என்று சத்தியமாக கோவிந்தனுக்கு புரியவில்லை…

 

அடிப்பாவி **** இப்படி நம்ப வச்சு எங்க கழுத்தை அறுத்துட்டியே நீயெல்லாம் உறுப்புடுவியா…எங்க எண்ணத்துல மண்ணை அள்ளி போட்டுட்டியே நீ நல்லா இருப்பியா என காந்திமதி பெரிய சம்பந்தம் கைவிட்டுப் போனதில் பூர்ணாவை சபிக்க…

 

 

இந்தாமா என்ன விட்டா உன் பாட்டு கத்துக்கிட்டு இருக்க… நான் யாருன்னு தெரியும்ல…ஹார்பர் கோவிந்தன் இப்போ கொஞ்ச நாளா தான் இப்படி இதுக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன் தெரியும்ல…என்னை பழையபடி மாத்திராத… தாங்க மாட்டீங்க இன்னும் அஞ்சு நிமிஷத்துல உன் கூட்டத்தை கூட்டிட்டு ஒழுங்கா மரியாதையா இடத்தை காலி பண்ணு இல்லை இங்க நடக்கிறதே வேற என அவர் போட்ட சத்தத்தில் சர்வமும் ஒடுங்கி துண்டை துணிய காணோம் என்று மண்டபத்தை விட்டு ஓடி விட்டனர்…

 

 மகள் சபிக்க படுவதை தாங்கி கொள்ள முடியவில்லை பெற்ற தந்தையின் பாச நெஞ்சத்தால்…

 

  ஒட்டுண்ணிகளை ஒரேடியாக விரட்டிவிட்டு மகளிடம் வந்தவர்…

 

 “உன்னை பெத்து இத்தனை வருஷமா வளர்த்ததுக்கு… இப்படி நாலு பேரு முன்னாடி தலைகுனிய வச்சுட்டியே… அசிங்கப்படுத்திட்டு ஓடிப்போனவள் இப்ப மட்டும் எதுக்கு திரும்பி வந்த… இந்த அப்பன் அவமானத்துல செத்துட்டானா இல்ல இன்னும் உயிரோட இருக்கானானு பார்க்க வந்தியா…

 எல்லாம் ஏற்படும் உன்னோட விருப்பப்படிதானே நடந்தது… அதில் நாங்க ஏதாவது குறை வச்சோமா… இல்ல குற்றம் செய்தோமோ… எதுக்கு இப்படி எங்க மூஞ்சில கரியை பூசிட்டு போன… உன்னால கண்ட கண்டவன் கிட்ட எல்லாம் அவமானம் பட்டு நிக்குறதே போதும்…போதும் தாயே… இதுவரைக்கும் நீ செஞ்சதே போதும்… இனி நீ எனக்கு மகளும் இல்ல நான் உனக்கு அப்பனும் இல்ல இனி நீ என் வீட்டு வாசப்படி மிதிக்காத…நானும் உன்னை தேடி வரமாட்டேன்… என மகள் செய்த துரோகத்தை தாங்க முடியாமல் கோபத்தில் குதித்தவர்…

 

ஜெயா… உனக்கு பெத்த பாசம் தான் முக்கியம்னா இப்பவே இப்படியே போயிடு… இல்லை கட்டின புருஷன் முக்கியமா என் கூடவா முடிவு உன் கையில என்றவர் முன்னே சென்று காரில் அமர்ந்து விட…

 

ஜெயந்தி மகளை பார்த்து அழுது கொண்டு பாவி மகளே இப்படி பண்ணிட்டியே…நல்லா இரு போ… பார்த்துக் கோங்க மாப்பிளை…என தாய் பாசத்தையும் கொட்டி விட்டு மனைவியின் கடமையாக கணவனோடு சென்றார்…

 

 தந்தையோடு செல்லும் தாயைப் பார்த்தபடி நின்ற பூர்ணா அருகே வந்த தினேஷ்…

 

 “நான் அப்பவே நெனச்ச உங்க ரெண்டு பேருக்கு தான் ஜோடி பொருத்தம் அருமையா இருக்குதுன்னு… சும்மா சொல்ல கூடாது மாப்பிளை உங்களுக்கு அந்த காக்கி சட்டை விட இந்த வேஷ்டி சட்டை டக்கரா இருக்கு…என தினேஷ் அவர்கள் இணைந்ததில் உன் தன் மகிழ்ச்சியை தெரிவிக்க…

 

 அதற்குள் காரைக்குள் இருந்த கோவிந்தன் ஹார்னை விடாமல் அடிக்க… புரிந்து கொண்ட மகன்…

 

 பூர்ணா நீ ஒன்னும் கவலை படாத நம்ம நைனாவை பற்றி உனக்கே தெரியும்… அவருக்கு கோவம் ரொம்ப நாளைக்கு நீடிக்காது… நான் அப்புறமா வரேன்… வரேன் மாப்பிள பொண்ண நல்லா பாத்துக்கோங்க…உங்க ஜோடி சூப்பர்… எனக்கு கட்டிக் கொண்டே சென்று காரில் ஏறியவன்…அவன் மனைவியும் அவர்களோடு ஏறி கொண்டதை உறுதி படுத்தி கொண்டு காரை எடுத்தான்…

 

 பெற்றவர்கள் திட்டி விட்டு செல்ல… அவர்களையே அமைதியாக பார்த்து நின்றவளின் தோளில் அருணின் கைகள் அழுத்தமாக விழ… வரவழைக்க பட்ட புன்னகையுடன் போலாம்… என்று அவர்கள் வந்த ஆட்டோவில் ஏறியவள்… அவன் தோளில் ஆதரவாக சாய்ந்து கொள்ள அவளை தோளோடு அணைத்து கொண்டான் அவள் காவல் கேள்வன்…

 

பிடித்தவனை பிடிவாதம்

பற்றி கொண்டாள்…

இனி கொண்டவனே அவள்

பிடிமனமாக கொண்டு பயணிப்பாள்…

 

ரௌடி பேபி லவ் மூட் ஸ்டார்ட் ஆகிடுச்சு 

 

 

 

10 thoughts on “ரௌடி பேபி -18”

  1. купить диплом о высшем образовании оригинальный [url=https://diplomdarom.ru/]купить диплом о высшем образовании оригинальный[/url] .

  2. капельница при алкогольной интоксикации на дому цена [url=https://www.kapelnica-ot-zapoya-podolsk13.ru]капельница при алкогольной интоксикации на дому цена[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top