அத்தியாயம் 29
“விடு டா.. என்னைய இறக்கி விடு.. சொல்ல.. சொல்ல கேட்கமாட்டேங்குற..” என்றவள் அவனிடம் இருந்து திமிற, அவளை பொத்தென மெத்தையில் தூக்கி வீசியவன், அவள் மீதே விழுந்தான்.
“ஆஆஆ.. ஆவுச்.. போடா.. எருமை.. எருமை.. அம்மாஆஆஆ.. வலிக்குதுடா.. இப்படியா மேல விழுவ?”
“அப்படியே வாட்டர் மெட் மாதிரியே இருக்கடி.. பொசு பொசுன்னு.. பஞ்சு மெத்தை தான்டி நீ..”
“ப்ச்.. பேச்சை மாத்தாத.. நீ என்னைய லவ் பண்றேன்னு சொன்னேன்ல?”
“ஆமா.. அதுக்கென்ன இப்போ?” என்றவன் அவளது காது வளைவில் முத்தத்தால் கவி எழுத, அதில் சொக்கி கண் மூடியவாறே,
“அப்போ.. அதை ப்ரூஃப் பண்ணு..” என்றவளின் இடையோடு கையிட்டு தன்னோடு வளைத்து அணைத்தவன்,
“ப்ரூஃப் பண்ணிட்டு தானே இருக்கேன்..” என்றவாறே அவளது காதினில் இருந்து இறங்கி, அவளது உதடுகளை கவ்வி சுவைக்க, அவனது கழுத்தில் கையை மாலையாக கோர்த்தவள், பின்னந்தலைமுடியிற்குள் கைகளை நுழைத்து, அதனோடு பிஞ்சு விரல்களைக் கொண்டு விளையாட, அவனோடு இசைந்து கொண்டிருந்தவள், சட்டென ஏதோ ஞாபகம் வர, அவனை வலுக்கட்டாயமாக தன்னிடம் இருந்து விலக்கியவள்,
“இன்னைக்கு காலைல அவளை எப்படி கட்டிப்புச்ச? போடா.. அவக்கிட்டேயே போ.. உன் ப்ரெண்ட் அந்த நெட்டக் கொக்கு என்னன்னா.. நீ தான் உலகத்துலேயே பெரிய அறிவாளி.. ஆணழகன்.. அந்த ப்ரியா தான்.. உனக்கு ஏத்தவன்னு.. கல்யாண ப்ரோக்கர் வேலை பண்ணுறான்.. நீயும் கொஞ்சம் கூட வெட்கமில்லாம.. அவக்கிட்ட ஈஈஈன்னு வழியுற.. போடா.. அவ தான் உனக்கு ஃபர்பெக்ட் மேட்ச்.. அவக்கிட்டயே போடா..” என்று முகத்தை திருப்பியவளை தன்புறம் திருப்பியவன்,
“இப்ப உனக்கு என்ன தான்டி வேணும்?” என்றவனின் கையை தட்டி விட்டவள்,
“ஒன்னும் வேணாம்.. நீ முதல்ல இடத்தை காலி பண்ணு.. அங்க அந்த ப்ரியா உனக்காக வெயிட் பண்ணிட்டுருப்பா..” என்றவளின் நெற்றியோடு முட்டியவன்,
“அவளை என்கிட்ட நெருங்க விடாம எட்டி நிற்க வைக்க என்னால முடியும்.. உன் மேல எனக்கு எவ்வளவு லவ் இருக்குன்னு ப்ரூஃப் பண்ணவும் முடியும்.. ஆனா, நீ எனக்காக பண்ணப் போற? நீ என் பொண்டாட்டின்னு எப்படி நிரூபிக்கப் போற?” என்றவனை கூர்ந்து பார்த்தவள், அவன் விழிகளில் வழிந்த காதலில் கரைந்தே போனாள். ஒரு ஆணின் கண்களில் இத்தனை காந்தமா? பசையில்லாது அவனோடு ஒட்டிக் கொண்டாள். அவளது இடையோடு கையிட்டு தன்னோடு அள்ளிக் கொண்டவன், அவளை முழுவதுமாக தன் உடைமையாக்கிக் கொண்டான். ஒரு ஆணின் காதலில் இருப்பதென்ன மோக மந்திரமோ? காட்டாற்று வெள்ளமாக அவளை தன்னோடு சுட்டிக் கொண்டான். பெண்மையின் மென்மை அறிந்து, அவளுள் சிறு அழுத்தம் கொடுத்து இயங்கியவன், அவளை ஒரு கண்ணாடி பாத்திரத்தைப் போல் கையாலத் தொடங்கினான். மோகமும் காதலும் போட்டியிட, நிலைத் தடுமாறிய பெண்மை, அவனை மேலும் தன்னோடு இறுக்கிக் கொள்ள, அவளோடு சொர்க்கத்தில் புதைந்தான் ஹர்ஷவர்தன். நடு இரவில் கண் விழித்தவளுக்கு பசி வயிற்றைக் கிள்ள, தன் களைந்த ஆடையை சரி செய்துவிட்டு, மெல்ல நடந்து சமையலறைக்குள் செல்ல, அவள் பின்னோடு அவளுக்கு தெரியாமல் எழுந்து வந்தான் ஹர்ஷவர்தன். சமையலறையில் இருக்கும் ஒவ்வொரு பாத்திரத்தையும் திறந்து மூடியவள், அதில் ஒன்றும் இல்லாததை கண்டு, அதிருப்தியுற்றாள்.
“இப்படி துடைச்சு.. கழுவி வைச்சுருக்காணுங்க.. அய்யோ.. இப்ப எனக்கு பசிக்குதே.. இதுவே பெங்களூரா இருந்தா.. டாடி ஏதாவது செஞ்சு கொடுப்பாரு.. வினி இன்னைக்கு நீ பட்டினி தான் போ..” என்று சோகமாக திரும்பியவளின் முன்னே வந்து நின்றான் ஹர்ஷவர்தன்.
“பசிக்குதுன்னா.. இப்படி தனியா வந்து கிச்சனை உருட்டக்கூடாது.. என்னைய எழுப்பி கேட்கணும்..” என்றவன் விளானியின் இடையைப் பற்றி சமையல் மேடையில் அமர்த்தியவன், குளிர்சாதன பெட்டியை திறந்து காய்கறிகளை எடுத்து, அதனை நறுக்கத் தொடங்க, அவனருகில் வைத்திருந்த கேரட்டை எடுத்து கடிக்கத் தொடங்கியிருந்தாள் விளானி. அதனை பார்த்தவன்,
“இப்படியே எல்லாத்தையும் சாபிட்டுட்டேனா.. அப்புறம் எதை வைச்சு நான் சான்வெஜ் பண்றது?” என்று கேட்டவாறே முட்டையை க்ளாஸில் ஊற்றி அடிக்கத் தொடங்க, அவனது தோளில் சாய்ந்து, கன்னத்தில் முத்தமிட்டவள்,
“ரொம்ப பசிக்குது மாமா..” என்று கூற, அப்படியே சிலை போல் நின்று விட்டான் ஹர்ஷவர்தன். சட்டென அவள் புறம் திரும்பியவன், அவளது கண்ணோடு கண் பார்த்தவாறே,
“இப்ப என்னைய என்னன்னு கூப்பிட்ட?” என்று கேட்க, தன் கன்னங்கள் சிவக்க, அவனது கழுத்தில் கையை மாலையாக கோர்த்து கொண்டவள்,
“மாமா.. மாமா.. மாமு.. மாமூஊஊஊ..” என்று கத்த, அவளது இதழை கோவைப்பழமென கவ்விக் கொண்டான். அவனோடு இசைந்து, உருகத் தெடங்கியவளின் காதில் சடாரென கீழே டம்ளர் விழுகும் கேட்க, அவனிடம் இருந்து விலகி, தன் தலையைத் திருப்பி அவனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நபரை கண்டதும், ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள் விளானி. தன்னுள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருப்பதைக் கண்ட ஹர்ஷவர்தன், தானும் தலைத் திருப்பி பார்க்க, அங்கே கையில் வைத்திருந்த தண்ணீர் டம்ளர் கீழே விழுந்தது கூட தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான் நகுலன்.
“நீ.. நீ.. நீங்க.. ரெண்டு பேரும்..” என்றவன் தன் இருகைகளையும் அவர்களுக்கு முன்னே பிசைந்து காட்டினான் வார்த்தைகள் வராது. வெட்கத்தில் முகம் சிவந்தவள், தன் முகத்தை ஹர்ஷவர்தனின் மார்பில் வைத்து மறைத்துக் கொள்ள,
“ப்ச்.. எதுக்கு டா பேய் மாதிரி நடுராத்திரியில உலாவுற? தண்ணீர் தானே குடிக்க வந்த.. குடிச்சுட்டு இடத்தை காலி பண்ணு..” என்ற ஹர்ஷவர்தன், விளானியை தன் மார்பில் தாங்கியவாறே, சான்வெஜ் செய்யத் தொடங்க,
“ஏது.. நான்.. நான்.. பேய் மாதிரி உலாவுறேனா? எனக்கு இப்ப ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..” என்றவாறே சமையலறைக்குள் நுழைந்த நகுலம் அடுப்பை அணைக்க, கோபத்தில் அவனை முறைத்தான் ஹர்ஷவர்தன். அவனது பார்வையில் எச்சில் விழுங்கிய நிகுலன்,
“சும்மா.. ஒரு உரிமையில..” என்று தொடங்கும் முன்னே இடையிட்ட ஹர்ஷவர்தன்,
“பேசாம போய் ஹாலில் போய் உட்காரு.. நானே வந்து பேசுறேன்..” என்றவன் விளானியின் இடையைப் பற்றி கீழே இறக்கிவிட்டான்.
“நீ இங்க இருந்தா.. எனக்கு வேலை நடந்த மாதிரி தான்.. அதுனால நல்லப்புள்ளயா.. நீயும் அவன்கூட சேர்ந்து ஹால்ல போய் உட்காரு.. ஃபை மினிட்ஸ்ல வேலையை முடிச்சிட்டு வந்துடுவேன்..” என்ற ஹர்ஷவர்தனுக்கு சரியென தலையாட்டியாவள், நகுலனை முறைத்துப் பார்த்துக் கொண்டே, ஹாலில் இருந்த சோஃபாவில் அமர, அவள் அமர்ந்த முனையின் எதிர்புறமாக அமர்ந்தான் நகுலன்.
“நானும் இருபது வருஷமா அவன்கூட ஃப்ரெண்டா இருக்கேன்.. எனக்கு சான்வெஜென்ன.. பச்சத்தண்ணிக்கூட எடுத்துக் கொடுத்ததில்ல.. நேத்து வந்த உனக்காக அவனே சான்வெஜ் பண்ணுறான்.. இதெல்லாம் நல்லதுக்கில்ல.. அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? அவன் ஒரு ஹீரோ.. ஜென்டில்மேன்.. அவனைப் போய் சமைக்கவிட்டுருக்க.. இதே ப்ரியாவா இருந்தா..” என்ற நகுலனின் மீது கைக்குக்கு கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து எறிந்தாள் விளானி.
“இப்ப நீ வாய மூடப் போறியா.. இல்லையா? ப்ரியாவா இருந்தா என்ன? கலாவா இருந்தா என்ன? இன்னொரு தடவை என் புருஷன் கூட வேற யாரையாவது சேர்த்து வைத்து பேசுன.. மவனே! சோத்துல விஷத்தை வைச்சுடுவேன்.. ஜாக்கிரதை..”
“இப்ப ப்ரியாவிற்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?”
“பேசாம நீயே அவளை கல்யாணம் பண்ணுக்கோ.. எனக்கு தெரிஞ்சு.. நீ தான் அவளைப் பற்றி ரொம்ப கவலைப்படுற..” என்று விளானி பேசிக் கொண்டிருக்கும் போதே, அவளது வாயில் சான்வெஜை ஊட்டி விட்டான் ஹர்ஷவர்தன்.
“எப்படி இருக்கு?”
“ரொம்ப நல்லாருக்கு.. டேஸ்டா இருக்கு..”
“நைட்.. இதைத் தவிர ஃப்ரிட்ஜில வேற எதுவும் இல்ல.. நாளைக்கு உனக்கு பிடிச்ச பிரியாணி செஞ்சு தர்றேன்..”
“ம்ம்.. ஸ்வீட் மாமா..” என்றவள் அவனது கையால் ஊட்டிவிட்ட உணவை செல்லங்கொஞ்சியபடியே சாப்பிட்ட விளானியை பார்த்த நகுலன்,
“டேய்.. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால.. பேச்சுலர் சாபம்.. உன்னைய சும்மா விடாது டா..” என்று கூற, விளானிக்கு தண்ணீரை வாயில் புகட்டிய ஹர்ஷவர்தன்,
“உன்னைய யாரு பேச்சுலரா இருக்க சொன்னது? நான் சொன்னேனா? நீ ப்ரியாவை ஸ்கூல் டேஸ்ல இருந்தே லவ் பண்றேன்னு எனக்கு நல்லாத் தெரியும்.. இருந்தும் அவளை என் தலைல கட்டத்தான் பார்க்குறியே.. ஒழிய.. நீயா அவக்கிட்ட ப்ரப்போஸ் பண்றியா? அதுவும் இல்ல.. என் மனசுல யார் இருக்கான்னு புரிஞ்சுக்கவாவது முயற்சி பண்ணிருக்கியா?” என்று அடக்கிய தனது கோபத்தை வெளிப்படுத்த,
“நீயும் இவளும் எப்பப் பார்த்தாலும் சண்டை தான்டா போட்டுட்டுருப்பீங்க.. அப்புறம் எப்படி டா.. இப்படி? எனக்கு ஒன்னுமே புரியல..” என்று குழப்பமாக பார்த்தான் நகுலன்.
“சண்டை பிடிக்காதவங்கக் கூட மட்டுமில்ல.. ரொம்ப பிடிச்சாக்கூட வரும்..” என்று விளானி கூற,
“அதெல்லாம் சரி.. நீங்க ரெண்டு பேரும் இப்ப எந்த ஸ்டேஜ்ல இருக்கீங்க?” என்று நகுலன் தன் இருகை விரல்களையும் குவித்து முத்தம் வைப்பதை போல் சைகை மொழி செய்து காட்ட, வெட்கப் புன்னகை பூத்தாள் விளானி.
“எங்களுக்கு கல்யாணமாகிடுச்சு..வீ ஆர் கப்பிள்ஸ்..”
“என்னடா சொல்ற? இது எந்த கேப்ல நடந்துச்சு? நாங்க உன்கூடவே தானேடா சுத்திட்டுருக்கோம்.. எந்த கேப்லடா கெடா வெட்டின?”
“ஹரியோட மேரேஜோட சேர்த்து எங்க மேரேஜும் நடந்துடுச்சு..”
“அப்போ ஏன்டா எங்கக்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல? எங்களை எல்லாம் நீ கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல.. இல்ல?”
“உங்கக்கிட்ட சொல்லக்கூடாதுனால் இல்ல.. பட், எங்கக்கிட்டயே ஒரு க்ளாரிட்டி இல்லாதப்போ.. எதுக்கு உங்கக்கிட்ட சொல்லி, உங்களையும் குழப்பணும்னு தான் சொல்லல.. அதுவுமில்லாம மேடம்.. டிவொர்ஸ் பண்ற மைண்ட் செட்ல இருந்தாங்க..” என்று ஹர்ஷவர்தன் கூறியதும்,
“அப்போ.. நான் உன்னைய லவ் பண்றேன்னு எனக்கே தெரியலையே.. அப்புறம் எப்படி நான் உன்கிட்ட கன்பார்ம்மா சொல்றது? அதான் உனக்கு பின்னாடி எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு யார்க்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொன்னேன்.. இனிமே டிவொர்ஸ் பத்தி நீ ஏதாவது பேசுன.. மவனே.. காஃபில மிளகாப் பொடியை போட்டு கொடுத்துடுவேன்.. ஜாக்கிரதை..” என்று ஒற்றை விரலை காட்டி ஹர்ஷவர்தனை விளானி மிரட்ட,
“இந்த ரவுடியை எப்படிடா உனக்கு பிடிச்சது?” என்று ஆச்சரியமாக கேட்டான் நகுலன்.
“ம்ம்.. எப்பன்னு சொல்லத் தெரியலை.. ஆனா, முதல் முதலா இவளை ஸ்கூல்ல லேட் கம்மரா தான் பார்த்தேன்.. பயந்து பயந்து வர்றவங்களுக்கு மத்தியில, குறும்பா.. பயமேயில்லாம.. சிரிச்ச முகத்தோட இருந்தவளோட இயல்பு பிடிச்சா? இல்ல.. சுத்தி இருக்குற அத்தனை பேரும் கேலியும் கிண்டலும் பண்ணாலும் அசராம நின்னு சமாளிச்ச தைரியம் பிடிச்சுதா? தெரியலை.. அப்போ இருந்து இப்போ வரைக்கும்.. என் ஆயுள் இருக்கும் வரைக்கும் இவ மட்டும் தான் என் மனசுல இருப்பா..” என்றவனை ஆசையாக விளானி பார்த்திருக்க,
“க்கும்.. நாளைக்கு நம்ம ப்ராஜெக்ட்டை பைனலைஸ்ட் பண்ணணும்.. சீக்கிரம் போய் தூங்குங்க..” என்ற நகுலனை சிறிதும் கவனிக்காத ஹர்ஷவர்தன், விளானியை தன் கையில் ஏந்திக் கொண்டு தன் அறையை நோக்கிச் செல்ல, தன் நண்பன் செல்லும் திசையை பார்த்துக் கொண்டிருந்த நகுலனின் கண்ணில் ப்ரியாவின் முகம் மின்னி மறைந்தது. அவ மனசுல ஹர்ஷவர்தன் மீதான காதல் வளர தானும் ஒருக்காரம் என்று நினைத்தவன், மறுநாள் அவளிடம் அனைத்தையும் கூறிவிட எண்ணியவாறே, தானும் உறங்கச் சென்றான். எதிர்பாராத பல சம்பவங்களை தன்னுள் ஒழித்து வைத்து காத்திருப்பது தான் வாழ்க்கை.. இதை நகுலனும் புரிந்து கொள்ளும் நாள் வருமா?
👌👌👌👌👌👌👌
Super sis 💞
Wowwwwwwww lovlyyyyyyyyyy nd awesome epiiii….. Waiting