ATM Tamil Romantic Novels

என் மோகத் தீயே குளிராதே 30

அத்தியாயம் 30

 

“அர்ஜுன்.. என்னதிது குழந்தை மாதிரி மடில படுத்துட்டு இருக்கீங்க? அகிலும் ஹாசினியும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க.. எழுந்திரிங்க..”

 

“ப்ச்.. கொஞ்ச நேரம் தான்மா.. காலைல இருந்து சர்ஜரில நின்னு நின்னு.. ஒரே அலுப்பா இருக்கு.. உன் மடியில கொஞ்ச நேரம் படுத்து கண்ணை மூடுனா.. பழைய எனர்ஜி திரும்ப வந்துடும்..”

 

“ஏன் ஒரு மாதிரி சோர்ந்து போயிருக்கீங்க? முகமெல்லாம் வாட்டமா இருக்கு?”

 

“ப்ச்.. இன்னைக்கு ஒரு ஆக்ஸிடென்ட் கேஸ்.. அம்மா.. பொண்ணு ரெண்டு பேருமே ஸ்பாட்டவுட்.. அதே நேரத்துல இன்னொரு அம்மாவும் பொண்ணும் உயிருக்கு போராடிட்டு இருந்தாங்க.. அவங்களோட ஹார்ட்டும்.. லிவரும் ரொம்ப டேமேஜாகிருந்துச்சு.. உடல் உறுப்பு செயலிழந்தாலும் உயிர் உடல்ல தான் இருந்துச்சு.. சோ, நான் தான் இறந்தவங்க குடும்பத்தோட பேசி, அவங்ஙளோட உடல் உறுப்புகளை உயிருக்கு போராடிட்டு இருந்தவளுக்கு வைச்சு, சர்ஜரி செஞ்சு முடிச்சேன்..”

 

“கெட்டது ஒருபக்கம் இருந்தாலும், நல்லதும் நடந்திருக்கே.. அதுக்கு நீங்க ஏன் இவ்வளவு கஷ்டப்படுறீங்க?”

 

“இறந்து போன பொண்ணோட ஹஸ்பெண்ட் யாருன்னு சொன்னா.. நீயும் வருத்தப்படுவ..”

 

“யாருங்க அது? நம்ம ஆதித்யா குரூப்போட ஒன் அண்ட் ஒன்லி ப்ரொப்படைட்டர்.. பிஸ்னஸ் லயன்.. தி க்ரேட் ஆதித்ய கரிகாலன்..”

 

“வாட்? அவரோட பொண்டாட்டி.. புள்ளைக்கா இந்த நிலைமை?”

 

“என்ன சொல்ல சொல்ற? ஆப்ரேஷன் செஞ்சு முடிச்சதுக்கு அப்புறம் தான் இந்த விஷயமே எனக்கு தெரியும்.. நான் ஆதித்யாவோட அம்மாக்கிட்ட பர்மிஷன் கேட்டு தான் ஆப்ரேஷன் பண்ணேன்.. இருந்தாலும் ஆதித்யாவை நினைச்சா.. ஒரு பக்கம் பயமா.. ஒரு பக்கம் பாவமா இருக்கு..”

 

“நீங்க எதுக்கு கவலைப்படுறீங்க.. என்னைய கேட்டா.. இறந்து மண்ணோடு மண்ணா.. மக்கிப் போகப்போற உடம்பிற்கு திரும்பவும் கொடுத்துருக்கீங்க.. இதுல உங்க தப்பு எதுவும் இல்ல.. சொல்லப் போனா.. உங்களுக்கு அவர் தாங்க்ஸ் தான் சொல்லணும்..”

 

“அப்படிங்குற?”

 

“பின்ன.. என் மாமா என்னைக்குமே அடுத்தவங்களை காயப்படுத்த மாட்டாரு.. அவருக்கு அடுத்தவங்களை வாழ வைச்சு தான் பழக்கம்.. கெடுத்து பழக்கமில்லை.. உதாரணத்துக்கு நானே இருக்கேனே.. நீங்க மட்டும் எனக்கு வாழ்க்கை கொடுக்கலேனா? இன்னைக்கு நான் எப்படி இருந்திருப்பேனோ?”

 

“நிச்சயம் இதை விட நல்லாயிருந்திருப்ப.. உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருப்பேன்.. இந்த மாதிரி பேசக்கூடாதுன்னு.. உன்னோட தைரியம்.. தன்னம்பிக்கை.. பொறுமை.. தாய்மை.. எல்லாம் சேர்ந்து உன்னைய நல்லாதான் வைச்சிருந்திருக்கும்.. நான் தான் உன்னைய கூண்டுக்குள்ள பிடிச்சு வைச்சுருக்கேனோன்னு தோணுது..”

 

“கூண்டா.. நீங்களா? நீங்க இருக்குற இடம் எனக்கு எப்படி கூண்டாகும்? நீங்க இருக்குற இடம் சொர்க்கம் மாமா..” என்ற மலரின் முகத்தை தன்னை நோக்கி இழுத்தவன், அவளது நெற்றியில் முத்தமிட, அறுபது வயதிலும் அந்தி வானமாய் முகம் சிவந்தாள் மலர்க்கொடி. 

 

“நீ இப்பல்லாம் வர வர ஒழுங்கா சாப்பிடுறதில்லைன்னு நினைக்குறேன்?”

 

“ஏன் அப்படி கேட்குறீங்க?”

 

“என்னது எலும்பா இருக்குற மாதிரி இருக்கு.. முன்னலாம் படுத்தா.. அப்படியே பஞ்சு மெத்தையில படுத்த மாதிரி இருக்கும்.. இப்ப குச்சியாய் போயிட்டுருக்கா.. உனக்கு முதல்ல ஃபுல் பாடி செக்கப் பண்ணணும்.. கிளம்பு ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாம்“

 

“ப்ச்.. விடுங்க.. சும்மா இருங்க.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை..

நல்லாத்தான் இருக்கேன்.. ஹாசினி வந்ததும் அவளை தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்..”

 

“ஏன்? என்னாச்சு என் பொண்ணுக்கு?”

 

“பொண்ணுன்ன உடனே பொண்டாட்டியை மறந்துடுவீங்களே? உண்மைய சொல்லுங்க.. உங்க பொண்ணுக்கு என்னன்னு உங்களுக்கு தெரியாது? சும்மா எதுவுமே தெரியாத பச்சக்குழந்தை மாதிரி கேட்குறது..”

 

“உன் வாயால கேட்கணும்னு ஆசையா இருக்குமா.. சொல்லுமா.. என்னாச்சு நம்ம பொண்ணுக்கு?”

 

“ம்ம்.. நீங்க தாத்தாவாகப் போறீங்க.. நான் பாட்டியாகப் போறேன்.. ஹாசி முழுகாம இருக்கா..”

 

“ம்ம்.. எனக்கும் தெரியும்.. ஆனா, எனக்கு அவளை விட நீ தான் முக்கியம்.. சோ, இன்னைக்கே நீ என்கூட ஹாஸ்பிடல் வரணும்..” 

 

‘இருபதில் வரும் காதல் மோகம் சார்ந்தது.. ஆனால் அறுபதிலும் தொடரும் காதல் உன்னதமானது.. என்னவன் எனக்கு கிடைத்த வரம்..” என்று தனக்குள் நினைத்துக் கொண்டவள், தனது அல்லித்தண்டு காலினை வருடிக் கொண்டிருக்கும் அர்ஜுனின் நெற்றியில் முத்தமிட, அவளது மடியில் மழலையென கண்மூடி உறங்கலானான் அர்ஜுன். 

**********************************************

“அத்தான்.. சொல்லுங்க..”

 

“உன் அக்கா என்ன பண்றா?”

 

“தூங்குறா..”

 

“காரை ஒரு ஓரமா நிறுத்திட்டு எனக்காக வெயிட் பண்ணு.. இன்னும் பத்து நிமிஷத்துல நான் வந்துடுவேன்..”

 

“சரி.. அத்தான்..” என்ற அகிலன் ஹைவேஸில் சென்று கொண்டிருந்த காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு ஹரிஷான்திற்காக காத்திருக்க, அவன் கூறிய பத்து நிமிடத்திற்குள் அங்கு வந்திருந்தான் ஹரிஷான்த். காரை விட்டு இறங்கியவன் நேரே அகிலனிடம் வந்து, அவன் முன்னே தான் வந்த காரின் சாவியை நீட்டி, 

 

“இந்த காரை நீ எடுத்துட்டு வா.. நான் ஹனியை கூட்டிட்டு முன்னாடி போறேன்..” என்று கூறிவிட்டு காரின் பின்பக்க கதவை திறந்தான். அதில் சாய்ந்து அமர்ந்து கொள்ளவென இருந்த தலையணையை எடுத்து, காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஹாசினிக்கு ஏதுவாக, அவளது முதுகிற்கு பின்னால் வைத்தவன், அவளது தூக்கம் கலையாத வண்ணம் இருக்கையை சாய்ந்து அமருமாறு செய்தான். காரினுள் மெல்லிய இசையை மென் சத்தத்துடன் வைக்க, உறங்கிக் கொண்டிருந்தவளின் தலையோ அவனது தோளில் சாய்ந்து கொள்ள, அவளை தனது தோள் வளைவில் தாங்கியவாறே, காரினை இயக்கத் தொடங்கினான். ஒருநாளில் வந்தடைய வேண்டிய தொலைவை ஒன்றரை நாட்களாக மாற்றி, பெங்களூர் வந்தடைந்தனர். காரில் இருந்து இறங்கியதும் அவளை மெல்ல இறக்கியவன், மங்கையவள் கால் தரையில் படாது, தன் கைகளில் ஏந்திக் கொண்டான். மெல்ல விழி விரித்து ஆச்சரியமாக அவனை பார்த்தவள்,

 

“ஹரி இறக்கி விடுங்க.. யாராவது பார்க்கப் போறாங்க..” என்று மெல்ல முணுமுணுக்க,

 

“என் பொண்டாட்டியை நான் தூக்குறேன்.. என்னை யார் கேள்வி கேட்பாங்க?” என்றவாறே அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு சென்றவனை பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டவாறே, அவர்கள் பின்னோடு வந்தான் அகிலன்.

 

வீட்டு வாசலிற்கு வந்ததும், அழைப்பு மணியை அகிலன் அழுத்த, அப்போதும் தன்னவளை தாங்கியவாறு நின்றிருந்தான் ஹரிஷான்த். அழைப்பு மணியோசை கேட்டதும் ஓடி வந்து கதவை திறந்து விட்ட மலர்க்கொடி, தன் மகளை ஏந்தியவாறு நின்றிருந்த ஹரிஷான்த்தை பார்த்ததும் பதறி விட்டாள். 

 

“அய்யோ.. என்ன மாப்பிள்ளை இது? தூக்கிட்டு வந்துருக்கீங்க? ஏதாவது அடிகிடி பட்டுருச்சா? எங்கேயாவது விழுந்துட்டாளா?” என்று ஹரிஷான்திடம் தொடங்கியவள்,

 

“நீ தான் கையையும் காலையும் ஒழுங்கா வைச்சுருக்காம எங்கேயாவது விழுந்து வைச்சுருப்ப.. சொல்லுடி.. எங்க விழுந்த?” என்று ஹாசினியிம் முடித்தாள் மலர்க்கொடி. 

 

“இதுக்கு தான் இறக்கி விடுங்கன்னு சொன்னேன்.. இப்ப பாருங்க எண்ணெயே இல்லாம எங்கம்மா தாலிக்க ஆரம்பிச்சுட்டாங்க..” என்றவாறே ஹரிஷான்தின் கையில் இருந்து கீழே இறங்கிய ஹாசினியை நோக்கி வந்த பக்கத்து வீட்டுக்கார பெண்மணி,

 

“என்னம்மா.. உன்னையும் உன் புருஷன் நடக்க விடுறதில்ல போல.. உன் அப்பா தான் உன் அம்மாவை தூக்கிட்டே திரியுறாருன்னா.. உன் புருஷனும் உன் முந்தானையை பிடிச்சுக்கிட்டு சுத்துற மாதிரி வைச்சிட்ட போல? ஆனாலும் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கொடுத்து வைச்சவங்க.. உங்க குடும்பத்துக்கு மட்டும் எப்படித்தான் இந்த மாதிரி மருமகனுங்க கிடைக்குறாங்களோ? தாயைப் போலவே புள்ளைக்கும் வாழ்க்கை.. மகராசி கொடுத்து வைச்சவ..” என்று புலம்பியவாறே செல்ல, அதனை பார்த்த கலாவதி பாட்டி,

 

“புள்ளைங்க களைச்சு போய் வந்துருப்பாங்க.. எதுக்கு வெளியே நிற்க வைச்சுட்டு பேசிட்டுருக்க.. உள்ளே கூட்டிட்டு போ..” என்றவாறே வீட்டை விட்டு வெளியே செல்ல முயல,

 

“பாட்டி.. நீங்க எங்க போறீங்க?” என்று அவரை வழிமறித்து நின்றாள் ஹாசினி. 

 

“ப்ச்.. அவ கண்ணு பொல்லாத கண்ணு.. கல்லடி பட்டாலும் படலாம்.. கண்ணாடி படக்கூடாது.. நீங்க ரெண்டு பேரும் உள்ளே போங்க.. நான் இப்ப வந்துடுறேன்..” என்றவர் பக்கத்து வீட்டு பெண்மணியின் பின்னோடு சென்றார். 

 

“அம்மா.. பாட்டி இன்னைக்கு தரமான சம்பவம் பண்ண போறாங்க பாரேன்..” என்று ஹாசினி சொல்லி முடிக்கும் முன்,

 

“இப்ப எதுக்கு என் காலடி மண்ணை எடுக்குறீங்க? எனக்கு செய்வினை ஏதாவது வைக்கப் போறீங்களா? அய்யோ.. இந்த கிழவி அட்டகாசம் தாங்க முடியலையே.. யாராவது வாங்களேன்..” என்ற சத்தம் அவர்களது காதினை எட்டியது.

 

“போச்சு.. போச்சு.. பாட்டி வசமா சிக்கிக்கிட்டாங்க.. போச்சு.. போச்சு..” என்ற ஹாசினியின் முன்னே, 

 

“யாரு.. நானா சிக்குவேன்? சிறுத்தை சிக்கும்லே.. சில்லுவண்டு சிக்குமா? இங்கேப் பாரு.. அவ காலடி மண்ணோடு சேர்த்து, அவ முடியையையும் கொண்டு வந்துட்டேன்.. எடு அந்த சாம்பிராணி கட்டையை.. அவ காலடி மண்ணை சூடம் ஏத்தி, உள்ளே போடணும்.. அப்ப தான் என் குடும்பத்தை பிடிச்ச கண் திருஷ்டி போகும்..” என்றவர் ஹாசினியையும் ஹரிஷான்த்தையும் அருகருகே அமர வைத்து திருஷ்டி சுத்திய கையோடு, மலர்க்கொடியையும் சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்த அர்ஜுனையும் சேர்த்து நிற்க வைத்து திருஷ்டி சுத்தி முடித்தார். அதனை எறியும் தணலில் மிளகாயுடன் போட்டவர், 

 

“பாரு.. பாரு.. எப்படி சடசடன்னு பொரியுது? அவ்வளவும் கண்ணேறு.. என் ராசாத்தி.. நல்லபடியா பெத்தெடுக்கணும்..” என்றவாறே ஹாசினியை அணைத்துக் கொண்டவரை பொறாமையோடு பார்த்தான் ஹரிஷான்த். 

 

“வாடி.. ராசாத்தி.. குளிச்சுட்டு.. சாப்பிட்டு.. ரெஸ்ட் எடு.. இந்த மாதிரி நேரத்துல நல்லாத் தூங்கணும்..” என்றவர் ஹாசினியை தன்னுடன் அழைத்துச் செல்ல, தன் கையில் இருக்கும் மிட்டாயை பறிகொடுத்த சிறுவன் போல, ஏமாற்றமாக ஹாசினியை பார்த்தான் ஹரிஷான்த். குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்ணின் பாரத்தை விட, அவளோடு சேர்த்து குழந்தையையும் தன் மனதில் சுமக்கும் ஆணின் பாரம்.. அதிகமல்லவா?!

7 thoughts on “என் மோகத் தீயே குளிராதே 30”

  1. Значение экспертного обследования железобетонных конструкций.
    Обследование металлоконструкций зданий и сооружений расценки – [url=https://konstrukmetal.ru/]Обследование металлоконструкций зданий и сооружений расценки -[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top