ATM Tamil Romantic Novels

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 15,16

15

 

நிரஞ்சன் வழக்கம்போல தனது அலுவலகத்தில் ‘ஈ’ ஓட்டிக்கொண்டிருந்தான். அவ்வப்போது சபரிக்கு போன் செய்வதும் அவனுடைய நலத்தையும் தொழில் எப்படி போகிறது என்று கேட்பதும் அவனது வாடிக்கை.

 

 

 

மலையளவு நிரஞ்சனுக்கு நன்றிக்கடன் பட்டிருந்தாலும்.. உருகி உருகி பேசுபவனிடம் சபரியும் தொழிலைப் பற்றி ஒரு வார்த்தை கூறி விடமாட்டான் ஆரனின் அனுமதியின்றி..

 

 

 

என்னதான் இவன் வேலைக்கு சிபாரிசு செய்து இருந்தாலும்.. வேலை கொடுத்து நல்ல சம்பளத்தில் தன்னை வைத்திருக்கும் முதலாளி ஆரன் மீது ஏகப்பட்ட பக்தி விசுவாசம் என்றும் சபரிக்கு. அதனால் நண்பனிடம் தொழில் பற்றி ஒரு இன்கு கூட வாயை திறந்து விட மாட்டான்.

 

 

 

 நிரஞ்சனுக்கு அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. ஆனால் நமக்கு இப்படி ஒரு கம்பெனி கிடைக்கவில்லையே லீகல் அட்வைசர் ஆக செயல்பட.. என்று ஏக வருத்தம் அவனுக்கு. அவனின் கம்பெனியில் அவன் லீகல் அட்வைசராக இருந்தாலும் பெரும்பான்மையான முடிவுகள் எடுப்பது என்னவோ அந்த மூவர் குழு குருபரன் மெய்யறிவு நிமிலன் மட்டுமே!!

 

 

 

அதனால் தான் இவன் தனக்கு என்று ஒரு அலுவலகத்தை இங்கே வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான். அதுவும் அவனது பெரியம்மா வேதவள்ளியின் அறிவுரைகள் படி..

 

சட்டென்று தெரியாத நம்பரிலிருந்து மெசேஜ் வேற அசுவாரசியமாக பார்த்தவனது கண்கள் விரிந்தது அதிர்ச்சியில்..

 

ஆரனின் கையில் ஏதோ ஒரு கிஃப்ட் இருக்க.. அதை காதலோடு வாங்கிக் கொண்டிருந்தாள் மயூரி. உண்மையில் அவள் பயத்தில் தான் அன்று வாங்கியது..

 

அதேபோல ஆரனின் பெருவிரல் அவளது அழகிய கீழ் உதட்டு மச்சத்தை வருடுவதும்.. அதில் கண்களை மூடி கிறக்கத்தோடு மயூரி நிற்பதும்.. அதை மயக்கத்தோடு ஆரன் பார்ப்பதும்.. என அவ்வளவு கிளியராக வந்த அடுத்த புகைப்படம் அத்தனையும் எடுத்துரைக்க..

 

அதிர்ச்சியில் இருக்கையிலிருந்து எழுந்து விட்டான் நிரஞ்சன்.

 

 

 

ஆனால் மயூரியிடம் இதுபற்றி அவனால் கேட்க முடியுமா என்று தெரியவில்லை.. 

 

அதை விட, அவளின் உற்ற தோழியும் அவனது தங்கையுமான ஆராதனாவிடம் கேட்டால், தெரிந்துவிடும் என்று ஆராதனாவுக்கு போன் செய்தான்.

 

அவள் அலுவலகத்திற்கு வரும் போதே மதியமாகி விட மயூரி மற்றும் ஆரன் பற்றிய எண்ணங்களில் சுழன்று கொண்டிருந்தவளை அழைத்து இருந்தான்.

 

 

‘இவன் எதுக்கு இப்ப கூப்பிடுறான்?’ என்று யோசனையோடு “சொல்லு ணா..” என்றாள்.

 

 

“நீ எங்க இருக்க இப்போ..”

 

 

“இது என்ன லூசுத்தனமான கேள்வி? எங்க இருப்பேன்? என் வேலையைப் பார்த்துக்கிட்டு நம்ம ஜூவல்லரி ஷாப்ல தான் இருக்கேன். ஏன்??” 

 

 

“ஒன்னும் இல்ல உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே..”

 

 

“என்..என்ன பேசணும் என் கிட்ட??” ஆராதனாவின் நாக்கு தந்தி அடித்தது. எங்கே நிரஞ்சனுக்கு விஷயம் தெரிந்து இருக்குமோ என்று.. இல்லை என்னிடம் போட்டு வாங்க பார்க்கிறானா வேற என்னவாக இருக்கும் என்று பலவித கற்பனைகள் ஓட..

 

 

 

“மயூரி பத்தி பேசணும் ஆரா.. நான் அங்க வந்தா ஏன் வந்த? எதுக்கு வந்த? நிறைய கேள்விகள் எல்லாம் வரும். நீ என் ஆஃபீஸ்க்கு வந்தாலும் நல்லது தான். ஆனா.. இதுவரை இல்லாம திடீரென வந்தா அதுவும் பல கேள்விகளை கிளப்பும். ஜஸ்ட் ஒரு காபி சாப்பிட போற மாதிரி பக்கத்துல ஏதாவது ரெஸ்டாரன்ட் வாயேன்” என்று வக்கீலாய் பல யோசித்து அவன் கூற..

 

 

 

‘அவன் சொல்வதும் சரிதான்! இங்கே அவரவர் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது போல இருந்தாலும்.. கருத்தும் கண்களும் அடுத்தவரின் செயல்களில் அந்தரங்கத்தில் தான் இருக்கும். அதில் என்னமோ மனிதர்களுக்கான ஒரு சுவாரசியம்… அடுத்தவர் விஷயத்தை தெரிந்து கொள்ள அதில் நுழைந்து பார்க்க..

 

 

 

 

 

தன் முன்னால் அமர்ந்திருந்த ஆராதனாவை பார்ப்பதும் டீயை குடிப்பதுமாய் இருந்தான் நிரஞ்சன். மயூரி பற்றி எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தயக்கமாய் இருந்தவனை பார்த்தவளுக்கு “எதுவும் பெரிய பிரச்சனை அண்ணா? அத்தான் அப்பா அம்மாகிட்ட கூட சொல்ல முடியாத விஷயமா? இப்படி என்னை தனியா கூட்டிட்டு வந்திருக்கியே” என்று அவள் சரியாக கணிக்க..

 

 

 

 

“சரி.. முதல்ல ஒரு விஷயம் சொல்லு? நம்ம வீட்டில் கல்யாண பேச்சு ஆரம்பிச்சிருக்காங்க.. உனக்கு நிமிலன் அத்தானை கட்டிக்கிக்கிறதுல சம்மதம் தானே?” இதுவரை தன் தங்கை ரஞ்சனியிடம் கூட கேட்காத கேள்வியை அவளிடம் கேட்டான். தங்கையை அன்னையைப் பற்றி அவன் முழுதாக புரிந்தவன். கண்டிப்பாக தன் தங்கையால் நிமிலனோடு ஒத்து வாழ முடியாது என்பது அவனது கணிப்பு. இதுவே பெரியம்மாவின் வளர்ப்பான ஆராதனா என்றால், குடும்பம் இதே போல கடைசி வரை ஒற்றுமையாக இருக்கும் என்பது அவனுக்குப் புரிந்ததே..

 

 

 

கண்கள் வெட்கத்தை சுமந்து குனிந்துகொள்ள மெதுவாக அவள் தலையை ஆட்ட.. அவளது வெட்கமும் சொன்ன செய்தி புரிந்தாலும்.. “காலையில் மயூரியும் இதேபோல்தான் தலைகுனிந்து அமர்ந்திருந்தா.. அதனால இந்த மௌன மொழி பாஷை எல்லாம் வேண்டாம். உள்ளத்திலிருந்து பதில் சொல்” என்று அழுத்தத்துடன் கேட்கும் எந்த நிரஞ்சன் அவளுக்கு புதிது.

 

 

 

எப்பொழுதும் கேலியும் கிண்டலும் சிரிப்பும் விளையாட்டுமாக இருப்பவன், இலகுவாக எதையும் எடுத்துக் கொள்பவன், கடந்து செல்பவன்.. ஏன் இந்த திடீர் கோபம்? “அண்ணா எனக்கு அத்தானை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்தான்” என்றாள் அவனை புரியாமல் பார்த்து..

 

 

“குட்.. எப்பொழுதும் இந்த எண்ணம் மாறவே கூடாது சரியா? எத்தனை பிரச்சனை வந்தாலும்..” என்றவன் தன் போனில் வந்த போட்டோவை அவளிடம் காட்ட..

 

மயூரி ஆரனும் இணைந்திருந்த போட்டோவைப் பார்த்ததும் விழிகள் விரிய பார்த்தாளே ஒழிய அதை கண்டு அதிர்ச்சியாகவில்லை என்பதை குறித்துக் கொண்டது நிரஞ்சனின் கண்கள்.

 

 

 

அவள்தான் ஆரனின் வாய்மொழியாக இருவருக்கும் இடையில் இருக்கும் நெருக்கத்தை தெரிந்து கொண்டவள் அல்லவா? இப்போது நேரில் பார்க்கும்போது சின்ன சிரிப்புக் கூட முகிழ்த்தது அவளது உதடுகளில்..

 

 

 

“அப்போ இந்த விஷயம் உனக்கு முன்னாடியே தெரியும் அப்படித்தானே?” என்று வக்கீல் சரியாக பாய்ண்டை பிடிக்க அதிர்ந்து திரு திருவென விழித்தாள் ஆராதனா.

 

“சொல்லு ஆரா..??” என்று அவனது கட்டளையான குரலில்..

 

 

“தெரியும் ணா.. ஆனால் அதுவும் இன்னைக்கு தான்..” என்றவள் மடமடவென காலையில் நடந்த விஷயத்தைக் கூறினாள்.

 

 

தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தான் நிரஞ்சன். ஒரு புறம் ஆராதனா நிமிலன் திருமணம் மறுபுறம் மயூரி ஆரன் திருமணம். இரண்டும் ஒன்றோடு ஒன்று நல்லபடியாக நடக்க வாய்ப்புகள் இல்லை என்பது போல இருந்தது.

 

 

மயூரி ஆரனின் திருமணம் நடந்து விட்டால் கண்டிப்பாக அன்னை, நிமிலனுக்கு ஆராதனாவை கட்டிக்கொடுக்க சண்டை போட்டு தன் தங்கையை முன் நிறுத்துவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

 

 

 

என்ன செய்வது என்று புரியாமல் மூன்றாவது டீயை சுட சுட உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

 

 

 

அந்நேரம் நிமிலனிடமிருந்து ஆராதனாவுக்கு போன் வர.. என்னடா இன்னைக்கு என்ன மாத்தி மாத்தி எல்லாரும் புட் பால் ஆடுறீங்க என்ற நினைப்புடன் அந்த போனை நிரஞ்சனிடம் காட்ட “நீ இங்க இருக்கிறது சொல்லாமல் சாதாரணமாக பேசு” என்றான் நிரஞ்சன்.

 

 

ஆனால் அதுதான் அவளுக்கு வினையாக மாற போவது தெரியாமல்..

 

 

“சொ..ல்லுங்க.. சொல்லுங்க அத்தான்” என்று இவள் படபடப்போடு பேச..

 

 

 

அவளின் படபடப்பைக் குறித்து கொண்டு நிமலனின் மூளை “எங்க இருக்க ஆரா?” என்றான் அழுத்தமாக..

 

 

 

“ஏன்.. ஏன்.. நம்ம நம்ம கடையில தான் இருக்கேன்” என்றாள்.

 

 

அவளின் திக்கல் திணறல் படபடப்பு அனைத்துமே சொன்னது அவள் பொய் சொல்கிறாள் என்று “அப்படியா?” என்றான் நம்பாதது போல..

 

 

“நான் உன் உன்னை பார்ப்பதற்குத்தான் கடைக்கு வந்து கொண்டிருக்கிறேன்” என்று பொய்யாக அடித்துவிட்டான் நிமலன்.

 

 

 

“அய்யய்யோ…” என்றாள் அதிர்ந்து ஆரா..

 

 

 

எதிரில் இருந்த நிரஞ்சனுக்கு இவள் சொதப்புகிறாள் என்று புரிய தலையிலடித்துக் கொண்டவன்,

 

‘பிரண்டு கூட பக்கத்துல வந்து இருக்கேன் என்று சொல்லு’ என்று இவன் போனில் அவசரமாக டைப் செய்து காட்ட..

 

 

 

“இல்ல.. இல்ல.. இப்பத்தான் பிரண்டு கூட வெளியில வந்து இருக்கேன்” என்றாள்.

 

 

 

“பிரெண்டுனா.. மயூரியா?” என்று கொக்கி போட்டான் நிமலன்.

 

 

“மயூரி மட்டும்தான் எனக்கு பிரண்டா?” என்று சற்று கடுப்பாகவே கேட்டாள் ஆராதனா. காலையில் இருந்து எவ்வளவு அதிர்ச்சியை தான் அவளது சின்ன இதயம் தாங்கும். எப்படி மாறி மாறி இவர்களெல்லாம் அவளை ஃபுட்பால் ஆடினால் அவளும் தான் என்ன செய்வாள்.

 

 

 

 

 

“உனக்கு அவள் மட்டும்தான் என்று நினைத்திருந்தேன்.. புதிய புதிய தொடர்புகள் இப்போ போல” என்று அவன் கேட்ட விதமே இவளுக்கு உள்ளே ஏதோ நெருடியது..

 

 

 

 

 

“தொடர்புனா.. எதை மீன் பண்றீங்க நீங்க?” என்று இவள் சற்று ஆத்திரமாக கேட்டாள் போனை ஸ்பீக்கரில் போட்டு..

 

 

 

 

 

“அதான் நீ சொன்னியே புதிய பிரண்ட்னு அதைத்தான் மீன் பண்ணினேன்.. ஏன்.. உனக்கு ஏன் தப்பா தோணுது?குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்குமாம் ஆரா” என்றான் நிமிலன்.

 

 

 

இவர்கள் சம்பாஷணையை லவுட் ஸ்பீக்கர் மூலம் கேட்டுக்கொண்டிருந்த நிரஞ்சனுக்கு, வார்த்தைகள் தடித்து ஏதேனும் விபரீதம் ஆகிவிடுமோ என்று போனை கட் என்று அவன் ஜாடையில் கூற.. “சரி நான் அப்புறம் பேசுறேன்” என்று அவள் வைத்து விட்டாள். அங்கு ஆபீஸில் தனது இருக்கையில் அமர்ந்தபடி கையிலிருந்த போனையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் நிமிலன்.

 

 

 

 

 

அவள் பேசும்போது அருகில் யாரோ இருந்து கேட்பது போலவும் இடையிடையே அவளிடம் குசுகுசுவென்று பேசுவது போலவும் தெரிந்தது. ஒருவேளை அது ஆரனாக இருக்குமோ? என்று சந்தேகத்தின் முதல் வித்து விழுந்தது.

 

 

 

 

 

அடுத்த இரண்டு மூன்று நாட்களாக வேலை வீடு என்று மட்டும் இருந்தாள் மயூரி. எக்காரணம் கொண்டும் ஆரனின் அலுவலகத்திற்கு செல்லவே இல்லை. அதைப்பற்றி அவர் வரதராஜன் கேட்கும்போது “இப்போ ரீசண்டா உள்ள ஒர்க் எல்லாம் முடிஞ்சது சார். இனிமேல் அவரே வேலை கொடுத்தால்தான் உண்டு” என்று அவன் பக்கம் பழியை போட்டுவிட்டு, இவள் தன் வேலையை மட்டுமே பார்த்தாள். ஆனால் அவ்வப்போது மதியம் தங்கள் அலுவலகத்திற்கு சென்று வர, ஒரு அண்ணனாக அவளின் முகம் மாற்றத்தை கவனிக்கவே இல்லை நிமிலன்.

 

 

 

 

 

ஆனால் மெய்யறிவும் குருபரனும் கவனித்தாலும் திருமணம் பற்றி பேசியதால் இது என்று நினைத்தவர்கள் சற்று ஆற போடுவோம் என்று அமைதியாகவே இருந்தனர்.

 

 

 

 

 

இரண்டு மூன்று நாட்கள் அமைதியாகவே நகர.. காதல் அணங்கவளின் அருகாமை இல்லாமல் கொஞ்சம் தவித்து தான் போனான் ஆரன்.

 

 

 

 

 

வரதராஜனுக்கு போன் செய்து மயூரி பற்றி கேட்க “நீங்க புது வேலையை அலாட் பண்ணலனு சொன்னாங்க சார்” என்று அவர் கூற, தன்னவளின் புத்திசாலித்தனத்தில் சற்றே உதடுகள் வளைந்தது ஆரனுக்கு.

 

 

 

ஆனால் அப்படியே விட்டால் அவன் ஆரன் அல்லவே.. “ஓகே.. நாளைக்கு கார் அனுப்புறேன் சார்!” என்று போனை வைத்தவன் மறுநாள் அவனே வந்து காத்திருத்தான் அவள் அறியாமல்..

 

 

 

ஆனால் வரதராஜனுக்கு போன் செய்த மயூரி “சார்.. இன்னைக்கு நான் லீவு. கொஞ்சம் கோவில் வரைக்கும் போகிறோம். நாளைக்கு வரேன்” என்று ஆரனுக்கே ஆப்பு வைத்தாள்.

 

 

 

 

 

அதை அப்படியே வரதராஜன் ஆரனுக்கு சொல்லிவிட, ஏற்கனவே மூன்று நாட்களாக அவளை பார்க்காதது மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு இன்று அவனே அவளை கூட்டி அவளின் அருகாமையில் திளைக்கலாம் என்று நினைத்திருக்கும் வேளையில்.. குண்டை போட்டாள் மயூரி.

 

 

 

 

 

“எனக்கே ஆட்டம் காட்டுகிறாளா?” என்றவன், அவர்கள் எந்த கோயிலுக்கு செல்கிறார் என்று அவன் ஆட்கள் மூலம் அறிய செய்ய.. அனைவரும் அருகிலுள்ள அவர்களது குலதெய்வமான அங்காளம்மன் கோவிலுக்கு சென்றதாக செய்தி வந்தது. நொடியும் தாமதிக்காமல் பிறந்துவிட்டான் தனது காரில் அக்கோவிலை நோக்கி ஆரன்.

 

 

 

 

 

தெய்வானை அம்மாளுக்கு மனது சரியில்லை இரண்டு நாட்களாக.. திருமணப் பேச்சுவார்த்தை எடுப்பதும், ஆளாளுக்கு முகத்தை திருப்புவதும், அந்த பேச்சை பேட்டியை தவிர்ப்பதுமாக சுற்றிக்கொண்டிருக்க இனி ஆண்டவன் விட்ட வழி என்று குலதெய்வம் கோயிலுக்கு வந்து விட்டார்.

 

 

 

 

 

அன்னையின் அழகிய சாந்த முகத்தை அலங்கார பூஜிதையாக கண்கள் குளிர பார்த்து மனம் உருக வேண்டி நின்றனர் அக்குடும்பத்தினர்.

 

 

 

 

 

அவர்கள் குடும்பத்தையே பார்த்து அந்த கோவிலின் தூணில் தோள் கொடுத்து நின்றவன் முகத்தில் அவ்வளவு ஏளன சிரிப்பு..

 

 

 

 

 

“செய்வதையெல்லாம் செய்துவிட்டு இறைவனை சரணடைந்தால் எல்லாம் சரியாகுமா என்ன? இம்முறை தெய்வம் நின்று கொல்லப்போவதில்லை உங்களை!! இந்த ஆரன் தான் ஆற அமர அடிக்கப் போகிறான்” என்று நினைத்துக் கொண்டு நின்றவனையும், அந்த அம்மன் அதே சாந்த முகத்துடன் பார்த்தாள். புரியாத மொழியில் புன்னகைத்தாள் தேவி.

 

 

 

 

 

கோவிலை வலம் வந்து பெரியவர்கள் அனைவரும் ஒருபுறம் அமர்ந்து பொதுவான விஷயங்களை பேசிக் கொண்டிருக்க..

 

 

 

 

 

சட்டென்று அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு அருள் வந்து ஆட சுற்றி இருந்தவர்கள் எல்லாம் தத்தம் மனக்குறையை அந்த பெண்ணிடம் கூறினர். அந்த தேவியே வந்து அப்பெண்ணின் மூலம் அருள்வாக்கு கூறுவதாய் நினைத்து வணங்கினர்.

 

 

 

 

 

அப்பொழுது தெய்வானை அம்மாள் தங்கள் பேரன் பேத்திகள் திருமணத்தைக் குறித்த மனக்கவலையை அவரிடம் கொட்ட..

 

அந்தப் பெண்மணி தெய்வானை அம்மாளை பார்த்து சிரித்தவள்.. “சிறப்பாக நடக்கும்.. வெகு சிறப்பாகவே நடக்கும்.. நடக்க வேண்டியது எல்லாம்.. கவலைப்படாதே!!” என்று பூடமாக சொல்லி விட, நடக்கும் என்பதே அவருக்கு ஆனந்தமாக இருக்க கையெடுத்துக் கும்பிட்டு நகர்ந்து விட்டார்.

 

 

 

 

 

பெரியவர்கள் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாலும் சிறுவர்களுக்கும் அவ்வளவு சுமூக பேச்சு வார்த்தைகள் இல்லை. மயூரி அமைதியாக இருக்க.. ஆரா நிமிலனை பார்ப்பதும் தலை குனிவதுமாக இருந்தாள். நிமிலனோ அவள் புறம் திரும்பவே இல்லை. அதை பார்த்த ரஞ்சினிக்கு ஏக குஷி. நிரஞ்சனோ ‘இப்படி நவக்கிரகங்களாக மூளைக்கு ஒருவர் நின்று கொண்டிருக்க நாம் என்ன செய்வது?’ என்று புரியாமல் அவனும் ஒரு புறம் நின்று கொண்டிருந்தான்.

 

 

 

 

 

இந்தக் கோயில் தான் சரியான இடம் மயூரியிடம் பேசி அவள் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆரா “மயூ வா நாம கோயில சுத்திட்டு வரலாம்” என்று அழைத்தாள். அப்படி அழைக்கும்போது ரஞ்சனியை பார்த்து “நீ வா” என்க, அவளோ “நீங்க போங்க” என்று விட்டாள். கீழேயே பார்த்துக் அமைதியாக அமர்ந்திருந்த மயூரியின் கையை இழுத்துக் கொண்டு சென்றாள் ஆரா.. 

 

 

 

இங்கே தங்களின் தனிமைக்கு இடையூராக இருந்த நிரஞ்சனை பார்த்து ரஞ்சனி, “அதான் உன் ஆளப் போறாள்ல.. நீயும் பின்னாடியே போக வேண்டியதுதானே” என்று அண்ணனை வலுக்கட்டாயமாக அவர்கள் பின்னே தள்ளி விட்டு நிமிலனின் அருகில் நெருங்கி அமர்ந்தாள் ரஞ்சனி.

 

 

 

 

 

இவர்கள் மூவரும் முதல் சுற்றை சுற்றும் போது வெவ்வேறு மன உணர்ச்சிகள்.. எங்கே எதை ஆரம்பிக்க என்று!!

 

 

 

 சிறிது நேரத்தில் மனோ தைரியத்தை வரவழைத்து அருகில் இருந்த குளத்தை நோக்கி பொறி பாக்கெட்டுடன் மூவரும் செல்ல.. 

 

 

 

குளத்துக்கு செல்லும் இடையிலிருந்த மண்டபத்திலிருந்து ஒரு கை வேகமாக வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மயூரி உள்ளிழுத்துக் கொள்ளவும் இருவரும் அதிர்ச்சியோடு நின்றிருக்க.. 

 

அவர்களைப் பார்த்து ஒற்றைக்கண்ணடித்தவன், அடுத்த கணம் கையை ஆட்டி போக சொன்னான் ஆரன்.

 

 

 

மயூரியோ இன்னும் அதிர்ச்சி விலகாமல் அவன் கைவளைவில்…

 

 

 

தன் உதடுகளுக்கு அருகில் அசையாத விரிந்த அவளின் வெல்வெட் உதடுகளைக் கவ்விக் கொண்டான் ஆரன். மூன்று நாள் பிரிவின் தாக்கத்தில் அவனின் ஆவேச முத்தம் அவளையும் கிறங்கடித்து விட்டது.

 

 

 

மயூரி கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். புடவை தழுவிய அவளின் இடுப்பை இறுக்கி பிடித்துக் கொண்டு அவள் இதழ்களைக் கவ்வினான். அவளின் எதிர்பற்ற குழைந்த தன்மையில் அவள் இதழ்களை ஆவேசமாக சுவைக்க ஆரம்பித்தான். அவன் வேகத்துக்கு ஏற்றவாறு உதடுகளை பிரித்து வாயைப் பிளந்து காட்டிக் கொண்டு அவனை இன்னும் பலமாக இறுக்கி கொண்டாள் மயூரி காதல் கொண்ட மனது வெளிவர..

 

 

 

 

 

சில நிமிட ஆவேச முத்தத்தில் இருவருமே கிறங்கினர். ஆழ முத்தத்தில் மூச்சு முட்டி முகம் விலகினாலும், அவள் உதட்டில் தன் உதட்டை வைத்து அழுத்தியப்படி நின்றிருந்தான் ஆரன். அவனுக்குள் ஜில்லென ஒரு குளிர்ச்சியான உணர்ச்சி பரவி விரவியது. அவளும் அவனோடு நெருக்கமாக நெருங்கினாள்.

 

 

 

இருவர் உதடுகளும் பொருந்தி நின்றதில் இருவர் மூக்கும் முட்டி மோதி நெருங்க.. இருவரின் மூச்சு காற்றும் நேரடியாக மோதி சுவாசத்தில் கலந்தது இருவருக்குள்ளும் புதுவித உணர்ச்சியை கொடுத்தது.

 

தன் இதயம் அவளது வலது நெஞ்சில் பலமாய் துடிப்பதை போலவே அவள் இதயமும் தன் வலது நெஞ்சில் துடிப்பதை உணர்ந்தான் ஆரன்.

 

மெல்ல அவள் இடுப்பை வளைத்து அணைத்து அவளின்.. முக வாசனையை நுகர்ந்தபடி.. மிருதுவான அவளின் பட்டுக் கன்னங்களில் மென்மையாக முத்தங்களைப் பதித்து சொன்னான், “அடுத்தவன கட்டிக்க போறவ எப்படி டி நான் தொட்டதும் என் கையில் கரைந்து குழைந்து நிற்கிற?” என்றதும் அதிர்ந்து விலகினாள்.

 

 

16

 

 

இருவரும் இணைந்த நிலையில்.. உதடும் உதடும் ஒட்டியிருக்க.. மூக்கும் மூக்கும் உரசிக்கொள்ள.. நெற்றிகள் இரண்டும் முட்டிக் கொள்ள..

 

அவனின் இரு கைகளோ அவளது இடையில் இறுக்கமாக இருக்க.. இவளோ இரண்டு நாளாய் தவித்துக் கிடந்த தவிப்பிற்கு மருந்தாய் அவனுடன் குழைந்து நின்றாள்.

 

 

மெல்ல அவளது பட்டுக் கன்னங்களை வருடியவாறு..

 

“சூப்பரா இருக்க மயூ.. சேரியில” என்றான்.

 

 

அவள் வெட்கத்தில் தலை குனிந்து உதட்டைக் கடித்துக் கொள்ள.. மெல்ல அவளை தள்ளி நிறுத்தி புடவையில் இன்ச் இன்சாக பருகினான் கண்களால் அவளது அழகை..

 

 

அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல்.. அவள் அவஸ்தையாய் நெளிய.. 

 

 

அவனது கண்களோ மஞ்சளில் பொன் குழைத்தெடுத்து மின்னல் வெட்டிய இடையில் அழுத்தமாக பதிந்தது. அதுவும் சுற்றியிருந்த தோப்புகளில் இருந்து வஞ்சனையில்லாமல் காற்று வீச.. அதில் படபடத்த அவளது சேலை காட்டிய அழகினைக் கண்டு ஆரனின் நெஞ்சம் தடதடத்தது.

 

 

“பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்..

 

அடடா!!! பிரம்மன் கஞ்சனடி..

 

சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்..

 

ஆஹா!! அவனே வள்ளலடி..”

 

 

என்று அவளை நெருங்கி நின்று அவன் பாட.. அவன் பாடலின் பொருள் உணர்ந்தவள் சட்டென்று இடைவிலகிய புடவையை இழுத்து சரி செய்தாள்.

 

 

“நல்லா ஆசைய தூண்டி விட்டுட்டு அப்பறம் இப்படி மூடிக்கிட்டா சரியா மயூ பேபி” சரசமாக கூறியவன் அவளது இடுப்பில் நறுக்கென கிள்ளினான்.

 

 

“ஆஆ..” என்று‌ அவள் துள்ளி விலக..

 

 

“சேரில உன் ஹிப்ஸை பாத்தா… ம்ஹூம் சான்ஸே இல்ல…” குறுக்காக தலையை ஆட்டிக் கொண்டவன் அவள் அருகே நெருங்கி “செம செக்ஸி ஃபிலிங் குடுக்குற மயூ பேபி” என்றான் கிசுகிசுப்பாக..

 

 

“அச்சோ!!” என்று வாய் மூடியவளுக்கு அப்போது தான் அவன் மீதான கோபம் ஞாபகம் வர, “நான் போறேன்.. உங்க மேல கோபமாக இருக்கேன்” அவள் அங்கிருந்து போக முனையில் சட்டென்று அவள் இடையை வளைத்து பிடித்தான் ஆரன்.

 

 

“ம்ப்ச்.. என்னை விடுங்க..” என்று கோபமாக வார்த்தையைக் கொண்டு வர முயன்றாலும் அது என்னவோ குழைவாகத்தான் வந்தது அவளுக்கு. 

 

 

“கொஞ்ச நேரம்.. ப்ளீஸ் மயூ.. மூணு நாளா நீ இல்லாமல் சோ சேட் ஆரன்” என்று மலைப்பாம்பென அவளை இறுக்கி தன்னுள் பொதித்து கொண்டான்.

 

 

இவனை பாம்பு என்று தள்ளி விடவும் முடியாமல்.. பழுது என்று அள்ளிக் கொள்ளவும் முடியாமல் தவித்தது என்னவோ பெண்ணவள் தான்!!

 

 

சற்று நேரம் அவனது அணைப்பில் இருந்தவள் திமிறி அவனிடமிருந்து விடுபட.. வேறு வழியில்லாமல் அவளை விட்டான். அவள் மீண்டும் புடவை சரி செய்து கொண்டாள். குனிந்து ஏதேனும் தெரிகிறதா என்று பார்த்து மறைத்தாள்.

 

 

 

“அதான் எல்லாம் இப்படி இழுத்து போத்தி மூடிட்டியே ஒன்னும் தெரியல.. போ.. போ.. செழுமையான உன் சைட் போஸ் தெரியல..

பளபளப்பனு உன் வயிறு தெரியல..

அந்த சின்ன பெல்லி பட்டன் கூட தெரியல.. அப்புறம்..” இழுத்தவனை கொலை வெறியுடன் அடிக்க வந்தாள். அடிக்க வந்தவளின் கைகளை பிடித்து தன் மேல் இழுக்க, அவன் மேல் சரிந்தாள். அவளின் இள மாங்கனிகள் அவன் உடலில் அழுந்தியது. இருவரின் மூச்சுக் காற்றும் வெப்பத்துடன் வெளியாகி இருவரின் சுவாசங்களிலும் கலந்து இதயம் தொட்டு வரவி பரவி படர்ந்தது. மெல்ல அவளது கன்னங்களில் அழுத்தமாக முத்தம் பதித்தான் அவளோ அவனது செயல்களில் உருகி நிற்க.. காதலன் மறைந்து அசுரன் வெளிவர..

 

 

“உன் வருங்கால புருஷனோட கோயிலுக்கு வந்துட்டு இப்படி என் கையில உருகிறியேடி மயூ பேபி எப்படி?” என்று கனல் கங்குகளாக அவன் வார்த்தைகளை கொட்ட.. தீச்சுடர் போல அவனை தவிர்த்து பிரிந்தவள் கண்களில் வலியுடன் அவளைப் பார்த்தாள்.

 

 

“சொல்லு மயூ பேபி??” என்று மீண்டும் அவனது விரல்கள் அவளது கன்னத்தை தொட வர அதை தட்டி விட்டாள் மயூரி.

 

 

அவனது பேச்சின் குழைவும் உடல் மொழிகளும் தேர்ந்த காதலனைப் போல இருந்தாலும்.. அந்தப் பேச்சின் அர்த்தங்கள் அனைத்தும் அனர்த்தங்களாக அவளை சுடத்தான் செய்தது.

 

 

அவன் வார்த்தை தந்த வீரியத்தில் கண்களில் கண்ணீர் வழிய புறங்கையால் துடைத்துக் கொண்டே வேகமாக அந்த மண்டபத்தில் இருந்து இவள் வெளியே வர, ஒரு கணம் ஷிட் என்று தனது நெற்றியைத் தேய்த்துக் கொண்டவன் அவள் பின்னாலேயே ஓடி வந்தான்.

 

 

 

இவர்கள் இருவரும் உள்ளே சென்று வெகு நேரமாகி இருக்க.. அந்த மண்டபத்தை கவனித்தபடியே சற்று தள்ளி நின்று கொண்டிருந்தனர் ஆராதனாவும் நிரஞ்சனும்.

 

என்ன பேசுவது என்று இருவருக்கும் தெரியவில்லை. ஆனால் எந்நேரமும் நிமிலன் வந்தால் மாட்டிக் கொள்வோமே என்ற பயம் இருவரிடமும் இருந்தது.

 

 

அந்த நேரம் பார்த்து தான் இவர்களை தேடி கொண்டு நிமிலன் வந்தான்.

 

 

 

முதலில் ரஞ்சனியின் அருகாமையை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டான் நிமிலனும். ஆராதனா மேல் இருந்த கடுப்பில் ரஞ்சனியின் அருகாமையை அவன் கருத்தில் கொள்ளவே இல்லை.

 

 

 

சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவள் நேரம் ஆக ஆக அவளின் குழைவு அவனுக்கு எரிச்சலை தந்தது. மேலும் திருமணம் பற்றிய பேச்சுக்கள் இருக்க.. இவளின் நெருக்கத்தை தவிர்த்தவன் “நானும் பிரகாரத்தை சுற்றி வரப் போகிறேன் ரஞ்சனி” என்று விட்டு எழுந்தான்.

 

 

 

இவனும் மூன்று முறை பிரகாரத்தை சுற்றி விட்டு வந்தால் இவர்களை காணவில்லை. “எங்கே சென்றிருக்கும் இந்த மூன்றும்? அப்படி என்ன ரகசியம் இவங்க மூணு பேருக்குள்ள?” என்று யோசித்துக்கொண்டே படித்துறையை நோக்கி வர அவனை முதலில் கவனித்தது ஆராதனா தான்.

 

 

 

“ஐயோ அண்ணா.. போச்சு போச்சு அத்தான் வேற இங்கே வராரு.. இந்த நேரத்துல மயூரியும் அந்த அண்ணனும்.. அங்க..” என்று அவள் தந்தியடிக்க..

 

 

“என்னது ஆரன் அண்ணனா உனக்கு?” என்று நிரஞ்சன் கோபமாக கேட்க..

 

 

“என்ன ணா.. லூசா நீ? மயூரியை அவர் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவர் எனக்கு அண்ணன் முறை தானே? இப்ப ரொம்ப இந்த உறவுமுறை அவசியமா உனக்கு? அத்தான் வரார்.. நீ ஏதாவது பேச்சு கொடுத்துக்கிட்டு இரு. அதுக்குள்ள நான் போய் மயூரியை கூட்டிட்டு படித்துறையில் உட்கார்ந்து இருக்கேன்” என்றவள் வேகமாக மண்டபத்தை நோக்கி ஓட அதேசமயம் புறங்கையால் கண்ணைத் துடைத்துக் கொண்டே வேகமாக ஓடி வந்தாள் மயூரி. இருவரும் முட்டிக்கொள்ளும் தூரத்தில் அவளது கையை பிடித்த ஆராதனா.. “அத்தான் வேறு வராங்க மயூ.. சீக்கிரமா படித்துறையில் போய் உட்காரலாம் வா” என்று ஓட்டம் எடுக்கும் சமயம்..

 

 

 

“மயூ..” என்றழைத்தவாறு ஆரன் வந்து நிற்க..

 

 

“அச்சோ.. இந்த அண்ணா ஏன் பின்னாடியே உன்னை தொடுத்துகிட்டு வராரு?” என்று பதட்டத்துடன் ஆராதனா.

 

 

அங்கே நிமலனை வழியிலேயே பிடித்து பேசி மடக்கலாம் என்று சென்ற நிரஞ்சனை பார்த்த நிமிலன் “என்னங்கடா என்னை மட்டும் தனியா விட்டுட்டு மூணு பேரும் வந்துட்டீங்க? என்னையும் ரஞ்சனியையும் மட்டும் தனியா பார்த்தா.. பாக்கறவங்க என்ன நினைப்பாங்க? அறிவில்ல உனக்கு!! நீ எல்லாம் ஒரு அண்ணனா?” என்று அதற்கும் நிரஞ்சனை போட்டு திட்ட..

 

 

‘டேய் இந்த குடும்பத்துல ஆளுக்கு ஒன்னு லவ்வு பண்ணிட்டு திரியுது.. ஆனா அதெல்லாம் நிம்மதியா தான் இருக்கு.. இதுங்களுக்கு ஹெல்ப் பண்றேன்னு சிங்களா சுத்துற என்னையே தான் போட்டு படுத்துங்க’ என்று மனதுக்குள் பொறுமிக் கொண்டவன், “வா நாம ரெண்டு பேரும் ஒரு டீ சாப்பிட்டு வரலாம்” என்று அவனை அழைத்தான்.

 

 

 

“அதெல்லாம் வேணாம்.. அவங்க இரண்டு பேரும் மட்டும் தனியா இருப்பாங்க வா டா” என்று அவனை இழுத்துக் கொண்டு வரவும், அங்கே ஆரன் வரவும் சரியாய் இருந்தது. ஆரனை பார்த்து கோபத்தில் கண்கள் சிவந்தான் நிமிலன்.

 

 

ஆரனும் சாதாரணமாக பார்த்தவாறு நின்றிருந்தான். ஆனால் பெண்கள் இரண்டு பேருக்கும் தான் உச்சகட்ட பதட்டம்.

 

 

 

தன் வீட்டுப் பெண்களை பார்த்த நிமிலன் இருவரையும் முறைத்ததிலேயே இவனுடன் உங்களுக்கு என்ன பேச்சு என்பது போல இருந்தது.

 

 

 

“இரண்டு பேரும் இந்த பக்கம் வரீங்களா!!” என்ற அவனது குரலில் இரு பெண்களும் மெல்ல அடி எடுத்து அவன் புறம் செல்ல..

 

 

 

“இவங்க கிட்ட உனக்கு என்ன பேச்சு?” என்று ஆரனை பார்த்து நேரடியாக கேட்டான்.

 

 

 

“கோயில் உண்டக்கட்டி முன்னாடியே கொடுத்துட்டாங்களா இல்ல.. இனிமேதான் கொடுக்க போறாங்களானு கேட்டுக் கொண்டிருந்தேன்.. நிமிலன்ன்ன்” நக்கல் சிரிப்பில் எகத்தாளமாக கூறியவனைப் பார்த்து பல்லைக் கடித்தான் நிமிலன்.

 

 

 

“இது உன்னோட ஆபீஸ் இல்ல.. உன்னோட ஷிப் இல்ல.. இந்த கோயில் எங்க பரம்பரைக்குனு உள்ள குலதெய்வக் கோயில்.. அடங்கி நடக்கலைன்னா அடக்கம் ஆயிடுவ” என்று அவனருகில் நெருங்கி நின்று கர்ஜித்தான் நிமிலன்.

 

 

 

“இது என்ன.. இவங்க ரெண்டு பேரும் ஏதோ ஜென்ம ஜென்மமா விரோதிகள போல சண்டை போட்டுகிறானுங்க.. பெரிய இவனுங்க மாதிரி வெறச்சுக்கிட்டு நிக்கிறானுங்க?” என்று தன் சந்தேகத்தை அருகிலிருந்த பெண்களிடம் கேட்டான் நிரஞ்சன். அவர்களுக்கும் இது புதிது என்பதால் அதிர்ச்சியோடு தான் இருவரின் மோதலையும் பார்த்துக் கொண்டிருந்தனர். மயூரிக்கு அரசல்புரசலாக தெரியும் தானே.. அதுதான் அவளது பயமும் கூட..

 

 

 

கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறான் அல்லவா அதோடுகூட ஆராதனாவுடன் அவனை அருகே பார்த்ததும் இன்னும் கோபம் தலைக்கேற வார்த்தைகளை விட்டான் நிமிலன்.

 

 

 

“பரம்பரை பரம்பரையாக உங்களுக்கு இது குலதெய்வமாக இருந்து இருக்கலாம்.. அதுக்காக நீங்க மட்டும்தான் இங்கே வரணும்னு ஏதும் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கிறதா? அறநிலைத்துறையிலிருந்து யாருக்கும் நோட்டீஸ் வரலையே?” என்று மீண்டும் நக்கலாக கேட்டான்.

 

 

 

அதற்குள் மெய்யறிவு அங்கு வந்துவிட “நிமிலா..!!” என்று உரக்க அழைத்தார். அவரை திரும்பி பார்த்தவன் கண்களாலேயே ஆரனை எரித்துவிட்டு பெண்களின் பக்கம் திரும்பி “இங்கே உங்களுக்கு என்ன வேலை? உள்ள போங்க!!” என்று அதட்டினான்.

 

 

 

அவர்கள் இருவரும் ஆரனை திரும்பிப் பார்க்க.. அவனும் மிக முக்கியமாக “பை கேர்ள்ஸ்!!” என்றான்‌ கையை ஆட்டி..

 

 

 

அதற்கே நிமலன் இருவரையும் இன்னும் முறைக்க.. இதற்கு மேல் இங்கு இருந்தால் ஆரன் வேண்டுமென்று நிமிலனின் முன் ஏதும் பேசுவான் என்று பயந்து இரு பெண்களும் மெய்யறிவை நோக்கி ஓடி சென்றுவிட்டனர். நிரஞ்சன் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தான்.

 

 

‘அடுத்த டார்கெட் நாம இருப்போமோ?’ என்று சிறு பயமாக.. ஆரனை பார்த்து கண்களால் சமிக்கை செய்து எதுவும் காட்டிக் கொள்ளாத என்று கூற…

 

 

 

“அப்புறம் நிரஞ்சா.. லாஸ்ட் டைம் பார்த்தை விட இப்போ கொஞ்சம் முகம் பளிச்சுன்னு இருக்கு. என்ன விஷயம்? ஏதேனும் நல்ல விஷயமா?” என்று நிரஞ்சனிடம் குசலம் விசாரிக்க.. 

 

 

நிமிலனோ நிரஞ்சனை பார்த்து நறநறவென்று பல்லைக் கடிக்க.. எச்சில் விழுங்கிய நிரஞ்சன், நிமலனை பார்க்காமல் ஆரனின் அருகில் சென்று “ஏன் பாஸ் உங்களுக்கு நல்லது தானே செஞ்சேன்.. உங்களால முடிஞ்சவரைக்கும் எங்களுக்கு ஆப்ப வச்சிட்டீங்க.. தயவுசெய்து இங்கிருந்து போய்டுங்க.. அவன் உங்களை எதுவும் செய்ய மாட்டான். எங்கள தான் கடிச்சி துப்புவான்” என்று அவனிடம் கெஞ்சாத குறையாக கூற..

 

 

 

“ஓகே நிரஞ்சன் பார்க்கலாம்” என்று அவனை ஆரத் தழுவி பிரியாவிடை பெற்றவனை கண்டவனுக்கு “நிமிலனுக்கு இவன் ஏத்தவன் தான்” என்று மனதுக்குள் சிரித்தாலும் வெளியில் நிமிலனை நிமிர்ந்து பார்க்காமல் இவனும் பெண்கள் பின்னாலேயே ஓடி விட்டான்.

 

 

 

ஆரனோ மயூரியை பார்க்க வந்திருக்க.. நிமிலனோ இவன் ஆராதனாவை பின் தொடர்கிறான் என்று தவறாக கணித்தான். இல்லை இல்லை ஆரனால் தவறாக கணிக்க வைக்கப்பட்டான்.

 

 

 

“இதை இப்படியே விட முடியாது இவனது தலையீடு முதலில் தொழில்.. இப்போது வீட்டுக்குள்ளா?? அது நான் இருக்கும் வரை நடக்காது” என்றவன் யோசனையோடு நடக்க பின்னால் வந்த மெய்யறிவு ஆரனைப் பார்த்திருந்தால் “என்ன ஆச்சு?” என்று கேட்க..

 

 

 

பெற்றவரிடமே ஆராதனாவை பற்றி பேச விருப்பம் இல்லாதவன் “ஒன்னு இல்ல மாமா.. அந்த ஆரன் எதுக்கு இங்க வந்தானு தெரியல.. அது நம்ம வீட்டு ஆளுங்க கிட்ட பேசிட்டு இருக்கும்போது..” என்று இவன் பொதுவாக குறிப்பிட..

 

 

 

“இது நமக்கு குலதெய்வ கோயிலாக இருந்தாலும்.. சாமி கும்பிட வர்றவங்க வரவங்களை வேண்டாம் சொல்ல முடியுமா? முடியாது நிமிலா!” என்ற சிறு கண்டிப்புடன்.

 

 

 

“சரி மாமா” என்றவன், அன்று இரவே அனைவரும் சாப்பிட்டு முடித்து வந்தவுடன் ஹாலில் அமரச் செய்து கல்யாண பேச்சை எடுத்து விட்டான் நிமிலன்.

 

 

 

இவன் ஏன் திடீரென்று ஆரம்பிக்கிறான் என்று யோசித்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள.. தெய்வானை அம்மாளுக்கு பெருமகிழ்ச்சி!! காலையில் குலதெய்வம் கோயிலுக்கு போய்ட்டு வந்தது. அங்கே அருள் சொன்ன பெண்ணின் நல்ல வார்த்தை.. இப்போது பேரனின் சம்மதம் எல்லாம் தெய்வசெயல் என்று கண்ணை மூடி கடவுளை வேண்டிக்கொண்டார்.

 

 

 

ஆனால் இதெல்லாம் ஆரனின் திட்டம்தான் என்பதை அறியும்போது???

 

 

“அப்பா.. மூணு கல்யாணத்தையும் ஒரே மேடையில் வச்சிருங்க அடுத்தடுத்து முகூர்த்தத்தில்.. அதுதான் பின்னாடி எந்த பிரச்சனைக்கும் வழி வகுக்காம இருக்கும்” என்று அவன் கண்டிப்புடன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பேச மெய்யறிவும் குருபரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

 

 

இந்த நேரத்தில் எதுவும் பேச வேண்டாம் என்று மோகனவள்ளியும் அமைதியாகவே இருந்தார் உலக அதிசயமாக..

 

 

 

அப்போது வேதவள்ளி மயூரியை பார்த்து “இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதா மயூ மா?” என்று நேரிடையாக கேட்க, அவளோ திக்கித் திணறி எச்சிலை விழுங்கி கொண்டு அத்தையை பாவமாக பார்த்தாள்.

 

 

 

“என் பெண்ணோட சம்மதம் அவள் முகத்திலேயே தெரிந்தது. ஆனால் உன் முகம் தான் கலக்கமா யோசனையாகவே இருக்கு இந்த கல்யாண பேச்சு ஆரம்பித்ததிலிருந்து.. பதில் சொல்லு” என்று அவர் நேரடியாக கேட்க, எல்லார் முன்னாலும் எப்படி பதில் உரைப்பாள் அவள் ஆரனை காதலிக்கிறாள் என்று!!

 

 

 அதுமட்டுமில்லாமல் காதல் என்ற சொல் இருவருக்கிடையே இதுவரை வரவே இல்லை. ஏற்கனவே விஷ அம்புகளாக வார்த்தைகளால் கொல்பவனிடம் நீ காதலிக்கிறாயா என்று கேட்டு அதற்கும் குதர்க்கமாக சொல்வானோ? என்று பயம் அவளுக்கு. ஆனாலும் அந்த குதர்க்கவாதியை தான் மிகவும் பிடித்திருந்தது மயூரியின் மனதுக்கு.

 

 

 என்ன செய்வது என்று புரியாமல் தவித்தவளை பார்த்த ஆராதனாவுக்கும் நிரஞ்சனுக்கும் பாவமாக இருக்க.. அந்த நேரத்தில் அவளுக்கு கை கொடுத்தான் நிரஞ்சன்.

 

 

 

“பெரியம்மா நான் மயூக்கிட்ட கொஞ்சம் பேசணும்!!” என்றவனை பார்த்து சரி என்றார்கள் பெரியவர்கள்.

 

 

 

“வா.. மயூ” என்று அருகில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்று கதவை சாத்திவிட்டு “உன் காதல் பிரச்சனை எனக்குத் தெரியும் மயூ” என்றவன், அவளுக்கு வந்த போட்டோவை காட்ட அதை பார்த்து ஒரு நிமிடம் ரசித்தவள், பின் “எதற்காக யாரு உனக்கு அனுப்பிச்சா?” என்று கேட்க, 

 

 

“எனக்கு தெரியாது. ஆனால் நம்ம குடும்பத்துல ஏதோ குழப்பம் பண்ணனும்னு நினைக்கிறவங்க தான் இதை அனுப்பி இருக்கணும்..

 

சரி அந்த பிரச்சினை விடு.. இப்போ நீ போய் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் என்று சொல்லு” என்றான் நிரஞ்சன்.

 

 

 

“என்னது?? நான் எப்படி.. உ..உன்ன.. எனக்கு ஆரன்..” என்று அவள் தடுமாற..

 

 

“நான் சொல்றத முழுசா கேளு மயூ. உன் விருப்பம் இல்லாமல் எதுவுமே நடக்காது. உன் கல்யாணம் இப்போ என் கூட நடக்கலைனா நிமிலன் ஆராதனா கல்யாணம் நடக்காது. உடனே என் தங்கையை நிமிலனுக்கு கொடுக்கணும்னு அம்மா சண்டைக்கு வருவாங்க.. அது இன்னும் வீட்டுக்குள்ள பிரச்சனையை தான் கொண்டுவரும். இப்போ நீ கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னால் ரெண்டு கல்யாணம் நடக்கும். ரஞ்சனிக்கும் மாப்பிள்ளை பார்த்திட்டு வாங்க.. மூன்று கல்யாணமும் ஒரே மேடையில் நடக்கும். ஆனால்…” என்று நிறுத்தி அவளை கூர்மையாக பார்த்தவன் “உன் கல்யாணம் உனக்கு பிடித்த ஆரனோடு!! சரியா?” என்றான்.

 

 

 

“இந்த விஷயம் நமக்குள்ள மட்டும் தான் வேறு யாருக்கும் தெரிய கூடாது. நான் ஆரனிடம் பேசி எப்படியாவது கல்யாணத்தனைக்கு அவரை வரவழைத்துடுறேன்” என்று பயங்கர திட்டம் போட்டான் இந்த வக்கீல்.

 

 

 

நிரஞ்சன் சொன்ன திட்டத்தை தவிர வேறு எதுவும் இப்பொழுது செய்ய முடியாது. ஏனென்றால் நிமிலனுக்கு ஆரன் மீது இருக்கும் கோபம் தான் சற்று முன் தெரிந்து விட்டதே..

 

 

 

‘ஆனால் தொழிலுக்காக அண்ணன் இவ்வாறு நடந்து கொள்வது அவளுக்கு பிடிக்கவில்லை. தப்பு இவன் மேலும் தானே இருக்கிறது

 

 அந்த ஆர்டரை தட்டி பறித்தது இவன் தானே?’ என்று அண்ணன் மேல் கோபம் வர.. அந்த நிமிடம் ஆரனின் வார்த்தைகள் அவள் மீது அவன் சொன்ன குற்றச்சாட்டு எல்லாம்.. அவள் மீது இருந்த அதீத அன்பினால் காதலினால் என்று நினைத்தாள். நிரஞ்சன் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டாள்.

 

 

 

இருவரும் அறையை விட்டு வெளியே வரும்போது பெரியோர்கள் அனைவரும் அவளை ஆர்வமாக பார்க்க.. பொதுவாக “எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம்” என்று கூறினாள்.

 

 

 

இப்போது தான் வேதவள்ளிக்கு நிம்மதியாக இருந்தது. நிரஞ்சனை பார்த்து “பெரிய மனுஷன் ஆயிட்ட டா.. பாரு பொண்ணை பேசியே சம்மதிக்க வைத்துவிட்டான்” என்று அவர் சிரிக்க.. மற்றவர்களுக்கும் அந்த சந்தோசம் பற்றிக்கொண்டது பிள்ளைகளுக்கு தங்கள் வாழ்த்தை தெரிவித்தார் அவர்.

 

 

 

ஆனால் ஆராதனா அதிர்ச்சி விலகாமல் மயூரியை பார்க்க அவள் கண்களால் அமைதியாக இரு என்று சொன்னாள். அன்றிரவே ஆராவிடம் அனைத்தையும் கூறிவிட..

 

 

“திட்டம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் நிரஞ்சன் சரியா செய்திடுவானா? எனக்கு பக் பக்கென்று இருக்குடி!!” என்று அவள் தன் பயத்தை கூற..

 

 

“கோடு மட்டும்தான் நிரஞ்சன்.. அதில் ரோடு போடுவதெல்லாம் ஆரன் வித்யூத்!!” என்று சிரித்தாள் மயூரி.

 

 

அதன்பிறகு ஆராதனாவும் அன்று ஹோட்டலில் நடந்ததை அவளிடம் கூறி.. ஆரன்‌ எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்று கூற நானும் அதை புரிந்து கொண்டேன் என்று பதிலளித்தாள்.

 

 

 

தெய்வானை அம்மாள் மறுநாள் முதல் கல்யாண வேலையை ஆரம்பித்துவிட்டார். எங்கே பிள்ளைகள் மனம் மாறி விடுவாரோ என்று!!

 

 

ஏற்கனவே வந்திருந்த சம்மதத்திற்கு மற்ற இரு பெண்களுக்கும் எங்கள் வீட்டிலேயே மணமகள் இருக்கிறார்கள் என்று கூறி ரஞ்சனியின் ஜாதகத்தை அனுப்பி வைக்க.. பத்து பொருத்தத்திற்கு எட்டு பொருத்தம் சரியாக இருக்கு என்று அவர்களும் பதில் அளித்து தங்கள் சம்மதத்தை தெரிவித்தனர்.

அப்புறம் என்ன திருமணம் வேலைகள் கலைகட்டியது செந்தூராரின் வீட்டில்..

அதேநேரம் எதோ கெட்ட கனவு கண்டது போல அதிர்ந்து கண் விழித்த விஜயேந்திரனுக்கு மனது சரியில்லாமல் போக.. ஆரனை பார்த்தே ஆக வேண்டும் என்று அவனுக்கு கூடக் கூறாமல் தனி சார்டட் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்து இறங்கினார்.

6 thoughts on “ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 15,16”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top