ATM Tamil Romantic Novels

என் மோகத் தீயே குளிராதே 32

அத்தியாயம் 31

 

 

“என்ன ஹரி.. எதுக்கு முகத்தை இப்படி வைச்சுருக்க?” என்ற அர்ஜுனுக்கு பதிலாக வேறொரு அறைக்கு செல்லும் கலாவதியையும் ஹாசினியையும் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்க, அதனை புரிந்து கொண்ட அர்ஜுன்,

 

 

“இந்த மாதிரி நேரத்துல நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா படுக்குறது தான் நல்லது.. அவங்க எது பண்ணாலும் உங்க நல்லதுக்கா தான் இருக்கும்..” என்ற அர்ஜுனை முறைத்துப் பார்த்தான் ஹரிஷான்த். 

 

 

“பாட்டி எப்ப ஊட்டில இருந்து வந்தாங்க?”

 

 

“எப்ப திரும்பவும் ஊருக்கு கிளம்புவாங்கன்னு.. டேரக்டா கேட்காம, இப்படி தலையை சுத்தி கேட்குற?” என்று சிரித்தவாறே கேட்ட அர்ஜுனிடம் அழகாக புன்னகைத்தான் ஹரிஷான்த்.

 

 

“அவங்க ப்ரெண்ட் வீட்டுக்கு ஒரு மாதம் தங்குறதுக்காக போயிருந்தவங்க, ஹாசினி ப்ரெக்னன்ட்னு தெரிஞ்சதும் ஓடி வந்துட்டாங்க..”

 

 

“வராமலேயே இருந்திருக்கலாம்..” என்று முணுமுணுத்தவனின் தலைமுடியை கோதிவிட்ட அர்ஜுன்,

 

 

“நீ இன்னும் மாறவேயில்லடா.. இன்னும் குழந்தையாகவே இருக்க.. ஆமா, விளானி எங்க? உங்கக்கூடவே அவளை அனுப்பி வைக்குறதா சொன்னான்?” என்று புருவத்தை சுருக்கி கேட்க,

 

 

“ப்ச்.. அவனுக்கு ஏதோ ப்ராஜெக்ட் லான்ஜிங் இருக்காம்.. அது முடிஞ்சதும் அவனே கூட்டிட்டு வர்றானாம்..” என்றவனின் கண்கள் ஹாசினியின் அறைக்கதவையே வட்டமிட, 

 

 

“சரி.. நீ போய் ரெஸ்ட் எடு.. எனக்கு கிச்சன்ல கொஞ்சம் வேலையிருக்கு..” என்றவாறே சமையலறை பக்கம் நகர்ந்த அர்ஜுனின் கையைப் பிடித்து தடுத்த ஹரிஷான்த்,

 

 

“மாமா நான் சொன்னதெல்லாம்?” என்று கேட்டவனை புன்னகையோடு பார்த்தவன்,

 

 

“செஞ்சு முடிச்சுட்டேன் ஹரி.. ஹர்ஷுவும் வந்துட்டான்னா.. ஸ்டார்ட் பண்ணிடலாம்..” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல, தனது அழைப்பேசியை எடுத்து ஹர்ஷவர்தனுக்கு அழைத்தான் ஹரிஷான்த். 

 

 

“சொல்லுடா அண்ணா..”

 

 

“எப்ப வர்ற?”

 

 

“இன்னைக்கு நைட் பேச்சுலர் பார்ட்டி முடிஞ்சதும் நாளைக்கு காலைல கிளம்பி வந்துடுவோம்..” 

 

 

“உனக்காக தான் வெயிட்டிங்..”

 

 

“ஓகே.. ஓகே.. எந்த டிலேவும் ஆகாம பார்த்துக்குறேன்..”  

 

 

“ம்ம்ம்..” என்று போனை வைத்தவன், மெல்ல பூனைப் போல் நடந்து ஹாசினியின் அறைக்குள் நுழைய, அங்கே தனியாக கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள் ஹாசினி. பாட்டி ஏதோ வேலையாக வெளியே சென்றிருப்பதை நினைத்து நிம்மதியடைந்தவன், தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, அவளுருகே சென்று படுக்க, தன் மன்னனின் நெஞ்சில் தல சாய்த்து அயர்ந்து உறங்களானாள் ஹாசினி. அவளது தலை முடியை கோதிவிட்டவன், அவளது நெற்றியில் முத்தமிட்டு கண் மூட, உள்ளே பேரமைதியை உணர்ந்தான். காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் எவ்வளவு சுகமானது என்பதை உணந்தவன், அவளை அணைத்தபடியே கண்ணயர்ந்தான். 

 

**********************************************

 

“ட்டு டே ஐம் நாட் கோயிங் டு ப்ரெசெண்ட் திஸ் ப்ராஜெக்ட்..” என்று மேடையில் அனைவரின் முன்னும் கம்பீரமாக கூறிய ஹர்ஷவர்தன், விளானியை நோக்கி கை நீட்ட, மேடையை நோக்கி நடந்து வந்தவள், ஹர்ஷவர்தனிடம் இருந்து மைக்கை வாங்கிக் கொண்டாள். அவர்களது ப்ராஜெக்ட்டைப் பற்றி முழுமையாக பேசி முடித்தவள், ஹர்ஷவர்தனையும் அங்கிருக்கும் அனைவரையும் பார்க்க, கை தட்டி அவளைப் பாராட்டியவன், அனைவரின் முன்னிலையிலும் அவளை அணைத்து பாராட்டினான். நடப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அதனை யாருக்கும் தெரியாது மறைத்துக் கொண்டவளின் தோளில் கையிட்டு தன்னோடு இணைத்துக் கொண்டான் நகுலன். அதே சமயம் மேடையில் நின்று கொண்டிருந்த விளானியின் முன் ஒரு காலை மடக்கி அமர்ந்த ஹர்ஷவர்தன், தனது கையில் வைத்திருந்த வைர மோதிரத்தை அவள் முன்னே நீட்டியவாறே,

 

 

“ஐ லவ் யூ ஹனி.. இன்னொரு தடவை எல்லோருக்கும் தெரிஞ்சு கல்யாணம் பண்ணிக்கலாமா? வில் யூ மேரி மீ?” என்று கேட்க, வெட்கப் புன்னகை பூத்தவாறே அவன் முன்னே தன் கையை நீட்டியவளின் வெண் பஞ்சு விரலில் மோதிரத்தை மாட்டியவன், அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவன் கொடுத்த தைரியத்தில் தனது திறமையை நிரூபித்தவள், அவன் காண்பிக்கும் காதலின் வேகம் தாளாது, அவனுடன் இணைந்து கொண்டாள். 

 

தூர நின்று பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவின் தலையை தன் தோளில் சாய்த்த நகுலன், 

 

“இதுவும் கடந்து போகும்.. யாரையும் ஃபோர்ஸ் பண்ணி வர்றதுக்கு பெயர் காதலில்லை.. நாம காதலிக்குறவங்களை விட நம்மை காதலிக்குறவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா.. வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்..” என்று கூற, 

 

 

“சொல்றதுக்கு நல்லாருக்கும்.. ஆனா, அதை அனுபவிக்குறவங்களுக்கு தான் வலி புரியும்..” என்றவள் தன் கண்ணீரை உள்ளிக்க, 

 

 

“எனக்கும் தெரியும்..” என்றான் அவளை இமைக்காது பார்த்தவாறே..

 

அவனது பார்வையின் அர்த்தம் புரியாது, அவனது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, ஏதோ கடலைகளுக்குள் மாட்டிக் கொண்டு மீள முடியாது, அதனுள் சிக்கிக் கொண்டது போல் இருக்க, தன்னையும் அறியாது, அவனது கண்விழிப்பார்வைக்குள் விழுந்து விட்டாள் ப்ரியா. தன்னை மட்டுமல்ல தன்னை சுற்றி உள்ளவர்களையும் உள்ளே இழுக்கும் மாயசக்தி காதலுக்கு உண்டு.. காதலிப்பவர்களுக்கு மட்டும் தான், தான் அன்பு கொண்டவர்களின் வலி புரியும்.. அவளது வலியின் மருந்தாக துடித்தது நகுலனின் மனம்.. அவளது கவலையும்‌ ஏக்கத்தையும் துடைத்திட துடித்தன அவனது கைகள்.. 

 

 

“டியர் ஃப்ரெண்ட்ஸ்.. எங்க சொந்த ஊர்ல திரும்பவும் எங்க மேரேஜ்‌ நடக்க போகுது.. நீங்க எல்லோரும் வரணும்னு நான் கேட்டுக்குறேன்.. அதுவுமில்லாம இந்த ப்ராஜெக்ட் சக்ஸஸ் பார்ட்டியோட சேர்த்து பேச்சுலர் பார்ட்டியும் இன்னைக்கு நைட்டு ஹோட்டல்ல அரேஞ்ச் பண்ணியிருக்கேன்.. சோ.. எல்லோரும் வரணும்..” என்ற ஹர்ஷவர்தனை முறைத்துப் பார்த்தான் சஜன். விளானியை கையில் ஏந்தியவாறே மேடையில் இருந்து கீழே இறங்கியவனின் முன்னால் வந்து நின்றான் சஜன். 

 

 

“எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..” 

 

 

“என்ன உண்மை?”

 

 

“எப்ப இருந்து இப்படி?”

 

 

“எப்படி?”

 

 

“உங்க லவ்?”

 

 

“சின்ன வயசுல இருந்தே..”

 

 

“அப்போ ஏன்டா அப்படி சீன் போட்ட? முன்னாடியே சொல்லியிருந்தா.. நாங்க கொஞ்சம் அலர்ட்டா இருந்துருப்போம்ல.. உனக்கு அவளை பிடிக்காதுன்னு நாங்க..” என்ற சஜன், மேடையின் சற்று தூரத்தில் நின்றிருந்த ப்ரியாவையும் நகுலனையும் பார்க்க, 

 

 

“அவனுக்கு முன்னாடியே தெரியும்.. நீ தான் ரொம்ப லேட்டு.. சரி வழிவிடு.. நாங்க ஊருக்கு கிளம்புறோம்..” என்ற ஹர்ஷவர்தன் முன்னே நடக்க,

 

 

“அப்போ.. பேச்சுலர் பார்ட்டி?” என்று குழப்பத்துடன் கேட்டான் சஜன். 

 

 

“அதான் பேச்சுலர் பார்ட்டின்னு சொல்லிட்டேனே.. சோ, நீங்க ரெண்டு பேரும் தான் பார்த்துக்கணும்.. பார்ட்டியையும் ஃபார்மாலிட்டியையும் முடிச்சுட்டு ரெண்டு பேரும் எங்க சொந்த ஊருக்கு வந்து சேருங்க..”

 

 

“எதுடா உங்க சொந்த ஊரு?”

 

 

“தூத்துக்குடி.. புங்கவர்ணத்தம்..”

 

 

“டேய் சக்ஸஸ் பார்ட்டி.. நீங்க தான்டா பார்த்துக்கணும்.. கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கு.. இன்னைக்கு நாங்க கிளம்பல.. அடுத்த ஃப்ளைட்ல பாட்டி கிளம்பி வந்துடுவாங்க.. சோ.. பாய்.. பாய்..” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காது, எதிரே வந்த ஆகாஷை பார்த்தும் பார்க்காதது போல் சென்றான் ஹர்ஷவர்தன். 

 

 

“டேய்.. டேய்.. எதுக்குடா இப்படி தூக்கிட்டு ஓடுற? ஆகாஷ் வர்றான் பாரு.. அவன்கிட்ட நாலு வார்த்தை பேசிட்டு வர்றேன்..”

 

 

“எதுக்கு இந்த தடவை அவன்கூட சேர்ந்து ஓடுறதுக்கா? மேரேஜ் முடியாம உன்னை எங்கேயும் தனியா விடுவதாயில்லை..”

 

 

“நமக்கு தான் மேரேஜாகிடுச்சு.. விட்டா இன்னும் ரெண்டு மாசத்துல புள்ளையே ரெடி பண்ணிடுவ.. அப்புறம் எதுக்குடா திரும்பவும் மேரேஜ் பண்ணணுங்குற? ஒரே மூஞ்சியை திரும்பத் திரும்ப பார்த்தா..”

 

 

“ஏன் போரடிக்குதா?”

 

 

“அதை எப்படி என் வாயால சொல்லுவேன்?”

 

 

“உனக்கு இருக்குற கொழுப்புக்கு.. அந்த மேனேஜர்கிட்டயே அசிஸ்டெண்ட்டா இருக்கவிட்டுருக்கணும்..”

 

 

“அய்யோடா.. உனக்கு அவனைப் பத்தி தெரியாதா? அவனை ரெஸ்ட் ரூம்குள்ள விட்டு பூட்டிட்டு தானே நான் ஸ்டேஜ்கு வந்தேன்.. இல்லேன்னா.. அவன் என்னைய ப்ராஜெக்ட் பிரசண்ட் பண்ண விட்டுருப்பானா?”

 

 

“அடிப்பாவி.. உன்னை?” என்றவன் அவளை காரின் முன் இருக்கையில் அமர வைத்து, அவளோடு சேர்ந்து உள்ளே விழுந்தான்.‌ அவளது இடையில் விரல்காளால் கிச்சு கிச்சு மூட்ட, கலகலவென சிரிக்கத் தொடங்கினாள் விளானி. 

 

 

“உன்னையவெல்லாம்.. வெளிய விடவே கூடாது டி..” 

 

 

“ஏனாம்?”

 

 

“என்னைய தவிர வேற யாரையும் நீ பார்க்கக் கூடாது..” என்றவன் அவளது இதழை கவ்விக் கொள்ள, அவனது கழுத்தோடு கைகள் கோர்த்துக் கொண்டவள், அவனுக்கு இசைந்து கொடுக்கத் தொடங்க, அவனது அழைப்பேசி சிணுங்கியது. அதனை பார்த்தவள் சிரித்துக் கொண்டே,

 

 

“உன் அண்ணனுக்கு மூக்கு வேர்த்துரும்.. கிளம்பு.. சீக்கிரம்.. நாம ஊருக்கு போகணும்..” என்றவாறே அவனை விலக்கி விட,

 

 

“ஊருக்கு போனதும் நம்ம மேரேஜை பத்தி யார்க் கிட்டேயும் சொல்லக்கூடாது.. குறிப்பா.. அண்ணிக்கிட்ட சொல்லவேக்கூடாது..”

 

 

“ஏன் அக்காக்கிட்ட சொல்லக்கூடாது?”

 

 

“இது அண்ணன் அண்ணிக்கு கொடுக்குற சர்ப்ரைஸ்.. புரியுதா? வழக்கம் போல உண்மைவிளிம்பியாய் உள்ள புகுந்து ஆட்டத்தை கெடுத்துறாத..”

 

 

“ம்ம்.. யோசிக்குறேன்..”

 

 

“யோசிக்கேறியா? மவளே அவங்களுக்கு மட்டும் இதை சொன்னேன்னு வைச்சுக்கோ..”

 

 

“என்னடா பண்ணுவ?”

 

 

“ரூமை விட்டு வெளியே விடவே மாட்டேன்.. ஃபுல் ரொமான்ஸ் தான்.. சொல்லிட்டேன்..”

 

 

“நீ.. ரொமான்ஸ்? போடா டேய்.. இதுக்கு உன் அண்ணனை சொல்லு.. ஏதோ அக்செப்ட் பண்ணலாம்.. நீயெல்லாம் அதுக்கு சரிபட்டு வரமாட்ட..”

 

 

“நான்.. நான் அதுக்கு சரிபட்டு வரமாட்டேனா? வேணாம்.. என்னைய சீண்டாத.. அப்புறம் உனக்கு தான் பிரச்சினை..”

 

 

“அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்.. முதல்ல வண்டியை எடு.. நான் இன்னும் என்னோட பேக்கிங்கை முடிக்கல..” என்றவள் அவனை விரட்டி, ஊருக்கு கிளம்பியவளை தன் கை அணைப்பிற்குள் வைத்தவாறே காரை ஓட்டினான் ஹர்ஷவர்தன். 

 

*****************************************

 

“டேய்.. உன் பொண்டாட்டி மாசமா இருக்குறதுனால தேங்காய் பழம் உடைக்கக் கூடாது.. அதுனால சாமி பேருக்கு மட்டும் அர்ச்சனை பண்ணிட்டு வா..” என்ற கலாவதியை முறைத்து பார்த்தவாறே, தன் மனைவியை அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் வந்தவன், அர்ஜுனை பார்த்து புருவத்தை உயர்த்திக்காட்டி சைகை செய்ய, சிரித்துக் கொண்டே அவர்களது அருகில் வந்தார் மலர்க்கொடி. ஹரிஷான்த் கையில் பட்டு வேட்டி சட்டையை கொடுத்தவர், ஹாசினியின் கையில் பட்டுப்புடவையை நீட்ட, அவளை புரியாது பார்த்தாள் ஹாசினி. 

 

 

“வா.. இந்த புடவை போய் கட்டிட்டு வரலாம்..” என்றவர் அழைக்க, புரியாது ஹரிஷன்த்தை பார்க்க, அவர்களோடு போகுமாறு கண்களால் மொழி பேசியவன், தானும் தனது ஆடையை மாற்றச் சென்றான். 

 

 

“என்ன இன்னும் ஹர்ஷு வரலை?”

 

 

“வந்துடுவாங்க அங்கிள்..” என்று ஹரிஷான்த் சொல்லி முடிக்கும் முன் அங்கு வந்து நின்றான் ஹர்ஷவர்தன். 

 

 

“இதோ.. நான் சொல்லல? வந்துட்டான் பாருங்க..” என்ற ஹரிஷான்த்தை முறைத்துப் பார்த்தவாறே, தன் ஆடைகளை கலைந்து பட்டு வேட்டி சட்டையை அணிந்தான் ஹர்ஷவர்தன். 

 

 

“என்ன நடக்குது? சாமி கும்மிடலாம்னு கூட்டிட்டு வந்து, ட்ரெஸ் மாத்த சொல்றீங்க?” என்ற ஹாசினியின் வாயை மூடிய விளானி, “பேசக்கூடாது, சீக்கிரம் கிளம்பு..” என்றவாறே புடவையை உடுத்த, அவர்களுக்கு பின்னால் வந்த மலர்க்கொடியோ,

 

 

“அவ கிளம்புவது இருக்கட்டும்.. நீ எப்ப கிளம்பப் போற? வாயாடி.. வா இங்க.. ஆளு வளர்ந்தது தான் மிச்சம்.. இன்னமும் புடவை கட்டத் தெரியுதா?” என்றவாறே விளானியின் ஆடையை மாற்றிக் கொண்டிருந்தவரை பார்த்தவள்,

 

 

“அக்காவிற்கு கட்ட வருது.. ஆனா.. அதே எனக்கு கட்டணும்னா வரமாட்டேங்குது..” என்று கூற, புன்னகையுடனே தன் இரு மகள்களையும் அலங்கரித்தார் மலர்க்கொடி. அவர்களுக்கு முன்பு அலங்காரம் செய்து போது கிடைக்காத நிம்மதியும் மகிழ்ச்சியும் இப்போது கிடைத்தது. அதன் பின் கோயிலுக்கு அருகில் இருந்த கல்யாண மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல, அங்கே மொத்த மீடியாவும் மக்கள்கூட்டமும் இருந்தனர். அதனை பார்த்த ஹாசினி மற்றும் விளானி கண் விரித்து பார்க்க, பாதுகாவலர்கள் உதவியுடன் அங்கு பிரம்மாண்டமாக போடப்‌பட்டிருந்த திருமண மேடைக்கு வந்து சேர்ந்தனர். மேடையில் நின்றிருந்த ஹரிஷான்த் தன் அருகில் வந்த ஹாசினியின் முன் தன் கையை நீட்ட, அவனை கேள்வியாக பார்த்தாள் ஹாசினி. 

 

 

“நமக்கு கல்யாணம் நடந்தப்போ.. முழுமனசா அதுனால.. இப்போ எல்லோர் முன்னாடியும் திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கலாமா? நான் உன்னைய நல்லா பார்த்துப்பேன்.. இந்த வாழ்க்கை முழுக்க சந்தோஷமா வைச்சுப்பேன்.. இந்த உலகத்துலேயே பெஸ்ட் பொண்டாட்டி நீ தான்.. ப்ளீஸ் வில் யூ மேரி மீ?” என்று கேட்க, இது நாள் வரை எதற்காக அவள் காத்திருந்தாளோ, அது அவளது கை மேல் பலனாக கிடைக்கும் போது வார்த்தையின்றி கண் கலங்கிய நின்றிருந்தாள். அழுது கொண்டே அவனது மார்பில் சாய்ந்தவளின் விரலில் வைர மோதிரத்தை அணிவித்தவன், அவளது கைப்பற்றி தானே மணமேடைக்கு அழைத்துச் சென்றான். அவர்களைப் பார்த்து கொண்டிருந்த விளானியோ, “இப்ப நீ என்ன பண்ணப்போற? அப்படியே உன் அண்ணனை காப்பியடிக்க போறியா?” என்று உதட்டை அசைக்க, அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டவன்,

 

 

“நம்ம வழி எப்பவும் தனி வழி..” என்றவாறே மேடைக்கு தூக்கிச் செல்ல, அவளுக்கு தான் வெட்கம் பிடிங்கித் தின்றது. நடப்பது அனைத்தையும் மீடியாக்களும் கேமராக்களும் அழகாக படம் பிடித்துக் கொள்ள, மீண்டும் தங்கள் நாயகிகளின் கழுத்தில் மங்களநாணை கட்டினர் இருவரும். இதனை முன் வரிசையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த நகுலனின் கைவிரல்கள் ப்ரியாவின் கைவிரல்களோடு கோர்த்துக் கொள்ள, அவனை ஒரு முறை திரும்பிப் பார்த்த ப்ரியா, எதுவும் கூறாது திருமணமேடையை பார்க்கத் தொடங்க, மௌனம் சம்மதம் என்று சொல்லாமல் சொல்வதை உணர்ந்தான். சொர்க்கமோ நரகமோ நாம் வாழும் வாழ்க்கை நம்ம கையில்.. வாழ்க்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லை.. நிலையில்லாத வாழ்க்கையில் அன்பை மட்டும் பிரதானமாக கொண்டு வாழ வேண்டும்.. காதல் யாருக்கு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.. கிடைத்த வாழ்க்கையை காதலுடன் வாழ்ந்தால் வாழும் போதே சொர்க்கத்தை காணலாம். இந்த அன்பு ஜோடிகளின் வாழ்க்கை சிறக்க, நாமும் வாழ்த்தி விடைபெறுவோமாக!!

 

**************சுபம்*******************

3 thoughts on “என் மோகத் தீயே குளிராதே 32”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top