ATM Tamil Romantic Novels

உயிரோடு விளையாடும் அழகிய 02

அத்தியாயம் 2

 

“பாட்டிஇஇஇஇ..” என்ற அலறலுடன் மேலிருந்து கீழே விழுந்த நிலானியைக் கண்டு “நிலாஆஆஆஆஆ” என்ற சத்தத்துடன் அவளது கையைப் பிடிக்க முயற்சித்தவரின் கையில் வாட்டர் பாட்டில் தட்டுப்பட்டது. முகம் முழுக்க வியர்வையோடு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினார் ராசாத்தி அம்மாள். 

 

“அப்பாடி நான் கண்டதெல்லாம் கனவா? அம்மு.. குட்டி” என தன் அருகில் தூங்கிய குழந்தைகளை தேடினார். அவர்களை அங்கு காணாது மீண்டும் அவரது மனதில் திகில் எழுந்தது. உடனே எழுந்து வெளியே சென்று வீடு முழுவதும் அவர்களை தேடினார். வீட்டிற்கு வெளியே இஷான் அழுகும் சத்தம் கேட்டது. உடனே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தவர் அதிர்ந்து போனார். அங்கே வீட்டிற்கு வெளியே இருந்த துளசி மாடத்தின் அருகே நிலானி மயங்கிப் கிடக்க அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான். 

 

“அக்கா.. வாக்கா.. வாக்கா.. பாட்டி.. பாட்டிஇஇஇ..” எனக் கத்திக் கொண்டிருந்தான். சட்டென ஓடிச் சென்று நிலானியைத் தூக்கி தன் மடியில் வைத்து கொண்டவர் இஷானிடம் திரும்பி,

 

“ஏன் இஷான்.. என்னாச்சு? ஏன் ரெண்டு பேரும் வெளியே வந்துருக்கீங்க?” எனக் கேட்டார். அதற்கு அழுதுகொண்டே,

 

“பாட்டி.. அக்கா பாதி ராத்திரில எழுந்திருச்சு கதவைத் திறந்து வெளியே போனாளா.. அந்த சத்தத்துல நானும் முழிச்சிட்டேன்.. அவ என்னதான் செய்யுறான்னு பார்க்க நானும் அவ பின்னாடியே போனேன்.. இதோ இந்த துளசிமாடத்துக்கிட்ட வந்ததும் மயங்கி கீழே விழுந்துட்டா.. நான் அவ கையால் புடிச்சு.. இதோ இப்படி இழுத்தேனா.. அப்போ இந்த மாடத்துக்கு அப்புறம் இருந்தது என்னை முறைச்சு முறைச்சு பார்த்துச்சு.. நான் அக்காவை எழுப்பிப்பார்த்தேன்.. அவ எந்திரிக்கவேயில்ல.. நான் பயந்து காத்தினேனா.. அதோட கையி.. இவ்வளோ நீளமாயிருந்துச்சு.. ஆனா இந்த துளசி மாடத்தைத் தாண்டி வரல.. அதான் உங்கள கூப்பிட்டுட்டு இருந்தேன்.. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு பாட்டி..”

 

“ஒன்னுமில்ல டா.. ஒன்னுமில்ல.. அதான் பாட்டி நான் இருக்கேன்ல.. பயப்படக் கூடாது..” எனக் கூறியவர் அந்த துளசிமாடத்தைப் பார்த்தார். அதில் மலர்களிட்டு விளக்கேற்றப்பட்டிருந்தது. மங்கம்மாவை மாலையில் விளக்கேற்றி வைக்கப் சொல்லியிருந்தார். ஆனால் அப்போது ஏற்பட்ட விளக்கு இவ்வளவு நேரம் ஆகியும் அணையாமல் இருப்பது ராசாத்தி அம்மாளுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. தன் மடியில் படுத்திருந்த நிலானியை ஒரு கையில் தூக்கிக் கொண்டு இஷானை ஒரு கையில் பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றவர், தனது குல தெய்வத்தை நினைத்து வணங்கியவர், அதன் திருநீற்றை எடுத்து கட்டிலைச் சுற்றியும் அறையின் வாசலிலும் போட்டார். அதன்பிறகு கட்டிலில் தூங்கிய தனது பேரக்குழந்தைகளின் அருகில் வந்து அமர்ந்தவர், இந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய ஆரம்பித்தார். தனதருகில் காற்றின் சலசலப்பை உணர்ந்தும் நிறுத்தாமல் கூறினார். பின்னர் ஒருவாறு சலசலப்பு அடங்கி அவ்விடத்தில் அமைதி நிலவியது. 

 

கண்களை மூடி உறங்க முயற்சித்தார். ஆனால் உறக்கம் தான் வருவேனா என்றது. அதிகாலையில் எழுந்த நிலானி எப்போதும் போல் இயல்பாக இருந்தாள். அவளுக்கும் நேற்று இரவு நடந்தது எதுவும் ஞாபகத்தில் இல்லை. தனது மருமகளிடம் இதைப் பற்றி பேசுவதை தவிர்த்தார். ஏனெனில் அவளுக்கு இந்த பேய் பிசாசு மீதெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆதலால் தனது பேத்தியை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விடுவாளோ? இதனால் பேத்திக்கு ஏதும் பாதிப்பு வந்துவிடுமோ என தவித்தார். எதற்கும் தனது பேரக்குழந்தைகளின் ஜாதகத்தை பார்க்கலாம் என நினைத்தவர், அதனை எடுத்துக் கொண்டு ஜோசியரிடம் சென்றார். 

 

“ம்ம்ம்.. உங்க பேத்திக்கு இருக்குறது கிரகமாலை ஜாதகம். எந்தெந்த கிரகம் எந்தெந்த இடத்தில் இருக்கனுமோ.. அது அது அந்தந்த இடத்துலே இருக்குது.. அவளுக்குன்னு எந்த தோஷமும் இல்லை. அப்புறம் அவ இருக்குற இடம் எப்பவும் செழிப்பாத்தான் இருக்கும். உங்க பேரேனோட ஜாதகத்துலயும் எந்த குறையும் இல்லை. வீணா மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க.” எனிக் கூறி அனுப்பினார் ஜோசியர். 

 

ஜாதகம் பார்த்துவிட்டு திரும்பி நடந்து கொண்டிருந்தவரை தடுத்து நிறுத்தினார் அத்தெருவில் துணிகளை சலவை செய்து தருபவர். 

 

“அம்மா.. கொஞ்சோ நில்லுங்க..”

 

“நீங்க?”

 

“நான் இந்தத் தெருவுல சலவ செஞ்சு கொடுப்பவேங்க.. நீங்க இருக்குற இடத்துல ஒரு பிரச்சனை இருக்குதுங்க..”

 

“அது எப்படி உங்களுக்கு தெரியும்?”

 

“இப்போ நீங்க இருக்குற வீடு.. முன்னாடி ஒரு பாழடைஞ்ச பங்களாவா இருந்துச்சு.. அதை கடிச்சு தான் இந்த புது பங்களாவ காட்டினாங்க..”

 

“அதனால் என்ன?”

 

“அந்த பழைய பங்களாவுல ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி அந்த வீட்டுல இருந்த ஜமீன்தார் ஒரு பெண்ணை காதலிச்சாராம்.. அந்த பொண்ணு அவரை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு எவ்வளவோ சொல்லியும் கேட்கலை.. அந்த கோபத்துல அந்த பொண்ணையும் பையனையும் இந்த பங்களாவுல வச்சு கொன்னுட்டாராம்.. ஆனா சாகும் போது அந்த பொண்ணு ஜமீன்தாரை பழிவாங்க எத்தன ஜென்மம் எடுத்தாலும் இங்க காத்துட்டு இருப்பேன்னு சொல்லிட்டு செத்துப் போச்சாம்.. அன்னைலருந்து இந்த பங்களாவுக்கு யாரும் வர்றதில்லையாம்.. நான் சின்னப்புள்ள இருக்குறதுல இருந்து இந்த கதைய சொல்லிருக்காங்க.. இப்பவும் ராத்திரியான அந்த பங்களாவுல ஏதோ பொண்ணு நடமாடுற மாதிரி இருக்கும்.. அதனால தான் சொல்றேன்மா.. நீங்க அந்த வீட்டுலருந்து கிளம்பி போயிருங்க.. ஏதோ உங்களைப் பார்த்து சொல்லனும்னு தோணுச்சு.. அதான் சொல்லிட்டேன்..” எனக் கூறிரவர் தனது வேலையை செய்ய தொடங்கியிருந்தார். 

 

அவர் வீட்டிற்குள் நுழைந்ததும் வாசலில் நின்ற காரை வைத்து கண்டுகொண்டார் தன் மகன் விஜய் வந்துவிட்டான் என்று. வேகமாக உள்ளே சென்றார். அங்கே வீட்டின் உள்ளே தனது மகன் இஷானை மடியில் அமர்த்திக் கொண்டும் நிலானியை பக்கத்தில் அமர்த்திக் கொண்டும் கதை பேசிக் கொண்டிருந்தான். வெளிநாட்டு கம்பெனியில் வேலை செய்யும் தன் மகன் காடு ஆறு மாதம் நாடாறு மாதம் என ஊர் ஊராக சுற்றுவதை நினைத்து அவனௌ வாஞ்சையோடு பார்த்திருந்தார். 

 

“பாட்டி.. இங்கப்பாருங்க.. அப்பா வந்துட்டாரு..”

 

“அம்மா.. எப்படியிருக்கீங்க?”

 

“நீ முதல்ல சொல்லு.. இன்னும் எத்தன நாள் எங்கக்கூட இருப்ப?”

 

“ஏன்மா கோபப்படுறீங்க? என்னோட வேலை அப்படி.. இப்படி ஓடி ஓடி சம்பாதிக்கலனா.. நாம் வசதியா வாழ முடியுமா?”

 

“வசதியென்ன? பொல்லாத வசதி.. வயசான காலத்துல நீ எங்கூட இருக்கனும்னு நான் நினைக்க மாட்டேனா? நீ சம்பாதிச்சதெல்லாம் போதும்.. கூலோ கஞ்சியோ எங்கக்கூடவே இருடா..” என நா தளுதளுக்க கூறிய ராசாத்தி அம்மாளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் விஜய். 

 

 

“சரி நீங்க மட்டும் வந்துருக்கீங்க.. அப்பா எங்க?”

 

“க்கும்.. நீ ஒரு பக்கம் வேலைன்னு ஊரைச்சுத்துற.. அவரு ஒரு பக்கம் பிஸ்னஸ்னு சுத்துறாரு.. நான் யாரைடா பிடிச்சு வைக்குறது?”

 

“நீங்க யாரையும் பிடிச்சு வைக்க வேண்டாம்.. நந்தினி நேத்து ஃபோன் பண்ணிருந்தா..”

 

“என்னவாம் உன் அக்காவுக்கு?

 

“ஏன் என்னோட அக்கான்னு சொல்லுறீங்க? உங்க மகள்னு தான் சொல்லுங்களேன்..”

 

“போங்கடா.. நான் நாலு பசங்களை பெத்தேன்.. ஒன்னுகூட என் பக்கத்துல இருக்கமாட்டேங்குது..”

 

“அம்மா நந்தினியக்கா அவப்புருஷன் குழந்தையோட இங்க வந்துட்டுருக்கா.. அப்புறம் சஞ்சய் அவனோட குடும்பத்தோட வந்துட்டுருக்கான்.. அப்புறம் உங்க கடைக்குட்டி வசந்த்.. அவனும் எக்ஸம்ஸ் முடிஞ்சு வந்துட்டுருக்கான்..” என விஜய் சொல்ல சொல்ல ராசாத்தி அம்மாளின் முகத்தில் பயம் வந்து தொற்றிக்கொண்டது. ஏற்கனவே இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம தலை சுற்றிப் போய் இருக்கிறார். இதில் இவர்கள் அனைவரும் இங்கு வந்து மாட்டிக் கொள்வதில் அவருக்கு சிறிதும் விருப்பமில்லை.

 

“ஏன்டா.. திடீர்னு அத்தனை பேரும் படையெடுத்து வர்றாங்க?”

 

“என்னம்மாயிது? வரலைன்னா.. வரமாட்டேன் குமார் கன்று புலம்புறீங்க.. வந்தா ஏன் வர்றாங்கன்னு வருத்தப்படுறீங்க.. இப்ப என்ன தான் செய்யனுங்கறீங்க?”

 

“விஜய் எதுக்கு வந்ததும் வராததுமா.. அத்தை கிட்ட வம்பிளுத்துட்டு இருக்கீங்க? போங்க போய் குளிங்க.. வந்ததுல இருந்து அழுக்குப்பிள்ளையா இருக்கீங்க..”

 

ரக்ஷிதாவின் சொல்லிற்கேற்ப தனதறைக்கு சென்றாள் விஜய். 

 

“கடவுளே! என் குடும்பத்தை காப்பாத்து.. அவங்களுக்கு எதுவும் ஆகக் கூடாது” என மனதோடு சொல்லக் கொண்டவர் கண்முன்னே இருந்த ஊஞ்சல் திடீரென ஆடல் தொடங்கியது. காற்றிற்கு ஆடியிருக்கும் என நினைத்து ஜன்னலைப் பார்த்தார். ஆனால் அவைகள் யாவும் பூட்டப்பட்டிருந்தது. அதன் அருகே சென்று ஆடும் ஊஞ்சலை பிடித்து நிறுத்தினார். அப்போது ஆடுவது நின்றுவிட்டது. ஆதலால் திரும்பி தனதறைக்கு செல்ல ராசாத்தி அம்மாள் முயன்ற போது மீண்டும் ஊஞ்சல் ஆடியது; ஆனால் இம்முறை வேகமாக ஆடியது. அதனை அதிர்ந்து போய் பார்த்தார். 

 

அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சுவற்றில் ரத்தத்தால் ஏதோ எழுத்துக்கள் தோன்றின. ‘ உன்னையவும் உன் குடும்பத்தையும் அழிக்காமல் விடமாட்டேன்.. முடிந்தால் முயன்று பார்..’ என்று எழுதியிருக்கவே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தார். 

 

அங்கே மாடியில் தன் அறையில் குளித்துக் கொண்டிருந்த விஜய் சத்தமாக ரக்ஷிதாவை அழைத்தான். 

 

“ஏய் ரக்ஷி.. ரக்ஷி..”

 

“என்னங்க..”

 

“இங்க சோப்பில்லடி..”

 

“அங்க தான் இருக்கும்.. நல்லாப் பாருங்க..”

 

“நான் என்ன பொய்யா சொல்லுறேன்? வந்து எடுத்து கொடுத்துட்டுப்போ..”

 

“சமைச்சுட்டு இருக்கும் போது தான்.. ஏதாவது வேலை சொல்லிட்டே இருப்பாரு..” என புது சோப்பை எடுத்துக் கொண்டு வேகமாக வந்தவள், குளியலறை கதவை தட்டினாள். 

 

“இந்தாங்க.. சோப்…” 

 

அந்த வார்த்தையை அவள் முடிக்கும் முன் அவளை குளியலறைக்குள் இழுத்துக் கொண்டான் விஜய். 

 

“என்னங்க இது? பட்டப்பகல்ல.. விடுங்க.. பசங்க தேடுவாங்க..”

 

“அவங்க அம்மா கூட இருப்பாங்க.. எத்தன நாள் கழிச்சு வந்துருக்கேன்.. கொஞ்சங்கூட என்னைய கவனிக்க மாட்டேங்குற..” எனக் கூறியவனின் உதடுகள் அவசர அவசரமாக அவளது மேனியில் பயணித்தது. பலநாள் பட்டினியாய் இருந்தவன் போல் அவளை நாடினான். குளியலறையை மஞ்சமாக மாற்றினர். ஆனால் இதையெல்லாம்

பார்க்கவும் சகிக்கவும் முடியாத ஒன்று, அங்கே ரூமில் இருந்த பூஞ்ஜாடியை கீழே தள்ளி உடைத்தது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top