ATM Tamil Romantic Novels

உயிரோடு விளையாடும் அழகியே 03&04

அத்தியாயம் 3

 

“டேய்.. சஞ்சு.. என்னடா இவ்வளோ வேகமா எங்க கிளம்புற?”

 

“வேதா.. உனக்குத்தான் தெரியுமே.. எங்க அம்மா அப்பாவுக்கு அடுத்த மாதம் அறுபதாம் கல்யாணம்.. அவங்களுக்கே தெரியாம நாங்க மூணு பேரும் சேர்ந்து ப்ளான் பண்ணிருக்கோம்.. அதுக்குதான் கிளம்பிட்டுருக்கேன்..”

 

“போடா.. அங்கப் போனதும் நானெல்லாம் உன் ஞாபகத்துக்கு வரவே மாட்டேன்..”

 

“யார் சொன்னா.. நீ என் ஞாபகத்துக்கு வரமாட்டேன்னு.. பூவப் பார்த்தா உன்னோட இந்த கன்னம் ஞாபகத்துக்கு வரும்.. ஆரஞ்சு பழத்தப் பார்த்தா இந்த உதடுகள் ஞாபகத்துக்கு வரும்.. அப்புறம் சாத்துக்குடியைப் பார்த்தா..” என அவனது கண்கள் அவளது கழுத்துக்கு கீழே இறங்க, அவனது முகத்தை நிமிர்த்தினாள். 

 

“போதும் போதும்.. ரொம்ப வழியாத.. உன்னை விட்டுட்டு எப்படிடா இருப்பேன்?”

 

“நீயும் என்கூட வந்துடு..”

 

“ம்ம்.. எனக்கும் ஆசையா தான் இருக்கு.. ஆனா டாட் ஒத்துக்கனுமே.. என்னோட அம்மா இறந்ததுக்கு அப்புறம் அப்பா ரொம்பவே உடைஞ்சு போயிட்டாரு.. அவருக்குன்னு நான்தானே இருக்கிறேன்.. அதான் அவர்கிட்ட சொல்லாம வர மனசேயில்ல..”

 

“அவருக்கு மட்டுமில்ல.. எனக்கும் நீ மட்டும் தான் இருக்க..”

 

“அப்போ உன் அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி, அக்கா, மச்சான், அவங்க பசங்க எல்லோரையும் என்ன பண்ணப் போற?”

 

“கன்வின்ஸ் பண்ணப் போறேன்.. எனக்கு இந்த வேதாக்குட்டியத் தான் ரொம்ப பிடிச்சுருக்கு.. இவளைத் தான் லவ் பண்றேன்.. கல்யாணம் பண்ணப் போறேன்னு சொல்லப்போறேன்..”

 

“அப்போ இன்னும் நம்மள பத்தி உன் வீட்டுல சொல்லலையா? ப்ராடு அன்னைக்கு சொல்லிட்டேன்னு சொன்ன..”

 

“என்னோட விஜய் அண்ணனுக்கும் ரக்ஷிதா அண்ணிக்கும் மட்டும் நம்ம விஷயம் தெரியும்… மத்த யாருக்கும் இன்னும் தெரியாது..”

 

“ஏன்?”

 

“அம்மா.. அப்பா.. விஜி சொன்னா அப்புடியே கேட்பாங்க.. அவனோட பேச்சுக்கு வீட்டுல எதிர்பேச்சு கிடையாது.. அதான் அவன்கிட்ட சொல்லிட்டேன்.. இந்த வருஷம் படிப்பு முடிஞ்சதும்.. அவன் கம்பெனியிலேயே வேல வாங்கித் தர்றேன்னு சொல்லிருக்கான்.. அப்புறம் நம்ம ரெண்டு பேருக்கும் டும் டும் டும் டும் தான்.. என்னோட மொத்த குடும்பத்தையும் கூட்டிட்டு வந்து உன் அப்பாகிட்ட பொண்ணு கேட்குறேன்..”

 

“ப்ராமிஸ்..”

 

“பக்கா ப்ராமிஸ்..”

 

“ஆமா.. நான் உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேட்கனும்னு நினைச்சேன்.. கேட்க முடியல.. இப்ப கேட்கட்டா?”

 

“கேளு..”

 

“கோபப்படமாட்டியே..”

 

“இல்ல.. சும்மா கேளு..”

 

“அது.. அது வந்து.. உங்கம்மாவுக்கு உன்னோட சேர்த்து நாலு பிள்ளைங்கன்னு சொன்ன.. ஆனா நீ விஜயண்ணா அப்புறம் நந்தினியப் பத்தி மட்டும் தான் சொல்லிருக்க.. மீதியிருக்குற ஒருத்தரைப் பத்தி நீ சொல்லவேயில்ல..” என வேதவள்ளி கேட்டதும் சஞ்சயின் முகம் இறுகத் தொடங்கியது.

 

“அவன் என்னோட அண்ணே அஜய்.. நாலு வருஷத்துக்கு முன்னாடி அப்பாக்கூட சண்ட போட்டுட்டு வீட்ட விட்டு வெளியே போயிட்டான்..” எனக் கூறிய சஞ்சயை இறுக அணைத்தாள்,

 

“சாரிடா.. வெரி சாரி.. ஏதோ உன் குடும்பத்தை பத்தி தெரிஞ்சுக்கணும்குற ஆர்வத்துல கேட்டுட்டேன்..”

 

“இட்ஸ் ஓகே.. அவனைப் பத்தி இன்னொரு தடவை என்கிட்ட எதுவும் கேட்காத..”

 

“ஓகே டா.. சரி.. சரி.. ட்ரெயின் கிளம்பப் போகுது.. நீ போய் ஏறிக்கோ..”

 

“இப்புடியே உன்னைத் தூக்கிட்டுப் போயிடலாமான்னு இருக்கு..”

 

“ச்சீ.. அலையாதடா.. எங்கப் போயிறப் போறேன்.. சீக்கிரம் உன் குடும்பத்தோட வந்து பொண்ணு கேளு..”

 

“கண்டிப்பா..” எனக் கூறியவன் யாரும் அறியாமல் அவசர அவசரமாக அவளது உதட்டில் மென்முத்தமிட்டு ட்ரெயினில் ஏறினான். 

 

சஞ்சய் எம்டெக் மாணவன். ராசாத்தி அம்மாள் மற்றும் சபாபதியின் கடைக்குட்டி. இருபத்தி நான்கு வயதான சஞ்சயின் ஜுனியர் தான் வேதவள்ளி. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். இந்த விஷயம் வீட்டில் விஜய்க்கும் ரக்ஷிதாவிற்கும் மட்டுமே தெரியும். சபாபதிக்கு எப்போதும் பிஸ்னஸ் தான் முதல் மனைவி. தூக்கத்தில் கூட வியாபாரம் மட்டுமே அவரது நினைவில் இருக்கும். எப்போதும் பலநாடுகளில் பறந்து கொண்டிருப்பதினால் ராசாத்தி அம்மாள் விஜயுடன் தங்கியிருக்கிறார். தனது தந்தையின் உழைப்பிலன்றி தன் உழைப்பில் முன்னேற வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருக்கும் விஜய் தானே ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றான். விஜய்க்கு அடுத்து பிறந்தவள் தான் நந்தினி. இவளை பிரபல தொழிலதிபரான அங்கித்திற்கு கோலாகலமாக திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு இருவயதில் நயனிகா என்ற மகள் இருக்கின்றாள். ஆனால் சஞ்சயுடன் சேர்ந்து இரட்டையராக பிறந்த அஜயைப் பற்றிய தகவல் ஏதும் தெரியவில்லை. சாமியார் ஒருவரின் கொள்கையினால் ஈர்க்கப்பட்டவன், அதன் காரணமாக தன் தந்தையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நாலு வருடத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். 

**************************************************

“அம்மா..”

 

“டேய் சஞ்சு.. எப்படிடா இருக்க?”

 

“நல்லாருக்கேன்மா.. அக்கா எங்க?”

 

“இதோ.. வந்துட்டேன்டா..”

 

“ஹாய்.. நந்து.. என்னடி இப்படி உருண்டையாகிட்ட.. மச்சான் வீட்டுல நல்லத் தீனியோ?”

 

“போடா.. போக்கிரி.. வர வர வாய் ஜாஸ்தியாகிடுச்சு..”

 

“ஆமா மதினி.. சாருக்கு இப்போ கல்யாணகலை வந்துடுச்சுல.. அதான் வாயும் கூடிடுச்சு..”

 

“என்னது கல்யாணமா? என்னடா எங்களுக்கு தெரியாம புது ட்ராக் ஓடுது..”

 

“அது ஒன்னும் புது ட்ராக் இல்ல அத்தை.. பழைய ட்ராக் தான்..”

 

“நீ சொல்றதப் பார்த்தா.. உனக்கு முன்னாடியே இதப் பத்தி தெரியும்னு நினைக்கிறேன்..”

 

“எனக்கு மட்டுமில்ல உங்கப் பையனுக்கும் தெரியும்..”

 

“ஓஹோ.. உங்களுக்கெல்லாம் தெரிஞ்சதுக்கப்புறம் கடைசியாக என்கிட்ட வந்து சொல்லுவீங்களா?”

 

“இல்லத்த.. அது வந்து.. விஜய் தான்..”

 

“சரி.. சரி.. கல்யாணமாவது நாங்க பேசலாமா? இல்ல அதையும் நீங்களே பேசி முடிச்சுட்டீங்களா?”

 

“அய்யய்யோ.. அப்படியெல்லாம் இல்லத்த.. நீங்க மாமா எல்லாரும் சேர்ந்து தான் இந்த கல்யாணத்தைப் பத்தி பேசி முடிக்கனும்..” என ரக்ஷிதா கூற, “அம்மா.. அங்காளபரமேஸ்வரி.. எப்படியாவது அப்பாகிட்ட பேசி எங்க கல்யாணத்த நடத்தி வைமா..” என ராசாத்தி அம்மாள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான் சஞ்சய். 

 

“சரி.. கவலைப்படாத.. எங்க அறுபதாம் கல்யாணத்தோட சேர்த்து உங்க நிச்சயதார்த்தத்தையும் செஞ்சுடுவோம்..” என ராசாத்தி அம்மாள் கூற, ” அம்மான்னா.. அம்மா தான்..” என அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தான். 

 

“அது சரி எங்க என்னோட இஞ்சி இடுப்பழகி?”

 

“யாரு?”

 

“ம்ம்ம்.. என்னோட மருமக நயனிகாவைத் தான் கேட்குறேன்..”

 

“அவளா.. நம்ம நிலானி, இஷான் கூட வீட்டுக்கு பின்னாடி விளையாடிட்டு இருக்காங்க..”

 

“சரிக்கா.. நான் போயி அவங்கக்கிட்ட ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுட்டு வர்றேன்..”

 

“டேய் குளிச்சுட்டு.. சாப்டு போடா..”

 

“அதெல்லாம் அப்புறம்.. முதல்ல என்னோட தேவதையப் போய் பார்க்கனும்..” என குழந்தைகளைத் தேடி வீட்டிற்கு பின்னால் சென்றான் சஞ்சய். 

 

அங்கே வீட்டிற்கு பின்னால் நிலானி மற்றும் இஷான் பந்தை தூக்கிப் போட்டு பிடித்து விளையாடிக் கொண்டிருக்க, அதனை பக்கத்தில் நின்று பார்த்து கொண்டிருந்தாள் நயனிகா. 

 

“டேய் இஷான்.. அங்கப்பாரேன்.. எவ்ளோ அழகான பட்டாம்பூச்சி பறக்குதுன்னு..”

 

“இது ஒரு விஷயமா.. ஒரு நிமிஷத்துல நான் அதைப் பிடிச்சுடுவேன்..”

 

“நான் மட்டும் பிடிக்க மாட்டேனா.. நானும் ஒரு நிமிஷத்துல பிடிச்சுடுவேன்..”

 

“பார்ப்போமா? நீ பர்ஸ்ட் பிடிக்கிறியா? இல்ல நான் பர்ஸ்ட் பிடிக்கிறேனான்னு..” என நிலானியும் இஷானும் போட்டிப் போட்டுக் கொண்டு அந்த பட்டாம்பூச்சியின் பின்னே சென்று கொண்டிருக்க, அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த பந்து தரையில் கிடந்தது. அதனைப் பார்த்த நயனிகா மெல்ல நடந்து அந்த பந்தின் அருகே சென்றாள். அவள் அதன் அருகே செல்ல செல்ல பந்து மெல்ல உருண்டு நகர்ந்து கொண்டே சென்றது. உருண்டு செல்லும் பந்தைப் பிடிப்பதற்காக அதன் பின்னே நயனிகா சென்று கொண்டிருக்க, சட்டென்று வேகமாக உருண்ட பந்து அருகில் இருந்த நீச்சல் குளத்தில் விழுந்தது. அந்த பந்தைப் பிடிக்கும் வேகத்தில் இரண்டு வயதேயான நயனிகாவும் வேகமாக ஓடி நீச்சல் குளத்திற்குள் விழுந்தாள். யாருமற்ற இடத்தில் குழந்தையின் தலை தண்ணீரில் மேலும் கீழும் வந்து வந்து சென்றது. 

 

குழந்தைகளைத் தேடி அங்கு வந்த சஞ்சயின் கண்ணில் நீச்சல் குளத்தில் விழுந்த குழந்தை தென்படவே சட்டென்று குதித்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு மேலே வந்தான். தரையில் கிடத்தி வயிற்றில் இருந்த தண்ணீரை வெளியே எடுத்தவன், குழந்தையின் கன்னத்தை தட்டி எழுப்பினான். குளத்தில் விழுந்த வேகத்தில் காப்பாற்றபட்டதினால் குழந்தை உடனே கண்திறந்தது. 

 

“மாமா..”

 

“டார்லிங்..” என குழந்தையை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான். ஒருவேளை தான் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால் நயனிகாவின் நிலையென்ன? நினைத்துப் பார்க்கும் போதே அவனது உடல் பதறியது. 

 

குழந்தையைத் தூக்கிக் கொண்டு நிலானி மற்றும் இஷானைக் கூப்பிட்டான். அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றவன், தனியே ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து செல்லக் கூடாது என அறிவுரைகள் கூறினான். நயனிகாவை துடைத்து ஆடை அணிவித்தான். பிறகு நந்தினியை தேடிச் சென்றவன் நங்கென அவளது தலையில் கொட்டினான். 

 

“ஏன்டா பன்னி கொட்டுன?”

 

“அப்படித்தான் கொட்டுவேன்.. அங்க உன் புள்ளைய தனியா விட்டுட்டு இங்க என்ன கதை அளக்குற? போ.. போயி உன் புள்ளக் கூடவே இரு..” என நந்தினியின் தலையில் கட்டி அவளை குழந்தைகள் விளையாடும் பகுதிக்கு அனுப்பி வைத்தான். 

 

“என்ன சஞ்சய்? என்ன யோசனை?”

 

“ஒன்னுமில்லம்மா..”

 

“ஏன் உன் ட்ரெஸ், கதையெல்லாம் ஈரமாயிருக்கு?”

 

“அது ஒன்னுமில்லம்மா..”

 

“நம்ம ஸ்விம்மிங் ஃபுல்ல விழுந்தியா?”

 

“எப்படிம்மா?”

 

“சொல்லு.. யாரு தண்ணிக்குள்ள விழுந்தா? நீ யாரை காப்பாத்தின?”

 

“அம்மா.. நம்ம நயனிகா இல்ல.. நான் போகும் போது தண்ணில விழுந்துட்டா.. நான் மட்டும் சரியான நேரத்துக்கு போகலைன்னா.. இப்போ நம்ம நயனிகா? என்ன நடந்துருக்கும்னு நினைக்கும் போதே நெஞ்சு பதறுதும்மா.. ஆனா இந்த நந்தினி.. கொஞ்சங்கூட அதைப் பத்தி கவலைப்படுறாளா? குழந்தை பெத்தா மட்டும் போதுமா? அதை பத்திரமா பார்த்துக்கோ வேணாம்..”

 

“நான் உன்கிட்ட ஒன்னு சொல்லுவேன்.. நீயென்ன நம்புவியா?”

 

“என்னம்மா?” என கேட்ட சஞ்சயின் தலையை துடைத்துவிட்டு படியே நடந்த அத்தனையையும் அவனிடம் கூறினார் ராசாத்தி அம்மாள். 

 

” நீயாவது என்னை நம்புறியாடா?”

 

“உங்களை நம்பாம யாரை நம்பப் போறேன்.. ஆனா இதுல தலையெது? காலெதுன்னே புயலையே..”

 

“அதைத் தெரிஞ்சுக்கத் தான் நாளைக்கு சாஸ்தான்னு ஒரு சாமியாரைப் போய் பார்க்கலாம்னு இருக்கேன்..” என ராசாத்தி அம்மாள் கூறிய அடுத்த நொடி சஞ்சய் அமர்ந்திருந்த ஊஞ்சல் வேகமாக ஆடியது. பிறகு அதில் இருந்த சஞ்சயை தலைகீழாக கீழே தள்ளியது. இதனைப் பார்த்து பயந்து போன சஞ்சய் தன் தாயின் இடையை இறுக்கியணைத்துக் கொண்டான். 

 

“இப்.. இப்பவே போலாம்மா..” எனக் கூறியதும் படார் என்று கதவையடைத்து தானே தாளிட்டு கொண்டது கதவு. 

 

அத்தியாயம் 4

 

“அம்மாஆஆஆ..”

 

“சஞ்சு..” என பதறி ஓடி வந்த ராசாத்தி அம்மாள், கீழே விழுந்த சஞ்சயை தூக்கி நிறுத்தினார். இதுவரை படத்திலும் நாடகத்திலும் மட்டுமே பார்த்த காட்சியை நேரில் அதுவும் தனக்கு நடக்கும் போது தான் மிகவும் திகிலான இருந்தது. சரியாக அதே நேரம் விஜய் மாடியில் இருந்து கீழே இறங்கி வர, ஆடிய ஊஞ்சல் தானாக நின்றது; மூடிய கதவு திறந்து கொண்டது. இதனைப் பார்த்த இருவரும் அதிசயித்துக் கொண்டனர்.  

 

“என்னம்மா இது? அண்ணே வந்ததும் எல்லாம் அப்படி அப்படியே நின்னுடுச்சு..”

 

“அதான் எனக்கும் புரியல..”

 

நேரே கீழே வந்த விஜய் அங்கே நின்றுகொண்டிருந்த இருவருரையும் கூர்மையாக பார்த்தவாறு அவர்களது அருகில் வந்து நின்றான். 

 

“என்ன இரண்டு பேரும் அப்படி பார்க்குறீங்க?”

 

“ஒன்னுமில்ல விஜய்.. எங்க ஆஃபிஸ்கா?”

 

“என்னடா ஆச்சு உனக்கு? காலங்காத்தால எங்கப் போவாங்க? நீயும் சீக்கிரம் கிளம்பி வா.. இன்னைக்கு என்கூடவே இரு.. யார்கிட்ட எப்படி? என்ன பேசனும்னு பிஸ்னஸ் கத்துக்கோ.. அப்போ தான் படிப்பு முடிஞ்சதும்.. உடனே வேலையில் சேர முடியும்..”

 

“சரிண்ணா.. இதோ கிளம்பிட்டேன்..”

 

“வேதாவோட அப்பா எப்போ இந்தியா வர்றாரு?”

 

“இன்னைக்கு மார்னிங் ஏர்இந்தியா ஃப்ளைட்ல வர்றாருண்ணா..”

 

“ஓஹோ.. அப்படி அவர் வந்ததும் சொல்லு நானும் உன் அண்ணியும் போயி உங்க கல்யாணத்தை பேசி முடிச்சுட்டு வாறோம்..” எனக் கூறிய விஜயின் தலைக்கு மேல் இருந்த அலங்கார விளக்கு மெல்ல ஆடியது. அதனைக் கண்ட ராசாத்தி அம்மாள்,

 

“இப்ப எதுக்குப்பா இந்த பேச்செல்லாம் பேசுற? முதல்ல அவனோட படிப்ப முடிச்சுட்டு வரட்டும்..”

 

“என்னம்மா நீங்க இந்த காலத்துல வேதா மாதிரி பொண்ணு கிடைக்குறது.. ரொம்ப அபூர்வம்.. நாங்க போயி பேசி முடிக்கத் தான் போறோம்..”

 

“டேய்.. விஜய் அதுக்கு உன் அப்பா ஒத்துக்க வேண்டாமா?”

 

“நீங்க டூ லேட்டுமா.. நான் எப்பவோ அப்பாகிட்ட பேசிட்டேன்.. அவரும் இந்த கல்யாணத்துக்கு சரின்னு சம்மதம் சொல்லிட்டாரு..” என அவன் கூறி முடிக்கவும் மேலே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி கொண்டிருந்த விளக்கு சர்ரென வேகமாக கீழிறங்கி அவன் தலையில் விழ இருக்கும் நேரத்தில் அவனை தன் பக்கம் பிடித்திழுத்திருந்தார் ராசாத்தி அம்மாள். கீழே விழுந்த வேகத்தில் சில்லு மில்லாத உடைந்து நொறுங்கி போனது. 

 

“விஜய்..”

 

“அண்ணாஆஆஆ..” என பல்வேறு குரல்கள் கேட்ட நிலையில் எந்த விதமான பயமோ பதட்டமோ இல்லாமல் இருந்த விஜய், சஞ்சயின் கண்களுக்கு வித்தியாசமாக தெரிந்தான். ‘இவன் இப்படி இருக்கமாட்டானே.. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் எமோஷனல் ஆகுறவன்.. இப்போ ரொம்ப கேஷுவலா இருக்கான்.. சம்திங் இஸ் ராங்..’ என நினைத்துக் கொண்டே விஜயின் அருகில் வந்தான். 

 

“ஹேய்.. ஏன் பயப்படுறீங்க.. விளக்கோட கயிறு லூசா இருந்துருக்கும்.. அதான் கீழே விழுந்து உடைஞ்சுருச்சு.. இதுக்கு போயி பதருறீங்க..” என கேட்ட விஜய் புதியவனாக அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தான். 

 

“விளக்கு கீழ விழுந்து உடையத்தான் போகுதுன்னு உனக்கு முன்னாடியே தெரிஞ்ச மாதிரி பேசுற?” என சஞ்சய் கேட்க, அவனை முறைத்துப் பார்த்த விஜய்,

 

“அது எப்படி டா எனக்கு தெரியும்? விழுந்த விளக்க நினைச்சு நீங்க யாரும் கவலைப்பட கூடாதுன்னு தான் நான் அப்படி சொன்னேன்.. அதுக்கு நீயா எதுவும் கற்பனை பண்ணிக்காத..” எனக் கூறிய விஜய் கோபமாக வெளியே செல்ல, அவனை சமாதானப்படுத்துவதற்காக அவன் பின்னேயே ஓடினாள் ரக்ஷிதா. 

 

“ஏங்க சாப்டாம போறீங்க? கொஞ்சம் சாப்டு போங்க.. ப்ளீஸ்..” என விஜயின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தியவளைப் பார்த்து உறுத்து விழித்தான். அவனது பார்வையில் பயந்து போன ரக்ஷிதா சட்டென பிடித்திருந்த கையை விட்டதும் சட்டென காரில் ஏறி சென்றான். 

 

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி வெடுக் வெடுக்குன்னு போறாரு? க்கும்.. எப்படியும் வீட்டுக்கு தானே வரனும்.. அப்ப வைச்சுக்குறேன் உங்களை..” என இடுப்பில் இருந்த சேலையை எடுத்து உதறி சொறுகிவிட்டு வீட்டின் உள்ளே சென்றாள். 

 

“சஞ்சய் சீக்கிரம் குளிச்சுட்டு வா.. அவரோட கோபத்தைப் பத்தி தான் உனக்கு தெரியுமே.. மனசுல எதுவும் வச்சுக்காத..” என சஞ்சயை ஆபிஸிற்கு கிளம்ப சொல்லிவிட்டு சென்றாள் ரக்ஷிதா. 

 

“அம்மா.. இங்க என்னமோ நடக்குது.. நான் எதுக்கும் அண்ணன்கூட அவனோட ஆபிஸ்கு போயிட்டு வந்து உங்கக்கிட்ட பேசுறேன்.. ம்ம்.. மறந்துட்டேன்.. அப்பா எப்ப வர்றேன்னு சொன்னாரு?”

 

“இன்னைக்கு நைட் வர்றேன்னு சொன்னாரு டா..”

 

“ஓகே.. காந்த கண்ணகி.. உனக்கு மினிஸ்ட்ரில இடம் பார்க்குறேன்.. அப்படியே நைனா வந்ததும் என்னோட மேரேஜ்ஜை பத்தி பேசி நல்ல முடிவா எடு..”

 

“ஏன்டா.. கிடக்குறதெல்லாம் கிடக்கட்டும் கிழவனை தூக்கி மனையில வையின்னு சொல்றாப்புல சொல்ற.. இங்க எத்தனை பெரிய போராட்டம் போயிட்டுருக்கு.. நீ என்னன்னா உன்னோட கல்யாணத்துலயே குறியாயிருக்க..”

 

“ஆரிய கூத்தாடினாலும் காரியத்துல கண்ணாயிருக்கனும்.. அமைச்சரே!”

 

“என்னடா சொல்ற?”

 

“அய்யா போயி குளிச்சுட்டு வர்றேன்.. மீதிய அப்புறமா வந்து சொல்றேன்.. வர்டா..” என தனதறைக்குள் வந்தவனைத் தொடர்ந்து வந்த அவனது நிழலருவத்தை பின் தொடர்ந்து வந்தது அந்த கரிய நிழலருவம். அவன் செல்லும் இடமெல்லாம் அவனை பின்தொடர்ந்து வந்தது. குளியலறைக்குள் நுழைந்தவனை முழுதாக பார்த்த அந்த கரிய நிழலருவம், சஞ்சய் தன் முகத்தில் சோப்பை தேய்த்து கொண்டிருக்கும் போது அவனை இன்னும் நெருங்கி வந்தது. அவனது காதுக்கருகில் யாருடைய மூச்சுக்காற்றோ உரசுவது போல் இருக்கவே, 

 

“யாரது?” என காற்றில் தன் கைகளை நீட்டி துலவினான். ஆனால் அந்தோ பரிதாபம்.. அங்கு யாருமில்லை அரூபமான அந்த கரிய நிழலருவம் அவனின் காதருகில் தன் உதடுகளை குவித்து,

 

“அன்பரே! இத்தனையாண்டு காலம் தங்களுக்காகவே தவம் புரிகின்றேன்.. இன்று உங்களை இவ்விடத்தில் கண்டு தன்னியனானேன் பிரபு.. கட்டிளம் காளையாக நிற்கும் உங்களைப் பார்த்ததும் எனது மோகம் கருமேகமாக படையெடுத்து நிற்கின்றது.. வாருங்கள்.. நமதுலகத்திற்கு சென்று இன்புற்றிருப்போம்..” என அவனது காதில் மயக்கத்துடன் ஒரு குரல் ஒலித்தது. அவனது அந்தரங்க பாகத்தை யாரோ தொட்டு தடவுவது போல் இருக்க, அவசர அவசரமாக தண்ணீரை எடுத்து தன் மேல் ஊற்றியவன்,

 

 

“ஏய்.. இங்கப்பாரு.. நீ யாராக இருந்தாலும் சரி.. இந்த தொட்டுப் பேசி என்னை மயக்கலாம்னு நினைச்ச.. அவ்ளோ தான் சொல்லிட்டேன்.. எனக்கு பொண்டாட்டியா என்னோட வேதா இருக்கா.. என்னோட கற்பு முழுசும் அவளுக்குத் தான்..” என அவசர அவசரமாக உடையணிந்து கொண்டு தன் அண்ணனின் அலுவலகத்திற்கு சென்றான். 

 

“கண்ணாளா.. உங்களுக்காக யூக யூகமாக நான் இங்கு காத்திருக்க.. தங்களை பங்கிட்டுக் கொள்ள மற்றொருவளா? விடமாட்டேன்.. விடவேமாட்டேன்..” என ஓலமிட்டு அந்த கரிய நிழலருவம் வேதாவள்ளியைத் தேடி சென்றது. 

 

“அப்பா..”

 

“என்னம்மா?”

 

“இங்கப்பாருங்கப்பா..”

 

“இருடா.. ஒரு முக்கியமான மீட்டிங்.. முடிச்சுட்டு வந்துர்றேன்.. அப்புறம் இந்த நாள் பூரா அப்பா உன்கூட தான் இருப்பேன்..”

 

“இன்னும் எவ்ளோ நேரம்?”

 

“கொஞ்ச நேரம் தான்..” எனக் கூறிய வேதவள்ளியின் தந்தை தனது வேலையில் மூழ்கி இருக்க, அவர்கள் பயணித்த காரானது தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக பெற்றுக் கொண்டிருந்தது. 

 

“எவ்ளோ நேரம் தான் சும்மா உட்கார்ந்துருக்குறது? சஞ்சய்கு ஃபோன் செய்யலாமா?” என நினைத்த வேதவள்ளி சஞ்சயிற்கு ஃபோன் செய்தாள். தன் அண்ணனின் அலுவலகத்தில் முக்கியமான வியாபார மீட்டிங்கில் இருந்ததனால் ஃபோனை எடுக்க முடியவில்லை. 

 

“இவனும் வர வர என்னை மதிக்கறதில்ல.. இப்பவே இப்படி இருக்குறான்.. கல்யாணம் பண்ணிட்டா அவ்ளோ தான்.. பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்குறதையே மறந்துருவான்.. இவனை ஆரம்பத்துலயே தட்டி வைக்கனும்..” என தன் முகத்தை அவசர அவசரமாக திருத்தி உடனே ஒரு செல்ஃபி எடுத்து சஞ்சய் போனிற்கு அனுப்பினாள். தனது ஃபோனை அமைதி நிலையில் போட்டிருந்தவனுக்கு அவள் அனுப்பிய செய்தி மின்னி மறைந்தது. அதனை எடுக்கவென அவனது கைகள் நீண்ட போது அவனிடமிருந்து அந்த போனை வாங்கி தானே வைத்துக் கொண்டான் விஜய். 

 

“வேலை நேரத்துல கவனம் வேலையில் இருக்கனும்.. ஓகே?” எனக் கூறிய விஜய் அந்த போனை அணைத்து மேஜையின் அடியில் வைத்தான். இங்கே அவனது பதில் செய்திக்காக காத்திருந்த வேதவள்ளி மீண்டும் மீண்டும் சஞ்சயிற்கு போனில் முயன்று பார்க்க, அது அணைத்து வைக்கப் பட்டிருப்பதாக கூறியது. 

 

“ச்சே.. ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டான்.. இம்ச..” என தனக்குத் தானே புலம்பியவள், அவனுக்கு தனது வாய்ஸ்ஸை பதிவு செய்து வாட்ஸ் அப்பில் அனுப்பினாள்.‌ அவ்வாறு செய்தி அனுப்பிவிட்டு ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்தவளின் கண்கள் வெடித்து வெளியே ‌விழுந்து விடும் அளவிற்கு விரிந்தது. 

 

அவள் திரும்பி தன் அப்பாவிடம் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கூறுவதற்குள் குறுக்கே வந்த டேங்கர் லாரியால் மோதி தூக்கி எறியப்பட்டது. மேலே பறந்து வந்து கீழே விழுந்து தரையில் எட்டுக் குட்டிக்கரணம் அடித்து நொறுங்கியது அவர்களது கார். தனது இறுதி நேரத்திலும் வேதவள்ளியின் கண்களில் சஞ்சயின் உருவமே தெரிந்தது. அவ்வாறு அவளது கண்கள் வார்த்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, சட்டென ஒரு கோரமான உருவம் அவள் முன்னால் தோன்றியது. அந்த அதிர்ச்சியில், ஏற்கனவே உடலில் பலத்த காயத்துடன் இருந்ததற்கு மூக்கிலும் கண்ணிலும் காதிலும் ரத்தம் கசிந்தது. அந்த கரிய நிழலருவத்தைப் பார்த்தவாறே வேதவள்ளியின் உயிர்பறவை கூட்டிலிருந்து பறந்து சென்றது. 

 

மீட்டிங் முடிந்ததும் விஜயிடமிருந்து ஃபோனை வாங்கிய சஞ்சய், அதனை ஆன் செய்து பார்த்தப் போது வேதவள்ளியின் பளிச்சென்ற புன்னகை முகம் செய்தியாக தோன்றியது. அதனை பார்த்தவனது முகத்தில் தானாகவே புன்னகை அரும்பியது. அதனை அடுத்து அவள் அனுப்பிய வாய்ஸ் மெஸேஜும் வந்து சேர்ந்தது. அதனை பதிவிறக்கம் செய்து தனது காதில் வைத்து கேட்டான். வேதவள்ளியின் தேனில் குழைத்த குரலனாது, அமிர்தமாக அவனது காதில் விழுந்தது. 

 

“எரும, பன்னி, குரங்கு.. இதுக்கு மேல திட்டத் தெரியல.. ஏன்டா போனை அண்ட் பண்ணல.. உன்னைப் பத்தி டாடி கேட்டாரு.. இன்னும் ஒரு மணிநேரத்துல உன் முன்னாடி இருப்பேன்.. ஏன்டா கண்ட இப்படி விரிச்சுப் பார்க்குற.. உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் டாடி சொன்னாரு.. ஆனா என்னால தான் சீக்ரெட்டை மெயின்டெய்ன் பண்ண முடியல.. என் ஃபோட்டோ பார்த்தியா? எப்படி இருக்கேன்? இந்த ட்ரெஸ் நல்லாருக்கா? உனக்குப் பிடிச்சுருக்கா? ஐ மிஸ் யூ வாட்.. இப்பவே உன்னை கட்டிப்புடிச்சு ம்ம்மா..ம்மா.. இச்.. இச்.. இச்.. இச்.. இச்.. இச்சுன்னு தௌசண்ட் கிஸ்ஸஸ் கொடுக்கனும் போல இருக்கு.. ஆனா முடியாதே.. அதான் போன்ல கொடுக்குறேன்.. நீயும் என்னை மிஸ் பண்ணேனா.. இதே மாதிரி கிக்கா கிஸ் பண்ணி மெஸேஜ் அனுப்பு.. ஐ லவ் யூ சோ மச்..” என செய்தி அனுப்பிருந்தாள். அவள் அனுப்பிய செய்தியை கேட்டு முடித்த உடன் அந்நிய நம்பரில் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. அதனை எடுத்து தன் காதில் வைத்தான் சஞ்சய்.

 

“அன்பரே! நான் தான் சொன்னேனே.. என்னைத் தவிர வேறு யாரும் இனி உங்கள் வாழ்க்கையில் இல்லை.. அந்த வேதவ

ள்ளியும் இல்லை..” எனக் கூறி சட்டென இணைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டதும் மற்றொரு அழைப்பு வந்தது. உடல் முழுவதும் வேர்வையில் குளித்திருக்க அதனை எடுத்து காதில் வைத்தான். அதில் கேட்ட செய்தியை அடுத்து அதே இடத்தில் மயக்கமடைந்தான் சஞ்சய்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top