ATM Tamil Romantic Novels

மன்னவன் பார்வையிலே

அத்தியாயம் 1

சின்னமனூர் கிராமம்…..

ஒரு அதிகாலை பொழுது சாலையில் லாரி ஒன்று தன் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது தன் எதிரே‌‌ வந்த ஒரு காரின் மீது அதே வேகத்துடன் மோதி விட எதிரே வந்த அந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது.

அதில் இருந்த நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கீழே விழுந்து கிடந்தார் அவரின் பக்கத்தில் இருந்த அவர் மனைவியும் ரத்தத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.

அவர்களின் மூன்று வயது பெண் குழந்தை அங்கே இருந்த புற்களின் இடையே தூக்கி வீசப்பட்டு கையில் காயங்கள் மற்றும் சிராய்ப்புகளுடன் அழுது கொண்டே கிடந்தது.

அங்கே வயலில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் இந்த விபத்தை பார்த்துவிட்டு பதறி அடித்து கொண்டு ஒவ்வொருவராக ஓடி வர அந்த லாரி டிரைவர் லாரியில் இருந்து கீழே இறங்கி ஓடிவிட்டான்.

அங்கிருந்த பொதுமக்கள் மூவரையும் அரசு மருத்துவமனையில் தூக்கி கொண்டு போய் அனுமதித்தனர்.

அந்த ஆண் முன்பே இறந்திருக்க
அடிப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருந்தனர்.

அந்த பெண் குழந்தைக்கு காலில் அடி பயங்கரமாக இருந்தது குழந்தையின் காலில் டயர் ஏறி இறங்கி காலில் இருந்த எலும்புகள் நொறுங்கி இருந்தது.

ஏற்கனவே அந்த பிஞ்சு வலியில் துடித்து கொண்டே இருக்க குழந்தையின் கையில் மருந்தை வைக்கும் போது குழந்தை இன்னும் வீல்லென்று அழுது கொண்டே இருந்தது
உள்ளே உயிருக்கு போராடி கொண்டு இருந்த பெண்மணியிடம் அவருடைய விலாசம் மற்றும் உறவினர்களின் தகவல்கள் என அனைத்தையும் கேட்டு எழுதி வாங்கி கொண்ட செவிலிப்பெண் அவரின் தாய் தந்தைக்கு விஷயத்தை கூறினார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கே பதறி அடித்து கொண்டு ஓடிவந்தனர் லதாவின் பெற்றோர் சுவாமிநாதனும் சாவித்திரியும் அவர்களுடன் அவர்களின் ஒரே மகனான வீரபத்ரன் என்கிற வீராவும் ஓடிவந்தான்.

“நர்ஸ் அம்மா என் மகள் மருமகன் பேத்திலாம் எங்கே இருக்காங்க” என்று அழுது கொண்டே கேட்டார் சாவித்ரி.

“யாரு நீங்க யார் உங்க பொண்ணு முதல்ல தெளிவா சொல்லுங்க” என்று கேட்டார் அந்த செவிலிப்பெண்
சாவித்திரி பதட்டத்தில் இருந்ததால் பேச்சு வராமல் திணறி கொண்டு இருந்தார்.

“என் மகள் லதா மாப்பிள்ளை பெயர் மோகன்
பேத்தி நந்தினி என்று சுவாமிநாதன் கூற
“அந்த ஆக்ஸிடென்ட் கேஸா அந்த மோகன்ங்குறவரு இறந்துட்டாரு மா அவங்க மனைவி லதா ஐ.சி.யூவில் இருக்காங்க அந்த பக்கமா போங்க” என்று கூறிவிட்டு சென்றார்.

தன் மருமகன் இறந்துவிட்டான் என்ற செய்தியை கேட்டு இருவரும் நிலைகுலைந்து போய் நின்றுவிட்டனர்.

முதலில் சுவாமிநாதன் தன்னை நிலைபடுத்திக் கொண்டவர் சாவித்திரி அசையாமல் நின்றிருக்க “சாவி வா நம்ம பொண்ணையாவது போய் பார்ப்போம்” என்று தன் மனைவி மற்றும் மகனை அழைத்து கொண்டு அங்கே சென்றார் சுவாமிநாதன்.

அவர்கள் எவ்வளவு கேட்டும் ஐ.சி.யூ-வின் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவிட மூவரும் வெளியே நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது அவர்கள் பேத்தியின் வீல்லென்று அழும் சத்தம் கேட்டு அந்த பக்கமாக சாவித்திரி அழுது கொண்டே ஓடினார் அங்கே சென்று பார்த்தால் குழந்தை அனாதை போன்று தனியாக தலை மற்றும் கையில் கட்டுடன் வலியில் அழுது துடித்து கொண்டு இருந்தது கண்களில் கண்ணீருடன் மூக்கு ஒழுக அமர்ந்திருந்தாள்
தன் பேத்தியை பார்த்த சாவித்திரி ஓடிச்சென்று அவளை வாரி தூக்கி கொண்டார்.

அவளின் முகத்தை தன் புடவை முந்தானையில் துடைத்து விட “அம்மாயி” என்று குழந்தை அழுது கொண்டே அந்த பக்கமாக கையை காட்டி கொண்டே இருந்தது.

“அழாத டி தங்கம் அதான் அம்மாயி வந்துட்டன்ல்ல”என்று குழந்தையின் அழுகயை சமாதானம் செய்தார் சாவித்திரி
அப்போதும் அவரின் பேத்தி விடாமல் அழுது கொண்டே தான் இருந்தாள்.

அப்போது தான் அவளின் காலை பார்த்தார் சாவித்திரி ஒரு பக்க கால் பெரிதாகவும் இன்னொரு பக்க கால் சிறியதாகவும் இருந்தது.

அங்கிருந்த நர்ஸ்சிடம் “என் பேத்திக்கு என்னாச்சு” என்று கேட்க “அந்த குழந்தையோட கால் எலும்புகள் நொறுங்கிட்டாத கீழே காலை வெட்டி எடுக்க வேண்டாயாத போச்சு” என்று அவர் கூறிவிட்டு சென்றார்.

“அய்யோ கடவுளே உனக்கு கண்ணே இல்லையா இந்த பிஞ்சு குழந்தை உனக்கு என்ன பாவம் பண்ணுச்சி” என்று அழுது துடிக்க நந்தினியும் அவரை பார்த்து அழ அவளை அணைத்து சமாதானம் செய்து கொண்டே அவரும் அழுது கொண்டே நின்றிருந்தார்.

அப்போது அங்கே வந்த செவிலிப்பெண் ஒருவர் “உங்களை எங்கெல்லாம் தேடுறது மா உங்க பொண்ணு இறந்துட்டாங்க சீக்கிரமா ஐ.சி.யு-வுக்கு வாங்க” என்று கூறிவிட்டு சென்றார்.

மூவரும் அழுது கொண்டே அங்கே சென்று பார்க்க லதாவின் பிணம் அந்த அறையில் இருந்தது அவரின் உடலில் பொருத்தியிருந்த ஒயர்களை‌ கழட்டி கொண்டு இருந்தார் அந்த செவிலிப்பெண்.

அவரின் அசைவற்ற விரைத்து போயிருந்த உடலை பார்த்த சாவித்ரி கதறி அழுக ஆரம்பித்துவிட்டார் அவர் கையில் இருந்த நந்தினிக்கு என்ன புரிந்ததோ அவளும் தன் தாயின் உடலை பார்த்து அழுது கொண்டே இருந்தாள்.

“என்னங்க காலையில ஊருக்கு போய்ட்டு வரேன் மான்னு சிரிச்ச முகமாக சொல்லிட்டு போனாளேங்க என் மகள் ஒரு ஈ எறும்புக்கு கூட துரோகம் நினைக்க மாட்டாளே அவளுக்கா இப்படி ஒரு நிலைமை வரனும்” என்று கதறி கதறி அழுத கொண்டே இருந்தார் சாவித்திரி.

மூவரும் அழுது கொண்டே நின்றிருந்தனர்.

பின்னர் மருத்துவமனையில் இருந்து இரு உடல்களையும் ஆம்புலன்ஸ்சில் ஏற்றி அவர்கள் ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

சுவாமிநாதன்-சாவித்ரி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் மூத்தவள் லதா இளையவன் வீரபத்ரன்.

தனக்கு ஒரு ஆண் குழந்தை இல்லையே என்று கோவில் கோவிலாக வேண்டி கடவுளிடம் வரம் கேட்டு பிறந்தவன் தான் இந்த வீரபத்திரன் அதனால் அவனுக்கு அவர்களின் குல தெய்வமான வீரபத்திரன் பெயரையே வைத்துவிட்டனர் இந்த தம்பதி.

லதாவிற்க்கு பதினெட்டு வயது இருக்கும் போதே மோகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர் அப்போது வீரபத்திரனுக்கு பத்து வயது.

அவர்களுக்கு திருமணமான அடுத்த வருடமே நந்தினி பிறந்துவிட்டாள் மோகனுக்கு தாய் தந்தை இருவரும் இல்லை
அவரின் ஊரிலேயே டாக்டராக பணிபுரிந்து கொண்டு இருந்தார்.

மோகனின் நல்ல பண்பிற்க்காக தான் தன் மகளையே கொடுத்தார் சுவாமிநாதன்.

அனைத்தும் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது இந்த நான்கு வருடமாக எப்போதும் போல் தாய் வீட்டிற்க்கு ஊர் திருவிழாவுக்கு வந்து தங்கிவிட்டு இன்று காலை வேலை இருப்பதாக கூறிவிட்டு மூவரும் கிளம்பினர்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் இப்படி அனைத்தும் கண்‌ இமைக்கும் பொழுதில் நடந்து முடிந்துவிட்டது.

என்ன செய்ய முடியும் விதி வலியது அந்த ஏதும் அறியாத பிஞ்சு குழந்தை இன்று அனாதையாகிவிட்டது.

மூவரும் அழுது கொண்டே ஆம்புலன்ஸ்சில் ஏறி வீட்டிற்க்கு புறப்பட்டனர்.

கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் இறந்து விட ஊரே அவர்கள் வீட்டின் முன்னே கூடி ஒப்பாரி வைத்து கொண்டிருந்தது.

நந்தினி அழுது கொண்டே வீராவின் சட்டையை பிடித்து கொண்டு ஒன்றும் தெரியாமல் நின்றிருந்தாள்.

வீராவோ தனக்காக ஒவ்வொரு முறையும் சாப்பிட வித விதமாக பண்டங்கள் எடுத்து வரும் தன் அக்கா இன்று இல்லையே என்று அழுது கொண்டிருந்தான் இப்போது அவனுக்கு 13 வயது ஆகிய‌து அவனும் சிறுவனே பாவம் அவனுக்கு மட்டும் என்ன தெரியும்.

பிணத்தை எடுக்கும் போது “என் மகளை இங்கே இருந்து போக விட மாட்டேன்” என்று சாவித்திரி அழுது அடம்பிடிக்க அவரை அங்கிருந்த பெண்கள் நால்வர் சேர்ந்து பிடித்து கொண்டனர்.

“சாவி அழாத டி” என்று சுவாமிநாதனும் அவரை அணைத்து ஆறுதல் கூறிக்கொண்டு இருந்தார்.

எவ்வளவு நேரம் அழுதுகொண்டே இருக்க முடியும் பிணத்தை எடுத்து தானே ஆக வேண்டும்.

கணவன் மனைவி இருவரின் உடல்களையும் ஒன்றாகவே அடக்கம் செய்தனர் தன் மகன் மருமகள் இருவருக்கும் சுவாமிநாதனே கொள்ளி போட்டார்.

அனைத்து சடங்குகளும் முடிய இறுதியாக வீட்டில் சுவாமிநாதன்,
சாவித்திரி,வீரா, நந்தினி மட்டுமே எஞ்சி இருந்தனர்.

வீடே இருள் சூழ்ந்து கலையிழந்து அவர்களின் சோகத்தின்‌ பிரதிபலிப்பாக இருந்தது.

நந்தினி அழுது கொண்டே சாவித்ரியின் அருகில் தவழ்ந்து வந்நாள் “அம்மாயி” என்று கண்கள் கலங்க வயிற்றை தொட்டு தொட்டு காட்ட அவளுக்கு பசி எடுத்துவிட்டதை உணர்ந்தார் சாவித்ரி.

அப்போது தான் ஒன்றை உணர்ந்தார் இப்படியே அழுது கொண்டே இருந்தாள் என்ன செய்ய முடியும் தன்னை நம்பி இரு குழந்தைகள் இருக்கிறதே என்று நினைத்தவர்.

“மாமா கூட இங்கேயே இரு டா கண்ணு அம்மாயி சமைச்சி எடுத்து வரேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்று சமைக்க ஆரம்பித்தார்.

சமைத்து முடித்து எடுத்து வந்தவர் வீரா மற்றும் நந்தினி இருவரையும் அமர வைத்து ஊட்டி விட ஆரம்பித்தார்.

“வீரா இது நம்ம பாப்பா இனி நீ தான் நந்தினியை நல்லபடியா பார்த்துக்கனும்” என்று சாவித்திரி கூற “சரி மா” என்றான் வீரா.

வீராவின் பள்ளியிலேயே நந்தினியையும் சேர்த்துவிட்டனர்.

தினமும் பள்ளிக்கு செல்லும் போது நந்தினையை வீரா தான் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து அழைத்து செல்வான்.

அவன் பின்னே அமர்ந்து நந்தினி அவன் இடையை கெட்டியாக பிடித்து கொண்டு தினமும் அவனுடன் பள்ளிக்கு செல்வாள்.

காலையில் அவள் வகுப்பில் சென்று விடுபவன் மீண்டும் மாலை அவனே சென்று அழைத்து வருவான்.

வீராவுடன் அவன் நண்பன் அருணும் நந்தினியை அழைக்க வருவான்.

அருண் அந்த ஊர் தலைவரின் ஒரே மகன் அவனுக்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லாததால் அவனுக்கு நந்தினி பாப்பா என்றால் மிகவும் பிடிக்கும்
குட்டி குழந்தையாக குண்டு கொழு கொழு கன்னங்களுடன் “அண்ணா அண்ணா” என்று தன்னை சுற்றி வருபவளுடன் விளையாடுவதையே முழு நேர பொழுது போக்காக வைத்திருந்தான்.

அதுமட்டுமின்றி அவளுக்கு கடையில் தேவையான திண்பன்டங்கள் மிட்டாய்,பிஸ்கெட்,மாங்காய் என அவள் கேட்ப்பதற்க்கு முன்னே அனைத்தையும் வாங்கி கொடுப்பான்.

நந்தினி வீராவை விட அருணுடன் நன்றாக ஒட்டிக்கொண்டே திரிவாள் அருணும் அவளை ஒரு உடன் பிறவாத சகோதரியை போன்று பார்க்க ஆரம்பித்திருந்தான்.

வீரா சிறுவயதில் இருந்தே யாரிடமும் பெரிதாக ஒட்ட மாட்டான் என்பதால் உர்ரென்று தான் இருப்பான்.

அவனுக்கும் நந்தியை பிடிக்கும் ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ள மாட்டான்.

அன்று மாலை வழக்கம் போல அருணும் மருதும் நந்தினியை அழைக்க அவள் வகுப்பிற்க்கு சென்றனர்.

அப்போது நந்தினி அழுது கொண்டே அமர்ந்திருக்க “என்னாச்சி பாப்பா ஏன் அழற” என்று அருண் கேட்க.

“இ…வ…ன் இ…வ..ன்” என்று தேம்பி கொண்டே தன் பக்கத்தில் இருந்த ஒரு சிறுவனை கைக்காட்டி கொண்டே நந்தினி அழ “பாப்பா என்னாச்சி” என்று மீண்டும் அருண் கேட்க
தன் கையை நீட்டி அவனிடம் காட்டினாள் அவள் கை ரத்தம் வந்து சிவந்து போய் வீங்கி இருக்க “என்னை கடிச்சிட்டான் அருண் அண்ணா” என்று அழுது கொண்டே கூறினாள்.

அதை கேட்ட வீராவுக்கு கோபம் வந்துவிட அந்த சிறுவனை ஓங்கி அறைந்தான்.

அந்த சிறுவன் கத்தி அழுக ஆரம்பிக்க அங்கே ஓடி வந்த அவர்களின் வகுப்பு ஆசிரியர் அந்த சிறுவனை பார்த்தார் அவன் கன்னத்தில் வீரா அடித்ததில் அவன் கையின் அச்சு அப்படியே சிவந்து பதிந்து இருக்க கோபத்துடன் “வீரா அவன் என்ன பண்ணினா அவனை இப்படி அடிச்சிருக்க” என்று கேட்டார்.

“அவன் நந்தினி கையை கடிச்சிட்டான் மிஸ்” என்று அவளின் கையை தூக்கி காட்ட
“அதுக்கு நீ இந்த பையனை இப்படி அடிப்பியா நாளைக்கு வரும் போது உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து பிரன்சிப்பலை‌ மீட் பண்ணனும்
நீ அதுக்கு அப்புறம் தான் கிளாஸ்க்கு போகனும்” என்று திட்டிவிட்டு அவனை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

தொடரும்…

1 thought on “மன்னவன் பார்வையிலே”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top